SANDAL WOOD VEERAPPAN DAUGHTER
VIDYARANI BECAME ADVOCATE
'நல்லா படி, டாக்டராகி மக்களுக்கு சேவை செய்யனும்னு எங்கிட்ட சொன்னாரு
வித்யா ராணி,
சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள்
அப்பாவை என்னோட வாழ்க்கைல ஒரேயொரு முறை தான் பார்த்திருக்கிறேன். அப்போ, எனக்கு மூனு வயசு. என்னோட தாத்தா ஊரு கோபிநத்தத்துல நான் இருந்தப்போ காட்டுல இருந்து திடீர்னு வெளியே வந்த அப்பா என்ட்ட 10 நிமிஷம் பேசுனாரு
'நல்லா படி, டாக்டராகி மக்களுக்கு சேவை செய்யனும்னு எங்கிட்ட சொன்னாரு
ஆனால், அதுக்கு அப்புறம் அப்பாவை நான் பார்க்கவே இல்லை. ஆனால், அப்பா சொன்ன, அந்த சேவை பண்ணணும் அப்படிங்ற வார்த்தை என் மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சுட்டு. என்னால டாக்டராக முடியலானாலும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு சேவை செஞ்சுட்டுத் தான் வாரேன்.இப்படிக் கூறும் வித்யா ராணி வீரப்பன் தற்போது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி துணைத் தலைவர்.
தமிழகம், கர்நாடக மாநிலங்களை அதிர வைத்தவர் சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன். அவரது மகள் தான் வித்யாராணி. கடந்த 2004- ம் ஆண்டு வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட, அதற்குப் பிறகு பல இன்னல்களை வித்யாராணி சந்தித்தார். தடைகளைக் கடந்து வித்யா ராணி பி.ஏ. பி.எல் படித்து வக்கீலுமாகி விட்டார். பின்தங்கிய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஸ்கூல் ஃபார் கிட்ஸ் என்ற அமைப்பையும் வித்யா ராணி நடத்தி வருகிறார்
கட்சியியில் கிடைத்த புதிய பதவி குறித்து வித்யாராணியிடம் பேசிய போது,
என் வாழ்க்கையில நான் சந்திக்காத பிரச்சனையே இல்லை. அரசியல்லையும் எதிர்நீச்சல் போடுவேன் என்றார் நம்பிக்கையுடன்.
வீரப்பன் வீட்டுக்குள் இரு கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதும் சுவாரஸ்யத் தகவல். வித்யாராணியின் தாய் முத்துலட்சுமி பா.ம.க- விலிருந்து உடைந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் சேர்ந்துள்ளார். கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார். ஏற்கெனவே, சமூக சேவையில் ஈடுபட்டு வந்ததால், பொன் . ராதாகிருஷ்ணன் வேண்டுகோளை வித்யாராணி ஏற்று பா.ஜ.க. வில் ஐக்கியமானார். ஒரே வருடத்தில் புதிய பதவி அவருக்குக் கட்சியில் கிடைத்துள்ளது
அரசியல் பிரவேசம் குறித்து வித்யாராணியிடத்தில் பேசிய போது, 'கிராமத்துல பிறந்து வளர்ந்தாலும் படிச்சதுலாம் சென்னை தான். ஸ்ரீபெரும்புத்தூர் செயின்ட். ஜோசப் பள்ளி அயனாவாரம் பெத்தலகேம் பள்ளியில் படிச்சேன். அதனால், நானும் ஒரு சிட்டி பொண்ணு தான். அரசியல்லயும் கண்டிப்பா நான் ஜெயிப்பேன். அம்மா வேற கட்சில, நான் வேற கட்சில இருந்தாலும் ஒருவரோட விஷயத்துல மற்றவங்க தலையிட மாட்டோம். நான் தேசியக் கட்சியை தேர்வு செய்து அதில் இணைந்திருக்கிறேன். பிரதமர் மோடி இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷைனாக இருக்கிறார். எனக்கும், அவர் தான் இன்ஸ்பிரேஷன் என்று சொல்கிறார்.
கடந்த 2004- ம் ஆண்டு வீரப்பன் அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதிரடிப்படையின் தலைவர் கே. விஜயகுமார் எழுதிய 'சேசிங் தி பிரிகண்ட் ' என்ற புத்தகத்தில் , வீரப்பன் மனைவி முத்துலட்சுமி சரண்டரானதும் சென்னையில் தான் குழந்தை பெற்றெடுத்துள்ளார். அதிரடிப்படை அதிகாரி ஒருவர் தான், வித்யா ராணி என்ற பெயரை சூட்டினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment