Thursday 30 July 2020

YAKUB MEMAN ,TERRORISTS BORN 1962 JULY 30 - JULY 30, 2015


YAKUB MEMAN ,TERRORISTS BORN 
1962 JULY 30 - JULY 30, 2015


.யாக்கூபு அப்துல் இரசாக்கு மேமன் (30 சூலை 1962 – 30 சூலை 2015) 1993 மும்பை குண்டுவெடிப்புகளில் பங்கு கொண்டிருந்தார் என்று 27 சூலை 2007[3][4] அன்று பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அடுத்து தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி இருந்த ஒரு பட்டயக் கணக்கறிஞர்[3] ஆவார். யாக்கூபு மேமன், இக்குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருப்பதாக பெரிதும் சந்தேகிக்கப்படும் டைகர் மேமனின் உடன் பிறந்தவர் ஆவார்.[5][6][7] தூக்குத் தண்டனைக்கு எதிரான தொடர் மேல்முறையீடுகளுக்குப் பிறகு, 2015 சூலை 21 அன்று இந்திய உச்சநீதிமன்றம், அவரது இறுதி முறையீட்டைத்தள்ளுபடி செய்தது. 2015 சூலை 30 காலை 06:30 மணியளவில் நாக்பூர் சிறையில் இவரது தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.[4][8] கூட்டு மனசாட்சி என்ற புதிய அடிப்படையைகொண்டு இவருக்கு தீர்ப்பளிக்கப்பட்டதோடு மேல் முறையீடு மற்றும் கடைசி ஆசையாக, மனைவி மற்றும் மகளை பார்க்க அனுமதிக்கப்படாமல் தூக்கிலடப்பட்டார்.[9].

.இப்ராகிம் முஸ்தக் அப்துல் ரசாக் நதிம் மேமன் அல்லது டைகர் மேமன், (Ibrahim Mushtaq Abdul Razak Nadim Memon), (பிறப்பு: 24 நவம்பர் 1960) 1993 மும்பை வெடி குண்டு வழக்கில் இந்திய அரசின் சிபிஐ மற்றும் இண்டர் போலாலும் தேடப்படும் குற்றவாளி. தாவூத் இப்ராகிமின் "டி-கம்பெனி" அமைப்பை சேர்ந்த போதை மருந்து, ஆயுதக் கடத்தல் குழுவைச் சேர்ந்தவர் என குற்றச்சாட்டுள்ளது.[1] இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர். யாக்கூபு மேமனின் உடன் பிறந்தவர்.

1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில்
12 செப்டம்பர் 2006இல் தடா (TADA) சிறப்பு நீதிமன்றம், 1993 மும்பை வெடி குண்டு வழக்கில், தாவூத் இப்ராகிமுடன் முக்கிய குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட, டைகர் மேமன் தற்போது தாவூத் இப்ராகிமுடன் பாகிஸ்தானில் இருப்பதாக இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.[2] டைகர் மேமனின் உடன்பிறப்பு யாக்கூபு மேமன் மும்பை வெடி குண்டு வழக்கில் தூக்கிலிடப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை
யாக்கூப் மேமன் 1962 ஜூலை 30 இல்[10] மும்பையில் பிறந்தார். மும்பையின் பைகுல்லா என்ற இடத்தில் வளர்ந்த இவர் அங்குள்ள அந்தோனியோ டி'சோசா உயர் பள்ளியில் கல்வி கற்றார். புர்கானி வர்த்தக, கலைக்கல்லூரியில் வர்த்தகத்தின் முதுகலைப் பட்டம் பெற்றார். 1986 இல் மேமன் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் உறுப்பினராய் சேர்ந்து 1990 இல் பட்டயக் கணக்காளராக வெளியேறினார்.[11]


1991 இல் தனது நண்பர் சேட்டன் மேத்தா என்பவருடன் இணைந்து 'மேத்தா அண்டு மேமன் அசோசிடேட்சு' என்ற கணக்காளர் நிறுவனத்தை ஆரம்பித்தார். அடுத்த ஆண்டில் இருவரும் பிரிந்தனர். மேமன் தனது தந்தையின் பெயரில் 'ஏஆர் அண்டு சன்சு' என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். அத்துடன் 'திஜாரத் இன்டர்நேசனல்' என்ற நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து வளைகுடாப் பகுதிகளுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இறைச்சி ஏற்றுமதி செய்து வந்தார்.[12]

மேல்முறையீட்டு மனு
யாகூப் மேமன் சார்பில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு தொடர்பாக விசாரணை நடத்திய இரு நீதிபதிகள் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளதால் மேல்முறையீடு இவ்வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு 28 சூலை 2015 அன்று மாற்றம் செய்யப்பட்டது.[13]
29 சூலை 2015 பிற்பகலில் உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு யாகூப் மேமனின் கருணை மனு மறுசீராய்வு மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்தது.[14]
29 சூலை 2015 பிற்பகலிலே யாகூப் மேமன், தனது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய புதிய கருணை மனுவை இந்திய அரசின் ஆலோசனைப்படி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருணை மனுவை ஏற்காது தள்ளுபடி செய்துவிட்டார்.
அன்றைய நாளின் பின்னிரவிலேயே இறுதி முயற்சியாக, உச்ச நீதிமன்ற நெறிமுறைகளின்படி, தனது தூக்கு தண்டனையை நிறைவேற்ற, தனக்கு 14 நாள் கால அவகாசம் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.[15] உச்ச நீதிமன்றம், அவரது இறுதி முறையீட்டைத் தள்ளுபடி செய்தது. 30 சூலை 2015 அன்று காலை நாக்பூர் சிறையில் அவரது தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.[16]
யாகூப் மேமன் வழக்கில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து அந்த வழக்கின் உச்ச நீதிமன்ற மூத்த அலுவலரான அனுப் சுரேந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.[17]

No comments:

Post a Comment