KI.RAJ NARAYANAN -GANAVATHIYAMMAL
SIVAKUMAR
நெல்லை மாவட்டம், இடைச்செவல்
பிறந்த ஊர். அப்பா 80 ஏக்கர் நிலம்
வைத்திருந்தார்.இவர் பங்குக்கு 28 ஏக்கர் வந்தது. 7-ம் வகுப்புக்கு மேல்
படிப்பு ஏறவில்லை.
வெள்ளையர் ஆட்சிகாலம்,விடுதலைப் போராட்டம், கம்மா நாயுடு இனத்தின் வரலாறு- என தன் வாழ்க்கையில் பார்த்த, கேட்ட, அனுபவித்த- விஷயங்களை சிறுகதைகளாக , நாவல்களாகப் பதிவு செய்தவர்...வட்டார வழக்குச் சொல்லகராதி- கோபல்ல கிராமம் -கோபல்ல கிராமத்து மக்கள் -கரிசல் காட்டுக் கடுதாசி- இவர் தமிழுக்குத் தந்த படைப்புக்கள்.
கு.ப.ரா -சுந்தர ராமசாமி - வல்லிக்கண்ணன் -சிசு செல்லப்பா - மற்றும் ஜெயகாந்தன் - தி.ஜானகிராமன்-
இவரின் நட்பு வட்டம். டி. கே.சி. பக்தர்.
24 வயதில் இவருக்கு காசநோய் வந்தது. 1930- களில் இதற்கு மருந்து கிடையாது. நாகர்கோயில் அருகில்
புத்தேரி டி.பி. மருத்துவமனையில் 2 வருடங்கள்- ஆந்திரா எல்லையிலுள்ள மதனப்பள்ளியில் 2 வருடங்கள் சிகிச்சை. பலனில்லை. 'ஸ்டெப்டாமைசின்'- ஊசி கண்டு பிடிக்கப்பட்டு, 90 நாள், தினம் ஒரு ஊசி
போட்டார்கள். 'செத்துப்போவேன்னு நெனைச்சோம். பொழைச்சிட்டியேப்பா'- என்று டாக்டர்கள் சிரித்தார்கள்.
28 வயதில் சாவோடு போராடும் அந்த இளைஞனை, சகோதரியுடன் படித்த பக்கத்து வீட்டுப் பெண் கல்யாணம்
செய்து கொள்ள ஆசைப்பட்டார்.
'பைத்தியமா நீ. இன்னிக்கோ நாளைக்கோ சாகப்போற என்னை கல்யாணம் பண்ணிக்கறாளாம்'- திட்டினார். பெண் தெளிவாக இருந்தாள்.
'என்ன ஆனாலும் பரவாயில்லை. கல்யாணம் செஞ்சுக்கலாம்' -என்றாள்.
டி.பி.நோயாளி கல்யாணம் பண்ணினால் மனைவிக்கும், பிறக்கப்போற குழந்தைக்கும் டி.பி. வரும் என்று டாக்டர்கள் பயமுறுத்தினர்.
பாட்டி, துணிந்து ' நீ கட்டுடா தாலிய' என்றார்..கட்டினார். பக்கத்து வீடு - எதிர் வீட்டிலிருந்து கல்யாணத்துக்கு வந்தவர்கள் கையில், இரண்டு வெற்றிலை- ஒரு எலுமிச்சை கொடுத்து அனுப்பினார்கள். முதல் பெண் குழந்தை பிறந்ததும் இறந்து விட்டது. அடுத்து 2 ஆண் குழந்தைகள். ஒருவர் காவல்துறை துணை ஆய்வாளர். இன்னொருவர் விவசாயி. அவர் மகளை சூர்யாவின் அகரம் IAS படிக்க வைக்கிறது. அந்தப் பெரியவர் கி.ரா. என்னும்,92 வயது தாண்டிய எழுத்தாளர்
கி. ராஜநாராயணன் அவர்கள். துணைவியார் 82 வயது கணவதியம்மாள். பிறந்த ஓராண்டில் தந்தையை இழந்த நான் அந்த ஆதர்ச தம்பதியை என் பெற்றோராக ஏற்றுக் கொண்டேன்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் பேராசிரியராக நியமிக்கப் பட்டவர் ஓய்வுக்குப்பின் சொந்த ஊர் போகாமல் இங்கேயே தங்கிவிட்டார் ..
கணபதி அம்மாள் கி.ரா வின் முறைப்பெண்
No comments:
Post a Comment