T.P.MUTHULAKSHMI ,COMEDY ACTRESS DIED 2008 MAY 29


T.P.MUTHULAKSHMI ,COMEDY ACTRESS
 DIED 2008 MAY 29


.டி. பி. முத்துலட்சுமி (T. P. Muthulakshmi, இறப்பு: மே 29, 2008) 1950-60களில் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையாகத் திகழ்ந்தவர். 300 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இளமைக் காலம்
தமிழ்நாடு தூத்துக்குடியில் பொன்னையபாண்டியன், சண்முகத்தம்மாள் ஆகியோருக்கு ஒரே மகளாகப் பிறந்தவர் முத்துலட்சுமி. தந்தை ஒரு விவசாயி. எட்டாம் வகுப்பு வரை படித்தார்.[1]

திரைப்படங்களில் நடிப்பு
திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு சென்றார். சென்னையில் அவருடைய மாமா எம். பெருமாள், இயக்குநர் கே. சுப்பிரமணியத்துடன் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். முத்துலட்சுமிக்கு, பெருமாளே நடனமும், பாட்டும் கற்றுக் கொடுத்தார்.[1]

எஸ். எஸ். வாசன் தயாரித்த சந்திரலேகா திரைப்படத்தில் வரும் முரசு நடனத்தில் குழுவினருடன் சேர்ந்து நடனமாடும் வாய்ப்பு முத்துலட்சுமிக்குக் கிடைத்தது. அத்துடன் சில காட்சிகளில் டி. ஆர். ராஜகுமாரிக்காக சில காட்சிகளில் நடனம் ஆடும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பின்னர் "மகாபலி சக்கரவர்த்தி", மின்மினி, தேவமனோகரி, பாரிஜாதம் முதலான படங்களில் நடித்தார்.[1]

நகைச்சுவை நடிகையாக அறிமுகம்
1950 இல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பொன்முடி படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். இதனை அடுத்து அவருக்கு ஏராளமான வாய்ப்புக்கள் வந்தன. 1951ல் ஓர் இரவு படத்தில் டி. கே. சண்முகத்தின் மனைவி பவானியாக நடித்தார். சிவாஜி கணேசன் நடித்த திரும்பிப்பார் படத்தில் தங்கவேலு மனைவியாக ஊமைப் பெண்ணாக முத்துலட்சுமி நடித்தார். இருவர் உள்ளம் படத்தில் எம். ஆர். ராதாவின் மனைவியாக முத்துலட்சுமி நடித்தார்.[1]

குடும்பம்

முத்துலட்சுமியின் கணவர் பி. கே. முத்துராமலிங்கம், அரச நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றியவர். தமிழ் நாடு சிலம்பாட்டக் கழகத்தின் நிறுவனத் தலைவர்.[1] நடிகரும் இயக்குனருமான டி. பி. கஜேந்திரன் இவர்களது வளர்ப்பு மகன் ஆவார்.[2] முத்துலட்சுமி தனது 77வது அகவையில் 2008 மே 29 இல் சென்னையில் காலமானார்.[3]


தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ரி.பி.முத்துலட்சுமி 1948-ஆம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந்து சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். பொன்முடி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரி.பி.முத்துலட்சுமி “சௌபாக்கியவதி’, “மக்களைப் பெற்ற மகராசி, நான், ஒளிவிளக்கு நாடோடி மன்னன் அறிவாளி, ஆரவல்லி, வீரபாண்டிய கட்டபொம்மன், இருவர் உள்ளம், நவராத்திரி, அன்பே வா’ உள்பட சுமார் 350 படங்களுக்கு மேல் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்தார். நடிப்பில் தன்னுடைய சிறப்பான பங்களிப்புக்காக கலைமாமணி விருது பெற்ற இவர், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா, ரி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, ஏ.கருணாநிதி, ரி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்பட இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் இவருடைய நெருங்கிய உறவினர்.  நடிகை முத்துலட்சுமி நடிகர் தங்கவேலுவுடன் இணைந்து பல
நகைச்சுவைக்காட்சிகளில் நடித்தவர். இன்றும் மறக்க முடியாத பல சிரிப்புக்காட்சிகளில் இவர் நடித்துள்ளார்.

இறுதிக்காலத்தில் நடக்க முடியாமல் அவதியுற்ற முத்துலட்சுமி சக்கர நாற்காலியைத் தான் பயன்படுத்தி வந்தார். இவரது கணவர் பெயர் முத்துராமலிங்கம். 29.5.2008 அன்று தனது 77-ஆவது வயதில் மரணடைந்தார்.

1957 -இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸாரின் வெற்றிப்படமான ‘ஆரவல்லி’ படத்தில் இவர் சிங்காரவல்லி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். மைனாவதியின் தோழி. ரி.பி.முத்துலட்சுமியை ஏ.கருணாநிதியும் இவரும் காதலிப்பார்கள். ரி.பி.முத்துலட்சுமிக்கு யாருடைய காதலை ஏற்றுக்கொள்வது என்பதில் குழப்பம். குழப்பத்தைத் தீர்க்க இருவருக்கும் ஒரு போட்டி வைப்பார். ஒரே போலவுள்ள மூன்று பெண்களின் முழு உருவச்சிலையை ஓரிடத்தில் வைத்து இந்த 3 பெண்களில் யாரைப்போல் இருந்தால் என்னை ஏற்றுக்கொள்வீர்கள் என்று இருவரும் சரியாகச் சொன்னால்தான் நான் அதில் சரியாகச் சொல்பவரை என் துணையாக ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லிவிடுவார்.
ஏ.கருணாநிதியோ 3 சிலைகளும் ஒன்று போலவே இருக்கின்றன. மூன்றுமே அழகாக இருக்கின்றன. என்று வீர வசனம் பேசிவிட்டு அதனால் என்னை ஏற்றுக்கொள் என்பார். ஆனால் ரி.பி.முத்துலட்சுமி ஏற்றுக்கொள்ளமாட்டார். இரு இரு நான் பார்த்து சொல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வழக்கம்போல தனது காதில் திரியை விட்டு குடைந்து ஆராய்ச்சி செய்துவிட்டு , நான் இப்போது சொல்கிறேன் என்று 3 பெண்களது சிலைகளின் காதுகளில் வரிசையாக ஒரு காதில் ஒரு நீள திரியை விடுவார். ஒரு பெண்ணின் ஒரு பக்கக் காதிலிருந்து மறுபக்க காதுக்கு திரி வந்துவிடும். இன்னொரு பெண்ணின் ஒரு காதிலிருந்து திரி வாய்க்கு வந்துவிடும். மூன்றாவது சிலையில் திரியை நுழைப்பார்… அத்திரி ஒரு காதில் போய் உள்ளேயே நின்றுவிடும். இப்பெண்தான் சரியானவள் குடித்தனத்திற்கு ஏற்றவள். அவளைப் போல் நீ இருக்கவேண்டும் என்பார். ரி.பி.முத்துலட்சுமியும் சரியென ஏற்றுக்கொள்வார். இக்காட்சி படத்தில் மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.
விருதுகள்

கலைமாமணி விருது (1999)
கலைவாணர் விருது
நடித்த சில திரைப்படங்கள்
ராஜாம்பாள் (1951)
வளையாபதி (1952)
தாய் உள்ளம் (1952)
பராசக்தி (1952)
மனோகரா (1954)
பொன் வயல் (1954)
ராஜி என் கண்மணி (1954)
சுகம் எங்கே (1954)
துளி விஷம் (1954)
கணவனே கண் கண்ட தெய்வம் (1955)
பாசவலை (1956)
நான் பெற்ற செல்வம் (1956)
மக்களைப்பெற்ற மகராசி (1957)
மாயா பஜார் (1957)
சக்கரவர்த்தி திருமகள் (1957)
முதலாளி (1957)
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
வண்ணக்கிளி (1959)
தங்கப்பதுமை (1959)
அடுத்த வீட்டுப் பெண் (1960)
படிக்காத மேதை (1960)
ஹரிச்சந்திரா (1968)
அன்னையின் ஆணை
அனுபவி ராஜா அனுபவி
இருவர் உள்ளம்
ஏழை உழவன்
ஓர் இரவு
கடன் வாங்கி கல்யாணம்
குணசுந்தரி
கொஞ்சும் சலங்கை
சந்திரலேகா
டவுன் பஸ்
திரும்பிப்பார்
திருவருட்செல்வர்
தேவமனோகரி
பத்மினி
பாரிஜாதம்
பிரேம பாசம்
பொன்முடி
போர்ட்டர் கந்தன்
மகாபலி சக்கரவர்த்தி
மகேஸ்வரி
மரகதம்
வடிவுக்கு வளைகாப்பு
வாழ்க்கை ஒப்பந்தம்
வாழவைத்த தெய்வம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
ஜமீந்தார்

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER