Posts

Showing posts with the label NORTH INDIA

BUDDHA POORNIMA 2020 CELEBRATED NORTH INDIA

Image
புத்த பூர்ணிமா 2020: புத்தர் அவதரித்த தினம் வட இந்தியாவில் கோலாகலம் - சிறப்பு வழிபாடு புத்த பூர்ணிமா திருநாள் இன்று இந்தியா மட்டுமின்றி நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பீகார் மாநிலம் புத்தகயாவிலும், உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள சாரநாத்திலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் வெளிநாடுகளில் இருந்து வந்த ஏராளமான பௌத்த மதத்தினரும் பங்கேற்றனர். கபிலவஸ்து என்ற நாட்டில் மன்னனின் மகனான லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். சித்தார்த்தர் பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும். புத்தர் பிறந்த போது அவரது வளமான எதிர்காலத்தை சுட்டிக்காட்டும் விதமாக அவரது உடலில் முப்பத்திரண்டு புனிதமான பிறவி அடையாளங்கள் இருந்தன. ஒரே மகன் என்பதால் உலகத் துன்பங்கள், கவலைகள் என எதுவும் தெரியாதவராக வளர்க்கப்பட்டார். தந்தையான அரசர் சுத்தோதனர், சித்தார்த்தர் அவர்களுக்குப் பதினாறு வயதிருக்கும் போது, யசோதரா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார். அவர்கள் இருவருக்கும் ராகுலா என்றொரு மகனும் பிறந்தான். அவர் வாழ்ந்து வந்த ஆடம்பர, அரச வாழ்வின் மீது பற்றற்றவராக இருந்தார், சித்தார...