யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 93
பறங்கியர் ஒல்லாந்தரை உட்செல்லவிடாது தடுக்கும்பொருட் டுத் திரிகோணமலையிலும் மட்டக்களப்பிலும் கோட்டைகளே க்கட்டி அவ்விடங்களைப் பிடித்துக்கொண்டிருந்தனர். ஆயின் 1638-ல் ஒல்லாந்தர் கண்டியரசனுன ராசசிங்கனுல் அழைக் கப்பட்டுவந்து மட்டக்களப்புக்கோட்டையைக் கைப்பற்றினுர், அப்பால் திரிகோணமலை 1639-லும், நீர்கொழும்பும் காலியு ம் 1640-லும் ஒல்லாந்தர்கைப்பட்டன. அவ்வருஷமே பறங் கியர் நீர்கொழும்பைப் போரில்மீட்டும் 1644-ல் ஒல்லாந்தர் அண்தை மறுபடியும் பிடித்துக்கொண்டனர். பறங்கியர் 1637-ல் கோவைக்கணித்தாய்க் கடற்சண்டையிற்பட்ட பெரிய அபசெ யமும் கன்னேறுவாவில் இராசசிங்கனல் அடைந்த பெருங் தோல்வியும், ஒல்லாந்தரால் மட்டக்களப்பு ஆதியவிடங்களில் சகித்த கட்டமும் அவர்களை மிக வலியிழந்துபோகச் செ ய்திருந்தன. ராசசிங்கன் ஒல்லாந்தரைக்கொண்டு பறங்கியரை ஒட்டுவித்துத் தானாசுசெய்யலாமென மனப்பால் குடித்துக் கொண்டு அவர்கள் கொழும்பையும் பிடித்துக்கொள்ள உதவி செய்தனன். கொழும்பு 1656-ல் எழுமாச முற்றுகையின்பி ன் ஒல்லாந்தர் கைப்பட்டது. தனக்கு வாக்குப்பண்ணியபடி ஒல்லாந்தர் கொழும்பைத் தரவில்லையெனக்கண்ட கண்டியா சன் அவர்களையெதிர்க்கப் பிரயத்தனப்பட்டும் வாய்க்காது போயிற்று. ஒல்லாந்தர் நாளுக்குநாள் வலிமிகுந்து யாழ்ப்பா ண இராச்சியத்தையும் அப்பிக்கொள்ளத் தலைப்பட்டனர்.
மன்னுர் ஒல்லாந்தர்கைப்படல்.- 1658-ம் ஆண்டு'மாசிமா சத் தொடக்கத்தில் றிக்லோவ் வன் ஜென்ஸ் எனும் ஒல்லா ந்ததளபதி 1500 வீரர்களைக்கொண்ட ஒன்பது கப்பல்களோ டும் பல சிறு மாக்கலங்களோடும் மன்னரின்முன்னே காண ப்பட்டான். மன்னர் 1560-ம் ஆண்டுதொட்டு முழுதும் கிறீஸ் தநாடாயும், பறங்கியருடைய கைக்கீழ் மிகச் செழிப்புற்றே ங்கியு மிருந்தது. பறங்கியர் அதை ஏறக்குறைய முழுதும் செய்கைப்படுத்திப் பெருங்கோட்டங்களை ஆங்காங்குவகுத்து, பல சிறு நகரிகளை நிர்மானித்து, ஏழு பெரிய ஆலயங்களா லும் பல சன்னியா சவீடுகளாலும் அலங்கரித்திருந்தனர். இப் போது காடாய்க்கிடக்கும் மன்னரின் வடமேற்குப்பகுதி அ க்காலம் நாடாய்ச் சிறந்திருந்தது. பேசாலைக்கணித்தாய்க் கா ட்டினுள்கிற்கும் கோபுரமானது ஒர் பறங்கிப்பிரபுவின் ஆதீ னத்துள் எழுப்பப்பட்டிருந்த ஒர் காவற்கட்டிடமேயென்பது பொருத்தமான ஒரு துணிபு. சிலர் எண்ணுகிறபடி அதைச் சோனகர் கட்டினரென்று துணிவதற்கு ஏதுவில்லை. ஆயின்
14
Page 57
94 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
1658 அளவில் மன்னரின் சீர்குலைந்து செல்வம் மங்கிக்கொ ண்டுவந்திருந்தது. பத்துவருஷம்வரையில் முத்துக்குளிப்பில் லாமற் போயினமையால் சனங்களுள் தரித்திரம் தலைகாட்டி யிருந்தது. பறங்கியரும் துன்மார்க்கத்தாலும் சோம்பலினலு ம வலியிழந்து அதோகதிப்பட்டிருந்தனர்.
மன்னர்க்கடலிற் முேற்றிய ஒல்லாந்தர் அங்கு சத்துரு க்களையெதிர்க்க ஆயத்தமாய்கின்ற பன்னிரண்டு மாக்கலங்களை பும் அகஸ்மாத்தாய்ச் சருவிச் சிலவற்றைக் கடலிலமிழ்த்தியும் சிலவற்றைக் கைப்பற்றியுங்கொண்டு நாட்டிலிறங்கத் தலைப்ப ட்டனர். பறங்கியர் ஒல்லாந்தர் வருவாரெனப் பயந்து கடற் கரையில் அகழ்களைப்பொறித்துப் ப தி வி ரு ந் து அவரிற ங்கவிடாது பொருதினர். ஒல்லாந்தர் தங் குண்டுமாரியின் மறை விலிறங்கி ஆயிரத்துக்கு மேற்படடோராய் அணிவகுத்துகின் ற பறங்கியரைச் சிதறவடித்தும் பலரைக் கொன்றும் வெற்றியா ளராய் விளங்கினர். அன்றைப்போர் எத்துணைக் குரூரமுள் ளதா யிருந்ததெனில் 'இரத்தமுழுக்கு”என அதற்குப் பேரி டப்பட்டது. யாழ்ப்பாணத்துக் க ப் பி த் தா ன கி ய அங் தோனியோ தெ மெனசேசும் அன்று போரில்மடிந்தான். நெ றிகெட்டோடிய பறங்கியர் கடலாலும் கசையாலும் யாழ்ப்பா ணம்நோக்கிப் போயினர். நல்லதிஷ்டமாய் அன்று சொரிந்த மழையினுல் இவர்களை ஒல்லாந்தர் பின்தொடர்ந்து செல்லக் கூடாமற் போயிற்று.
அப்பால் ஒல்லாந்தர் கோட்டையினுள் இருந்த பறங்கி ச்சேனையை முற்றுகையால் வெல்லும்பொருட்டு அதற்கணித் தாயிருந்த இருகோவில்களையும் சந்நியாசவிடுகளையும் அாண் செய்துகொண்டிருந்தனர். சம் யோஜ் எனப் பெயரிடப்பட்ட மன்னர்க்கோட்டை தற்காலக் கோட்டையிருக்குமிடத்திலே யே இருந்தது. ஒல்லாந்தர் ஒபாது சொரிந்துகொண்டிருந்த குண்டுமாரிக்காற்ருது கோட்டையுளிருந்த பறங்கியர் நாலாகா ளினிற்றில் கம்மை ஒல்லாந்தருக்கு ஒப்புக்கொடுத்து யுத்த மரியாதைகளோடு வெளிப்போந்தனர். இதுநிகழ்ந்தது மாசிமா சம் 22-ங் திகதி. அடுத்த ஞாயிறுவாரம் வெற்றியாளர் பட் டணத்தின் பெரியகோவிலில் ஒர் ஸ்தோத்திர ஆராதனை நட த்தி விழாக்கொண்டாடினர். பின் தாமதமின்றிப் பறங்கியச் முத்துச்சிப்பிப்பார்களை அழித்துவிடாவண்ணம் ஒர் கடற்ப டையை வைத்துவிட்டு யாழ்ப்பாணத்தைநாடிச் சென்றனர். ஒல்லாந்தர் இவ்வாறு முத்துச்சிப்பிப்பார்களைக் காவல்பண்ணி யும் எட்வெருஷ வகளாய் அவர்களால் முத்துக்குளிப்பு:நடத்த இயலாதிருந்தது.
யாழ்ப்ப்ாண வைபவ கௌமுதி. 95
யாழ்ப்பாணத்திற் படையேற்றல்- பங்குனிமாசத் தொடக் கத்தில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைநோக்கி மாதோட்டவழி யாய்நடந்து வன்னிக்காடுகளை ஊடறுத்துப் பூநகரியைச்சேர் ந்தனர். பூநகரியில்கின்று கடல்கடந்து யாழ்ப்பாணத்தில் இ றங்குவது வெகு கஷ்டமாயிருந்தது. அங்கிருந்த மாக்கலங்க ளில் ஒருதடவைக்கு 300 பேருக்கு மேற்கொண்டு செல்வது கூடாததாயும் ஒருமுறைபோக ஒன்றாைமணித்தியாலத்துக்கு மேற் செல்லுவதாயுமிருந்ததால் சேனையை இக்கரைப்படுத்து தல் ஆபக்கரமாயிருந்தது. ஆயினும் பறங்கியச் சத்துருக்கள் பூநகரிமார்க்கமாய் வருவரென ஊகியாமல் ஆனையிறவிலேயே தம்மைக் காத்துநிற்கின்றரென அறிந்தமையால் இவர்கள் யா தும் விக்கினமின்றிச் சேமமாய் இக்கரைப்பட்டுச் சாவுகச்சே ரியிற் சேர்ந்தனர். இவையனைத்திலும் தென்மராட்சியின் தலை வனை ஒர்வன்னியனின் பெருந்துணை ஒல்லாந்தருக்கிருந்தது. இவன் தனக்கு ஒர் வெள்ளைமனைவியைத் தரும்படி யாழ்ப்பா ணத்துப் பறங்கியரிடம் கேட்டபோது அவர்கள் ஓர் வெள் ளைப் பெட்டைநாய்க்குப் பொற்சங்கிலி கழுத்திற்றரித்துப் ப ல்லக்கிலேற்றி அவனுக்கு அனுப்பிவிட்டிருந்தனர். இதனுற் ப றங்கியரில் தீராத வன்மமுற்றிருந்து அவர்களைப் பிடித்து க்கொடுக்கச் சன்னத்தணுய்கின்று ஒல்லாந்தருக்குப் பக்கத்து ணையானுன்,
சாவுகச்சேரிக்கோவிலின் அழகையும் அதன் சுற்றுப்பு றங்களின் வனப்பையுங்கண்டு ஒல்லாந்தர் வெகு பிரீதியுற்று ர்கள். சனங்கள் பயமின்றி உணவுப்பொருட்களைக் கொண்டு வரலாமெனவும் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் காசு உட னே கொடுத்துவிடப்படுமெனவும் பறைசாற்றுவிக்கவே ஊரவர் களும் அவர்களை நன்முய் உபசரித்தனர். பகல் போசனமரு ந்தியபின் நாவற்குளியையடைந்து அங்கு இராத்தங்கினர். ப ங்குனிமாசம் 3-ந் திகதியாகிய மறுநாட்காலை "காலைச்செப த்தின்பின்’ உப்பாற்றைக்கடந்து சுண்டிக்குளிவரையிலும் வ ந்தபோதிலும் எதிர்ப்போர் யாரும் காணப்படவில்லை. ஆயி ன் சுண்டிக்குளிக்கோவிலை அடையுமுன் பறங்கியர் எதிர்த்து நின்றனர். அங்குநடந்த ஒர் சிறு யுத்தக்கில் ஒல்லாந்தரே வெற்றியாளராகி கோவில்வளவை அரணுக்கிக்கொண்டு இரா த்தங்கி, பின் மறுநாட்காலை தாங்கள் கொண்டுவந்த இரு பீ ாங்கிகளினின்றும் குண்டுமாரிபொழிந்து தெருவைச் சோதி த்துக்கொண்டே கோட்டைக் கருகாமையில்வந்து சேர்ந்தா ர்கள். ஒல்லாந்தரின் மாக்கலங்களும் கோட்டைக்கெதிசேவர்
து நின்றன. பின் கோட்டையைச் சருவுதற்கு ஆயத்தமாய்
Page 58
96 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
அகழ்தோண்டிக் கொண்டிருக்கையில் பக்கத்திலிருந்த கிணற் றில் தண்ணீர்பருகிய முப்பதின்மர் ஒல்லாந்தர் உடனே இறங் தனர். இக்கிணறு பறங்கியரினல் நஞ்சூட்டப்பட்டிருந்தது. ஒல்லாந்தர் கோட்டையைப்பிடித்தபின், இச்சதிமானத்தைப் ப ழிவாங்கும்படி பறங்கிய கைதிகளில் எழுபதின்மரை அக்கி ணற்றிற் குடித்துச் சாகும்படிசெய்தபின்னே கிணறு தூர்த்துவி
• لوگئے۔ لالا سا
கோட்டையுள் அடைக்கலம்புகுந்த பறங்கியர்போக, எ ஞ்சியோர் பட்டணத்தின் ஆலயங்களைச்சார்ந்த வீடுகளை அா ணுக்கிக்கொண்டு போராடினர். ஒன்பதாந்திகதி பட்டணத்தி ன் மேற்குப்புறத்திலிருந்த யேசுசபைக்கல்லூரியும் மடமும் பிடிக்கப்பட்டன. ஒன்பது நாட்சென்று கிழக்கு அந்தத்தில் கி ன்ற டொமினிக்கன்சபை ஆலயமும் மடமும் ஒல்லாந்தர் கை ப்பட்டன. பங்குனிமாசம் 20-ந் திகதி 燃、赠 முற்று கை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கிடையில் பறங்கியருடைய பெண்களும் பிள்ளைகளும் அனேகர் ஊர்காவற்றுறை மார்க்க மாய் நாகபட்டினத்துக்கோடித் தப்பிவிட்டனர். ஆயினும் கோ ட்டைக்குள் போர்வீரரும் கிரகஸ்தருமாய் 3000 சனங்கள் அ டைக்கலம்புகுந்திருந்தார்கள். யாழ்ப்பாணக்கோட்டை இப் போதிருப்பதிலும் அக்காலம் அதிக விசாலமாயிருந்தது என் பர். அது 1624-ம் ஆண்டு கட்ட ஆரம்பித்து எட்டுவருஷத்தி ன் பின்னே முற்றுப்பெற்றது. உள்ளே க ப் பித் த ர னின் வீடு சேனபதிகளின் மனைகளும், கோயிலும் கன்னியாஸ்திரி மடமும், பெரிய உத்தியோகஸ்தர் மனைகளும், வைத்தியசாலை ,யும், தருமசாலைச் சகோதரர்வீடும், மறியற் கட்டடங்களு மிருந்தன. அடைமதில் செய்கையானது ஒல்லாந்தரால் வெகு சாக்கிரதையாய் நடத்தப்பெற்றது. இரவில்மட்டும் உ ணவுப்பொருட்களைத் தேடும்படி தீவுபற்றுகளுக்கு வெளிப்போ ந்து செல்லப் பறங்கியருக்கு வசதியிருந்தது. ஆயினும் வி ரைவில் ஒல்லாந்தாது சாக்கிரதையால் இவ்வாறு செய்தலும் கூடாமற் போயிற்று.
பறங்கியரும் ஒல்லாந்தர் வருவாரெனக் காத்திருந்து யா ழ்ப்பாணக்கோட்டையை நன்ருய்த் தயார்படுத்தி வைத்திருந்த னா. யாழபபாணததுககு ஒாகதவு எனனததகக ஊாகாவற றுறைச் சலசந்தியைக் காத்துக்கொள்ளும்படி இரண்டு வரு டத்திற்கு முன்னரே அப்போது 'கயிஸ்” கோட்டை என்ன ப்பட்ட கடற்கோட்டை ஒர் மலைமேற் கட்டப்பட்டது. 'கயிஸ்’ என்றது துறைமுகம் எனப்பொருள்படும் ஒர் போர்த்துக்கீஸ்
யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 9.
சொல். அப்பெயரே இப்போது பிறபாஷைகளில் ஊர்காவற்று றைக்கு Kayts என வழங்குகின்றது. ஒல்லாந்தர் கடற்கோட் டையைக் “கமனியேல்" (பன்றியின்தொடை) யென அழைத்த னர். இக்கோட்டைக்குள் ஒர் கோவிலும், வாசஸ்தானங்களு ம் குண்டு உள்டுருவக்கூடாமற்செய்த மூடுசாந்து அறைகளுமி ருந்தன. கடற்கோட்டைக்கு எதிரே ஊர்காவற்றுறையில் வே ருெரு கோட்டைகட்டி இருகோட்டைகளினின்றும் இவற்றி னுாடாய் உட்படும் கப்பல்களைச்சருவ ஆயத்தஞ் செய்திருந்த அ. ஆயின் ஒல்லாந்தர் வந்தபோது கரைக்கோட்டை முற்ருய் நிறைவேறியிருக்கவில்லை. யாழ்ப்பாணக் கடலின் கீழ்வாச லைக் காப்பதற்கு கல்முனையிலும் பறங்கியர் ஒர் கோட்டைகட் ட எத்தனித்கிருந்தும் கையிடாது விட்டிருந்தனர். அப்பால் போர்வீரர் தொகையிலும் யாழ்ப்பாணத்திற் பறங்கியரின்பெ லம் பெரிதாயிருந்தது. மன்னரிலிருந்து ஓடிவந்தவர்களோடு கொழும்பிலிருந்தோருள்ளுஞ்சிலர் நாகபட்டணமூலமாய்த் தப் €T? ്', கோவையினின்று விரை ல் தங்களுக்கு உபபலம் வருமென்றகம்பிக்கையும் பறங்கியரு க்கிருந்தது.
கடற்கோட்டையைப் பிடித்தல்-முற்றுகை யிடப்பட்டோர் ஊர்காவற்றுறைக் கடல்மார்க்கமாய் இந்திய கரையோடு சம்பங் தம் பூண்டிருப்பதையும் உணவுப்பொருட்கள் ஆகியன வருவி த்துக் கொள்வதையும் கண்ட ஒல்லாந்தர் கடற்கோட்டையை யும் தீவுகளையும் அடிப்படுத்தாது யாழ்ப்பாணக் கோட்டையை ப் பிடிப்பது அரிதென யோசித்து முற்றுகையை விடாமலே கடற்கோட்டையைத்தாக்கக் காரைதீவுக்குச் சென்றனர். அங் கு அகழ்கள் பொறித்துக் குண்டுப்பிரயோகஞ்செய்தும் குண்டு கள் கோட்டைமட்டுஞ் செல்லாததினுல் வள்ளங்களில் மாவே லையால் அரண்கள் இயற்றிக்கொண்டுபோய் அதைச் சருவமுய ன்றனர். இவ்வேலைகள் முற்றுப்பெறுமுன்னரே கோட்டையு ள்ளிருந்த யெரோணிமோ தே பாய்வ, என்பவனும் சேனையு ம் தண்ணீரின்மையால் தவித்து வெண்கொடி யுயர்த்தி ஒல்லர் ந்தரைச் சரணடைவோராயினர். கடற்கோட்டை முற்றுகை பதினைந்து நாள் வரையுமே நீடித்தது. சித்திாைமாச நடுக்கூ ற்றில் ஒல்லாந்தர் அக்கோட்டைக்கு அதிபர்களாயினர். பறங் கியர் பீப்பாக்களில் வைத்துக்கொண்டிருந்த தண்ணீர் போதா தென்று கண்டு வேண்டியசலத்தை வைத்துக்கொள்ளுமாறு இவர்களாலேயே அங்கு இற்றைக்குங் காணப்படும் தண்ணீர்த் தொட்டிகள் கட்டுவிக்கப்பட்டன. ஒல்லாந்தர் கடற்கோட்டை பைப் பிடித்துக்கொண்டு கப்பித்தானையும் குடும்பத்தையும் இந்தியாவுக்கு அனுப்பிவிட்டனர்.
Page 59
99. யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
யாழ்ப்பாணக் கோட்டைபிடிபடல்.-இதற்கிடையில் யாழ்ப் பாணத்தில் கோடடை வெகு சாக்கிரதையாய் அடைமதில் செ ய்யப்பட்டுவந்தது. கோவையிலிருந்து அனுப்பப்பட்டஉதவியும் யாழ்ப்பாணம்வந்துசேராது ஒல்லாந்தரின்கடற்படைகளால் 石 க்கப்பட்டது. ஒல்லாந்தருக்கோ அவர்களது கப்பலொன்றி னல் நான்கு பெரும்பீரங்கிகளும் வேறு பலபொருட்களும் கொ ண்வொப்பட்டன. ஆயினும் குண்டுகள் குறைந்து Luru°sar மையால் ஒல்லாந்தர் கோவில்களின் பித்தளை வெண்கல தளபா டங்களை நொருக்கியும், சவக்காலைகளின் கல்வெட்டுப்பலகைகளை உடைத்தும் பீரங்கிகளிற்போட்ச்ெ சுட்டுக்கொண்டிருந்தனர். இதனுற்போலும் பறங்கியருடைய சமாதிமேலெழுத்துக்கள் யாழ்ப்பாணத்திலில்லாது போயின. கோட்டையுள்ளிருந்தார் ஒயாமற் சொரிந்துகொண்டிருந்த குண்டுமாரியால் காயம்பட் டோரும், மடிங்தோரும், பட்டினியால் வாடி இறந்தோருமாய் வெகு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தனர். இறந்தோர்தொ கை ஆயிரத்தறு நூறெனக் கணக்கேற்றப்பட்டது. மூன்றரை மாத முற்றுகையின்பின் சனங்கள் அப்பால் போசனத்துக் வழியின்றி அம்பாயப்பட்டனர். பழுதுபட்ட அரிசியே மீந்தி ருந்தது. உப்பு இல்லாமற் போய்விட்டது. பட்டினியாற் சன ங்கள் நாய்களையும் பூனைகளையும் பிடித்துத் தின்ருர்கள். ஈற்றி ல் கொள்ளைநோயுமொன்று தலைகாட்டிற்று. ஆதலால் இனி ஆற்றதெனக்கண்ட பறங்கியர் ஆனிமாசம் 21-ங் தினதி தென் கிழக்கு அலங்கத்திலே வெண்கொடியுயர்த்திச்சமாதானங்கேட் டனர். அத்ேதநாள் உடன்படிக்கைக்குக் கைச்சாத்திடப்பட் டது. கோட்டைச்சேனை யுத்தமகிமைகளோடு முரசதிரக் கொ டிகள்பறக்க வெளிப்போந்து ஒல்லாந்த கொடித்தம்பத்தின்மு ன் தங்கொடிகளைத் தாழ்த்தவும், ஒரு பீரங்கியைத் தம்முடன் கொண்டுசெல்லவும், குருமாரும் கிரகஸ்தருமான பறங்கியர் இ ந்தியாவுக்கு அனுப்பப்படவும், எவராயினும் தமக்கு உரிய உ டைகளையும் அவசியமான உணவுப் பொருட்களையுமேயன்றி மற்றென்றையும் கொண்டுபோகாதிருக்கவும், அவர்கள் சகல பொருள் பண்டங்களும் ஒல்லாந்த சேனைக்கு வெற்றிப்பொரு
ட்களாய் விடப்படவும் பொருத்தனை செய்யப்பட்டது.
உலகுகாவலழதலி-இங்கு வைபவமாலைகூற யாழ்ப்பாணச் சரித்திரக்காரர் விரித்துக்கூறும் உலககாவலமுதலியின் வரலா று வாத்தக்கது. “யாழ்ப்பாணத்துக் கோட்டையை ஒல்லாந்தர் எளிதிற் பிடித்தமைக்கு அனுகூலியாயிருந்தவன் உலகுகாவல முதலியென்பவன். அவன் சோழநாட்டில் இராசதுரோக 器 தத்துக்குத் தப்பியோடி யாழ்ப்பாணம் வந்து காரைதீவிலே
யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 99
தன் குடும்பத்தோடு வாழ்ந்தவன். பெருஞ்செல்வமும் அதிகா ாமுமுடையவன. பறங்கியதிகாரிகளோடு நண்பூண்டிருந்தவ ன். ஆயினும் அவன் அவர்களுடைய கொடுங்கோன்மைகண் டு பொருணுகி அவ்வாசைநீக்கச் சமயம்பார்த்திருந்தான். அ வனை ஒல்லாந்தர் துணையாகும்படி கேட்க அவனும் உடன்ப ட்டான். சமயம்பார்த்து ஒரிரவு அவன் ஒல்லாந்த தளபதியை க்கொண்டுபோய் புழைக்கதவால் கோட்டையினுள்ளே பிரவே சிக்கும்படி செய்தான். அச்சமயம் பறங்கிகள் காவல்விழிப்பி ன்பொருட்டு ஒரிடத்திற்கூடி ஆடல்பாடல்களிற் பொழுதுக ழிப்பாராயினர். அதுகண்டு ஒல்லாந்தசேனை முழுதும் கோட் டைக்குள் நுழைந்தது. விடியுமுன் ஒல்லாந்தச் தங்கொடியுயர் த்தி உள்ளிருந்த பறங்கிவீரர் அநேகரைவெட்டி அகழிகளிலி ட்டனர். எஞ்சினுேர் சரணடைந்தனர்” (யாழ்ப்பாணச்சரித்தி ரம்) இது பொருந்தாக்கதையென்பது தெளிவு. உலகுகாவல முதலி காரைதீவில் ஒல்லாந்தருக்கு உதவிசெய்திருப்பின் இரு க்கலாம். அவன் வரலாறு தென்மராட்சி வன்னியனின் வரலா ற்றேடு மருவித் திரிபுற்றதுபோலும்,
பறங்கியர் புறப்படல். - இதுகிற்க, கோட்டையி லுள்ளிரு ந்தோரெல்லாம் வெளியேற மூன்று நாட்சென்றது. ருெரட்றி கோ பொறெய்யோ எனும் யாழ்ப்பாணக் கப்பித்தான் வன் டெலான் எனும் ஒல்லாந்த சேனைத்தளவாய்க்குக் கோட்டை த் திறவுகோல்களை ஒப்பித்தான். பின் கோட்டைச்சேனை வெ ளிப்போந்தது. பொருத்தனையிற் கண்டபடி பீரங்கியை இழுத் துக்கொண்டுபோகப் பெலமில்லாமையால் அதைவிட்டுச் செ ன்றனர். சேனையின்பின் குருமாராகிய பிறர் வந்தனர். ஒல்லா ந்தர் சற்றும் இரக்கமாவது மரியாதையாவது இல்லாமல் ஆ ண் பெண் வாலர் விருத்தர் கன்னியர் துறவிகள் சகலரையு ம் வஸ்திரமுரிந்து பரிசோதித்ததைக்கண்டு பறங்கியர்கொண் ட சீற்றஞ் சிறிதல்ல. ஒல்லாந்தரின் பொருளாசை அவ்வளவி லிருந்தது. சனங்கள் வெளிப்டோந்தபின் ஒருநாள் இராணு வஉத்தியோகஸ்தர் கோட்டையைக் கொள்ளையடிக்க விடப்ப ட்டார்கள். மறுநாள் போர்வீரர்கள் அங்கு எடுக்கவிரும்பிய பொருட்களை எடுக்கவிடப்பட்டது. கோட்டையினுள்ளே பின நாற்றமும் அலங்கோலமும் சகிக்கக்கூடாதிருந்தமையால் சில நாட்கழித்தே ஒல்லாங்கர் அதனைச் சுத்திசெய்துகொண் டுட் பட்டனர். அதின் மதில்கள் குண்டுகளால் வெகு சேதப்பட் டுக்கிடந்து பின் திருத்திக்கட்டப்பட்டன. அப்பால் யாது கரு கியோ கோட்டைக்குள் முந்நூறு தென்னைகளையும் நாட்டினர்.
அதுகிற்க, பறங்கியசெல்லாம் கப்பல்களிற்போட்டு மிரு
Page 60
100 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
கங்களை அடைப்பதுபோலடைத்து வத்தாவியா மார்க்கமாய்
ரோப்பாவுக்கோ தாம்தாம் விரும்பியவிடத்துக்கோ அனுப் பப்பட்டனர். இளம்விதவைகளும் கன்னியர்களும் வெற்றி யாளருக்கேயென்று வைத்துக்கொள்ளப்பட்டார்கள். ஆதியில் வந்த ஒல்லாந்தர் போர்வீரராய் மனைவிமக்களின்றி வந்திரு ந்தமையால் பெரும்பாலும் பறங்கிப்பெண்களையே மணந்தன ர். பறங்கிச்சேனுவீரரில் சிலர் ஒல்லாந்தரின்கீழ் உத்தியோக
க் தமர்ந்து கொண்டனர்.
ஒல்லாந்தர் பறங்கியாை எவ்வளவு குரூரமாய் நடத்தின ர்களோ அவ்வளவில் யாழ்ப்பாணச் சுதேசிகளைச் சணுவாய் ந டத்துவார்போலக் காட்டவிரும்பி அவர்களுக்கு அனேக நல் வாக்குகளைப்பண்ணினர். புகையிலைவரி உடனே நீக்கிவிடப்ப ட்டது. மார்க்கவிஷயத்திலும் அவரவர் இஷ்டம்போல் நடக்க லாமென ஆதியிலே நயவசனம் கூறினர்.
4. ஒல்லாந்தர்காலம்,
சதியாலோசனை- ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தாரைத் தம் பக்கமாக்கிவிடப் பிரயாசித்தும் பறங்கியரில் இவ்விராச்சியத்தா ருள் தலைமைபெற்முேர் பலர்கொண்ட பிரீதி அத்தனைவிரை வில் மங்கியொழியாதிருந்தது. அன்னுேருட் செல்வாக்குள்ளா ர் சிலர் ஒல்லாந்தரைச் சதிமானமாய்க்கொன்று தொலைத்துவி ட ஒர் சூழ்ச்சிசெய்யத் தலைப்பட்டனர். இதில் யாழ்ப்பாண த்து டொம் லூயிஸ் பூதத்தம்பிஎன்னும் முதலியும், மன்னுரா ருள் ஒருதலைவனும் இராசவிசுவாச சத்தியஞ்செய்துகொடுத் து இங்கு நின்றுவிட்ட பறங்கியரில் 8வரும் முக்கியஸ்தராய் நின்றனர். இச்சதிமானம் மனுவேல் அந்திராடோ எனும் ஒர் சிங்களமுதலியால் கண்டுபிடிக்கப்பட்டு அரசினால் விளங்கிக் குற்றவாளிகள்நெஞ்சங் கிடுக்கிடத்தக்க மகாகொடூரமாய்க் கொ ல்லப்பட்டனர். பல்டேயஸ் பாதிரியார் இக்கொலைத்தண்டத் தைச் சித்திரசகிதமாய் வரைந்துவைத்திருக்கின்ருர், குற்றவா ளிகளைச் சிலுவைகளிற்கட்டி நெஞ்சைப்பிளந்து ஈரலைப்பிடுங் கி அவர்கள்முகத்தில் எறிந்து விடப்பட்டது. இவர்களது சதி மானச்சூழ்ச்சியை மலாக்காவில் பிறந்தவரும் வியாதிநிமித்த மாய் மற்றைய பறங்கிக்குருமாரோடு அனுப்பிவிடப்படாது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தவருமாகிய கல்தேருே எனும் யேசு சபைக் குருவானவர் அறிந்திருந்தும் அவ்விரகசியம் 'பா வசங்கீர்த்தனம்’ எனும் சமய ஆசாரசம்பந்தமாய் மட்டும் அ
வர்க்குத் தெரிந்திருந்தமையால் அரசினர்க்கு அதை வெளிப்
யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 101
படுத்தாதிருந்துவிட்டார். கத்தோலிக்ககுருமார் தாம் 'பாவ சங்கீர்த்தன” இரகசியமாயறிந்தவைகளை உயிர்போகினும் சொ ல்லார். ஆகவே இவர் அவ்வாறு ஒழுகுவோராயினர். அரசி னர் இவரையும்பிடித்துச் சிரச்சேதம்செய்வித்தனர். சதிமான த்திற் சேர்ந்திருந்த வேறு பதினுெருவர் தூக்கிலிட்டுக் கொ ல்லப்பட்டு யாவர்பிணங்களும் பருந்துகள் விருந்துகொன்ன மரங்களில் தூக்கப்பட்டன.
பூதத்தம்பிகதை.- டொம் லூயிஸ் பூதத்தம்பி கைலாய வன்னியனின் சகோதரியை மணமுடித்திருந்தவனென வைப வமாலை கூறுகின்றது. ஆயின் அந்நூல் பூதத்தம்பியின் சரித் திரத்தை மிக மாறுபாடாக்கி வரைந்து பூதத்தம்பிமனைவியை அங்கிராடோ இச்சித்து அதினுற் சதிமானக் காகிதம் எழுதி அவனுயிரைத் தானே போக்குவித்தானென் முக்கிவிட்டிருக்கி ன்றது. வைபவமாலை சுருங்கச்சொல்லிய இவ்விபரீதகதையை மெஸ், முத்துத்தம்பிப்பிள்ளை கற்பனுலங்காரமாய் விரித்துப் பின்வருமாறு எழுதினர்.
'ஒல்லாந்தர் அரசு செய்யத் தொடங்கியபோது அரசிறை ப்பகுதிக்கு அதிகாரியாக வேளாண்டலைவனுகிய பூதத்தம்பி முதலியையும், கிருபப்பகுதிக்கு அதிகாரியாகக் கரையார்தலை வன் (குருகுலத்தலைவன்) ஆகிய மனுவல் அக் திராசியையும் நிய மித்து அவனுக்குப் பற வகிக்காரர்போல முதலிப்பட்டமளித் தார்கள். இருவரையும் ஒல்லாந்தர் மந்திரிமாராகப்பாவித்து அ வர்களைவினவியே அரசுசெய்துவந்தார்கள். தமது கிறீஸ்துச மயத்தைப் பாவச்செய்வதும் கறுவாப்பட்டை முதலிய வியா பாாவஸ்துக்களை விருத்திசெய்வதும் போக்குவரவுக்கேற்ற சா தனங்களைச்செய்வதுமே அவர்களுடைய அரசு நெறியாகவிருங் தஅது
பூேதத்தம்பிமுதலியும் அந்திராசிமுதலியும் பெருநட்பு டையாாய்த் தத்தம்பகுதி அதிகாரத்தைச் செய்துவரும்போ து ஒருநாள் பூதத்தம்பி தனது மாளிகையில்கடந்த விருந்து க்கு அந்திராசியையும் அழைத்தான். அந்திராசிசெல்லுதலும் அவனைப் பூதத்தம்பி உபசரித்தழைத்துத் தணிமையான வோ சறையிலே போசனம்படைப்பித்து அவனுண்ணும்வரையும் பக்கத்தில்கின் றுபசாரம்பண்ணுமாறு இரண்டு ஏவலாளரை வைத்துவிட்டு மற்றவிருந்தினரை உபசரிக்குமாறு சென்முன். பூதத்தம்பிமனைவி பந்தி மேல்விசாரணைசெய்துகொண்டு போ
5
Page 61
102 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
கும்போது அந்திராசி இருந்துண்ணும் அறையினுஞ்சென்று பிரசாாகரையழைத்து வேண்டிய உண்டிவகைகளைக் குறைவி ன்றிப் படையுங்களெனத் தூண்டிப்போனுள். அந்திராசி பிற ர்மனேவியரைப் பெற்றதாயெனமதிக்கும் விரதமில்லாதவனத வின் அவள் முகத்தழகைக்கண்டான். இனிய குரலழகையுங் கேட்டான். அவள் நடையழகையும் நோக்கினன். அவன்கோ க்கோடு உள்ளமும் அவள்பாற் செல்லப்பெற்றன். தணியாப் பெருங்காதல் முளப்பெற்றன். அவனருங்கிய விருந்தெல்லாம் அவனுக்கு வேம்பாயிற்று. பரிசாரகர் வினவுக்கு அவன் யாது ங்கூருது மாமாயிருந்தான். பலகாற் கேட்டபின்னர் அவன் உணர்வுவந்து போதுமெனக்கூறி எழுந்து வாய்சுத்திசெய்து கொண்டுபோய் ஆசாரமண்டபத்திலிருந்து பூதத்தம்பியோடு பேசிக் கருத்தொருபாலிருக்கத் தாம்பூலந்தரித்து விடைபெற் து வீட்டுக்குமீண்டனன்.
*அவன் வீடுபோய்ச்சேர்ந்தவுடன் தங்கக்காசுகளும் வா சனத்திரவியமும் ஒருபட்டாடையும் ஒரு சந்தனப்பெட்டியி ல்வைத்து இதனைக் கொண்டுபோய்ப் பூதத்தம்பிமனைவி அ ழகவல்லிகையில் யாருமறியாவகைகொடுக்து, யான்வந்து கொ ண்டாடுவதற்கு ஏற்றகாலம் யாது’ என்று கேட்டுவாவென ஒரு தூதனிடங்கொடுத்து அவனையனுப்பினன். அவன்சென் அறு பூதத்தம்பியில்லாத சமயம் பார்த்து அவள்கையிற்கொடுத் துத் தன்துதைச்சொன்னன். அஃது அவள்செவியில் உருகி ய ஈயகீர்போலப் பாய்ந்தது. அவள் கொடுஞ்சினங்கொண்டு ஒரு செருப்பையெடுத்து அப்பெட்டிமீதுவைத்துக் கட்டுவித் து இதனக்கொண்டுபோய் அப்பாதகன்கையிற் கொடுத்திடுக வென்று அத்தூதனையுங் கண்டித்தனுப்பினுள். தூதன் நடக் ததைச்சொல்லிப் பெட்டியையுங் கொடுத்தான். அந்திராசி உ லகமெல்லாம் என்னடிவணங்க அழகவல்லிக்குமாத்திரம் மதி ப்பில்லாதவனனேன், என்தூதனும் என்னை மதிக்கமாட்டா G8ପot' ଶTଶot வெட்கமும் தக்கமும் மானமுந்தூண்ட, ஆருக் கோபமுடையணுகி இவள்செருக்கை அடக்குவேனெனச் சபத மிட்டுச் சமயம்பார்த்திருந்தான். அழகவல்லி அச்செய்தியை த் தனது நாயகனுக்கு உடனேசொல்லின் பெரும்பகை விளை யுமென்றஞ்சிச் சாந்தமான காலம்பார்த்தறிவிக்க எண்ணியிரு ந்தாள். இரண்டுமூன்று தினத்தில் அந்திராசி பூதத்தம்பியிட த்திற்சென்று ஒரு வெள்ளைக்காகிதத்தை நீட்டி, ‘கச்சாய்த்து றைக்குச் சிலமரங்களுக்குக் கட்டளையனுப்பவேண்டும், மசம் இத்தனையென்று கணக்குப்பார்த்து உடல்வாசகம் எழுதிக்கொ ள்ளுவேன், பின்பு உமக்குச் சாவகாசமிருக்காது, இதிற் கை
யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 103
யெழுக்திட்டுத்தாரும்'என்ருன். பூதத்தம்பி அதனைச் சாதமெ ன்றெண்ணிக் கையெழுத்திட்டுக்கொடுத்தான். அந்திராசி த ன்னெண்ணம் முடிந்ததென்று மகிழ்ந்துகொண்டுபோய் மறு காலிகிதத்தில் உடல்வாசகத்தைப் பறங்கித்தலைவனுக்கு ஒல் லாந்தரைவெல்லத் துணைபுரிவதாகவெழுதி ஒரு தூதனிடமலு ப்பிய பாவனைசெய்து, அதனைத் தான் &யுற்றுப் பிடித்தா ன்போலநடித்து ஒல்லாந்த தேசாதிபதிக்குக் காட்டின்ை. தே சாதிபதி அதனுண்மையை ஆராய்ந்து பொய்யெனக்கண்டு அ தனத்தள்ளினுன். அந்திராசி இதனுண்மையை நானறிவேன் இதுசெய்த பூதத்தம்பியைத் தப்பவிட்டால் ஒல்லாந்தவரசுக் குப் பழுதுண்டாம். என்னுயிரும் தப்பாதென்முன். அதற்கு த் தேசாதிபதி இணங்கிக் கொலைத்தீர்ப்பிட்டான். ஊர்காவ ற்றுறையிலே கடற்கோட்டை கட்டுவித்துக்கொண்டிருக்குங் தேசாதிபதி தம்பி பூதத்தம்பிக் குற்றநட்பினனுதலின், அ வனறியின் இத்தீர்ப்பு நிறைவேருதெனவெண்ணி, அந்திராசி காலதாமதஞ்செய்யாது அவ்விாவிற்றனே அநியாயமாகப் பூக க்தம்பியைக் கொல்லுவித்தான். உடனே அழகவல்லியும் உயி ர்விட்டாள். பூதத்தம்பி மைத்துனனுன கைலாயவன்னியன் அ தனையறிந்து கொழும்புக்குச்சென்று பெரியதேசாதிபதிக்கு ந டந்தவைகளைக் கூறினன். உடனே அவன் யாழ்ப்பாணத்தே சாதிபதியையும் அங்கிராசியையும் பிடித்துவருமாறு சேவக ரையனுப்ப, அவர்கள் தேசாதிபதியைக் கப்பல்மார்க்கமாகவு ம் அந்திராசியைக் கரைமார்க்கமாகவும் கொண்டுசென்றர்கள். செல்லும்போது தேசாதிபதி கடலிற்பாய்ந்துயிர்விட்டான். அ ந்திராசி பண்டாரத்தார்தோப்பென முசலிக்குச் சமீபத்திலு ள்ள காட்டில் யானையடித் தரைத்துக்கொல்லப்பட்டான்.”
பூதத்தம்பிநாடகம்,- பிள்ளையவர்கள் பூதத்தம்பிநாடகத் தைத் தமக்காதாரமாகக்காட்டி 'பூகத்தம்பிநாடகஞ்செய்த மா தோட்டத்துச் சுவான் கொஸ்தான்மகன் தாவீது என்பவன் இச்சம்பவத்துக்குச் சமீபகாலத்தவனதலால் அவனுண்மையா ராய்ந்தே பாடியிருத்தல்வேண்டுமென்பதும், பாடியவன் தானு ம் கிறீஸ்தவனுதலின் கிறீஸ்தவனுகிய அந்திராசிமேல் அபவா தஞ்சுமத்த மனம்பொருந்தானென்பதும், உண்மையொருபக் கமும் பழியொருபக்கமுமாக அரியசம்பவம் எக்காலத்தும் எவ்விடத்தும் நிகழ்வது இயல்பேயென்பதும் துணியப்படும்” என்கிறர். இக்கூற்றைக்குறித்துச் சக்தியவேத பாதுகாவலன் கூறியது இது. "தாவீது என்பவனின் காலம் யாது? மெஸ். வி ருத்துத்துரையுடைய குறிப்புகளின்படி (Vapavamaai XXX 1W) தாவீது கிறீஸ்தவரென்பதும் நிச்சயமல்ல. ஏனெனில்,
Page 62
04 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ஒருசைவனேப்போல கடவுள்வணக்கஞ் செய்திருக்கிருர் அன் றியும் அப்புலவர் சரித்திரமறியாதவர். அவர் யாழ்ப்பாண ஒல்லாந்த கவர்ணர் அந்தோனி அமிமுல் என்கிருரர். அந்தோ னியோ அமிருரல் தெமெனெசெஸ் என்பவன் யாழ்ப்பாணத் துப் பறங்கிக் கைப்பித்தான். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைப் பிடிக்குமுன்னே மன்னரில் அவர்களாற் கொல்லப்பட்டவன். (Peiris Ribeiro p. 384, 5) đ6ởr tọ_LIrở6örQ JuQ0 tô I96)yp. - ந்திராடோவை ஒர் தமிழ்க் குருகுலத்தவனென்றதுங் தவறு. அவன் ஒரு சிங்களனெனப் பல்டேயஸ்பாதிரியார் காட்டியி ருக்கிரு?ர். இப்படிப் பலதவறுகள் காணப்படுகின்றமையால் தாவீதுவுடையநாடகம் சரித்திரமாக எடுத்தாளப்படத் தக்க தல்ல. தாவீது மயில்வாகனப்புலவருடைய வைபவமாலையைப் பார்த்து தமதுநாடகத்தை எழுதியிருக்கவேண்டியது. மயில் வாகனப்புலவர் தமக்கிருந்த வேளாள அபிமானத்தைத்தழுவிக் கர்ணபரம்பரையால்வந்த ஒருகதையை மெய்யென்றெண்ணி எழுதிவைத்துப்போயினர். அவரெழுதியகாலத்துக்கும் சம்பவ த்துக்குமிடையிற் சென்றகாலம் எழுபத்தைந்துவருஷத்துக்கு மேலாகின்றமையால் அதற்கிடையிற் கதைமருவி வழங்கிவர த்தொடங்கியது அதிசயமல்ல. ஈற்றில் தாவீது கிறீஸ்தவரா கையால் கிறீஸ்தவரான அந்திராசிமேல் அபவாதஞ்சுமத்த ம னம்பொருந்தியிருத்தல் கூடாது என்ருாே பிள்ளையவர்கள். இந்தநியாயம் பொருந்தாதென்றது இதுவரையிற்றெளிவு. அ ந்திராடோமட்டுமல்ல பூதத்தம்பியுமே கிறீஸ்தவர். மேலும் அந்திராடோவைக் கரையானென்று இகழ்ந்து பூதத்தம்பிகா டகக்காரர் பாடியதும்வீண். நம்யாழ்ப்பாணத்துக் குருகுலத் தவர்கள் கொந்தளித்ததும்வீண். ஏனெனில் அந்திராடோ யாழ்ப்பணத்தவரல்லர். ஒரு சிங்களர்.” o
பூதனுராய்ச்சி.- 'பூதத்தம்பிக்கு ஏகபுத்திரனேயிருந்தா ன். அவன்பெயர் சோதிநாதன். அவன்மகன் பூதனாாய்ச்சி. பூதத்தம்பியினுடைய முன்னேரிடத்தில் புவனேகவாகுவிலு டைய பதக்கமொன்றிருந்தது. அப்பதக்கம் அச்சந்ததியார்க் குப் பிதிரார்ச்சிதமாகவந்து பூதனுராய்ச்சியார்காலத்தில் அவ ரால் கந்தசுவாமிகோவிலுக்குக் கொடுக்கப்பட்டது. அப்பதக் கம் இன்னும் நல்லூர்க் கந்தசுவாமிகோவிலி லிருக்கின்றது. பூதத்தம்பியிருந்தவிடம் பூதனுராய்ச்சிவளவென நல்லூர்க் க ந்தசுவாமிகோவிலுக்குக் கீழ்ப்பாலிருக்கின்றது” (யாழ்ப்பாண ச்சரித்திரம்)
இராசதுங்கழதலி- முன்கூறிய 'உலகுகாவலமுதலியை ஒல்லாந்தவாசினர் மந்திரியாக்கினர். அவனுக்கு மாபாலுயர்ந்
யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 105
த முதலியினது சகோதரியை விவாகஞ்செய்துவைக்கனர். ம ாபாலுயர்ந்தமுதலி பறங்கியரசனிடத்துத் தனதிகாரியாயிருந் தவன். ஒல்லாந்தர் அந்தவதிகாரத்தை அவனுக்குக்கொடுத்த னர். உலகுகாவலமுதலி சிலகாலத்தில் இறந்தான். ஒல்லாந்த வாசினர் அவனிடத்து மிக்க மதிப்புடையரா யிருந்தமையால் அவனுடைய அதிகாரத்தையும் அவனுக்குரிய வரிகைகளையும் அவன்மகன் இராசதுங்கமுதலிக்குக் கொடுத்தனர். அவன் த ன்மாதுலனுகிய மரபாலுயர்ந்த முதலியினது எழுபுத்திரிகளு ள்ளே ஒருத்தியை விவாகஞ்செய்தான். அவ்விவாகத்தை ஒ ல்லாந்ததேசாதிபதியும் பிரதானிகளும் சமுகமாயிருந்து சிற ப்போடுநடத்தினர்’ (யாழ்ப்பாணச்சரித்திரம்)
சோனகர்வால்- அப்பால் வைபவமாலை அடிதலைமாறி வரைந்திருக்கும் சிலவரலாறுகளை ஈண்டுத்தருவோம். 'அக் காலத்திலே சங்தச்சாய்பு என்பவனுல் மகமதுவின் மார்க்க த்திற்சேர்ந்த தமிழ்ப்பேசும் சில சோனகக்குடிகள் காயலிடி ட்டணமுகலிய இடங்களிலிருந்துவந்து தென்மிருசுவில் என் னும் ஊரிலே குடியிருந்து சாவுகச்சேரி, கொடிகாமம், எழு துமட்டுவாள், முகாவில் என்னும் இடங்களிலுள்ள சந்தைக ளில் வியாபாரம்பண்ணிக்கொண்டு தாங்கள் குடியிருந்தவிட மாகிய மிருசுவிலுக்கு உசனென்று பெயரிட்டார்கள். சிலகா லத்தின்பின் அவ்விடம் வசதிப்படாததினுல் நல்லூர்க் கந்த சுவாமிகோவிலிருந்த இடத்தில்வந்து குடியிருந்தார்கள். சோ னகர் குடியிருந்தால் கோயில்கட்டுங்காலம் தடையாயிருக்கு மென்றுகினைத்து, தமிழர்கூடி அவர்களையப்புறப்படுத்தத் தெ ண்டித்துங் கூடாமற்போயிற்று. அந்தகிலங்களுக்கு அதிகவி லைதருவோம் தாருங்களெனச் சம்மதிக்கவில்லை. ஒன்றுக்கு ணங்காததினுல் தமிழர் பன்றியிறைச்சியைச் சோனகருடைய கிணறுகளிற் போவிெத்தார்கள். அதைக்கண்டவுடன் சோன கர் அழுது புலம்பிப் பட்டினிகிடந்து ஆற்ருமல் தங்கள் பெரு நாட்களில் தாங்கள்வந்து தங்கள் சமயவழிபாடுகளைச்சேய்து கொள்ளத் தடைபண்ணுதிருப்பதற்குத் தமிழரைக்கொண்டு உடன்படிக்கையெழுதுவித்துக் கிடைத்தவிலையையும் வாங்கி க்கொண்டு நாவாந்துறைக்குக் கிழக்குப்பக்கமாய்க் குடியேறி னர்கள். (இதைப்பற்றி 69-ம் பக்கம்காண்க.) அக்காலத்தில் உத்தரகோசமங்கையிலே ஒர் பெருங்கலகம் மூண்டதினுல் அ தற்குப்பயந்து பலவேளாளரும்) சில விஷ்ணுசமய சிவசமய பி ராமணக்குடிகளெல்லாம் அங்கிருந்துவந்து காரைதீவிலே கு டியிருந்தார்கள்.
;) 6 ک
சாளநாட்டிலிருந்து சிலபட்குடிகள் வேளாளரின்கீழ்ப்
Page 63
106 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
பயிர்க்குடிகளாயிருந்து பிழைக்கலாமென்றெண்ணிவந்து அவ் வெண்ணப்படி பிழைக்க இடங்காணுககினல் சிலகுடிகள் த மமுருக்குத் திரும்பினர்கள். சிலர் சான்முாைப்போலப் ப&ன யேறுந்தொழிலைப் பழகினர்கள். மேற்கூறிய ஈழவரும் (ஈழ வர்வந்தது சகராசசேகா சங்கிலிகாலத்திலென்பது வைபவமா 2ல. இந்நூல் 35-ம் பக்கங்காண்க. ஈழவரின் ஆகிப்பெயர் ஈ ம்பிக்ள் என்ப. பள்ளரும் பனையேறத் தொடங்கிக்கொண்ட தினுல் சான்ருருக்குப் பிழைப்புக்குறைந்தது, அதினுற் சில சான்ருரர்கள் வெள்ளைக்காரவிடுகளில் ஆணும்பெண்ணுமாகப் பணிவிடைகளிலேற்பட்டுச் சீவனஞ்செய்தார்கள். சிலர் வலைவி சிப் பிழைத்தார்கள்.
முற்கூறிய ஈழவர்பள்ளரிற் சிலர் பிழைப்புக்கு வழியி ல்லாமையாற் தங்களை வேளாளர் முதலானவர்களுக்கு அடி 6). DESGT 5 எழுதிக்கொடுத்தார்கள். முந்நாட்களிற் சிலவறிய வர்கள் தங்களைக் கோவில்களுக்கு அடிமைகளாக எழுதிக் கொடுத்துக் கோவிற்பணிவிடைசெய்து சீவனஞ்செய்தார்கள். அதினுற் கோவிலாரென்று அழைக்கப்பட்டுக் கோவியரெனப் பேர்பெற்றர்கள். (இவையெல்லாம் தமிழரசர்காலத்தில்) பறங் கிகள் அரசாட்சியைக் கைப்பற்றிக் கோவில்களை யிடித்தபின் எசமான்கள் கோவியரைப் பிறருக்கு விற்பனைபணணினர்கள். பிற்காலத்தில் வடதேசத்திலிருந்து சிலசிறைகள் வடசிறைக் கோவியமென்னும் (பெயரால்) விலைப்பட்டார்கள். இப்படியே சிறைவிற்பனவு கொள்வனவு அதிகப்பட்டது.கண்டு உலாந்தே ச அரசாட்சியார் அவ்விற்பனவைத் தங்கள் அதிகாரத்தின்கீ ழாக்கி தங்களுக்கு வருமானத்தை உண்டாக்கினர்கள்.
இறப்பிறமாது சத்தியவேதமேயன்றி வேறுசமயங்கள் வழங்கப்படாதெனத் தங்கள் அதிகாரத்தாற்றத்ெது யாழ்ப்பா ணத்தை முப்பத்திரண்டுபற்முக்கிஒவ்வொருபற்றுக்கும்ஒவ்வொ ரு கோயிலைக்கட்டுவித்து (இது பறங்கியர்காலத்தில் ஒவ்வொ ருகோவிலுக்கும் தங்கள் குருமாரைகியமித்து அனைவரும் அ ந்தக்கோவில்களிற்போய் அறிவுகேட்கவும் கலியாணங்கைப்பி டிக்கவும் மற்றுஞ்சடங்குகளையும் தங்கள் சமயவிதிப்படிதான் செய்யவேண்டுமென்றும் பலவந்தம்பண்ணி வந்தார்கள். பல பலவரிகளை ஏற்படுத்தி அரசாட்சிக்கு வருமானத்தைப் பெரு
க்கிக்கொண்டார்கள்.
போகிச்சாதியாரிற் பலகுடிகள் தமிழரைச் சிவிகையில் வைத்துக் காவிவந்தார்கள். அவர்கள் சிவியாரென்று ஒருசா
யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 10ሽ
தியானர்கள். அவர்கள் சிவிகைகாவவும் கோவியரும் குடிமை களும் தங்கள் ஒழுங்குப்படி சிறப்புச்செய்யவும் வரிசைஏற்படு த்தவும் அவ்வரிசைகளை வரிசைப்பத்திரம் பெற்றவர்களன்றி மற்முெருவருஞ் செய்யக்கூடாதென்று கட்டளைபண்ணி, வரி சைப்பத்திரம் பட்டக்கடதாசி இவைகளாலும் அதிகவருமா னங்களைக் கட்டளைபண்ணித் தங்கள் சமயமே எங்குழ் நிறை வேறவேணுமென்று கட்டளைசெய்து உலாங்தேசர் இதுவரை க்கும் அரசாட்சிசெலுத்தி வருகிறர்கள்' இதுவரையும் யாழ்
ப்பாண வைபவமாலை.
தமிழ்ச்சாதிகள்- வைபவமாலைகுறித்த இத்தமிழ்ச்சாகி களின் வரலாற்முேடு ஒல்லாந்தர் வரைந்துவைத்த விரிவான சாதிவரலாற்றையும் அவ்வவற்றின் ஊழியம் ஆகியவற்றையும் ஈண்டுதருவ்ாம். இவ்விபரங்கள் தொமஸ் வன்றீ எனும் ஒல் லாந்த கொம்மாண்டோர் 1691-ம் ஆண்டு எழுதிய அறிக்கை ப்பத்திரத்தில் வருகின்றனவாயினும், பறங்கியர் சாலத்திலும் பெரும்பாலும் தமிழரசர்காலங்தொட்டும் இருந்த சீரையே வி ளக்குகின்றன:-
*யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த நாடுகளின் குடிசனங்களுள் 40 சாதிப்பிரிவுகளிருக்கின்றன. அவ்வச்சாதியார் பின் காட் டப்படும் ஊழியங்களையும் சில்லறைவரிகளையும் கம்பனிக் ச் செலுத்துவதோடு நிலவரி, சோலைவரி, வீட்டுவரி, தோட் டவரிகளையும் இறுக்கவேண்டியவர்களாம்.
11. வேளாளர். இவர்களே சகலசாதிகளுள்ளும் தொ கையால்மிகுத்தவர்கள். இவர்கள் கம்பனிக்காக வருஷத்தில் 12 நாள் வேலைசெய்வதும், 2 பணம் தலைவரியும், 1 பணம் அதிகாரிவரியும் இறுப்பதும் கடன்.
*2. சாண்டார். தொகையிற்குறைந்தவர்கள். இவர்களுக் கும் வேளாளருடைய கடமைகளேயுண்டு.
13. தனக்காரர். இவர்களும் மேற்படி.
14. பரதேசிகள். இவர்கள் யாழ்ப்பாணப்பட்டணத்தாரி ன் பின் வருவர். வேளாளரோடு சமத்துவமாய் வைக்கப்படு வர். இவர்கள் தாங்களிருக்கும் காணிக்காானுக்காக வருஷம் 12 நாள் வேலைசெய்து 2 பணம் தலைவரிமாத்திரம் இறுக்கவே ண்டியது. வேறுகடமையில்லை.
Page 64
0S யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
15. மடப்பளியும் மேற்படியே. அஞ்ஞானிகள் காலத்தி லே இவர்கள் பிராமணருடைய அடுக்களையில் உதவிசெய்யு
ம்படி வேலைகொள்ளப்பட்டார்கள்.
*6. மலையாளி அகம்படியார். 12 நாள் ஊழியஞ்செய்து 2 பணம் தலைவரியிறுக்கக் கடனளிகள்.
17. மீன்பிடிகாரர் ஆறு வெவ்வேறு வகுப்பாயுள்ளவர் கள். அவை: கரையார், முக்கியர், பரவர், செம்படவர், கடை யர், திமிலர் என்பவை. இவர்கள் வருஷத்தில் 12 நாள் க ம்பனியின் மாக்கலங்களிலே "கிலாசு”களாய் ஊழியஞ்செய் யவேண்டும். ஆயின் கொழும்புத்துறையிலிருப்போர் கம்பனி யின் வேலையாடகளைக் கல்முனைக்குக்கொண்டுபோய்க் கொண் டுவருவதும், அராலியார் தீவுபற்றுகளுக்குக் கொண்டுபோய் வருவதுமான ஊழியத்தையே உடையவர்கள். இதற்கு இவர் கள் தங்கள் சொந்தத்தோணிகளையே உபயோகிக்கவேண்டும்.
இதனேடு இவர்களெல்லாருக்கும் 2 பணம் தலைவரியுமாம்.
18. சோனகர் அல்லது மகமதியர். 2 பணம் தலைவரியும் 8 பணம் ஒப்பீசிக்காசும் கொடுக்கவேண்டும். (ஒப்பீசி அல்ல து கடமைக்காசு ஊழியத்துக்குப்பதிலாயிறுப்பது) இவர்களை த் தோணிகளைக் கடலிலிறக்கவோ கரைக்கிழுக்கவோ கூப்பி ம்ெபோதெல்லாம் இவர்கள் போகவேண்டியது. மேலும் க டைகளிலிருப்போர் கோட்டைக்குட் செப்புக்காசெண்ணப் பொக்கிஷகாரனுக்கு உதவிசெய்யவேண்டியது. இவர்களுக்கு வேறு கடமையில்லை.
19. செட்டிகளுக்குத் தலைவரி 2 பணம். அஞ்ஞானிகளா யுள்ளோருக்கு 4 பணம். இவர்களுள்ளும் கடையில் வியாபா ரஞ்செய்வோர் பொக்தகாரணுக்குக் காசு எண்ண உதவிசெய் யவேண்டும்.
10. தட்டார். தலைவரி 2 பணமும், ஒப்பீசிக்காசு 3 ப ணமும் இறுக்கவேண்டும். வேறுகடமையில்லை.
11. வண்ணுருக்குத் தலைவரி 2 பணமும், ஒப்பீசிக்கா சு 4 பணமும், காணியாட்சிக்காரர் கேட்கும்போது கோவி ல்களுக்கும் வீடுகளுக்கும் வெள்ளைகட்டுவதும், கம்பனியின் உத்தியோகஸ்தர்கள் ஊர்ச் சுற்றேட்டத்துக்குச் செல்லும்வே ளைகளில் வீடுகளை வெள்ளைகட்டி அலங்கரிப்பதும் இவர்களு
க்குக்கடன்.
யாழ்பபாண வைபவ கெளமுதி. 199
a 12, நெசவு கார்ர். 2 பணம் தலைவரியும், ஒப்பீசிக்காசு 5-9/20 பணமும் இறுப்பர். வேருெ ன்றுமில்லை.
*13. பறையருக்குத் தலைவரி 2 பண்மும், ஒப்பீசிக்கா சு 4 பணமும். இவர்களுக்கு ஊழியமில்லை. ஆயின் தங்கள் சொந்தக்கோயில்களுக்குச் சனங்களைக்கூட்டத் *தம்பேறு’ அ டிக்கவேண்டும். பறையடிக்கும் தொழிலுள்ளோருக்கு மாத்தி ரமே இந்த்க்கடமை.
*14. கிறீஸ்தத்ச்சர் தலைவரி 2 பணமும், ஒப்பீசிக்கா சு 2 பணமும், இறுப்பர் காணிக்காரனுக்கு அவர்கள் ஒரு நாள் சம்பளத்தோடும் ஒருநாட் சம்பளமில்லாமலுமாக 2 நீர் ள் வேலையுஞ் செய்யவேண்டும். அஞ்ஞானத்தச்சர் தலைவரி 2 பணமும், ஒப்பீசிக்காசு 3 பணமும் இறுப்பர். மேலும் இவ ர்கள் கம்பனியுடையவும், பிற ஆட்களுடையவும், மசக்கலங் களைச் சம்பளத்துக்குப் பழுதுபார்க்கவேண்டும். இவர்கள்
தொகை மிகச்சிறிது.
15. கிறீஸ்தகெர்ல்லர் கிறீஸ்த தச்சரைப்போலவே செ ய்யவேண்டியவர்கள். அஞ்ஞானக்கொல்லரும் அஞ்ஞானத் த ச்சரைப்போலவே. இவர்கள் தொகை மிகச்சிறிது.
*16. குசவர் 2 பணம் த்லைவரியும், 4 பணம் ஒப்பீசி க்காசும் இறுக்து கோட்டை கொத்தள வேலைக்குரிய மடக லங்களும் 'திறெசெல்லன” எனும் ஓடுகளும் கெர்டுக்கவேண்
டியவர்கள்.
*11. பள்ளர் அல்லது சாயவேர் பிடுங்குவோர் 2 ப ண்ம்தலைவரியும், 9-13/16 பணமலுப்பீசிக்காசும இறுத்துக் கா க்காரனுக்குச் சாயவேர் பிடுங்கிக்கொதித்துக் காசு வாங்கிக் கொள்ளக் கடனளிகள்.
*18. சாயக்காரருக்குத் தலைவரி 2 பணம், ஒப்பீசிக்காசு 4 பணம். இவர்கள் காண்க்காரனுக்குச் சீலைகாய்ச்சிக்கொடுக்கக்
கடனளிகள்.
*19. எண்ணெய்க்கார்ர் மேற்கூறியபடி வரிகொடுத்து
க் கம்பனிக்காக எண்ணெய் -வாக்கிக்கொண்டுவந்து கொள் விலைப்படி கொடுக்கவேண்டும்.
16
Page 65
110 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
'20. துரும்பர். ஈழவருடைய வண்ணுராம். இவர்கள் 2 பணம் தலைவரியும் 94 °தம்மக்காசும்’ இறுப்பர். வேருெ ன்றுமில்லை.
*21. சிவியார் கொம்மாண்டோருடையவும், திசாவையு டையவும் பல்லக்குகளைக்காவவும், இவர்கள் வீடுகளுக்கும் காவல்வீடுகளுக்கும் தண்ணீர் கொடுக்கவும் கடனளிகள். மே லூம் கொம்மாண்டோர்வீட்டிலும் திசாவைவிட்டிலும் முறை மாறி வேலைகாரராய் கிற்கவும், வருஷவீதம் 2 பணம் தலைவரி யிறுக்கவும் கடன்.
122. கன்னருக்கு ஊழியமில்லை. ஆயின் கம்பனிக்குச் செம்புச்சாமான் செய்துகொடுதது தலைவரி 2 பணமும் இறு த்துவரவேண்டும்.
*23. பெட்டி செய்வோர் வருஷத்தில் 2 பணம் தலைவரி கொடுப்பதொழிய இவர்களுக்கு வேறு கடமையில்லை
*:24. கேடயஞ்செய்வோர் கம்பெனிக்கு 'ருெண்டெல் லன்’ எனும் கேடயங்கள் செய்து கொடுக்கவேண்டும். இவர்
களுக்கு 2 பணம் தலைவரி
25. மேசன்மார் வருஷம் 2 பணம் தலைவரிகொடுத்து க ம்பனி கேட்கும்போதெல்லாம் சம்பளத்துக்கு வேலைசெய்யவு ம் வேண்டும்.
& 26. தையற்காரருக்கு ஊழியமில்லை. ஆயின் யாழ்ப்பா ணத்துக்கு வருகிற பெரிய உக்தியோகஸ்தர் வீடுகளை வெள்ளை கட்டி யலங்கரிக்கக் கடனளிகள். இவர்களுக்குத் தலைவரி 2 ப batti).
'21. செருப்புக்காாருக்கு ஊழியமில்லை. ஆயின் தலை வரி வருஷம் 2 பணம் கொடுக்கவும், கேட்டநேரமெல்லாம் தம் தொழிலைச் சம்பளத்துக்குச் செய்யவும் வேண்டும்.
*28. சிக்கிரகாரர் தலைவரி 2 பணமும், 83 இறைசால் ஒப்பீசிக்காசம் கொடுக்கவேண்டும். வேறு ஊழியமில்லை.
'29. நாவிதருக்கு ஊழியமில்லை. தலைவரி மாத்திரம்’வ ருஷம் 2 பன ம.
யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 111
'30. பிராமணருக்கும் அப்படியே. இவர்களும் வருஷம் 2 பணம் தலைவரியிறுப்பர்.
*31. தவசிகள். மேறபடி,
( 32. பள்ளிவிலிகளுக்கு கம்பனியின் மரக் கலன்களைக் கடலில் தள்ளியும், கரையிலிமுத்தும் விடுவதைத்தவிர, வேறு ஊழியமில்லை. இவர்கள் கோட்டையிலுள்ள கோயிலையும் கொ ம்மாண்டோர்வீடு திசாவையின் வீடுகளையும் சுத்திசெய்து வெ ள்ளையடிக்கவும் கடனுளிகள். முன்னே இவர்கள் கற்பிட்டிக்கு அனுப்பப்படும் மீன்பிடிகாரருக்குப் பதிலாய் இடையிடையே போகவும் கடன்பூண்டோராயிருந்தனர். ஆயின் இப்போது இவ்வழக்கம் கின்றுவிட்டது. இன்றைக்கும் இவர்கள் தலைவரி 2"பணம் இறுக்கவேண்டியவர்கள்.
*33, பா வருக்கு ஊழியமில்லை. ஆயின் கடையில் வியா பாரஞ்செய்வோர் கோட்டைக்குட் பொக்டிகாரனுக்குக் காசெ ண்ண உதவிசெய்யவேண்டும். இவர்களுக்குத் தலைவரி 2 பணம்.
**34. மறவர் கம்பனிக்குப் போர்ச்சேவகராய் ஊழி யஞ்செய்து தலைவரியும் 2 பணம் இறுக்கவேண்டும். வேறு ஒ ன்றுமில்லை.
*35. சனங்களுடைய அடிமைகளாயுள்ள பள்ளர், மாத மொருநாள் கம்பனியின் யானைகளுக்கு ஒலைகொண்டுவந்து கொடுக்கவும், கம்பனிக்காக அங்கிங்குபோகும் உத்தியோக ஸ்தருடைய பல்லக்குகளையும் சாமான்களையும் சுமந்துசெல்ல
வும் கடனுளிகள். இவர்களுக்கும் தலைவரி 2 பணம்.
*36. மேற்படி சனங்களுடைய அடிமைகளான நழவ ரும் மேற்கண்ட பள்ளாைப்போலவே ஊழியமும் வரியுமுள் ளவர்கள். வலிகாமத்திலிருக்கும் பள்ள அடிமைகள் கம்பன் க்குச் சிறையாம். இவர்கள் வெடிமருந்துத் திரிகைகளில் மாதம் 3 முதல் 6 நாள்வரையும் வேலைசெய்யவும், குதிரைகளுக்குப் புல் கொண்டுவரவும் வேண்டியவர்கள். இவர்களுக்குக் தலைவ ரியும் 2 பணம். இப்படியே கம்பனியின் கழச்சிறைகளுக்கும் சொல்லிக்கொள்க.
:37. காலிக்காற” (கோலியப்பறையரர்?) பறையரும் க ம்பனியின் அடிமைகள். இவர்களும் வெடிமருந்துத் திரிகைக
Page 66
112 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ளில் மாதங்தோறும் 3 முதல் 6 நாள் வேலைசெய்யவும், குதி ரைகளுக்குப் புல் கொண்டுவரவும், தலைவரி 2 பணம் இறுக்க இம் வேண்டியவர்கள்.
*38. சொட்டுக் காறப்பறையரும் கொட்டக்காரப்பறை, யாா?) கம்பனியின் சிறை. இவர்களும் மாதம் 3 நாள்முதல் 6 நாள் வெடிமருத்துத் திரிக்ைகளில் வேலைசெய்யவும், குதிரை க்குப் புல்கொண்டுவரவும், 2 பணம் தலைவரி இறுக்கவும் வே ண்டியவர்கள்,
* 39. சாண்டார் வெலெபேட்றெ” என்போர் கொம் மாண்டோர் சுற்ருேட்டஞ்செய்கையில், சாமான் சுமக்கவும, திசசவைக்குப் பந்தம்பிடிக்கவும் கடனளிகள். இவர்கள் தலை வரி 2 பணம் இறுப்பர்.
40. வலையர் அல்லது 'வெற்றிலைக் காார்” தலைவரி 2 ப. ணம் இறுக்கவும், கொம்மாண்டோருடைய அடுக்களைக்கு (1Բ சல்வேட்டை யாடிக்கொண்டுவந்து கொடுக்கவும் வேண்டியவு ர்கள்.
*கோடிக்கரையினின்றுவரும ஞானஸ்நானம் பெருத அ டிமைகள் கம்பனிக்கு ஒரு ஊழியமும் செய்யாமல் தலைவரி 1 பணம் இறுப்பர்.
*இங்கு பிறந்த சனங்களின் அடிமைகளான கோவியரும், கம்பனிக்கு ஊழியஞ்செய்யாமல் தலைவரி 1 பணம் மாத்திரம் கொடுப்பர்.”
இதுவரையும் ஒல்லாந்த தேசாதிபதியின் அறிக்கைப்பத் திரத்திற் கண்டது. அக்காலத்திருந்த சாதிப்பிரிவுகளையும், ஊழியமாதியவற்றையும் இங்கு எடுத்தோதியது, தமிழ்ச்சா திகளின் உயர்வு தாழ்வுகளைக் காட்டும் பொருட்டன்று. சரித் திர விநோதத்தின் பொருட்டேயென்பதை வாசிப்போர் மனத் திலிருத்திக்கொள்ளவேண்டும். இப்பழஞ் சாதிப்பிரிவுகளைப்ப ற்றி நூல்களிற்கண்ட லேறு சில குறிப்புகளையும் ஈண்டுத்தரு
வோம.
வேளாளர்-வேளாளரைச்சுட்டி அதிகம் சொல்லுதல் வேண்டப்படாது. வேளாளர் வேளிர் என இலக்கியங்களுட் கூறபபடுவோரோடு தொடர்புடையவர்கள்போலும். வேளிர்
பசழ்ப்பாண வைபவ கெளமுதி 重1@
*குலத்தவர்களுள் வேள் ஆய், வேள் அண்டிரன், வேள் எவ் வி, வேள்பாரி ஆகியோர் புறநானூற்றினுட புகழப்பட்டிருக் கின்றனர். பத்துப்பாட்டு முதலிய பிற இலக்கியங்களிலும் இ ப்பெயர்கள் வருகின்றன. கொல்காப்பியத்துக்கு நச்சினர்க்கி னியர்செய்த உரையிலே வேளிரைச்சுட்டிப் பின்வருவது கு றிக்கப்பட்டிருக்கின்றது. அகஸ்தியர் துவ சாபதிப்போந்து கில ங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்ம ரையும் பதினெண்கோடி வேளிருள்ளிட்டாரையும் அருவாள ரையுங் கொண்டுபோந்து காடுகெடுத்து நாடாக்கிப் பொதி யின் கண்ணிருந்தனர்” பின்னுமோரிடத்தில் வேந்து வினையிய ற்தை எனுஞ் சூத்திர அவதாரிகையில் ‘இது மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழைநரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன்ருெழி லுரித்தென்கின்றது’ என வரைந்தனர் வேளிச் துவரை நாட்டி னின்று தென்னட்டிற் குடியேறினரென்பது புறநானூற்றிலே இருங்கோஎனும் வேளைக் கபிலர்நோக்கி; நீயே
வடபான்முனிவன் நடவினிற்முேன்றிச் செம்புபுனைந்தியற்றிய சேணெடும்புரிசை யுவராவீகைத் துவரையாண்டு நாற்பத்தொன்பது வழிமுறைவந்த
வேளிருள் வேளே
என்றதிலேயும் தொனிக்கின்றது. இங்ஙனம் கூறப்பட்டுள்ள வேளிர் என்னும் குலத்தவர் யாதவரோடு ஒற்றுமையுடையவ ரென்பதும், மைசூரின் ஒய்சளயாதவர் இவர்களடியேயாமெ ன்பதும் 'செந்தமிழ்’ பத்திராசிரியர்கருத்து. யாதவர் ஒர்கா லம் தென்னுட்டின்கண்வந்து குடியேறினமையை மெஸ், தத் தர் ஆகிய சரித்திசாசிரியர்களும் குறித்திருக்கின்றனர். ஒய்ச ளயாதவர் தம்மை பேலாலரென அழைத்து வந்தமையும் அவ ர்கள் பட்டணங்களுளொன்று வேளூர் அல்லது வேளாளபுர மெனப் பெயர்தங்கியதும் பிரசித்தம். இங்ங்னம் யாதவரோ டு சிலர் ஒற்றுமைப்படுத்திப் பேசுகின்ற இவ்வேளிர் இருப குப்பினரெனத் தோன்றுகின்றது. ஒருசாரார் மங்தைமேய்க் குக் தொழிலுள்ளோராய் ஆயரெனவும், பொதுவயெனவும் அ ழைக்கப்பட்டனர். இவர்களே கலித்தொகை 104-ல் குறிக்க ப்பட்டோர்போலும். இவ்வாயர்கள் பெரும்பாலும்கண்ணனை வ ழிபடுவோராயிருந்தனர். மற்றவகுப்டார் ஏராண்மைத்தொழில் பூண்டவர்கள். இவர்களுள் நாட்டாண்மையுள்ளோர் தாம் வே. ஒளிரென விசேடித்துக் கூறப்பட்டனரென்ப. மற்றையோர் வுே
Page 67
14 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
ளாளரெனும் பொதுப்பெயர் கொண்டனரென் றெண்ணலாம்” (தமிழரின் பூர்வசரித்திரமும் சமயமும்) இவ் வேளாளர் சிங் கையாரியன் காலத்தில் மடடுமன்று அதன்பின்னும் இடையி டையே தொண்டை,பாண்டி,சோழமண்டலங்களினின்றும்வந்து பாழ்ப்பாணத்திற் குடியேறினரென்பது இச்சரித்திரத்தில் ஆ ங்காங்கு வெளிப்படும்.
வேளாளரும் மடப்பளியாகும்.--வன்றியின் பத்திரத்தில் முக் திய 6 சாதிகளும் சமனுக வைக்கப்பட்டிருக்கின்றமை கவனி க்கப்படத்தக்கது. சாண்டாருள் இருவகுப்பாரிருந்ததாக 2-ம் 39-ம் பிரிவுகளால் விளங்குகிறது. மடப்பளியாரைப்பற்றி வன் cசொல்லும் குறிப்பு தவறுபோலும். அந்த அறிக்கைப்பத் திாத்திலேயே இவர்களைப்பற்றிப் பின்வருமாறு ாேழுதியிருக் கிறது. *வேளாளர் மடப்பளியார் எனும் இருசாகியாருக்குமி டையிலே மிகப்பெரிய தீராப்பகையொன் றிருக்கிறதென்பதை இகுை நான்குறிப்பது அவசியமென்று எண்ணுகிறேன். இதி னல் யாழ்ப்பாணப்பட்டணத்தில் ஒரு சாதியை மற்றச்சாதியி ன் மேலாக வைத்துப் போடாதபடி எப்போதும் கவனஞ்செ லுத்தி வரப்பட்டது. ஆகையினலே கொம்மாண்டோருடைய கணக்கப்பிள்ளைகள் எனப்படும் இருவிகிதர்மாரும் சாதிக்கொரு ஆளாக இந்த இருசாதியிலிருந்தும் எடுக்கப்படுகிறர்கள். முன் சொல்லிய பகையின் நிமித்தமாய் இக்கணக்கப்பிள்ளைகளிருவ ரும் ஒருவசோடொருவர் சந்தோஷமாயிருப்பது அரிது. ஒரு வரையொருவர் நம்புவதுமில்லை. சாதிக்கொரு லிகிதர் வைத்தி ருப்பதினுல் சமநிலையைக் காத்துக்கொள்ளலாம். இதற்கு மா முய் இருவரும் ஒரே சாதியாராயிருப்பின் கொம்மாண்டோரின் தத்துவத்தைக்கொண்டு தங்கள் சாதிக்குச் சணுவாகவும், மற்ற ச்சாதிக்கு மாருகவும், அனேக காரியங்களைச் செய்துபோடுவா ர்கள். (English Transp. 12) மடப்பளியார் எதுவிதத்திலும் அட்டிற்காரர் அல்லரென்பது இந்நூலின் 36-ம் 40-ம் பக்கங் களிற் சொல்லப்பட்டவற்ருல் விளங்கும். வன்றீயின் வேளாள விகிதரே தனது எதிரியான மடப்பளி விகிதருக்கு மாமுய் இக் கதையை உண்டாக்கிச் சொல்லினரோ என்பதும் ஓர் சந்தே கம். வேளாளரின் எரிச்சலினுலேதான் மடப்பளியாருக்கு அ ட்டிற்காா உற்பத்தி கொடுக்கப்பட்டது என்பதும், சுத்தமான மடப்பளியாராயிருந்தோர் தமிழ் அரசர்களின் அந்தப்புசத்து ஸ்திரீகளிடம் பிறந்த அரசமைந்தர்களே என்பதும் ஆராய்ச்சி
alsoGs) ris CD is. (Ceylon Gazetteer p. 229. 3s)
பறையர்-பறையரைப்பற்றிய பின்வரும் குறிப்புகள் சா
யாழ்ப்பாண வைபவ கெள முதி. 15
ம்பான்குலவிளக்கத்தில் வருகின்றன. 'இச்சாதியாருக்குப் ப றையர் என்றபேர் பறையடித்தற்றெழிலால உண்டாயிற்றெ ன்று சாதாரணமாய்ச் சொல்வதுண்டு. ஆனல், இத்தொழி லைப் பறையர்கள் தவிர இன்னும் அனேக சாதியார் செய்கையா லூம், பறையர்கள் எல்லாருக்கும் அது சீவனுேபாயமல்லாமை யாலும் பறையர்களில் முரசுப்பறை என்ற ஒர் பிரிவார்மாத்தி ரம் முற்காலத்திற் பறையடித்துக் காலங்கழித்தமையாலும், இச்சாதியார் முழுமைக்கும் இப்பேர் வந்ததென நம்பவிடமில் லை. மேலும் பறையர்களுக்குப் பூர்வீகமான தொழில்கள் நெச வும், உழவும், வேடடையாடுதலுமாம். அன்றியும் பறையர்களு க்குச் சமானமாயுள்ள வடுகமாலனென்றபதமும், மலையாளப் புலையனென்றபதமும், கன்னட ஒலியனென்றபதமும் பறைய டித்தற்பொருளைத் தராமையால் பறையன் என்பது பறைய டித்தலா லுண்டாயிற்றென்று சொல்லுவது தவறு. 'பர்வதி யன்” “பகறியன்’ எனும் வடமொழிப்பதம் மருவிப் பறை யனென ஆயிற்றென்றது கன்னிங்காம், ஆபர்ட் (Col. 1 un0 ingham, Dr. Oppert) grifugaol u Qas air 605. -syg, at LD க்கும் இசைந்ததாகக் தோன்றுகிறது. பறையன் என்பதற்கு ப் பொருள் குறிஞ்சி அல்லது மலைகிலத்தைச் சார்ந்து வசிப்ப வன். வடுக மாலன் என்பதற்கும் அர்த்தமதுவே.”
பறையன் என்னும் பதமும், பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லாததொன்று. இச்சாதியாரைப்பற்றிய பின்வரும் வ ரலாறு சரித்திர சம்மதமாய்த் துணியப்படடது. 'திராவிடர் கள் ஆரியர் வருமுன்னமே காடுகளை வெட்டியும், நகரங்களைக் கட்டியும், நாகரீகத்துடன் வாழ்ந்தவர்களாகவும், அவர்களில் ஜாதிவித்தியாசங்கள் பிறகு உண்டாயிருந்தபோதிலும், அவை கள் ந்ேது திணைகளுக்குத் தகுந்தபடி ஏற்படுத்தப்பட்டிருந்த தாகவும் தெரிகிறது. நெய்தல் நிலத்தில் வசித்தவர்கள் யாவரு ம் நுளையர் வலையரென்றும், மருதநிலத்தையடுத்தவர்கள் மள் ளர் கடைஞரென்றும், முல்லைநிலத்தில் இருந்தவர்கள் இடைய ர் தொதுவர் கொல்லரென்றும், பாலைநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேடர் வில்லியர் எயினரென்றும், குறிஞ்சிநிலமாக்கள் குறவர் சவரர் என்றும் சொல்லப்படுகிருரர்கள். ஆரியபபிராமணர் தக்த ணத்தில் குடியேறிய பிறகு கிராமங்களை உண்டுபண்ணுவதில் மேற்சொன்ன ஏற்பாடுகளை அனுசரித்தே தெருக்கள் அமைக் கப்பட்டிருந்தன. அக்காலங்களில் கிராமத்தைச் சுற்றி எங்கு ம் காடாயிருந்தமையால், குடிகளை திஷ்டமிருகங்கள் வருத்தா தபடி அவைகளே வேட்டையாடிக் கொல்லும்பொருட்டு அத் தொழிலச் செய்யும் எயினர் வேடர் முதலிய காடுவாழ் ஜாதி
Page 68
யாழ்ப்பாண வைபவ கெள்முதி.
யார் கிரீசம்ங்களுக்குப் புறம்பே வசிக்கவேண்டியது அவசிய மாயிருந்தது. இவ்வாறு காடுகள் கிராமங்களில் வசித்தசாதிக் ள் இருளர் எயினர் வேடர் முதலானேர். இவர்கள்காட்டுமிருக ங் த்ளேக்கொன்று தின்றமையால், புலையர், கவண்டர், சண்டாள ர்என்ற பேர்களும் உண்டாயின. திராவிட அரசர்களால் அழை க்கப்பட்டு ஆரியர் தென்னுடுகளில் குடியேறியபின் காட்டி லே வாழும் வேடர் முதலானவர்களைத்தவிர, கிராமங்களையடு த்து ஊரிலும் காட்டிலும் சீவனம்செய்த எயினர் முதலான குறிஞ்சி பாலைநில மாக்களுக்கு அவரவர்தொழில் காரணமாக வே மிக்க தாழ்மையும் அவமதிப்பும் உண்டானது. இவர்களி ன் வம்சத்தார்தான் தற்காலத்திய பறையன், புலேயன். சிறுமி பன், ஒலியன், மள்ளன் (பள்ளன்) மாதிகன் அல்லது சக்கிலிய ன்’ என்ப.
இச்சாதியாருள் அக்கினிப்பறையர், கோலியப்பறையர், கோட்டைப்பறையர், சாம்பான்பறையர், சங்கிடும்பறையர், தங் கலான்பறையர், பச்சைப்பறையர், வலங்கமுகத்தார், வள்ளுவ ப்றையர், கொட்டகாரப்பறையர், தச்சப்பறையர், தாதப்பறை யர், சாலியப்பறையர், செங்குத்தப்பறையர், தோட்டிப்பறைய ர், வெட்டியான்பறையர் எனப் பலபிரிவுகளுண்டு. யாழ்ப்பர்ண த்தி லிப்பெயர்கள் பெரும்பாலும் வழங்காதொழிந்தன. இ வற்றிற்குப் பதில் கைதடியாகிளே, கோலியனுகிளை, நல்வரா ளை, அகம்படியாகிளை, தொண்டமனகிளை ஆதிய பதினெட் க்ெ கிளைகளாகப்பிரித்துச் சொல்லுவர். தம்மைக் குடிமக்க ளாய்க்கொணர்ந்த பெரிய வேளாளருடைய நாமங்களினல் இ ற்றைவரைக்கும் அறியப்படுங் கிளேகளும் உள. கந்தனன கண் கனுன கனகசேகரமெச்சன், குலசேகரமெச்சன் ஆதிய பறை பரின்பட்டங்கள் அன்னேரின் எசமான்களையே சுட்டுகின்றன.
பள்ளர் நழவர் - பள்ளரில் ஒருபிரிவார் (11) சுயாதீ னமுள்ளோராயும் ஒருபிரிவாரே (35) அடிமைகளாயுமிருந்த தைக் காண்கின்ருேரம். பறையருள்ளும் இப்படியே. நழவரில் சுயாதீனமுள்ளோர் அக்காலம் இல்லைப்போலும். ஆயின் கோ ட்டைவாசல் நழ்வர் தாம் அங்காட்டொட்டுக் கத்திக்கார் வ குப்பாரேயாய் அடிமைச்சாதனம் எழுதிக்கொடாதிருந்தனர் என்பர். ஒல்லாந்தரின் சிறையாயிருந்தோர் இன்றைக்கும் கம் பனிக்காாரென்று அழைக்கப்படுகிருரர்கள்.
சிவியார் - இச்சாதியார் மேல் உத்தியோகஸ்தர்களுக்குச் சிவிகைதாங்குவோாாகக் காணப்படுகின்றனர். பிறருக்குச் சிறை
யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 1
ப்பள்ளரே பல்லக்குக்காவுவோராயிருந்தனர். தமிழரசர்காலங் தொட்டுச் சிவியாருள் முதன்மைபெற்ற மனுஷருமிருந்தன ரென்பது யாழ்ப்பாணச்சரித்திரக்காரர் கூற்றினல் விளங்குகி றது. அது பின்வருவது: பாராசசேகரன் தான் "பகைவருக் கஞ்சி இரவிலோடமுயன்றபோது தன்னையும் மனைவியையும் புத்திாரையும் பகைவர்கைப்படாவண்ணம் காத்துப் பல்லக்கி லிட்டு மிகவிரைவிற்கொண்டுபோய்க் களவிற் முேணியேற்றிய சிவிகைத்தலைவனை வரவழைத்து “நீ எம்மிடத்து மிக்கவிசுவா சமுடையவன யிருந்தமையால் உன்னை எமதுபுத்திரனுகப் பச வித்தாம். அதற்கறிகுறியாக அப்புத்திரன்பெயரை உனக்குப் பட்டமாகத்தந்தாம். 'இனிமேல் உன்பெயர் பாராசசேகரக் கூ றியானென வழங்குவதாக’ என்று ஆஞ்ஞாபித்து நீ ஒருமு ச்சிலோடி எல்லையிடுமிடத்தையும் உனக்கு மானியமாக வழங் கினமென்முன். அவனவ்வாருேடிப் பெற்றவிடமே சிவியாதெ ருவென்பர். கூறியான் இராசவாவுகூறிச் சிவிகைமுன்செல்லு ங் கட்டியக்காரன்” தற்காலச்சிவியாருட் பலபிரிவுகளுள.
ஊழியம்அல்லதுஇராசகாரியம்- அக்காலத்தில் ஊழியக்க டமை ஒர்மகிமையாகவே நோக்கப்பட்டது. கீழ்சாதிகளென எண்ணப்பட்டோருக்கு ஒரு ஊழியமுமின்றி யிருந்தது. இரா சகாரியம் ஒல்லாந்தர்கால முழுமையும் நடந்து நம் இங்கிலீஷ் அரசுத் தொடக்கத்திலும் செல்லுவதாயிருந்து 1832-ம் ஆ ண்டு சித்திாைமாசம் 12-ந் திகதி பிரித்தானிய அரசரின் ஒர் சட்டத்தினுல் அழிக்கப்பட்டது. வரிகளுட்பல நெடுங்காலம் நின்று பின்னரே நீக்கப்பட்டன. தலைவரிமுதலிய சிலவரிகள் இன்றைக்கும் நடைபெறுகின்றன.
ஒல்லாந்தர் குடியேறல்- இவைகிற்க, இனி யாழ்ப்பாண அரசு கைக்கொண்டோரின் செய்திகளை விசாரிப்பாம். கொ டக்கத்தில் ஒல்லாந்தபடைவீரர் பெரும்பாலும் மனைவிமக்க ளின்றி இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் வந்திருந்தனர். ஆயின் விரைவிலே பெருந்தொகையான ஒல்லாந்தகுடும்பங்க ளும் 8ரோப்பாவின் பிறவிடங்களினின்றும் ஒல்லாந்தரோடு ஒற்றுமைப்பட்டு அவர்கள்பாஷையைப் பேசிவந்த குடும்பங்க ளூம் அரசினர் அழைக்கவந்து பட்டணங்களிற் குடியேறின. இவர்கள் கப்பற்செலவின்றி இங்குகொண்டுவந்து விடப்பட்டு அவரவர் செய்கைபண்ணுவிக்கத் தக்கநிலமும் இனமாகக் கொடுக்கப்பட்டது. ஆயின் நிலத்தைச் செய்கைபண்ணுவதி லே அதிக ஆதாயம்வராமையைக்கண்டு இவரெல்லாம் இலக
1.
Page 69
18 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
கையின் பலபட்டணங்களிலும் தங்கித் தத்தமக்கியன்ற கைத் தொழில்களிலேயே அமர்வோராயினர். 8ரோப்பாவினின்று ம் வந்தோச் 15 வருஷங்களுள் மீண்டு தம் சுயநாட்டுக்குப் போகப்படாதென்பது பொருத்தம். அக்கெடுவுக்குப் பின்போ வோரும் தஞ்செலவிலே போகவேண்டியோராயினுர்கள். இங் நுனமே ஒல்லாந்தர் நம்நாட்டைத் தமது குடியேற்றநாடுகளு ளொன்முக்க வருந்தினர்.
காலஞ்செல்லச்செல்ல ஒல்லாந்தருள் இரு புதுவகுப்புக்க ள் ஏற்பட்டன. ஒன்று 'துப்பாசி” என்னப்படுவது. மற்றது **விபெட்டீனி” என்னப்படுவது. துப்பாசியென்போர் யாரெனி ல் பறங்கிகளும் சுதேசிகளும் சேர்ந்துபிறந்த கறுத்தப்பிள் ளைகளாம். லிபெட்டீனிகள் முன் ஒல்லாந்தரின் அடிமைகளா யிருந்து விடுதலையாக்கப்பட்டவர்கள். இப்பிந்தியவகுப்பார் கச லகதியிலே துப்பாசிகளோடு ஒன்முய்விடத் துப்பாசியெனும் சட்டைக்காரர்வகுப்பே எஞ்சிகின்றது. இவர்கள் சுத்த ஒல் லாந்தருக்குக்கீழான ஓர் வரிசையிலுள்ளோராய் 'தம்பேறு' அடித்தல், பல கைத்தொழில்கள்புரிதல் ஆகியமுயற்சிகளை மே ற்கொண்டு தற்காலத்தில் ஒர் புறம்பான சாதியாராய் விளங் குகின்றர்.
அாசியல்- ஒல்லாந்தரின் மாகாணப்பிரிவுகள் பழையப டியேயிருந்தன. யாழ்ப்பாணத்தை ஒர்கொம்மாண்டோர் அரசி யற்சங்கத்தின் உதவியோடு கொழும்புக் கவணரின்கீழ் ஆண் டுவந்தான். இப்படியே காலியிலும் ஒர்கொம்மாண்டோர் இ ருந்தனன். ஆயின் அதிகார வரிசையின்படி கொழும்புக்குப்பி ன் யாழ்ப்பாணமும் அதன்பின்னரே காலியும்வந்தன். பலமு றையும் கொழும்புக்கவணர் மாற்றம்பெறும்போது யாழ்ப் பாணக் கொம்மாண்டோரே கவணாாகியும்வந்தான். பறங்கி யர்காலத்திற்போலவே கொம்மாண்டோரின்கீழ் ஒல்லாந்தசா தியானேயாகிய ஒரு "திசாவை’ வைக்கப்பட்டிருந்தான். த சாவையின்கீழே ஒப்பர்கூப்மன், கூப்மன் ஒண்டர் கூப்மன் ஆகிய உத்தியோகஸ்தர்களும் இவரின்கீழேயே முதலிமா ரா தியோரும் இருந்தனர்.
கூப்மன் முதலான உத்தியோகங்கள் வர்த்தகர்களைக் கு றிக்கின்றவைகளாயிருந்தன. கூப்மன் என்பதன் கருத்து வர்க் தகன். ஒப்பர்கூப்மன் மேல்வர்த்தகன், ஒண்டர் கூப்மன் உப வர் த்தகன். ஒல்லா நத அரசினால்ல அவ்வரசின்கீழ் உண்டான "கீழ்ஈந்திய வியாபார சமுதாயம்’ எனும் ஒர் கம்பனி”யே
யாழ்ப்பாண வைபவ கெளமு தி. 119
இலங்கையைப்பிடித்து அரசு செய்தமையால் இவ்வாருரன உத் தியோகங்கள் எழுந்தன. அரசியலும் வியாப்ாாப் போக்காக வே நடைபெற்றது.
நீதிபரிபாலணம்- ஒல்லாந்த அரசின்கீழ்க் கொழும்பிலே *முட்வன்யஸ்றிஸ்’ எனும் சுப்பிரிங்கோடும் அதற்குமேலான கோடு வத்தாவியாவிலுமிருந்தன. யாழ்ப்பாணத்தில் “முட்வி ன்யஸ்றிஸ்’ எனும் பெரியகோட்டுக்குக் கொம்மாண்டோரே நீதிபதியாயிருந்தான். 'லாண்டிருட்’ எனும் கீழ்க்கோட்டுக்
யாழ்ப்பாணத்துத் திசாவை நீதிபதி. மன்னரிற் கீழ்க் கோடுமாத்திரமிருந்தது. ‘கந்தோர்’ எனுஞ்சொல்லு ஒல்லா ந்கரினின்றே தமிழில் இக்காலம் வழங்குகின்றது. ஒல்லாங் த கம்பனியாருடைய நீதிப்பரிபாலனமும் பெரும்பாலும் யாபாரமுறையாயிருக்கது. இதிற் பலதாறுமாறுகளும் நடந்த ன. பலதடவைகளில் ஒல்லாந்ததிே ஒருவீட்டுக் கருமம்போ ல ஒழுங்கின்றி நடந்ததுமுண்டு. இதற்டுப் பின்வரும் கர்ண
பாரம்பரியம் சாட்சி.
*உலாந்தாக்காரர் யாழ்ப்பாணத்தைப்பிடித்து அரசுசெ ய்யவந்த தொடக்கத்திலே பட்டணத்தின் மத்தியிலேயுள்ள கிறயிஸ்ற்சேட்சுக்கு வடபக்கமாகவுள்ள டச்ஹவுஸ் எனப்படு வது நீதித்தலமாயிருந்துவந்தது. உலாந்தவரசு நீதிபதி அம் மனைவிருந்தையிலே நின்றுகொண்டுஎழுத்துக்கிறுக்கில்லாதுவா ய்ப்பிறப்பிலே வழக்குகளை விசாரித்துத் தீர்வையிட்டுக்கொண் டு வருவார். பூகனென்பவன் வந்து ஆண்டவனே என்னைக் கந்தன் அடித்துப்போட்டானென்று முறையிட்டால் நீதிபதி கந்தனைக்கூப்பிட்டு அடேகங்தா நீயேன் பூதன அடித்தால்ெ ன்று கேட்க, கந்தன் 8யோ ஆண்டவனே நான் அடிக்க ல்லையென்பான். நீதிபதி என்னடா நீயேன் பொய்பேசுகிருய நீ அடித்ததுமெய்தான். போ மூன்று மாச மறியலுக்கு என்று சொல்லி மறியற்கூடத்துக்கு அனுப்பிவைப்பார். அன்று சாயங் தாமோ மற்றநாளோ ஒருத்தி ஒரு பெடடிக்குள்ளே ஏதோ வைத்துக்கொண்டு நீதிபதியின் விருந்தையில் வந்தேறுவாள். நீதிபதி அவளைப்பார்த்து நீயார்? இந்தப்பெட்டிக்குள்ளே எ ன்ன? என்று கேட்பார். அவள் ஆண்டவனே நான் நேற்று மறியலுக்குப்போன கந்தனுடைய காய். நோணுவுக்குக் கோப் பிக்காகப் பனங்கட்டி கொண்டுவந்திருக்கிறேன் என்பாள். நல்ல தும் அதை யன்னலிலே வைத்துவிட்டுப்போ என்பார். அவள் போனபின் அந்தப் பனங்கட்டிக்குட்டான்களை உலுர்த்
திப்பார்த்தால் அவற்றுளே பூவராகன்களிருக்குமாம். நீதிபதி
Page 70
120 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
சந்தோஷப்படடுக்கொண்டு மற்றநாட்காலை ஜெயிலரை அழை த்து நேற்று நான் மூன்றுமாசமறியலுக்கு அனுப்பின கந்த ன் என்பவன் பூதனை அடித்ததில்லையெனச் சொல்லுகிருச்கள். அவன்மேலே வைத்தவழக்குப் பொய்யென்கிறர்கள். அவனை இங்கே அனுபபிவிடு என்பார். கந்தன் வந்தவுடனே போடா போ உன்வீட்டுக்கு ஓடு என்றுசொல்லித் துரத்திவிடுவாரா ம். இதுவே அக்காலத்து5டந்த நீதிப்பரிபாலனமென்று மூத் தோச்சொல்லக் கேட்டிருக்கிருேம். அக்காலத்திலும் அவ்வரசி அலும் நடந்தமாதிரியான பரிபாலனம் இக்காலத்திலே இங்கிலீ ஷ் அரசிலே நடந்துவருகிறதென்று சொன்னுல் யாராவது நம் புவார்களா? (சத்தியவேத பாதுகாவலன் )
சுதேச நீதிபதிகள்.- ஒல்லாந்தர் அரசு கைப்பற்றிய வுட ன்கையில் யாழ்ப்பாணத்தின் நாலுபிரிவுகளுக்கும் தீவுப்பற்றுக் களுக்கும் ஒவ்வோர் முதலியாரும் இறைசுவதோரும் (Recebedore இறெசிதோர்) ளாக்கும் நியமிக்கப்பட்டனர். யாழ்ப்பாண த்தில் ஒல்லாந்தவரசை 15ாட்டினவனுன றிக்லோவ் வன்ஜென் ஸ் என்பவன் 1658-ம் ஆண்டு ப்ேபசிமாசம் 31-ந் திகதி வ ரைந்த கட்டளையிலே பின்வருமாறு எழுதியிருக்கக் காண்கி ன்ருேம். பறங்கியர்தாமே வகித்த பல அரசிறை உத்தியோ கங்களும் நீதிபரிபாலன உத்தியோகங்களும் சுதேசிகளுள் மே ல்சாதியிலுள்ளோருக்குக் கொடுக்கப்படவேண்டும். கடனைப்ப ற்றிய 'சீவில்” வழக்குகளெல்லாம் சுதேசிகள்சேர்ந்த ஒர் கோட்டிலே விளங்கப்படும். இக்கோட்டுக்கு ஒர் ஒல்லாந்த உத்தியோகஸ்தர் தலைவராயும் வேருெ?ருவர் **சக்கிடுத்தா'ரா கவுமிருப்பார். யாழ்ப்பாணத்திலுள்ள இக்கோட்டின் அங்கத் தவர்களான வேர் முதலிமாரும் நால்வர் இறைசுவதோர்களு ம் நால்வர் களாக்குமாரும் பின்வருமாறு நியமிக்கப்படுகின்ற ଉst at:
வலிகாமப்பிரிவுக்கும் தீவுகளுக்கும், இராசகாரியர், தீவு களுக்குக் கம்பனியின்முதலியார். “வெறிவிலன்தூ ஜன்’ (இவ் வாறு குறித்தபேர்கள் விளங்கவில்லை) வலிகாமப்பற்றுக்குக் க ம்பனியின்முதலியார் டொன்பிலிப்பு:இறைசுவதோர். கவுரியே ல் கிளாக்கு அல்லது சக்கிடுத்தார்.
வடமராட்சிப்பிரிவுக்கு, கனகராயர், இப்பற்றுக் கம்பனி யின்முதலியார். டொன்மனுவல் சேனாட்ன, முதலியாரும் இ றைசுவதோரும். 'திறெவெற் வொந்துரன மாப்பாண"கிளாக்கு
யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 121
தென்மராட்சிப்பிரிவுக்கு, *கொன்சியகுமாா’ இப்பற்றுக் கொம்பனியின் முதலியார். "செவெடகடல்லெ” முதலியாரு
ம் இறைசுவதோரும். அம்பலவாணர் கிளாக்கு,
பச்சிலைப்பள்ளிப்பிரிவுக்கு “சித்தியூரிய’ இப்பற்றுக் கம் பனியின்முதலியார். டொன்கஸ்பார் இறைசுவதோர். அம்பகர்
கிளாக்கு.
தீவுகளுக்கு யோவான்பூண் தே” இறைசுவதோரும் கிளா ககும். பறங்கியருடைய இறைப்பகுதிக்கு (இவைகள் தோம் பில் சேர்க்கப்படுமட்டும்) "சிங்ககாவல”, கம்பெனியின் முதலி
யார். பிளாண்டிய” கிளாக்கு,
*மடப்பளி அகம்படி எனும்சாதிகளுக்கு ஒர் சனுவுப ண்ணும் பொருட்டும் இவர்கள் கோபியாதபடி சாந்திசெய்யு ம்பொருட்டும் இவர்கள்சாதியிலிருந்தே இவர்களுக்கோர் தலை வனநியமிப்பது அவசியமாயினமையால் இவ்வுத்தியோகத்துக் குக் கம்பனியின் முதலியாராகிய மனப்புலி அந்திராடோ கி யமிக்கப்பட்டிருக்கிறன். இவன் தன்சனத்தினுல் மிகவும் க ண்ணியமட்ைந்தவனும் கம்பனிக்கு விசுவாசமுள்ளவனுமென் று எண்ணுகிறேன்.
**இவர்கள் பதினறுபேரும் தேவையானபோதெல்லாம் கூடிவரத்தக்கதாகப் பட்டணத்திலேயே வசிக்கவேண்டும். மு கலியார்மாருள்ளும் இறைசுவதோர்மாருள்ளும் வருஷங்தோறும் தெரியப்படும் நால்வர் 100 பணத்துக்கு மேற்படாத 'சீவி ல்” வழக்குகளைத் தீர்க்கும்படி நீதிபதிகளாய்த் தெரிவுசெய் யப்படுவார்கள்.முதலிமாரும்இறைசுவதோர்மாரும்மாசவிகம்10 பணமும் ஒருபறை அரிசியும் வேதனம்பெறுவர். கிளாக்குமா ருக்கு 8 பணமும் முற்கூறியளவு அரிசியும் கிடைக்கும்.
*முதலிமாரின்கடமை யாதெனில், தத்தம்பிரிவுகளில் நட க்கும் சங்கதிகளைவிசாரித்து காலத்துக்குக்காலம் 'ஹிப்போட் டுச்”செய்தலாம். அவ்வப்பிரிவில் நடக்கும் சகலவேலைகளும் (உதாரணமாய் கூலியாட்கள் அல்லது வேலைகாரர் வேண்டி யபோது).அவர்கள்மூலமாகவே நடக்கும். இறைசுவதோர்மாரின் கடமை யாதெனில், தோம்பின்படி வரிகளையறவிட்டு lp് ഉ மாசத்துக்கொருமுறை கொம்மாண்டோரின் உத்தரவுப்படி பொக்ஷகாரனிடம் ஒப்பிப்பதாம். கிளாக்குமார் அவற்றின் வ ரையறைகளைப் பதிந்துவைத்துத் தோம்புக்காரனின் கணக்
Page 71
122 யாழ்ப்பாண வைபவ கெளமுகி.
கோடு அவை ஒத்துவருகின்றனவோவெனப் பார்த்துக்கொள் ள வேண்டும்’ இதுவரை வன்ஜென்சின்கட்டளையிற் கண்டது.
இவ்வாறு கீழ்வழக்குகளைத்தீர்க்கும் பொறுப்பு ஆதியிற் பெரும்பான்மை சுதேசிகள் கையில் விடப்பட்டிருந்தும் விரை வில் ஒல்லாந்தர் பறங்கியர்காலத்திற்போலவே செய்யத் தலைப் பட்டனர். 1661-ம் ஆண்டில் முதலிமாருக்கிருந்த இவ்வுத்தி யோகம் நிறுத்தப்பட்டு யாழ்ப்பாணத் திசாவையி னுத்தியோ கத்தோலி ஒன்று கூட்டப்பட்டது. ஆயினும் தீவுப்பற்றுக்களி ன் முதலியாராயிருந்த இராசகாரிய முதலியாரும், மடப்பளி யாரின் முதலிமாராயிருந்த கிற்சிங்கம், டொம்சுவாம், அந்தி ராடோ என்போரும் காட்டியிருந்த இராசவிசுவாசத்தினிமி த்தம் தத்தம் உத்தியோகத்தில் விடப்பட்டிருந்தனர்.
வருமானங்கள்.- ஒல்லாந்தர் முக்கியமாய் வர்த்தகத்தின் பொருட்டே இலக்ைேகயையடைந்தாாாதலால் தமது அரசிறை வருமானத்தைப் பெருக்குவதற்கே ஆகிதொட்டுக் கண்ணுயி ருந்தனர். முன்பு நெல்வேளாண்மையைச் சனங்களுள் ஊக்கி த்தும் பறங்கியரசுக்குரியதாயிருந்த விஸ்தாரமான வயல்களில் அரசினர்பொறுப்பில் நெற்பயிர் செய்வித்தும்வர முயற்சிபண் ணப்பட்டது. பூநகரியில் ஆயிரக்கணக்கான பரப்புநிலத்தைச் செய்கைபண்ணத்தேடினர். மாதோட்டத்திலுள்ள இராட்சத குளத்தைத் திருத்தயோசித்தும அம்முயற்சி ஒப்பேறவில்லை. இராட்சதகுளத்தைக் கட்டுவதற்கு ஒல்லாந்தர் கூப்மன் வோ ஸ்ச் என்பவனின்கீழ் வடகரையிலிருந்துவந்த 100 அடிமை 5డిr அனுப்பியிருந்தனர், அதனல் 112 மைல் சுற்றளவுள் ள தேசம் நீர்ப்பாய்ச்சப்படுமென பதிப்பிடப்பட்டிருந்தது. 历瓜 டெல்லாம் அரசினருக்காயிருந்த வயல்களில் வேலைசெய்து நெல்லை அரசினருக்குக் கோடிக்கரையினின்றுவரும் கெல்வி லேப்படி விற்றுவிடச் சுதேசகமக்காரருக்கு உத்தரவுகொடுக் கப்பட்டது. தாமாக இவ்வாறு வேளாண்மைசெய்ய விரும்பா தோர் அரசினர்பொறுப்பில் தமக்குக் குறிக்கப்பட்ட நாள்வி தம் ஊழியஞ்செய்து வேளாண்மைக் குதவிசெய்யவேண்டி யோராயினர். இவ்வாறு முயற்சித்தும் சனங்களுக்குப் போதி யநெல் யாழ்ப்பாணத்தில் இல்லாமையால் பிறதேசங்களிலிரு ந்து அரசினர்பொறுப்பாகவே நெல் வருவிக்கப்பட்டது. திரி கோணமலை மட்டக்களப்பிலிருந்து கெல் வருவிக்கப்படாதெ ன முன் கட்டளை செய்திருந்தும் பின் இக்கட்டளை நீக்கப்பட்ட அ. பிற்காலம் அரசினர் வயல்கள் சனங்களுக்கு விற்கப்பட்டன.
வாழ்ப்பாண வைபவ கெளமு தி. 2 3
பருத்திச்செய்கை.-- பறக்கியர்காலத்திலும் அதிகமாய் ஒ ல்லாந்தர்காலத்திலேயே பருத்திச்செய்கை யாழ்ப்பாணத்தில் ஊகிக்கப்பட்டது. மன்னரிலும் பூநகரியிலும் இது மிகுதி யாய் நடைபெற்றது. சனங்களைக்கொ ண்டுபோய்ப் பருத்திநாட்டுவித்தனர். கிழக்குமூலை வன்னியனி ன்கீழும் பருத்தி அதிகமாய்ச் செய்கைபண்ணப்பட்டமையா ல் ஒல்லாந்தர் அவனிடம் திறைரூபமாகப் பஞ்சு பெற்றுக்கொ ண்டுவந்தார்கள். ஆயினும் ஏனைய வன்னியரைப்போலவே இ வனும் பலமுறைகளில் ஒல்லாந்தருக்கடங்காமலும் கண்டிய ாசன்பக்கமாய்ப் போய்விடுவேனென அவர்களைப் பயமுறுத்தி யும்கொண்டு வந்தமையால் அவனுலனுப்பப்பட்ட பஞ்சு வரவு
நிச்சயமற்றதாயிருந்தது.
சீலைநெசவும், சாயழம்- ஒல்லாந்தர் தாம் செய்கைபண் ணுவித்த பஞ்சை இவ்விடத்திலேயே ஆடையாக மாற்ற முய ன்று சேணியர் கைக்கோளர்பலரை இந்தியாவினின்றுமழை த்துத் தம்பொறுப்பில் நெசவுபண்ணுவித்தனர். சாயக்காரரு ம் இவவாறே அழைக்கப்பட்டனர், ஒல்லாந்தரின் முன் யாழ் ப்பாணத்திற் சீலைநெசவு பெரும்பாலும் பறையராலும் சிறு பான்மையே பிறராலும் செய்யப்பட்டது. முக்கியமாய்க் கோ டிக்கரையில் 1663-ம் ஆண்டின்முன் நிகழ்ந்த ஒர் பஞ்சத்தி னுல் பல நெசவுகாரர் யாழ்ப்பாணத்தில்வந்து குடியேறினர். மேற்குறித்தவருஷத்தின் ஒல்லாந்த அறிக்கைப்பத்திரத்தின் படி அங்காளில் இங்கு மூன்றுவகுப்பான நெசவுகரசர் இருங் தனர். அவர்கள்தொகை 125 பேர். சாயக்காரரில் நான்குவ குப்பு இருந்தது. அவர்கள்தொகை ஆண் பெண் சிறுபிள்ளை களுட்பட 162 பேர். கோடிக்கரையினின்றுவந்த நெசவுகார ருக்கும் சாயக்காரருக்கும் அரசினரே முற்பணங்கொதித்துத வினர். 1665-ம் ஆண்டின் கணக்குப்படி நெசவுகாரர் கம்பனி க்கு 2873 இறைசாலும், சாயக்காரர் 5820 இறைசாலும் க டன்கொடுக்க வேண்டியோராகக் குறிக்கப்பட்டிருக்கிறது. இ வ்வாறு முற்பணங்கொடுத்துக் கடனேறிவிட்டமையைக் கண் ட ஒல்லாந்தர் அப்பாற் பணங்கொடாது, சீலையை நெய்து கொண்டுவந்து கொடுப்போருக்கு வேண்டிய நூலைக்கொடுத்து க் கூலியிலே முன்கடனுக்காக ந்ேதிலொன்று பிடித்துக்கொ ண்டுவந்தனர். சாயக்காரர் தாங்கள் பெற்ற சீலைக்குச் சாயங் காய்ச்சிக்கொண்டு வரும்போது மேலும் காய்ச்சு தற்குச் சீலை சாயவேர் நீலம் மெழுகு ஆதியவைகொடுத்துக் கூவியில் எ ட்டிலொன்று கடனுக்காக எடுக்கப்பட்டது. ஒல்லாந்த உத்தி யோகஸ்தரின் கீழே நெசவும், சாயவேலைகளும் நடத்தப்பட்ட
Page 72
24 யாழ்பபாண வைடிவ கௌமுதி.
ன ஆனைக்கோட்டையில் 1665ம் ஆண்டு வரையிலிருந்த படி ஆறுவேலென்பவ்ன் சாயங்காய்ச்சுவதில் விசேஷித்தவனுகப் புசு ழப்பட்டிருக்கிருன் இவன் அங்காளிற் சாயக்காாருக்குத் தலை வனுயிருந்தவன். பரம்பரையான தொழிலாளிகள் மட்டுமல்ல கம்பனியின் சிறைகள் சிலரும் நெசவும் சாயவேலையும் பழ க்கப்பட்டனர். ஒல்லாந்தரின்கீழ் இவ்விருதொழில்களும் அா சினர் சொந்தமாயிருந்தமையால் பிறவிடங்களிலிருந்து சீலை இறக்குமதியாகாமலும் இவ்விடத்திலிருந்து பிறர் ஏற்றுமதி செய்யாமலும் வெகு சாக்கிரதையெடுத்துக்கொள்ளப்பட்டது. விற்கப்படும் சீலையெல்லாம் இராசமுத்திரையோடேயே விற் கபபடவேண்டுமென்றிருந்தது. சீலைக்கு முத்திாைகுத்தும் வ ரியினுலும் ஏற்றுமதி இறக்குமதி வரியினலும் 1691-ம் ஆண் டு அரசினாடைந்த வருமானம் 4733 1/3 இறைசாலென அவ்வருஷ அறிக்கைப்பத்திரம் காடகிேறது. சாயச்சீலைகள் பரும்பாலும் கோடிக்கரைக்கும் இடையிடையே வத்தாவியா வுக்கும் அனுப்பப்பட்டன. சிலவருஷங்களில் சீலைகாய்ச்சுதற்கு யாழ்ப்பாணத்திற்கிடைத்த சாயவேர் போதாமல் மதுரையில் ன்று அவ்வேர் வருவிக்கப்பட்டது. சாயச்சீலையால் தம்வரூ மானத்தை விருத்தியாக்கும்பொருட்டு அரசினர் பெரும் பிர யாசையெடுத்துக்கொண்டனர். சில சாயக்காரர் அரசினர்கொ த்ெத சாயவேரைக் கொண்டு சீலைகாய்ச்சிச் சனங்களுக்குக் க ளவாய் விற்றுவந்தமையால், இனி யாழ்ப்பாணத்தார் ஒருவ ம் சாயச்சீலை தரிக்கப்படாதென ஒர் கட்டளைச்சட்டமும் 1691-ம் ஆண்டுவரையில் பிறப்பிக்கப்பட்டது.
சாயவேர்.-சாயங்காய்ச்சுவதுபோலவே சாயவேர்வியாபா ாமும் ஒருகாலம் அரசினர்கையிலிருந்தது. இதனைப் பிங்ெகி க்கொடுப்பது வேர்க்குத்திப் பள்ளருடைய தொழில். மன்ன ரில் இதைக் கடையச்செய்தனர். காரைதீவு நெடுந்தீவு எனு மிடங்களின் வேரே முதற்றரமானதாயும், மன்னுரிற்கிடைத்த வேர் இரண்டாவதாயும், வன்னி முதலியவிடங்களின் வேர் மூன்றுவதாயும், மற்றவிடங்களிற் கிண்டியவேர் கடைசித்தினி சாகவுங் கொள்ளப்பட்டது. வருஷங்தோறும் யாழ்ப்பாணத்தி ல் எடுக்கப்பட்ட வேர் 80 அல்லது 90 பகார் (ஒருபகார் 480 ஒல்லாந்த இருத்தல்கொண்டது) எனக் கணக்கிடப்பட் டது. யாழ்ப்பாணத்தில்கடந்த சாயவேலைக்குப் பலமுறையும் இத்தொகையான சாயவேர் போதாதிருந்ததென முன் குறி ப்பிட்டோம். M
பட்டுநூல்- இவற்முேடமையாது ஒல்லாந்தர் யாழ்ப்பா ணத்திற் பட்டுப்பூச்சிகளைக்கொணர்ந்து பட்டுநூல் வியாபார்
யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 125
மும் உண்டாக்கத் தேடினர். இத்தொழிலுக்குத் தலைவனுய் வங்காளத்திலிருந்து ஒருவன் அழைக்கப்பட்டான். வேளா ளர் ஆதிய சிலர் செய்யும் ஊழியங்களுள் பட்டுப் பூச்சிகளுக் கன நாட்டப்பட்ட 'றுற்பூம்சி”என்னும் மாங்களுக்குத் தண் ணிரூற்றுவதும் ஒன்ருயிருந்தது. இவை அரசமரங்கள்போ அலும். ஆயின் பட்டுநூற் முெழில் சித்தியெய் தாமற் போய்வி
--g
யானைவியாபாாம்.-ஒல்லாந்தருடைய வியாபாரங்களுள் வி சேஷித்தது யானை வியாபாரமே. இவை காலி மாத்துறை எ ன்னுமிடங்களிலும், முக்கியமாய் வன்னிக்காட்டிலும் மாதோ ட்டம், Nமுசலி, பெருங்களி, பூநகரி என்னுமிடங்களிலும் அக ப்படுத்தி யாழ்ப்பான மூலமாய்க் காரைதீவிலேற்றி வடதேச த்துக்கு அனுப்பப்பட்டன. கொல்கொண்டா, தஞ்சாவூர், வ ங்காளம், ஆதியவிடங்களினின்று வியாபாரிகள் யாழ்ப்பாண ம் வந்து யானைகளை வாங்கிப்போவர். யாழ்ப்பாணத்து யானை கள் பெரும்பான்மை வன்னியர்களால் ஒல்லாந்தருக்குத் திறை யாகக் கொடுக்கப்பட்டன. பூநகரி முதலிய இடங்களில் ஒல் லாந்தர் முன் வன்னியர்களையும், பின் அதிகாரிகளையும் தம்கீ ழ் அமைத்து யானைபிடித்தனர். வன்னியர் பலகாலும் திறை கொடுப்பதிற் சுணக்கமாகி, ஒல்லாந்தரைத் தொல்லைப்படுத் திக்கொண்டிருந்தனர். பலகாலும் ஒல்லாந்தரின் மேலாசை யும் ஒப்பாது கர்வித்து ஒழுகினர். இதனுல் வன்னியர் எல் லாம் மாறிமாறி மூன்றுமாதத்துக்கு ஒருவனுக யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இருக்கவேண்டுமென ஒர் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. கண்டியரசன் பக்கமாய்த் திரும்பிவிடுவார்களெ ன்றபயத்தினல் ஒல்லாந்தர் வன்னியருக்கு இதன்மேல் வேறு தண்டனைசெய்ய இயலாதிருந்தனர். 1897-ம் ஆண்டில் ஒல்லா ந்தருக்கு யானை கொடுக்கச் சுணங்கினேர் பனங்காமம், பழை யவிழாங்குளம், (பறையனுலங்குளம்?)புதுக்குடியிருப்பு எனுமி டத்து வன்னியர்களான டொன்பிலிப் நல்லமாப்பாணன் டொன் கஸ்பார் கவுசயினர் (அல்லது கொஞ்சயினர்) இலங்கை நாராய ணமுதலியார் என்போரும், கரிக்கட்டுமூலை மேற்பற்று என்னு மிடங்களின் டொன் தீயோகு புவிநல்லமாப்பாண வன்னியனும் முள்ளியவளையின் பெரிய மெயினர் உடையாரும் எனக்குறித் திருக்கிறது. கரைச்சி நெல்வயல்கள் நல்லமாப்பாணன் பொறு ப்பில் விடப்பட்டிருந்தன. இவ்வயல்களின் பத்தில் ஒன்றை அவன் அனுபவிப்பதற்குப் பதிலாகவே யானைத்திறை கொடு
க்க வேண்டியவனனன். இவ்வாறே ஏனைய வன்னியர்கள் 考
Page 73
126 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ண்ட பகுதிகளையும் தம்முடையவையெனக்கொண்டு ஒல்லா
о ܐ Ω w ந்தர் திறைகேட்டனர். அந்நாட்களில் இவர்களோடு வருகின் ற வேறு சில வன்னியர்களின் நாமங்களையும் தருவோம். கரு நாவற்பற்றில் அம்பல வன்னியனும், தென்னமரவாடியில் சே துகாவல வன்னியனும் திறைகொடுத்தாண்டுவந்தனர். டொன் பிலிப்பு நல்லமாப்பாணன் மகன் டெரன் கஸ்பார் நிச்செய சே திராயன் பூநகரியில் யானைவேட்டைத் தலைவனுயிருந்தனன். இ
வன் இலங்கை நாராயண வன்னியனுக்கு மருகன்போலும்.
டொன் பிலிப்பு நல்லமாப்பாணன்.--வன்னியரின் அடங்கா த்தன்மையைப்பற்றி ஒல்லாந்த கொம்மாண்டோர்மாரின் அறி க்கைப் பத்திரங்களெல்லாம் பேசுகின்றன. கென்றிக் சுவா டக் குறூன் என்பவன் (1694-97) எழுதியிருப்பது இது;- "இ வ்வன்னியர்கள் கம்பனியின் பிர்சைகளாய்ப் பிறந்திருப்பினும், சாதியில் நடபடியான வேளாளரேயானுலும், காலகதியிலே மி கவும் செருக்குற்ருேராய் வன்னியன் எனும் தங்கள் பட்டம் ஏதோ பயங்காமும் முக்கியமுமான ஒரு பட்டமென எண்ணி க்கொண்டிருக்கின்றனர். இப்பட்டத்தை அவர்கள் கம்பனியி ல் கின்றே பெற்றுக்கொண்ட போதிலும், கம்பனியையாவது அதன் மேலுத்தியோகஸ்தர்களையாவது சங்கிக்க வேண்டுமே யென்று சிறிதும் கருதுகின்றரில்லை. உத்தியோகஸ்தர்முன் வ ந்து செய்யவேண்டிய மரியாதையையும் மறந்து போகிமுர்கள்” என்று எழுதியிருக்கின்முன். நல்லமாப்பாணன், நிச்செயசேன திராயன், இலங்கை நாராயணன் எனும் வன்னியர்கள் மூவரும் ஒருமுறை சுவாடக்குறூனேே பிணங்கிக்கொண்டு கொழும்பி ல கவணரைக் காணப்போய் அங்கு விசேஷ மரியாதைகளும் பெற்றுத் திரும்பினமையே அவன் இவ்வாறெழுதினமைக்குக் காரணம்போலும். இவ்வன்னியர் மூவரும் யாழ்ப்பாணத்திலு ம் மேற்குறித்த கொம்மாண்டோ ரில்லாவேளையில் அரசியற் சங்கத்தாரால் மிகக்கண்ணியமடைந்து சிலவழக்குகளை விசார ணை செய்வதற்கும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இவ்விருத்தா ந்தமெல்லாம் சுவாடக்குறுான் மனதைப் புண்படச்செய்தன. யினும் ஒல்லாந்தர் இவர்களைத் தமக்குப் பகைவராக்கிவிடத் து ணியாதிருந்தனர். இதனுலேயே, நிச்செய சேனுதிராயன் தன் மாமனின் சேவகனுெருவனுக்கு ஒர் அரசன் செய்வதுபோலக் கொலைத்தண்டம் விதித்தபோது ஒல்லாந்தர் மனம் புழுங்கியு ம், யாதும் செய்பாது விட்டுவிட்டனர். பின் கொழும்புக் கவ ணர் 1897-ம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்து நல்லூர் அரசினர் நந்தன வனத்தில் தங்கியிருந்தபோது, அவ்வேளை பட்டினத்தி ல் வந்திருந்த நல்லமாப்பாணன்னயும் ஏனைய வன்னியச்களையும்
யர்ழ்ப்பாண வைபவ கெளமுதி. 127
பேட்டிக்கு அழைத்தவிடத்கில், வழக்கப்படி தங்களேக் கூட்டி க்கொண்டு செல்லப் பறைமேளகாரர் அனுப்பப்படாமையால், இவர்கள் தாம் வரோமென்றிருந்துவிட் த வேமுெருநாளிற் கவ ண ரைக் காணப்போயினர். இதற்கு கவணரும் ஒன்றும் பே சாதிருந்துவிட்டான். ஆயின் நல்லமாப்பாணனும் மகனும் கொ டுக்கக் கடனுகிய யாக்னத் திறையை நெடுங்காலஞ் செலுத்தா திருந்தமையால், அவர்களை நேரில் அப்புறப்படுத்தக் துணியா து பூநகரி, பல்லவராயன்கட்டு, இலுப்பைக்கடவை எனுமிட ங்களில் யானை பிடிப்பதற்கு ஒர் ஒல்லாந்தனை அதிகாரியாக கி யமித்தான்.
வன்னியர்களெல்லாம் அங்நாட்களிலிருந்த ஏனைய யா ழ்ப்பாணிகள் பலரைப்போலவே நாமத்தளவில் கிறீஸ்தவர்க ளாயிருந்தனர். ஆயின் நெஞ்சத்தில் அநேகர் கள்ள விசுவாசி களேயாயினர் என்பது நல்லமாப்பாணனின் இளைய மகனுடை ய செய்தியால் விளங்கும். நல்லமாப்பாணன் அக்காலம் யாழ் ப்பாணத்திலிருந்த மிட்றெற் எனும் கொம்மாண்டோரின் சனு வைப் பெறும் பொருட்டுத் தனதுமக்களுள் ஒருவனைப் பாதிரி உத்தியோகத்தக்குப் பயிற்றுங் களகமாகிய செமினேரி 'யில சேர்ப்பித்திருந்தான். அக்கொம்மாண்டோர் மாறினவுடன் சி ல வீண் போக்குகளைச்சொல்லி மகனைச் செமினேரியில் நின்று ம் எடுப்பித்துக்கொண்டான் பின் ஒருகால் அம்மகன் ஒரு ஒல்லாந்த உத்தியோகஸ்தனேடு நாகபட்டினம் போயிருந்த போது சைவ ஆலயங்களிலே வேஷம்மாறிகின்று அருச்சனை செ ய்வித்துக்கொண்டிருக்கக் காணப்பட்டான். இவன் “குருமட த்தில்’ இருந்த பின்னும் இவ்வொழுக்கத்தைக் காட்டினமையா ல், தகப்பன் வீட்டில் சைவ வழிபாட்டையே என்றும் பழகி யவனுகவேண்டும் என ஒல்லாந்தர்.நால் கூறுகின்றது. அந்நூ லே காட்டுகிறபடி வன்னியர்கள் ஒருபோதும் தங்கள் விகிக ளில் ஒல்லாந்தர் வரவிட்ாதிருந்தமைக்கு அன்னேர் இரகசிய மாய்த் தம் இல்லங்களில் ஈடத்திவந்த தம் பழைய சமய ஆசாா மே கியாயமாயிருந்தது.
யானைத்தாகர்கள்.-யானை வியாபாரத்தில் வடகரைச்சோ னகர் ஆதியாம் வர்த்தகர்களுக்கு யாழ்ப்பாணத்திற் சிலர் கர காாய் நின்றும் யானை வாங்கிக்கொடுப்பர். இவர்களுள் 1695-ம் ஆண்டுவரையிலிருந்த 'திம்மர்சாநாயிக்” எனும் பிராமணனின் காமமும், டொன் பிலிப்பு சங்க ரப்பிள்ளையின் நாமமும் நமக் கெட்டியிருக்கின்றன. திம்மர்சா (திம்மராசா?) தரகில் வெகு சமர்த்தன். ஆனவாங்க வருவோரிடம் 100 இறைசால் 150 இ
Page 74
128 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
றைசால் வரையில் பெற்றுக்கொண்டே ஒல்லாந்த கொம்மாண் டோரோடு விலைபேசப்போவான். இவனும் இவனைச்சேர்ந்த சி ல*நாடோடிகளும்” கிறீஸ்தவர்களாகாதிருந்தமையால் இவர்க ள் பறங்கியர் நாட்களின் பின் கோடிக்கரையினின்றும் இங்குவங் தோராதல் வேண்டும். திம்மச்சா வாணியில் சில பாசாங்குக் கிறீஸ்தவர்கள் இரகசியமாய் சைவவழிபாடுகள் பண்ணியதை க்கண்டு அரசினருக்கு அறிவித்ததினல் அதற்குச் சன்மான மாக 1679-ம் ஆண்டு கார்த்திகைமாசம் 7-ந் திகதி ஒரு கண்ணியப் பட்டத்தைப் பெற் மு ன், கொல்கொண்டாவின் வர்த்தகர்கள் இவன்பெயருக்கே பணச்சீட்டுகள் அனுப்பி ஒ ல்லாந்தருக்குக் காசு கட்டுவார்கள். ஆயின் இவன் வர்த்தகர்க ளிடம் அபரிமிதமாய்க் கைக்கூலிவாங்கித் தமக்கு நட்டம்வ ருவிக்கிறனென ஒல்லாந்தர்கண்டு 1697-ம் ஆண்டுமுதல் இ வனது தரகுவேலையை நிறுத்திவிட்டனர். வேறுசில பிராம ணர்களும் அரசினரின் கீழ் உத்தியோகத்தமர்ந்திருந்தனர். இ வர்கள் பெயரளவில் கிறீஸ்தவர்கள்.
டொன் பிலிப் சங்காப்பிள்ளை.- இவனதுயிறப்பிடம் 1க ன்னெங்கிராய்’ எனக் கூறப்பட்டிருக்கிறது. இவன் 1680-ம் ஆண்டளவில் பிரசித்திபெற்றிருந்த ஒர் வேளாண்குலத்தலை வன். இவன்முயற்சியால் ஆதியிலே ஒல்லாந்தர் ஏற்பாட்டுக் குமாருக இறைசுவதோர், கணக்கப்பிள்ளை, ஆராய்ச்சி எனும் உத்தியோகங்கள் எல்லாம் இவன்குடும்பத்தாரான வேளாளர் கையிலேயேயிருந்தன. இதனல் பிறசாதிகளுக்கும் இவர்களு க்குமிடையில் ஒர் குழப்பம் நடந்து காரியம் கொழும்புத்தே சாதிபதிவரையிற் சென்றமையால், டொன் சங்காப்பிள்ளையை யும் கூட்டாளிகளையும் விலங்குமாட்டிக் கொழும்புக்கு அனுப் பும்படி 1687-ம் ஆண்டு ஆனிமீ 16-ந் திகதி கட்டளைபிறந் தது. ஆயின் சங்காப்பிள்ளை ஒழித்தோடி நாகபட்டணத்தை யடைந்து அங்கு தனக்கறிமுகமாயிருந்த “பாபாபோர்பூ” எ ஆறும் வர்த்தகனின் உதவியால் ஒல்லாந்தரோடு மீண்டும் சி னேகமாகி 1689-ம் ஆண்டளவில் தான் விரும்பிய விருப்பின் படியெல்லாம் தன்சாதியாருக்கே உத்தியோகங்களைப் பெறு விப்போனுயினன். பள்ளிக்கூடம்விட்டு வெளிப்பட்ட வாலிபர் களாயினும் சங்கரப்பிள்ளையுடைய ஆட்களுக்கே உத்தியோக ங்கள் கிடைத்தன. ஆயின் 1690-ம் ஆண்டு எதிர்காற்றுவி சத்தொடங்கிற்று. இச்சம்பவங்கள் கொழும்பிற்கு எட்டவே தேசாதிபதி இனிமேல் சற்றுச்சற்ருய்ப் பிறசாதிகளுக்கும் 'ம யோருல்” இறைசுவதோர் முதலிய உத்தியோகங்களைக் கொ க்ெகவேண்டுமென கொம்மாண்டோருக்குக் கற்பித்தனன்.
யாழ்ப்பாண வைபவ கெளமுதி. f笼@
வேளாளர்கலகம்- அரசினர் இதுவரையில் வேளாளரு க்கே பெரும்பான்மை சொந்தமாயிருந்த உத்தியோகங்க &ளப் பிறசாதியாருக்குங் கொடுக்க ஏற்பாடுசெய்தமையினல் ச ங்காப்பிள்ளையின் கட்சியார் கலகம்விளேக்கத்தொடங்கினர். இ வர்களுள் முன் மேற்சொல்லிய தலைவனுக்கு வெற்றிலை கொ ண்ேெபாவோனுயிருந்து பின் பாபாபோர்பூவின் வேலைகாரணு ம் அப்பால் அரசினர்கீழ் ஒர் கணக்கப்பிள்ளையுமாயிருந்த மு தலித்தம்பி என்பவனும், சங்கரப்பிள்ளைக்குச் சகோதரமுறை யினனை டொன்சுவான் மண்டலநாயகமுதலி எனும் 'வாச ல்” கணக்கப்பிள்ளையும் தலையாட்களாயினர். இவ்விருவரும் கணக்கப்பிள்ளை உத்தியோகத்தினின்று தள்ளிவிடப்பட்டதே கலகத்துக்கு முக்கியகாரணமாயிற்று. இவர்களோடு வலிகாம ம், வடமராட்சி, தென்மராட்சி எனுமிடங்களின் இறைசுவ தோர்மர்ரும் மாற்றிவிடப்படவே இவர்களும் கலகத்துக்கு உ தவியாயினர். அப்பால் டொன் பிலிப்பு நல்லமாப்பாண வன்னி யனும், டொன் கஸ்பார் இலங்கைநாராயணமுதலி வன்னியனு ம் கலகக்காரரை ஆதரிப்போராயினர். இவ்வன்னியர்களிருவ ரும் 1694-ம் வடு முதலித்தம்பிக் கெதிராய்ப் பிராது கொண் வெந்திருந்தவர்கள். இப்பிராகில் சாட்சியாய் அழைக்கப்பட் ட டொன்பிலிப்பு வில்லவேதாாயனும், டொன் அந்தோனி நாராயணமுதலியும் பெயரளவில கிறீஸ்தவர்களாயிருந்தும் சை வமுறைப்படி சத்தியஞ்செய்துகொடுத்தமை கவனிக்கப்படக் தக்கது. இப்பிராது யாழ்ப்பாணத்தில் நடந்துகொண்டிருக் கையில் முதலித்தம்பி கொழும்புக்கு ஒர் மனுஎழுதிக் கொ ம்மாண்டோரை அறியாமலே வழக்கைத் தள்ளுவித்துக்கொ ண்டு கோட்டாரால் பலவரிசைகளோடு சங்கைசெய்தும் அனு ப்பிவிடப்பட்டிருந்தான். இவ்வாறு முன் முதலித்தம்பிக்குச் சத்துருக்களாயிருந்த வன்னியர்களும் தசமும் வேளாளரே எ ன்ற அபிமானத்தினுல் அவனேடுகூடிக் கலகத்துக்கு உதவி செய்வோராயினர். கொழும்பில் முதலித்தம்பிக்கு ஆதரவு கி டைத்துவிட்டமையாலும் வன்னியரும் அவனே ெகூடிக்கொ ண்டமையினுலும் யாழ்ப்பாணக் கொம்மாண்டோர் ஒன்றுஞ் செய்யமாட்டா திருந்துவிட்டான்.
சங்கரப்பிள்ளையின்மகன்.- சங்கரப்பிள்ளை 1695-ம் ஆண்டு இறந்துவிட அவ்வேளாண் தலைவன் அரசினருக்குச்செய்த உத விக்குக் கைமாரு?கவோ அன்றி உயர்குலத்தலைவ னென்றமை யாலோ அவன் மகனுக் தோமஸ் வன்றி எனும் கொழும் புத்தேசாதிபதி 1695-ம் ஆண்டு இரு ஒல்லாந்த உத்தியோ கஸ்தர்முலமாய் ஓர் குதிரையும் குடையும் பரிசிலாக அனுப்
Page 75
130 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
பினுன், யாழ்ப்பாணத்தில் டொன் சங்கரப்பிள்ளைக்கு மாமுய் ப் பல குற்றச்சாட்டுகளிருந்தமையால் அவன் மகனுக்கு அனு ப்பிய பரிசில்களைக் கொம்மாண்டோர் பறித்தெடுத்துவிட்டா ன். ஆயின்,ஜெறிற் டி கீர் தேசாதிபதி 1897-ம் ஆண்டு ஆவ ணிமீ 2-ந் திகதி பண்ணின கட்டளையால் அவைகள் மீண்டு ம் அவலுக்குக் கொடுக்கப்படவேண்டுமென விதிக்கப்பட்டது.
சாதியுடைழதலியன.- சுவாடக்குறுான் எனும் கொம்மா ண்டோர் உத்தியோகங்களை வேளாளால்லாத பிறசாதிகளுக் கும் கொடுக்க முயன்றனணுயினும் தமிழரசர் காலவழக்கப்ப டி நடைபெற்ற சாதிஉடைகளை மாற்றத்தேடவில்லை. எளிய சாதிகள் தத்தம் உடைநடைகளை மாற்றத்தொடங்கியதைப்ப ற்றி அவன் பின்வருமாறு யாழ்ப்பாண அரசியற்சங்கத்தாருக் கு எழுதியிருக்கின்றன். “கீழ்சாதிகள் தங்கள் உடைமுதலி யவைகளைப்பற்றிய ஒழுங்குகளை அனுசரிக்கும்படி செய்யவே ண்ம்ெ. இதிற் சில ஒழுங்கீனங்கள் உண்டாகியிருக்கிறதாகக் கேள்வி. இவர்கள் சரியானமாதிரியாய்ச் சீலை கட்டிக்கொள்ளு கிருச்களில்லை. தலைமயிரைவெட்டாமலும், காதிற் பொன்கம்பிக ள்போடாமலும் திரிகிருரர்கள். இதினுல் இவர்களை யாரென்று தெரியாமற் போகிறதென்றும் இது தங்களுக்கு ஒரு அவமா னமென்றும் சாதியாளரான 'கொனேருடாஸ்’ (இவர்கள் மே ல்சாதியார்போலும் முறைப்படுகிறர்கள். இவ்விஷயமாய் இல ங்கைத்தேசாதிபதியாகிய லோறென்ஸ் பில் கவணரால் 1686 -ம் ஆண்டு ஆவணிமீ 18-ந் திகதி ஒர் பிளக்காற் கட்டளை பிறப்பிக்கப்பட்டது” கீழ்சாதிகள் போட்டுவந்த கம்பிகள் ச வடியென்னப்பட்டன. நாமறியவும் சிலர் இதைத்தரித்தனர். சிரமுண்டிதம் அக்காலம் எளியசாதிக்கு அடையாளமாயிருந்
து இக்காலம் உயர்குலசாதிக்கே உரித்தாகிவருகிறது.
குதிரைவியாபாரம்- பறங்கியர் நெடுந்தீவிலே குதிசைவ ளர்த்துவந்திருந்தனர். அத்தொழிலை ஒல்லாந்தர் மிகவும்விரு த்திபண்ணி நெடுந்தீவோடு இரணைதீவிலும் குதிரைகளை வ ளர்ப்பித்தனர். இவ்விருதீவுகளிலும் ஒவ்வோர் ஒல்லாந்ததலை வலும் கிறுத்தப்பட்டான். நெடுந்தீவிலே சனங்கள் அமோக மாய்ச் செய்துகொண்டுவந்த பருத்திச்செய்கை இதல்ை த டைப்பட்டது. அவர்களுடைய ஆடுமாடுகளின் தொகையும் சுருக்கிவிடப்பட்டது. இரணைதீவு ஆகியிலே குடியேறியிருந்த தாகத் தோன்றவில்லை. பறங்கியர்காலத்திலேயே அது நெடு ங் தீவினின்றும் வந்த பறையராற் குடியேறத்தொடங்கிற்று. ஒ ல்லாந்தர் குதிாைவியாபாரத்தை விருத்தியாக்கும்பொருட்டு 15
யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 3.
ல்ல இனக்குதிரைகளை பார்சீகம் பாவா எனுமிடங்களிலிருங் து வருவித்துப் பட்டியடைப்பித்தனர். 1691-ம் ஆண்டில் நெ டுந்தீவில்மட்டும் 500 குட்டிகள் வரையில்நின்று வளர்ந்தன. ப ருவமான குதிரைகளைக் கயிறெறிந்து பிடிப்பிக் து வடதேச த்துக்குஅனுப்பி விற்றுவந்தனர். ஒல்லாந்த போர்வீரராலும் இக்குதிரைகள் உபயோகிக்கப்பட்டன. தஞ்சாவூர் அரசனுக்
க் கம்பனியார் உபசாரமாய் அனுப்பிவந்த இரு அராபிய குதிரைக்குப்பதில்ாய் நெடுந்தீவுக்குதிரைகளும் சிலவேளை அ அனுப்பப்பட்டனவென்முல் இக்குதிரைகள் அக்காலம் விசேடி த்தனவாயே யிருந்தனவென்பது தோன்றும். விலையைநோக் கின் குதிரை ஒன்று 25 இறைசால்வரையிலே விற்கப்பட்ட து. யானைகளின் விலை 301) இறைசால்வரையில். இவ்விலை நம் காலத்தாருக்கு மிகக் குறைவுபோற் முேற்றினும் நெல்விலை அக்காலம் பறையொன்று ஆறு பணம் (அரை இறைசால்வரை யில் மாத்திரமே என்பதனுல் அக்காலப் பணத்தின்பெறுமதி
எவ்வளவென்பது விளங்கும்.
முத்தும், சங்கும்.- பறங்கியர்காலத்திற்போலவே ஒல்லா ந்தரும் முத்துக்குளிப்புகடத்தி அதனுல் பெரும் லாபமடை ந்தனர். 1691-ம் ஆண்டின்முன் நடந்த ஆறுகுளிப்பிலும் கி டைத்த ஆதாயம் பின்வருமாறு:-
1666-ம் ஆண்டு 19,655 இறைசால்சொச்சம்.
1667 99 24,641 yy 1694 ?y 21,019 99 1695 9 y 24,708 9 2 1696 yy 25,327
s
இக்காலப் பணப்பெறுமதியின்படி பார்த்தால் இத்தொகைகள் பத்துமடங்காகப் பெருக்கப்படவேண்டியன. முத்துக்குளிப்பு கம்பனிக்கு அபரிமிதமான ஆதாயத்தைக் கொடுத்கதேயாயி ணும் அது வருஷாவருஷம் நடைபெறக்கூடாமற் போய்விட்
• (قیہہ
சங்குகுளிப்பினுல் அதிகலாபம் வரவில்லை. மன்னருக்கு ம் கற்பிட்டிக்குமிடையிலேயே இக்குளிப்புநடந்தது. 1697-ம் ஆண்டு பெரியதம்பி எனும் சோனகன் இக்குளிப்பை 8000 இறைசாலுக்குக் குத்தகையாய்க்கேட்டும் அரசினர் கொடாது மறுத்துவிட்டனர். முத்துக்குளிப்பைப்போலவே சங்குக்குளி ப்பும் அரசினர்கையிலிருந்துவந்தது.
Page 76
132 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
பிறபொருட்கள்.- ஒல்லாந்தர் வியாபாரிகளாகவே இங் கு வந்தமையால் தம்மாலான மட்டும் யாழ்ப்பாண நாட்டின் தி ாவியங்களால் தாம் செல்வர்களாகத் தேடினர். முத்து சங்கு என்னும் கடல்படுதிரவியங்களாலும் யானை குதிரை என்னும் நிலம்படுதிரவியங்களாலும் மிக ஆதாயமடைந்ததோடு உப்பு மரம் இவற்ருலும் செல்வத்தைஈட்டினர். உப்பு இக்காலத்தி ற்போலவே அரசினர்சொந்தமாயிருந்தது. ஆயினும் யாழ்ப் பாணத்தின் தன்படுவனுப்பைக் காவல்பண்ணிக்கொள்வது ஒ ல்லாந்தருக்கு வெகு பிரயாசையைக் கொடுத்ததோர் முயற்சி யாயிற்று. அப்பால் வன்னிக்காடுகளின் இராட்சதமரங்களைத் திரளாய்த்தறிப்பித்தத் தமது கோட்டைகொத்தளம் விடுவா சல்களுக் குபயோகித்ததோடு இந்தியாவுக்குமனுப்பி வியாபா சஞ்செய்தனர். காட்டுமரங்கள் அவர்க்கு வெகு சொற்பசெல விலே தறித்துக் கொடுக்கப்பட்டன.
ஒல்லாந்தர் மாம்தறிப்பித்த விதத்தைக் காட்டும்படி 1619-ம் ஆண்டின் அறிக்கைப்பத்திரத்திலே இதற்குச் செய் யப்பட்டிருக்கும் ஒழுங்கை மொழிபெயர்த்து இதன் கீழ்த் த ருகின்முேம்.
*மசம்தறிக்கும் ஊழியம் திசாவையின் கீழே நடக்கவே ண்டியது. இதற்குக் கம்பனியின் அடிமைகள் 293 பேர் கு றிக்கப்பட்டிருக்கின்றனர். அதெவ்வாறெனில்:-
145 பேர் **சிவலவந்தன் கோவி’ல் நின்று வருவர். இவ ர்கள் 20, 25 அல்லது 30 பேர் சேர்ந்த கூட்டமாய்க் காட்டிற் சென்று தறிப்பர். இவர்களுக்கு மாதம் ஒருபறை அரிசியும், கொஞ்சம் கருவசடும், சிலவேளைகளில் கொஞ்சம் புகையிலை யும் கொடுக்கப்படும். புகையிலைக்குக் காசு குற்றக்காசிலிருந்
து எடுக்கப்படும்.
148 அடிமைகள் தறித்த மரங்களைக் கரையாருடைய உ தவியோடு எடுத்துக்கொண்டு வரவேண்டும். காையாரின் விப ாம் பின்வருகிறது:-
13 பேர் 6 மாய் வலகோவி'ல் கின்று வருவர். 38 பேர் * அட்டென் கிட்டென் கோவி’ல்கின்றுவருவர். 37 பேர் நழ வரும் பள்ளரும். தொகை 148 பேர். இவ்வளவு பேரும் மு ன்னே பறங்கியருக்குச் சேர்ந்திருந்து இப்போது கம்பனிக்காக வேலைகொள்ளப் படுகிருரர்கள். இவர்களுக்கு அரிசி கொடுப்ப தில்லை. தாங்களே தங்கள் தீனைப் பொறுக்கவேண்டும்,
யாழ்ப்பாண வைபவ கெனமுதி. 133
ஒவ்வொருவருஷமும் 138 எரையார் மாத்தரிப்புக்குவர் து மரம்கொண்டுபோவார்கள். இவர்களும் தமது தீனைத் தாங்க ளே பொறுப்பர். ஒருதடவையில் இத்தனைபேர் வரவேண்டு மென்பது இருக்கிறவேலைக்குத் தக்கபடி நியமிக்கப்படவேன் டும். இவர்கள் பின்வருமிடங்களிலிருந்துவருவர்.
173 பேர் காையார்நாகர்கோயிலிலிருந்து. 349பேர் வடம ராட்சியிலிருந்து. (பழைய மன்னரிலிருந்தும் வல்லுவெட்டிர் துறையிலிருந்தும் வருவோர் கோட்டையில் வேல்செய்பவர்) 276 பேர் பச்சிலைப்பளியிலிருந்து. தொகை 738 கசையார் மரம்கொண்டு போகவேண்டியவர்கள். திசாவையானவர் இவ் வளவு பேரோடுமட்டும் வேலையைகடப்பித்து முடித்துப்போட வேண்டும். ஏனெனில் இதற்குமேல் நாம் ஒர்போதும் வேலை கொள்ளவில்லை. மரம் கோடையில் அமாவாசி காலத்தில் தறி த்து மாரியிலே ஏற்றவேண்டும்”
தோல், கயிறு, கொட்டை, கரி-சனங்களிடத்தில் மான்தோ லும் அறவுபண்ணினர். பின்வரும் கணக்குப்படி அவ்வவ்வூரா ல் அத்தனை அத்தனை தோல் கொடுக்கவேண்டுமென்றிருந்தது.
மான்கோல்
பனங்காமவன்னியர் பழையவிளாங்குளக்கணக்கில் . 40 மேற்படி கரிக்கட்டுமுலைக்கணக்கில் e se ta 20 டிை முள்ளிப்பற்று முள்ளியவளைக்கணக்கில் . 2በ) கருநாவற்பற்றும் புதுக்குடியிருப்பும் . 20 இலுப்பைக்கடவை e s to O. a g up 10 பல்லவராயன்கட்டு · 4 · g h 8 a 10 பூநகரி 8 e O e s - a S. வலிகாமம் gy” o 15 தென்மராட்சி . ... e 8 O e a () வடமராட்சி . e - e. U. is 0 பச்சிலைப்பளி . 始 4 ● w a 皓 * - 10 தீவுபற்றுகள் . s ... 20
வு தொகை-2
அப்பால் வன்னிக்குப் போய்வருவோர் எல்லாம் கலக்கு
நாலுபாக மரவுரிக்கயிறு (ஆத்திகார்) ஆயம் இறுக்கவேண்ம்ே.
மாடு அல்லது எருமைகொண்டு வருவோர் ஒவவொரு கிருள்
த்துக்கும்நான்குநான்குபாகம் கொடுக்கவேண்டும் வருடிச் asr 19
Page 77
134 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
அறும் விதைப்பு அறுப்புக்காலங்களில் வன்னிக்கு யாழ்ப்பாணத் தார் 10,000 பேர் வரையில் போய்வருவதுண்டு. இவரெல்லா ம் வன்னியருக்குத் தலைக்குப் பத்துப்பத்துக்கயிறு கொடுத்து வந்தனர். ஒல்லாந்தரும் இவர்களிடம் தலைக்கொன்முகவாங்கி 60,000 கயிறுவரையிற் சேர்த்துப்போடுவார்கள். இவைகளிற் சில கோட்டைகளின் உபயோகத்துக்குக் கண்டு மிஞ்சியவை காகபட்டினத்துக்கு அனுப்பப்டட்டன. இதை அறவுபண்ணுவ தற்கு ஆனையிறவில் ஒர் ஆயமிருந்தது. அவ்வாயத்தைப்பற்றிப்
பின்பேசப்படும்.
மேலும் வயதுசென்று அல்லது அங்கவூறுபாட்டின் நிமி த்தம் கழிவுசெய்யப்பட்ட சகலரும் அரசினருக்கு இறுக்கவே ண்டியவை பின்வரும் மேற்கோளால் விளங்கும் 'வயோதி கர்களும் கொண்டிகளாகியோரும் இசாசகாரியத்துக்குக் கழி வு செய்யப்படுவர். ஆயினும் இவர்களெல்லாம் தம்மாலியன்ற ளவில் ஏதாவது கொடுக்கவேண்டும். உதாரணமாய் வலிகாம ம், வடமராட்சி, தீவுபற்றுக்கள் என்னுமிடங்களில் ஒவ்வொ ரு ஆடவனும் வருஷங்தோறும் ஒருகுறித்த அளவு 'தகரைவி ரை’ (சுழல் ஆவரசு?) கொட்டை கொடுக்கவேண்டும். ஆயின் தென்மராட்சியிலும் பச்சிலைப்பளியிலுமுளோர் பாய்களும் கட கங்களும் கொடுப்பர். இதன் இடாப்பு உதவித்திசாவையிடமு ம் அதிகாரிகளிடமுமிருக்கிறது. பின்னும் 236 பேர் இராசஊ ழியமின்றி விடப்பட்டிருக்கிறர்கள்.
அதன்விபரம்.
123 ஆட்கள். வலிகாமத்தில்
32 வடமராட்சியில் 22 6. தீவுகளில் 59 தென்மராட்சியில்
தொகை-236 ஆட்கள்.
இவர்கள் மாதந்தோறும் ந்ேது கூடை ஊமற்கரி சுட்டு கம் பணியின் கம்மாலைகளுக்குக் கொடுப்பர். ஆகவே 1180 பறை கரி மாதந்தோறும் கிடக்கவேண்டியது.
கிழவர்கள் கொடுக்கவேண்டிய 'தகரை விரை” கொட்டை யைத் தவிர சில கோவிற்பற்றுக்களும் ஒர் சொல்லப்பட்டதொ வேண்டியது. இதைப் பள்ளிக்கூடப்பையர்
கள் பொறுக்ேெசர்க்கவும் உபாத்திமார் கவனிக்கவும்வேண்
கை ஒப்படைச்சு
யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 135
டியது. இதன் இடாப்பும் உதவித்திசாவையிடமிருக்கிறது” (1619-ம் ஆண்டு அறிக்கை)
பனமரம்- இவற்ருேதி சனங்களிடம் பனைமரமும் தா ம்கியமித்த ஒரு குறைந்தவிலைக்குக் கட்டாயமாய்வாங்கக் கொ ழும்பு, நாகபட்டணம் முதலியவிடங்களுக்கேற்றி வியாபாரம் பண்ணினர். யாழ்ப்பாணத்தார் (விசேஷமாய்த் தென்மராட்சி யிலும் பச்சிலைப்பளியிலுமுள்ளார்) கம்பனியார் கேட்டநேரமெ ல்லாம் பனைதறித்து மரமாக்கிக் கொண்டுபோய்த் துறைமுக த்தில் அல்லது ஆற்று அருகாமையிற் கொடுக்கக் கடமைபூண் டிருந்தனர். மூன்றுவருஷத்துக் கொருமுறையே நிலத்தோம் பு திருத்தஞ் செய்யப்பட்டமையால் பலமுறையும் தறித்தப னைக்கு மூன்றுவருஷமும் வரிக்காசும் அறவிடப்பட்டேவிடும். ਕਨੇ மாங்களுக்குரிய அற்பவிலையையும் பலகாலும் இறை சுவதோர்மார் அப்பிக்கொள்வர். இவ்வாறு சனங்களை கட்டப் படுத்தி இங்கிருந்து எவ்வளவுபனை தறித்து ஏற்றப்பட்டதெ னில் 1677ம் ஆண்டுக் கணக்குப்படி 50,687 கைமரம் முத லியவைகளும் 26,040 சலாகைகளும் ஏற்றப்பட்டன. அரசின ருக்குமட்டுமல்ல, உத்தியோகஸ்தர்களுக்கும் சனங்கள் குறித் தவிலைக்கு மாம் கொண்டுபோய்க் கொடுக்க நெருக்கப்பட்டன ர். இக்கொடுமையை ஒல்லாந்தர் பிற்காலம் ஒருவாறு குறை த்துவிட்டு யாழ்ப்பாணத்தில் அரசினருக்குத் தேவையான ம ால்களைமட்டும் அரசினர்குறித்த குறைந்தவிலைக்குக் கொடுத் காற் போதுமென எற்பாடுசெய்தனர்.
கல்லு, சுண்ணம், கட்டடவேலை.- யாழ்ப்பாணத்தின் கரை களிலுள்ள முருகைக்கற்களும், அவற்ருல் சுட்ட சுண்ணும்பு ம் அமோகமாய்ப் பிறவூர்களுக்குஅனுப்பி விற்கப்பட்டன. இ க்கு எழுப்பப்பட்ட கட்டிடங்களுக்கும் பெரும்பான்மை இக் கற்களே உபயோகிக்கப்பட்டன. பலகட்டிடங்கள் செங்கல்லா லும் கட்டப்பட்டன. இருபாலையிலே செங்கல்லும் ஒடும் செ ய்யும் தொழிற்சாலையொன்றிருந்தது. அந்நாளின் பழக்கத்தா லேயே இங்காள்வரையிலும் இருபாலையில் ஓடுகள் தளவரிசை க்கற்கள் செய்யப்படுகின்றன. கல்கிளப்பிக்கொடுப்பதும் சுண்ணு ம்பும் செங்கல்லும் சுடுவதும் ஒல்லாந்தருக்குச் செலவின்றிச் ச னங்களாலேயேசெய்யப்பட்டது. பருத்தித்துறையிலும் காங்கே சன்துறையிலும் சுண்ணும்புச்குளேகள் அதிகமாய் வைக்கப்ப ட்டன. கட்டிடங்களுக்கு “மேசன்’ தச்சன், கொல்லனென் போருக்குக் கொடுக்கும் சொற்ப சம்பளமொழிய வேறுசெ லவு பிடிக்கவில்லை. இச்செலவும் ஊழியஞ்செய்யத் தவறினுே
Page 78
No comments:
Post a Comment