Saturday 18 July 2020

SIMPLICITY AND GOOD THOUGHTS






              எளிமையும் ,நல்ல சிந்தையும் 

காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார். உடனே பத்திரிகையாளர்கள் , துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள் எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ளனர்.

காமராஜரோ ஒன்றும் இல்லை , சும்மா தான் போட்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார். பத்திரிகையாளர்களோ அவரை விடவில்லை. துண்டு மாற்றி போட்டதற்கு காரணம் என்ன? என்று துளைக்க ஆரம்பித்துள்ளனர்.

உடனே காமராஜர் ஒண்ணும் இல்லையா , "இடது பக்கம் சட்டை கிழிந்துள்ளது அதை மறைக்கத்தான் இடது பக்கம் துண்டை போட்டுள்ளேன்" என்றாராம் ,வேணும்ன்னா பாருங்கள் என்று துண்டை எடுத்து கிழிந்த சட்டையை காண்பித்தாராம். Pin drop silence....

அதைக்கண்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தலைகவிழ்ந்தனர்.

இப்படியும் ஒரு முதல்வர்! இவரையும் தேர்தலில் தோற்கடித்த நன்றி கெட்ட மனிதர்கள் தாம் நாம். ". ""மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். நாம் அமைதி காப்போம்""இது தான் தேர்தலில் தோற்றபிறகு அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது!! இந்த பெருந்தன்மை எத்தனை அரசியல்வாதிகளுக்கு வரும்?

காமராஜர் ஒரு முறை 💐 ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. 😚தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்..😌
உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ 🐝ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... 🐝



ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்...😊
பிறகு கலேக்ட்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... உங்களுக்கு டீ தான் பிரச்சனை.... ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவா-ங்கறது😝 பிரச்சனை.... இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க..??.." 👌👌👌👌👌
கலெக்டர் தலை குனிந்தார்...

No comments:

Post a Comment