THE TOMBS OF JAHANGIR IN LAHORE -THE STORY
THE TOMBS OF JAHANGIR IN LAHORE -THE STORY ஜஹாங்கீர்மன்னரின் குடலுக்குத் தனி சமாதி தந்தையும் பேரரசனுமான அக்பரின் எதிர்ப்பால் காதல் நிறைவேறாமல் போன சலீம், மதுவுக்கு அடிமையானதாகவும், அனார்கலி துயரத்தில் இறந்துபோனதாகவும் நம்பப்படுகிறது. தந்தையின் மறைவுக்குப் பிறகு ஜஹாங்கீர் என்ற பெயரில் சலீம் மன்னரானார். அனார்கலியின் இடத்தை நிரப்ப வந்தவள் மெஹருன்னிஸா. பாரசீக அழகி. கணவனை இழந்து தனிமையில் இருந்த மெஹருன்னிஸா பிறகு ஜஹாங்கீருக்கு மனைவியானார். ஜஹாங்கீர் அவருக்கு வைத்த பெயர்தான் நூர்ஜஹான் (உலகத்தின் வெளிச்சம்). பெயரளவுக்கே ஜஹாங்கீர் மன்னன். உண்மையில் ஆட்சி செய்தது நூர்ஜஹான் தான் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். வேட்டையில் மரணம் ஜஹாங்கீர் 1627-ன் கோடைகாலத்தில் நூர்ஜஹானுடன் நகர் சென்றார். அங்கே அவர் உடல்நிலை மோசமானது. ஆனாலும், லாகூரை நோக்கி பயணம் தொடங்கியது. பயணத்தின் இடையே ஒருநாள் ஜஹாங்கீர் மான் வேட்டையாடினார். அப்போது செங்குத்தான பாறையிலிருந்து ஒரு வீரன் கீழே விழுந்து இறந்து போனான். தன்னையும் மரண தேவதை நெருங்கிவிட்டாள் என்னும் அறிகுறியாக இதை மன்னர் எடுத்துக்கொண...