L.R.ESWARI ,SINGER BIOGRAPHY
லூர்து மேரியும் அறுபதுகளின் பெண்ணியமும்
“ஓ….அழகு ஒரு மேஜிக் டச்ச் …..ஓ ஓ ஓ …ஆசை ஒரு காதல் சுவிட்ச்ச்… ” இந்த இடத்தில் நம் மனதின் ஸ்விட்ச்சை அனாயசமாக ஆன் செய்வார் எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் .1950 இன் கடைசி வருடங்களில் லூர்து மேரி ராஜேஸ்வரி என்கின்ற பெண் எல் ஆர் ஈஸ்வரியாக சினிமா இசையுலகத்தில் அறிமுகம் செய்யப்படுகிறார் . அதுவரையில் ஒருவித மையலில் இருந்த தமிழ் திரை இசையை திடுப்பென்று கிளர்ந்தெழ செய்கிறார் தன் வசிய குரலில் .
தமிழ் திரையிசை வரலாற்றில் ஒரு குரல் பெண்ணியம் பேசியதென்றால் அது எல் ஆர் ஈஸ்வரியின் குரல் தான் .
அத்தனை வருடங்களாக தமிழ் சினிமா பாடல்களில் ஹீரோயின்களின் குரல்கள் ஆண்மை நிறைந்த ஹீரோக்களிடம் கொஞ்சி கொண்டிருந்தன ,கெஞ்சி கொண்டிருந்தன ,கைவிடப்பட்டு கதறிக்கொண்டிருந்தன ,ஆறுதலை தேடிக்கொண்டிருந்தன ஆனால் எல் ஆர் ஈஸ்வரியின் குரலோ மிஞ்சி கொண்டிருந்தது . அந்த குரல் அடக்கப்பட்ட காமத்தின் தேவைகளின் கூக்குரலாய் இருந்தது ,அந்த குரல் பெண்ணுக்குள் ஏற்படும் கிளர்ச்சியை பண்பாட்டு போர்வைக்குள்ளிருந்து வெளியே இழுத்து வந்தது ,அந்த குரல் மட்டுமே முதல் முறையாக தமிழ் சினிமாவில் பெண்ணின் தேவைகளை சத்தம் போட்டு உரைத்தது .
“ஓ….அழகு ஒரு மேஜிக் டச்ச் …..ஓ ஓ ஓ …ஆசை ஒரு காதல் சுவிட்ச்ச்… ” இந்த இடத்தில் நம் மனதின் ஸ்விட்ச்சை அனாயசமாக ஆன் செய்வார் எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் .1950 இன் கடைசி வருடங்களில் லூர்து மேரி ராஜேஸ்வரி என்கின்ற பெண் எல் ஆர் ஈஸ்வரியாக சினிமா இசையுலகத்தில் அறிமுகம் செய்யப்படுகிறார் . அதுவரையில் ஒருவித மையலில் இருந்த தமிழ் திரை இசையை திடுப்பென்று கிளர்ந்தெழ செய்கிறார் தன் வசிய குரலில் .
தமிழ் திரையிசை வரலாற்றில் ஒரு குரல் பெண்ணியம் பேசியதென்றால் அது எல் ஆர் ஈஸ்வரியின் குரல் தான் .
அத்தனை வருடங்களாக தமிழ் சினிமா பாடல்களில் ஹீரோயின்களின் குரல்கள் ஆண்மை நிறைந்த ஹீரோக்களிடம் கொஞ்சி கொண்டிருந்தன ,கெஞ்சி கொண்டிருந்தன ,கைவிடப்பட்டு கதறிக்கொண்டிருந்தன ,ஆறுதலை தேடிக்கொண்டிருந்தன ஆனால் எல் ஆர் ஈஸ்வரியின் குரலோ மிஞ்சி கொண்டிருந்தது . அந்த குரல் அடக்கப்பட்ட காமத்தின் தேவைகளின் கூக்குரலாய் இருந்தது ,அந்த குரல் பெண்ணுக்குள் ஏற்படும் கிளர்ச்சியை பண்பாட்டு போர்வைக்குள்ளிருந்து வெளியே இழுத்து வந்தது ,அந்த குரல் மட்டுமே முதல் முறையாக தமிழ் சினிமாவில் பெண்ணின் தேவைகளை சத்தம் போட்டு உரைத்தது .
இப்பொழுது கேட்டால்கூட சில ஆண்கள் சொல்லுவார்கள் எனக்கு “சுசீலாம்மா புடிக்கும் ,ஜானகி அம்மா வாய்ஸ் புடிக்கும் ,எல் ஆர் ஈஸ்வரி புடிக்காது ” . இதற்க்கு முக்கிய காரணமாக அவர்கள் சொல்லுவது ‘அவங்க ரொம்ப சத்தமா பாடுவாங்க ” .இவர்கள் அனைவருக்கும் உள்ளிருக்கும் உளவியல் ஒன்றுதான் ,தன் எல்லைகளை மீறிய பெண்களையோ ,குரல்களையோ இவர்களுக்கு பிடிப்பதில்லை .என் என்றால் சில சமயம் எல் ஆர் ஈஸ்வரியின் குரல் உண்மையை மண்டையில் ஓங்கி அறைந்தது போல இருக்கும் .”அடி என்னடி உலகம் ,அதில் எத்தனை கலகம் ” இந்த வரிகளை வேறு யார் பாடி இருந்தாலும் அது ஏதோ கவிஞர் எழுதிய வெறும் பாடல் வரிகளாக மட்டுமே இருந்திருக்கும் இதையே அவர் பாடும்பொழுது அது இப்போதைய ஒரு liberal முகநூல் போராளியின் பதிவு போல் இருக்கிறது ,அது ஒரு பெண்ணிய பிரகடனமாக காதில் விழுகிறது ,”கோடு போட்டு நிற்க சொன்னான் சீதை நிற்க வில்லையே… சீதை அங்கு நின்றிருந்தாள் ராமன் கதை இல்லையே… கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி …கொள்ளும்போது கொள்ளு தாண்டி செல்லும்போது செல்லடி ” இப்பொழுது சொல்லுங்கள் இப்படி ஒரு பாடலை அப்படி ஒரு குரலில் பாடினால் எந்த இந்திய ஆணுக்கு பிடிக்கும் ? கம்பீரமான பெண்ணையோ பெண் குரலையே 2017 இல்லையே ஆண்கள் ஏற்றுக்கொள்ளாத வேளையில் அறுபதுகளில் எழுபதுகளிலும் ‘queen பீ’ -ராணி தேனீயாக பறந்து கொண்டிருந்தவர் எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் .
அறுபதுகளின் தமிழ்ப்படங்களில் ‘இங்கிலீஷ்’ பேசும் ஹீரோயின்களை திமிர் பிடித்தவர்களாக காட்டி கொண்டிருந்த வேளைகளில் ,எல் ஆர் ஈஸ்வரியின் பாடல்களில் பரவலாக ஆங்கில வார்த்தைகள் இருக்கும் .அதை அவர் உச்சரிக்கும் விதம் ,தமிழ் வார்த்தைகளை அழுத்தமாக உச்சரித்து ஆங்கில வார்த்தைகளை ஸ்டைலிஷாக மென்மையாக பாடும் நேர்த்தி இப்பொழுது கேட்டாலும் மனம் விசில் அடிக்கிறது . அப்பொழுது சக பாடகிகளை இவர் பொறாமை பட வைத்திருப்பார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை .
எவ்வளவு திறமை அவருக்குள் தான் ! “முத்து குளிக்க வாரியாளா ” என்று தெற்கத்தி தமிழில் காதலனை அழைக்கும்போதும் சரி , ” எலந்தப்பயம் ” என்று வடசென்னை தமிழில் பாடும்போதும் சரி ,இவ்வளவு variations ஐ வேறு யாராலும் இவ்வளவு தெளிவாக கொண்டு வர முடிந்ததில்லை . I think she is the most underrated singer in tamil .
அறுபதுகளின் தமிழ்ப்படங்களில் ‘இங்கிலீஷ்’ பேசும் ஹீரோயின்களை திமிர் பிடித்தவர்களாக காட்டி கொண்டிருந்த வேளைகளில் ,எல் ஆர் ஈஸ்வரியின் பாடல்களில் பரவலாக ஆங்கில வார்த்தைகள் இருக்கும் .அதை அவர் உச்சரிக்கும் விதம் ,தமிழ் வார்த்தைகளை அழுத்தமாக உச்சரித்து ஆங்கில வார்த்தைகளை ஸ்டைலிஷாக மென்மையாக பாடும் நேர்த்தி இப்பொழுது கேட்டாலும் மனம் விசில் அடிக்கிறது . அப்பொழுது சக பாடகிகளை இவர் பொறாமை பட வைத்திருப்பார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை .
எவ்வளவு திறமை அவருக்குள் தான் ! “முத்து குளிக்க வாரியாளா ” என்று தெற்கத்தி தமிழில் காதலனை அழைக்கும்போதும் சரி , ” எலந்தப்பயம் ” என்று வடசென்னை தமிழில் பாடும்போதும் சரி ,இவ்வளவு variations ஐ வேறு யாராலும் இவ்வளவு தெளிவாக கொண்டு வர முடிந்ததில்லை . I think she is the most underrated singer in tamil .
எம்ஜியாரோ சிவாஜியோ அவர்களின் முகபாவத்தை மிஞ்சிவிடும் டி எம் எஸின் குரல் ,அவ்வளவு கம்பீரம் .பொதுவாக மற்ற பெண் பாடகிகள் குரல் அதன் வீரியத்தை முன் அடங்கியே இருக்கும் .எல் ஆர் ஈஸ்வரியை தவிர .அவரின் குரல் பல நேரங்களில் டி எம் எஸின் குரலை அழகாய் ஓவர்டேக் செய்து நான்காம் கியரில் போய்விடும் .ஆனால் விமர்சகர்களோ பெரும்பாலும் இதை எல் ஆர் ஈஸ்வரியை வைத்து குறை சொல்வதற்கு மட்டுமே உபயோகிக்கின்றனர் .டி எம் எஸின் குரல் மற்ற பெண் பாடகிகள் குரலை ஆதிக்கம் செய்த தருணம் எழாத இந்த விமர்சனம் எல் ஆர் ஈஸ்வரி செய்த பொழுது எழுந்த காரணம் ஆணாதிக்க மனப்பான்மை இல்லாமல் வேறு என்ன ? ஆனால் அதை எல்லாம் துளியும் சட்டை செய்யாமல் தன் குரலின் தனித்துவம் மாறாமல் பார்த்துக்கொண்டார் எல் ஆர் ஈஸ்வர் “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேனில் ” துவங்கி சில வருடங்கள் முன் வெளியான “கலாசலா ” வரை அந்த பாவம் ,பாடலை முன்னெடுத்தி செல்லும் திறன் இன்னும் துளி கூட குறையவில்லை .
பெண் பாடகிகள் குரல் தேன் போல் இருக்கவேண்டும் ,வைன் குடித்தால் வரும் எறும்பு கடி போதையாய் இருக்கு வேண்டும் என்று ‘Streotyping ‘வலைக்குள் சிக்கிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில் க்ரீன் சில்லி வோட்க்காவாய் சுரென்று சுவைக்க வைத்தது எல் ஆர் ஈஸ்வரியின் குரல்தான் என்று சொன்னால் மிகையாகாது . “பட்டதுராணி பார்க்கும் பார்வை ” பாடலில் வரும் அந்த சிலிர்ப்பு வலியோடு உடன் எழும் ஒரு தேக கிளர்ச்சியயை அப்படி சொல்லிவிட்டு போய் இருக்கும் , “மேலாடை மூடும் …பாலாடை மேனி ” seduction வித்தையின் உச்சக்கட்டத்தில் நம்மை பார்வையாளராக்கும் . துடுக்கு பெண் குரலா ..எல் ஆர் ஈஸ்வரி ,தைரியமான பெண் குரலா ..எல் ஆர் ஈஸ்வரி ..கிண்டல் செய்யும் பெண் குரலா ..எல் ஆர் ஈஸ்வரி என்று பாடல்கள் அமைத்தாலும் அவர் குரலை பெரும்பாலும் பயன்படுத்தி கொண்டது ‘அப்பொழுதைய ‘item song பாடல்களில் இல்லை என்றால் ஹீரோக்களை மயக்கும் வில்லனின் ஆசை காதலிக்கு . ஒரு ஆணை கலவிக்கு அழைத்தல் தவறு என்று சட்ட திட்டம் போட்டு கொண்டிருந்த தமிழ் சினிமாவில் ஹீரோக்களை வசியப்படுத்தும் பாடல்களுக்கு மட்டும் அதிகம் பயன்படுத்த பட்டார் எல் ஆர் ஈஸ்வரி ஆனால் அதை கண்டும் அவர் சோர்ந்து போகவில்லை ,பளிங்கினால் தனக்கான ஒரு மாளிகையை அதை வைத்தே கட்டிவிட்டார் .
ஆண்களின் உலகத்தில் சமநிலையை அடைய துடிக்கும் ஒரு பெண்ணாக இருந்தவரின் குரல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அழகா பொருந்தி போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை .தங்கள் மேல் எறியப்பட்ட அவமான கற்களை வெற்றி படிக்கெட்டுகளாய் மாற்றியவர்கள் இருவருமே .
சினிமா பயணம் முடியும் தருவாயில் பக்தி பாடல்கள் துறையில் கால் பதிக்கிறார் .எடுத்ததும் ஒரு சிக்ஸர் . அதுவரையில் கர்நாடக சங்கீத பாடகிகள் மட்டுமே தங்களின் சாந்த குரலில்ஆதிக்கம் செய்து வந்த இடத்தில் அட்டகாசமாக ஓங்கி ஒலிக்கின்றது எல் ஆர் ஈஸ்வரியின் குரல் ,இன்னும் சத்தமாக . அம்மனிடம் கெஞ்சி கொண்டிருக்கும் மகளிரை ” கற்பூர நாயகியே கனகவல்லி ” என்று உரிமையுடன் கேட்ட தூண்டுகிறார் எல் ஆர் ஈஸ்வரி .நீயே சாமி உள்ளிருப்பதும் நீதான் ஆகவே எதை கேட்டாலும் இன்னும் கொஞ்சம் சட்ட திட்டமாக நன்றாகவே குரலை உயர்த்தி கேள் என்று உயர்த்திவிட்டு போகிறது எல் ஆர் ஈஸ்வரியின் குரல் .
அவர் சேலை கட்டும் விதம் கூட என்னை அநேக தடவை கவர்ந்திருக்கிறது .மற்ற பாடகிகளிடம் காண கிடைக்காத அந்த நிமிர்ந்த தோற்றம் ,நேர்கொண்ட பார்வை ,புடவையை மார்போடு மூடி கொள்ளாமல் ஒற்றையாய் காற்றில் பறக்க விடும் அந்த ஸ்டைல் என்று அவர் பெண்ணியவாதியென்று அவர் தோற்றமே பல வேளைகளில் உணர்த்திவிட்டு போய் இருக்கிறது . பேசும் தொனி கூட அவர் எவ்வளவு தைரியமானவர் என்று நமக்கு தெரியப்படுத்தும் .இன்னும் கூட “சூப்பர் சிங்கர் ‘ நிகழ்ச்சியில் அவர் பேசுவதை பார்க்கும்போது இன்னும் கூட அவர் மற்றவரை விட எவ்வளவு மாறுபட்டுருக்கிறார் என்பதை தெளிவாக பார்க்கமுடிகிறது .
எனக்கென்னவோ அவரின் திறனை நாம் சரியாக பாராட்டாமல் விட்டு விட்டோமோ என்றே பதறுகிறது .அதற்கு ஒரே காரணம் ,அவர் வித்தியாசமான ,மாறுபட்ட ஒரு பெண் .இத்தகைய பெண்களை தமிழ் சமூகம் கொண்டாடியதே இல்லை .நமக்கு மாறுதல் பிடிக்காது .மாறுபட்ட குரல் பிடிக்காது .கூண்டுகளில் அடைபட்ட குயில்களின் சோகம் மட்டுமே நமக்கு பழக்கமானது .ஆனால் எல் ஆர் ஈஸ்வரிகளோ “எவனோ சொன்னானாம்
எவளோ கேட்டாளாம் அதையா நாம கேட்கணும்
நமக்கு நாமே தான் கணக்கு ஒண்ணே தான் சரியா போட்டு பாக்கணும் ,
புது மனசு
புது வயசு
புது ரசனை
எது பெரிசு
நம் பொன் உலகம் நம் கையிலே ”
என்று நினைவில் என்றுமே இனித்து கொண்டிருப்பார்கள் .
ஷாலின் மரிய லாரன்ஸ் நன்றி குமுதம் , issue dated : 4th May 2017
.எல். ஆர். ஈஸ்வரி (பிறப்பு: திசம்பர் 7, 1939) வயது-73-தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகி. 1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார்.
வாழ்க்கைச் சுருக்கம்
பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட
தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார் ஈசுவரி. இவரது தாயார் எம். ஆர். நிர்மலா ஜெமினி ஸ்டூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர். ஈஸ்வரியின் இயற்பெயர் “லூர்துமேரி ராஜேஸ்வரி”. எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே தந்தை (36) இறந்து விட்டார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல். ஆர். அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உண்டு.
திரையுலகில்
மனோகரா (1954) படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் “இன்ப நாளிலே இதயம் பாடுதே” என்ற பாடலை ஜிக்கி குழுவினர் பாடினர். அப்பாடலில் தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் குழுவினருடன் சேர்ந்து பாடினார். அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார். முதன் முதலில் தனியாகப் பாடும் சந்தர்ப்பம் நல்ல இடத்துச் சம்பந்தம் (1958) திரைப்படத்துக்காக கே. வி. மகாதேவனின் இசையமைப்பில் இவரே தான் அவரே அவரே தான் இவரே என்ற பாடலைப் பாடினார். இதுவே இவரது முதல் பாடலாகும். இப்படத்தில் ஈஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.
இதனையடுத்து 1959 இல் வெளிவந்த நாலு வேலி நிலம் படத்துக்காக திருச்சி லோகநாதனுடன் இணைந்து ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே என்ற பாடலைப் பாடினார். இதனையும் கே.வி.மகாதேவனே இசையமைத்திருந்தார். 1961 இல் வெளிவந்த பாசமலர் திரைப்படத்தில் இவர் பாடிய வாராயென் தோழி என்ற பாடல் இவருக்கு மிகவும் புகழைத் தேடித்தந்த பாடல். இது இன்றும் திருமண விழாக்களில் ஒலிக்கும் பாடலாகும். “எலந்தப் பழம் எலந்தப்பழம்”, முத்துக்குளிக்க வாரியளா , அம்மனோ சாமியோ, வந்தால் என்னோடு இங்கே வா, நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், வருஷத்தைப் பாரு அறுபத்தி ஆறு, சிங்கப்பூரு மச்சான் சிரிக்கச் சிரிக்க வச்சான், இவ்வளவு தான் உலகம் இவ்வளவு தான் போன்ற பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்த ஏனைய பாடல்கள்.
பக்திப் பாடல்கள்
பிற்காலத்தில் இவர் துள்ளிசைப் பாடல்களையே நிறையப் பாடினார். எண்பதுகளின் பிற்பகுதியில் ஈஸ்வரிக்கு திரைப்பட வாய்ப்புக் குறைந்தது. எனினும் இளையராஜாவைத் தவிர பெரும்பாலான இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் 1990-கள் வரை தொடர்ந்து பாடிவந்தார். அதன் பின் சில இசையமைப்பாளர்களின் கைங்கரியத்தால் படிப்படியாக திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு குறைந்தது.இருந்தாலும் பக்திப் பாடல்களை திரைப்படங்களிலும், வெளியிலும் அதிகம் பாடி வருகிறார்.இப்போதும் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏராளமான தெலுங்கு, கன்னடம், மலையாள திரைப்படங்களிலும் பாடியுள்ளார்.
L. R. Eswari-Aged-73 -Born-07.12.1939- Lourde-Mary Rajeswari Eswari (L. R. Eswari) is a Veteran playback singer of the Tamil movie and Telugu movie industries. She also sang in other languages like Kannada, Malayalam, Tulu, and English.She has won Kalaimamani, the Tamil Nadu’s state award for her contributions to the film industry.
Early life
She was born in Chennai into a Roman Catholic family to Anthony Devraj and Regina Mary Nirmala. Her ancestors were from Paramakudi near Madurai. Her full name is Lourde-Mary Rajeshwari. Since there was already another established singer with the name of M.S.Rajeshwari her name was abbreivated into L.R.Eshwari. She did not have any formal training in singing. Her mother was a chorus singer in films. Eshwari used to accompany her mother to the studios and soon began singing in the chorus herself, but quickly got a break to lend her voice as lead-singer. Her first break came from Sri K.V.Mahadevan in 1958 in the movie ‘Nalla Idaththu Sammandham’, her first solo song recorded in this movie was ‘ivarey thaan avarey’. But major recognition came from the song ‘vaarai en thozhi vaaraayo’ from the movie ‘paasa malar’ (1961) sung under the baton of Viswanathan-Ramamurthy, which composers explored and exploited her vocal abilities to the maximum extent possible over the next 20 years.
Career
She sang under the direction of famous composers like M.S.Viswanathan,T.K.Ramamoorthy, K. V. Mahadevan,Veda,V.Kumar,Shankar-Ganesh,G.K.Venkatesh Ilayaraja and Kunnakudi Vaidyanathan. Her unique voice was considered to be suited for peppy numbers in the movies, be it a dance tune, folk song or a devotional track. Her song “Vaarayo Thozhi” from Paasa Malar was a popular choice for wedding music.
She has also recorded many devotional albums in praise of the Goddess Amman which were hugely popular among the Tamil community and were played in many temples. Her “Chellatha” and “Karpoora Nayagi” numbers has won her a lot of fame among devotees. She sang Christmas songs “Varuvai Varuvai” and ” Deivam thantha divya kumaaran” composed by Dr Anand Chellappa. She has won the Kalaimamani Award and other states awards. Her Hindi song uduthi hi chidiya from the film pistonwali, music by satyam shows her ability. She sang romantic songs filmed on heroines as well as cabarets filmed on dance-artistes and also folk songs.
She made her everlasting impression in Telugu film industry with her husky and peppy numbers. Till date most of her songs are very popular among the Telugu audience. Her notable hits include “Masaka masaka Cheekatilo” from Devudu Chesina Manushulu, “Maayadari sinnodu” from Ammamaata, “Bhale Bhale magadivo” from Marocharitra, “Arey yemiti lokam” from Anthulenikatha, “Le le le naa raaja” from Premnagar, “Malle puvvulu pillagaalulu” and “Theesko coco cola esko rammusoda” etc.
Perhaps she and P.Susheela were the most popular female-duet-duo ever, they complimented each other perfectly in terms of voice and style, and sang very many popular duets in their times – unadhu malar, chiththira poovizhi, ninaithaal sirippu, thoodhu sella etc.. They seemed to share a perfect chemistry and out-did each other line after line, apparently providing each other inspiration all along the song.She sang a popular duet “Gudilona naa swamy koluvai unnadu ” with S. Janaki in a Telugu movie Idalokam for music of Chakravarthy,which remains a top hit till date. She rendered several duets with S Janaki in Kannada movies as well.
She sang innumerable duets with all the leading male singers also – T. M. Soundararajan, A. L. Raghavan, P. B. Sreenivas, S.P. Balasubramaniam, K. J. Yesudas, J. P. Chandrababu, C. S. Jayaraman, S. C. Krishnan, Thiruchi Loganathan, A. M. Rajah, Seerkazhi Govindarajan,Malaysia Vasudevan, & Jayachandran.
She also sang duets with female singers with most notably with P. Suseela, S. Janaki, Vanijayaram K. Jamuna Rani, M. S. Rajeswari and Soolamangalam Rajalakshmi.
Re-entry
After a long break, she made her re-entry through a rocky peppy Tamil Song “Kalasala Kalasala ” from Movie Osthi 2011. Within few days of this song release, it has became a super hit and reached music box office top ratings,she sang the new Tamil song “Naa Poondamallida per puspavallida” from thadaiyara thakka 2012. She has also sung a recent Kannada Song for the movie Victory, the song name is ‘Yakka Nin Magalu Nanage’
Image
பாடல் ஹிட்டாவது என்பது இசையமைப்பாளரின் திறமையை பொறுத்தது!
By கார்த்திகேயன் வெங்கட்ராமன் | Published on : 21st October 2016 12:00 AM |
ஆடி மாதத்தில் திரும்பும் பக்கம் எல்லாம் அன்னையின் திருநாமமே ஒலிக்கும். அந்த கற்பூரநாயகியை, கனகவல்லியை, காவி மகமாயியை அற்புதமான குரலில் பாடி, கேட்போர் செவி மனமெல்லாம் உருகச் செய்பவர் எல்.ஆர்.ஈஸ்வரி. ஈஸ்வரியின் திருநாமத்தை பாடி வரும் இந்த ராஜேஸ்வரி கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்.
இவர் ஒரு சிறந்த சங்கீத பரம்பரையின் வாரிசு. இவரது தாயார் நிர்மலா ஒரு சிறந்த பாடகியாகத் திகழ்ந்தவர். இவரது தாயார் தேவராஜு தன்னுடைய இரண்டு பெண்களையும் (ஈஸ்வரி – அஞ்சலி) ராஜம் அய்யர் என்ற இசைக்கலைஞரிடம் இசை பயிலச் செய்தார். பின்னர் திருச்செந்தூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பரதம் பயிலச் செய்தார். அவர்களில் ஈஸ்வரியை சந்தித்த பொழுது:
கே: உங்களுக்கு முதன் முதலில் பாட வாய்ப்பளித்த இசை அமைப்பாளர் யார்?
ஈஸ்வரி: இசை மேதை எஸ்.வி.வெங்கட்ராமன். ‘மனோகரா’ படத்தில் சகோதரி ஜிக்கியிடன் சேர்ந்து ‘இன்ப நாளிதே’ என்ற பாடலைப் பாடினேன்.
கே: இதுவரை எத்தனை மொழிகளில் பாடியிருக்கிறீர்கள்?
ஈஸ்வரி: 14 மொழிகளில் பாடியிருக்கிறேன். அதில் ஒரு சிறப்பு உண்டு. விஜய பாஸ்கர் இசையமைப்பில் ‘நன்னா கண்ட எல்லி’ என்ற படத்தில் 14 மொழிகளில் அமைந்த ஒரே பாடலை நான் பாடியிருக்கிறேன்.
கே: பெரும்பாலும் கிளப் டான்ஸ் பாடல்களாகவே பாடி இருக்கிறீர்கள். ஏன்?
ஈஸ்வரி: எத்தகைய பாடல்களை நான் பாடினால் சோபிக்கும் என்பதை முடிவு செய்பவர் இசையமைப்பாளர்தானே?
கே: ஒரு பாடல் ஹிட்டாவதற்கு அதிக இசைக்கருவிகள் தேவையா?
ஈஸ்வரி: அபப்டி சொல்ல முடியாது. 10 வாத்தியங்களுடன் நான் பாடிய ‘எலந்தப் பயம்’ பாட்டும், 100 வாத்தியங்களுடன் ‘சிவந்த மண் ‘ படத்திற்காக பாடிய ‘பட்டத்து ராணி’ பாடலும் ஹிட்டாகவில்லையா? பாடல் ஹிட்டாவது என்பது இசையமைப்பாளரின் திறமையை பொறுத்தது.
கே: அன்றி நீங்கள் பாடிய பாடல்கள் மனதில் நிற்பது போல, இன்றைய பாடல்கள் மனதில் நிற்பதில்லையே ஏன்?
ஈஸ்வரி: முன்பு ஒரு பாடலை ஏற்க மனம் இருந்தது. இடைவெளி விட்டுத்தான் படங்கள்; வரும். ஆனால் இன்று நாளுக்கு இரண்டு படம் திரையிடப்படுவதால் பாடலை மனதில் கொள்ள வாய்ப்பில்லை என்பது என் அபிப்ராயம்.
கே: உங்களுக்கு புகழ் தந்த பாடல் எது?
ஈஸ்வரி: எம்.எஸ்.வி அவர்கள் இசையில் பாடிய “வாராயோ தோழி வாராயோ” பாடல்தான்.
பத்மநாபன்
(சினிமா எக்ஸ்பிரஸ் 15.06.82 இதழ்)
.
ஈஸ்வரியின் குரலையும் ரசிக்க வைத்தவர் எம்.எஸ்.வி. வழக்கமாக ஈஸ்வரி மாறுபட்டு பாடிய 'காதோடுதான் நான் பேசுவேன்' பாடலை உதாரணம் சொல்வார்கள். அது வி.குமார் இசையமைத்தது. ஆனால் எம்.எஸ்.வி, ஈஸ்வரியின் குரலை விதம் விதமாக முயன்று பார்த்திருக்கிறார்.
'கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா' -வில் இடையில் பெண் குரலில் வரும் ஹம்மிங்கை கவனித்துப் பாருங்கள். ஈஸ்வரி என்றே சொல்ல முடியாது. அத்தனை அற்புதமாக, உன்னதமாக இருக்கும்.
போலவே எம்.எஸ்.வி தனது பிற்காலத்தில் (அதாவது இளையராஜாவின் வருகைக்குப் பிறகு) இசையமைத்த ரகளையான ஆல்பங்களில் ஒன்று 'நினைத்தாலே இனிக்கும்'. நான் விடலைப்பருவத்தில், அதாவது ராஜாவைத் தவிர வேறு யாரையும் திரும்பிப் பார்க்காத காலத்தில், இந்த ஆல்பமும் ராஜா இசையமைத்தது என்றே நெடுநாள் நம்பிக் கொண்டிருந்தேன்.
இதிலும் ஈஸ்வரியின் சகித்துக் கொள்ளக் கூடிய ஒரு பாடல் உண்டு. 'இனிமை நிறைந்த உலகம் இருக்கு..இதிலே உனக்கு கவலை எனக்கு' - ஆனால் இந்த ஆல்பத்தில் உள்ள இன்னொன்றான 'ஆனந்த தாண்டவமோ' என்கிற பாடல்தான் ஈஸ்வரியின் குரலில் வெளிப்பட்ட பாடல்களிலேயே அழகியலின் உச்சம் என கருதுகிறேன். அத்தனை வித்தியாசமாக, இனிமையாகப் பாடியிருப்பார். காரணம் எம்.எஸ்.வி. என்று யூகிக்க சிரமம் ஏதும் தேவையில்லை. ஏனென்றால் ஈஸ்வரி வழக்கமாக பாடிய அல்லது பாட வைக்கப்பட்ட கிளப் டான்ஸ் பாடல்களையும் இதையும் ஒன்றாக வைத்து கேட்டுப்பாருங்கள். வித்தியாசம் தெரியும்.
இன்னொன்றையும் கவனித்தேன். எம்.எஸ்.வி தனது பிற்காலத்தில் வாணி ஜெயராமின் குரலை அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார். இந்தக் காலக்கட்டத்தில்தான் வாணி ஜெயராமின் குரலில் அதிக பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. .
சுரேஷ் கண்ணன்
Shared publicly -EDITED -K.NAGARAJAN
No comments:
Post a Comment