Sunday 19 July 2020

DIRECTOR BALU MAHENDRA , SPOILER OF TAMIL CINEMA ALIYAATHA KOLANGAL



 DIRECTOR BALU MAHENDRA , SPOILER OF TAMIL CINEMA 
ALIYAATHA KOLANGAL 1979


பாலு மகேந்திரா பொறுப்பற்ற சிலோன் குடும்பத்தில் இருந்து வந்தவர். தெரு நாயைப்போல் வளர்ந்ததால் சமுதாயத்தை ெடுக்காமல் படம் எடுக்க தெரிய வில்லை .நாற்பது வயசுக்காரன் பதினாறு வயசுப்பெண்ணை கவர் பண்ணனும்னா எப்படி வேண்ணாலும் டைட்டில் போடுவான் . இந்த படம் வந்த பிறகுதான் பள்ளிக்கூட பையன்கள்,சிறுமிகள் நம்ம காதலித்தால் தப்பில்லை என்றும் நினைக்க
வைத்த படம் .மொத்தத்தில் நட்பு பெயரால் கல்லா கட்டிய படம் . இங்கிருந்துதான் தமிழ் சினிமா சீரழிய ஆரம்பித்தது 1979

@@@@@@@@@@

அழியாத கோலங்கள் (1979) திரைப்படம் இயக்குனர் பாலு மகேந்திராவின் முக்கியமான படைப்பு, coming of age Genre திரைப்படத்திற்கு சரியான உதாரணம் இப்படம்,படம் பார்த்த அத்தனை பேரையும் தன் பால்ய நாட்களை தனிமையில் அசைபோட வைத்து விடும் இப்படம்.

படத்தை திருச்சியை அடுத்த இருங்கூர், பெட்டவாய்த்தலை, சிறுகமணி உள்ளிட்ட ஊர்களில் படமாக்கியிருந்தார் பாலு மகேந்திரா,படத்தின் தயாரிப்பு அண்ணாசாலை தேவி திரையரங்க உரிமையாளர்களான தேவி பிலிம்ஸ் நிர்வாகத்தார்,எட்டு லட்ச ரூபாய் முதலீட்டில் இத்தனை அழகிய படத்தை உருவாக்கினார் இயக்குனர் பாலுமகேந்திரா.தமிழில் இவர் இயக்கிய முதல் படம் இது, தமிழில் படம் செய்ய மாட்டேன் என பிடிவாதமாக இருந்த இயக்குனருக்கு உற்ற புரிதலுடன் இந்த தயாரிப்பாளர் கிடைக்க தன் கனவுத்திரைப்படத்தை இயக்கினார்.

அவ்வூரின் மூன்று விடலைச் சிறுவர்களான ரகு ,பட்டாபி, கௌரி சங்கரின் பால்யம் தான் இக்கதை ., இதில் கௌரி சங்கர் (கமல்ஹாசன்) நிகழ்காலத்தில் பெரிய நிறுவனத்தின் CEO, அவருக்கு அன்று காலை ஒரு inland letter பால்ய நண்பன் பட்டாபியிடமிருந்து வருகிறது, அதில் இவர்களின் பால்யத்தின் ஆதர்சமான இந்துமதி டீச்சர் நேற்று இறந்துவிட்டதை பகிர்கிறார் பட்டாபி, அங்கே கௌரிசங்கர் தன் பால்யத்தில் ஆழ்ந்து நிலைகுத்திவிடுகிறார், அங்கே அழகிய கிராமத்தில் இவர்களின் மலரும் நினைவுகள் துவங்குகிறது.

அவர்கள் சதா சர்வ காலமும் வாய்க்கால் குட்டிச்சுவர் மீதும், ரயில்வே கேட்டின் மீதும் அமர்ந்து வயதுக்கு மீறிய பேச்சு பேசுகின்றனர், திருட்டு மாங்காய் உடைத்து தின்கின்றனர், porn புத்தகங்களை படிக்கின்றனர்.அவ்வூர் தபால் நிலையத்தில் வெண்நிற ஆடை மூர்த்தி ஒரே ஊழியர் அவரே போஸ்ட் மாஸ்டர் அவரே தபால்காரர் ,மிதமான சபலிஸ்ட் .வயது கடந்தும் அவர் மணமுடிக்கவில்லை, வெளியில் கிடைக்கும் உணவை உண்டு , இவர் ஆசைக்கு ஒத்திசையும் பெண்களை ஊரின் பாழடைந்த கோயில் மண்டபத்திற்குள் வைத்து சம்போகம் செய்கிறார். அவரை உளவறியும் இந்த மூன்று விடலைகள் அவர் உபயோகிப்பதைப் பார்த்து, இவர்களும் ஆணுறையை எப்படியோ வாங்கியவர்கள் அவ்வூரின் ஒதுக்குப்புறத்தில் வசிக்கும் அந்த ஒத்திசைந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று அசடு வழித்தவர்கள், சுற்றி வளைத்து அவளுக்கு அத்தனை சமிஞ்யை காட்டி கூட, அவள் அதை புரிந்து கொள்ளாமல் இவர்களை தவிர்க்க அவளை அக்கா என்று அழைக்கவேண்டியதாகிறது, இவர்கள் அவளிடம் ஒரு சொம்பு தண்ணீர் வாங்கிக் குடித்து வருகின்றனர், வரும் வழியில் ஆணுறையில் பலூன் ஊதி விளையாடியபடி வருகின்றனர்.

அவ்வூரின் எலிமென்டரி பள்ளிக்கு வரும் திருமணமாகாத ஆசிரியை இந்துமதியின் அமைதியான தோற்றத்தில் எளிமையான அழகில் மயங்கும் இம்மூன்று சிறுவர்கள் அவர் மீது மையல் கொள்கின்றனர்.இந்துமதி டீச்சருக்கு கல்கத்தாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் Mine Engineering படித்துவிட்டு பணிபுரியும் அத்தை மகன் / காதலர் பிரதாப் போத்தன்,அவரின் அம்மா இந்துமதி டீச்சருக்கு துணையாக இந்த கிராமத்தில் உடன் இருக்கிறார், பிரதாப் விடுமுறையில் இவ்வூருக்கு வருகிறார்.அவர் இந்துமதி வீட்டின் திண்ணையில் அமர்ந்து நாளிதழ் வாசித்துக்கொண்டே ஒயிலாக சிகரட் பிடிப்பதை ஒளிந்து பார்க்கும் இந்த விடலைகள் , நாணல் புற்கள் மண்டிய வரப்பில் அமர்ந்து சிகரட் வாங்கி வந்து புகைக்கின்றனர்.இதில் இந்த மூவரில் வட்டக்கண்ணாடி அணிந்து துரு துருவெனப் பார்க்கும் ரகு மட்டும் இளையவன் ,அவன் பலான செயல்களில் எட்டி நின்று பார்த்து விட்டு ஓட்டமெடுத்து விடுகிறான்.

அழியாத கோலங்கள் படம் ஹாலிவுட்டில் வெளியான Summer of 42 (1971) படத்தின் தழுவல் என்று இயக்குனர் பாலுமகேந்திரா பேட்டிகளில் பகிர்ந்துள்ளார்.
ஐரோப்பிய சினிமாவில் மூத்த திரைக்கதை ஆசிரியரான Luciano Vincenzoni 2000 ஆண்டில் கடைசியாக எழுதிய படமான Malena விலும் அழியாத கோலங்கள் படத்தில் இந்த குறும்புக்கார விடலைகள் இந்துமதி டீச்சருக்கு மளிகை வாங்கித் தரும் காட்சி உண்டு, அதே போல இந்துமதி டீச்சர் இயல்பாக தொடுவதை தவறாக புரிந்து கொண்டு மருகும் காட்சிகள், இந்துமதி டீச்சரின் முறைப்பையன்/ காதலன் ஊரில் இருந்து வருகையில் அவரைப் பிடிக்காமல் கருவி முகம் திருப்பிக் கொள்ளும் காட்சிகளுக்கு ஒப்பான காட்சிகள் Malena என்ற இத்தாலிய படத்திலும் இருந்தன.அவரும் summer of 42 படத்தில் இருந்தே உந்துதல் கொண்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இதில் விடலை பட்டாபிக்கு அவன் வீட்டிற்கு அத்தை மகள் பள்ளி விடுமுறைக்கு வருகிறாள், அவளை பட்டாபி உறங்குகையில் பூனை போல நெருங்கி அவள் ஸ்பரிசத்தை நுகர்வது, அவளின் அங்கங்களை உணர்வது எல்லாம் ஒரு அழகிய கவிதை போலவே படமாக்கியுள்ளார் இயக்குனர்,கரணம் தப்பினால் மரணம் என்பது போல கொஞ்சம் பிசகியிருந்தால் இப்படம் ஊராரால் தூற்றப்பட்டு இயக்குனருக்கு முடிவுரை எழுதியிருப்பார்கள், இயக்குனர் தன் சினிமா வாழ்வு முழுமைக்கும் இருமாந்திருக்க தகுதியான படைப்பாக இப்படத்தை செதுக்கியிருக்கிறார்,

எதுவும் குறையவில்லை, எதுவும் மிகையாகயில்லை, அந்த கெடச்சா உனக்கு சொந்தம் Item Song கூட மிகையாகத் தெரியவில்லை. படத்தில் நாணல் புற்களை மிக அழகாக பெரும்பான்மையான காட்சிகளில் theme ஆகவே காண்பித்துள்ளார், எழில் கொஞ்சும் அந்த இரு புறம் மரங்கள் இடையில் செல்லும் சாலை வங்காள படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது,புது வெள்ளத்தில் விடலைகளுடன் நீரில் குதித்து குளிக்கும் சிறுவன் சுழலில் சிக்கி இறக்கிறான், அவன் மரத்தில் மாட்டிய சட்டை,அதன் பின் கண்டெடுக்கப்படும் ரகுவின் ஜடம்,அவனின் வட்டக் கண்ணாடி நம்மை என்னவோ செய்யும்,

அவனின் தகனம் கூட Silhouette ல் தான் அக்கினிக் கொழுந்தைக் காட்டுகிறார் , உடன் ஊரார் தலைகள்,மஞ்சள் நெருப்புக்கு tight close-up வைக்கிறார் இயக்குனர்.விடலைச்சிறுவன் ரகுவிற்கு நீச்சல் தெரியாது என்பது எங்கும் வசனமாக வரவில்லை, மாறாக பாசன வாய்க்காலில் நண்பர்கள் நீந்த ,அவர்கள் முதுகில் இவர் தவளை போல தாவி அமர்ந்து நீந்துவது போல ஒரு shot வைத்திருந்தார் இயக்குனர்.படத்தை நடிகர் கமல்ஹாசன் துவக்கியும் முடித்தும் வைக்கிறார், ஆனால் அவரது இத்தனை அற்புதமான தோற்றம் uncredited என்கையில் வியப்பு மேலிடுகிறது.40 வருடங்கள் கடந்தும் இப்படம் இத்தனை fresh ஆக இருக்கிறது, ஒவ்வொரு காட்சியையும் நம் வாழ்வில் பொருத்திப் பார்க்கும் படி இருக்கிறது, இது போல ஒரு படம் ,பாய்ஸ் படம் இருபது வருடங்கள் கடந்து வந்தது ஆனால் இந்தப்படத்தின் தரத்துடன் ஒப்பிடுகையில் முன்னால் நிற்கவில்லை.

படத்தின் இசை சலீல் சௌதுரி அவர்கள்,அற்புதமான பாடல்கள் அற்புதமான பின்னணி இசையை வழங்கியிருந்தார், அபாரமான மௌனத்தையும் காட்சியை உணர்ந்து உள்வாங்கி உடன் இழைத்திருந்தார் ,படத்தில் எல்லா பாடல்களையும் கங்கை அமரன் எழுதினார், இப்படத்தில் நடிகை ஷோபாவுக்கு உதவி- இயக்குனர் என்று டைட்டில் க்ரெடிட் வருகிறது, படத்தின் ஒளிப்பதிவு, கதை,திரைக்கதை, வசனம் அனைத்தும் பாலுமகேந்திரா அவர்களே.நடிகர் பிரதாப் போத்தன் தமிழில் அறிமுகமான படம்.நடிகர் கமல்ஹாசன் இப்படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினாலும் அவருக்கு படத்தில் பெயர் வரவில்லை, ஏன் என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment