Showing posts with label அகர்வால். Show all posts
Showing posts with label அகர்வால். Show all posts

Sunday, 18 June 2017

KAJAL AGGARWAL காஜல் அகர்வால் பிறப்பு: 19 சூன், 1985


KAJAL AGGARWAL  
காஜல் அகர்வால் பிறப்பு: 19 சூன், 1985


காஜல் அகர்வால் (Kajal Aggarwal) (பிறப்பு: 19 சூன், 1985) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.



இளமைக் கால வாழ்க்கை[தொகு]

மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தங்கை நிஷா அகர்வால், தெலுங்கு, தமிழ்த் திரைப்பட நடிகை. இவர் தன்னுடைய கல்வியை மும்பையி லேயே முடித்த பிறகு, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

திரை வாழ்க்கை[தொகு]
ஆரம்ப காலம்[தொகு]

இவர் ஆரம்பகாலத்தில் நடித்த கியூன்...! ஹோ கயா நா, ஐஷ்வர்யா ராயின் தோழியாக நடித்த அப்பாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை,[3][4] பின்னர் 2007-ம் ஆண்டு லக்‌ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரைத்துறையில் முக்கிய கதாமாந்திராக அறிமுகமானார், இதுவும் வெற்றிபெற தவறியது. ஆண்டின் இறுதியில் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் ச்சந்தமாமா திரைப்படத்தில் நடித்தார், இது அவருடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவிபுரிந்தது.[5]

அதன்பிறகு 2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத்துடன் இவர் நடித்த பழனி திரைப்படம் தமிழில் வெளியானது. பின்னர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிறு வேடத்தில் சரோஜா திரைப்படத்திலும் பிறகு பாரதிராஜாவின், பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார், ஆயினும் மிகவும் தாமதமாக வெளியான இத்திரைப்படமும் எடுபடவில்லை. [6][7]
புகழின் உச்சத்தில் (2009 – தற்போது வரையிலும்)[தொகு]

2009-ம் ஆண்டு இவர் நான்கு திரைப்படத்தில் நடித்தார். அதுவரையில் இவர் நடித்த சரியாக ஒடாத நிலையைல், எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் இளவரசியாக இவர் நடித்த மஹதீரா மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது, இவருக்கும் பாராட்டுகள் குவிந்தன.[8][9][10][11][12][13][14], இவருக்கு அத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததிற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. 

அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங்க் (2010), பிருந்தாவனம் (2010), மிஸ்டர். பெர்பெக்ட் (2011), பிஸ்னஸ் மேன் (2012) என அனைத்துத் திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.

 சூர்யாவுடன், மாற்றான் திரைப்படத்திலும்[15][16] ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் துப்பாக்கி திரைப்படத்திலும் நடித்தார் .[17][18]தெலுங்கில், மகேஷ் பாபுவுடன் இணைந்து சுகுமாரின் பெயரிடப்படாத திரைப்படமொன்றிலும் நடித்து வருகிறார்.[
தொடக்க காலத்தில் முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வரியா ராயின் நெருங்கிய தோழியாக‌ காஜல் அகர்வால், நடித்த கியூன்…! திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து லக்‌ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப் படத்தின் மூலமாக ஆந்திர ரசிகர்களுக்கு அறிமு கமானார். இதுவரை அதிகம் பிரபலம் ஆகாமல் இருந்த இவருக்கு இயக்குநர் கிருஷ்ண வம்சி இயக்கிய சந்தமாமா திரைப்படத்தில் நடித்தத‍ன் மூலம் இவர் பிரபலமானதுடன் இவரது வளர்ச்சி யும் தொடங்கியது.



அதற்கு பிறகு 2008-ம் ஆண்டு, பழ்னி திரைப்ப டத்தில் தமிழில் வெளியானது இத்திரைப்படம் இயக்குநர் பேரரசு இயக்கியுள்ளார். மேலும் நடிகர் பரத் இவருக்கு ஜோடி யாக நடித்தார். அதனை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த சரோஜா திரைப் படத்திலும் பிறகு பாரதிராஜாவின், பொம்ம லாட்டம் திரைப்படத்தில் நடித்தார்,
2009-ம் எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் இளவரசி யாக இவர் நடித்த மஹதீரா திரைப்படம் இவரை புகழின் உச்ச‍த்திற்கே கொண்டு சென்றறார். அது தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளிவந்து பெரு வெற்றி பெற்ற‍து. அதனைத் தொடர்ந்து சூர்யாவுட ன், மாற்றான் திரைப்படத்தி லும் ஏ. ஆர். முருக தாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் துப்பாக்கி திரைப்ப டத்திலும், நடித்தார்.

இப்ப‍டி தமிழ் தெலுங்கு என்று பிசியாக இருந்த நடிகைகளில் குறிப்பிடத் தக்க‍வாராக இருந்தவர் இவர் (காஜல் அகர்வால்) அச்சமயத்தில் தனது சம்பளத்தை அதரடியாக உயர்த்தினார். இதனால் இவரது காட்டில் பண மழை கொட் டியது. பின் செய்தியாளர்களுக்கு அளித்த‍ ஒரு பேட்டியில் இனி வயதான ஹீரோக்களு டன் நடிக்க மாட்டேன் என பகிரங்கமாகவும் தெரிவித்தார்.
நயன்தாரா, த்ரிஷா போன்று கதையின் நாயகி பட்டியலில் தற்போது காஜல் அகர்வாலும் இணைந்துள்ளார்.
சமீபகாலமாக முன்னணி நடிகைகள் ஒரு கட்டத்திற்கு பிறகு கதையின் நாயகி அவதாரம் எடுக்கிறார்கள். அந்த வகையில், நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் லீடு ரோல்களில் பல படங்களில் நடித்து வருவதைத் தொடர்ந்து தற்போது சோனியா அகர்வாலும் ‘அகல்யா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். அப்படம் ஐந்து மொழிகளில் தயாராகிறது.



இவர்களைத் தொடர்ந்து அஜீத்தின் ‘விவேகம்’, விஜய் 61 படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கும் இதே வேகத்தில் கதையின் நாயகியாக நடித்து விட வேண்டும் என்கிற ஆசை மேலோங்கியுள்ளது. அதனால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். தற்போது அவர் ‘கவலை வேண்டாம்‘ படத்தை இயக்கிய டிகே இயக்கும் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்திற்கான கதையை நயன்தாராவை மனதில் கொண்டுதான் அவர் உருவாக்கியிருந்தாராம். ஆனால், ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பு காரணமாக, அந்த படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு பதிலாக இப்போது காஜல்அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளாராம் டிகே. இதனால் நயன்தாரா, த்ரிஷா நடித்து வரும் கதையின் நாயகி பட்டியலில் தனக்கும் இடம் கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார் காஜல் அகர்வால்.

கவலை வேண்டாம்’ என்பதை கோட்பாடாகக் கொண்டு படம் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம் தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘கோ 2’ படத்தை தொடர்ந்து ஜீவா, பாபி சிம்ஹா இணைந்து நடிக்கும் ‘கவலை வேண்டாம்’ படத்தையும் தயாரிக்க உள்ளனர். ‘யாமிருக்க பயமே’ படத்தின் இயக்குநர் டி.கே. இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் ஹீரோயினாக காஜல் அகர்வால் புக் செய்யப்பட்டுள்ளாராம். இதைப் பற்றி இயக்குநர் டி.கே. கூறும்போது, “ஜீவா சாரும் சரி, காஜல் அகர்வாலும் சரி நான் இயக்குனர் கே வி ஆனந்த் அவர்களிடம் உதவியாளராக பணிபுரியும்போதே எனக்கு நல்ல பழக்கம். கதை கரு உருவானதுடன் ஜீவா சார்தான் கதாநாயகன் என்று முடிவெடுத்துக் கொண்டாலும், முழுக் கதை முடிவடையும்வரை கதாநாயகி தேர்வு குறித்து முடிவு செய்யவில்லை.




இந்தப் படத்தின் நாயகி எல்லோருக்கும் பிடிக்கும்வகையில், நான் எதிர்பார்க்கும் நடிப்பை உடல் மொழியாலும், உணர்வாலும் வெளிப்படுத்த வேண்டியவராக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். கதாநாயகனுக்கு இணையாக நடிக்க வேண்டிய பல காட்சிகள் இருப்பதால் மக்களிடையே நன்கு அறிமுகமான ஒரு நாயகிதான் இதில் நடிக்க முடியும் என்கிற நிர்பந்தத்தை உருவாக்கியது. கதையைக் கேட்டவுடன் காஜல் அகர்வால் உற்சாகமாக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். வெகுவிரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது..” என உவகை பொங்கக் கூறினார் டிகே.

முதலில் இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இதில் நடிக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. ஜீவாவுடன் போட்டோ ஷூட்டில்கூட கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். அதை கீர்த்தியும் ஒத்துக் கொண்ட நிலையில் இப்போது திடீரென காஜல் அகர்வாலை ஹீரோயினாக புக் செய்துள்ளனர்.









‘யான்’ படத்தின் மூலம் பல கோடிகளை இழந்து நஷ்டத்தைச் சம்பாதித்திருக்கும் ஆர்,எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் தற்போதைய நிலைமையைப் பொறுத்தவரையில் கீர்த்தி சுரேஷைவிட மூன்று மடங்கு சம்பளம் கேட்கும் காஜல் அகர்வாலை புக் செய்தது நிச்சயம் ஆச்சரியமான விஷயம்தான்..!


KAJAL AGARWAL 
நடிகை காஜல் அகர்வாலின் 
லேட்டஸ்ட் ஸ்டைல் ............

கடந்த இரண்டு மாதமாக பல அற்புதமான உடைகளை அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இங்கு கடந்த இரண்டு மாதமாக நடிகை காஜல் அகர்வால் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் காஜல் அகர்வால். நடிகைகளுள் நல்ல ஃபேஷன் சென்ஸ் கொண்டவர்களுள் ஒருவர். இவர் கடந்த இரண்டு மாதமாக பல அற்புதமான உடைகளை அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இங்கு கடந்த இரண்டு மாதமாக நடிகை காஜல் அகர்வால் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.



கட்அவுட் டாப்ஸ் இது சூரியன் எஃப்.எம்மிற்கு வந்த போது காஜல் அகர்வால் அணிந்து வந்த வெள்ளை நிற கட்அவுட் டாப்ஸ் மற்றும் கருப்பு நிற லூசான பேண்ட்.


















போல்கா டாட்ஸ் உடை இது காஜல் அகர்வால் அணிந்த போல்கா டாட்ஸ் உடை. இந்த உடைக்கு காஜல் வெள்ளை நிற ஸ்னீக்கர் அணிந்திருந்தார்.

















மெரூன் லேஸ் டாப்ஸ் இது காஜல் அணிந்திருந்த மெரூன் நிற லேஸ் டாப்ஸ் மற்றும் கிரே நிற ஸ்கர்ட். இந்த உடைக்கு காஜல் கருப்பு நிற ஹீல்ஸ் அணிந்திருந்தார்.
















பங்கஞ் & நிதி உடை இது டிசைனர்களான பங்கஞ் மற்றும் நிதி வடிவமைத்த வெள்ளை நிற லேஸ் உடையை காஜல் அணிந்திருந்த போது எடுத்தது.

















ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் இது காஜல் அகர்வால் நீல நிற ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற பெல் ஸ்லீவ்ஸ் கொண்ட டாப்ஸ் அணிந்திருந்த போது எடுத்த போட்டோ.
















பூமிகா ஷர்மா இது டிசைனர் பூமிகா ஷர்மா வடிவமைத்த அற்புதமான உடையை காஜல் அணிந்திருந்த போது எடுத்தது.

















அனிதா டாங்ரே இது டிசைனர் அனிதா டாங்ரே வடிவமைத்த நீல நிற லெஹெங்காவை போட்டோசூட்டிற்கு காஜல் அணிந்திருந்த போது எடுத்த போட்டோ.

















ரிம்பிள் & ஹர்ப்ரீட் நரூலா நடிகை காஜல், ரிம்பிள் & ஹர்ப்ரீட் நரூலா வடிவமைத்த வெள்ளை நிற சூட்டை அணிந்திருந்த போது எடுத்தது.





Monday, 29 August 2016

தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வாலின் மரணம் 2015 JUNE 6


தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வாலின் மரணம் 2015 JUNE 6

2015 JUNE 6 இறந்த தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வாலின் மரணம் திரையுலகுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் அதிர்ச்சியான தகவல். காரணம், அவரது மரணத்துக்கான காரணம். எது அவருக்கு சினிமா வாய்ப்பையும் பிறகு பேரும் புகழையும் தந்ததோ அதுவே அவருடைய 31 வயதில்உயிருக்கும் எமனாக அமைந்துவிட்டது. 
Aarthi Agarwal
Aarthi Agarwal.jpg
BornMarch 5, 1984
New Jersey, United States[1]
DiedJune 6, 2015 (aged 31)
Atlantic City, New Jersey, United States
Other namesAarti Agarwal
Nandhu
OccupationFilm actress, model[2]
Years active2001–2015
Spouse(s)Ujjwal Kumar Agarwal (m. 2007;div. 2009)[3][4]
RelativesAditi Agarwal (sister)
Akash Agarwal (brother)

குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஆர்த்தி அகர்வால், அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகரில்  பிறந்தவர். ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டி ஒரு நிகழ்ச்சிக்காக அமெரிக்காவின் பிலடெல்பியா நகருக்குச் சென்றிருந்தபோது ஆர்த்தியை சந்திக்க நேர்ந்தது. 


அழகும் இளமையும் கொண்ட ஆர்த்தியைப் பார்த்தவுடன் இவர் திரைத்துறையில் இருக்கவேண்டியவர் என எண்ணினார் சுனில் ஷெட்டி. தன்னுடன்  நடனம் ஆடும்படி ஆர்த்தியை அழைக்க, அவரும் ஓகே சொல்லி மேடையில் தயக்கமில்லாமல் ஆடினார். 


ஓடியன்ஸின் வரவேற்பும் அமோகமாக இருக்க, கூடவே சினிமா வாய்ப்பும் அவர் முன் வந்து நின்றது. டீன் ஏஜ் வயது ஆர்த்திக்கும் சினிமாவில் நடிப்பது ஒரு விருப்பமாகவே இருந்ததால் தன் குடும்பத்தினரிடம் விவாதித்தார்.

நடிகர் சுனில் ஷெட்டி ஆர்த்தியின் தந்தையிடம் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆர்த்திக்கு அனுமதி தரும்படி கேட்டுக் கொண்டார். சம்மதம் கிடைக்கவே, பல கனவுகளுடன் திரையுலகில் நுழைந்தார் 16 வயது ஆர்த்தி. 2000-ம் ஆண்டில் ‘பாகல்பன்’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்தார். அந்தப் படம் சுமாராகத்தான் ஓடியது. ஆனால் அதுவே ஆர்த்திக்கு ஒரு நல்ல  விசிட்டிங் கார்டாக அமைந்ததால் தெற்குப் பக்கம் வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தார். 

தெலுங்குப் பட உலகம் ரத்தினக் கம்பளம் போட்டு ஆர்த்தி அகர்வாலை சுவீகரித்துக் கொண்டது. டோலிவுட்டில் வெங்கடேஷ் ஜோடியாக நுவ்வு நாக்கு நச்சவ் என்ற படத்தில் நடித்து அது சூப்பர் ஹிட்டாகிவிட, தெலுங்குத் திரையுலகில் பரபரப்பான நடிகையானார் ஆர்த்தி. 

சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பிரபாஸ், ஜுனியர் என்.டி.ஆர். போன்ற முன்னனி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க, வெற்றிப் படங்களின் எண்ணிக்கை அதிகமாகின.

தெலுங்குத் திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். தமிழிலும் நடிகர்  ஸ்ரீPகாந்துக்கு ஜோடியாக பம்பரக் கண்ணாலே (2005) என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றிகரமாக அமையவில்லை. ஆனால் டோலிவுட்டில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகியாக ஆனார் ஆர்த்தி.



இதற்கிடையில், தெலுங்கு நடிகரான தருணை தீவிரமாக காதலித்தார். தருண் தமிழில் புன்னகை தேசம், எனக்கு 20 உனக்கு 18 ஆகிய படங்களில் நடித்தவர். 





தருண், ஆர்த்தி இருவரும் முதலில் காதலை மறுத்தாலும் பிறகு விரைவில் திருமணம் செய்யப்போவதாக வெளிப்படையாக அறிவித்தார்கள். அதனால் ஆர்த்திக்கு பட வாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்தன. அதைப்பற்றி அப்போது அவர் கவலைப்படவில்லை. 


ஆனால் சில மாதங்களிலேயே தருணுக்கு - . 
இவர் பிரபல முன்னாள் நடிகை ரோஜா ரமணியின் பிடிவாதத்தால்  

காதலை ஏற்றுக்கொள்ள மறுத்தார் -வேறொரு வசதியான இடம் தேடினார் 
தருணுக்கு, திவ்யா ரெட்டி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயமான தகவல் அறிந்து ஆர்த்தி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். அதன்பின் அவர் திரை வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலைக்கு வந்துவிட்டது.

வேறு வழியின்றி, திரையுலகத்தை விட்டு விலகி மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றார். அங்கு அவரது தூரத்து உறவினர் உஜ்வாலைச் சந்தித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உஜ்வால் குமார் அமெரிக்காவின் பிரபல வங்கி ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். 




2007-ல் உஜ்வால் குமார் - ஆர்த்தி அகர்வால் திருமணம் உறவினர்கள், நண்பர்கள் சூழ  ஹைதராபாத் ஆர்ய சமாஜ் ஆசிரமத்தில் நடந்தது. ஆனால் தனது திருமணத்தை ரகசியாகவே நடத்தினார் ஆர்த்தி. தெலுங்குத் திரையுலகில் யாருக்கும் அழைப்பில்லை. திருமணம் நடந்த விஷயமே செய்தித்தாள் பார்த்துதான் தெரிந்துகொண்டனர். திருமணத்துக்குப் பின் நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டு கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார்.

அழகு, பணம், திறமை எல்லாம் இருந்தும் சிலருக்கு நிம்மதி மட்டும் இருக்காது. அதுவும் நடிகையின் வாழ்க்கை, புகழ் எனும் போதையில் சூழ்ந்தது. பரபரப்பான வாழ்க்கை முறை, ஷ_ட்டிங், ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் பாராட்டு என்று லைம்லைட்டில் இருந்துவிட்டு சும்மா இருக்க நேர்ந்தால் அது பெரும் அவஸ்தையாக இருக்கும். ஆடிய காலும் பாடிய வாயும் ஓயாது என்று ஒரு சொல்வது உண்டு. திருமண உறவில் விரிசல் ஏற்பட்டதால் கணவரைப் பிரிந்தார் ஆர்த்தி. அடுத்து? சினிமா வாய்ப்புகளைத் தேடி ஹைதராபாத்துக்குத் திரும்பினார்.


முதல்முறை ஹைதராபாத்துக்கு வந்தபோது கிடைத்த வரவேற்புக்கும் இப்போது அதேபோல அமெரிக்காவிலிருந்து வந்திறங்கியபோது நடந்துகொண்ட விதத்துக்கும் பெரும் வித்தியாசம் தென்பட்டது. இந்தமுறை யாரும் அவரைச் சீந்தவில்லை. காரணம் ஏற்கனவே பூசிய உடம்பாக இருக்கும் ஆர்த்திக்கு சில வருடங்களில் உடல் எடை அதிகரித்துவிட்டதுடன் வயதும் கூடிவிட்டதால் ஹீரோயினாக யாரும் அவரைக் கருதவில்லை.

ஆர்த்தி முயற்சி செய்து பார்த்தார். தன்னுடைய உடல் எடையைக் குறைக்க டயட்டிங் போன்ற விஷயங்களில் தீவிரமானார். மீண்டும் திரையில் தோன்ற என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் செய்து பார்த்தார். ஆனால் அவரால் பழைய அழகை மீட்டுக்கொண்டு வரமுடியவில்லை. என்ன முயன்றும் பலன் பெரிதாக இல்லை. உடல் எடையைக் குறைத்தால் நடிக்க வாய்ப்பு தருவதாக சில திரைத்துறை நண்பர்கள் கூறவே அதை நம்பி மேலும் பலவிதமான முயற்சிகள் செய்து பார்க்கத் தொடங்கினார்.


ஒரு பெரிய திட்டத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கு அட்லாண்டிக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் லிப்போசக்‌ஷன் எனும் எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார். அவர் கால்களில், இடுப்புப் பகுதிகளில் கைகளில் உள்ள தேவையற்ற கொழுப்பை உறிஞ்சி எடுக்கும்படியான லிப்போசக்‌ஷன் எனும் கொழுப்பு நீக்கும் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. 


ஆனால் அதன் பின் சில மாதங்களில் மீண்டும் உடல் எடை அதிகரிக்கவே மீண்டும் அதே அறுவைச் சிகிச்சைக்குத் தன் உடலை உட்படுத்தினார். கடைசியாக நான்காவது முறை செய்ததன் காரணமாகவே, கடந்த சில நாள்களாக மூச்சுத்திணறலால் அடிக்கடி அவதிப்பட்டார். இந்தப் பிரச்சினைக்குச் சிகிச்சை பெறுவதற்காக அதே மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 


லிப்போசக்‌ஷன் அறுவைச் சிகிச்சையின் மோசமான பக்க விளைவுககளால் தான் ஆர்த்தி இறந்திருக்கக் கூடும் என்று காரணம் சொல்லப்படுகிறது. 

ஏனெனில் லிப்போசக்‌ஷன் செய்யும் போது கொழுப்பு குமிழ் போன்று ஏற்பட்டு இதயத்தில் சென்று அடைத்துவிட, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துபோக நேர்ந்துள்ளது.

ஆர்த்தியின் திடீர் மரணத்துக்கான காரணங்களை ஆராயும் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் லிப்போசக்‌ஷன் பற்றிய கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளன.  


இது பற்றிய விவாதத்தில் ப்ளாஸ்டிக் சேர்ஜன் ஸ்ரீPநிவாஸ் ஸ்வரூப் என்பவரிடம் பல கேள்விகளைக் கேட்டனர். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் மருத்துவரும் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆர்த்தியின் உடல் எடை குறித்து பகிடி செய்தனர். உடல் மெலிந்திருந்தால் தான் அழகு என்ற இலக்கணத்தை இவர்களுக்கு யார் சொன்னது? பட அதிபர்களும் மீடியாவும் ஆர்த்தியின் உருவத்தைப் பற்றிய கிண்டலை செய்யாமல் இருந்திருந்தால் அவர் இன்று உயிருடன் இருந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம். ஒல்லி இடுப்பு தான் அழகென்று நம்பும் பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.


ஆர்த்தி, கடைசியாக ரணம் 2 என்ற தெலுங்குப் படத்தில் மீண்டும் நடித்தார். அவர் இறப்பதற்கு முந்தைய நாள், அதாவது ஜூன் 5-ம் திகதி அந்தப் படம் வெளியானது. தன் அடுத்தப் பட விஷயமாக ஹைதரபாத் வரவிருந்த ஆர்த்தி, அழகு சிகிச்சை தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியபடி நிரந்தரமாக கண் மூடிவிட்டார்.

Filmography[edit]

YearFilmRoleLanguageNotes
2001PaagalpanRoma PintoHindi
Nuvvu Naaku NachavNandiniTelugu
2002Nuvvu Leka Nenu LenuKrishna VeniTelugu
Allari RamuduMythiliTelugu
IndraSnehalatha ReddyTelugu
Nee SnehamAmruthaTelugu
BobbyBhagyamathiTelugu
2003Palnati BrahmanayuduSruthiTelugu
VasanthamNandiniTelugu
WinnerTamilSpecial appearance
VeedeMangathaayaruTeluguRemade from Tamil movie Dhool
2004NenunnanuSruthiTeluguDubbed into Hindi language as Vishwa-The HeMan in 2006
Adavi RamuduMadhulathaTelugu
2005ChatrapatiItem SongTeluguSpecial appearance
NarasimhuduItem SongTelugu
SoggaduSwatiTelugu
SankranthiTeluguCameo
Bambara KannaleyTamil
2006Andala RamuduRadhaTelugu
2008GorintakuNandiniTelugu
Deepavali
2009Posani GentlemanNeerajaTelugu
2015RanamTelugu
2016Aame Evaru?TeluguReleased posthumously