S.V.RENGA RAO ,LEGEND ACTORBORN 1918 JULY 3 -1974 JULY 18
சாமர்லா வெங்கட ரங்கா ராவ் (S. V. Ranga Rao, தெலுங்கு: ఎస్.వి. రంగారావు, 3 சூலை 1918 – 18 சூலை 1974) ஆந்திர மாநிலத்தில் பிறந்த தென்னிந்தியத் திரைப்பட குணச்சித்திர நடிகராவார். நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பங்காற்றியவர். [1]
இவர் தற்போதைய ஆந்திரப்பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள, நுஸ்வித் நகரில் 1918 சூலை 3ஆம் நாள் பிறந்தார். சென்னை இந்துக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். இவர் 1949 ஆம் ஆண்டு மன தேசம் என்ற தெலுங்கு படத்தில் சிறுவேடத்தில் அறிமுகமானார். 1951 இல் இவர் மந்திரவாதியாக பாதாள பைரவி படத்தில் நடித்தபிறகு புகழ்பெற்ற நடிகராக ஆனார். தன் 25 ஆண்டு திரை வாழ்க்கையில் 53 தமிழ்ப் படங்கள், 109 தெலுங்குப் படங்கள் என அவர் 163 படங்களில் நடித்துள்ளார். இந்திய அரசு எஸ். வி. ரங்காராவை கௌரவப்படுத்தும் விதத்தில் அவரது அஞ்சல் தலையை 2013இல் வெளியிட்டது.[2
தென்னிந்திய திரைஉலகில் ஈடு இணையில்லா திறமைசாலிகள் என விரல் விட்டு எண்ணிவிடலாம்.. அப்படிப்பட்ட வெரி ரேர் பட்டியலில் முக்கிய இடம், தெலுங்கு மண் தந்த ஜாம்பவான் எஸ்.வி ரங்காராவ் அவர்களுக்கு இல்லையென்றால் அந்த பட்டியலையே அழித்துவிடலாம்..25 ஆண்டுகள்.. படங்களில் பல்வேறு பாத்திரங்களில் ரங்காராவ் நடித்தார் என்பதைவிட, வாழ்ந்துவிட்டுப்போனார் என்பதே உண்மை..
1960ல் படிக்காத மேதை படத்தில் பணம்போன பிறகு பெற்ற பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு ரசிகர்களை கண்கலங்க வைத்த அந்த பெரியவர் சந்திரசேகர் பாத்திரத்திற்கும், 1972ல் சிவாஜியின் ராஜா படத்தில் காதலனை பணயக்கைதியாக பிடித்துவைத்துக்கொண்டு காதலி பத்மா கன்னாவின் மிச்ச சொச்ச ஆடைகளையும் அவிழ்க்க போதையில் போராடும் அந்த வில்லன் நாகலிங்கத்திற்கும் இடையேதான் எவ்வளவு வித்தியாசம்..?
ரங்காராவை பொறுத்தவரை துரதிஷ்டவசமாய் அவருக்கு இளமையிலேயே முன் வழுக்கை, வயதுக்கு மீறிய பருத்த சரீரம் சற்று முதுமையான தோற்றம் ஆகியவை அமைந்துவிட்டன. ஆனால் அதே நேரத்தில் நெடிய உயரமும் வித்தியாசமான குரல் வளமும் பெரும் பலமாகிவிட்டன.
தெலுங்கில் 1940-களின் இறுதியில் தலைகாட்டுவதும் விலகிப்போவதும் என இருந்த ரங்காராவுக்கு தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் நல்ல அடித்தளம் இட்ட படம், நாகிரெட்டி-சக்ரபாணி தயாரித்த பாதாள பைரவி (1951). நடிகையர் திலகம் சாவித்திரி இந்த படத்தில்தான் திரையுலகில் அறிமுகமானார். ஒரேயொரு பாடலுக்கு வந்து நடனமாடி விட்டுப்போவார். மந்திரிகுமாரி (1950) படத்தில் எம்ஜிஆர் ஹீரோ என்றாலும் வில்லன் எஸ்ஏ நடராஜன்தான் நக்கலான நடிப்பால் நிஜ ஹீரோவாக பேசப்பட்டார். அதேபோல பாதாள பைரவியில் ஹீரோ என்டி ராமாராவை வில்லன் ரங்காராவ் காலி செய்து படத்தையே தனதாக்கிவிட்டார்.காரணம், பாதாள பைரவி என்றாலே பலே பிம்பகா என்று அடிக்கடி ஸ்டைலாக சொல்லியபடி வரும் ரங்காராவின் அந்த நேபாள மந்திரவாதி ரோல் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வரும். டயலாக் டெலிவரி, எந்த ரோலாக இருந்தாலும் தூக்கி சாப்பிடுகிற திறமை ரங்காராவிடம் இருப்பதை தெலுங்கு திரையுலகம்
புரிந்துகொண்டு, அவரை வளைத்துப்போட ஆரம்பித்தது.

1950களில் பல படங்கள் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் என இருமொழிகளில் தயாரிக்கப்படுவது வழக்கம். காலையில் நாகேஷ்வர ராவ் தெலுங்கில் நடித்தார் என்றால் மதியம் அதே செட்டில் ஜெமினிகணேசன் தமிழில் பேசி நடித்துக்கொண்டிருப்பார்.
ஆனால் சில பேர் மட்டும் இரு மொழிகளிலும் இருப்பார்கள். 1957ல் வெளியான மாபெரும் காவியமான மாயா பஜாரில் கடோத்கஜனாக நடித்த ரங்காராவ் இரு மொழிகளிலும் தவிர்க்க முடியாதவராகி விட்டார். கடோத்கஜனாக ஒட்டுமொத்த கல்யாண வீட்டு சாப்பாட்டை ஒத்தை ஆளாக சாப்பிடும் அந்த, ‘’ கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்’’ என்ற பாடல் எத்தனை யுகமானாலும் ரங்காரவின் புகழை பாடிக்கொண்டே இருக்கும்.இருமொழி மாயா பஜாரில் என்டிஆர்,
நாகேஸ்வராவ், சாவித்திரி, ஜெமினிகணேசன் முக்கமாலா நம்பியார், தங்கவேலு ரேலங்கி என ஒரு பெரிய ஜாம்பவான் பட்டாளமே நடித்திருந்தாலும் இன்றைக்கும் அது கடோத்கஜன் ரங்காராவ் படமே.. ஆஜானுபாகு தோற்றத்தில் வசனங்களை அவ்வளவு வேகமாக ஆனால் மிகவும் வித்தியாசமான ஸ்டைலில் கலக்கியிருப்பார்.

கூர்த்து கவனித்தால் இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் ஆரம்ப கால படங்களில் எஸ்.வி.ரங்கா ராவ் மாடூலேஷனில்தான் பேசியிருப்பது தெரியவரும்
புராண, இதிகாச படங்களில் இப்படி வசனங்களை தெறிக்கவிட்ட ரங்காராவ், சமூக படங்களில், அதுவும் குணச்சித்திர வேடம் என்றால் அப்படியே நேர்மாறாய் கணிவுடன் பேசி அசத்துவார்.
1952ல் பெல்லி சேசி சூடு.. படம்.. என்டி ராமாராவை ஹீரோவாக வைத்து தெலுங்கு தமிழ் என இருமொழி தயாரிப்பு. துண்டு வேடங்களில் நடித்துவந்த சாவித்திரி இந்த படத்தில்தான் முதன் முதலில் கதாநாயகியாக பிரமோட் ஆனார். தமிழில் கல்யாணம் பண்ணிப்பார் என வெளியானது.
இதில் மல்லுவேட்டி ஜிப்பா என ஜமீன்தாராய் பெரிய மனிதர் தோற்றத்தில் ரங்காராவ் வருவார். மிகவும் கேஷுவலான நடிப்பு அது…
அதிர்ச்சியான விஷயம், வயதான தோற்றத்தில் வந்த ரங்காராவுக்கு அப்போது வயது வெறும் 33 என்பதே.. எந்த நேரத்தில் இந்த ரோலை ஒப்புக்கொண்டாரோ தெரியவில்லை.. அதன்பின் பெரும்பாலான படங்களில் ரங்காராவ் என்றாலே இப்படித்தான் என ஜமின்தார், கௌரமான குடும்பத்தலைவர், செல்வந்தர் என மல்லுவேட்டி ஜிப்பாவை நிரந்தரமாய் அவருக்கு கட்டிவிட்டார்கள்.தன்னைவிட பெரிய, தன் வயதொத்த டாப் ஸ்டார்களுக்கெல்லாம் தந்தையாகவும்
மாமனாராகவுமே பெரும்பாலும் ரங்காராவ் நடித்தார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கொடுக்கப்பட்ட வயதான ரோல்களில் வித்தியாசம்காட்டி பின்னிபெடலெடுத்தவர் ரங்காராவ். மகனின் காதலுக்கு குறுக்கே நின்ற அந்த தேவதாஸ் படத்தின் ஜமீந்தார் நாராயணராவ், மிஸ்ஸியம்மாவின் ஜமீந்தார் கோபால், இரும்புத்திரை மில் முதலாளி என ஒவ்வொரு படத்திலும் தனி அடையாளம் தெரியும்..

அன்னை படத்தில் பிரிந்துபோய்விட்ட வளர்ப்பு மகனை நினைத்து பானுமதி அழுவார்.. புலம்புவது.. சாந்தமாவது.. புலம்புவது.. சாந்தமாவது.. என தாய்மையின் வெளிப்பாட்டை வித்தியாசமாக காட்டி சீனையே பிரித்துமேய்வார். அந்த பானுமதியை, தேர்ந்தெடுத்த வார்த்தைகளை வைத்து நிதானமாக தேற்றுகிற ரங்காராவின் நடிப்பு, திரையுலக பொக்கிஷம்.
குடும்பத்தில் தலைவன் மட்டும் நிதானத்தை காட்டினால், எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் சுமூகமாக தீர்வுகாண முடியும் என்பதை பல படங்களில் தன் நடிப்பாற்றலால் போதித்த விவேகத்தின் பல்கலைக்கழகம் ரங்காராவ்.
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்எஸ்ஆர், முத்து ராமன் வெற்றிகரமாக வலம்வந்த பல முன்னணி ஹீரோக்களுக்கு மட்டுமல்ல, சாவித்திரி, சரோஜாதேவி, கே.ஆர்விஜயா, தேவிகா போன்ற திறவை மிக்க நடிகைகளுக்கும் பல படங்களில் ரங்காராவின் நடிப்பு பெரும் பக்கபலமாக அமைந்திருந்தது..
சிவாஜியின் இருவர் உள்ளம் (1962) படத்தில் பணக்கார தந்தையாக இருந்து, பெண் பித்தனான மகனை சலிப்போடு எதிர்கொள்ளும் விதமும் அவனே திருந்திவிட்டபிறகு பாசத்தில் உருகும் விதமும் என ஒரே படத்தில் இருவேறு ரங்கராவ்கள்..
சர்வர் சுந்தரம் படத்தில் ஸ்டார்களுக்கு பீல்ட்டில் ஒத்து ஊதும் தமிழ்பட இயங்குநர்களின் ‘வழிதலை’ அப்பட்டமாக வெளிப்படுத்திய ரங்காராவின் பாங்கு செம கிளாசிக்…
அண்ணன் தங்கை பாசத்திற்கு பாசமலர் என்றால், அதற்கு இணையானது அண்ணன்-தம்பி பாசத்திற்கு திகழ்ந்த ரங்கராவின் கண்கண்ட தெய்வம் படம்.
சாரதா, கற்பகம், நானும் ஒரு பெண், சர்வசுந்தரம், எங்கவீட்டுப்பிள்ளை ராமு, பேசும் தெய்வம் வாழையடி வாழை என ரங்காராவில் அலட்டதே இல்லாத நடிப்பால் அலங்கரிக்கட்ட படங்கள் ஏராளம்..குணசித்திரத்தால் கட்டிப்போட்ட எஸ்வி ரங்காராவ், 1969ல் எம்ஜிஆரின் நம்நாடு படத்தில் மோசமான அரசியல்வாதி ஆளவந்தாராக நடித்தபோது பலருக்கும் வியப்பே மேலோங்கியது.
ஆனால் அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் மக்களின் அறியாமையை வைத்து காசாக்குவார்கள், அரசியலில் வெற்றிபெற என்னென்ன தகிடுதத்தங்களை செய்வார்கள் என்பதையெல்லாம் அவர் நடிப்பில் வெளிப்படுத்தை காணும்போது மிரட்சி ஏற்படாமல் போகாது.
”ஆண்டவனே மனிதனா பிறந்து தேர்தல்லு நின்னு ஜெயிச்சா லும் அவனும் லஞ்சம் வாங்காம இருக்கமுடியாது.”
“ஏழைங்ககிட்ட இருந்து காப்பாத்துறேன்னு பணக்காரங்ககிட்டேயிருந்து காசு வாங்கனும், பணக்காரன்கிட்டயிருந்து காப்பாத் துறேன்னு ஏழைங்க கிட்ட வோட்டை வாங்கனும். அப்புறம் ரெண்டுபேரையும் சுத்தமா மறந்துடணும்.”
“”ஒரு கெட்ட காரியத்தை செஞ்சிமுடிச்சி கொள்ளையடிக்க னும்னா எப்பவும் ஒரு நல்லவனை முன்னால நிறுத்தனும்.” இப்படி நம்நாடு படத்தில் எஸ்வி ரங்காராவ் அடிச்சிவிடும் வசனங்கள் எவர்கிரீன் மாஸ்..
சர்வதேச, தேசிய விருது என பல தரப்பட்ட விருதுகளை குவித்த எஸ்வி ரங்காராவ் தமிழில் கடைசியாக 1974ல் நடித்த அன்புச்சகோதரர்கள் படத்தில் ‘’முத்துக்கு முத்தாக சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக’’ என பாடி குணசித்திர நடிப்பால் கண்கலங்க வைத்துவிட்டுத்தான் போனார்.
உலகநாயகன் கமலஹாசன் சொல்வார். சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய குறை எஸ்வி ரங்காராவுடன் நடிக்கும் கிடைக்காமல் போனது என்று..
எஸ்வி ரங்காராவ்க்கு மனக்குறை என்றால் ஷேக்ஸ்பியராக நடிக்கவேண்டும் என்ற ஆசை கடைசிவரை நிறைவேறாமலேயே போய்விட்டதுதான்.
தமிழைவிட தெலுங்கில்தான் ரங்காராவின் சாசகங்கள் அதிகம். துரியோதனன், கம்சன், பீமன், ராவணனன். எமன், அரிச்சந்திரன், அக்பர் என புராண இதிகாச பாத்திரங்கள் இப்படித்தான் இருக்கும் என்று அவர் அளவுக்கு ஏராளமான பாத்திரங்களை தத்ரூபமாக கண்முன் கொண்டுவந்தவர்கள் வேறு யாருமில்லை.
இளவயதில் முதியவர் வேடங்களை ஏற்கத்தொடங்கிய ரங்காராவ் இறக்கும் போது வயது 56தான்..
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
1950 - 1959
பாதாளபைரவி (1951)
கல்யாணம் பண்ணிப்பார் (1952)
சண்டிராணி (1953)
வேலைக்காரி மகள் (1953)
ரோஹிணி (1953)
தேவதாஸ் (1953)
ராஜி என் கண்மணி (1954)
துளி விசம் (1954)
குணசுந்தரி (1955)
மிஸ்ஸியம்மா (1955)
மாதர் குல மாணிக்கம் (1956)
அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957)
சௌபாக்கியவதி (1957)
அன்னையின் ஆணை (1958)
கடன் வாங்கி கல்யாணம் (1958)
சபாஷ் மீனா (1958)
சாரங்கதாரா (1958)
பிள்ளைக் கனியமுது (1958)
திருமணம் (1958)
பொம்மை கல்யாணம் (1958)
பிள்ளைக் கனியமுது (1958)
வாழ்க்கை ஒப்பந்தம் (1959)
ராஜ சேவை (1959)
கலைவாணன் (1959)
அவள் யார் (1959)
1960 - 1969
இரும்புத்திரை (1960)
படிக்காத மேதை (1960)
பார்த்திபன் கனவு (1960)
விடிவெள்ளி (1960)
குமுதம் (1961)
அன்னை (1962)
தெய்வத்தின் தெய்வம் (1962)
படித்தால் மட்டும் போதுமா (1962)
பக்த பிரகலாதா (1967)
வீராஞ்சநேயா (1968 திரைப்படம்) (1968)
1970 - 1979
சம்பூரண இராமாயணம் (1971)
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
சிறந்த நடிகர் விருது 1963 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த இந்தோனேசியன் திரைப்பட விழாவில் ரங்கராவுக்கு வழங்கப்பட்டது[3]
காலமெனும் நதியில் விழும் எல்லாக் கனிகளும் கரையோரத்தில் ஒதுங்கி மரங்களாவதில்லை. சில கனிகள் அப்படி எஞ்சி, கரையொதுங்கி வளர்ந்து மரங்களாக நிலைத்துவிடுகின்றன. இதைப் போலவே நூற்றாண்டு கடந்த தென்னிந்தியத் திரைவானில் எண்ணற்ற நட்சத்திரங்கள் தோன்றி மறைந்திருந்தாலும், சிலர் மட்டும் காலம் கடந்தும் ரசிகர்கள் மனத்தில் மின்னிக்கொண்டிருக்கிறார்கள்.
பெரிய ஒப்பனை மாற்றங்கள் எவையுமின்றி, வெகு சில நடிகர்களால் மட்டுமே ஏற்ற கதாபாத்திரத்தை நடிப்பில் முழுமையாக வேறுபடுத்திக் காட்ட முடிந்திருக்கிறது. உதராணமாக : மார்கன் ஃப்ரீமேன், அமிதாப் பச்சன், சாவித்திரி போல. அதே வரிசையில் ஒருவர், ‘இரண்டாவது டேக் என்பதே தனக்கு எப்போதும் இருந்ததில்லை’ என கர்வமின்றிச் சொல்லி, தென்னிந்தியத் திரைப்படங்களில் ஒளிர்ந்து, மறைந்ததுவிட்டாலும் ரசிகர்கள் மனங்களில் மறையாத ஒரு மகாநடிகராக நிலைபெற்றுவிட்ட நூற்றாண்டு நாயகர் எஸ்.வி.ரங்காராவ்.
நதிமூலம்
இந்தத் துருவ நட்சத்திரம், கிழக்கு கோதாவரி மாவட்டம் நுஜ்வித் என்னும் ஊரில், சாமர்ல கோட்டேஸ்வரராவ் - லட்சுமி நரசாயியம்மா தம்பதியின் மகனாக அஸ்வினி நட்சத்திரத்தில் 1918 ஜூலை 3 அன்று பிறந்தவர். தந்தையார் ஒரு சுங்கத்துறை ஆய்வாளர். குடும்ப வழியில் சாமர்ல வெங்கட ரங்கா ராவ் எனப் பெயர் கொண்ட எஸ்.வி.ரங்கா ராவ், மூன்று சகோதரர்கள், ஏழு சகோதரிகளுடன் பெரிய குடும்பத்தில் வளர்ந்தார். தௌலேஸ்வரத்தில் தொடக்கக் கல்வி பயின்றார்.
மருத்துவராகப் பணியாற்றிய தாத்தா சாமர்ல கோட்டைய ராவின் மறைவுக்குப் பிறகு ரங்கா ராவின் பெற்றோர் சென்னையில் குடியேறினர். அப்போது திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் படித்தார். பள்ளி ஆண்டு விழா நாடகத்தில் குட்டி மந்திரவாதி வேடத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார். பின்னாளில், நாடு போற்றும் நேபாள மந்திரவாதியாக ‘பாதாள பைரவி’யில் நடித்ததன் தொடக்கமாகக்கூட இதைக் கருதலாம்.
பின்னர், விசாகப்பட்டினத்தில் ஏ.வி.என் கல்லூரியில் இன்டர்மீடியட்டும், காக்கிநாடா பி.ஆர். அரசுக் கல்லூரியில் இளங்கலை அறிவியலும் முடித்து தீயணைப்புத் துறையில் வேலையில் அமர்ந்தார். இதனூடே, நாடக வசனங்களை நன்றாகப் பேசுவதற்காகப் பேச்சுப் போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொள்வதுடன் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தும் வந்தார். பல பெரும் கலைஞர்களை உருவாக்கிய ‘காக்கி நாடா இளைஞர் நாடகக் குழு’வில் தன்னை இணைத்துக்கொண்டார். அக்குழு நடத்தில் நாடகமொன்றில் 22 வயதில் 65 வயது முதியவர் வேடம் போட்டுப் பெயர் வாங்கினார்.
அக்குழுவின் புகழ்பெற்ற ஆங்கில நாடகங்களான ‘அலாவுதீன் கில்ஜி’யில் மாலிக் கபூர், ஷேக்ஸ்பியரின் ‘ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா’ நாடகத்தில் சீஸர், ஷைலாக் கதாபாத்திரங்களில் நடித்துப் பெயர் பெற்றார். அங்கு, அவருக்கு பி.எஸ்.சுப்பா ராவ், ரேலங்கி , அஞ்சலிதேவி, அவருடைய கணவர் ஆதி நாராயணராவ் ஆகியோரின் நட்பு கிடைத்ததது. நாடகத்திலிருந்து திரைக்கு வந்தபோது தனது தீயணைப்புத்துறை வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர், வெள்ளித்திரையில் தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார் ரங்கா ராவ்.
முதல்நாள் படப்பிடிப்பு
பின்னாளில் கொடி கட்டிப் பறந்தபோது, தனது முதல் நாள் படப்பிடிப்பு எப்படி இருந்தது என்பதை இதழ் ஒன்றில் எஸ்.வி.ரங்கா ராவ் கட்டுரையாகவே எழுதியிருக்கிறார்.
“ஆகச் சிறந்த நடிகனாவது என் ஆசை. பின்னர் 1946-ல் தூரத்து உறவினரான பி.வி.ராமானந்தம் அவர்களின் தயாரிப்பு, இயக்கத்தில் ‘வரோதினி’ என்ற படத்தில் நடித்தேன். அதற்காக சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு ரயிலேறிச் சென்றேன். ஊர் புதிது, ஆட்கள் புதிது, தொழில் புதிது, நண்பர்கள் யாரும் இல்லை எனப் பல குழப்பங்கள்.
அனைவரின் கண்களும் என்னையே பார்ப்பது போன்ற பிரமை. அதனால் மனதில் தயக்கம். படபடப்பு, பயம் எனக் கலவையான மனநிலையில் இருந்த என்னை ஒரு காதல் காட்சியில் நடிக்க வைத்தார்கள் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? உடன் நடித்த தாசரி திலகம் என்னும் நடிகை தனது வசனத்தைத் தெளிவாகப் பேசி நடிக்க, நானோ தரையைப் பார்த்து என் வசனத்தைப் பேசினேன். வெல்லம் உடைக்கும் கல்போல உணர்ச்சியில்லாமல் பேசியதாக எல்லாரும் சிரிக்க, திட்டு வாங்கினேன்.
அவமானம் என்னைப் பிய்த்துத் தின்றது. நாம் நடிக்க வந்ததே தவறு, உடனே ஊருக்குத் திரும்பிட வேண்டும் எனத் தோன்றிய நாள் அது. பின்னர் இயக்குநர் சமாதானம் செய்து என்னைத் தேற்றியதால் தட்டுத் தடுமாறி நடித்து முடித்தேன்” என்று எழுதியிருந்தார்.
ரங்காராவ், ‘வரோதினி’ படத்துக்காக இயக்குநர் பி.வி.ராமானந்தத்துடன் 21.10.1945-ல் ஒரு நடிகராக அதிகாரபூர்வமாகப் போட்டுக்கொண்ட முதல் பட ஒப்பந்தத்தைப் பொக்கிஷமாக இன்னும் அவரது குடும்பத்தினர் பாதுகாத்து வருகிறார்கள். அதில் கிருஷ்ண தேவராயுடு, பிரவராயுக்குடு வேடங்களில் 90 நாட்கள் நடிக்க ரூபாய்.750 சம்பளமும் ரூபாய்.150 முன்பணம் பெற்றுக்கொள்வது என்பதில் தொடங்கி படப்பிடிப்பு நடக்கும் இடங்கள் , போக்குவரத்து, உணவு, தங்குமிடம் உள்ளிட்ட பத்துக்கும் மேலான ஷரத்துக்கள் சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளன. ஆனால், முதல் படம் 1947-ல் சங்கராந்தி பண்டிகை அன்று வெளியாகி வணிகரீதியில் தோல்வியடைந்ததால், திரும்பவும் ஊருக்குப் போய்விடுகிறார்.
நடிப்பில் ஒளிந்த நவரசம்
பின்னர், 27.12 1947 –ல் ஏலூரில் நடந்த ஒரு எளிய விழாவில் பத்தெட்டி வெங்கட்ராமையாவின் மகளான ஸ்ரீமதி லீலாவதியை மணமுடித்து ஜாம்ஷெட்பூரில் டாட்டா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நடிப்பு அவரை விடுவதாக இல்லை. திரும்பவும் ராஜினாமா, திரும்பவும் ஸ்டுடியோ எனத் தென்னகம் வந்தவருக்கு ‘மன தேசம்’ (1949), ‘பல்லெட்டூரிபில்லா’ (1950) என அஞ்சலி தேவி, எல்.வி.பிரசாத்தின் உதவியில் வேடங்கள் கிடைத்தன.
‘சுன்னப்ப ரங்குடு’ என்ற ரௌடிக் கதாபாத்திரத்தில் ‘சௌகார்’ (1950) படத்தில் நடித்ததால் சின்ன திருப்பம் கிடைத்தது. பின்னர் நாடறிந்த பெருந்திருப்பம் நேபாள மந்திரவாதியாக நடித்த ‘பாதாள பைரவி’யில் (1951) கிடைத்தது. இது என்.டி.ஆருக்கும் திருப்பம் தந்த படம். அதைத் தொடர்ந்து நடந்தது வரலாறு. ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்குக் கதாநாயகர்களைவிட அதிக சம்பளமும் பெற்று நடித்த ஒரே குணச்சித்திர நடிகராகத் திரையுலகம் இவரை உயர்த்தியது. இவரின் வளர்ச்சியில் விஜயா வாகினி ஸ்டுடியோவின் அதிபர் நாகி ரெட்டிக்குப் பெரும் பங்கு உண்டு.
தந்தை வேடமென்றாலும் அதில்தான் எத்தனை வகைகள்! பாசமிகு தந்தையாக, பணக்காரத் தந்தையாக , ஏழைத் தந்தையாக, நகைச்சுவை உணர்வுமிக்க தந்தையாக (‘சபாஷ் மீனா’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’) என்று பட்டியல் நீளும். தந்தை கதாபாத்திரங்களுக்கு அப்பால், மந்திரவாதியாக, ஜமீன்தாராக, அக்பர் பாதுஷாவாக, உக்கிர சேனனாக, எமதர்மனாக, ஹிரண்யகசிபுவாக, நரகாசுரனாக, ராஜா அரிச்சந்திரனாக, நரசிம்ம வர்ம மன்னனாக (‘பார்த்திபன் கனவு’), கீசகனாக, துரியோதனனாக, பலராமனாக, போஜராஜனாக, கடோத்கஜனாக, கம்சனாக, பாதிரியாராக, பீஷ்மராக, ராவணனாக, தக்ஷனாக, வழக்கறிஞராக என இவர் ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்திலும் தனித்த, பிரதி செய்ய முடியாத நவரச நடிப்பால் மிளிர்ந்திருக்கிறார்.
கீசகன், ஹிரண்யகசிபு போன்ற சில புராணக் கதாபாத்திரங்களைக் கறுப்பு வெள்ளைப் படங்களின் காலத்தில் முதல்முறையாகவும். அதே கதாபாத்திரங்களை வண்ணப் படக்காலம் வந்தபிறகு வேறு பரிமாணங்களிலும் தனது நடிப்பால் தூக்கி நிறுத்தியிருப்பார்.
ஒத்திகையில் செய்ததைத் தவிர, படப்பிடிப்பின்போது டேக்கில் வேறு ஏதாவது கூடுதலாகச் செய்து பெயர் வாங்குவதில் சாவித்திரியைப் போலவே இவரும் பெரிய கில்லாடி. ‘படிக்காத மேதை’ படத்தில் செல்வந்தர் சந்திரசேகராகச் செல்வச்செழிப்பின் உச்சத்தைத் தனது உடல்மொழியிலும் வசன உச்சரிப்பிலும் கொண்டுவந்த ரங்கா ராவ், பங்குச்சந்தையில் சரிவால் நொடித்துப்போன பிந்தைய நிலையை அத்தனை நம்பகமாகத் தனது நடிப்பில் ஒரு கதாபாத்திரத்தில் இரு பரிமாணங்களைக் கொண்டுவந்து காட்டியவர். செல்வந்தர்கள் வீட்டில் போடும் ஹவுஸ் கோட்டுக்குக் கம்பீரம் சேர்த்ததும் இவரே.
சார்லி சாப்ளினின் பாராட்டு
ஒரு ரசிகனாக, பின்னாளில் வந்த வண்ணப் படங்களில் வில்லனாக ரங்கா ராவ் வரும் கதாபாத்திரங்கள் நிறைவில்லாதது போலவே தோன்றும் குறையும் உண்டு. அதேநேரம், ஆறே நிமிடங்கள் வந்தாலும் ‘சர்வர் சுந்தரம்’ படத்திலும், ‘ அப்பாவிக் கணவன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் தெலுங்கு பேசும் இயக்குநராகவும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார்.
ஆங்கில நாவலாசிரியர் ஜார்ஜ் இலியட்டின் ‘சைலஸ் மார்னர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘பங்காரு பாப்பா’ (1954) படத்தைப் பார்த்த சார்லி சாப்ளின், அதில் கோட்டையாவாக வேடம் தரித்திருந்த ரங்கா ராவின் நடிப்பைப் பார்த்துப் பாராட்டியதாக தகவல் இருக்கிறது. தெலுங்கு, தமிழ் தவிர இந்தி, கன்னடம், மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
1971-ல் இவர் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைந்ததை ஒரு விழாவாகக் கொண்டாடியிருக்கிறது தமிழ்த் திரையுலகம். 4 படங்களைத் தயாரித்ததும் 2 படங்களை இயக்கியதும் இவரின் சிறப்புகள். வேட்டையாடுதல், ருசியான உணவுகள், ஒளிப்படமெடுத்தல், கவிதை எழுதுதல் இவருக்குப் பிடித்தமானவை. இவரின் இஷ்ட தெய்வம் சிவன். இவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் என அனைவருமே ஏலூரில் வசிக்கிறார்கள்.
1954 நவம்பர் மாத ‘கினிமா’ என்னும் சினிமா இதழில் ஒரு கேள்வி பதிலில் தனக்கு அரசியல் ஆர்வம் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தார். 70-களில் ஏற்பட்ட மாரடைப்புக்குப் பிறகு ‘படப்பிடிப்பு இல்லாமல் இருந்தால் மட்டும் மரணம் தப்புமா?’ என சமாதானம் சொல்லி ஓய்வில்லாமல் நடித்தார். பின்னர் 74 ஜுலை மாதத்தில் மறைந்தார். இன்றுவரை இவரது குரலையும் பாவனையையும் பலகுரல் கலைஞர்களால் ‘மிமிக்ரி’ செய்ய முடியாதது ஒன்றேபோதும் இந்த மாபெரும் கலைஞனின் தனித்துவத்தைச் சொல்ல. ஒரே ஒருவர் என்ற பொருள்பட ‘ஒக்கே ஒக்கடு’ என விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருசேரப் பாராட்டும் ரங்கா ராவ், நடிப்புலகில் சாதிக்க நினைப்பவர்களுக்கு மிகச் சிறந்த பள்ளிக்கூடம்.
ஆறடிக்கும் மேலான தோற்றம், சரித்திர வேடங்களைத் தாங்கும் கம்பீரம், பேசும் கண்கள், யாரையும் பின்பற்றாத பாணி , நாடகத்திலிருந்தது வந்தாலும் இயல்பான நடிப்பு, நவரசங்களிலும் வெளிப்பட்ட திறமை என்பவை இவரின் சிறப்புகள்.
rangarao-statusjpg
ஒரு பத்திரிகைக் கேள்வி பதிலில் சிவாஜி கணேசனுக்குப் பெரிய விருதுகள் கிடைக்காமல் போனது பற்றிய கேள்விக்குப் பதிலாக “அவர் சிரிக்கும்போது நாம் சிரித்தோம்.. அவர் குரல் உடைந்து அழத் தொடங்கும் முன்னரே நாம் அழுதோம். இதைவிட என்ன விருது வேண்டும். மக்களின் மனங்களை ஜெயிப்பதுதான் ஒரு கலைஞனுக் கான விருது” எனக் கூறினார். இதே பதிலை நாம் எஸ்.வி.ஆருக்கும் பொருத்திப் பார்க்கலாம்.
ஐந்துமுறை விருது
நட சாராவ பவும, நட சிம்ஹா, நட சேகர, நட சாம்ராட், விஸ்வ நட சக்ரவர்த்தி என தெலுங்கு ரசிகர்கள் இவருக்குப் பல பட்டங்கள் கொடுத்துக் கொண்டாடினார்கள். ‘நர்த்தன சாலா’ படத்தில் கீசகனாக நடித்ததற்கு இந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவில் ஆசிய அளவில் விருது வாங்கினார். அவர் இயக்கிய இரண்டு படங்களுக்கும் ஆந்திராவின் நந்தி விருது கிடைத்தது. நடிப்புக்காக ஐந்து முறை இவர் ஜனாதிபதி விருது வாங்கியிருக்கிறார் 1968 -க்குப் பிறகு இந்த விருதுகள் தேசிய விருதுகளாகிவிட்டன. நல்ல வாசகரான ரங்கா ராவின் தனி நூலகத்தில் விவேகானந்தர் புத்தகங்கள் இருந்ததும் மிகுந்த குடிப்பழக்கம் கொண்டிருந்ததும் ஒரு முரண். அந்நாளில் பர்க்லி சிகரெட்டின் வாடிக்கையாளராக இருந்த அவரை, அந்நிறுவனம் தனது வணிகத் தூதுவராகவும் ஆக்கிக்கொண்டது. பாகிஸ்தான், சீனா யுத்தங்களின் போதும் நிறைய நிதியுதவி செய்திருக்கிறார். 2013-ல் தெலுங்கு சினிமாவின் நூற்றாண்டைக் குறிக்கும் விதமாக இவரின் தபால் தலை வெளியிடப்பட்டது. மேலும், 2018-ல் இவரின் நூற்றாண்டு விழாவை ஹைதராபாத்தில் ஒரு வாரத்துக்கு ஆந்திர திரையுலகம் கொண்டாடியது. ஏலூரில் 12 அடி உயர வெண்கலச் சிலையும் தும்மலப்பள்ளியில் மார்பளவு வெண்கலச் சிலையும் இவருக்கு அமைக்கப்பட்டிருக்கின்றன.
தொடர்புக்கு: tottokv@gmail.com | படங்கள் உதவி: ஞானம்
.
தெலுங்கு ,தமிழ் படங்களில் நடித்தவர் . தெலுங்கு மக்கள் இவருக்கு ‘விஸ்வநாத சக்ரவர்த்தி ‘ என பட்டம் அளித்தார்கள். அந்தப் பட்டம் தமிழ் பட டைட்டிலில் யாரும் பார்த்திருக்க முடியாது.அந்தக்காலத்தில் பட்டதாரி நடிகர் எஸ்.வி.ரங்காராவ் B.Sc.நாடகமேடையில் ஆங்கில நாடகங்களில் நடித்த Shakespearean Actor! நாடகங்களில் நடித்திருந்தாலும், திரைப் படங்களில் புராண கதா பாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட நாடக செயற்கைத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்து அளப்பரிய சாதனை செய்தார்.
ஒரு தெலுங்கு நடிகர் தமிழ் படங்களில் செய்த சாதனை அசாதாரணமானது.
Scene Stealer! ஆஜானுபாகுவான ரங்காராவ் ஒரு காட்சியில் இருந்தால் இவர் தான் Scene Stealer! எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்.
தேவதாஸ், மிஸ்ஸியம்மா ஆரம்பித்து.’நானும் ஒரு பெண் ‘மாமனார் -மருமகள் உறவு.விஜயகுமாரியின் மாமனாராக.’கற்பகம் ‘ ஜெமினி கணேஷின் மாமனாராக.’அப்பா ‘ ரோல் திரைப் படங்களில் ரொம்ப மலிவானது. அதை மிகவும் உயர்த்திக் காட்டியவர் எஸ்.வி.ரங்காராவ்.சபாஷ் மீனாவில் “கரெக்ட்” அப்பாத்துரை”யாக, வாழையடி வாழையில் முத்துராமனின் தகப்பனாராக,’கண் கண்ட தெய்வம் ‘ படத்தில் சுப்பையாவின் ‘அண்ணன் ‘ கதாபாத்திரத்தில் விவசாயியாக!
அவர் செய்த புராண பாத்திரங்கள் தான் எத்தனை எத்தனை?.
வில்லனாக ‘நம் நாடு ‘, ராஜா….. படத்தில் ‘பக்த பிரகலாதா’வில்
‘மாயா பஜாரில் ‘ கடோத்கஜனாக “கல்யாண சமையல் சாதம் !”சபாஷ் மீனா, எங்க வீட்டு பிள்ளை,படங்களில் சரோஜாதேவியின் தந்தையாக, சர்வர் சுந்தரம் படத்தில் இயக்குநராக அவருடைய இயல்பான நகைச்சுவையை வாரி வழங்கியிருந்தார்.
தெலுங்கில் இவர் இயக்கிய இரண்டு படங்கள் நந்தி விருது பெற்றிருக்கின்றன. இயக்குனரும் கூட! அதிலொன்று தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய கண்கண்ட தெய்வம் படத்தைத் தெலுங்கில் ”பாண்டவ்யலு” என்ற பெயரில் தானே தயாரித்து இயக்கியிருந்தார்.
1968-லேயே வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்ட ”பாண்டவ்யலு” படத்தின் டைட்டில் கார்டுகள்
இந்தோனேசியாவில் ஒரு திரைப்படவிழாவில் இவர் ‘நர்த்தன சாலா’ என்ற படத்தில் கீசகனாக நடித்ததற்காக ஒரு விருது வாங்கியிருக்கிறார்.மற்ற படி இந்திய அரசாங்க கெளரவம் எதுவும் இவருக்கு கிடைத்ததில்லை.
உலகத்தின் மிகச் சிறந்த அபூர்வ நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்காராவ்.
இன்று அவர் இறந்து 46ஆண்டுகள் ஆனபின்னும் அவர் நடிப்பு சாசுவத்தன்மையுடன் தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் மிக உயர்ந்து நிற்கிறது.
இன்று டி.வி சேனல்களில் எவ்வளவோ நடிகர்களை பலரும் மிமிக்ரி செய்வதைப் பார்க்கமுடியும். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒருவர் கூட இதுவரை மிகப் பெரிய நடிகர் ரங்காராவை இமிடேட் செய்ததே கிடையாது. ரங்காராவின் தனித்துவத்திற்கு இது கூட உதாரணம். அவ்வளவு நுட்பமானது அவரது நடிப்பின் பரிமாணங்கள்!முதியவராக நடித்தார். ஆனாலும் இவரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து Brand செய்துவிட முடியாது.
.கனவுத் தொழிற்சாலை.நிறைய தொழிற்சாலைகளைக் கண்ட நாம் இப்படியொரு தொழிற்சாலையை லூமியர் சகோதரர்கள் மூலமே கண்டோம்.அவர்களது பெருங் கனவே சினிமா என பிற்காலத்தில் பிரமாண்டமானது.திரைத்துறை எப்போதுமே தன்னை புதுப்பித்துக்கொண்டேயிருக்கும்.லூமியரின் ஆசை பிற்காலத்தில் அநேக நபர்களின் வாழ்வாதாரமாகவே மாறிப்போனது.இந்த தொழிற்சாலையில் வேலை செய்ய போட்டா போட்டி.ஆனால் அதற்கான திறமையோடு இங்கே வந்தவர்களை அது வெறுங்கையோடு அனுப்பியதே இல்லை.கை நிறைய காசும் வாய் நிறைய புகழும் தான் இது கலைஞர்களை காந்தம் போல் இழுத்தது.அப்படித் தான் ஒரு பட்டதாரி இளைஞரையும் அது இழுத்தது.ஜாம்ஷெட்பூரில் தான் பார்த்த டாடா கம்பெனி வேலையை கை கழுவிட்டு திரையுலகில் அடியெடுத்து வைத்த அந்த இளைஞரை யாருமே இளைஞரென ஒத்துக்கொள்ளவில்லை.காரணம் அவரது ஆஜானுபாகுவான உடலும் முன் பக்க வழுக்கையும்.அதுவே அவரை புகழின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தியது.தமிழ் தெலுங்கு திரையுலகம் அவரை வாரி அணைத்துக்கொண்டது.அந்த அற்புதமான கலைஞர் தான் எஸ்.வி.ரங்காராவ்.
சமர்ல வெங்கட ரங்காராவ் ராஜமுந்திரிக்கு அருகிலுள்ள தௌலேஸ்வரத்தில் பிறந்தவர்.தந்தை கோடீஸ்வரராவ் ஆங்கில அரசில் எக்ஸைஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர்.பணி நிமித்தமாக கிருஷ்னா மாவட்டத்தின் நுஸ்வாடு நகருக்கு மாற்றலாக ரங்காராவின் பள்ளிப் படிப்பு அங்கே தான்.படிக்கும்போது நடிப்பில் ஆர்வம்.தந்தையின் ட்ரான்ஸ்ஃபர் ஓரிடத்தில் அவரை தங்க விடவில்லை.அப்படித் தான் காக்கிநாடா நகரம் அவரது நடிப்புப் பசிக்குத் தீனி போட்டது.இளங்கலை பட்டதாரி இல்லறத்தில் ஈடுபட 47 ல் லீலாவதியை கரம் பிடித்தார்.49 ல் பி.வி.ராமானந்தம் இயக்கிய வருதினியில் முதன் முதலாக தலை காட்டினார்.அதைத் தொடர்ந்து மிர்ஸாபூர் ஜமீனான பி.ஏ.சுப்பாராவின் பள்ளத்தூரி பில்லா. என்.டி.ஆர்.நாகேஸ்வரராவ் இணைந்து நடித்த முதல் படம் அங்கு படு ஹிட்டாக ரங்காராவ் உற்று கவனிக்கப்பட்டார்.
கம்பீரமான தோற்றம்.வித்தியாசமான குரல் வளம்.பாவனைகளை அழகாக வெளிப்படுத்தும் அகண்ட முகம்.எடுப்பான நாசிக்கு மேலே எப்போதும் பேசும் விழிகள்.அதற்கு மேலே அறிவைப் பறைசாற்றும் அகன்ற நெற்றி.இவையெல்லாம் அப்படியே உயிர் பெறும் அவர் தனக்குத் தந்த பாத்திரத்திற்குள் நுழைந்தால்.பாத்திரத்திற்கு வெளியே அவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கும் அப்பாவி முகம்.நாற்பது வயதில் முதுமையை அவ்வளவு அழகாக வெளிப்படுத்திய அவரது உடல் மொழி யாருக்குமே வாய்க்கவில்லை.கம்பீரமான பணக்கார தோரணையில் அட்டகாசமாக வெளிப்படும் அந்த உடல் மொழி வறுமையில் வாடும்போது அப்படியே மாறிப்போகும்.நிமிர்ந்த நன்நடை முன் பக்கம் வளைந்து வறுமையை இயலாமையாகக் காட்டும்போது இன்னும் கொஞ்சம் நெகிழ வைப்பார்.டயலாக் டெலிவரியில் ஒரு புதிய அத்தியாயமே படைத்திருப்பார் ரங்காராவ்.வேகமான வசனங்களில் ஒரு ஜீவனிருக்கும்.எதிரே நிற்பவரிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதை தெளிவாகவே உணர்ந்திருப்பார்.பக்கம் பக்கமாக நீட்டி முழக்கும் பஞ்சாயத்தெல்லாம் அவரிடம் இல்லை.காட்சியை அழகாக கொண்டு செல்வதில் கை தேர்ந்தவர்.
காக்கிநாடா யங்மேன் ஹேப்பி கிளப்பில் நடமாடிய அத்தனை பெரிய மனிதர்களையும் அவர் திரையில் கொண்டு வந்து காட்டினார்.50 ல் வெளியான சௌகார் படம் ஜானகிக்கு மட்டும் ரங்கா ராவிற்கும் ஒரு திருப்பு முனையைத் தந்தது.பி.என்.ரெட்டியின் இந்தப் படத்தில் ஒரு சிறு வேடம் என்றாலும் அவரது சகோதரர் நாகிரெட்டியின் அடுத்த ஆண்டு வெளியான பாதாள பைரவி தான் ரங்கா ராவ் என்ற பெயரை தமிழகத்திலும் ஒலிக்கச் செய்தது.இரு மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டிய இந்தப் படம் தான் உலக லெவலுக்கு தென் இந்திய சினிமாவை கொண்டு சென்ற படம்.52ல் தெலுங்கில் ஹிட்டடித்த பெல்லி சேசு சூடு தமிழில் கல்யாணம் பண்ணிப் பாராக வெளியாகி ஒரு நல்ல பெயரை அவருக்கு தேடித் தந்தது.ஜெமினி சாவித்திரி நடிக்க எல்.வி.பிரசாத் இயக்கிய படமிது.அதன் பிறகு ஏகப்பட்ட படங்கள் தெலுங்கில் ஹிட்டாக அவை அனைத்தும் தமிழ் பேசியபோது ரங்காராவும் அதில் இருந்தார்.53 ல் ஹிட்டான பானுமதியின் சண்டி ராணியில் பிரசன்டுடு என்ற ஒரு அருமையான வேஷம் கிடைத்தது.அதே ஆண்டு தான் அஞ்சலியின் பூங்கோதை.நடிகர் திலகம் முதன் முதலாக புக்கான படம்.அஞ்சலி காக்கிநாடா கிளப்பில் பழக்கம்.அதே ஆண்டு வெளியான குணசுந்தரியிலும் ராவ் இருந்தார்.அடுத்த ஆண்டு வெளியான ஜெமினியின் ராஜி என் கண்மணியில் ஒரு பணக்கார கேரக்டர் ரோல் செய்தார்.கே.ஆர்.ஆர்.நடித்த துளி விஷமும் இதே ஆண்டு வெளியான படம் தான்.இதில் விக்கிரமாதித்தன் என்ற கம்பீர வேடம்.நரசு பிக்சர்ஸ் எடுத்த படமிது.
55ல் எல்.வி.யின் மிஸ்ஸியம்மாவில் வீட்டு ஓனராக வந்து இயல்பான நடிப்பைத் தந்திருப்பார்.இரு மொழியில் இந்தப் படம் வெற்றிக்கொடி நாட்ட அதே வெற்றி தேவதாஸிற்கும் கிடைத்தது.இதில் பணக்கார ஜமீனாக நாராயண ராவ் என்ற கேரக்டர்.நடிகர் திலகத்தின் நான் பெற்ற செல்வத்தில் பெயர் சொல்லும்படியான நடிப்பு.இரு மொழியில் ஹிட்டான மாயா பஜாரில் மிரட்டலான கேரக்டர்.கல்யாண சமையல் சாதங்களை ஒரு பிடி பிடிக்கும் வலுவான பாத்திரம்.கடோத்கஜனின் கம்பீரம் இப்படித்தான் இருந்திருக்கும் என்பதை கண் முன்னே அனாயசமாக கொண்டு வந்திருப்பார்.அப்படியே தனது உடல் மொழியை மாற்றி 58 ல் வெளியான சபாஷ் மீனா மற்றும் கடன் வாங்கி கல்யாணத்தில் காமெடியில் ஒரு கலக்கல்.அதுவும் சரோஜாவின் அப்பாவாக வந்தாலே இருவருக்குமான அந்த கெமிஸ்ட்ரி அவ்வளவு அசத்தலாக வெளிப்படும்.இப்படியே நமக்கும் ஒரு அப்பா கிடைத்தால்..?. இப்படியே நமக்கும் ஒரு மகள் கிடைத்தால்..?. என ஏங்க வைக்கும் நடிப்பை இருவருமே தருவார்கள்.
பாரகன் பிக்சர்ஸ் இஸ்மாயில் எடுத்த அன்னையின் ஆனையில் அன்பான தந்தை பரோபகாரமாக அசத்தியிருப்பார்.58 ல் ஏகப்பட்ட படங்கள்.எஸ்.எஸ்.ஆர்.பாலாஜி நடித்த அன்பு எங்கே படத்தில் மாசிலாமணி என்ற கேரக்டர்.பொம்மைக் கல்யாணத்தில் வீரமுத்துவாக.சம்பூர்ண ராமாயணம் கலைவாணன் பால நாகம்மா என அந்த ஆண்டு தெலுங்கிலும் பிஸியான நாட்கள்.சமூக படங்களில் கலக்கிக்கொண்டே புராண படங்களுக்கும் அழகாக செட்டான ஆர்ட்டிஸ்ட் ரங்கா ராவ்.நடிகர் திலகத்தின் அவள் யார் படத்தில் பணக்கார சதாசிவமாக வருவார்.அவருக்கு சந்தியா ஜோடி.அதே சதாசிவம் அடுத்த செட்டில் கம்சனாக மிரட்டிக்கொண்டிருப்பார் கிருஷ்ணலீலா படத்திற்காக.இன்னொரு பக்கம் பார்த்திபன் கனவில் நரசிம்ம பல்லவனாக அவதாரம் எடுத்திருப்பார்.இதே ஷெட்யூல்ட் தெலுங்கிலும் இருக்கும்.ஒரு முறை ஏ.வி.எம்.செட்டியாரை கேட்டுவிட்டார்.அருமையான ஆர்ட்டிஸ்ட் நீங்க .ஆனால் சொன்ன நேரத்துக்கு உங்களை பிடிக்க முடிவதில்லையே ஏன்.?. ஐயா மூணு ஷிப்ட் தூக்கமில்லாம ஓடிக்கொண்டிருக்கேன்.போறாததற்கு இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜ் வேற இதைக் கொஞ்சம் புடிச்சுப் பாருங்க.தலையிலிருந்த கிரீடத்தை கழற்றித் தர உண்மையாகவே அது செம வெயிட்.ஆடை ஆபரணங்கள் கையில் கதாயுதம் என எக்ஸ்ட்ரா இருபது கிலோ வெயிட்டோடு அதட்டி உருட்டுவதற்குள் எனது உயிர் போய் விடுகிறது.அசதியில் அடித்துப் போட்டது போல் தூங்கிவிடுகிறேன் என்றார்.செட்டியாருக்கு அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.நடிகர் திலகத்தின் குங்குமத்தில் இந்த வம்பெல்லாம் இல்லை.அந்த புண்ணியகோடி எதாராத்தமாகவே வந்து போனார்.
ஒரு நடிகனை நாம் திரையில் காண்பது வேறு எதார்த்தம் வேறு.இயல்பாக வந்து போனால் இன்னும் எடுப்பாக நடிப்பைத் தரும் விரல் விட்டு எண்ணக் கூடிய கலைஞர்களுள் முக்கியமானவர் ரங்கா ராவ்.அவரது டயலாக் டெலிவரிகளில் அப்படியொரு எதார்த்தம் மிளிரும்.போடாப்பா!.. டேய் போடா!.. டயலாக் பேப்பரில் ஒரு வேளை இருக்காது.அறுபதுகளில் வந்த ரங்கா ராவ் அதை அனாயசமாக செய்தார்.அதிலும் அந்த படிக்காத மேதை ரங்கனோடு ராவ் மோதும் காட்சிகள் ஏதோ அடுத்த வீட்டில் நாம் அன்றாடம் காணும் காட்சிகள்.பணமிருக்கும்போது வரும் மிடுக்கு நொடிந்தபோது அப்படியே காணாமல் போயிருக்கும்.பணக்கார சந்திரசேகரனுக்கும் நொடிந்து போன சந்திரசேகனுக்கும் உள்ள வேறுபாட்டை அவரது உடல் மொழியில் காட்டுவார்.ஏன்டா இங்கயே கெடந்து உயிரை வாங்கிறே.எங்காவது போய் தொலையேன்.விளையாட்டு என நினைத்தால் உண்மையாகவே போடாவா?. எங்க போறது? . எனக்கு உங்களைவிட்டா யாரைத் தெரியும்.?. மாமா அத்தையே உலகமென வாழ்ந்த ரங்கனை வெளியேற்றிவிட்டு அந்தக் கிழம் பட்ட அவஸ்தை அப்படியே கண் முன்னே நிழலாடுகிறது.மாமாவிற்குப் பிடித்த சிகரெட் டின்னை வாங்கி வந்து வாங்கிக் கட்டிக்கொண்ட ரங்கனின் நடிப்பை இன்னும் மெருகேற்ற வைத்தது ராவின் நடிப்பல்லவா?. இருவருக்கும் போட்டி உச்சம் தொட அதில் எவ்வளவு உயிர் இருந்தது.நிச்சயத் தாம்பூலம் பந்த பாசத்தில் அந்த போட்டி ஆங்காங்கே தென்பட்டது.கை கொடுத்த தெய்வத்தில் அந்தப் போட்டி நடிகையர் திலகத்திடம் இருந்தது.
அட!.. என்னம்மா நீ வேற என சலித்துக்கொள்ளும் அந்த அன்பான அப்பாவை எவ்வளவு எதார்த்தமாக காட்டியிருப்பார்.ஒவ்வொரு வரனும் வரதனால் வஞ்சகமாக தோல்வியில் முடிய நடிகர் திலகம் பெண் பார்க்க வரும்போது அவர் காட்டும் சலிப்பும் சஹஸ்ரநாமத்தின் நச்சரிப்பும் அவ்வளவு அழகாக வந்திருக்கும்.மாப்பிள்ளை சம்மதித்ததும் அதை நம்ப முடியாமல் ஒரு ரியாக்ஷன் காட்டுவார்.ஒரு உண்மையான தகப்பனை அங்கே காணலாம்.க்ளைமாக்ஸில் சாவித்திரியோடு போட்டியில் இறங்க இயக்குநர் திலகம் இருவரையும் செமையாக வேலை வாங்கியிருப்பார்.அவரது ஒவ்வொரு படத்திலும் ரங்காராவ் கட்டாயம் வேணும்.சாரதாவில் தொடங்கிய பந்தம்.வையாபுரிப் பிள்ளையாக நாயகியின் தந்தை வேடம்.பணக்கார அந்தஸ்திற்கு களங்கம் வரும்போது காம்ப்ரமைஸ் ஆகாத தந்தை.அவரை கண்வின்ஸ் செய்வதற்குள் நாகையா தண்ணீர் குடிக்க வேண்டி வரும்.அதற்கு முன்பே அவருக்காகவே டயலாக்கில் சிரத்தை எடுப்பார் கே.எஸ்.ஜி.
ஏ.வி.எம்.மின்.அன்னை ஒரு அருமையான படம்.என்.ஆர்.குப்தாவின் வங்க மொழிக் கதையான மயா ம்ருகா.அதில் பானுமதிக்கு கணவனாக வருவார்.கிருஷ்ணன் பஞ்சு இயக்க டயலாக் கே.எஸ்.ஜி.இரண்டு பெண்களுக்காக அவர் மாங்குமாங்கென எழுத ராவிற்கும் நிறைய காட்சிகள் வைத்திருப்பார்.புகழ் பெற்ற லாயராக ராவ் இதில் வருவார்.அவரது தெய்வத்தின் தெய்வத்தில் நாயகியின் தந்தையாக.பணக்கார தோரணையோடு பந்தா இல்லாத ராவ்.அவரது ஜோடியாக சந்தியா கச்சிதமாக பொருந்தியிருப்பார்.படிக்காத மேதையில் அவர் மருமகள்.மகனைப் பறிகொடுத்துவிட்டு மருமகளை வீட்டோடு வைத்து சோகத்தில் மூழ்கும் அருமையான கேரக்டர்.பிலஹரியின் ஜடம் கதையை மையமாக வைத்து கே.எஸ்.ஜி.இயக்கிய அருமையான படம்.இசை மேதை ராமநாதனின் கடைசிப் படம்.அடுத்த ஆண்டு 63ல் வெளியானது நானும் ஒரு பெண்.ஏ.வி.எம்மின் இந்தப் படத்தில் மகள் மருமகளானாள்.
வங்க மொழியில் வெளியான பொது என்ற படத்தின் தழுவல்.ஏற்கனவே நாடகமாக ஓடியதை செட்டியார் பார்க்க அவருக்கு கதை பிடித்துப்போனது.ஏ.ஸி.இயக்கத்தில் எல்லாம் ரெடி.செட்டியார் சாய்ஸ் ஜெமினி சாவித்திரி.ஏ.ஸி.அவங்களுக்கு இந்த வேஷம் சூட்டாகாதே என்றார்.யாரை மனசில் நெனச்சிருக்கீங்க.எஸ்.எஸ்.ஆர்.விஜயகுமாரி. உங்க இஷ்டம் அப்படியே பண்ணுங்க என்றார்.முதலாளி.ராவிற்கு அட்டகாசமான வேஷம்.இள வயதில் அழகான மனைவியை பறிகொடுக்க அதே அழகில் ஒரு மருமகளை அவர் கற்பனை செய்து வைத்திருந்தார்.அத்தனையும் பணால்.அதனால் நொருங்கிப்போனார் அந்த செல்வபுரம் ஜமீன்.கருப்பான கல்யாணி மருமகளாக வர வீடே நரகமாகிப்போனது.எதிரே வந்தாலே எரிச்சலானார் பெரியவர்.அவரை அங்குலம் அங்குலமாக நகர்த்தினார் அந்த கல்யாணி.இதில் விஷேசம் சாவித்திரிக்கு செட்டாகாது என ஏ.ஸி.சொன்னதை அவர் மறக்கவே இல்லை.செட்டியாரிடம் சொல்லி இதே கதையை அவர் தெலுங்கிற்கு கொண்டு போய் சாவித்திரி முகத்தில் சாயத்தைப் பூச வைத்தார்.அந்த நடி ஆட ஜென்மே ராவின் சொந்த தயாரிப்பு.என்.டி.ஆர்.நாயகனாக இயக்கியது இதே ஏ.ஸி.தான்.அதிலும் அதே ஜமீன் விஜய நரசிம்ம ராயுலுவாக ராவ்.இந்தக் கதை இந்தியும் பேசியது.ராவ் லாலாஜியாக விடாப்பிடியாக மீனா குமாரியோடு போட்டி போட்டார்.தர்மேந்திரா மகனாக வந்தார்.எல்லா மொழிகளிலும் அவார்டுகளை வாரிக் குவித்த கதையிது.
சர்வர் சுந்தரத்தில் ஒரு அரை நாள் கால்ஷீட்டாக அந்த இயக்குநர் அவதாரம்.ஒரு பிரபலத்தை மனோரமாவும் இவரும் டேமேஜாக்க யார்ரா அங்க?. அம்மாக்கு ஆப்பிள் ஜூஸ்.தொண்டையை மனோரமா கணைத்த உடனே கட்டளை பறக்கும்.நாகேஷ் ஒரு வாய் தண்ணீருக்காக அல்லாட அன்றைய புதுமுகத்தின் அவலம் அது.நராசரம் இல்லம்மா நவரசம்.தமிழை கடித்துக் குதறும் அன்றைய நாயகி.விளக்குமாறு எடுத்து அப்படி!.. அப்படி!.. என கூட்டிக் காட்ட அதற்கு கூலி வேண்டவே வேண்டாம் என்றார்.எங்க வீட்டுப் பிள்ளையில் மீண்டும் சரோஜாவோடு மல்லுக்கட்டும் ராவ்.அய்யோ!... கடவுளே ..அவருதாம்பா!.. அட யாரம்மா!.. சும்மா அவரு தான் அவரு தான்னா!.. அவருதாம்ப்பா கடுப்போடு அதே டயலாக்.அட நம்ப மாப்பிளே.இதுக்கா இப்படி வெட்கப்பட்டே.நம்ம மாப்பிளேன்னு சொல்ல வேண்டியதுதானே.அந்த அப்பாவும் மகளும் இந்த ஆட்டத்தை ஐம்பதுகளில் தொடங்கியது.வாழ்க்கைப் படகில் மீண்டும் கண்டிப்பான அப்பா.தனது மகனின் காதலை பணத்தால் விலை பேசும் பணக்கார வர்க்கத்தின் பிரதிநிதி.செல்வத்தில் அதற்கு நேர் எதிராக.பேசும் தெய்வத்தில் எல்லாம் அவன் பாத்துக்குவான்.ஏழுமலையானின் ஏவலாளியாக.சிவந்த மண்ணில் விரைப்பான போலீஸ் அதிகாரியாக.கடமையோடு கனிவான பாசம்.மக்கள் திலகத்தின் படங்களிலும் அதே பாசம்.
தேவரின் நீதிக்குப் பின் பாசத்தில் பாசமுள்ள தந்தை.தாய்க்குத் தலை மகனில் அதே கேரக்டர்.எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது நம்நாடு படம் தான்.அதில் வந்த தர்மலிங்கம் வேறொரு உடல் மொழியில் நம்மை மிரட்டினார்.அடாடடா!..மகாலட்சுமியை வெச்ச உடனே இந்த மேஜைக்கு எவ்வளவு அழகு.லஞ்சப் பணத்தை கொடுப்பதில் கூட ஒரு நாகரிகம்.துரை உங்களுக்கு அரசியலே தெரியலை.யாரு எனக்கு?. இல்லாதவன் பேரைச் சொல்லி இருக்கிறவன்கிட்ட வாங்கணும் ரெண்டு பேரையும் அப்படியே மறந்திடணும்.அரசியலுக்கு புது இலக்கணம் வகுத்த தர்மலிங்கம்.தங்கத்திற்காக அவர் நகர்த்தும் ஒவ்வொரு நகர்வும் பணத்தாசையை பக்குவமாக நமக்கு பாடமெடுக்கும்.பாலாஜியின் ராஜாவில் இன்னொரு ரங்கா ராவ்.அறுபதுகளின் ஆரம்ப ரங்காராவா இது?. அவரது ரசிகர்கள் கொஞ்சம் நெளியவும் செய்தார்கள்.இந்தியில் பிரேம் நாத் செய்த அதே வேடம்.பத்மா கன்னாவோடு அவர் போட்ட அதே ஆட்டம்.ஐயோ சாமி!.. சொல்லிக் குற்றமில்லை.அந்தக் கால ஜமீன் இதை விட ஆட்டம் போட்டது.பக்கா ஜென்டில்மேனாக பார்த்துப் பார்த்து பழகியதால் கொஞ்சம் அஜீரணக் கோளாறு வந்ததென்னவோ உண்மை.அதற்குள் ஆண்டவன் அவரை எடுத்துக்கொண்டுவிட்டான்.சிவகாமியின் செல்வனில் ஒரு பக்காவான மிலிட்டரி மேன்.அந்த ஏர் மார்ஷல் வேடம் அவருக்கு பழைய சிவந்த மண்ணை நினைவூட்ட அந்த நினைவிலேயே அந்த உயிர் இதே மாதம் 74 ல் பிரிந்தது.56 வயது பழைய நினைவுகளை அசைபோடும் வயதல்ல.ஆக்டிவாக இயங்கும் அந்த வயதில் ஐயா விடைபெற்றது தமிழ் திரையுலகிற்கு பெரும் இழப்பு.இடைப்பட்ட வாழ்க்கையில் புயலென புகுந்து வெளியேறிய ரங்கா ராவ் நம் நெஞ்சங்களில் இப்போதும் பல பாத்திரங்களில் வாயிலாக நடமாடிக்கொண்டு தான் இருக்கிறார்.
Image may contain: 1 person.
S.V.ரங்காராவ்
கமல்ஹாசன் ஒருமுறை சொல்லியிருந்தார், ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம்.’’
ரங்காராவுக்கு எப்பேர்ப்பட்ட மகுடம்!
டி.வி சேனல்களில் எவ்வளவோ நடிகர்களை பலரும் மிமிக்ரி செய்வதைப் பார்க்கமுடியும். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒருவர் கூட இதுவரை மிகப் பெரிய நடிகர் ரங்காராவை இமிடேட் செய்ததே கிடையாது. ரங்காராவின் தனித்துவத்திற்கு இது கூட உதாரணம். அவ்வளவு நுட்பமானது அவரது நடிப்பின் பரிமாணங்கள்!முதியவராக நடித்தார். ஆனாலும் இவரை ஒரு வட்டத்துக்குள் அடைத்து Brandசெய்துவிட முடியாது.
தன் வாழ்நாளில் முதுமையைப் பார்த்தறியாத ஒருவர் திரைப் படங்களில் இருபத்தைந்து வருடங்கள் (1950களில்,1960களில்,1970களின்முன்பகுதியில் ) நிறைய வயதான,முதிய கதாப் பாத்திரங்கள் செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி ரங்காராவ் அறுபது வயதை தன் வாழ்நாளில் கண்டதில்லை. 1974 ல் அவர் மறைந்த போது அவர் வயது 56 தான்.
தெலுங்கு,தமிழ் படங்களில் நடித்தவர் . தெலுங்கு மக்கள் இவருக்கு 'விஸ்வநாத சக்ரவர்த்தி ' என பட்டம் அளித்தார்கள். அந்தப் பட்டம் தமிழ் பட டைட்டிலில் யாரும் பார்த்திருக்க முடியாது.
அந்தக்காலத்தில் பட்டதாரி நடிகர். எஸ்.வி.ரங்காராவ் B.Sc.
நாடகமேடையில் ஆங்கில நாடகங்களில் நடித்த Shakespearean Actor!
நாடகங்களில் நடித்திருந்தாலும், திரைப் படங்களில் புராண கதா பாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட நாடக செயற்கைத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்து அளப்பரிய சாதனை செய்தார்.
ஒரு தெலுங்கு நடிகர் தமிழ் படங்களில் செய்த சாதனை அசாதாரணமானது.
Scene Stealer! ஆஜானுபாகுவான ரங்காராவ் ஒரு காட்சியில் இருந்தால் இவர் தான் Scene Stealer!எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்.
தேவதாஸ், மிஸ்ஸியம்மா ஆரம்பித்து
'நானும் ஒரு பெண் 'மாமனார் -மருமகள்' உறவு.விஜயகுமாரியின் மாமனாராக.
'கற்பகம் ' ஜெமினி கணேஷின் மாமனாராக.
'அப்பா ' ரோல் திரைப் படங்களில் ரொம்ப மலிவானது. அதை மிகவும் உயர்த்திக் காட்டியவர் எஸ்.வி.ரங்காராவ்.
'கண் கண்ட தெய்வம் ' படத்தில் சுப்பையாவின் 'அண்ணன் ' ரோல்!
அவர் செய்த புராண பாத்திரங்கள்.
வில்லனாக 'நம் நாடு ' படத்தில் 'பக்த பிரகலாதா'வில்.
'மாயா பஜாரில் ' கடோத்கஜனாக "கல்யாண சமையல் சாதம் !"
சபாஷ் மீனா, எங்க வீட்டு பிள்ளை, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் அவருடைய இயல்பான நகைச்சுவை.
தெலுங்கில் இவர் இயக்கிய இரண்டு படங்கள் நந்தி விருது பெற்றிருக்கின்றன. இயக்குனரும் கூட!
இந்தோனேசியாவில் ஒரு திரைப்படவிழாவில் இவர் 'நர்த்தன சாலா' என்ற படத்தில் கீசகனாக நடித்ததற்காக ஒரு விருது வாங்கியிருக்கிறார்.
மற்ற படி இந்திய அரசாங்க கெளரவம் எதுவும் இவருக்கு கிடைத்ததில்லை.
உலகத்தின் மிகச் சிறந்த அபூர்வ நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்காராவ்.
………….
நானும் ஒரு பெண்(1963) படப் பிடிப்பின் க்ளைமாக்ஸ் ஷூட்டிங்குக்கு எம்.ஆர் .ராதா சரியான
நேரத்தில் வந்து காத்திருந்து பொறுமை இழக்கின்ற நிலை. ரங்காராவ் ரொம்ப தாமதமாக உள்ளே நுழையும்போது ராதா அவர் பாணியிலேயே ரங்காராவ் காதில் விழும்படியே
கமென்ட் அடித்திருக்கிறார்
" கெட்டவனா நடிக்கிறவன் ஒழுங்கா கரெக்டா நடந்துக்கிறான். நல்லவனா நடிக்கிறவன பாரு. ஒரு ஒழுங்கு இல்ல.படாத பாடு படுத்துறான்." ரங்கா ராவ் ரொம்ப மனம் புண்பட்டு இயக்குனரிடம்
''இன்றைக்கு விடிய விடிய எவ்வளவு நேரம் ஆனாலும் சரி. ஷூட்டிங் வைத்து க்ளைமாக்ஸ் காட்சியை முடித்துக்கொள்ளுங்கள் .
எனக்கு உடம்பு சரியில்லை.ஆனால் அது பற்றி கவலையில்லை." என்று ரோசத்தோடு சொல்லி அதன் படியே நடித்துக்கொடுத்தாராம்.
நானும் ஒரு பெண்ணில் மரணப் படுக்கையில் இருக்கும் ரங்காராவை " அத்தான்... ஒரே ஒரு கையெழுத்து போடு அத்தான்...."
- ராதா படாத பாடு படுத்துவார்.
................................................
எந்தப்படத்திலாவது சந்திர பாபு செட்டில் இருந்தால் எப்போதும் ரெங்காராவிடம் அத்து மீறி விளையாடுவாராம்.
இவரால் தாங்கமுடியாத அளவுக்கு கலாய்ப்பார்.சகிக்க முடியாத
அளவுக்கு பாபுவின் நடவடிக்கை இருக்கும் போது ரங்காராவ் ரொம்பவே
மூட் அவுட் ஆகிவிடுவாராம்.
…………………………….
ரங்காராவ் ’ஆதி பராசக்தி’ படத்தில் ஜெயலலிதாவுடன் நடிக்கும் காட்சி ஷூட்டிங் போது"கட் கட் " என கேமராவை நிறுத்தச் சொல்லி கே.எஸ்.ஜி "என்னய்யா,எருமை மாடு மாதிரி நிக்கிறியேய்யா " என ரங்காராவை திட்டினாராம். செட்டில் அப்போது இருந்தவர்களுக்கு இவ்வளவு பெரிய நடிகரைப்பார்த்து இப்படி சொல்லுகிறாரே என்று என்னமோ போலாகி விட்டதாம்.
பக்த பிரகலாதா (1967) படத்தில் இரண்யகசிபு வாக ரங்கா ராவ் நடித்தார். ஷூட்டிங்குக்கு ரங்காராவ் சரியாக
ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஏ .வி.மெய்யப்ப செட்டியார் காதுக்கு தகவல் போனது.
'முழுக்க ஷூட்டிங்கில் நடிக்க மறுக்கிறார். ஒரு நாளில் மூன்று நான்கு மணி நேரம் ஆகிவிட்டால்
கிளம்பி விடுகிறார்.'
செட்டியார் கோபமாகி விட்டார்."நான் இன்று
செட்டுக்கு வருகிறேன்.
ரங்காராவை பார்த்துக் கொள்கிறேன்"
ஷூட்டிங் ஆரம்பித்து சிலமணி நேரத்தில்
செட்டியார் ஆஜர். ரங்கா ராவுக்கு சூட்சுமம் புரிந்து விட்டது.
கம்ப்ளைன்ட் ஆகியிருக்கிறது. ஷாட் ப்ரேக்கில் அவரே செட்டியாரிடம் வந்து அவர் அணிந்திருந்த கவச ஆபரணங்களைஎல்லாம் கழற்றி விட்டு சொன்னார்
" மிஸ்டர் செட்டியார்! இந்த நகைகளை பிடியுங்கள் "
செட்டியார் கையில் வாங்கியிருக்கிறார். சரியான கனம் ! "இவ்வளவு கனமான நகைகளைப் போட்டுக்கொண்டு
புராண வசனமும் பேசி
எவ்வளவு நேரம் நான் உழைக்க முடியும் சொல்லுங்கள்.நான் வீட்டுக்குப் போனபின்னும்
இந்த பாரம் சுமந்த வேதனை என்னை விட்டு நீங்காது "
செட்டியார் கோபம் பறந்து விட்டது. பரிவுடன் சொன்னாராம் "நீங்கள் செய்தது சரிதான் "
.......................
ரங்காராவ் நடித்த காட்சிகள் மிகவும் விஷேசமானவை. படிக்காத மேதையில் முதல் முதலாக படம்பிடிக்கப்பட்ட காட்சி ரொம்ப பிரபலமான நெஞ்சை உருக்கும் காட்சி. ரெங்காராவ் வேலைக்காரன் சிவாஜியை வீட்டை விட்டு வெளியே போய் விடும்படி சொல்லும் காட்சி. “ மாமா… நிஜமாவே போகச்சொல்றீங்களா மாமா!’’
“இந்தக்காட்சியைத் தான் முதலில் படமாக்குவது என்று முடிவு செய்து விட்டோம். ம்ம்.. எழுது வசனம்….” என்று தயாரிப்பாளர் என்.கிருஷ்ணசுவாமி சொன்னவுடன் கதையை முழுக்க அசை போட்டு விட்ட வசனகர்த்தா கே.எஸ்.ஜி. பதறி, தழுதழுத்தக்குரலில் சொன்ன வார்த்தைகள் “ குடல புடுங்கி வக்க சொல்றீங்களே முதலாளி…”
………………..
அந்த கால குணச்சித்திர நடிகர்கள் ரெங்காராவ், பாலையா, எஸ்.வி.சுப்பையா மூவரும் முதுமையை காணாமல் மறைந்தார்கள்.
இவர்களுக்கு நல்ல சீனியர் எம்.ஆர்.ராதா மட்டும் முதுமையை பார்த்து விட்டு 72 வயதில் இறந்தார்.
பாலையாவுக்கு 58 வயது. சுப்பையாவுக்கு 57 வயது.
வினோதம் என்னவென்றால் படங்களில் பெரிசுகளாக இவர்கள் நடித்த காலத்தில் இளம் வாலிபர்களாக நடித்த கதாநாயகர்கள் எல்லோரும் நல்ல முதுமையைப்பார்த்து விட்டுத்தான் இறந்தார்கள். 52 வயதில் இறந்த முத்துராமன் தவிர.

No comments:
Post a Comment