SHADOW KILL - NILAL KUTHU -TAMIL MOVIE 2002 DIRECTED ADOOR GOPALAKRISHNAN
SHADOW KILL - NILAL KUTHU -TAMIL MOVIE 2002 DIRECTED ADOOR GOPALAKRISHNAN அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘நிழல்குத்து’ அடூர் இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மதிக்கப்படுவதற்கான காரணம் இந்த ‘நிழல்குத்து’ படத்தை மட்டும் பார்த்தால்கூடப் புரியும் எஸ்.சுரேஷ் |ு“குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யுமாறு மகாராஜா ஆணையிடுவார். அந்த ஆணை, குற்றவாளி தூக்கிலிடப்படும் தினத்தன்று பிறப்பிக்கப்படும். ஆணைப்பத்திரம் அதிகாரிகள் கையில் கிடைக்கும் முன் குற்றவாளி தூக்கிலிடப்பட்டிருப்பான். அவன் உயிர் அந்த பத்திரம் வரும் முன் உடலை விட்டுப் பிரிந்திருக்கும்.” “எதற்காக அப்படிச் செய்கிறார்கள்?” “ஒரு வேளை தூக்கில் இடப்படுபவன் நிரபராதியாக இருந்தால் அவனைக் கொன்ற பாவம் மகாராஜாவைச் சேரும் அல்லவா? இப்படி ஒரு ஆணையைப் பிறப்பித்தால் அந்த குற்றம் மகாராஜாவைச் சேராது. அதனால்தான் இந்த ஏற்பாடு.” “அப்படியென்றால் நிரபராதியைக் கொன்ற குற்றம் யாரைச் சேரும்?” அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘நிழல்குத்து’ என்னும் படத்தின் பிரதான கேள்வி இதுதான். 1940-களில் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் இந்த விச...