KRITI SANON ,HINDI ACTRESS BORN 1990 JULY 27



KRITI SANON ,HINDI ACTRESS
 BORN 1990 JULY 27



கிருத்தி சனோன் (Kriti Sanon) (பிறப்பு 27 ஜூலை 1990) இந்தி படங்களில் முதன்மையாக நடிக்கும் நடிகை. இவர் பிறந்து வளர்ந்தது புது தில்லியில். ஜெய்பீ இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். அதன் பிறகு சிறிது காலத்திற்கு மாதிரியாக பணியாற்றினார். தெலுங்குத் திரைப்படமான 1: நெநோக்கடனினே (2014) என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இப்படம் தமிழில் நம்பர் 1 என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. சபீர் கானின் ஹீரோபண்தி (2014) திரைப்படத்தின் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகனார். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார். பின்னர் தொடந்து வணிக ரீதியாக வெற்றிகரமான மூன்று திரைப்படங்களில் முன்னணி பெண் கதாபாத்திரத்தில் கிருத்தி நடித்தார். நகைச்சுவை படமான தில்வாலே (2015), காதல் நகைச்சுவைப்படமான பரேலி கி பர்ஃபி (2017) மற்றும் லூகா சுப்பி (2019) ஆகிய மூன்று படங்களில் நடித்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி

1990 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி கிருத்தி சனோன் ஒரு பட்டய கணக்கறிஞரான ராகுல் என்பவருக்கும், தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த கீதா என்பவற்கும் பிறந்தார்.[1][2][3][4] கிருத்திக்கு நுபுர் என்ற ஒரு இளைய சகோதரி உள்ளார். இவர் தில்லி பப்ளிக் பள்ளியில் படித்தார். நொய்டாவில் ஜெய்பே இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கல்லூரியில் , எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரியில் பட்டம் முடித்தார்.[5][6]கிருத்தி சானன் பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்தார். க்ளோஸ் அப், விவல், அமுல் , சாம்சங் , ஹிமாலயா மற்றும் பாட்டா போன்ற பிராண்டுகளின் விளம்பரங்களில் நடித்து வந்தார்.

ஊடகங்களில் வரும் செய்திகளுக்கென சில விதிகள் இருக்க வேண்டும் என்றும், கிசுகிசுக்கள் போன்றவை சட்டவிரோதமாக்கப் பட வேண்டும் என்றும் நடிகை கிருத்தி சனோன் கடுமையாக சாடிப் பதிவிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ராப்தா’ திரைப்படத்தில் சுஷாந்துக்கு ஜோடியாக நடித்தவர் கிருத்தி சனோன். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சுஷாந்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சனோன் சுஷாந்தின் மறைவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.ஊடகங்களில் வரும் செய்திகளுக்கென சில விதிகள் இருக்க வேண்டும் என்றும், கிசுகிசுக்கள் போன்றவை சட்டவிரோதமாக்கப் பட வேண்டும் என்றும் நடிகை கிருத்தி சனோன் கடுமையாக சாடிப் பதிவிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ராப்தா’ திரைப்படத்தில் சுஷாந்துக்கு ஜோடியாக நடித்தவர் கிருத்தி சனோன். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சுஷாந்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சனோன் சுஷாந்தின் மறைவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

சுஷாந்த் மறைவு குறித்து நடிகை கிருத்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக சுஷாந்த் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் உலக அளவில் அவர் பிரபலமானார். இந்நிலையில் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு வெளியான ‘ராப்தா’ திரைப்படத்தில் சுஷாந்துக்கு ஜோடியாக நடித்தவர் கிருத்தி சனோன். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சுஷாந்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவர் சுஷாந்த மறைவு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''சுஷாந்த்.. உனது புத்திசாலித்தமான மூளைதான் உனது சிறந்த நண்பன் மற்றும் மோசமான எதிரி என்று எனக்குத் தெரியும். ஆனால் வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைக்கும் தருணம் ஒன்றை நீ உன் வாழ்க்கையில் அடைந்துவிட்டாய் என்று தெரிந்தபோது நான் உடைந்துவிட்டேன்.

அந்தத் தருணத்தைக் கடக்க உன்னுடன் மனிதர்கள் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உன்னை நேசித்தவர்களை நீ விலக்கியிருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். உனக்குள் உடைந்த ஒன்றை நான் சரிசெய்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், என்னால் முடியவில்லை. என்னுடைய ஒரு பகுதி உன்னுடனே சென்றுவிட்டது. இன்னொரு பகுதி எப்போதும் உன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும். எப்போதும் உன்னுடைய மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்வதை நிறுத்தியதில்லை. இனிமேலும் நிறுத்தப்போவதும் இல்லை''.

இவ்வாறு கிருத்தி சனோன் கூறியுள்ளார்.

மகேஷ்பாபு, ஷாருக்கான் படங்களில் நடித்தவர் கிருத்தி சனோன். தமிழிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. கால்ஷீட் பிரச்னையால் பின்னர் வேறு நடிகைக்கு வாய்ப்பு கைமாறியது. தற்போது இந்தியில் ‘ராப்டா’ படத்தில் நடித்து வருகிறார் கிருத்தி.  தினேஷ் விஜய் இயக்குகிறார். சுஷாந்த் சிங் ராஜ்புட் ஹீரோ. சமீபமாக, கிருத்தியும் சுஷாந்த்தும் காதலிப்பதாக தகவல் பரவியது. சுஷாந்த் ஏற்கனவே அங்கிதா லோகன்டேவை காதலித்து பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் வதந்தியை அறிந்து அலறினார் கிருத்தி. வதந்தி பரப்பியவர்களுக்கு பதிலடி தரும் விதமாக ‘போதும் இத்துடன் வதந்தியை நிறுத்திக்கொள்ளுங்கள். எனது சக நடிகர் மீது நான் நிறைய அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால் எங்களுக்கு இடையே காதல் என்று யாரோ கதைகள் கட்டிவிடுகிறார்கள். அதில் உண்மை இல்லை. அடிப்படையே இல்லாமல் தயாரிக்கப்பட்ட கட்டுக்கதை இது’ என்றார்.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER