DEIVAMAGAN MOVIE DIALOGUES

DEIVAMAGAN  MOVIE  DIALOGUES



ஏமாந்துட்டேன் ராஜு ...ஏமாந்துட்டேன் 
இல்ல சங்கர் இதுக்கு யாரும் பொறுப்பாளி இல்ல 
இயற்கையோட விளையாட்டு 
உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் !


யாருடைய அனுதாபமும் எனக்கு தேவை இல்லை 
ராஜு...என் குழந்தையை கொன்னுடு ....
என்ன சொன்னே ...
ராஜு 
என் முகத்தை பாரு 
நல்லா பாரு ..
COME ON..LOOK AT ME!

பாக்க முடியலில ...பாக்க முடியலில ...
ராஜு..MY DEAR FRIEND
இத்தனை வருசமா பழகின உன்னாலேயே என்ன பாக்க முடியலில 
அதனாலதான் சொல்றேன் 
என்னைவிட விகாரமா பொறந்திருக்கிற 
என் குழந்தையை கொன்னுடு ..ப்ளீஸ் 
என் ஆசைகளையும் ,கனவுகளையும் கொன்னுட்டு 
அந்த குழந்தையையும் நீயே கொன்னுடு ...ராஜு ... 
I AM SORRY SANKAR

.
நான் கொலையாளி இல்ல.... டாக்டர் 
என்கிட்டே இருக்கற கத்தி உயிர்களை காப்பாத்துறதுக்கு 
அழிக்கிறதுக்கில்ல 
FOOL நீ கூட என்னை புரிஞ்சிக்க மாற்றியேடா  
ராஜு ...நீ கூட என்னை புரிஞ்சிக்க மாற்றியேடா

.இந்த விகாரமான முகத்தை வச்சிக்கிட்டு சின்ன வயசுல 
நான் பட்ட வேதனைகள் உனக்கு என்னடா தெரியும் 
உனக்கு என்ன தெரியும் 
என்னை வெறுத்தவங்க ,அவமானப் படுத்துனவுங்க ,என்னை அடிச்சி 
விரட்டுனவுங்க எத்தனை பேர் ..ராஜு ..எத்தனை பேர் 
ஒரு விசித்திரமான பிராணியை பாக்குற மாதிரிஎல்லாரும்  என்னை சுத்தி நின்னுகிட்டு
 ஓ ன்னு சத்தம் போட்டு  கேலி செய்யுறதும் ,என்னை தண்ணிக்குள்ள புடிச்சி தள்ளி ஓடுறதும் ,
நாயை என் மேல் ஏவி விட்டு நான் பயந்து ஓடுறதை பார்த்து கைகொட்டி இருக்கிறதும் 
.அதைநினைச்சா இப்ப கூட 
பக்குன்னு இருக்கு .. பக்குன்னு இருக்கு .. 
இவ்வளவு சித்திரவதைக்கு மத்தியில  நான் இந்த 
கொடுமையான உலகத்தில 
உழைச்சேன் 
உழைச்சேன்
மாடு மாதிரி உழைச்சேன் 
எந்திரம் மாதிரி உழைச்சேன்
சம்பாதிச்சேன்
பணக்காரன் ஆனேன்  


.ராஜு ..எனக்கு நல்லா தெரியும் 
நானும் மனுஷன்கிறதுக்காக என்னை நேசிக்கிறது 
இந்த உலகத்திலேயே நீயும் என்மனைவியும் தான் 
மத்தவங்கள்லாம் நான் பணக்காரன் கிறதுக்காகத்தான் 
மதிக்கிறாங்க 
இந்த பணம் மட்டும்  எனக்கு வரலேன்னா 
சொறிநாயைவிட கேவலமா என்னைக்கோ 
நடுத்தெருவுல பசியால சுருண்டு சேது போயிருப்பேன் 

.ராஜு ...இதே நிலைமை என் பையனுக்கும் 
வரணும்னு நினைக்கிறியா ? இல்லேல்ல 
அதனால தான் சொல்றேன் ..
இப்பவே என் பையனை கொன்னுடு 

NO YOU ARE WRONG
நீ தப்பு கணக்கு போடுற சங்கர் 


டேய் ..டேய் ...ராஜு ...
ஒருத்தரோட உணர்ச்சிகள வாயால சொன்னா 
புரியாதுடா ..அணு அணுவா அனுபவிச்சாதான் புரியும் 
நாளைக்கு என் பையன் என்கிட்டே வந்து 
அப்பா இந்த வேதனையெல்லாம் உங்களுக்கு புரியுமே 
என்னை அப்பவே கொன்னிருக்கக்கூடாதா ? ஏன்ப்பா
என்னை உயிரோட வாழ விட்டீங்கன்னு கேட்டா 
நான் என்னடா பதில் சொல்வேன் 

.மயக்கம் தெளிஞ்சி உன் மனைவி 
குழந்தை எங்கேன்னு கேட்டா 
நா என்னடா பதில் சொல்லுவேன் 

ராஜு ...நீ ஒரு கோழை

சங்கர் ..நீ ஒரு ஆத்திரக்காரன்
இல்ல ..இல்ல    
என் மனைவி என்ன சொன்னா தெரியுமா ?
பாத்துகிட்டே இருங்க .தங்க விக்கிரகம் மாதிரி 
உங்களுக்கு ஒரு குழந்தையை பெத்து தர்றேன்னா 
இப்ப அந்த விகார குழந்தையை  அவளே பார்த்து 
அதிர்ச்சி தாங்காம உயிரை விட்டுட்டா ?
என் மனைவியை பிரிஞ்சி என்னால  வாழவே முடியாது 

ராஜு ..குழந்தையை இப்பவே கொன்னுடு 
பார்வதி கேட்டா ன்னா குழந்தை இறந்தே 
பொறந்தது அதனாலதான் குழந்தையை 
அப்புறப்படுத்திட்டோம் ன்னு ...
போ .. போ .. போ .. 
ராஜு ...












ரெண்டுல ஒன்னு முடிவு பண்ணு
அந்த குழந்தை சாகனும் இல்ல 
நான் தற்கொலை செஞ்சிக்கணும் 
என்ன சொல்ற   

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER