Thursday 2 July 2020

ANNADURAI THANKS TO LYRICS VAALI ABOUT HIS HELP TO DMK


ANNADURAI THANKS TO LYRICS 
VAALI ABOUT HIS HELP TO DMK




சென்னையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றான வாஹினி.தென்னகத்தின் மிகப் பெரிய ஸ்டுடியோவிற்கு எதிரே தான் விஜயா கார்டன்.நிறைய காதல் காட்சிகளில் பாத்திரங்கள் உருண்டு புரண்ட அதே கார்டனில் தான் பரபரப்பாக பலர் இயங்கிக்கொண்டிருந்தார்கள்.உள்ளே இருள் சூழ வண்ண விளக்குகள் ஒளிர்ந்தன.கார்டன் ஜொலிக்கக் காரணம் ஒரு பாராட்டு விழா.விழாவின் நாயகன் அன்றைய முதல்வரான அறிஞர் அண்ணா.

பாலன் பிக்சர்ஸின் கே.பி.பாலன் தான் முன்னின்று இந்த விழாவை நடத்திக்கொண்டிருக்கிறார்.திரையுலகின் சார்பாக முதன் முதலாக முதல்வரான அண்ணாவிற்கு பாராட்டு விழா.பாலன் கழகத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்.கலைஞரின் ஊர்க்காரர்.கட்சியில் அனைவருக்கும் அறிமுகமானவர்.முதல்வரின் வருகை என்பதால் அரசு இயந்திரங்கள் அங்கே ஆஜர்.ஐ.பி.எஸ்.மற்றும் ஐ.ஏ.எஸ்.தலைகள் ஆங்காங்கே தென்பட மக்கள் திலகம் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அண்ணாவின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.அமைச்சர்கள் புடைசூழ இதோ சிவப்பு விளக்கு சுழல அண்ணா வந்துவிட்டார்.

பிரபலங்கள் சுற்றி வரவேற்க காரிலிருந்து அண்ணா இறங்கி அனைவருக்கும் வணக்கம் வைக்கிறார்.சுற்று முற்றும் பார்த்துவிட்டு நடக்கத் தொடங்குகிறார்.தூரத்தில் பலர் வணக்கம் வைக்க அங்கொரு மரத்தடியில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கவிஞர் வாலியும் தன் பங்காக வணக்கத்தைப் போட்டு வைக்க அண்ணா சைகையால் அவரை அருகே அழைக்கிறார்.ஓடிச் சென்ற வாலியின் தோளில் கையைப் போட்டு என்ன வாலி!.. நிறைய எம்.ஜி.ஆர்.படங்களுக்கு எழுதுறீங்க போலிருக்கு.ரொம்ப மகிழ்ச்சி என்றார்.ஆமாங்க.மெதுவாக காதருகே Try to be in his good books.அதற்கும் தலையாட்டி வைத்தார்.மெதுவாக நகர்ந்தவர் இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்து Your film songs have helped much to the success of D.M.K.!.தேங்க் யூ.சொல்லிவிட்டு அமைச்சர்கள் புடை சூழ மேடையை நோக்கிப் போனார்.

முதல்வரான அண்ணா வெறுமனே சிரித்துவிட்டு நகர்ந்திருக்கலாம்.ஆனால் தனது இயக்கத்திற்காக ஒருவருடைய எழுத்துக்கள் பயன்பட்ட உண்மையை ஒத்துக்கொள்ள ஒரு நல்ல மனம் வேண்டும்.அதற்காக நன்றி பாராட்ட உயர்ந்த குணம் வேண்டும்.இரண்டுமே அண்ணாவிடம் இருந்தது.முதல்வர் என்ற உயர்ந்த நிலைக்குச் சென்ற பிறகும் அதே வாஞ்சையோடு வாலியை அழைத்து உரையாடியது உள்ளபடியே அவருக்கு சந்தோஷம்.இப்போது மட்டுமல்ல வாலியை அவர் என்றைக்குப் பார்த்தாரோ அப்போதே அந்த வாஞ்சை வந்து ஒட்டிக்கொண்டது.அண்ணாவின் கொள்கைகள் பலமாக விமர்சிக்கப்பட்டாலும் அவரது தமிழுக்காக வாலிக்கும் அவரைப் பிடிக்கும்.வாலி அவருடனான அறிமுகத்தை கொஞ்சம் பின்னோக்கி ஓட்டிப் பார்க்கிறார்.அது நல்லவன் வாழ்வான் காலத்திற்கு அவரை அழைத்துச் செல்கிறது.

அன்றைய வாலி பத்துக்கு எட்டு சின்ன அறையில் நண்பர்களோடு காலத்தைத் தள்ளியவர்.எதிர்காலக் கனவுகளைச் சுமந்து கொண்டு நண்பர்கள் தயவில் காலத்தை ஓட்டியவர்.பசியெடுத்தால் ஒரு சார்மினாரை இழுத்து முழுச் சொம்பு தண்ணீரை உள்ளே தள்ளினால் பசி பறந்து போகும் என நண்பர் நாகேஷ் சொன்ன ஐடியாப்படி வாழ்ந்த காலங்களில் தான் ஒரு நண்பகல் வேளையில் பசியாற்றிவிட்டு மல்லாக்கப் படுத்து கரிச்சான் குஞ்சு கதையொன்றை கலைமகளில் மேய்ந்துகொண்டிருந்தபோது தான் அறைக்கதவு தட்டப்பட்டது.எழுந்து போய் திறந்து பார்க்க சார் இங்க வாலிங்கிறது.நான் தான்.என்ன விஷயம்.காலைல பத்து மணிக்கு அரசு பிக்சர்ஸ்ல உங்கள வரச் சொன்னாங்க.டைரக்டர் நீலகண்டன் சார் வரச் சொன்னாரு.எம்பேரு கோபால் நாயர்.நான் புரடக்ஷனை பார்த்திட்டு இருக்கேன்.பதிலுக்குக் கூட காத்திருக்காமல் பாடத்தை ஒப்பிக்கும் மாணவனைப் போல ஒப்பித்துவிட்டுப் போக வாலிக்கு தலை கால் புரியவில்லை.அரசு பிக்சர்ஸா?. அது எங்கிருக்கு.?. யாரு ஹீரோ?. யாரு மியூசிக் ?. கேள்விகள் மண்டையைக் குடைய அங்குமிங்கும் நடை போட்டவர் சட்டென அன்றைய பேசும் படம் கண்ணில் பட எடுத்துப் புரட்டியவர் கண்களில் அரசு பிக்சர்ஸ் விளம்பரம் தென்படுகிறது.

எம்.ஜி.ஆர்.அழகாக சிரித்துக்கொண்டும் நிற்க அவரை ஒட்டி தோளில் சாய்ந்தவாறு ராஜசுலோசனா. இருவரையும் முறைத்துக்கொண்டும் எம்.ஆர்.ராதா.கீழே கொட்டை எழுத்துக்களில் நல்லவன் வாழ்வான்.அதற்கும் கீழே இயக்கம் பா.நீலகண்டன்.இசை.டி.ஆர்.பாப்பா.கவனத்தைக் கவர்ந்தது கதை வசனம் அறிஞர் அண்ணா.ஆஹா பெருந் தலைகள் பணியாற்றும் படத்திற்காகவா என்னை அழைத்திருக்கிறார்கள்.?. இந்த மூவரையும் மூன்றாண்டுகளுக்கு முன்பு தாய் மகளுக்கு கட்டிய தாலி சூட்டிங்கில் ஒரு சேரப் பார்த்தது.துவண்டு போயிருந்த சினிமா கனவு மெல்ல துளிர் விடத் தொடங்குகிறது.அடே!.. ரங்கராஜா நல்ல சான்ஸ் விட்டுவிடாதே.உள்ளே அசரீரி ஒலிக்க மீண்டும் அறைக் கதவு திறந்தபோது நண்பன் நாகேஷ் உள்ளே டயர்டாக நுழைகிறார்.பாலன் பிக்சர்ஸின் கடவுளைக் கண்டேனில் ஒரு சின்ன வேஷம் தான்.சாவடிக்கிறானுகடா!.. நொந்து கொண்டே வந்தவர் விஷயத்தைக் கேள்விப்பட சோகம் மறந்து குஷியாகிறார்.

அடே!.. ரங்கராஜா உனது சரக்கு ஒரு நாள் விலைபோகும்னு தெரியும்டா.நீ ஒரு பூனை.உங்கிட்ட புனுகு இருக்கிற ரகசியம் உனக்குத் தெரியல. அதனால தான் கொசுவத்தி மாதிரி அடிக்கடி சுருண்டு சுருண்டு ரூமிலையே கெடக்கிற. ஆமா இந்த அரசு பிக்சர்ஸ் எங்கடா இருக்கு?. நுங்கம்பாக்கத்திலடா எனக்குத் தெரியும்.நாளைக்கு நானும் உங்கூட வர்ரேன்.சேர்ந்தே போலாம்.யார்ரா என்னைப் பத்தி சொல்லியிருப்பா?. எவனோ சொல்லட்டும்.சான்ஸ் கதவை தட்டிட்டு வருது.விடாதே.கசகசன்னு இருக்கு நான் குளிச்சிட்டு வந்திடுறேன்.பாத்ரூம் ஓடினார் நண்பன்.காலைல ரெண்டு பேரும் நடந்தே நுங்கம்பாக்கம் போக அரசு பிக்சர்ஸ் அவர்களை வரவேற்றது.கொஞ்ச நேரம் காத்திருப்பிற்குப் பிறகு ஒரு பிளைமவுத் வெள்ளையும் சொள்ளையுமா நீலகண்டன் சார் இறங்க வணக்கம் போட்டு வைத்தனர்.சார் உள்ளே கூப்பிடுறாரு.இதில யாரு வாலி?. நான் தாங்க.இவன் என் ஃபிரெண்டு. கொஞ்சம் வெளியே இருங்க.அப்போது நாகேஷ் அவ்வளவாக பிரபலம் இல்லை.உங்களைப் பத்தி கேள்விப்பட்டேன்.அஸிஸ்டெண்ட் சிச்சுவேஷன் சொல்லுவாரு.பல்லவி சரணம் எழுதிட்டு மியூசிக் டைரக்டரை பாருங்க.மோகன் என அழைக்க உயரமான நபர் வர இவருகிட்ட சிச்சுவேஷன் சொல்லுங்க வாங்க சார்.

ரூமுக்குத் திரும்பிய வாலிக்கு அன்று முழுவதும் தூக்கம் பிடிக்கவில்லை.நாற்பது ஐம்பது பல்லவி எழுதி காலை தனியாக போக என்ன சார் இவ்வளவு எழுதிட்டு வந்திருக்கீங்க.மோகன் ஆச்சர்யமானார்.இந்த மோகன் தான் பிற்காலத்தில் மோகன் காந்திராமனாக அறியப்பட்டவர்.வாலிக்கு நெருக்கமாக மாறியவர்.டைரக்டர் வர ஒரு பல்லவியை செலக்ட் பண்ணி பாப்பாவிடம் கூட்டிட்டு போ.மேலே மியுசிக் டைரக்டரை அப்போது தான் பார்க்கிறார்.அவரைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறார்.வணக்கம் போட்டு வைக்க வாங்க.பல்லவியை வாங்கி மெட்டுக்களை கட்ட சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்.சிந்திய கண்ணீர் என அவர் ராகம் போட நல்லாயிருக்கு என்றவாரே ஒருவர் என்ட்ரி.அப்படியே ஒரு சரணமும் எழுத சபாஷ் நல்லாயிருக்கு வந்த நண்பர் குஷியாக யாரு சார் இவரு.மெல்லிய குரலில் பாப்பாவிடம் கேட்க சரியாப்போச்சு இவரு தானே உங்களை ரெகமண்ட் பண்ணியது.அப்படியே திரும்பி ஐயா வணக்கம்.ரொம்ப தேங்க்ஸ்.கடவுளைக் கண்டேன் கால்ஷீட்டுக்காக நாகேஷைத் தேடி வரும்போது உங்க பாட்டை சுந்தரராஜன் பாடிக்கிட்டு இருந்தாரு.யாரு பாட்டு நல்லாயிருக்கே என கேட்டபோது தான் உங்க பேரைச் சொன்னாரு.டைரக்டர் பாட்டெழுத புதுசா யாரையாவது புடிங்கப்பா என்றதும் உங்க ஞாபகம் வந்தது.

வாட்டசாட்டமாக பட்டு வேட்டி பட்டு சட்டையில் வந்த மா.லட்சுமணன் தான் வாலிக்கு ரெகமண்ட்.லட்சுமணன் அன்றைய சினிமா வட்டாரத்தில் பிரபலம்.சக்கரவர்த்தி திருமகள், தங்கமலை ரகசியம் திருடாதே என பல படங்களில் அவரது எழுத்தைக் காணலாம்.அண்ணாவிற்கு உதவியாக சில காலம் காஞ்சியில் இருந்தவர்.ஏ.எல்.எஸ்.ஸூக்கும் நெருக்கமானவர்.கவிஞரின் மாலையிட்ட மங்கையில் அவருக்கு உதவியாக இருந்தவர்.நல்லா வருவீங்க என அவர் வாலியை வாழ்த்த பிற்காலத்தில் வாலியின் நெருங்கிய நண்பராகவும் மாறினார் லட்சுமணன்.இப்போது பாடல் ஓகேயாக வேண்டுமே.இயக்குநர் கேட்டு விட்டு ஓகே சொல்ல எம்.ஜி.ஆருக்காக சாரதா ஓடினார்.ஏ.எல்.எஸ்ஸின் ஏ.ஸி.அறையில் எம்.ஜி.ஆர்.பாட்டைக் கேட்டு அவரும் தலையாட்ட கடைசியில் காஞ்சித் தலைவனின் ஒப்புதலுக்காக பாடல் காஞ்சி சென்றது.இந்தப் பாடல் ரெண்டு மாதமாக இழுத்துச் சென்றது இன்னொரு வரலாறு.

குருசாமி நாளைக்கு காலைலே காஞ்சிபுரம் போயிட்டு வந்திடுங்க.அண்ணாகிட்ட காட்டிட்டா ரெக்கார்டிங் போயிடலாம்.வாலி சொல்லி அனுப்பிறேன்.என்னடா இது பழையபடி குருடி கதவைத் திறக்குதே என நொந்தபடி நடையைக் கட்ட மூன்று நாள் மூச்சுப் பேச்சே இல்லை.விடுறா!.. மெட்ராஸில இன்னும் ஏகப்பட்ட கம்பெனி இருக்கு.எவனாவது கூப்பிடாமலா போவான்.நாகேஷ் தேற்ற அடுத்த நாள் அரசு பிக்சர்ஸ்ல இருந்து கதவைத் தட்ட கையோடு வாங்க.கீழே கார் நிக்குது.சட்டை மாற்றிக்கொண்டு ஓட ப.நீ.கையில் வாலியின் பாட்டு.ஆங்காங்கே வட்டமிட்ட அடையாளங்கள்.என்ன சார் அண்ணா கரெக்ஷன்ஸ் பண்ணினாரா?. நான் வேற மாற்றி எழுதி கொண்டு வரட்டுமா?. அட நீங்க வேற !.. இந்த வரிகள் மாற்றாம வேணும்னு அண்ணா விரும்புறாரு.பாட்டு அவருக்கு புடிச்சு போச்சு நாலு நாள் கழிச்சு மெட்ராஸ் வர்ரேண்ணு சொல்லி அனுப்பிச்சிருக்காரு .குருசாமி சொன்னான்.அப்பாடா!.. காஞ்சியை நோக்கி ஒரு கும்பிடு.அது ஒரு டூயட் சாங்.நாயகி மலைச் சாரலை ஒட்டிய நீரோடையில் நீராடுகிறாள்.கூடவே நாயகன்.தேன் மலராடும் மீன் விளையாடும் அருவியின் அழகை காணீரோ என பாட அதற்கு நாயகன் அது நான் வரவில்லை என்பதால் உன் மீன் விழி சிந்திய கண்ணீரோ என்கிறான்.அண்ணா விரும்பிய வரிகள் அவை.

சொன்ன மாதிரி அண்ணா சென்னை வர அப்போது தான் இயக்குநர் அவரை அறிமுகப்படுத்தினார்.வாலி ஒரு கும்பிடு போட்டு வைக்க உங்க பாட்டு நல்லாயிருந்தது.சினிமாவிற்கு இயல்பா எழுத வருது.நீங்க வட கலையா தென் கலையா?. இதென்னடா புது வம்பு.எதுக்கு கேட்கிறாரு.ஆரிய மாயை எழுதிய அண்ணாவை அவருக்குத் தெரியும்.கம்ப ரசத்தை ஒருவழியாக்கிய அண்ணா என்பதும் தெரியும்.சொல்லி வைத்தார்.சந்தோஷம்.பேசப் பேச அந்த அண்ணாவா இது?. கம்ப ரசம் கனிவாக உரையாடியது வியப்பு.நாத்தழும்பேற நாத்திகம் பேசிய அண்ணா இல்லை இவர்.சொந்த சகோதரனைப் போல வாஞ்சையோடு உரையாடுகிறார்.வாலி உங்களுக்கு இங்கிலீஷ் நாலெட்ஜ் நிறைய இருக்கு.நீங்க அதை யூஸ் பண்ணிக்கோங்க.கன்னிமாரா போங்க மில்டன், கீட்ஸ், வால்டர் விட்மனெல்லாம் படிக்க உபயோகமா இருக்கும்.இந்தப் படத்தோட இன்னொரு சான்ஸூம் தர்ரேண்.பேசப்பேச வாலிக்கு வியப்பு.

கோயமுத்தூர்ல சண்முக சுந்தரம் அட்ரஸ் தர்ரேன்.நம்ம கட்சிக்காரர் தான்.அவருக்கு ஒரு படம் எழுதி கொடுத்திருக்கேன். எதையும் தாங்கும் இதயம்னு பேரு.நம்ம ராமசாமி எஸ்.எஸ்.ஆர் எல்லோரும் இருக்காங்க.நீலகண்டன் தான் அதுக்கும். பாப்பாகிட்ட சொல்லி ஒரு பாட்டு எழுதிக் கொடுங்க நல்லா வருவீங்க.அண்ணாவின் உள்ளம் ஆகாசம் போன்றது.திறமை எங்கிருந்தாலும் பாராட்டத் தயங்காதவர்.அந்தப் படத்திற்கு வாலி எழுதிய பாடல் தான் அன்னை முகம் என்றெண்ணி நீ என்னை முகம் பார்க்கிறாய். என் பிள்ளை முகம் என்றெண்ணி நான் உன்னை முகம் பார்க்கிறேன்.தனது சொந்தக் குழந்தை என்பதை தெரியாமலேயே நாயகி சரோஜா மரத்தடியில் தூளியில் குழந்தையை தூக்க வைக்க பாடும் தாலாட்டு.சிச்சுவேஷனுக்கு சரியான வரிகளை போட்டிருக்கீங்க ரொம்ப நல்லாயிருக்கு இதையும் அண்ணா பாராட்டி முதுகில் தட்டிக்கொடுத்தார்.அடுத்த முறை சந்தித்தபோது வித்தியாசமான அனுபவம்.வாலி மொட்டைத் தலையோடு அண்ணாவை சந்தித்தார்.

இதென்ன திடீர் மொட்டை?. திருப்பதிக்கு வேண்டிக்கிட்டேன்.ஒரு நேரத்திக்கடன்.என்ன நேர்த்திக் கடன் தெரிஞ்சிக்கலாமா?. அண்ணா விடுவதாக இல்லை.எல்லாம் உங்களால தான்.என்னாலயா?. ஆச்சரியம் ஆனார் அண்ணா.பாட்டெழுத வாய்ப்பு இந்தப் பிறவியில் கிடையாது என்றிருந்தபோது தான் உங்களது நல்லவன் வாழ்வான் வாய்ப்பு.இந்தப் பாட்டை அண்ணா ஓகே செய்தால் உன்னிடம் வந்து மொட்டை போட்டுக் கொள்கிறேன் என ஏழுமலையானடம் வேண்டினேன்.அவன் உங்க உள்ளத்தில் புகுந்து ஓகே சொல்ல வைத்துவிட்டான்.காவிக் கறையேறிய அத்தனை பற்களும் தெரிய சிரித்த அண்ணா வாலி!.. உங்க பாட்டை ஓகே செய்தது உங்க எழுத்து தானே தவிர ஏழுமலையான் இல்லை.தெய்வம் மனுஷ்ய ரூபேண என சமஸ்கிருதம் சொல்லுது.வாலியும் விடுவதாக இல்லை.அதெல்லாம் சரி மொட்டை போட்டீங்க திருப்பதி போயிட்டு வந்தீங்க சமாராதனை முடிச்சாச்சோ?. அண்ணாவும் விடுவதாக இல்லை.இதென்னடா புதுசா ஏதோ சொல்றாரு.சமாராதனையா?. அட ஆமாய்யா!.. நீங்க ஸ்ரீரங்கத்து வைஷ்ணவராயிருந்துண்டு இது எப்படி தெரியாமப் போச்சு.?. அதாவது திருப்பதி போய் வேண்டுதலை நிறைவேத்திட்டு வந்தா மட்டும் போறாது.வந்த கையோட அஞ்சாறு பேருக்கு அன்னதானம் போடணும்.அதுக்கு பேரு தான் சமாராதனை.இதை செஞ்சாத் தான் அந்த சர்க்கிள் பூர்த்தியாகும்.வாலிக்கு பாடமெடுக்க சாஸ்திர சம்பிதாய சாக்கியங்களை நார் நாராக கிழித்துப் போடும் இவரா இப்படிப் பேசுகிறார்?. அப்படியொன்னு இருக்கா?. க்ளப் ஹவுஸில கூட்டத்தோடு கெடக்கிற நான் எங்க போய் இதெல்லாம் செய்ய.இப்ப உம்ம கூட ரூம்மேட்ஸ் இருப்பாங்கல்ல.அவங்களை ஏதாவது ஒரு ஓட்டலுக்கு கூட்டிட்டு போய் வயிறார சாப்பாடு போடுங்க. வாஞ்சையோடு முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டு நகர்ந்தார் அண்ணா.இதே அண்ணாவிடம் ஒரு நாள் சிக்கினார் வாலி.

மக்கள் திலகத்தின் கழுத்தில் குண்டு பாயக் காரணமான பெற்றால் தான் பிள்ளையா?. தயாரிப்பாளர் வாசு வாலியைப் பிடித்து மொத்தப் பாட்டும் வேண்டி எலியட்ஸ் பீச்சிலிருந்த ஒரு காட்டேஜில் கொண்டு போய் அடைத்தார்.கவிஞரே சகல வசதியும் இருக்கு எனக்கு பாட்டு ஹிட்டாகணும் என்றார் வாசு.இந்தக் கால காட்டேஜ் அல்ல.மீனவக் குப்பங்களைத் தாண்டி பல குடில்கள் சென்னை வரும் வெளிநாட்டு பயணிகளுக்காக ஆங்காங்கே அப்போது இருந்தது.அதிலொன்றில் தான் வாலி அடைபட்டுக் கிடந்தார்.ஒரு டூயட்டிற்காக எம்.ஜி.ஆரிடம் ஓகே வாங்க சத்யா வந்தார்.எப்போதும் நேராக மேக்கப் ரூம் செல்லும் அவர் அன்று தடுத்து நிறுத்தப்பட்டார்.உள்ளே அண்ணா பேசிக்கொண்டிருக்கிறார்.அவர் வரட்டும் என்றார்கள்.சரி தான் வெளியே வராந்தாவில் உட்கார்திருந்தவரை பீதாம்பரம் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆரிடம் சொல்ல உள்ளே கூப்பிடுங்க என ஆணை வர வாலி சார் வாங்க என்றார்கள்!.. உள்ளே சீரியஸாக அரசியல் ஓடிக்கொண்டிருந்தது.நமக்கெதுக்கு வம்பு என ஓரமாக நின்றார் வாலி.பேச்சு முடிந்து அண்ணா புறப்பட என்ன உங்காளுக்கு பாட்டா?. நானும் கொஞ்சம் கேட்கலாமா?. வாலி தயங்க சும்மா பாடிக் காட்டுங்க என்றார் எம்.ஜி.ஆர்.அவருக்குத் தெரியும் வாலி தனது வரிகளை ஏதாவது ராகம் போட்டுத் தான் பாடுவார்.அன்றும் அப்படித் தான் ஒரு ஃபோக் ஸ்டைலில் பல்லவியைப் பாடினார்.

சக்கரக்கட்டி பாப்பாத்தி உன்
மனசை வெச்சுக்கோ காப்பாத்தி என ராகம் ராகம் போட்டு பாடி வைக்க இருவரும் அதை ரசிக்க அப்ப நாளைக்கு கம்போஸிங் இருக்கு டியூன் போட்டு ஏத்திடலாமா?. தாராளமா பாட்டு நல்லாயிருக்கு எம்.ஜி.ஆர்.அனுமதி தர வாலி கிளம்ப எத்தனிக்க ஒரு நிமிஷம் அந்த பல்லவியை இன்னொரு தரம் பாடுங்க.மறுபடியும் அதே சக்கரக்கட்டி பாப்பாத்தி வந்து விழ அந்த பாப்பாத்தியை கொஞ்சம் மாத்த முடியுமா?. அண்ணா தனது விருப்பத்தை தெரிவித்தார்.என்னாச்சுங்க?. இயைபுத் தொடை சரியாத்தானே வருது.பாப்பாத்தி காப்பாத்தி.இந்தப் பேரு கிராமத்தில சர்வ சாதாரணமா யூஸ் பண்ணுவாங்க.ஹீரோயின் கிராமத்துப் பொண்ணு அதான் என வாலி இழுக்க அதெல்லாம் சரி தான் வாலி!.. தேவையில்லாமல் நாம யார் மீதும் கல்லெறிய வேணாமே. வாலிக்கு இப்போது தவறு புரிந்தது.சரிதாங்க பாப்பாத்தியை ராசாத்தின்னு மாத்திடுறேன்.இது நல்லாயிருக்கே அப்படியே செய்யுங்க என்றார் எம்.ஜி.ஆர்.அன்று அண்ணா அங்கு இல்லையென்றால் இந்த பாப்பாத்தி பட்டி தொட்டியெங்கும் பேசு பொருளாக மாறியிருக்கும்.

அதே கனிவோடு தான் அண்ணா அவரிடம் கடைசி வரை பழகினார்.கடைசியாக அவரது வரிகளை சிலாகித்த அண்ணா இன்னொரு சம்பவத்தில் அதை நிரூபித்தார்.கே.பி.யின் எதிர் நீச்சல் ப்ரிவியூ.அவருக்கு அண்ணாவை எப்படியாவது அழைத்து வந்து அபிப்ராயம் கேட்க ஆசை.அண்ணா உடல் நிலை சரியில்லாத நேரம்.அடுத்த வாரம் அமெரிக்கா பயணமாக ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார்.இப்போது அழைத்தால் நன்றாகவா இருக்கும்.மெல்ல நண்பர் அரங்கண்ணலிடம் கேட்க அதற்கென்ன அழைச்சிட்டாப்போச்சு என அசால்டாகச் சொன்னார்.இல்ல இந்த நேரத்தில போயி...அண்ணாவிற்கு சினிமான்னா உசிரு.கூப்பிட்டா உடனே வந்திடுவாரு நீங்க ஆக வேண்டியதை கவனிங்க நான் அழைச்சிட்டு வர்ரேண். மனிதர் சொன்னபடி கூட்டிக்கொண்டு வர கொஞ்சம் தளர்வாகக் காணப்பட்டாலும் சந்தோஷத்தோடு வந்தார்.படத்தை ஆர்வமாகப் பார்த்து விட்டு நல்ல மெஸ்ஸேஜ் சொல்லியிருக்கீங்க என வாயாரப் பாராட்டினார்.போகும்போது மறக்காமல் உங்க டைட்டில் சாங் எக்ஸலண்ட்.வாலிகிட்ட மறக்கா என் வாழ்த்தை சொல்லிடுங்க என்றார்.அது ஒரு அருமையான பாடல்.வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல்.முக்கியமாக டைட்டில் வரும்படி எனக்கொரு பாட்டு வேணும் என கே.பி.கேட்டதால் கடகடவென வாலி எழுதித் தந்த பாடலது.அதில் கடைசி சரணத்தில் வாலி இப்படி எழுதியிருப்பார்.வீட்டுக்கு வீடு ஓட்டுக்கள் வாங்கி பதவிக்கு வருவதும் எதிர் நீச்சல் என வரும்.ஒரு வேளை அண்ணாவை மனதில் வைத்து அந்த வரிகளை எழுதியிருக்கலாம்.அந்த வரிகள் அண்ணாவிற்கு பிடித்துப்போயிருக்கலாம்.அதன் பிறகு அவரை கண்ட அண்ணா என்ன எதிர் நீச்சல் கவிஞரே என அழைத்து பாராட்டினார்.மக்கள் திலகத்துடனான நெருக்கம் நாடே அறிந்தது.பிற்காலத்தில் கலைஞரிடமும் வாலிக்கு அதே நெருக்கம்.அதற்கு சற்றும் குறையாத அண்ணாவுடனான நெருக்கம் நிறைய பேருக்குத் தெரியாது.சொந்த சகோதரனைப் போன்ற தெளிந்த நீரோடையாக இருவருக்குமான நெருக்கம் இருந்ததை திரையுலகம் பதிவு செய்து 

No comments:

Post a Comment