Posts

Showing posts with the label HONEY

VANI JEYARAM - VOICE OF HONEY

Image
VANI JEYARAM - VOICE OF HONEY மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! - வாணி ஜெயராம் நேர்காணல் இன்றய வைஃபை சூழ் வையகத்தில் இப்போதும் மாறாமல் இருப்பது இசை ரசனைதான். இன்னமும் இவர் பாடிய ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை’ பாடலும், ‘ஆடி வெள்ளி தேடி உன்னை’யும் நம் மனதில் தோரணம் கட்டிக்கொண்டே இருக்கின்றன. தமிழ்ப் பின்னணிப் பாடகிகளில் கர்னாடக இசையும் ஹிந்துஸ்தானியும் கஜலும் அறிந்தவர் இவர் ஒருவர்தான். 19 மொழிகளில் பாடியிருப்பவர். பெரும்பாலும் அங்காடிக் கூச்சல்களாகவும், வாகன ஹாரன் ஒலிகளாகவும் திரையிசை மாறிவிட்ட சூழலில், சந்தோஷங்களின் குரலாக இருக்கும் வாணி ஜெயராம் அவர்களுடன் ஓர் உரையாடல்: பல நுண்கலைகளில் முதன்மையானது இசைக் கலை. இதில் நீங்களும் ஒரு பங்களிப்பாளர் என்பதில் உங்களுக்குள்ள உணர்வு என்ன? `அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று நமது அவ்வைப் பாட்டி சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. இப்படி அரிதாகக் கிடைத்திருக்கிற இந்த மனிதப் பிறவியில் மனிதநேயத்தோடு வாழ்வதுதான் மிக உன்னதமான விஷயம். சமூகத்தில் எல்லோருக்கும் நல்லவராக வாழ்கிற வாழ்க்கையைத்தான் நம் முன்னோர்கள் ‘இசைபட வாழ்தல்’ என்ற...