BUDDHA POORNIMA 2020 CELEBRATED NORTH INDIA






புத்த பூர்ணிமா 2020: புத்தர் அவதரித்த தினம் வட இந்தியாவில் கோலாகலம் - சிறப்பு வழிபாடு

புத்த பூர்ணிமா திருநாள் இன்று இந்தியா மட்டுமின்றி நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பீகார் மாநிலம் புத்தகயாவிலும், உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள சாரநாத்திலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் வெளிநாடுகளில் இருந்து வந்த ஏராளமான பௌத்த மதத்தினரும் பங்கேற்றனர்.

கபிலவஸ்து என்ற நாட்டில் மன்னனின் மகனான லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். சித்தார்த்தர் பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும். புத்தர் பிறந்த போது அவரது வளமான எதிர்காலத்தை சுட்டிக்காட்டும் விதமாக அவரது உடலில் முப்பத்திரண்டு புனிதமான பிறவி அடையாளங்கள் இருந்தன.


ஒரே மகன் என்பதால் உலகத் துன்பங்கள், கவலைகள் என எதுவும் தெரியாதவராக வளர்க்கப்பட்டார்.

தந்தையான அரசர் சுத்தோதனர், சித்தார்த்தர் அவர்களுக்குப் பதினாறு வயதிருக்கும் போது, யசோதரா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார். அவர்கள் இருவருக்கும் ராகுலா என்றொரு மகனும் பிறந்தான். அவர் வாழ்ந்து வந்த ஆடம்பர, அரச வாழ்வின் மீது பற்றற்றவராக இருந்தார், சித்தார்த்தர்.

நீர் நிலைகளை அசுத்தம் செய்தால் சாபம் கிடைக்கும் தெரியுமா - வைகாசி விசாகம் புராண கதை

அரண்மனையை விட்டு வெளியே சென்றார். தனது 29 வது வயதில் வெளி உலகைக் காண கிளம்பியவர் துன்பம் நிறைந்த உலக மக்களின் வாழ்க்கையைக் கண்டு அதிர்ந்து, துன்பங்களுக்கு காரணம் தேடி அலைந்தார்.

ஆசைக்குக் காரணம் துன்பம் என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், நல்ல நம்பிக்கை, நல்லெண்ணம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை,நன்முயற்சி, நற்சாட்சி, நல்ல தியானம் போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர்.

கயா என்னும் காட்டுப்பகுதியில் போதி மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டுகள் தவம் செய்த சித்தார்த்தன், முடிவில் தனது பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞான ஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தார். அது முதல் அவர் கௌதம புத்தர் என அழைக்கப்பட்டார்.

"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.

புத்தர் தன் இறுதி காலம்வரை பல இடங்களுக்கு பயணம் சென்று தான் கண்டுகொண்ட உண்மையை பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்தார். இறுதியில் கி.மு. 483 ல் தனது 80 வது வயதில் தனது பிறந்த நாளும், தான் ஞானத்தை அடைந்த நாளுமான அதே வைசாகா அன்று புத்தர் இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER