GREEK TEMPLE ARTEMIS TEMPLE BURN`T JULY 21 ,356 B.C
கிமு 356 – JULY 21
ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.
ஆர்ட்டெமிஸ் கோயில் ஆர்ட்டெமிஸ் என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு கிரேக்கக் கோயில் ஆகும். டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய துருக்கியிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இது பாரசீகப் பேரரசின் ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இக் கோயிலில் இப்பொழுது அதன் அத்திவாரமும், உடைந்த சிற்பவேலைப் பகுதிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. இதன் கூரை தவிர்ந்த எல்லாப் பகுதிகளும் சலவைக்கற்களினால் கட்டப்பட்டிருந்தன. இவ்விடத்தில் இதற்கு முந்திய காலக் கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது. வெண்கலக் காலத்திலேயே ஒரு கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
ஆர்ட்டெமிஸின் சிலை
கல்லிமாக்கசு என்பார் தமது பாடல்களில் வழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இவ்விடத்தின் தோற்றத்தை கிரேக்கத் தொன்மங்களில் வரும் அமேசோன்களுடன் தொடர்புபடுத்தி உள்ளார். இவர்களுடைய வழிபாடு உருவ வழிபாடாக இருந்ததாக அவர் கற்பனை செய்தார். கி.மு ஏழாம் நூற்றாண்டில் பழைய கோயில் பெரு வெள்ளத்தினால் அழிந்துபோயிற்று. உலக அதிசயமாகக் கரிதப்பட்ட புதிய கோயிலின் கட்டுமானம் கி.மு 550 அளவில் தொடங்கியது. 120 ஆண்டுகள் பிடித்த இத் திட்டம் முதலில் கிரேத்தக் கட்டிடக்கலைஞரான செரிசிபுரோன் என்பவராலும் அவரது மகன் மெத்தாசெனசு என்பவராலும் வடிவமைத்துக் கட்டப்பட்டடது.
நமக்கெல்லாம் புதிதாக உள்ள உலக அதிசயங்களைதான் பெரும்பாலும்
தெரிந்திருக்கும் …. ஆனால் பண்டைய உலக அதிசயங்களும் பிரமிக்க தக்கதாக உள்ளது ….அவற்றையும் இங்கே உங்கள் பார்வைக்காக
முதலில் வைத்து தொடர்ந்து புதிய ஏழு அதிசயங்களையும் பார்வையிடலாம் ….
பண்டைய உலக அதிசயங்கள்
பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள்
மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும்.
இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர்,
சிடோனின் அண்டிப்பேற்றர் என்று பொதுவாகக்
கருதப்படுகிறது. கி.மு 140 அளவில்
எழுதப்பட்ட கவிதையொன்றில்,
இவ்வமைப்புக்களைப் பெருஞ்சாதனைகளாக
இவர் குறித்துள்ளார். இதற்கு முன்னரும்,
ஹீரோடோத்தஸ் என்பவரும், சைரீனின்
கல்லிமாச்சுஸ் என்பவரும் இதுபோன்ற
பட்டியல்களை உருவாக்கியிருந்ததாகக்
கருதப்படுகின்றது எனினும், இவை பற்றிய
குறிப்புக்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
பண்டைய உலக அதிசயங்கள். வலமிருந்து
இடமாக, மேலிருந்து கீழ். கிசாவின் பெரிய
பிரமிட், பபிலோனின் தொங்கு தோட்டம்,
ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை,
ஆர்ட்டெமிஸ் கோயில், மௌசோல்லொஸின்
மௌசோலியம், ரோடொஸின் கொலோசஸ்,
அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை
விளக்கம்.14ம் நூற்றாண்டை சேர்ந்த இடாய்ச்சு
ஓவியர் மார்த்தன் வான் யீம்சூகெர்க்
தற்போது வழக்கிலுள்ள, அலெக்ஸாந்திரியா
வின் கலங்கரை விளக்கத்தை உள்ளடக்கிய,
பண்டைய ஏழு உலக அதிசயங்களின் பட்டியல்
மத்திய காலத்தில் ஏற்பட்டதாகக்
கருதப்படுகின்றது. அண்டிப்பேற்றரின்
பட்டியலில், இக்கலங்கரை விளக்கத்துக்குப்
பதிலாக, பபிலோனின் சுவர்களே
காணப்பட்டது. காலவரிசையில் அமைந்த
பட்டியல் இது.
1) கிசாவின் பெரிய பிரமிட், பழங்கால எகிப்திய
பாரோ (அரசன்) கூபுவின் சமாதியாகும் இது.
கி.மு 2680ல் கட்டிமுடிக்கப்பட்டதாகக்
கணக்கிடப்பட்டுள்ளது.
2) பபிலோனின் தொங்கு தோட்டம் மற்றும்
பபிலோனின் சுவர் என்னுமிரண்டும்,
நெபுச்சட்னெஸ்ஸார் என்பவனால், கி.மு
600ல், ஈராக்கில் கட்டப்பட்டது.
3) ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை, இன்றைய
கிரீஸில், கி.மு ஐந்தாம் நூற்றாண்டில்,
கிரேக்கச் சிற்பி, பீடியாஸ் என்பவரால்
செதுக்கப்பட்டது.
4)ஆர்ட்டெமிஸ் கோயில், கி.மு 350ல்,
இன்றைய துருக்கியிலுள்ள எபேசஸ்
என்னுமிடத்தில் கட்டப்பட்டது.
5) மௌசோல்லொஸின் மௌசோலியம்,
காரியாவின் பாரசீக சத்ரப்பினால்,
ஹலிகர்னாசஸ் என அழைக்கப்பட்ட, இன்றைய
துருக்கியிலுள்ள போட்றம் என்னுமிடத்தில்
6) ரோடொஸின் கொலோசஸ், ஹெலியோசின்
பிரம்மாண்டமான சிலை. தற்கால கிரீசில், கி.மு
280ல் உருவாக்கப்பட்டது.
7) அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம்,
இன்றைய எகிப்திலுள்ளது. கி.மு 3ஆம்
நூற்றாண்டில், சொஸ்த்திராட்டஸ் என்பவரால்
கட்டப்பட்டது.
இவற்றில் தலா இரண்டு அதிசயங்கள்,
இன்றைய எகிப்து, கிரீஸ், துருக்கி ஆகிய
நாட்டின் எல்லைகளுக்குள்ளும், ஒன்று
ஈராக்கிலும் அமைந்திருந்தன. இன்றுவரை
தப்பியிருப்பது கிசாவின் பெரிய பிரமிட்
மட்டுமே. இவற்றுள் மிகக் குறைந்த காலம்
நிலைத்திருந்தது, ரோட்ஸின் கொலோசஸ்
ஆகும். நின்றநிலையில் 56 ஆண்டுகள்
மட்டுமேயிருந்த இது, பூமியதிர்ச்சியொ
ன்றினால் விழுந்துவிட்டது.
Image may contain: 1 person, indoor
No comments:
Post a Comment