MUTHURAMALINGA DEVAR
BOUGHT LAMB FOR KAMARAJ
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 1936 ம் ஆண்டு விருதுநகரில் வார்டு தேர்தலில் போட்டியிட விரும்பினார்....
தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மைகள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்குமே என்று எண்ணினார்..
ஆனால் அன்றைய வெள்ளை அரசாங்க சட்டமோ அரசுக்கு ஏதாவது ஒரு வகையில் வரி செலுத்துபவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்பது விதி......
காமராஜர் பெயரில் எந்த வித சொத்தும் இல்லை......
மிதிவண்டியோ அல்லது கால் நடைகளோ எதுவும் இல்லை. ( அன்று கால் நடைகளுக்கும் வரி உண்டு) உள்ளுர் தொண்டர்கள் காமராஜரை எப்படியாவது தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் என்பதற்காக நிதி வசூலித்து ஒரு சிறிய வீட்டை வாங்கி கொடுக்கலாம் என எண்ணி காமராஜரை போய் பார்த்து விவரத்தை சொல்ல அந்த யோசனையை கோபத்துடன் மறுத்து விட்டார்........

யாரிடமும் எதையும் வாங்க மாட்டேன் என்று கடிந்து அனுப்பி விட்டார்........
செய்வதறியாது திகைத்து நின்றவர்கள் நேராக பசும்போன் தேவரிடம் போய் விஷயத்தை சொன்னார்கள்.....
செய்வதறியாது திகைத்து நின்றவர்கள் நேராக பசும்போன் தேவரிடம் போய் விஷயத்தை சொன்னார்கள்.....
எப்படியாவது காமராஜரை தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் ஏதாவது செய்யுங்கள் என முறையிட்டார்கள்..........
தேவர் பெருமானுக்கும் ஒரே குழப்பம். காமராஜர் யார் எதைக்கொடுத்தாலும் வாங்கமாட்டார் என்ன செய்யலாம் என யோசனையில் ஆழ்ந்தார்.....
ஒரு வழியாக யோசித்து ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக் கொண்டு காமராஜரை பார்க்கச் சென்றார்........
தேவர் பெருமானை வரவேற்ற காமராஜர் நல விசாரிப்புகளுக்கு பிறகு வந்த விஷயத்தை கேட்டார்............
தேவர் பெருமானை வரவேற்ற காமராஜர் நல விசாரிப்புகளுக்கு பிறகு வந்த விஷயத்தை கேட்டார்............
காமராஜரின் கைகளில் ஆட்டுக்குட்டியை கொடுத்து இதை என் ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல உங்க ஞாபகம் எனக்கு எப்பவும் இருக்கே இது எதுக்கு என்றார்............
நீங்க தேர்தல்ல நிக்கணும் அதுக்குத்தான் இது என்றார். காமராஜருக்கு விஷயம் புரிந்து விட்டது.... ஓஹோ அப்படியா சமாச்சாரம் அதெல்லாம் வேண்டாம் என்றார்..........
நான் இங்க வந்தவுடன் எனக்கு சாப்பிட பழங்கள் கொடுத்தீர்கள் அது என்ன லஞ்சமா. அது போல் தான் இதுவும் ஆடு குட்டியா இருக்கு ஒரு ஆறு மாதம் வளர்த்து விடுங்க ........
அதன் ஆயுசே அவ்வளவுதானே......
உயிரற்ற பொருட்களைத் தான் வாங்கக் கூடாது..... ஆட்டுக்குட்டியை வாங்குவது தவறில்லை என்று மிக சாமர்த்தியமாக பேசினார் தேவர் பெருமகனார்....
உயிரற்ற பொருட்களைத் தான் வாங்கக் கூடாது..... ஆட்டுக்குட்டியை வாங்குவது தவறில்லை என்று மிக சாமர்த்தியமாக பேசினார் தேவர் பெருமகனார்....
காமராஜரும் தேர்தலில் நிற்க வேண்டும் என்பதற்காக இதை வாங்கிக் கொள்கிறேன் ஆனால் இதற்கான விலையை நான் கூடிய விரைவில் கொடுத்தனுப்புவேன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்ல தேவர் பெருமானும் புன் சிரிப்புடன் வந்த வேலை முடிந்த மகிழ்ச்சியுடன் விடை பெற்றார்.......
அதன் பிறகு ஆட்டுக் குட்டி காமராஜர் பெயரில் பதிவு செய்யப்பட்டு வரி செலுத்தப்பட்டது....
அதன் பிறகு நடை பெற்ற தேர்தலில் கலந்து கொண்டார்.........
.
.
No comments:
Post a Comment