LALITA PAWAR HINDI ACTRESS BORN 1916 APRIL 18 - 1998 FEBRUARY 24
LALITA PAWAR HINDI ACTRESS BORN 1916 APRIL 18 - 1998 FEBRUARY 24 ..லலிதா பவார் (Lalita Pawar) (18 ஏப்ரல் 1916 – 24 பிப்ரவரி 1998)[1] இந்தி, மராத்தி மற்றும் குசராத்து திரைப்படங்களில் 700 படங்களுக்கும் மேலாக குணசித்திர வேடங்களில் நடித்த நடிகையாவார். இவருடைய படங்களில் பாலாஜி பந்தேர்க்கரின் "நேதாஜி பால்க்கர்" (1938), நியூ ஹனா பிக்சர்ஸின், "சான்ட் தாமாஜி", நவயுக சித்ரபதியின் "அம்ரிட்" மற்றும் சய்யா பிலிம்ஸ்ன் "கோரா கும்பார்" போன்ற படங்கள் குறிபிடத்தக்கவை. அவரது மறக்கமுடியாத திரைக் கதாப்பாத்திரங்கள் "அனாரி" '(1959)," "420" மற்றும் "திரு & திருமதி 55" ஆகியவற்றிலும் , ராமானந்த் சாகரின் தொலைக்காட்சி காவிய தொடரான ராமாயனில் "மந்தரை" வேடத்திலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சுயசரிதை அம்பா லக்ஷ்மண் ராவ் சாகுன் என்ற பெயர் கொண்ட பவார் 1916 ஏப்ரல் 18 அன்று நாசிக்கின் யியோலாவில் பாரம்பரியமான ஒரு குடும்பத்தில் பிறந்தார்.[2] இவரது தந்தை லக்ஷ்மண் ராவ் சாகுன் ஒரு பணக்கார பட்டு மற்றும...