ELLIS R.DUNGAN BIOGRAPHY
.எம்ஜியாரை அறிமுகப்படுத்திய இயக்குனர் யார் தெரியுமா?
Posted: ஒக்ரோபர் 19, 2010 in தெரியுமா ?
குறிச்சொற்கள்:AN Marudhachalam chetiyar, அமெரிக்கா, அம்பிகாபதி, இந்தியா, என்.எஸ். கிருஷ்ணன், எம். எஸ்.சுப்புலட்சுமி, எம்.ஜி.ஆர், எல்லிஸ் ஆர். டங்கன், ஏ. என். மருதாசலம் செட்டியார், ஓஹாயோ, கல்கத்தா, கல்லூரி, கே. பி. சுந்தராம்பாள், சகுந்தலா, சதிலீலாவதி, சீமந்தினி, டங்கன், டி. எஸ். பாலையா, தயாரிப்பாளர், தாசிப்பெண், நந்தனார், பொன்முடி, மந்திரிகுமாரி, மாணிக்லால் டாண்டன், மீரா, வால்மீகி, KB Sundarambal, mandhiri kumari, meera, MGR, MS Subbulakshmi, ns krishnan, sagundala, sathi leelavathi, seemandhini, Tandon, TS Balaiya9
எம்.ஜி.ஆர், சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது எல்லோர்க்கும் தெரியும், அறிமுகப்படுத்திய இயக்குனர் யார் தெரியுமா? அமெரிக்காவில் ஓஹாயோ மாநிலத்தில் பார்டன் என்னும் சிற்றூரில் பிறந்த எல்லிஸ் ஆர். டங்கன் (Ellis R. Dungan) என்பவர் தான் அவர். எம்.ஜி.ஆர் தவிர டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் போன்ற காலத்தை வென்ற கலைஞர்களை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே…
( படத்தில் கே. பி. சுந்தராம்பாள், டங்கனின் அம்மா, டங்கனின் நண்பர் மாணிக்லால் டாண்டன், டங்கன். இந்த புகைப்படம் நந்தனார் திரைப்பட படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது. மாணிக்லால் டாண்டன் நந்தனார் திரைப்படத்தை இயக்கியவர் )
கலிபோர்னியாவில் திரைப்படத்துறையை பற்றிய படிப்பு படிக்கும்போது, கல்லூரியில் டங்கனுடன் மாணிக்லால் டாண்டன் என்ற இந்திய மாணவர் படித்தார். அவர் இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரிக்கும் போது அவருக்கு துணையாக டங்கன் அவருக்கு துணையாக இருந்தார், அவர் முதன்முதலில் பணிபுரிந்த திரைப்படம் நந்தனார், இப்படத்தில் சில காட்சிகளை இவர் இயக்கினார். கல்கத்தாவில் படப்பிடிப்பின்போது டாண்டனை ஏ. என். மருதாசலம் செட்டியார் என்ற தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் தனது அடுத்த படத்தை இயக்கித்தரும்படி கேட்டார். நந்தனார் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் தனது அமெரிக்க நண்பரான எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களை இயக்குனராக்கிக்கொள்ளும்படி டாண்டன் பரிந்துரைத்தார்.
(அம்பிகாபதி படத்தின் படப்பிடிப்பின்போது டங்கன் காமிரா கோணத்தை ஆராய்கிறார்)
இவ்வாறு டங்கன், செட்டியார் தயாரித்த சதி லீலாவதி படத்தின் மூலம் தமிழ்ப்பட இயக்குனரானார். இப்படத்தில் தான் எம்.ஜி.ஆர் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். படம் நன்றாக ஓடியதைத் தொடர்ந்து, டங்கனுக்கு பல திரைப்பட வாய்புகள் கிட்டின. தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி ஒரு வருடத்திற்கும் மேல் தொடந்து ஓடி சாதனை படைத்தது. தமிழ் மொழி தெரியாவிட்டாலும், தனது ஆங்கிலம் அறிந்த உதவியாளர்களின் மூலம் நடிகர்களிடமும், தொழிற்கலைஞர்களோடும் இனைந்து பணியாற்ற முடிந்தது. இரண்டாம் உலகப்போரின்போது ஆங்கிலேயர்களின் கொள்கைகளை பரப்பும் சில படங்களையும் இயக்கினார். எம். எஸ் சுப்புலட்சுமியின் நடிப்பில் டங்கன் இயக்கிய மீரா அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, அதே படத்தை இந்தியிலும் இயக்கினார்.
(அம்பிகாபதி திரைப்படத்தில் பாகவதரையும், சந்தானலக்ஷ்மியையும் ஒரு காதல் காட்சியில் டங்கன் இயக்கி கொண்டிருக்கிகிறார்)
நெருக்கமான காதல் காட்சிகள் இவரை அமெரிக்க கலாச்சாரத்தை தமிழகத்தில் பரப்புகிறார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாக்கியது. ஆனால் புதிய ஓளியுத்தி, நவீன ஒப்பனை முறைகளையையும் இவரே தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவர் இயக்கிய கடைசித் தமிழ்ப்படம் மந்திரிகுமாரி. இந்தப் படத்தை பற்றி நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை, தமிழ்த் திரையுலகில் தவிர்க்கமுடியாத சில படங்களில் இதுவும் ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது. டங்கன் 1950 ஆம் ஆண்டு அமெரிக்கா திரும்பினார்.
(max factor makeup என்ற நவீன ஒப்பனை முறையை 1934ல் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார். இவர் ஒப்பனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது மட்டுமில்லாமல், அதில் அதீத அறிவையும் பெற்றிருந்தார். மேற்கண்ட புகைப்படம் சீமந்தினி என்ற திரைப்படத்தில் T P ராஜலக்ஷ்மி அவர்களுக்கு ஒப்பனையை திருத்திக் கொண்டிருக்கிறார்)
இவர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
சதிலீலாவதி (1936)
சீமந்தினி (1936)
இரு சகோதரர்கள் (1936)
அம்பிகாபதி (1937)
சூர்யபுத்ரி (1940)
சகுந்தலா (1940)
காளமேகம் (1940)
தாசிப்பெண் (1943)
வால்மீகி (1945)
மீரா (1945)
பொன்முடி (1950)
மந்திரிகுமாரி (1950)
(படத்தில் எம் எஸ் சுப்புலக்ஷ்மி, டங்கன், மீரா படப்பிடிப்பின் போது)
இது தவிர ஆங்கிலேயர்களின் கொள்கைகளை பரப்பும் சில படங்களையும், நந்தனாரில் சில காட்சிகளையும் இவர் இயக்கி இருக்கிறார். டங்கன் அமெரிக்காவில் மீண்டும் குடியேறிய பிறகு எல்லிஸ் டங்கன் ப்ரொடக்சன்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இந்தியாவில் படப்படிப்பு நடத்திய அமெரிக்கப்படங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார். மேலும் ட்யூக் கோல்ட்பர்க் என்ற தயாரிப்பாளருக்காக செய்திப் படங்களைத் தயாரித்தார். மீண்டும் இவர் தமிழகம் வந்த போது தமிழ்த் திரையுலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டங்கன் டிசம்பர் 1, 2001 இல் இயற்கை எய்தினார். டங்கன் தனது திரையுலக அனுபவங்களை எ கைட் டு அட்வன்ச்சர் என்ற தலைப்பில் சுயசரிதையாக வெளியிட்டுள்ளார்.
நன்றி: விக்கிப்பீடியா, நடிகர் மோகன் ராமன்(புகைப்படங்கள் இவருடைய facebook தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது)
.
.
.
No comments:
Post a Comment