JEGAJEEVAN RAM ,FREEDOM FIGHTERBORN 1908 APRIL 5 - 1986 JULY 6
.ஜெகசீவன்ராம் (Jagjivan Ram, ஜெகஜீவன்ராம், இந்தி: बाबू जगजीवन राम, 5 ஏப்ரல் 1908 – 6 சூலை 1986), பாபு என அன்பாக அழைக்கப்படும் இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவர், நாடாளுமன்ற உறுப்பினர், நடுவணரசு அமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல நிலைகளில் இந்திய அரசியல் அரங்கில் விளங்கியவர். பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில் சாமர் எனும் பட்டியல் சமூகத்தில் பிறந்தவர். 1946ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டவர்.
இளமை வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]
ஐந்து உடன் பிறந்தவர்களுடன் பிறந்த ஜெகசீவன்ராமின் தந்தை சோபிராம், இந்திய பிரித்தானியப் படையில் பெஷாவரில் பணி புரிந்தவர். ஆறாவது அகவையில் தம் தந்தையை ஜெகசீவன்ராம் இழந்தார். தாய் பெயர் வசந்தி தேவி. ஜெகசீவன்ராம் 1914-இல் துவக்கப் பள்ளியில் சேர்ந்தார். 1927-இல் அர்ரா உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சிப் பெற்றபின் 1928 ஆம் ஆண்டில் வாரணாசி யில் உள்ள பனாராஸ் இந்து பல்கலை கழகத்திலும் பின்னர் 1931-இல் கல்கத்தா பல்கலை கழகத்திலும் படித்து இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பில் தேர்ச்சிப் பெற்றார். இந்தி ஆங்கிலம் வங்காளி சமசுக்கிருதம் ஆகிய மொழிகளில் உள்ள நூல்களைப் படித்தார்.
தீண்டாமைக் கொடுமை[தொகு]
சகசீவன் ராம் தீண்டத் தகாத சாதியில் பிறந்ததால் அவருக்குத் தனியாகக் குடிநீர்ப் பானை பள்ளியில் வைக்கப்பட்டது. அதனைக் கண்டு அவர் வருத்தமும் சினமும் அடைந்தார். அந்தப் பானையை உடைத்தார். பிறசாதி மாணவர்கள் பயன்படுத்துகின்ற பானை நீரைத் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் சாதி வேறுபாடுகள் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் என்று போராடினார். இறுதியில் வெற்றி பெற்றார். பனாரசுப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது சகசீவன்ராம் சாதிய இழிவுகளை நேரடியாகச் சந்தித்தார். உணவு விடுதியில் பணியாளர்கள் இவர் சாப்பிட்ட உணவுத் தட்டுகளைக் கழுவ மறுத்தார்கள். அது மட்டுமல்லாமல் முடி திருத்தும் தொழிலாளிகள் முடி திருத்த மறுத்தார்கள். பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது சம்பூராணந்தா சிலையைத் திறந்து வைத்தார். இவர் சிலையைத் திறந்து விட்டு அகன்றப் பின்னர் அந்த இடத்தைக் கங்கை நீரைக் கொண்டு கழுவினார்கள் இந்த அவமதிப்பு குறித்து மன வேதனை அடைந்தார்.
1931 இல் காங்கிரசில் சேர்ந்தார். சகசீவன்ராம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றார். தேர்தலில் ஒரே தொகுதியில் 10 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1936 முதல் 1986 வரை 50 ஆண்டுகள் சட்ட மன்ற நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த்து காந்திஜியின் தலைமையில் நடந்த சத்தியாகிரகப் போராட்டத்திலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் தீவிரமாக பங்கு கொண்டு 1940-இல் சிறை சென்றார். பட்டியல் சமுகத்தினரை கோயிலிலுள் சென்று வழிபடவும், தீண்டாமைக்கு எதிராகவும் போராடினார்[1][2].
1934-இல் பிகாரில் ஏற்பட்ட நிலநடுக்க நிவாரணப்பணிகளில் தீவிரமாக பங்கு கொண்டார்[3]. அப்போது பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு உடை வழங்குவதிலும் மருத்துவ உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டார். உதவி முகாம்களில் காந்தியைச் சந்தித்தார். காந்தி ஒரு தேசியத் தலைவர் மட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாடுபடுபவர் என்று எண்ணினார்.
1935 இல் அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர் அமைப்பு உருவாவதில் பேருதவியாக இருந்தார். கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதையும் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதையும் அனுமதிக்க வேண்டும் என்று போராடினார். பட்டியல் சமூகத்தவர் சார்பாக பிகார் மாகாண அரசுக் குழவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் வேளாண்மைக்கான பாசான நீருக்கான வரியை எதிர்த்து பதவியிலிருந்து விலகினார்[4].
1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்து சமூக நீதிக் கருத்து அரசியல் சட்டத்தில் இடம் பெறக் காரணமாக இருந்தார்.
வகித்த பதவிகள்[தொகு]
இந்திய நடுவண் அரசில் பல துறைகளில் தொடர்ந்து முப்பது ஆண்டுகள் கேபினட் அமைச்சராக பணிபுரிந்தவர் என்ற பெருமை பெற்றவர். பீகார் மாநிலத்தில் உள்ள சசாராம் நாடாளுமன்ற தொகுதியில் 1952 முதல் 1984-ம் ஆண்டு வரை எட்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்.
தொழிலாளர் துறை அமைச்சர் 1946-1952. 1946 இல் சவகர்லால் நேரு தலைமையில் அமைந்த நடுவண் அமைச்சரவையிலும், விடுதலைக்குப் பின் அமைந்த அமைச்சரவையிலும் அமைச்சர் ஆனார். 1947 ஆம் ஆண்டில் செனிவாவில் நிகழ்ந்த பன்னாட்டுத் தொழிலாளர் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.
தொலை தொடர்புத் துறை அமைச்சர் 1952-1956. 1952 வரை தொழிலாளர் நலத்துறை, செய்தித் தொடர்பு, போக்குவரத்துத் துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பணி புரிந்தார். தொலைவில் இருக்கும் சிறு சிறு கிராமங்களுக்கும் அஞ்சல் வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.
போக்குவரத்து மற்றும் புகைவண்டித் துறை அமைச்சர் 1956-1962
போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் 1962-1963. 1963 இல் காமராசர் திட்டத்தின் கீழ் அமைச்சர் பதவியைத் துறந்தார். காங்கிரசின் கட்சிப் பணியை முழுமையாக செய்தார்.
தொழிலாளர் துறை மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் 1966-1967
உணவு மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் 1967-1970. 1967-70 காலத்தில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் நிலவியது. அப்போது பாபு சகசீவன் ராம் வேளாண் அமைச்சராக இருந்தபடியால் பசுமைப் புரட்சிக்கு வழி வகுத்தார்.உணவுப் பொருள்களின் உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கச் செய்தார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் 1970-1974, 1977-1979. 1970-74 கால கட்டத்தில் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த போது பாக்கிசுத்தானிலிருந்து பிரிந்து வங்கத் தேயம் உருவானது.அந்தப் போரில் இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதப் படுகிறது.
வேளாண்மை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் 1974-1977. 1975 ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை தலைமையமைச்சர் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது இந்திரா காந்தியை ஆதரித்தப் போதிலும் 1977 இல் காங்கிரசிலிருந்து விலகினார். பிறகு சனதாக் கட்சியில் இணைந்தார்.
இந்தியா நடுவண் அரசில் 23 மார்ச்சு 1977 - 22 ஆகஸ்டு 1979 முடிய மொரார்சி தேசாய் அமைச்சரவையில் துணைபிரதமராக இருந்தார். பின்னர் சனதா கட்சியில் கருத்து வேறுபாடுகள் நிலவியதால் அதிலிருந்து விலகி காங்கிரசு (ஜே) என்று புதிய கட்சியைத் தொடங்கினார்.
அகில இந்தியத் தலைவர், பாரத சாரணர் படை 1976 - 1983.[5]
நினைவுச் சின்னங்கள்[தொகு]
பாபு ஜெகசீவன்ராம் தேசிய நிறுவனம் என்பது நடுவண் சமூக நீதி அமைச்சரவையின் கீழ் 2008 மார்ச்சு முதல் இயங்கி வருகிறது.
மைசூர் பல்கலைக் கழகத்தில் ஜெகஜீவன்ராம் கல்வி ஆராய்ச்சி மையம் 2010 சூனில் தொடங்கப்பட்டது.
திருவல்லிக்கேணியில் உள்ள பெல்ஸ் ரோட்டுக்கு ஜெகஜீவன்ராம் சாலை என்ற பெயர் சூட்டப்பட்டது.
சொந்த வாழ்க்கை[தொகு]
ஆகஸ்டு, 1933-இல் மனைவி இறந்த பின், சூன் 1935-இல் இந்திராணி என்பவரை மணந்தார். சுரேஷ் குமார் என்ற மகனும், மீரா குமார் (இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் 2009-2014) என்ற மகளும் பிறந்தனர்.
No comments:
Post a Comment