ADOOR ,GOPALAKRISHNAN ,DIRECTOR /COMMENTATOR BORN 1942 JULY 3
அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan, பிறப்பு: ஜூலை 3, 1942) கேரளத்தை சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1972ஆம் ஆண்டில் சுயம்வரம் என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. உலக திரைப்பட விமர்சனப் பரிசினை, ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.
இவருடைய கலைப் பணிக்காக 2004ஆம் ஆண்டிற்கான தாதாசாஹெப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த விருதுகளான பத்மஸ்ரீ விருது 1983ஆம் ஆண்டிலும் பத்ம விபூசன் விருது 2006 இலும் இவருக்கு வழங்கப்பட்டன
அடூர் கோபாலகிருஷ்ணன்
ப. விமலா ராஜ் Share on
மலையாளத்தில் அக்பர் கக்கட்டில் எழுதிய ‘வரு அடூரிலேக்கு போகாம்’ என்னும் நூலின் தமிழாக்கம் இது. சில மாற்றுத் திரைப்படங்கள் குறித்த தன்னுடைய பார்வையையும், தான் இந்நூலை மொழிபெயர்த்த தற்கான காரணங்களையும் நூலின் முன்னுரையில் குளச்சல் மு.யூசுப் குறிப்பிட்டுள்ளார். “தமிழில் நான் பார்த்த சில மாற்றுத் திரைப்படங்கள் என்னுள் நிறைய சிந்தனைகளை உருவாக்கின. இதைப் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு, சுய தேவைகள் சார்ந்து உருவாக்கப்படும் சில கருத்தியல் போக்குகள் இடம் தரவில்லை. இதன் மாற்று வடிவமாகவும் குறும்படங்கள் பற்றிய விவாதங்களின் திசைவெளியைத் தீர்மானிக்க உதவும் பொருட்டும் அடூர் கோபால கிருஷ்ணனைப் பற்றி அக்பர் கக்கட்டில் எழுதிய இந் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்” (முன்னுரை, ப.12) என்கிறார் யூசுப்.
இந்நூலில் இந்தியத் திரையுலகின் முக்கிய இயக்கு நர்களில் ஒருவரான அடூர் கோபால கிருஷ்ணனின் இளமைக்கால வாழ்க்கை, அவரது குடும்ப உறுப்பினர்கள், அவர் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை, அவரது திரைப்பட அனுபவங்கள், அவருடைய சக கலைஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் குறித்த இயக்குநரின் கருத்துகள் ஆகியவற்றைத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். அடூரின் ஒன்பது மலையாளத் திரைப்படங்களைக் குறித்த நூலாசிரியரின் விமர்சனமும் அடூருடனான நேர்காணலும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
திரைப்படங்களாவன: சுயம்வரம் (1972), கொடியேற்றம் (1977), எலிப்பத்தாயம் (1981), முகாமுகம் (1984), அனந்தரம் (1987), மதிலுகள் (1989), விதேயன் (1993), கதாபுருஷன் (1995), நிழல்குத்து (2002). பிற்சேர்க்கையில், சுகுமார் அழிக்கோடு, மம்மூட்டி, எம்.ஏ.பேபி, எஸ்.பாசுரசந்திரன், ஜெ.தேவிகா ஆகியோரது கேள்வி களுக்குரிய அடூரின் பதில்களும், அடூரின் மகள் அஸ்வதியின் நேர்காணலும் இணைக்கப்பட்டுள்ளன.
1941இல் பிறந்த அடூர் கோபாலகிருஷ்ணன் தனது எட்டாவது வயதிலேயே நடிகராக அரங்கேறியவர். கதை, கவிதை எழுதுதல், நடிகர், நாடகாசிரியர், இயக்குநர் என்னும் பல நிலைகளில் படிக்கும் காலத்திலிருந்தே செயல்பட்டு வந்தவர். இவர் 23 குறும்படங்களையும், மலையாளத்தில் 6 திரைக்கதை நூல்களையும், ஆங்கிலத்தில் 3 திரைக்கதை நூல்களையும், மலையாளத்தில் ‘சினிமயுடெ லோகம்’, ‘சினிமா அனுபவம்’, ‘சினிமா, சாகித்யம், ஜீவிதம்’ ஆகிய திரைப்படம் சார்ந்த மூன்று நூல்களையும் எழுதியுள்ளார். 1982இல் பண்பாட்டுக் கலை பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டியூட் விருது இவருடைய ‘எலிப்பத்தாயம்’ என்ற திரைப்படத்திற்குக் கிடைத்தது. 1983இல் பத்மஸ்ரீ விருது, 1984இல் சிறந்த திரைப்பட நூலுக்கான தேசிய விருது, 2003இல் பிரெஞ்சு அரசாங்கம், கலைப்பண்பாட்டுத் துறையின் ‘கமான்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அன்ட் லெட்டர்ஸ்’ என்னும் விருது, 2004இல் தாதாசாகேப் பால்கே விருது, 2005இல் பத்ம விபூஷன் விருது, 2006இல் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் ஆகியவை கிடைத்துள்ளன.
அடூரின் ஒன்பது திரைப்படங்களில் இரண்டைத் (மதிலுகள், விதேயன்) தவிர பிற ஏழு திரைப்படங்களின் கதைக்கருக்களும் அடூருடையவையே. சமூகச் சட்டங்களுக்கெதிராக வாழ முற்பட்டவர்களைச் சமூகம் எவ்வாறு குற்றவாளிகளாகப் பார்க்கிறது என்பதையும் எந்த ஒரு மனிதனும் சமூகத்தை விட்டு விலகி நின்று விட முடியாது என்பதையும் மையமாக வைத்து உருவானதே ‘சுயம்வரம்’ ஆகும். உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதே ‘கொடியேற்றம்’ என்னும் திரைப்படம் ஆகும். பொறுப்பில்லாமல் நடந்த ஒரு மனிதன் குடும்ப வாழ்க்கைக்குள் நுழையும் போது அவனுக்குக் கிடைக்கும் வாழ்க்கை அனுபவங்களும், அவனிடம் ஏற்படும் மாற்றங்களுமே இதில் கூறப்பட்டுளன.
அடூரின் படங்களில் முதல் வண்ணப்படம் ‘எலிப்பத்தாயம்’ ஆகும். ஒரு தாயின் பிள்ளை களான 3 சகோதரிகளையும், ஒரு சகோதரனையும் கொண்ட குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டதே இப்படம். வாழ்க்கையில் தோல்வி ஏற்படும் போது மதுக்கோப்பைக்குள் சுயப் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளும் மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியதே ‘முகாமுகம்’ ஆகும். மனப்பிறழ்வு கொண்ட மனிதன், தான் எப்படி இந்நிலைக்கு ஆளானேன் என்பதைப் பிறரிடம் கூறுவதற்கு முயற்சி செய்வதே ‘அனந்தரம்’ ஆகும்.
வைக்கம் முகம்மது பஷீரின் ‘மதிலுகள்’ என்ற நாவலே அடூரின் ‘மதிலுகள்’ என்ற திரைப்படம் ஆகும். சிறைச்சாலையின் சுதந்திரமின்மைக் கூட, ஆழமான அன்புடையவர்களுக்குச் சுகமான அனுபவங்களாக மாறும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். சக்கரியாவின் ‘பாஸ்கர பட்டேலரும் எனது வாழ்க்கையும்’ என்ற கதையே அடூரின் ‘விதேயன்’ என்ற திரைப்படம் ஆகும். அதிகாரத்தின் கட்டமைப்பினைப் பற்றியும், அடிமைத்தனத்தைப் பற்றியும் கூறுவதே ‘விதேயன்’ ஆகும்.
அடூரின் 46 ஆண்டுகால சொந்த அனுபவங்கள், பிறரது அனுபவங்கள், அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றில் தன்னைப் பாதித்த நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கிய திரைப்படமே ‘கதாபுருஷன்’ ஆகும். கொலை செய்வதற்கு விதிக்கப்பட்ட அதாவது ஒரு தூக்குமரத் தொழிலாளியின் கதையைக் கூறுவதே ‘நிழல்குத்து’ ஆகும்.
நவீன காலத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஊடகமாகக் கருதப்படும் திரைப்படத்தை உருவாக்கும் ஒரு கலைஞன் மனித மனங்களை வாசித்து அறிந்து கொள்ளும் திறன் பெற்றவராகவும், தன்னையும், சமூகத்தையும் பற்றிய நல்ல புரிதல் உள்ளவராகவும், யதார்த்ததை வெளிப்படுத்தும் திறன் உடையவராகவும் இருத்தல் வேண்டும். இவரது திரைப்படங்கள் அனைத்துமே தனிமனிதன் மற்றும் சமூகத்தின் யதார்த்தங்களை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. ஒரு சிறந்த திரைப்பட இயக்குநர், கலைஞர் என்ற தகுதிக்கு அப்பால் இவர் ஒரு அன்பு நிரம்பிய மனிதர் என்பதை அக்பர் கக்கட்டில் வரிகளிலிருந்தும், முற்போக்குச் சிந்தனையாளராக மட்டுமல்லாமல், குடும்பத்தில் சிறந்த தந்தையாகவும் இருக்கிறார் என்பதை அவரது மகள் அஸ்வதியின் நேர்காணலிலிருந்தும் அறிய முடிகிறது.
கேரள நடிகை கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில், மலையாள சினிமாவின் மரியாதைக்குரிய இயக்குனரான அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகர் திலீப்பிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு, மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தற்போது போலீசாரின் விசாரணை பிடியில் இருக்கிறார்.
திலீப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக பல மலையாள சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், திலீப்பிற்கு ஆதரவாக ஒரு இயக்குனர் குரல் கொடுத்துள்ளார். கேரள சினிமாவின் பழம் பெரும் இயக்குனரும், மரியாதைக்குரிய இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன்தான் அவர்.
இந்த விவகாரம் பற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள அவர் “ திலீப்பை நான் சில ஆண்டுகளாகவே அறிவேன். எனக்கு தெரிந்து அவர் கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடும் அளவுக்கு மோசமானவரோ அல்லது திரைமறைவு தாதாவோ அல்ல. ஒருவர் மீது குற்றச்சாட்டு
எழுந்தால் அது தொடர்பான விசாரணையைத்தான் கவனிக்க வேண்டும். அவர் குற்றவாளி என நாமே முடிவு செய்யக்கூடாது. திலீப் விவகாரத்தில், விசாரணை துவங்கும் முன்னரே அவரை குற்றவாளி என ஊடகங்கள் தீர்ப்பளித்துவிட்டன். இது சரியல்ல” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.அடூர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் திலிப் மற்றும் காவ்யா மாதவன் இணைந்து நடித்த ‘பின்னேயும்’ படம் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் ஜெனரல் பிக்சர்ஸ் ரவி பற்றி எழுதியிருந்த அன்றைக்குத்தான் நான் அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் படத்தைப்பார்த்தேன். தொடர்ந்து வேகமாகச்செல்லும் படங்களைப் பார்த்து சலித்துப்போயிருந்ததனால் மெதுவாகப்போகும் இந்த கிளாஸிக் படம் என்னை மிகவும் கவர்ந்தது. பலகோணங்களில் தொடர்ந்து சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. stunning visuals கொண்ட பல படங்களைப் பார்த்திருக்கிறேன். இப்படிச் சாதாரணமாகப் போகும் ஒரு படத்தின் visuals என் கண்ணிலே தங்கியிருக்கும் என்று நினைக்கவில்லை.
முக்கியமான காரணம் என்னவென்றால் நானும் ஒரு எலிதான். எலிப்பத்தாய வாழ்க்கைதான். இது நவீன மனிதனுடைய நரகம் என்று தோன்றுகிறது. சார்த்ர் other தான் நரகம் என்றார். தப்பு. nothing happens என்பதுதான் உண்மையான நரகம்
நான் இதை ஏன் எழுதுகிறேன் என்றால் சமீபத்தில் ஒரு எழுத்தாளர் இதில் எலிப்பொறி ஒரு குறியீடு என்று ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுகிறது, அப்புறம் ஏன் இதோ குறியீடு என்று கூவவேண்டும் என்று எழுதியிருந்ததை வாசித்தேன்.
சிவகுமார் மாணிக்கம்
adoor-gopalakrishnan-says-he-makes-not-9987
அன்புள்ள சிவகுமார்,
உங்களுக்கு என்ன வயது என்று தெரியவில்லை. நான் சென்ற இருபத்தைந்தாண்டுகளாக சினிமாவில் வந்துகொண்டிருக்கும் மாற்றத்தைக் கண்கூடாகக் கண்டவன். சினிமா தொழில்நுட்பத்தை பெரிதும் சார்ந்த கலை. தொழில்நுட்பத்தில் நிகழ்ந்த பாய்ச்சல் சினிமாவின் அழகியலையே பெருமளவு மாற்றிவிட்டது.
முக்கியமான மாற்றம் என்பது ஏராளமாக சினிமா பார்க்கக்கிடைப்பதுதான். எண்பதுகளில் சினிமாவே குறைவு. நல்ல சினிமாவை காத்துக்கிடந்து ஃபிலிம் சொசைட்டிகளில் நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கவேண்டும். அதைப்பார்ப்பதற்கான மனநிலை முன்னரே உருவாகிவிட்டிருக்கும்
இன்று எங்கும் சினிமா கொட்டிக்கிடக்கிறது. ஆகவே எந்த சினிமா நம்ம அறைந்து இழுத்துக்கூப்பிடுகிறதோ, எதற்கு விளம்பரமும் ஓசையும் இருக்கிறதோ அதை நோக்கி நாம் ஈர்க்கப்படுகிறோம். அப்படிக் கவர்வதற்கு மிக எளிய வழி என்பது வன்முறை, பாலியல் சித்தரிப்பு மூலம் அதிர்ச்சியளிப்பது
சமீபத்தில் திருவனந்தபுரம் திரைவிழாவில் கிம் கி டுக்கிடம் ஒரு வினா. ‘கவன ஈர்ப்பு என்பதற்கு அப்பால் இந்தப்படங்கள் வழியாக நீங்கள் அடைவது என்ன?” அவரால் பதில் சொல்லமுடியவில்லை. திரைவிழாக்களில் வரும் படங்களிலேயே பாதிக்குமேல் மனப்பிறழ்வை சித்தரிக்கக்கூடியவை. அத்தகைய படங்கள் உடனடியான ஒரு தாக்கத்தை எளிய ரசிகர்களிடம் உருவாக்குகின்றன.
இந்த அலை உலகமெங்கும் நல்ல சினிமாவுக்கு எதிரான வலுவான சக்தியாக செயல்பட்டு வருகிறது என்கிறார்கள். எண்பதுகளில் ஆஸ்கார் விருதை அறிவுஜீவிகள் கவனிக்கும் வழக்கமே இருக்கவில்லை.கான், கார்லேவாரி, லண்டன் , வெனிஸ், டோக்யோ திரைவிழாக்களின் படங்களே பேசப்பட்டன. இன்று அவ்விழாக்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. பல திரைவிழாக்களே ஆடம்பரநிகழ்வுகளாக ஆகிவிட்டன
இந்நிலையில் திரைரசனையிலேயே பெரிய மாற்றம் வந்திருக்கிறது. கலைப்படம் – வணிகப்படம் என்னும் கோடு கண்ணுக்குத்தெரியாததாக ஆகிவிட்டிருக்கிறது. கலைப்படங்கள் என்பவையும் வணிகப்படங்களைப்போலவே வன்முறையையும் பாலியலையும் மிகைப்படுத்துபவையாக உள்ளன என்ற நிலையில் அவற்றைப்பார்க்க எந்த வகையான தனிமனநிலையும் தேவையில்லை என்றாகிவிட்டிருக்கிறது.
இப்படி ‘அடிக்கக்’ கூடிய படங்களை பார்த்துக்கொண்டிருப்பவர்கள்தான் இன்று சினிமா பற்றி அதிகம்பேசுகிறார்கள். உண்மையில் இவர்கள் வணிகசினிமாவுக்குமேல் படம் பார்க்கும் ரசனைத்தரம் கொண்டவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் கலைப்படங்களாக வருபவற்றிலும் கணிசமானவற்றை வன்முறைக்காகவும் பாலுணர்வுக்காகவும் பார்க்க்க முடியும் – சிறந்த உதாரணம் கிம் கி டுக் தான்
கலைப்படங்களைப் பார்ப்பதற்கான அழகியல் பயிற்சி இல்லாதவர்கள் அவற்றைப்பார்க்கையில் உருவாகும் மேலோட்டமான குறிப்புகளில் ஒன்றே நீங்கள் சொன்னது. அவற்றை இன்று பல இடங்களில் பார்க்கமுடிகிறது, சினிமாவுக்கான இதழ்களில்கூட
நீங்கள் எழுதியதை வாசித்தபின் இணையத்தில் தேடி தமிழில் எலிப்பத்தாயம் பற்றி எழுதப்பட்ட நல்ல விமர்சனம் ஒன்றை கண்டுபிடித்தேன். சரியான கோணத்தில் எழுதப்பட்ட விமர்சனம் அது.
எலிப்பத்தாயம் போன்ற படங்கள் எழுபது எண்பதுகளின் கலைப்பட அலையைச் சேர்ந்தவை.அவற்றின் அழகியல் சில குறிப்பிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டது.
1. நிலக்காட்சி அல்லது கதாபாத்திரங்களை முன்னிறுத்தி அவற்றின் நுட்பமான மாறுதல்கள் வழியாகவே தொடர்புறுத்தக்கூடியவை அவை. தர்கோஸ்வ்ஸ்கியின் சாக்ரிஃபைஸ் நிலக்காட்சியின் நுட்பமான சித்தரிப்பை முதன்மையாக காட்டுகிறது.
அடூர் முகங்களை முதன்மையாக கருதும் திரைக்கலைஞர். சூழல் எல்லாம் அவருக்கு இரண்டாம்பட்சம்தான். அடூரின் எலிப்பத்தாயம் அந்தக் கதாபாத்திரங்களின் தோற்றங்களையே அடிப்படைச் சித்தரிப்பாகக் கொண்டது. மெதுவாக அவர்களின் முகங்களில், தோற்றத்தில் உருவாகும் மாற்றமே அந்தப்படம் காட்டவிரும்புவது. படம் தொடங்கி முடியும்போது மூன்று மையக்கதாபாத்திரங்களும் மாறுவது தெரியாமலேயே மாறியிருக்கிறார்கள். அதுதான் அவர் உணர்த்தவிரும்புவது.
2. உண்மையான வாழ்க்கைச்சூழலில் உள்ள நிதானமான நகர்வை திரையில் கொண்டுவர முயல்பவை இத்தகைய படங்கள். ஆகவே வணிகசினிமாவுக்கான வேகமான படத்தொகுப்பு இருக்காது. வெவ்வேறு கோணங்களில் இயல்பான நிகழ்வுகளை சாதாரணமாகக் காட்டிக்கொண்டிருக்கும். அதனூடாக பார்வையாளனே படத்துக்குள் இருந்துகொண்டிருப்பதுபோன்ற உணர்வை உருவாக்க முனையும். அடூர் திரைப்படத்தில் எது ‘தெரிந்தாலும்’ அது கலை அல்ல என்று நம்புபவர்.
3. வாழ்க்கையின் நுட்பமான சில இக்கட்டுகளை, கேள்விகளை வாசகனே சென்று தொடும்வண்ணம் குறைவாகச் சொல்லி நின்றுவிடும் தன்மை கொண்டவை. அடூரின் படங்களில் வாசகன் செல்லவேண்டிய திசை நோக்கிய சில குறிப்புகளை மட்டுமே காட்சிகள் உணர்த்துகின்றன.
இந்த அழகியலுக்கு நாம் கொஞ்சம் நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ளாவிட்டால் இப்படங்களைப் பார்க்கமுடியாது. பிரக்ஞபூர்வமாக அதை பயிலவேண்டியதுதான். ஆரம்பக்காட்சிகளில் எலிப்பத்தாயத்தின் இரு பெண்களின் முகங்களிலும் உள்ள கனிவை கவனிக்காதவர்கள் அவை மெல்லமெல்ல மாறுவதை உணரமுடியாது. எலிப்பத்தாயத்தை ரசிக்கவும் முடியாது.
இத்தகைய படங்கள் இலக்கியத்திற்கு மிக அண்மையாக இருந்தன. அதை ஒரு நாவல் படித்த அனுபவம் என்று ராஜரத்தினம் சொல்கிறார் . ஒரு வாழ்க்கைக்குள் சென்றுகொண்டே இருப்பதாகத் தோன்றுவது அது. ஆகவே இலக்கியங்களை ரசிப்பதற்கு அவசியமான சில அடிப்படை ரசனைப்பயிற்சி இத்தகைய படங்களை ரசிப்பதற்கும் தேவை. அது இல்லையேல் பொத்தாம்பொதுவான சில மதிப்பீடுகளே உருவாகும்.
அதில் ஒன்றே நீங்கள் சொல்லும் எழுத்தாளரின் கருத்து. இந்தப்படத்தில் எலிப்பொறி குறியீடு அல்ல. குறியீடுகள் என்பது ஒரு சித்தரிப்பின் அடிப்படை நெசவின் பகுதியாக இருக்கக்கூடிய உருவகங்கள். அவை புடைத்துத் தெரியலாகாது. அவற்றை பார்வையாளன் தன் இயல்புக்கு ஏற்ப அடையாளம் கண்டு பொருள்கொள்ளலாம். மிகச்சிறந்த உதாரணம் பாதேர்பாஞ்சாலியில் அப்புவும் துர்க்காவும் பார்க்கும் ரயில். [குறியீடுகளை விமர்சகன் விளக்கக் கூடாது.]
எலிப்பொறியை ஏன் குறியீடு என இவர் சொல்கிறார் என்றால் ஒரு படைப்பில் வரும் அர்த்தமேற்றப்பட்ட பொருள் எல்லாமே குறியீடு என்று வணிகசினிமாவை அடிப்படையாகக் கொண்டு புரிந்துகொண்டிருப்பதனால்தான்
எலிப்பொறியை இப்படத்தில் எவரும் கண்டுபிடிக்கவேண்டியதில்லை, எலிப்பத்தாயம் தன் தலைப்பிலேயே அதைச் சுட்டிக்காட்டிவிட்டது. முதல் ஷாட்டே எலி கடித்துவிட்டது என்பதுதான். அதன்பின் எலிப்பொறியை எடுத்து தூசி தட்டி எலியைப்பிடிப்பது என படம் நீள்கிறது. அதாவது அதை ஒரு கவியுருவகமாகவே [மெட்டஃபர்] இயக்குநர் முன்வைக்கிறார்.
சினிமா, நாடகம், நாவல் போன்றவற்றில் கவியுருவகத்திற்கு பெரிய இடம் உண்டு. [உதாரணம் நாற்காலிக்காரர் நாடகத்தில் நாற்காலி, புளியமரத்தின் கதையில் புளியமரம் ஜோஸ் சரமாகோவின் Blindness நாவலின் பார்வையின்மை] பெரும்பாலும் ஆசிரியரே அது ஏதோ ஒன்றின் உருவகம் என சொல்லிவிடுகிறார். அதன் பின் அந்த உருவகத்தை வாசகன், பார்வையாளன் தன் கற்பனையைக்கொண்டு விரிவாக்கம் செய்வதற்கான அனைத்து குறிப்புகளையும் அளித்து உரிய இடைவெளிகளையும் உருவாக்கிக்கொண்டு முன்செல்கிறார்.
1
எலிப்பொறி எதைச்சுட்டுகிறது என அறிந்ததும் அது முடியவில்லை, அங்கேதான் படமே ஆரம்பிக்கிறது.எலிப்பொறியை நோக்கும் பெண்களின் கண்களில் உள்ள பாவனை முக்கியமானது. அந்த எலியை அவர்கள் ரசிக்கிறார்கள். எலியையே மெல்லிய கேலியுடன் பார்க்கிறார்கள். அதை பல கோணங்களில் மென்மையாகச் சுட்டிச்செல்கிறார் அடூர்
மெல்ல அந்த மனநிலை மாறுகிறது. பொறிக்குள் சிக்கிய எலியின் பதைப்பு நிறைந்த கண் தெரியும் ஒரு காட்சி பெரிதும் பாராட்டப்பட்ட ஒன்று. படம் விரிய விரிய எலிப்பொறி என்ற உருவகம் பல கோணங்களில் விரிக்கப்படுகிறது.
எலிப்பொறியில் சிக்கியிருப்பது யார்? அந்தப்பெண்களா?அவர்களை அண்டிவாழும் சகோதரனா? அந்த வீடுதான் எலிப்பொறியா? அந்தக்காலகட்டமா? பண்பாடா? அவர்கள் வாழும் காலமா? எல்லாகோணங்களிலும் படம் காட்சிகளை முன்வைத்துக்கொண்டு செல்கிறது. ஆகவேதான் அது முதன்மையான கலைப்படைப்பாக இன்றும் கருதப்படுகிறது.அதை இன்று ரசிக்க சமகால பொதுரசனையை விட சற்று மேம்பட்ட பயிற்சி தேவை, அவ்வளவுதான்.
நன்றி சிவக்குமார். இணையத்தில் இந்தப்பிரதி அழகாகவும் புதியதாகவும் உள்ளது. அக்காலத்தைய படங்கள் இத்தனை துல்லியமாகக் கிடைப்பதில்லை. பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் விருது கிடைத்த ஒரே காரணத்தால்தான் பிரதி இத்தனை பாதுகாப்பாக இருந்திருக்கிறது.
எழுபது எண்பதுகளில் நாங்கள் விழுந்து விழுந்து பார்த்த ருமேனிய, ஹங்கேரிய, இத்தாலியப் படங்கள் இன்று எவராலாவது பார்க்கப்படுகின்றவா? ஃப்ரான்ஸிஸ்கோ ரோஸி மைக்கலாஞ்சலோ அண்டோனியோனி எல்லாம் காதில் விழுந்தே நெடுநாட்களாகின்றன
ஜெ
‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தின் பேரால் நடத்தப்படும் கும்பல் கொலைகளைக் கண்டித்து அண்மையில் 49 திரைக்கலைஞர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தனர். இவர்களுக்கு எதிராக நடிகை கங்கனா ரனாவத், இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட 61 பேர் சேர்ந்து நாட்டில் நடக்கும் கும்பல் கொலைகளை பெரிதுபடுத்தி, நாட்டின் மானத்தை வாங்குவதாக பதில் கடிதம் எழுதினர். பிரதமர் அலுவலகம் செய்ய வேண்டிய வேலையை ‘பிரபல’ ட்ரோல்களாக முன்நின்று செய்தனர்.
இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன்.
பீகார் உயர்நீதிமன்றத்தில் மேற்கண்ட பிரபலங்களை சாட்சியாக வைத்து, கும்பல் வன்முறைகளை தடுத்து நிறுத்தக்கோரிய படைப்பாளர்கள் மீது வழக்கு ஒன்றும்கூட தொடுக்கப்பட்டுள்ளது. காவி கும்பல் வன்முறைக்கு எதிரான கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான கேரளத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கும் காவி கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது.
கேரள பாஜகவைச் சேர்ந்த பி. கோபாலகிருஷ்ணன் தன்னுடைய முகநூல் பதிவில், “அடூர் கோபாலகிருஷ்ணனால் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால், அவர் தனது பெயரை மாற்றிக்கொண்டு, வேறொரு கிரகத்துக்குச் சென்று விடலாம்” என எழுதியிருந்தார்.
மேலும் அந்தப் பதிவில், “கிருஷ்ணனும் ராமனும் ஒன்றுதான். இது ராமாயண மாதம் (கேரள இல்லங்களில் ராமாயணம் படிக்கப்படும்). ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கம் இந்தியாவிலும் அண்டை மாநிலங்களிலும் ஒலிக்கும். இவற்றை இவர் கேட்க விரும்பாவிட்டால், அவர் ஸ்ரீஹரிகோட்டாவில் பதிவு செய்துகொண்டு, நிலவுக்குச் செல்லலாம்” எனவும் எழுதியுள்ளார்.
“மக்கள் பாஜகவுக்கு ஓட்டுப்போட்டது ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கத்தான். நாங்கள் மீண்டும் இந்த முழக்கத்தை எழுப்புவோம், அடூரின் வீட்டின் முன்புகூட ’ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடுவோம்” எனவும் மிரட்டுகிறார்.
இதற்கு , “பாகிஸ்தான் இப்போது நிரம்பிவிட்டதால், பாஜகவைச் சேர்ந்தவர் என்னை நிலவுக்குப் போகச் சொல்கிறார்” என பதிலளித்துள்ளார் அடூர்.
“பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவாரங்கள், விமர்சகர்களையும் நரேந்திர மோடி அரசை கேள்வி கேட்பவர்களையும் பாகிஸ்தானுக்குப் போ என்றுதான் சொல்வார்கள். ஆனால், இப்போது பாகிஸ்தான் நிரம்பி வழிகிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன்.
“சந்திராயன் – 3 திட்டமிருந்து, எனக்கு பயணிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால், மகிழ்ச்சியாக நான் அதை ஏற்றுக்கொண்டு, நிலவைச் சுற்றிவருவேன்” என்கிற அவர், பாஜக தலைவர் கோபாலகிருஷ்ணன் கும்பல் வன்முறைகளை நியாயப்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தங்கள் கடிதம் எழுதியது சரிதான் என்பதை இவரின் செயல் சுட்டிக்காட்டிவிட்டதாகவும் அவர் மனோரமா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“ராமனின் பெயர் முழக்கமாகி வருவதை எதிர்த்து நாங்கள் கடிதம் எழுதினோம். மத சிறுபான்மையினரை அற்பமான விசயங்களுக்காக தாக்குவதும் அவர்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிடச் சொல்வதும் இப்போது ஒரு வாடிக்கையாகிவிட்டது. கும்பலாக சேர்ந்து இத்தகைய குற்றங்களைச் செய்தால் தங்களை அடையாளம் காண முடியாது என தாக்குபவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இத்தகைய குற்றங்களைச் செய்கிறவர்கள், மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டியவர்கள்” எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“பாஜக தலைவர் கடவுள் ராமனை நான் அவமதித்துவிட்டதாகச் சொல்கிறார். வக்கிரமான எண்ணம் கொண்டவரால் மட்டுமே அப்படி சொல்ல முடியும். எங்களில் எவரும் தனிப்பட்ட நபரை விமர்சிக்கவில்லை. அரசுக்கு எதிராகவும் பேசவில்லை. எங்களை எதிரியாகப் பார்க்க வேண்டியதும் இல்லை.
.
ஆனால், அனைவருக்கும் இங்கே வாழ உரிமை உள்ளது. இதை மீறுவது தவறானது. இதைத் தடுக்க அரசு தவறினால், சமூகத்தில் அமைதியின்மை ஏற்படும். அதற்கான மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்” எனவும் அடூர் தெரிவித்துள்ளார்.
விமர்சிக்கவே கூடாது; குறைந்தபட்சமாக கருத்துக்கூட சொல்லக் கூடாது என்பதுதான் பாசிசம். காவிகள் நாட்டை மிக வேகமாக பாசிசமயமாக்கி வருகிறார்கள் என்பதை உணர்த்துகின்றன சமீபத்திய நிகழ்வுகள்.
வினவு செய்திப் பிரிவு
No comments:
Post a Comment