Tuesday, 19 May 2020

BILLA ,RANGA MURDER CASE - RAPED ACCUSED HANGED 1982 JANUARY 31



BILLA ,RANGA MURDER CASE - 
RAPED ACCUSED HANGED 1982 JANUARY 31




யார் இந்த பில்லா, ரங்கா? இவர்கள் தூக்கில் போடப்பட்டது எப்படி?
1982ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியன்று திஹார் ஜெயிலில் இருந்த இரண்டு கொலைகாரர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. காலை ஐந்து மணிக்கு இருவரும் எழுந்த்தும், அவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது.மாஜிஸ்ட்ரேட்டின் முன்னிலையில் எதாவது பதிவு செய்ய விரும்புகிறார்களா என்று இறுதியாக அவர்களிடம் கேட்கப்பட்டது. தேவையில்லை என்று இருவரும் மறுத்துவிட, தண்டனை வழங்குவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்னதாக தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

'பிளேக் வாரண்ட் கன்ஃபெசன்ஸ் ஆஃப் திஹாட் ஜேலர்' என்ற புத்தகத்தை எழுதிய சுனில் குப்தா சொல்கிறார், "ரங்கா மிகவும் ஜாலியான பேர்வழி. ஐந்தடி பத்து அங்குலம் உயரம் கொண்டவர். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். மரண தண்டனை நிறைவேற்றப்படுவது பற்றியும் அவனுக்கு கவலையில்லை. ஒரு பாலிவுட் திரைப்படத்தின் பிரபல வசனம் ரங்கா குஷ் (ரங்கா மகிழ்ச்சியாக இருக்கிறான்) தன்னுடையது என்று அவன் சொன்னான்.
பில்லா டாக்ஸி ஓட்டுநர். சுமார் ஐந்தரை அடி உயரம் இருந்த அவர், எப்போதும், சீரியஸாகவே இருப்பார். ரங்காதான் என்னை மாட்டிவிட்டார் என்று சொல்லி, அழுதுகொண்டே இருப்பார். ஆனால், ரங்காவோ, பில்லாதான் தனக்கு தூக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துவிட்டான் என்று சொல்வார். இப்படி இருவருக்கும் இடையில் எப்போதும் மோதல் இருந்துக் கொண்டே இருக்கும்.

சிறையில் பேட்மிண்டனும், கால்பந்தும் விளையாடுவார்கள்
"சிறை நடைமுறைகளை பொறுத்தவரையில், தூக்குதண்டனை கைதிகளின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரிக்கும் வரை, அவர்களும் பிற கைதிகளை போன்றவர்கள் தான். அதன்பிறகு தான் அவர்கள் கொடும்சிறைக்கு அனுப்பப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள்.

"அந்த சிறைக்கு நான் சென்றபோது, இருவரின் கருணைமனுவும் பரிசீலனையில் இருந்தது. எனவே சாதாரணக் கைதிகளைப் போலவே இருவரும் பேட்மிண்டன் மற்றும் கால்பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள்."

மிகவும் கொடூர குற்றவாளிகள்

சரி, இவர்கள் செய்த குற்றம் என்ன? இவ்வளவு பீடிகை ஏன் என்று தோன்றுகிறதா? அவர்கள் செய்த மாபாதக செயலுக்கு எப்போது தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என்று நாடே காத்துக் கொண்டிருந்தது.

"பிளாக் வாரண்ட்" புத்தகத்தின் சக எழுத்தாளரும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் அரசியல் செய்தித் தொடர்பாளருமான சுனேத்ரா செளத்ரி இதுபற்றி கூறுகிறார்." இந்த தலைமுறை செய்தியாளர்களிடையே மிகவும் கொடுமையான குற்றம் என்பது நிர்பயா கொடுமை. அந்த காலகட்டத்தில் மிகவும் கொடுமையான குற்றவாளிகள் என்றால் பில்லாவும் ரங்காவும் தான் என்று சொன்னால், ஓரளவு நிலைமை புரியும் என்று நினைக்கிறேன்".


"1978இல், டெல்லியில் 16 வயது கீதா சோப்ரா என்று பெண்ணும், அவரது 14 வயது தம்பி சஞ்சய் சோப்ராவும் ஒரு காரில் லிஃப்ட் வாங்கிக் கொண்டு, ஆகாஷவாணிக்கு சென்றார்கள். அங்கு யுவவாணி என்ற நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துக் கொள்ள வேண்டியிருந்தது. பாம்பேவில் இருந்து டெல்லி வந்த இரு ரவுடிகளின் காரில் அவர்களுக்கு லிஃப்ட் கிடைத்தது துரதிருஷ்டம் என்றே சொல்லலாம். சிறிய அளவில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட திருடர்கள் இருவரும், யாரையாவது கடத்தி, குடும்பத்திடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டிருந்தனர். இந்த சிறார்களை கடத்தினால், பெற்றோரிடம் இருந்து பணம் பறிக்கலாம் என்று தான் முதலில் நினைத்தார்கள். ஆனால், இளம் பெண்ணை பார்த்ததும், அவர்கள் மனது மாறிவிட்டது".

ஆகாஷவாணியில் நிகழ்சி நடத்த சென்ற இளம் கலைஞர்கள்
சிறுமி கீதா சோப்ராவை பலாத்காரம் செய்து, அவரையும், சகோதரனையும் கொடூரமாக கொலை செய்த வழக்கு, இந்தியா முழுவதையும் அதிரச் செய்தது.
இந்தியா டுடே பத்திரிகையில் 1978, செப்டம்பர் 30ஆம் தேதி இதழில் திலீப் பாப் இவ்வாறு எழுதினார்: "கீதா மற்றும் சஞ்சய் சோப்ரா இருவரும் தெளலகான் ராணுவ குடியிருப்புப் பகுதியில் இருந்து சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு கிளம்பியதாக அவர்களின் தந்தை கேப்டன் எம்.எம்.சோப்ரா தெரிவித்தார். கீதா, ஜீசஸ் அண்ட் மேரீஸ் கல்லூரியில் இளங்கலை வணிக பட்டப்படிப்பு, இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி. மாலையில், வானொலியில் யுவவாணி பிரிவில், 'இன் த க்ரூவ்' நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியிருந்தது".

"ஐந்து அடி, பத்து அங்குல உயரம் இருந்த சஞ்சய், பத்தாம் வகுப்பு மாணவன். வானம் இருண்டு கிடந்தது. காலையில் இருந்தே மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகு, வானொலி நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்வதாக தந்தை சொல்லியிருந்தார்".

அவர் கூறியபடி, இரவு ஒன்பது மணிக்கு வானொலி நிலைய வாயிலுக்கு சென்றபோது, குழந்தைகள் அங்கு இல்லை. அவர் உள்ளே சென்று விசாரித்தபோது, கீதாவோ, சஞ்சயோ அங்கு வரவில்லை என்ற தகவல் தெரிந்தது.காணமல் போன இருவரையும் தேடுவதற்காக பல மாநில போலீசாரும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டனர்.

பகவான் தாஸ் என்பவர் போலீசாரிடம் சொன்ன தகவல் கவனிக்கத்தக்கதாக இருந்தது. மாலை சுமார் ஆறரை மணியளவில் லோஹியா மருத்துவமனைக்கு அருகில் மிகுந்த வேகத்தில் ஒரு பியட் கார், தனது ஸ்கூட்டரை கடந்துச் சென்றதை பார்த்ததாக அவர் தெரிவித்தார். அதில் இருந்து ஒரு பெண்ணின் கூச்சல் கேட்டது. ஸ்கூட்டரை வேகமாக ஓட்டிச் சென்று அருகில் நெருங்கியபோது, முன்புற இருக்கையில் இரண்டு பேரும், பின்புற இருக்கையில் ஒரு இளைஞனும், இளைஞியும் இருந்ததைப் பார்த்ததாக அவர் சொன்னார்.

சிக்னல் அருகில் காரின் வேகம் குறைந்தபோது, "ஏய், என்ன நடக்குது?" என்று தான் சப்தமிட்டதாக தெரிவித்தார் பகவான்தாஸ். அப்போது, காரில் இருந்த இளைஞன், காரின் கண்ணாடியை பார்த்து திரும்பி, தனது ரத்தம் தோய்ந்த டீ-ஷர்டை சுட்டிக்காட்டினான். அந்த இளைஞன், பின்புறமிருந்து, வண்டியை ஓட்டியவனின் தலைமுடியை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்" என்று அவர் தெரிவித்தார்.

"டிரைவர் ஒரு கையால் வண்டியை ஓட்டியபடி, மற்றொரு கையால், அந்த பெண்ணை தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தார். மந்திர் மார்க் மற்றும் பார்க் ஸ்ட்ரீட் சாலைகள் இணையும் இடத்தில், கார் மீண்டும் வேகம் பிடித்தது. பிறகு சிக்னலில் நிற்காமல் சென்றுவிட்டது. அந்த இளைஞனின் முகத்தை பார்த்தால் வெளிநாட்டவரைப் போல் இருந்தது. மஸ்டர்ட் நிற காரின் பதிவெண் எச்.ஆர்.கே.8930" என்று பகவான் தாஸ் தெரிவித்திருந்தார்.

சஞ்சயை கொன்ற பிறகு கீதா பலாத்காரம்
ரங்காவும், பில்லாவும் புத்தா கார்டன் பகுதிக்கு காரை ஓட்டிச் சென்றார்கள். டெல்லியில் ரிட்ஜ் பகுதி என்பது மிகவும் வெறிச்சோடிய பகுதி. அங்கு காரை நிறுத்திவிட்டு, முதலில் சஞ்சயை கொலை செய்தார்கள். பிறகு கீதாவை பலாத்காரம் செய்தார்கள்.

ரங்கா பின்னர் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில், "நான் அந்த பெண்ணை, அவளுடைய தம்பியின் உடல் கிடந்த பக்கமாக அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். நான் அவளுடைய வலது பக்கமாக நடந்து கொண்டிருந்தேன். பில்லா எனக்கு சமிக்ஞை காட்டியதும், நான் சற்று முன்னே நகர்ந்துவிட்டேன். அவன் அந்த பெண்ணின் கழுத்தில் வாளால் வெட்டினான். அந்தப் பெண் இறந்துவிட்டாள். உடலை தூக்கி அருகில் இருந்த புதரில் வீசினோம்" என்று தெரிவித்தான்.

சோப்ரா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வீட்டிற்கு சென்ற மொரார்ஜி தேசாய்
சம்பவம் குறித்த செய்தி பரவியதும் மக்களின் கோபம் வெடித்தது. ஜீசஸ் அண்ட் மேரி கல்லூரி மாணவிகள் போட் கிளப்பில் பேரணி நடத்தினர். அப்போதைய வெளியுறவு அமைச்சர் அங்கு வந்தபோது, மாணவர்கள் கல் வீசத் தொடங்கினர்.

அதில் ஒரு கல் வாஜ்பாயின் தலையில் பட்டு, அவரது தலையில் இருந்து இரத்தம் வர ஆரம்பித்தது. "அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் தனது இரங்கலைத் தெரிவிக்க, பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்குச் சென்றது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஒரு குற்றத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க பிரதமரே நேரில் செல்வது அரிதான நிகழ்வு" என்கிறார் சுனில் குப்தா.

கீதா சோப்ராவின் உடலில் ஐந்து காயங்கள் இருந்தன பிரேதப் பரிசோதனை அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிந்தது. சஞ்சயின் உடலில் மொத்தம் 21 காயங்கள் இருந்தன. கீதாவின் பேன்ட் பாக்கெட்டில் அவளது அடையாள அட்டை பாதுகாப்பாக இருந்தது. அவர்களிடமிருந்து ஒரு பணப்பையும் மீட்கப்பட்டது, அதில் 17 ரூபாய் இருந்தது.

கல்கா மெயில் ரயிலில் டெல்லி வரும் போது பிடிபட்ட குற்றவாளிகள்
இந்த சம்பவத்திற்குப் பிறகு பில்லாவும் ரங்காவும் டெல்லியில் இருந்து மும்பை தப்பிச் சென்று, பிறகு அங்கிருந்து ஆக்ராவுக்கு தப்பிச் சென்றனர்.

ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு வரும்போது, தற்செயலாக கால்கா மெயிலில் ராணுவத்தினர் இருந்த பெட்டியில் அவர்கள் ஏறியபோது, அவர்கள் இருவரும் பிடிபட்டனர். பிறகு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

சுனேத்ரா சவுத்ரி கூறுகிறார், "குற்றச் செயலை செய்த பிறகு, பயம் ஏற்பட்டதால், வேறு நகரங்களை நோக்கி ஓடத் தொடங்கினார்கள். அவர்கள் ஏறிய ரயிலில் ராணுவ வீரர்கள் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சண்டை ஏற்பட்டபோது, அவர்கள் அடையாள அட்டை கேட்டார்கள். அப்போது, பில்லாவிடம் ஒரு 'ஃபில்ட் ஐ கார்டு' கொடுக்குமாறு ரங்கா சொன்னார். ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை உணர்ந்த ராணுவத்தினர், அவர்களை பிடித்து கட்டி வைத்து விட்டனர். டெல்லி ஸ்டேஷனுக்கு வந்ததும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டனர்."

மரண தண்டனையை நிறைவேற்ற அழைக்கப்பட்ட ஃபகிரா மற்றும் காலு
பில்லாவுக்கும், ரங்காவுக்கும் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உயர் நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதிசெய்தன.

அவர்களுடைய கருணை மனுவை குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி நிராகரித்தார். மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவர்கள் சிறை எண் 3-ல் உள்ள தூக்கு தண்டனை கைதிகள் வைக்கப்படும் கடும்சிறை அறைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட அவர்களை தமிழ்நாடு சிறப்பு காவல்படை வீரர்கள் 24 மணி நேரமும் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.இருவரையும் தூக்கிலிடுவதற்காக, ஃபரீத்கோட்டைச் சேர்ந்த ஃபகிரா மற்றும் மீரட்டிலிருந்து காலு என்ற இருவரும் வரவழைக்கப்பட்டனர். இதுபற்றி சுனேத்ரா செளத்ரி விளக்குகிறார், "காலு மற்றும் ஃபகிரா இருவரும் இந்த வேலையில் மிகவும் அனுபவம் பெற்றவர்கள். தூக்கிலுடும் பணியை செய்யத் தொடங்குவதற்கு முன்பு அவர்கள் குடிப்பதற்கு 'ஓல்ட் மாங்க்' மதுபானம் வழங்கப்பட்டது. இதுவொரு நடைமுறை. ஏனென்றால் எந்தவொரு நபரும், அவர் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக சட்டப்படி நியமிக்கப்பட்ட பணியாளராகவே இருந்தாலும்கூட, தனது சுயநினைவில் இருக்கும்போது, கொலை செய்யக்கூடாது என்று நம்பப்பட்டது. சிறையின் பதிவேடுகளில் மரணதண்டனை நிறைவேற்றிய பணியாளருக்கு 150 ரூபாய் கொடுத்ததாகவும் இது மிகக் குறைவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. "

தூக்கில் இடுவதற்காக சிறப்பு கயிறு
இந்த இருவரையும் தூக்கிலிட பீகாரின் பக்ஸர் சிறையில் இருந்து ஒரு கயிறு கொண்டுவரப்பட்டது.சுனில் குப்தா விளக்குகிறார், "இந்த குற்றவாளிகளின் தண்டனையை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்ட கயிறு சந்தையில் இருந்து வாங்கப்படவில்லை. அது, பீகார் பக்ஸர் சிறையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டது. கயிறு மிகவும் முரட்டுத்தனமாக இருக்கும் என்பதால், அதில் மெழுகு அல்லது வெண்ணெய் பூசப்பட்டிருக்கும். மரண தண்டனை நிறைவேற்றும் சிலர், இந்த கயிற்றில் பழுத்த வாழைப்பழங்களை பிசைந்து கயிற்றில் பூசுவார்கள். தண்டனையை நிறைவேற்றப் பயன்படுத்தப்படும் கயிற்றின் நீளம் 1.8 மீட்டர் முதல் 2.4 மீட்டர் வரை இருக்கும். ""மரண தண்டனை நிறைவேற்றுபவர்களில் ஒருவரான ஃபகிரா அடர் கறுப்பு நிறத்தில் இருப்பார். தன்னை எமராஜன் என்று காட்டிக் கொள்ள அவர் முயன்றார். பெரிய தொந்தியுடன் காணப்பட்டார் காலு. இருவருமே வேண்டுமென்றே தங்கள் தோற்றத்தை பயங்கரமாக காட்ட முயன்றனர். "

பத்திரிகையாளர்களை சந்தித்த பில்லா
தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, டெல்லியைச் சேர்ந்த ஐந்து பத்திரிகையாளர்கள் ரங்கா மற்றும் பில்லாவை சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் அப்போது நேஷனல் ஹெரால்டில் பணிபுரிந்த பிரகாஷ் பத்ரா.அந்த நாளை நினைவு கூர்ந்தார் பிரகாஷ். "ரங்கா எங்களை சந்திக்க மறுத்துவிட்டார், ஆனால் பில்லா சுமார் 20 நிமிடங்கள் வரை எங்களிடம் பேசினார். எங்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது உடல் முழுவதும் நடுங்கியது. இந்தக் குற்றத்தை தான் செய்யவில்லை என்று கடவுளுக்குத் தெரியும் என்றே சொல்லிக்கொண்டிருந்தார். இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை, தன்னை சம்பந்தப்படுத்திவிட்டார்கள் என்றே அவர் கடைசி வரை சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் பொய் சொல்கிறார் என்பதை அவருடைய உடல் மொழி காட்டிக்கொடுத்தது". க்கிலிடப்படுவதற்கு முன்பு கறுப்பு துணி பையால் முகம் மூடப்பட்டது தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய நாள் இரவில், ரங்கா வழக்கம்போல் உணவை சாப்பிட்டு விட்டு, சாதாரணமாகத் தூங்கினார். பில்லா உணவும் சாப்பிடவில்லை, ஒரு நிமிடம் கூட தூங்கவுமில்லை.இரவு முழுவதும் அவர் இருந்த இடத்திலேயே சுற்றித் திரிந்தார்.1982 ஜனவரி 31. காலையில் பில்லா மற்றும் ரங்காவின் முகம் கருப்புத் துணியால் மூடப்பட்டது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அந்த நாளை நினைவு கூர்ந்தார் சுனில் குப்தா. "நாங்கள் 5 மணிக்கு அவர்களை எழுப்பிவிட்டோம், குளிக்கச் சொன்னோம். ரங்கா குளித்துவிட்டார், ஆனால் பில்லா குளிக்க மறுத்துவிட்டார். தூக்கில் போடுவதற்கு முன்னர், வெளியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டாம் என்பதற்காக அவர்களின் முகங்கள் ஒரு வகை கருப்பு துணி பையால் மூடப்பட்டன. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நேரத்தில் பில்லா துடித்துக் கொண்டிருந்தார். ரங்கா கடைசி வரை மிகவும் உற்சாகமாக இருந்தார், மரண தண்டனைக்கு முன்பு அவர் 'ஜோ போலா சோ நிஹால், சத் ஸ்ரீ ஆகல்' என்று உரக்க கூச்சலிட்டார்.

"மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு, இருவரின் முகங்களையும் நான் உன்னிப்பாக கவனித்தேன். இருவரின் முகத்தின் நிறமும் மாறிப்போயின. அச்சத்தினால் அவர்களின் முகம் இருண்டுவிட்டது போல தோன்றியது."
திட்டமிட்ட நேரத்தில், சிறை கண்காணிப்பாளர் ஆர்யா பூஷன் சுக்லா ஒரு சிவப்பு கைக்குட்டையை அசைத்தார். ஃபகிராவின் உதவியுடன் காலு, மரணதண்டனையை நிறைவேற்றும் கருவியின் நெம்புகோலை இழுத்தார்.

பின்னர் பல ஆண்டுகள் வரையில், பில்லா மற்றும் ரங்காவை தூக்கிலிட உத்தரவிட்ட அந்த சிவப்பு கைக்குட்டையை சுக்லா தனது நண்பர்களுக்குக் அவ்வப்போது காட்டிக் கொண்டிருந்தார்.

இரண்டு மணி நேரம் கழித்து, மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, பில்லா இறந்துவிட்டது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் ரங்காவின் துடிப்பு இன்னும் இருந்தது.

"இதற்கு காரணம் குற்றவாளியின் எடை. அவர் உயரமாக இருந்ததால், மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட நேரத்தில் தனது மூச்சை இழுத்துப் பிடித்து நிறுத்திக் கொண்டார். இதனால், அவர் உடனடியாக இறக்கவில்லை என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு சிறை ஊழியர் அவர்கள் இருந்த குழியில் இறக்கப்பட்டார். ரங்காவின் கால்களை இழுத்தார். அதன் பிறகுதான் அவருக்கு மரணம் சம்பவித்தது. அந்த சமயத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றியவர்களின் பிரேதங்களை உடல் பரிசோதனை செய்யும் நடைமுறை வழக்கத்தில் இல்லை. இல்லையெனில் ரங்கா 'வெளி உதவியுடன்' கொல்லப்பட்டார் என்று செய்திகள் பரவியிருக்கும்.. 32 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷத்ருகன் செளஹானின் தீர்ப்புக்கு பிறகே, தூக்கிலிடப்பட்ட நபருக்கு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்ற நிலை ஏற்பட்டது. "

"தூக்கு தண்டனை வரலாற்றில் நெம்புகோல் மிகவும் அழுத்தமாக இழுக்கப்பட்டு உடல் இரண்டு துண்டுகளாக பிளந்து, கழுத்து மேலேயும், உடல் துண்டாக கீழே இருந்த குழியிலும் விழுந்த சம்பவங்களும் நடைபெறுள்ளன. தூக்கு போட்ட பிறகு முகம் பயங்கரமாகிறது. சில நேரங்களில் இறந்தவரின் நாக்கும் கண்களும் வெளியே பிதுங்கிக் கொண்டிருக்கும். சிறை மொழியில் இதற்கு 'கழுத்தின் நீட்சி' என்று பெயர். இருந்தாலும், அந்த நேரத்தில் எந்த வெளிநபருக்கும் இந்த விஷயங்கள் தெரியாது அல்லது யாரும் அதைப் பற்றி கவலைப்படவில்லை."

பில்லா மற்றும் ரங்காவின் உடல்களை பெற்றுக் கொள்ள அவர்கள் உறவினர்கள் முன்வரவில்லை. எனவே, அவர்கள் இருவரது உடல்களும் சிறையிலேயே எரியூட்டப்பட்டன.

அமிதாப்பின் பில்லா, ரஜினியின் பில்லா, அஜீத்தின் பில்லா என பில்லா என்றாலே சூப்பர் ஹிட், மெகா ஹிட் என்றாகி விட்டது.அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான முதல் பில்லா சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. பாலிவுட்டில் மட்டுமல்லாமல், சென்னை உள்பட திரையிட்ட இடங்களிலெல்லாம் திருவிழாக் கோலம் பூண்டது.அமிதாப்பின் பில்லா, ரஜினியின் பில்லா, அஜீத்தின் பில்லா என பில்லா என்றாலே சூப்பர் ஹிட், மெகா ஹிட் என்றாகி விட்டது.
அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான முதல் பில்லா சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. பாலிவுட்டில் மட்டுமல்லாமல், சென்னை உள்பட திரையிட்ட இடங்களிலெல்லாம் திருவிழாக் கோலம் பூண்டது.

பின்னர் இப்படத்தை தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ரீமேக் செய்தார்கள். 1979ம் ஆண்டு இப்படத்தின் ரீமேக் தொடங்கியது. அதற்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மகுடம் சூட்டப்பட்டிருந்தார். இதனால் மிகப் பெரிய ஹிட்டான பில்லாவின் ரீமேக்கில் ரஜினி நடிப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.  ஆண்டு ஜனவரி 26ம் தேதி வெளியான பில்லா, மிகப் பெரிய ஹிட்டானது, சில்வர் ஜூப்ளி ஹிட் கொடுத்தது. ரஜினி ஒன் அண்ட் ஒன்லி சூப்பர்ஸ்டாராக தமிழில் கொடி கட்டிப் பறக்க இந்தப் படம்தான் பிள்ளையார் சுழியாக அமைந்தது. ரஜினிகாந்த் டபுள் ரோலில் நடித்த முதல் படம் பில்லாதான். அதேபோல அமிதாப் பச்சன் படம் ஒன்றின் ரீமேக்கில் ரஜினி நடித்ததும் இதுவே முதல் முறை. இதன் பின்னர் அவர், அமிதாப்பின் தீவார் (தீ), நமக் ஹலால் (வேலைக்காரன்), திரிஷூல் (மிஸ்டர் பாரத்) என ரீமேக் படங்களில் நடித்தார்.

பிறகு பல வருடங்கள் கழித்து அமிதாப்பின் பில்லாவை ஷாருக்கானும், ரஜினியின் பில்லாவை அஜீத்தும் ரீமேக் செய்து ஹிஹிட்டானார்கள். இப்போது அஜீத் மேலும் ஒரு படி போய், பில்லாவின் 2ம் பாகத்தையும் முடித்து விட்டார்.

இந்த பில்லாக்களை விடுங்கள், உங்களுக்கு உண்மையான 'பில்லா' குறித்து தெரியுமா... தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள்..
வருடம், 1978. தலைநகர் டெல்லியே அல்லோகல்லப்பட்டுப் போய்க் கிடந்தது. காரணம், கீதா மற்றும் சஞ்சய் சோப்ரா என இரு சிறார்கள் கடத்தப்பட்டதால். அவர்களைக் கடத்தியது பில்லா எனப்படும் ஜஸ்பீர் சிங் மற்றும் ரங்கா எனப்படும் குல்ஜீத் சிங் என்று தெரிய வந்தது.

இந்த இரு இளைஞர்களும் சேர்ந்து கீதாவையும், சோப்ராவையும் கடத்திச் சென்றது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. போலீஸாரின் தீவிர வேட்டையில், இருவரின் உடல்களும் சிக்கின. இதில் கீதாவை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பில்லா, ரங்காவின் இந்த பயங்கரச் செயல் தலைநகர் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரையும் உயிருடனோ அல்லது சுட்டோ பிடிக்க உத்தரவிடப்பட்டது. தலைநகர் போலீஸார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் குதித்தனர்.


.Geeta and Sanjay Chopra kidnapping case
From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search
Geeta and Sanjay Chopra kidnapping case
Date 26 August 1978
Location New Delhi, Delhi, India
Outcome Deaths of Sanjay and Geeta Chopra
Deaths 2
Convicted
Kuljeet Singh (alias Ranga Khus)
Jasbir Singh (alias Billa)
Verdict Death penalty
Convictions Murder, common intention, kidnapping, kidnapping with unlawful confinement, kidnapping a woman with intention of sexual intercourse, and kidnapping with intention to cause hurt
Sentence Convicts hanged at Tihar Jail, New Delhi on 31 January 1982
Awards
Victims awarded Kirti Chakra
Sanjay Chopra Award and Geeta Chopra Award instituted for bravery by children under the age of 16
The Geeta and Sanjay Chopra kidnapping case (also known as the Ranga-Billa case)[1] was a kidnapping and murder crime in New Delhi in 1978.[2] It involved the kidnapping and the subsequent murder of siblings Geeta and Sanjay by Kuljeet Singh (alias Ranga Khus) and Jasbir Singh (alias Billa). The children were kidnapped for ransom but, on learning their father was a naval officer, both were killed. Geeta was allegedly raped before being murdered, but forensic evidence could not confirm it. The kidnappers had initially admitted to raping her but later retracted the statement. The two kidnappers were convicted and sentenced to death. The execution was carried out in 1982. Crime Patrol Dial 100 aired two episodes 723 & 724 on Sony TV based on the story on Feb 28, 2018 and Mar 1, 2018. The case was also shown on TV series Bhanwar which was based on real life court cases.
Kidnapping
Geeta and Sanjay Chopra kidnapping case is located in Delhi6:15 pm6:15 pm8:45 pm8:45 pm28 August28 August
6:15 pm – The children left house
8:45 pm – Father did not find them at All India Radio office
28 August – Bodies found
Geeta Chopra was a 16½-year-old 2nd year student in the Jesus and Mary College, New Delhi. Her brother, Sanjay, was 14-year-old student in the 10th standard of the Modern School. Their father, Madan Mohan Chopra, was a Captain in the Indian Navy. They lived in the Officer's Enclave in Dhaula Kuan.

On Saturday 26 August 1978, Geeta and Sanjay were supposed to participate in a radio programme called the Yuva Vani on All India Radio. They were to reach the All India Radio office on the Sansad Marg by 7 pm. Their father was supposed to pick them up outside the All India Radio after programme at 9 pm.

The siblings left their house at 6:15 pm. A man, Kula Nand saw them at the roundabout at Dhaula Kuan. A man named M. S. Nanda gave the children a lift from Dhaula Kuan to Gole Dak Khana as it was drizzling.[3][4] At 6:30 pm, Bhagwan Dass had noticed a mustard colour Fiat car, while travelling from Gurudwara Bangla Sahib towards North Avenue, near the yoga ashram at Gole Dak Khana. He heard noises coming from the car, so he stopped his scooter and approached. He saw a girl pulling the hair of the driver and a boy fighting the passenger by the driver. Dass could not stop the car and it sped away towards Willingdon Hospital. Several other people had tried to stop the car. One man named Babu Lal, dropped his bicycle and tried to grab the door handle of the car but failed. Dass reported this to the police. At 6:45 pm, he called the police control room and told them number of the car as HRK 8930, but it was noted by the operator as MRK 8930. Dass also reported that the girl was shouting for help.[4]

Inderjeet Singh, a junior engineer in the Delhi Development Authority returning home from work on his scooter, saw the car on Baba Kharak Singh Marg near the casualty block of the Willingdon Hospital. He noticed a girl and a boy sitting in the rear struggling with the driver and another man. He drove up and lined up with the running car. The boy showed his bleeding shoulder to Inderjeet Singh and waved his hands at him pleading for help. Inderjeet followed the car onto Shankar road. But he lost car when it jumped a red light at a traffic crossing at 6:45 pm. Inderjeet noted the correct number of the car and reported it to the Rajendra Nagar, Delhi.[4] The police were slow in their reaction as they considered it a cognisable offence and that it was outside their jurisdiction as they could not proceed without taking permission from the Meerut High Court.[4]

At 8 pm, their parents tuned in the radio to listen to their programme but another girl had been given the slot. The parents assumed that they had tuned to the wrong station or the programme was cancelled. Their father took his scooter from home at 8:45 pm to reach the radio office. He did not find his children at the appointed place. On being asked, he was told at the office, the children did not arrive. The father called home to ask if the children had reached home; their mother replied in negative. Their father returned home and called his relatives and friends to ask if the children were with them.

At 10:15 pm, the kidnappers had gone to the Willingdon Hospital for a car with the number DHI 280, as one of them, Billa, had acquired a cut injury on his head. The hospital had taken a skiagraph of his skull. One of them left a fingerprint on the skiagraph. On being asked, they gave the doctors false names and said they were hurt by some thieves. The constable on duty at the hospital, Ranbir Singh, took their statement in which they said they were attacked near Kali mandir on Bangla Sahib road, their watch was stolen, and the injury was from an iron rod. Ranbir Singh informed the Mandir Marg police station. At 10:50 pm, two policemen dispatched from the Mandir Marg station to further question them arrived at the hospital.

At 11:10 pm, the two decided to leave against doctor's advice. The two policemen, Sub-Inspector Ram Chander and Constable Harish Ram, asked them to accompany them to the spot where they were supposedly robbed. They took them to the spot in their car. Chander failed to find signs of struggle. They asked the duo to take them back to the station. At 1:45 am, they left the station, but they were asked to report again in the morning. When they did not, Chander went to their addresses but found them to be false. Chander inquired with the Regional Transport Office and found the vehicle number belonged to a scooter.[4][3]

Investigation and media attention
The police control room forwarded the report from Dass to Mandir Marg police station. The report was given to sub-inspector Om Prakash at 7:05 pm. He went to the Gole Dak Khana to search for witnesses but could not find any. He returned to the station at 9:55 pm. Inderjeet's report had invoked no response. At 10:15 pm, the father called the police and gave them the descriptions of the children. The father search possible places where the children might have gone including the Willingdon Hospital and returned home at 11:30 pm.[3]

The bodies were discovered by a cowherd, Dhani Ram, grazing his cows in Delhi Ridge on 28 August 1978, at 6 pm. The cowherd reported the bodies to a patrolling constable, Rohtas Singh, at 12:00 am. Sub-inspector Hari Chand was sent to the site. The parents were called to the site the identify the bodies. They identified them as their children.[3]

The autopsy was conducted by the police surgeon, Bharat Singh, on 29 August. He found the bodies to be in an advance stage of decomposition. He could not establish sexual assault of the girl due to the decomposition. He found multiple stab wounds and a broken jaw on the girl. He confirmed multiple stab wounds on the boy.[3]

The father decided to go to the media. Some newspaper carried photographs. On seeing such a newspaper, M. S. Nanda came and gave his statement. The police in course of their investigation suspected the duo to be involved. They released the photos to the press and reward was announced. The Mumbai Police was informed.[3]

On 31 August, a car matching the kidnapping vehicle was found in Majlis Park with the number, DHD 7034. A car had been reported missing of the same make, but number DEA 1221, so the police called the owner Ashok Sharma. The car had been stolen from outside the Ashoka Hotel within six weeks of its purchase. Sharma was able to open the car with his keys. The stereo and speakers were missing. The car's white grille had been replaced with black one. Two witness who lived in the area later said they seen a man driving the car and he had asked them for directions.[3]

The car was examined by investigators from the Central Forensic Science Laboratory. Several fingerprints were obtained from the car. A cigarette butt and hair samples were found and taken. Bloodstains were discovered. Plates with the numbers DEA 1221, HRF 5411, and HRK 8930 were found in the car. In the lab, it was later found that one of the plate originally had the number DHI 280 but it had been painted over. Similarly another number DHD 3548 was found. Some soil samples taken from the floor mat matched the soil samples from the site where the bodies were found.[3]

The story got much media attention in India. Prime Minister Morarji Desai took personal interest in the case.[5] The Janata Party which was in power in 1978 Delhi was criticised for their handling for the case. They lost the subsequent election.[6]

Arrest and interrogation
The kidnappers were arrested on a train a few weeks later on 8 September 1978. On that day, the two kidnappers boarded the Kalka Mail when it had slowed near the Yamuna river bridge near Agra. The compartment they entered was reserved for military personnel, so they were asked to show their identity cards. They started a scuffle with the army-men and were suppressed. Lance Naik A. V. Shetty recognised them from a newspaper picture. On 9 September 1978, they were handed over to Inspector V. P. Gupta, at the New Delhi railway station. They were held in separate non-adjoining cells.[3]

On searching, their bags the police found a sword. Their clothes were found with bloodstains. The doctor examining them found bruises on their arms and bodies, some of which were recent from the scuffle. The doctor found the sutures on Billa's head and estimated that to be 15 days old. A wound on Ranga's forearm was found to be 15 days old. Fingerprints, saliva, blood and hair samples were taken on 12 September. On 13 September, on Billa's directions they were driven separately to Agra, where the police recovered a sword from a rented room in Sita Nagar, Agra where they were staying.[3]

Trial
Confessions
On 22 September, Ranga made a voluntary confession which was recorded by a metropolitan magistrate, but the statement was later retracted by him on 20 November. On 19 October, Billa gave a similar confession, but later retracted it on 27 October. The confessions were later held to be independent as they had been kept in non-adjoining cells.[3]

Evidences
The hair found in the car and on the body of the boy matched that of Ranga. His fingerprint were found in the car. The bloodstains on his shirt belonged to blood group AB, which was a match with the siblings. Billa's hair was found on the body of the girl, and blood matching his blood group A was found in the car. Blood of group AB was found on his clothes. The signature at the Willingdon Hospital matched that of Billa. The skiagrams of the skulls matched.[3]

Defence and alibi
They pleaded not guilty.

Billa claimed that he was in Bombay from 25 August to 1 September. He said he had acquired the head wound while trying to steal a car in Agripada, Bombay. Billa claimed he was forced to make a false confession. He said he was wanted by the Bombay police for false cases, so he had fled to Delhi with Ranga. They had come to Delhi on 15 August. On 18 August, they went to Panipat where Ranga's sister lived. On 25 August, left for Bombay. On 28, he got his head wound. On 31 August, he left for Delhi, where he was informed by Ranga that they were wanted for the murders. They then tried to hide out in Delhi. They were trying to escape to Madras via Delhi when they were caught by the army-men. He claimed to have been tortured by the police to make the confession. Ranga said that the sword was planted on him and that when his clothes were taken from him they had no bloodstains. They also produced witnesses to establish Billa's alibi.[3]

Witnesses
Two doctors from the Willingdon Hospital who examined Billa on the night of 26 August could not positively identify him. The radiographer opined that the original skiagraph of that man matched with the recent skiagraph of Billa's. Sub-inspector Chander could positively identify the two. Sohan Lal, a landlord in Majlis Park, identified and said that they had rented a room from him on 24 August and stayed there till 31 August. He said that he had seen a bandage on Billa's head on 27 August. Another witness, Parkash, the proprietor of hotel in Fatehpur said that he had given the two a room from 16 August to 23 August. Anil Kumar Gupta, who worked in a guest house near Gali Telian in Delhi, said he had given them a room from 31 August to 2 September. Susheel Kumar, a parking attendant, had charged them for parking at Buddha Jayanti Park. He had noticed a boy and girl in the rear. Avdesh Singh Sharma, a physician from Agra, said he had removed Billa's stitches on 4 September, but Billa had left without paying him.[3]

Verdict and sentence
It was established by the court that the duo had come to Delhi to escape the Bombay police. They arrived in Delhi on 16 August. They lived in various places under false names. They had two ceremonial kirpans, one small and a large, and gotten them sharpened elsewhere. Billa was proficient in stealing cars and had gotten fake number plates painted. He had stolen a Fiat from outside the Ashoka Hotel. They rented a room in Majlis Park, and paid for two months in advance. They picked the children sometime between 6:30 and 6:40 pm. The boy received a wound on his shoulder. At 7:30 pm, the car was parked near the Buddha Jayanti Park. Ranga bought two ice cream and three Campa Colas. The boy's autopsy established that he had eaten milk product before death. At 9:30 pm, the children were murdered in the woods near the Upper Ridge Road, Delhi. The girl's body was found with her undergarments missing. On 30 August, Ranga abandoned the car in Majlis Park, a few streets away from where they were living. On 31 August, after the police found the car, the duo left even though they had paid two months in advance.[3]

Events as established from confessions
Although, the confessions were considered in the sentencing, they were noted to have certain relevant details. According to Ranga's retracted statement, Ranga was initially a truck driver and later a taxi driver. He was introduced to Billa by one Sham Singh in Bombay. The two had kidnapped a kid in Bombay using Ranga's taxi.

Ranga had later released the kid after keeping him at his house for some time. Sham told him Billa was a well-known criminal who had killed two Arab men. Soon afterwards, Sham was arrested. The duo feared that Sham would reveal their ties to the police. They fled to Surat in the car, with another person. There they left the car and took a bus to Ahmedabad. They then took a train to Delhi. On 17 August, they stole a car but abandoned it because it was not in good condition. On 18 August, Ranga went to Panipat to meet his sister for Raksha Bandhan. On 19 August, they stole another car and changed its plates but abandoned it after finding it had bad acceleration. On the day, stole the car used in the crime from Ashoka Hotel and changed its plates. On 23 August, Billa threatened to kill Jugal and another person Kewal. On 24 August, they rented the house in Majlis Park. They decided that they would kidnap a couple the next day, then force them to take them to their house and rob it, but they found no victims while roaming in their car.[3]

On 26 August, after roaming all day, they found the siblings and thought them to be from a rich family. They offered them a lift and children accepted. The children were talking in English. Billa had already loosened the inner door handles; he then pulled them out. The children began quarreling with Billa, who then tried to frighten them with the small kirpan. The boy tried to snatch the kirpan but was injured. The victims in the struggle managed to stall the car. At one point, Ranga saw a Sikh man following them. He suggested dropping the kids off and fleeing. Billa refused.

They then parked the car in Buddha Jayanti Park. The boy asked for water and was offered cola. He refused but accepted the ice cream on the girl's suggestion. The boy was bought another ice cream. They changed the car number to DHI 280. The children were asked about their parents. They replied their father was a naval officer. Ranga suggested the kids should be left off, as the father probably did not have much money and might try to fight them. Billa told the children that the girl would be used in a robbery in which she would stop a jeweler's car, coming from Palam airport, asking for a lift. After that they would be let go. They drove onto an untarred road and then took the boy about 100 yards away from the vehicle. Ranga was forced by Billa to attack the boy with longer kirpan, about 3 feet long. After one blow Ranga was unable to continue. Billa snatched the kirpan and repeatedly struck the boy. The boy died.

While Ranga cleaned the blade, Billa raped the girl. Then Ranga was asked to rape the girl by Billa, which he complied with. When the girl was being raped again, she picked the kirpan and struck Billa's head. The girl ran toward the road, but Ranga caught her. They made her dress up and told her they were taking her back to her brother nearby. While she was walking ahead, Billa attacked her from behind and killed her. They washed the car to remove most of the blood. On 28 August, Billa left for Bombay by train. On 30 August, Ranga found that some personnel of Bombay police were in Delhi. He changed plates and parked the car a few lanes away from his rented place. On 31 August, he saw the police had found the car. Billa returned the same day. They left for Agra on 31 August.[3]

Billa's version of the events varied slightly. According to him, they had given the boy Mandrax tablets to dull his pain from the cuts he received in the scuffle. Billa claimed that the rape of the girl was Ranga's idea. They drove to a deserted place. Ranga took the boy away and Billa raped the girl. Ranga returned alone and raped her. The girl asked about her brother and got suspicious. She attacked Billa with the sword. Ranga snatched the sword away and killed her. Ranga then told Billa he had killed the boy. They then dumped the girl in the bushes and drove away.[3]

Sentencing
Kuljeet Singh (alias Ranga Kush) and Jasbir Singh (alias Billa) were convicted and sentenced to death under Section 302 (murder) of the Indian Penal Code, read with Section 34 (common intention), by an additional sessions judge in Delhi. They were also convicted for crimes under Section 363 (kidnapping), 365 (kidnapping with unlawful confinement), 366 (kidnapping a woman with intention of sexual intercourse) and 367 (kidnapping with intention to cause hurt), read with Section 34.[4]

Appeals
The convicted challenged the death sentence verdict in the Delhi High Court. The High Court upheld the judgement on 16 November 1979. The convicts then petition under Article 136 in the Supreme Court of India, which was turned down. They then petitioned the president of India to use the clemency powers vested in him under Article 72 of the Constitution. The president turned down the petition without citing reason. They then petitioned the Supreme Court again arguing that the president should use his clemency powers fairly.

On 21 April 1981, the Supreme Court upheld the death sentences. These petitions had further delayed their death sentences.[4][7][8][9][3] The trials took about four years to complete.[5]

Death row interviews and execution
Following the judgement, some journalists petitioned the Tihar jail that they be allowed to interview the death row convicts. The jail authorities rejected the petition on the grounds that their Jail Manual allowed interviews only with relatives, friends and legal advisers.[10] Journalist Prabha Dutt decided to challenge the rejection of interview requests in court.[11]

On 7 November 1981, the Supreme Court of India decided that the convicts should allowed to be interviewed by some journalists, if they were willing.[12][13] The journalists were granted permission to interview them together, for an hour, and to submit to search before entering the prison.[10] The judgement is considered a landmark in Indian law.[11]

On 30 January 1982, five reporters — among them Prabha Dutt of Hindustan Times, Prakash Patra of The National Herald, and Usha Rai of The Times of India — were allowed to conduct the interview. The convict interviewed was Jasbir Singh alias Billa, who insisted that he was innocent. Ranga refused to be interviewed.[14]

Both were hanged on 31 January 1982.[14] Billa was quiet, but Ranga resisted going to the gallows. Their bodies were not claimed by their relatives.[15]

Aftermath

The Kirti Chakra was awarded to the children on 5 April 1981. In 1978, the Indian Council for Child Welfare instituted two bravery awards for children under the age of 16, the Sanjay Chopra Award and the Geeta Chopra Award, given each year along with the National Bravery Award.[16]



No comments:

Post a Comment