PARINEETI CHOPRA HINDI ACTRESS
BORN 1988,OCTOBER 22
பரினீதி சோப்ரா (Parineeti Chopra) என்பவர் இந்தி நடிகர் மற்றும் பாடகி ஆவார். இவர் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு பிறந்தார். சோப்ரா துவக்கத்தில் முதலீட்டு வங்கியியல் வேலை பார்க்க விரும்பினார். ஆனால் மான்செஸ்டர் வணிக பள்ளியில் நிதியியல்,வணிகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய பிரிவில் பட்டம் பெற்ற பிறகு 2009 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பினார். அந்த நேரம் இந்தியாவில் பெரும் பொருளியல் நிலைத் தேக்கம் இருந்தது, எனவே அவர் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனத்தில் பொதுத் தொடர்புகள் ஆலோசகராக சேர்ந்தார். பின் அந்த நிறுவனத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
சோப்ரா தன்னுடைய முதல் திரைப்படமாக 2011 ஆம் ஆண்டில் வெளியான பெண்கள் எதிர் ரிக்கிபாய் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள் பெற்றார். மேலும் அந்தத் திரைப்படத்திற்காக சிறந்த பெண் துணைக் கதாப்பாந்திரத் தேர்விற்காக பரிந்துரை செய்யப்பட்டார். இஷக்ஸாதே (2012), ஷுட் டேசி ரொமான்ஸ் (2013) மற்றும் ஹேசே தோ பசே (2014) போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார். இஸக்ஷாதே திரைப்படத்திற்காக தேசிய திரைப்பட விருதுகள்,(சிறப்பு விருது) பெற்றார். மேலும் மற்ற இரண்டு படங்களுக்கும் சிறந்த பெண் நடிகைக்காக ஃபிலிம்பேர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். பின்பு மூன்று ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கோல்மால் மறுபடியும் (கோல்மால் அகெய்ன்) என்ற மாபெரும் வெற்றிப்படத்தில் 2017 ஆம் ஆண்டு நடித்தார்.
சோப்ரா தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா, பிலிம்பேர் விருதுகள் போன்றவை உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். நடிகையாக மட்டுமன்றி அடையாளச் சின்னம், மற்றும் தயாரிப்புகளுக்கான புகழ்பெற்ற மேற்குறிப்பாளராகவும் இருந்துவருகிறார். தன்னுடைய திறமைகளால் இந்தியாவில் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் வேலை
பரினீதி சோப்ரா அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு அம்பாலா, அரியானா மாநிலத்தில் ஒரு பஞ்சாபியக் குடும்பத்தில் பிறந்தார்.[2][3][4]. இவருடைய தந்தை பவன் சோப்ரா ஒரு வணிகர், தாய் ரீனா சோப்ரா ஆவார். இவருக்கு சிவாங் மற்றும் சஹாஜ் என இரு சகோதரர்கள் உள்ளனர். நடிகைகள் பிரியங்கா சோப்ரா, மன்னரா சோப்ரா மற்றும் மீரா சோப்ரா ஆகியோர் இவரது உறவினர்னர்கள் ஆவர்.[4][5][6][7]. சோப்ரா அம்பாலாவில் உள்ள ஏசு மற்றும் மேரி கன்னிமாடத்தில் பயின்றார்.[8].தி இந்து எனும் இதழுக்கு அளித்த நேர்காணலில் தான் ஒரு சிறந்த மாணவியாக இருந்ததாகவும் முதலீட்டு வங்கியியல் அலுவலராக பணிபுரிய விருப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார்.[3]
சோப்ராவிற்குப் 17 வயதாக இருக்கும் போது அவர் இலண்டன் சென்றார். அவர் இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் வணிக பள்ளியில் வணிகம், நிதி மற்றும் பொருளாதார பிரிவுகளில் பட்டம் பெற்றார்.[9][10]. படித்துக்கொண்டிருக்கும் போதே மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகத்திற்கான உணவுத்துறையின் தலைவராக பகுதிநேரமாக வேலை பார்த்துவந்தார்.[11] சோப்ரா இந்துஸ்தானி இசையில் பட்டம் பெற்றவர் ஆவார். தனது குழந்தைப் பருவத்தில் தனது உறவினர் பிரியங்கா சோப்ரா மற்றும் தனது தந்தையுடன் இணைந்து மேடைகளில் பாடியுள்ளார்.[12]
2009 ஆம் ஆண்டின் பொருளாதார மந்தநிலையின் போது அவர் இந்தியா வந்தார். தன்னுடைய உறவினர் பிரியங்கா சோப்ராவுடன் மும்பையில் தங்கினார். யாஷ் சோப்ரா படமனைக்குச் சென்றபோது பரனீதியை பொதுத் தொடர்புகள் மேலாளரை பிரியங்கா சோப்ரா சந்திக்கச் செய்தார். சோப்ரா சந்தையிடுதலில் பொதுத் தொடர்புகள் ஆலோசகராக உள்ளகப் பயிற்சியாளராகச் சேர்ந்தார்.[9][13][1







No comments:
Post a Comment