Sunday 26 July 2020

A.V.M. RAJAN ,TAMIL ACTOR PRODUCER,PRIEST BORN 1935 JULY 26





A.V.M. RAJAN ,TAMIL ACTOR PRODUCER,PRIEST 
 BORN 1935 JULY 26






ஏ. வி. எம். ராஜன் ஒரு தமிழ் திரைப்பட நடிகர், 1960-களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது முதற்படம் நானும் ஒரு பெண். இவருடன் இப்படத்தில் நடித்த நடிகை புஷ்பலதாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல தமிழ்படங்களில் நடித்துள்ளனர்.70 வதுகளின் இறுதியிலும் 80 களிலும் வந்த தமிழ் சினிமாவில் மிக மோசமான சினிமாக்களை கொடுத்ததில் சிவாஜி கணேசனின் பங்கும் அதிகம். தில்லான மோகனாம்பாள், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்று பல படங்களில் மிக சிறப்பாக நடித்து ‘நடிகர் திலகம்’ என்று பெயர் பெற்ற அவருக்கு எதிராக, அவரே வைத்துக் கொண்ட சூனியங்களுக்கு பலபெயர்கள் உண்டு. அதில் குறிப்பாக ஒன்றுக்கு பெயர் ‘லாரி டிரைவர் ராஜாகண்ணு.’

சண்முகசுந்தரம், அவரது மேடைப் பெயரால் அறியப்பட்ட ஏ.வி.எம். ராஜன், (26 ஜூலை 1935) 1960 கள் மற்றும் 1970 களில் தீவிரமாக செயல்பட்ட தமிழ் சினிமாவில் ஒரு முன்னாள் இந்தியர். புதுக்கோட்டையில் பிறந்த சண்முகசுந்தரம் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தாலும் சினிமாவில் சேர மிகவும் ஆர்வமாக இருந்தார். [1] கிறிஸ்டியன் ஸ்வீடன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் அவரது உயர்நிலை. அவரது பெற்றோர் அவரை ஒரு போலீஸ் அதிகாரியாக பார்க்க விரும்பினர்.

அவர் தேர்வு எழுத மெட்ராஸுக்கு வந்தார், ஆனால் தேர்வுக்கு அமரவில்லை. 14 வயதில் இடது கை முறிந்தவலி தாங்க முடியாததால் பரீட்சை எழுத முடிய வில்லை .அதற்கு பதிலாக, ராஜ் பவன் கிண்டி சென்னையில் பணிபுரிந்தபோது, ​​சினிமாவில் தனது அதிர்ஷ்டத்தை ஒவ்வொரு திரைப்பட நிறுவனத்தின் கதவுகளையும் தட்டி சிறந்த வருமானத்தை ஈட்ட முயன்றார். நீண்ட காலமாக, அயிராம் காலத்து பயிரு திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்பைப் பெறுவதன் மூலம் அவரது அயராத முயற்சிகள் பலனளித்தன, அதில் அவர் 'ராஜா பி.ஏ.' என்று அறிமுகப்படுத்தப்பட்டார். விரைவில், ஏ.வி.எம் திரைப்படமான நானும் ஓரு பென்னிலும் நடிக்க அவர் கையெழுத்திட்டார். [2]
எஸ்.எஸ்.ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நானும் ஒரு பெண் என்ற ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் ராஜன் நடித்தார். எனவே அவர் 'ஏ.வி.எம்.' ராஜன்ஆனார் . அதே படத்தில் தமிழ் நடிகை புஷ்பலதா .ஒரு ஜோடி ., பின்னர் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பல படங்களில் ஒரு ஜோடியாக நடித்தனர், இதில் கற்பூரம் (1967), சிறந்த நடிகருக்கான தமிழக மாநில திரைப்பட விருதை வென்றார். ஏ.வி.எம்.ராஜனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், மூத்த மகள் மஹாலட்சுமி 80 - 90 களில் ஒரு நடிகை. ராஜன் பின்னர் 1988 முதல் ஒரு முழுநேர பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ
போதகரானார் [3] பின்னர் அதன் பின்னர் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவரது மனைவி புஷ்பலதா பிறப்பால் கத்தோலிக்கர். இவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். ராஜனின் மாற்றத்தைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரும் முழுநேர ஊழியத்தில் பணியாற்றி வருகின்றனர்
அந்தப் படத்தின தயாரிப்பாளர், நடிகர் ஏ.வி.எம். ராஜன். தீவிர இந்து மத உணர்வாளராக இருந்த, முருகன் அடிமை ஏ.வி.எம். ராஜனையே, இயேசுவின் அடிமை ஏ.வி.எம். ராஜனாக மதம் மாற வைத்துவிட்டார் சிவாஜி கணேசன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில், அவர் அடைந்த நஷ்டத்தால், ‘இனி சிவாஜி கணேசன் இருக்கிற இந்து மதத்தில் நான் இருக்க மாட்டேன்’ என்பதுபோல் மதம் மாறி கிறிஸ்டியனா போயிட்டாரு ஏ.வி.எம்.ராஜன்.

ஏ. வி. எம். ராஜன் ஒரு தமிழ் திரைப்பட நடிகர், 1960-களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது முதற்படம் நானும் ஒரு பெண். இவருடன் இப்படத்தில் நடித்த நடிகை புஷ்பலதாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல தமிழ்படங்களில் நடித்துள்ளனர்.

ஜெமினி கணேஷ் சாயலில் சிவாஜி கணேசன் போல நடித்தால் எப்படி இருக்கும். அது தான் AVM ராஜன். 1963ம் ஆண்டு எஸ்.எஸ்.ஆர்-விஜயகுமாரி-ரங்காராவ்-எம்.ஆர்.ராதா நடித்த ‘நானும் ஒரு பெண்’ படத்தில் அறிமுகமானவர் ஏ.வி.எம் ராஜன். அவரிடம் ஒரு ஸ்டைல் இருந்தது. தமிழ் திரை கண்ட பட்டதாரி நடிகர்களில் ஒருவர்.இசை வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர்.
பி.யு.சின்னப்பா,ஜெமினிகணேஷ்,ஏ.வி.எம் ராஜன் மூவரும் புதுக்கோட்டைக்காரர்கள்!
திருமணமாகி குழந்தை உள்ள நிலையிலேயே கடுமையாகப் போராடி திரைக் கதாநாயகனாக வாய்ப்பைப் பெறமுடிந்தது. தனக்கு முன் சினிமாவில் நடித்து, நானும் ஒரு பெண் படத்தில் இவர்’ ஏமாறச்சொன்னது நானோ?’ என பாடி கிண்டல் செய்த புஷ்பலதாவை இரண்டாவதாக திருமணம் செய்தார்.
பார் மகளே பார் படத்தில் இவர் நடித்து, பல காட்சிகள் படத்தில் வெட்டப்பட்டன.ஒரே ஒரு காட்சியில் மட்டும் வருவார்.
ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார்.
பெயர் சொல்லும்படியாக1965ல் ‘ என்ன தான் முடிவு?’ ’வீர அபிமன்யு’ படங்கள்.1966ல் பாலச்சந்தர் படம்’மேஜர் சந்திரகாந்த’ படத்தில் ரஜினிகாந்த் என்ற பாத்திரம். இந்தப்பெயரைத்தான் பின்னால் சிவாஜிராவுக்கு ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில்அறிமுகப்படுத்தியபோது பாலச்சந்தர் வைத்தார்.

,மேஜர் சந்திரகாந்தில்’நேற்று நீ சின்ன பப்பா! இன்று நீ அப்பப்பா!’ இந்தப் பாடல் ஏவிஎம் ராஜன் -ஜெயலலிதாவுக்கு.

1967ல் ’பந்தயம்’ படம் – ஜெமினியுடன் இணைந்து நடித்தார்- இந்த படம் ஏ.வி.எம். ராஜனை உயர்த்தியது.பூரிப்பான அந்த முகத்துடன் ‘இரவு நடக்கின்றது என் இதயம் மலர்கின்றது.’ பாடலுக்கு அவர் நடிப்பு ரொம்ப பிரமாதமாக இருக்கும்.
’கற்பூரம்’ படத்தில் புஷ்பலதாவும் இவரும் அற்புதமாக நடித்தார்கள். ஏ.வி.எம் ராஜன் -புஷ்பலதா நாடகக்குழுவின் நாடகம் தான் படமானது.
ஏ.வி.எம் ராஜன் -புஷ்பலதா ஜோடி நடித்த சில படங்கள் அவர்களின் சொந்தத்தயாரிப்புகள்.
ஜெமினி கணேஷ்,நாகேஷ் என்று ஜாம்பவான்கள் ‘சக்கரம்’(1968) படத்தில் இருந்தார்கள். ஆனால் ஏ.வி.எம்.ராஜன் அவர்களையெல்லாம் அந்தப் படத்தில் ’ப்பூ் என்று ஊதித்தள்ளி விட்டார் என்று சொன்னால் அது மிகையேயல்ல. அப்படி ஒரு பெர்ஃபாமன்ஸ்!
’துணைவன்’ ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தேவர் படம்.அதில் கதாநாயகன் ராஜன் முருகபக்தன்.
சிவாஜியுடன் ’கலாட்டா கல்யாணம்’, தில்லானா மோகனாம்பாள்
எம்ஜிஆருடன் ’எங்கள் தங்கம்’
‘அன்னையும் பிதாவும்’
துலாபாரம்’.‘பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே’
பால்குடம் படத்தில் எஸ்.பி.பி யின் “ மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக”
மகிழம்பூ, தரிசனம், ஜெயலலிதாவுடன் அனாதை ஆனந்தன்,புட்டண்ணாவின் இருளும் ஒளியும்.
ரவிச்சந்திரனுடன் ‘ஏன்’,’ஜீவநாடி’,புகுந்த வீடு
ஜெய்சங்கருடன் ’மன்னிப்பு’ ’தாய்க்கு ஒரு பிள்ளை’. இந்தப்படங்களில் யார் பெயரை முதலில் போடுவது என்ற ஈகோ பிரச்னை. டைட்டிலில் இருவர் பெயரையும் போடவில்லை.
’திருமகள்’ என்று ஒரு படம். ஜெமினி, பத்மினி்,லட்சுமி யெல்லாம் நடித்த படம். அதில்”உள்ளங்கள் பல விதம், எண்ணங்கள் ஆயிரம்,உறவுகள் வளர்வதற்கு மனம் தானே காரணம்’‘ பாட்டில் சிவகுமார் காலை மாற்றி மாற்றி ஸ்டெப் வைப்பது பார்க்க சகிக்காது. ஆனால் ராஜன் சரணத்தில் ஸ்டைலாக நடந்தவாறே”அழித்தால் அழிவதில்லை ஆனந்த நினைவுகளே”என்ற வரியில் தியேட்டரில் அப்ளாஸ் தூள் பறக்கும்.
நடிகர் சிவகுமார் இந்த வாரக் குமுதத்தில் ராஜன் பற்றி ‘நடிப்புக்கடல்’ என்று சொன்னது வாஸ்தவம் தான். மதுரை மிட்லண்ட் தியேட்டரில் ‘சக்கரம்’ படத்தில் ராஜனின் நடிப்பைக் கண்டு பரவசமான ஒரு அப்பாவி தரை ரசிகர் “செத்தாண்டா சிவாஜி கணேசன். இவன் கிட்ட சிவாஜி பிச்சை வாங்கனும்டா!” என்று உணர்ச்சி வசப் பட்டு கூப்பாடு போட்டார். .
ஏ.எம்.ராஜா மீண்டும் பாட வந்த போது ஜிக்கியுடன் ஜெமினிக்கு ரங்கராட்டினத்தில் ‘முத்தாரமே!உன் ஊடல் என்னவோ.’ பாடினார்.
ராஜனுக்கு புகுந்த வீட்டில்’செந்தாமரையே!செந்தேனிதழே!பொன்னோவியமே!கண்ணே வருக!’
வீட்டு மாப்பிள்ளை யில் ‘ராசி நல்ல ராசி! உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி’ ’மலரே நீ என் மலரல்ல!நான் உன் வண்டல்ல’
தாய்க்கு ஒரு பிள்ளை யில் ‘சின்னக்கண்ணனே! நீ பிள்ளையென நான் தந்தையென ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது.’ என்று பல பாடல்கள் ஏ.எம்.ராஜா தான் பாடினார்.
.
சிவாஜியுடன் மீண்டும் ‘சிவகாமியின் செல்வன்’, ’ரோஜாவின் ராஜா’
’சக்கரம்’ படத்தின் வெற்றி இவருக்கு அதே மாதிரி ’போலீஸ் விரட்டுகிற’ சப்ஜெக்ட் உள்ள பல படங்களில் தள்ளிவிட்டதோ என்னமோ. முருகன் காட்டிய வழி,ஒரே சாட்சி என்று பல படங்களில் போலீஸுக்கு பயந்து ‘மகமாயி ம்கமாயி’ என்று அரற்றிக்கொண்டே ஓடி,ஓடி ஒளிந்தே மார்க்கெட்டிலிருந்து ஒழிந்தே போனார்.
.
சித்ரமஹால் கிருஷ்ண மூர்த்தி என்று ஒரு தயாரிப்பாளர். ’செல்லப்பெண்‘ என்று ஒரு சோகப்படம் எடுத்தார்.நம்ம‘Poor man’s SivajiGanesan’ ஏ.வி.எம் ராஜனே தான் கதாநாயகன்!படம் சோகமோ சோகம்.படம் பூரா ஹீரோவின் ஊளை அழுகையும் ’மகமாயி’ மகமாயி’ ஒப்பாரியும். தீபாவளி ரிலீஸ். மதுரையில் சித்ரமஹால் தீபாவளியன்று முதல் காட்சியில் படம் பார்த்து விட்டு வெளியே வந்த ஒரு ரசிகரிடம் ‘படம் எப்படி?’ என்று மெதுவாகத்தான் கேட்டார். ஒரு கொட்டாவி விட்ட அந்த ரசிகர் . சீறியிருக்கிறார்.

சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்திக்கு இது ஒரு ஞானம் கிடைக்க வழியேற்பட்டது. அவர் உடனே,உடனே ஒரு முக்கிய தீர்மானம் எடுத்தார். ’இனிமேல் சிரிப்புப் படங்கள் மட்டுமே தான் இந்த சித்ரமஹால் கிருஷ்ண மூர்த்தி எடுப்பான்.’ அதன் பின் அவர் எடுத்த படங்கள் ’தேன் கிண்ணம்’, ’ஹலோ பார்ட்னர்’,’உங்கள் விருப்பம்’ ‘கல்யாணமாம் கல்யாணம்’ஆகியவை.

மார்க்கெட் போன பின் ஏ.வி.எம் ராஜனுக்கு தயாரிப்பாளர் ஆக ஆசை வந்தது.கே பாலாஜி ஸ்டைலில் நாம் சிவாஜி படங்களின் தயாரிப்பாளராக ஜெயிப்போமே என்று. அது தான் சனியன்.
.
சொந்தப்படம் எடுத்துக் கடனாளியாகி சொத்தெல்லாம் கரைந்து போய்விட்டது.
புஷ்பலதா அப்போது படங்களில் துணை நடிகையாகி தேங்காய் சீனிவாசனுக்கும், மேஜர் சுந்தர ராஜனுக்கும் ஜோடியாக நடிக்க வேண்டிய நிலையாகி விட்டது.சரியாக அந்த நேரத்தில் புஷ்பலதா கேட்டார். ;சாமி சாமின்னு அலைஞ்சீங்களே.இப்பவாவது இனிமேலாவது ஏசுவை நம்புறீங்களா?‘ஏவிஎம் ராஜன் – புஷ்பலதா வின் மகள் மகாலட்சுமி (ராணித்தேனி படத்தில் அறிமுகமானவர்) பல கன்னடப் படங்களில் நடித்தார். நடிகர் ராஜீவ் வுடன் ஒரு கட்டத்தில் இணைத்துப் பேசப்பட்டார். பின் ஒரு கன்னட இயக்குனரை காதலித்து திடீர் திருமணம் செய்துகொண்டார். இதுவும் ஏவிஎம் ராஜனை,புஷ்பலதாவை மிகவும் பாதித்திருக்கும்.

பெந்தகோஸ்த் கிறிஸ்தவர் ஆக மாறும் மனநிலை குடும்பம்,தொழில் சரிவை சந்தித்தவர்களுக்கு, பெரு நோயாளிகளுக்கு, மரணதண்டனை,ஆயுள் தண்டனை கைதிகளுக்கு சுலபமாக சாத்தியமாகிவிடுகிறது.‘ஏசுவின் அடிமை’ என்றே தன்னைப் பற்றி பிறகு ராஜன் சொல்லிக்கொண்டார். ‘ஏவிஎம் ராஜன் செத்துவிட்டான். நான் இப்போது ஏசுவின் அடிமை.’ராசுக்குட்டி ஷுட்டிங் போது மனோரமா சொன்னார்.”புஷ்பலதா கிறிஸ்தவப் பெண் என்பதால் ராஜனை மாற்றி விட்டாள்.”
நடிகர் கல்யாண்குமாருக்கு திரையுலகில் ஒரே ஒரு நண்பன் யார் தெரியுமா?ஏவிஎம் ராஜன் தான்! ஆனால் ராஜன் peak ல் இருந்த காலங்களில் ஸ்டுடியோவில் கல்யாண்குமாரைப் பார்த்தால்கூட முகத்தைத் திருப்பிக்கொள்வாராம்.பார்க்காத மாதிரி கடந்து போய்விடுவாராம்.ஏசுவின் அடிமை யாக மாறியபோது கல்யாண்குமாரை பார்த்தபோது தேம்பித் தேம்பி அழுதார். கல்யாண்குமாருக்குமே அவருடைய மத மாற்றத்தில் ஒப்புதல் இல்லை. நடிகர் விஜய் வீட்டில் ஏவிஎம் ராஜன் நடத்திய பிரார்த்தனைக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அழைத்துப் போய் இருக்கிறார். ராஜனைப் பார்த்து தன்னை ‘bless’ செய்யுமாறு சொத்தெல்லாம் இழந்துவிட்ட கல்யாண்குமாரும் வேண்டியபோது ராஜன் அழுது தேம்பி’ ரொம்ப நல்ல ஜீவன் என் நண்பன். ஏசுவே என் நண்பனை கடைத்தேற்றும்.ரொம்ப நல்ல ஜீவன்’ என்றாராம்.

ஒரு ஹீரோ நடிகனின் வாழ்க்கை luxury.erotic ஆனது.
ஏவிஎம் ராஜன் தூய வெள்ளையுடையில் வெய்யிலுக்கு ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு எளிமையுடன் நடந்துபோவதைப் பார்த்த கல்யாண்குமார் தான் தன் நண்பனிடம் மிகப்பெரிய transformation
ஏற்பட்டிருப்பதை அன்று உணர்ந்ததாக என்னிடம் கூறினார்.
அழகான ஒரு மனிதன் ஆடி ஓய்ந்தபின் ஆன்மீகத்தில் உண்மையாக மூழ்கி ’சாது’வாகிறதென்பது என்ன ஒரு அற்புத நிகழ்வு!
.

No comments:

Post a Comment