VEERAPANDIYA KATTABOMMAN -CAIRO 1958 HOW PADMINI LOCKED IN
VEERAPANDIYA KATTABOMMAN -CAIRO 1958 HOW PADMINI LOCKED IN எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடந்த திரைப்பட விழாவில் - 1958-ல் வெளியான 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை சிறந்த படமாகவும் நடிகர் திலகம் சிவாஜியை சிறந்த நடிகராகவும் தேர்வு செய்தனர்...சென்னையிலிருந்து தயாரிப்பாளர், இயக்குநர் பி.ஆர். பந்துலு- சிவாஜி - பத்மினி - ராகினி உள்ளிட்ட குழு கெய்ரோ சென்றது... வெளிநாடு செல்லுமுன், மருத்துவ பரிசோதனை செய்த சான்றிதழை, கெய்ரோ விமான நிலையத்தில் காட்டச் சொன்னார்கள். பத்மினி மட்டும் அகப்பட்டுக் கொண்டார். இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக சென்னையில் மெடிக்கல் செக்கப் செய்து கொள்ளவில்லை என்றார் பத்மினி.. அதிகாரிகள் அதை காதில் வாங்கவே இல்லை. சர்டிபிகேட் இல்லாமல் கெய்ரோவுக்குள் நுழைய முடியாது என்று கூறி அவரை அழைத்துச் சென்று 'க்வாரண்டைன்'- உள்ளே தங்க வைத்து விட்டனர். நம் நாட்டில் நடக்கும் உலகத்திரைப்பட விழாவுக்கு இந்தியாவிலிருந்து வந்துள்ள கலைஞர்கள், கலாச்சார தூதுவர்கள்என்று சொல்லி அரசிடம் விசேஷ அனுமதி பெற முடியும்.அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. சிவாஜிக்கு அதிர்ச்சி .. பப்பிம்மாவை எப்படிய...