VEERAPANDIYA KATTABOMMAN -CAIRO 1958
HOW PADMINI LOCKED IN
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடந்த திரைப்பட விழாவில் - 1958-ல் வெளியான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை சிறந்த
படமாகவும் நடிகர் திலகம்
சிவாஜியை சிறந்த நடிகராகவும்
தேர்வு செய்தனர்...சென்னையிலிருந்து தயாரிப்பாளர், இயக்குநர் பி.ஆர். பந்துலு- சிவாஜி - பத்மினி - ராகினி உள்ளிட்ட குழு கெய்ரோ சென்றது... வெளிநாடு செல்லுமுன், மருத்துவ பரிசோதனை செய்த சான்றிதழை, கெய்ரோ விமான நிலையத்தில் காட்டச் சொன்னார்கள்.
பத்மினி மட்டும் அகப்பட்டுக் கொண்டார். இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக சென்னையில் மெடிக்கல் செக்கப் செய்து கொள்ளவில்லை என்றார் பத்மினி.. அதிகாரிகள் அதை காதில் வாங்கவே இல்லை. சர்டிபிகேட் இல்லாமல் கெய்ரோவுக்குள் நுழைய முடியாது என்று கூறி அவரை அழைத்துச் சென்று 'க்வாரண்டைன்'- உள்ளே தங்க வைத்து விட்டனர்.
நம் நாட்டில் நடக்கும் உலகத்திரைப்பட விழாவுக்கு இந்தியாவிலிருந்து வந்துள்ள கலைஞர்கள், கலாச்சார தூதுவர்கள்என்று சொல்லி அரசிடம் விசேஷ
அனுமதி பெற முடியும்.அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை.
சிவாஜிக்கு அதிர்ச்சி ..
பப்பிம்மாவை எப்படியும் நிகழ்ச்சிக்கு அழைத்து வரவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பப்பியம்மா
ஆஜர் !!. என்ன மேஜிக் நடந்தது ?
ஆயர்பாடி கோபியர் யூனிபாமில் விமான நிலையம் போன ராகினி , டாய்லட் அறைக்கு பத்மினியை வரச்சொல்லி இருவரும் அங்கே உடையை மாற்றி, அக்காவை நிகழ்ச்சிக்கு அனுப்பிவிட்டு அவர் உள்ளே போய்விட்டார் . இரண்டு பேர் முகமும் ஒன்று போல் இருந்ததால் அதிகாரிகளை எளிதாக ஏமாற்ற முடிந்தது.
60 அடி நீளம் 15 அடி உயரமுள்ள திரையில்' கிஸ்தி - திரை- வரி - வட்டி'-வசனம் 5 நிமிடம்... குளோசப்பில் சிங்கம் சிவாஜி கர்ஜனை !!
'மிஸ்டர், சிவாஜி கணேசன் ' ....
மைக்கில் அறிவிப்பு.
எறும்பு போல் சிறு உருவம் மேடை மீது
ஊறிச் சென்றது.. சற்று முன் நெருப்பை உமிழும் கண்களுடன், கொடுவாள் மீசையுடன் ,கர்ஜனை செய்தது இவரா !! கரவொலியில், அதிர்ந்த அரங்கம் அடங்க ஐந்து நிமிடம் ஆயிற்று !
இடி விழுந்தாலும் அசராத நடிக மன்னன்
இரண்டு நொடி, தன் வசமிழந்தார்..
'சிவாஜி ! சிவாஜி !!'- என்று பத்மினி உலுக்கி சுயநினைவுக்கு வரவழைத்தார்.
என்னே தருணம் ! எத்தனை பேருக்கு
இது வாய்க்கும் !! தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த அந்தத் தவப் புதல்வன் வாழ்க்கையில் இப்படி எத்தனை தருணங்களோ !!!
No comments:
Post a Comment