Friday 17 July 2020

DISNEY LAND ,CALIFORNIA ,U.S.A. OPENED JULY 17,1955



DISNEY LAND ,CALIFORNIA ,U.S.A. OPENED JULY 17,1955


அற்புத பூங்காவை அமைத்த அற்புத மனிதர்  வால்ட் டிஸ்னிஜூலை17, 1955 இல்,  கலிபோர்னியா மாநிலத்தில் ஆனஹிம் என்னும் ஊரில் 160 ஏக்கர் நிலப்பரப்பில்  டிஸ்னிலாண்ட்  வால்ட் டிஸ்னியால் உருவாக்கப்பட்டது. சாகஸம் செய்ய நிறைய விளையாட்டுக்  கூடங்கள், நடன , நாடகஅரங்குகள் நிறைந்த பொழுதுபோக்குப் பூங்காவை அமைத்தார். இதற்குக் கிடைத்த வரவேற்பில் மீண்டும் பெரிய 27,258 ஏக்கரில்  புளோரிடாவில் இடம் வாங்கி  பெரியபூங்கா அமைக்கத் திட்டம் வகுத்தார்  ஆனால் 1966ல் இறந்து விட்டார். அதற்குப் பின் 1971ல் இந்த பிரமாண்ட பூங்கா அமைந்து  மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு இடமாய் அமைந்து விட்டது.

தேவதைக் கதைகள், டிஸ்னி கதையின் பாத்திரங்கள் அடிப்படையில் இந்த பொழுது போக்குப் பூங்கா உருவாக்கப்பட்டு இருக்கிறது.அவரின் கற்பனைப் பாத்திரங்களுடன் குழந்தைகள், பெரியவர்கள்  மகிழ்ச்சியாய் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்.பறக்கும் ரயில். லேசர் ஓலிக் காட்சிகள், வாணவேடிக்கைக்காட்சிகள், நீர்ப் புகைத் திரையில்   'ஸ்நோஒயிட்டும் , ஏழு குள்ளர்களும்'  கதை காட்டப்படுவது பார்க்க வேண்டிய ஓன்று..


 மிக்கி மவுஸ்  பெரிய கொடை ராட்டினத்தில் நடுநாயகமாய் இருக்கும் இரவு ஓளி விளக்கில் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

ஒரு அரங்கில் ஷேக்ஸ்பியர் நாடகம் காட்டப்பட்டது. நாடக  காட்சி அமைப்புகள் மேடையில் கண்சிமிட்டும் நேரத்தில் வேகமாய் மாற்றப்படும். அந்தக் கால மேடை நாடகத்தில் படுதா ஏற்றி இறக்கும்போது காட்சி மாறுவது போல் அப்படியே நடத்திக் காட்டினர். பெரிய கதவுகள் மேலே இருந்து அப்படியே இறங்கும். காதல் காட்சிகளுக்கு அழகான பூங்கா, நீரூற்று, மலர்கள் நிறைந்த தோட்டம் எல்லாம் தத்ரூபமாய் காட்சி அளித்தது.

பெரிய பெரிய கட்டிடங்களுக்குள் அதிசய நிகழ்ச்சிகள் காட்டப்படுகிறது.முக்கியமான எட்டு இடங்கள்   பார்க்கவேண்டியது உள்ளது. ஓவ்வொன்றுக்கும் அழைத்துப் போக டிராம்கள் பூங்காவிற்குள் அங்கும் இங்கும் போய்க்கொண்டு இருக்கிறது.எட்டு இடங்களில் ஒன்றான "மெயின் ஸ்ட்ரீட்"
பார்க்க வந்த மக்கள் எல்லோரும் வித வித உடைகள் அணிந்து வருகிறார்கள். அதைப் பார்ப்பதே நமக்கு நல்ல பொழுதுபோக்காய் உள்ளது. அந்தக்கால உடை அணிந்து நடந்து போகிறார்கள்.



எழுத்தாளர் சாவி அவர்கள் எழுதிய  "வாஷிங்டனில் திருமணம்" கதையில்
 வரும் சீமாட்டிகள்  போல் (ஓவியர் கோபுலு வரைந்த கதாபாத்திரங்கள் போல்) அலங்காரம் செய்து கொண்ட பெண்கள், அந்தக் கால தொப்பி, கோட், சூட் கைத்தடி வைத்துக்கொண்டு சீமான்கள்  போல் அலங்காரம்செய்து கொண்ட ஆண்கள் . அங்கே இங்கே போய்க்கொண்டு இருந்தார்கள்.பூங்காவின் நுழைவாயிலில் இருப்பவர்கள், "இன்றைய பொழுது அருமையான பொழுதாய் இருக்கட்டும்" என்று வாழ்த்தி பூங்காவின் மேப் கொடுக்கிறார்கள். எப்படிப் போக வேண்டும் ,முதலில் எதைப்பார்க்கலாம் என்று நமக்கு முடிவு எடுக்க வசதியாக உள்ளது.முதலில் முக்கிய கதாபாத்திரங்களாக உலவிக் கொண்டு இருக்கும் மிக்கி, மினி, டொனால்ட் டக் இவைகளுடன் படம் எடுத்துக் கொள்ள  வரிசையில் நிற்கும் பெரியவர், சிறியவர், குழந்தைகள் .  மின்னி, மிக்கி, டோணால்டக் இவர்களுடன் நாங்களும்  படம் எடுத்துக் கொண்டோம்.
ஆட்டோ கிராப் போடுகிறது



பொது மக்களுடன் ஆட்டம்

தந்தையின் தோளில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் சிறுவன்
டிஸ்னி டான்ஸ் உலகம் என்ற அரங்கத்தில் வால்ட் டிஸ்னியின் கதாபாத்திரங்களுடன் ஒரு சிறு யுவனும், யுவதியும் ஆடும் ஆட்டம்  அருமையாக இருக்கிறது. அரங்கத்தில்  தேவையான ஆட்கள் வந்தவுடன்  நிகழ்ச்சி ஆரம்பம் ஆகிறது.முன்னாடி உட்கார்ந்து இருக்கும் குழந்தைகளை ஆட அழைக்கும்  மின்னி, மிக்கி
குழந்தைகளும் நடனம் ஆடினார்கள்.பேரனும் ஆடினான். வீதி நாடகம் செய்தித்தாள்போடும் பையன்களாய் அன்றைய முக்கிய தலைப்புச் செய்தியைச் சொல்லிக் கூவி விற்கும் காட்சி அவ்வளவு வேகம் ஆட்டத்தில்




.`இளம் வயதில் டிஸ்னிலேண்ட் பூங்காவிலிருந்து வெளியேற்றப்பட்டேன்!’ ஒபாமா பெர்சனல் ஷேரிங்ஸ்
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தனது கல்லூரி காலத்தில் உலகப் புகழ்பெற்ற டிஸ்னிலாண்ட் பூங்காவிலிருந்து தான் வெளியேற்றப்பட்டது தொடர்பான புதிய தகவல்களைத் தெரிவித்தார். 




அமெரிக்காவின் 44 வது அதிபராகப் பதவி வகித்தவர் பராக் ஒபாமா. அமெரிக்கா மட்டுமல்லாது உலக அரங்கில் அதிகம் கவனம்பெற்ற தலைவர்களில் ஒருவர் இவர், கலிபோர்னியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டு பேசினார். அந்த கூட்டத்தில் தனது இளமைக் கால நினைவுகளை அவர் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், “நான் இரண்டு முறை டிஸ்னிலாண்ட் பொழுதுபோக்கு பூங்காவுக்குச் சென்றுள்ளேன். எனது 11 வயதில் அங்கு நான் முதல்முறையாகச் சென்றேன். கல்லூரியில் பயின்ற நாள்களில் அங்கு இரண்டாவது முறை செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கோண்டோலோஸ் என்னும் ரைடில் (Ride) (ரோப் கார் போன்றது) செல்லும்போது புகை பிடித்துக்கொண்டே நான் பயணித்தேன். நண்பர்கள் சிலரும் அப்போது புகை பிடித்தனர். இதைச் சொல்ல நான் வெட்கப்படுகிறேன். அதன்பின்னர், அங்கு இருந்த காவலர்கள் நாங்கள் விதிமுறைகளை மீறிவிட்டதாக எங்களை வெளியேற்றினர்” என்றார்.



ஒபாமாவின் இந்தப் பேச்சு வைரல் ஆகவே டிஸ்னி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் ஐகர், `வளாகத்தில் அவர் புகை பிடிக்க மாட்டார் என்றால், ஒபாமா மீண்டும் இங்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம்” எனத் தெரிவித்துள்ளார். ஒபாமா புகை பிடிப்பது தொடர்பாகப் பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வைரல் ஆகும். அவர் அமெரிக்க அதிபராக வெள்ளை மாளிகையில் இருக்கும்போது, வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரிடம், “கடந்த 6 வருடமாக நான் புகைபிடிக்கவில்லை. அதற்குக் காரணம் என் மனைவி மீதுகொண்ட பயம்தான்” என்று தெரிவித்தார். அது அப்போது வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment