Monday 20 July 2020

MANI CHITRATHAAL



               MANI CHITRATHAAL
"மணிச்சித்ரத்தாழ்"
#சந்திரமுகி
கட்டுரை உதவி #செல்வன் அன்பு

கேரளாவில் ஆலப்புழா மாவட்டம்..

நங்கியார்குளங்கரா-மாவேலிக்கரா ரூட்டில் இருக்கிறது முட்டம் என்கிற ஊர்....

'ஆளும்மூட்டில் மேட' என்றழைக்கப்படும் ஒரு தறவாட்டு மாளிகை அங்கு இருக்கிறது. பொதுவாக பணக்கார தறவாடென்றால் நாயர், நம்பூதிரிகள் தான் கோடீஸ்வரர்களாக இருப்பார்கள்..

இந்த தறவாடு கேரளாவின் பிற்படுத்தப்பட்ட ஜாதி என சொல்லப்படும் ஈழவ சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெரியமனிதரின் மாளிகை...திருவிதாங்கூர் மகாராஜா காலத்தில் இந்த பெரியமனிதரை 'சாண்ணான்' என்கிற பட்டம் கொடுத்து ராஜாவின் பூரண அன்புடன் விளங்கியவர். தீண்டாமை கொடுமையாக விளங்கிய காலகட்டம்...

அந்தக்காலத்தில் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் நான்கோ ஐந்தோ கார்கள் தான் இருந்தன. மகராஜாவின் கார்களுக்கு பிறகு இவரிடம் மட்டுமே இருந்தன. தேங்காய், கயிறுஏற்றுமதி செய்யும் தொழிலும் இருந்தன. நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் அங்கேயே தங்கி வேலை செய்தனர். மேட என்றழைக்கப்படும் மெயின் பங்களாவில் ஆண்கள் தங்குவர். எட்டுக்கட்டு எனப்படும் பின்பக்க வீட்டில் பெண்கள் இருப்பார்கள்..

பெரிய மனிதர் தன் சொத்துக்களை தன் சகோதர, சகோதரி மகன்களுக்கு தராமல் மகனுக்கு மட்டும் கொடுக்க திட்டமிட்டார். இதை அறிந்த அவர்கள் கோபமுற்று அன்றே அவரை கொலை செய்தனர். இதை ஒரு பெண் பார்த்துவிட்டதால் அந்த பெண்ணையும் கொலை செய்தனர். அப்போதெல்லாம் கொலை என்றால் குலை நடுங்கும் காலம்....திருவிதாங்கூரே நடுங்கியது..கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது..கொலை நடந்த வீடானதால் நாளடைவில் அங்கிருந்தவர்கள் பறந்து விட்டனர்....எல்லோருக்கும் இந்த ஆளும்மூட்டில் தரவாடு என்றால் பீதி....மாலை இருட்டு வர ஆரம்பித்துவிட்டால் இந்தப்பக்கம் யாரும் வரமாட்டார்கள். இன்றும் அந்த இருவரின் ஆவியும் அங்கே சுற்றுவதாக நம்பிக்கை...

இந்த மாளிகைக்கு ஒரு கிமீக்குள் ஒரு வீட்டில் வசிக்கிறார். மது என்கிற எழுத்தாளர். மது ஒரு வயதான பேச்சிலர். அவர் எழுதிய கதை தான் கார்த்திக் நடித்த 'வருஷம் 16' கதையின் ஒரிஜினலான 'என்னென்னும் கண்ணேட்டன்ட' மலையாளப்படம்..

இந்த மதுவின் இரண்டாவது கதை தான் ரேவதி, அம்பிகா நடித்த 'காக்கோத்தி காவிலே அப்பூப்பன் தாடி'..

மது என்கிற மனிதர் மது முட்டம் என்கிற கதாசிரியராக மாறி இந்த ஆளும்மூட்டில் மேட தறவாடு கதையை சிறிய வயதிலிருந்து கேட்டு கேட்டு அதில் கற்பனைகளை சேர்த்து எழுதியது தான் 'மணிச்சித்ரத்தாழு'...நகுலன், கங்கா, நாகவல்லி, டாக்டர் ஸண்ணி....

அதாவது நம்ம சந்திரமுகி....ஒரிஜினல் தறவாடு ஈழவர் சாதியுடையது...ஈழவர் சாதிக்கதை கேரள சினிமாவில் நாயர் தறவாடானது...சினிமாவின் சாதி இது. ஈழவர் என்றாலே சினிமாவில் வேலைக்காரர்களாகவே காட்டப்படும் கேரள சினிமாக்களில்...

அது போகட்டும்...நம் ரஜினி, பிரபு நடித்த சந்திரமுகிக்கு இப்படி ஒரு பழங்கால வரலாறு....

அவல்: இந்த தறவாட்டிலும் நுழைந்து மலையாளத்தில் இரண்டு மூன்று படங்களும் எடுத்திருக்கிறார்கள்...பூட்டிய வீடாக, செடி, கொடிகள் மண்டி கிடக்கின்றன...முட்டம் சென்றால் நீங்களே பார்க்கலாம்...டூரிஸ்ட் ஸ்பாட்டாகி விட்டது...

No comments:

Post a Comment