SANDAL WOOD VEERAPPAN CAPTURED AND KILLED 2004 OCTOBER 18
SANDAL WOOD VEERAPPAN CAPTURED AND KILLED 2004 OCTOBER 18 *குண்டு வெடித்தது!* சேலத்தின் புறநகர் பகுதி மாமாங்கம். இங்கே மத்திய அரசுக்குச் சொந்தமான “பர்ன் அன்ட் ஸ்டேண்டர்டு நிறுவனத்தின் சுரங்கம் உள்ளது. இந்நிறுவனத்தின் ஆய்வு மாளிகை பொதுமக்கள் போக முடியாத பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருக்கிறது. எப்போதும் அமைதியானச் சூழலில் இருக்கும் இந்த ஆய்வு மாளிகை 12.10.2004 மதியம் பரபரப்புடன் காணப்பட்டது. மதியம் இரண்டு மணிக்குத் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையின் தொழில் நுட்ப அணியினர் அங்கு வந்தனர். கூட்ட அறையில் ஒட்டுக் கேட்புக் கருவிகளைப் பொருத்தினர். பக்கத்து அறையில் பதுங்கி, கூட்ட அறையில் நடக்கும் உரையாடலைப் பதிவு செய்யக் காத்திருந்தனர். மூன்று மணிக்கு இன்னொரு படைப்பிரிவு வந்தது. கூடுதல் டி.ஜி.பி.யும் STF இன் தலைவருமான விஜயகுமார் IPS அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. கூட்டம் நடக்கும் அறையில் விஜயகுமாருக்குப் பிடித்த லெமன் கிராஸ் ரூம் ஸ்பிரே அடிக்கப்பட்டது. பர்ன் அன்ட் ஸ்டேண்டர்டு ஓய்வு மாளிகை. மாலை நான்கு மணி. விஜயகுமார், அதிரடிப்படை எஸ்.பி-1 செந...