Wednesday, 20 May 2020

SACHCHU , HUMOUR COMEDY ACTRESS BORN 1948





SACHCHU , HUMOUR COMEDY 
ACTRESS BORN 1948
.




‘ரோஜா மலரே ராஜகுமாரி’ என்று நாயகன் ஆனந்தன் நாயகியைப் பார்த்துப் பாடியபோது, அந்த நாயகி அசல் பன்னீர் ரோஜாவின் நறுமணமும் மென்மையும் கொண்டவராக, அழகும் இளமையும் ஒருங்கிணைந்த எழிலார்ந்த தேவதையாகவே நம் கண்களுக்குத் தோன்றினார். அதே படத்தில் ஏரியின் நடுவே உருவாக்கப்பட்ட செயற்கைத் தாமரை மலர்களின் மீது நின்று ஆடியவாறே ‘நீலப் பட்டாடை கட்டி..’ எனப் பாடி ஆடியபோதும் அந்த மனநிலையில் யாருக்கும் எந்த மாற்றமும் இல்லை.

கதாநாயகியாக அவர் நடிப்பது இதுதான் முதல் முறை என்றாலும், அதற்கும் முன்னதாக 1950களிலேயே குழந்தை நட்சத்திரமாக நன்கு அறியப்பட்ட, அனைவராலும் கொண்டாடப்பட்ட குட்டி நட்சத்திரம் என்.எஸ்.சரஸ்வதி என்ற குமாரி சச்சு. இவருக்கு முன்னதாகவே பி.கே.சரஸ்வதி, சி.கே.சரஸ்வதி என பல சரஸ்வதிகளின் கடாட்சம் திரையுலகுக்கு இருந்ததால் இவர் சுருக்கமும் இனிமையுமாக சச்சு ஆனார். நம் சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்து
கொண்டிருப்பவர்.

பாரீஸில் பிறந்த அழகு ரோஜா மலர் சச்சுவின் பெற்றோருக்குப் பூர்வீகம் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள (தற்போதைய வேலூர் மாவட்டம்) புதுப்பாடி கிராமம். அவரது தந்தையார் சி.ஆர்.சுந்தரேசன் சென்னையில் பிரபலமான வழக்கறிஞர். சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்று வர வசதியாகத் தன் வசிப்பிடத்தையும் மண்ணடியிலேயே அமைத்துக் கொண்டார். அப்போதைய நகர்ப்புறமும் அதுதானே. தாய் ஜெயா இல்லத்தரசி. அவருக்கு இசையில் நல்ல ஆர்வம் இருந்ததால் தன் குழந்தைகளுக்கு இசை கற்பிப்பதில் முனைப்பாக இருந்தார்.


இந்தத் தம்பதிகளுக்கு 5 பெண்கள், 4 ஆண் மக்கள் என  மொத்தம் ஒன்பது குழந்தைகள். சச்சு அதில் ஆறாவது குழந்தை; பெண்களில் நான்காவது இடம். சச்சு பிறந்தது 1946ல் மண்ணடியில்தான். அதையே விளையாட்டாக பாரீஸில் பிறந்ததாகச் சொல்வாராம். (சென்னை பாரீஸ் கார்னர்) நிறைய குழந்தைகள் என்பதால் சச்சுவின் மூத்த சகோதரி லட்சுமியும் சச்சுவும் சென்னை, மயிலாப்பூரில் உள்ள அத்தைப் பாட்டி சுந்தராம்பாள் வீட்டில் வளர்ந்தார்கள். பி.எஸ். ஹைஸ்கூல் எதிரில் உள்ள வீட்டின் மாடியில் பாட்டியுடன் வாசம்.

ஒரு ஹால் மற்றும் இரு அறைகள் கொண்ட வீட்டின் கீழ்ப்பகுதி நாட்டியப் பள்ளி நடத்துவதற்காக நட்டுவனார் கே.என். தண்டாயுதபாணி பிள்ளைக்கு வாடகைக்கு விடப்பட்டது. தன் மனைவியுடன் அவர் அங்கேயே குடியேறினார். வீட்டின் கீழே ஜதி சொல்லும் ஓசையும் சலங்கையொலியும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்ததால், ஆடாத காலும் ஆடும் அல்லவா? அப்படித்தான் அக்காள் லட்சுமி நாட்டியம் கற்கத் தொடங்கினார். அக்காளைப் பார்த்து தங்கை சரஸ்வதிக்கும் நாட்டியப் பித்து பிடித்தது. இவர்களின் பாட்டிக்கும் நாட்டியத்தின் மீது ஒரு காதல் இருந்ததால், எல்லோரின் நடன ஆசைக்கும் தந்தையின் ஒப்புதலுடன் வழி பிறந்தது.

50களின் குட்டி நட்சத்திரம் உருவானார்தண்டபாணி பிள்ளை திரைப்படங்களிலும் பணியாற்ற ஆரம்பித்த பின், திரையுலகைச் சார்ந்தவர்களின் வருகை அடிக்கடி வந்து செல்லும் இடமாக அது மாறியது. அக்கா லட்சுமிக்கு அப்படித்தான் திரை வாய்ப்பு கிடைத்தது. மாடி வீட்டு லட்சுமி அவ்வாறுதான் மாடி லட்சுமியாக அறியப்பட்டு, அதுவே அவரின் அடையாளமாக பெயராகவும் மாறியது. நடனம் கற்பதற்கு மட்டுமே அனுமதி அளித்திருந்த தந்தையாருக்கு சினிமாவில் தன் பெண்கள் நடிப்பதில் துளியும் விருப்பமில்லை. ஆனால், அந்த மனநிலையை மாற்றியவர்கள் சச்சுவின் அம்மாவும் பாட்டியும்தான்.

முன்னோடி இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் இயக்கத்தில் 1939ல் வெளியான ‘தியாக பூமி’ திரைப்படத்தில், அவரது அண்ணன் விஸ்வநாதனின் மகள் பேபி சரோஜா நடித்து அன்றைய சென்னை ராஜதானியையே கலக்கிக் கொண்டிருந்தார். விற்பனைக்கு வரும் அனைத்துப் பொருட்களிலும் சரோஜாவின் படம் அச்சிடப்பட்டு, எங்கும் எதிலும் சரோஜா என்பதாக அந்தக் குழந்தையின் புகழ் பரவலாகி பட்டிதொட்டியெங்கும் பேபி சரோஜா பிரபலமானார். ஆனால், அவருக்குப் பின் குழந்தை நட்சத்திரங்களின் பற்றாக்குறை திரையுலகில் நிலவியது.

தங்கள் வீட்டுக் குழந்தைகள் திரையில் தோன்றுவதன் மூலம் அந்தப் பற்றாக்குறையைப் போக்கலாம் என்ற எண்ணம் தோன்றியதால் பாட்டி அதற்கு வித்திட்டார். இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமியின் இயக்கத்தில் 1950ல் கே.ஆர்.ராமசாமி, டி.ஆர்.ராஜகுமாரி இரட்டை வேடங்களில், இவர்களுடன் நாட்டியத் தாரகைகளான வைஜெயந்தி மாலா, குமாரி கமலா, லலிதா - பத்மினி என நட்சத்திரங்களின் ஒளி வீசிய ‘விஜயகுமாரி’ திரைப்படத்தில் மாடி லட்சுமியும் நாட்டியமாடினார்.

அக்காளின் மூலமும் தண்டாயுதபாணி பிள்ளையின் மூலமும் குழந்தை சச்சுவும் நன்கு அறியப்பட்டிருந்ததால் சச்சுவையும் திரைப்படங்களில் நடிக்க வைக்க விரும்பினார்கள். அப்படித்தான் 1952ல் வெளியான ’ராணி’ படத்தின் வழியாக சச்சு தமிழ் சினிமாவுக்குள் குழந்தை நட்சத்திரமாக தன் 6 வயதில் அடியெடுத்து வைத்தார். எல்.வி.பிரசாத் இயக்கத்தில் வீணை எஸ்.பாலச்சந்தர், பி.பானுமதி நடிப்பில் வெளியான அப்படத்தில் சிறு வயது பானுமதியாக சச்சு தோன்றினார். குழந்தையின் துறுதுறுப்பான அழகான துடிப்பான முகம், குண்டுக் கன்னங்கள், செயல்பாடுகள்.

நாட்டியத்திறன் எல்லாமும் சேர்ந்து அவரை திரையுலகுடன் இறுக்கமாகப் பிணைத்தன. ஒவ்வோர் பத்தாண்டு இடைவெளியிலும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் தோன்றிக்கொண்டே இருந்தார்கள். பேபி சரோஜாவுக்குப் பின் 50களின் குழந்தை நட்சத்திரமாக பேபி சச்சு பிரபலமானார்.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்று மீண்ட பின் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த படங்களில் ஒன்றுதான் 1952ன் ‘சியாமளா’. வழக்கத்துக்கு மாறாக கம்பீரமாக மீசை வைத்துக்கொண்டு இப்படத்தில் தோன்றினார் பாகவதர். இணையாக இளமை கொஞ்சும் எஸ்.வரலட்சுமி. அவரது சிறு வயதுத் தோற்றத்தில் சச்சு. ஆனால், இப்படம் பெரிதாக ஓடவில்லை. ஹரிதாஸ், சிவகவி படங்களைப் போல் சிறை மீண்டபின் வெளியான பாகவதரின் எந்தப் படமும் ஓடவில்லை.

1953ன் படங்களாக ‘தேவதாஸ்’, ‘அவ்வையார்’ என இரண்டுமே பிரம்மாண்ட வெற்றி பெற்ற படங்கள். தேவதாஸ் படத்தில் குட்டி சாவித்திரி; தேவதாஸுடன் சிறுவயது முதலே அன்பும் பாசமும் குறும்பும் கொப்பளிக்க அவர் பேசும் வசனங்கள் அத்தனை அழகும் நேர்த்தியும் நிறைந்தவை. அவ்வையார் படத்திலும் அவ்வாறே. 1954ல் வெளியான ‘சொர்க்க வாசல்’ சி.என்.அண்ணாதுரையின் வசனத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், அஞ்சலி தேவி நடிப்பில், காசிலிங்கம் இயக்கத்தில் உருவானது.

1957ன் ‘மாயா பஜார்’ படத்தில் சிறு வயது வத்ஸலா (சாவித்திரி) நீர் நிறைந்திருக்கும் தடாகத்தின் ஓரம் அமர்ந்திருக்க, அவரது பிம்பம் நீரில் தென்படும். பின், நீரில் ஏற்பட்ட சலனம் சமநிலையை அடையும்போது சச்சு, சாவித்திரியாகி இருப்பார். அழகியல் ததும்பும் அற்புதமானதோர் காட்சியமைப்பு. தமிழ், தெலுங்கு என இரு பதிப்பிலும் அவரே நடித்தார். சச்சு நடித்த படங்களின் வரிசையில் 100 நாள் ஓடிய முதல் படம் இது.
1955ன் ‘காவேரி’ படத்தில் சந்தோஷம் கொள்ளாமே சாப்பாடும் இல்லாமே தாய்நாடு திண்டாட்டம் போடுதே’ என்று பத்மினி ஆடிப் பாடுவார். அவருடன் சச்சுவும் தோன்றி நடனமாடுவார்.

1960ல் ‘ராஜா தேசிங்கு’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம் தம்பதியரின் மகளாகவும் எம்.ஜி.ஆரின் சகோதரியாகவும் நடித்தார். பதின்ம வயதின் ஆரம்ப நிலையில் இப்படத்தில் தோன்றினார். கோடீஸ்வரன் படத்தில் சிவாஜி கணேசன், பத்மினியுடன் நடிக்கும் வாய்ப்பு.
பானுமதி, பத்மினி, சாவித்திரி, அஞ்சலிதேவி, எஸ்.வரலட்சுமி, குசலகுமாரி, கே.பி.சுந்தராம்பாள் என அப்போதைய கதாநாயகிகள் அனைவருக்கும் ஜூனியராக நடித்திருக்கிறார். கதாநாயகிகளின் சிறு வயது தோற்றம் என்பதால் படத்தில் மிகக் குறைந்த நேரமே தோன்றக்கூடிய வாய்ப்பு என்றாலும் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டார்.


சிறு வயதிலேயே அவருக்கு அமைந்த படங்கள் அனைத்தும் திரையுலகின் மிகப் பெரிய நிறுவனங்கள், நடிப்புலக ஜாம்பவான்கள், மேதை இயக்குநர்கள், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், இசை மேதைகள், நாட்டிய மணிகள் என பெரும்புள்ளிகளுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களாகவும் நல்வாய்ப்பாகவும் சச்சுவுக்கு அமைந்தன.

தந்தையாரின் உடல்நலம் சீர்குலைந்ததைத் தொடர்ந்து, மிகப் பெரும் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் சச்சுவின் தோள்களின் மீது விழுந்தது. திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால், அவர் இழந்தது குழந்தைப் பருவத்துக்கே உரிய பள்ளிப்பருவத்தையும் கல்வியையும். அதனால், வீட்டில் ஆசிரியரை நியமித்துப் பாடம் கற்க வேண்டிய நிலை.

நாயகியாக அறிமுகமானாலும் தொடர முடியாதவர்  பால பருவத்தைக் கடந்து இள மங்கையாக வடிவெடுத்த பின்னர் நாயகியாகும் வாய்ப்பும் ஏ.வி.எம் நிறுவனத்தின் மூலம் தேடி வந்தது. இப்போது அவர் குமாரி சச்சு. மன்னராட்சிக் காலத்திலும் மக்களாட்சியின் மகத்துவம் பேசும், புரட்சிக்காக மக்களை ஒருங்கிணைக்கும் புரட்சிக்காரர்களைக் கதை நாயகர்களாக்கிய படம் அது.

அசோகனும் ஆனந்தனும் இரண்டு நாயகர்கள்; ஈ.வி.சரோஜாவும் சச்சுவும் நாயகிகள். புரட்சியாளன் எப்படியும் தன்னுயிரை இழக்க வேண்டியவன் என்பதால் அசோகனுக்கு ஜோடியில்லை. பின்னர் புரட்சிக்காரனாக உருவாகும் ஆனந்தனுக்கு இரு நாயகியர்; அதிலும் ஒருத்தி ஒருதலைக் காதல் கொண்டவள். அதனால் நாயகன் ஆனந்தனின் ஒரே நாயகியாக சச்சு மட்டுமே. இன்றைக்கு ‘சூப்பர் கெமிஸ்ட்ரி’ என்று சொல்லத்தக்க ஜோடிகளின் முன்னோடிகள் ஆனந்தனும் சச்சுவும் என்றால் மிகையில்லை.


இந்தப் படம் வெற்றி பெற்ற பின்னர் நாயகியாக ‘அன்னை’ படத்தில் நடித்தார். ஆனால், அவரைக்காட்டிலும் திறமையான பானுமதியும் சௌகார் ஜானகியும் என இரு நாயகிகள் அவரை ஓவர்டேக் செய்தார்கள். கதைப்போக்கின்படி அவர்களே பிரதானமான பாத்திரங்கள் எனும்போது, சச்சு அடுத்த இடத்துக்குத் தள்ளப்பட்டார்.  அவருக்கு ஜோடியாக இளமையான ஹரநாத்.

காரில் சென்னை மாநகர வீதிகளில் இருவரும் உலா வந்தவாறே பாடும் ‘அழகிய மிதிலை நகரினிலே’ பாடல் அவ்வளவு ஹிட். இப்போதும் பழைய கடற்கரைச் சாலை, சென்ட்ரல் ஸ்டேஷனை ஒட்டிய ரயில்வே தலைமையகம் இவற்றையெல்லாம் பார்க்கும்போது அந்த நாளை நோக்கி மனம் இறக்கை கட்டிக் கொள்ளும். வசதியான ஒரு வீட்டில் அவர்களின் உதவியால் கல்லூரியில் படிக்கும் மாணவியாக, அதே நேரம் மிகப் பொறுப்புணர்வு மிக்க பெண்ணாகவும் அவரது நடிப்பு மிக இயல்பாக இருக்கும்.

மொட்டை மாடியில் புறாக்களுடன் கொஞ்சியவாறே சச்சு பாடுவதான ‘ஓ... பக்..பக்..பக்..பக்.. பக்கும் பக்கும் மாடப்புறா’ அந்தக் கால இளசுகளின் மனதைக் கொள்ளையிட வைத்த பாடல். சந்திரபாபுவின் ஒருதலைக் காதலும், சச்சுவைப் பின்தொடர்தலும் கூட மிக ரசமானவை. ‘அன்னை இல்லம்’ படத்தில் அமைதியே உருவான சீதாவாக நாயகி தேவிகாவின் தங்கையாகத் தோன்றுவார். முத்துராமனைக் காதலித்துப் படத்தின் இறுதியில் கைப்பிடிப்பார். 

தமிழ் சினிமாவின் முதல் அறிவியல் கற்பனைக் கதையாக விண்வெளி, பறக்கும் தட்டு என்றெல்லாம் கதையும் காட்சிப்படுத்தலுமாக நகர்ந்த ‘கலை அரசி’ யில் நாயகன் எம்.ஜி.ஆருக்குத் தங்கை. படத்தின் ஆரம்பத்திலேயே டைட்டில் பாடலுடன் தங்கை சச்சு மாட்டு வண்டி ஓட்டி வர, அண்ணன் எம்.ஜி.ஆர் பின்னால் அமர்ந்து பாடிக்கொண்டு வருவார். கதைப்போக்கில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணிடம் சிக்கிக் கொள்ள, அண்ணன் எம்.ஜி.ஆர். வந்து காப்பாற்றுவார்.

‘அவன் பித்தனா?’ படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் சச்சு பாடி ஆடும் பாடல் ஒன்று அப்போது. மிகப் பிரபலம் ‘கிழக்கு வெளுத்ததடி; கீழ் வானம் சிவந்ததடி’. இப்போதும் முரசு தொலைக்காட்சியின்  அறிமுகப் பாடலாக அது வெளியாகும்போது தவிர்க்க முடியாமல் சச்சுவும் தோன்றுவார். இந்தப் படத்திலும் முதன்மை நாயகியாக விஜயகுமாரியே இருந்தார்.

கவர்ச்சிகரமான நகைச்சுவை நாயகி30கள் 40கள் 50களில் நடிக்க வந்த மூத்த நடிகைகள் பலரும் நாயகிகளாக உச்சத்தில் இருக்க அவர்களை விட இளமைத் துள்ளலும் அழகும் திறமையும் ஒருங்கே ஒன்றிணைந்த சச்சு நாயகியான பின்னர் அவரால் ஏன் அதைத் தொடர முடியவில்லை என்பது பெரும் கேள்விக்குறிதான். கதாநாயகர்கள் எல்லாம் மிக மூத்தவர்களாக இருந்தபோது கதாநாயகிகளும் அவ்வாறே இருந்தார்கள். இளமையான கதாநாயகர்களுக்குப் பஞ்சம் இருந்தது. 60களில் இளமையான நாயகியர் பலர் அறிமுகமானபோதும் நாயகர்கள் மட்டும் மாறாமல் இருந்தார்கள்.

அப்படி அறிமுகமான ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன் எல்லோரும் இரண்டாம் கட்ட நாயகர்களாகவே இருந்தார்கள். இரண்டாவது நாயகி வேடங்களே சச்சுவுக்குக் கிடைத்து வந்த நிலையில், நகைச்சுவை நடிகையாக அவர் மாறியது வலி தரும் ஒரு முடிவுதான் என்றாலும் மிகத் தீர்க்கமான முடிவு. நாயகியாக மிஞ்சிப் போனால் ஒரு பத்தாண்டுகள் நிலைக்கலாம். அப்போது நகைச்சுவை நடிகைகள் பலர் இருந்தாலும் மனோரமாவே முதன்மையான இடத்தில் இருந்தார். அவர் மட்டுமல்ல, ரமா பிரபாவும் அப்போது அவருடன் போட்டியில் இருந்தார். 60, 70களில் மூவரின் நகைச்சுவையும் கொடிகட்டிப் பறந்தது.

‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நகைச்சுவை நடிகையாக மாறி அசத்தினாலும், காஞ்சனா, ராஜ என இரு நாயகிகளுடன் மூன்றாவது நாயகியாகவே அவரும் இருந்தார். இந்தப் படத்தில் சச்சுவின் நடிப்பின் உச்சம் என்றால், அது ‘மலர் என்ற முகம் இன்று சிரிக்கட்டும்’ பாடலுக்கு அவர் ஆடும் வெஸ்டர்ன் நடனம்தான்.

மீனலோசனியாக படத்திலும் ஓஹோ ப்ரொடக்‌ஷன் நடிகையாக மாறும் உத்வேகத்துடன் அந்தக் காட்சியை அவ்வளவு பிரமாதப்படுத்தியிருப்பார். வயதான வேடத்தில் இருக்கும் முத்துராமன் சச்சுவைப் பார்த்ததும் சற்றே முகம் சுளித்து, ‘என்ன டிரெஸ் எல்லாம் ஒரு மாதிரி..?’ என்று இழுப்பார். சச்சு அணிந்திருக்கும் ஸ்கர்ட்டும் ஷர்ட்டும் நம் பார்வையில் மோசமானதாகத் தெரியாது. ஆனால், அக்காலகட்டத்து ஆண்களின் பெண்ணின் உடை குறித்த பார்வை அவ்வாறாகத்தான் இருந்தது என்பதும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

‘வீரத்திருமகன்’ படத்தில் தன்னை நாயகியாக அறிமுகப்படுத்திய ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரிடம் சச்சு தனக்கு ஆபாசமான உடைகள் எதையும் அளிக்கக் கூடாது என நிபந்தனை விதித்த துணிச்சல்காரரும் கூட. ஆனால், அதே சச்சு அதைவிட மோசமான, மிகக் குறைந்த உடைகளை அணிந்து நடித்து கவர்ச்சிகரமான நகைச்சுவை நடிகையாகவும் பின்னாட்களில் அறியப்பட்டார். 70களில் வெளியான பல திரைப்படங்களில் சச்சுவைப் பார்க்கும்போது அதை நன்கு உணர முடியும்.

‘சிவந்த மண்’ படத்திலும் புரட்சிக்காரர்களுக்கு உதவக்கூடிய இரவு விடுதிப் பெண்ணாக நடித்திருப்பார். இதிலும் அவருக்கு ஒரு வெஸ்டர்ன் நடனம் உண்டு. எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ‘முத்தமிடும் நேரம் இப்போ’ பாடல், என்ன ஒரு துள்ளல் நடனமும் இசையும் என்று தோன்றும்.
எப்போது கேட்டாலும் ஆடத் தோன்றும் கொண்டாட்ட மனநிலையை உண்டாக்கும் பாடலும் நடனமும் அது என்றால் மிகையில்லை. மெக்ஸிகன் இசை பாணியில் அந்தப் பாடலுக்கு இசை அமைத்ததாக எம்.எஸ்.

விஸ்வநாதன் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்.  நகைச்சுவையுடன் நின்று விடாமல், குணச்சித்திர நடிகையாகவும் ‘பூவா தலையா’, ‘மனசுக்குள் மத்தாப்பூ, ‘அவதாரம்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்கள் ஏற்று நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் சச்சுவுக்கு சி.ஐ.டி. போலீஸ் வேடம்.

உச்சக்கட்ட காட்சியில் வில்லன் கூட்டத்தாரை துப்பாக்கியில் சுட்டு வீழ்த்தி, எம்.ஜி,ஆரை காப்பாற்றுவதாகக் காட்சியமைப்பு. இதைப் பார்த்த செஞ்சி பகுதியிலுள்ள நரிக்குறவர் சமுதாய மக்கள், சென்னையிலுள்ள சச்சுவின் வீட்டுக்கே வந்து விட்டார்கள். ‘எங்கள் அண்ணனைக் காப்பாற்றியதற்கு நன்றி’ என்று சொல்லிக் காலில் விழுந்து வணங்கி பல பரிசுகளையும் கொடுத்திருக்கிறார்கள் என்றால் பாருங்கள்.

நாடகத்துறையையும் சச்சு விட்டு வைக்கவில்லை. 1970ல் நடிகர் டி.எஸ் பாலையாவின் முயற்சியால் முதன்முதலாக ‘நீரோட்டம்’ என்ற மேடை நாடகத்தில் நாயகியாக அறிமுகமானார். பழம்பெரும் நடிகையான எஸ்.டி.சுப்புலட்சுமியும் இந்த நாடகத்தில் நடித்திருக்கிறார். சச்சு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போதும் தொடர்ச்சியாக நாடகங்களிலும் கவனம் செலுத்தத் தவறவில்லை. ‘மெழுகு பொம்மைகள்’, ‘தோப்பில் தென்னைமரம்’, ‘சக்கரம் சுழல்கிறது’, ‘முதியோர் இல்லம்’ என பல நாடகங்களில் பலமுறை மேடையேற்றம் கண்டிருக்கிறார். ‘தேவியர் இருவர்’ நாடகத்திலோ இரட்டை வேடம். இவ்வளவு திறமைகளைப் பெற்றிருந்தும் தமிழ்த் திரையுலகு அவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது. 

திரையுலகத் தோழியின் மாறா நட்பு ‘மாயா பஜார்’ படத்தில் நடிகை சந்தியாவுடன் நடித்தவர் அவருடைய மகள் ஜெயலலிதாவுடன் 1966ல் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் கல்லூரித் தோழியாக நடித்தார். பின்னர் தொடர்ந்து 16 படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ‘சுமதி என் சுந்தரி’ பட்த்தில் இருவரும் நடித்திருந்தாலும், சச்சுவைக் குறிப்பிட்டு ‘சச்சாயி’ என்ற ஒரு பாடலும் இடம் பெற்றது. இருவருக்கும் இடையே பல ஒற்றுமைகளும் இருந்தன. அதுவே அவர்களிடம் நல்ல நட்பு உருவாகவும் வழிவகுத்தது. 1980ல் ஜெயலலிதா திரையுலகை விட்டு விலகியபோதும், சச்சு தொடர்ந்தார். ஜெயலலிதா முதல்வரானார். இந்த நட்பின் நீட்சியே 2011ல் இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் பொறுப்பு
சச்சுவுக்கு அளிக்கப்பட்டது. 

தற்போதைய நகைச்சுவை நடிகர்கள் அனைவரிலும் நீண்ட கால திரையுலக அனுபவம் கொண்டவர் சச்சு. ஆயிரம் படங்கள் கண்ட பத்ம
மனோரமா கூட சச்சுக்குப் பின் நடிக்க வந்தவரே. 6 வயதில் திரையுலகில் நுழைந்து அரை நூற்றாண்டுகளைக் கடந்து இதோ 67 ஆண்டுகள் ஆகி விட்டன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் 500 படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.

எம்.ஆர்.ராதா, பாலையா, தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், சோ, வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.ஆர்.ஆர். வாசு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் என அனைத்து நகைச்சுவை நடிகர்களுடனும் இணைந்து நடித்தவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். 2000 ஆம் ஆண்டுக்குப் பின் தொலைக்காட்சித் தொடர்களிலும் பிஸியானார். இப்போதும் அவ்வப்போது சில படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரம் என ஏதோ ஒருவிதத்தில் நடிப்பு அவரைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசின் கலைமாமணி விருது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் விருது,
எம்.ஜி.ஆர். விருது என விருதுகளுக்கும் பெருமை சேர்த்தவர்.

நடிகை சச்சு நடித்த தமிழ்த் திரைப்படங்கள்ராணி, சியாமளா, தேவதாஸ், அவ்வையார், சொர்க்கவாசல், காவேரி, மாயா பஜார், மருமகள், எதிர்பாராதது, ராஜா தேசிங்கு, கோடீஸ்வரன், வீரத்திருமகன், மரகதம், அன்னை, அன்னை இல்லம், கலையரசி, காதலிக்க நேரமில்லை, தேன் மழை, மோட்டார் சுந்தரம் பிள்ளை. கலாட்டா கல்யாணம், கல்லும் கனியாகும், பாமா விஜயம், ஜீவனாம்சம், நினைவில் நின்றவள், பொம்மலாட்டம், தேன் மழை, ஊட்டி வரை உறவு, சொர்க்கம், துணைவன், சிவந்த மண், பூவா தலையா, நிறைகுடம், தேனும் பாலும், அன்பளிப்பு, தங்கைக்காக, சுமதி என் சுந்தரி, உத்தரவின்றி உள்ளே வா,

இரு கோடுகள், பிள்ளையோ பிள்ளை, திக்குத் தெரியாத காட்டில், எங்கிருந்தோ வந்தாள், டெல்லி மாப்பிள்ளை, நல்ல பெண்மணி, கை நிறைய காசு, என் அண்ணன், பெண் தெய்வம், திருமலைதெய்வம், திருமாங்கல்யம், அத்தையா மாமியா, உரிமைக்குரல், முயலுக்கு மூணு கால், அவன்தான் மனிதன், மீனவ நண்பன், தீபம், சிட்டுக்குருவி, இவள் ஒரு சீதை, தர்ம யுத்தம், எல்லாம் உன் கைராசி, சுஜாதா, தெய்வ சங்கல்பம், தாய் பிறந்தாள், ஊருக்கு ஒரு பிள்ளை, சொல்லத் துடிக்குது மனசு,

மனசுக்குள் மத்தாப்பூ, நாங்கள், அவதாரம், டாட்டா பிர்லா, பிரியங்கா, ஊமை விழிகள், உனக்காக எல்லாம் உனக்காக, பிரிய சகி, ஜெர்ரி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சாது மிரண்டால், ஐந்தாம் படை, ஆட்ட நாயகன், கௌரவர்கள், தில்லுமுல்லு, நையாண்டி, இரும்புக்குதிரை, கெத்து, அவன் அவள், கொடி, கடவுள் இருக்கான் குமாரு, சென்னை 600028 II, பேரழகி, அயோக்யா, ஜாக்பாட்.

 2019-11-12@ 15:55:41
நன்றி குங்குமம் தோழி



நான் "ஜனக் ஜனக் பாயல் பாஜே'' பற்றி ஏன் இவ்வளவு தூரம் சொல்கிறேன் என்றால், அந்தப் படத்தில் கதாநாயகியாக மற்றும் கதாநாயகனாக நடித்த இருவருமே "கதக்' நடனம் தெரிந்தவர்கள். கதாநாயகியாக நடித்தவர் சந்தியா. இவர் இயக்குநர் வி.சாந்தாராமின் மூன்றாவது மனைவி. முதலில் இவருக்கு நடனமே தெரியாது. "விஜயா' என்ற பெயருடன் திரை உலகில் நுழைந்தவர், இவருக்கு இயக்குநர் சாந்தாராம் மறு பெயர் சூட்டினார். அதுதான் சந்தியா. தனக்குத் தெரியாத ஒன்றை கற்று, அதில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற ஒரு வெறியோடு அல்லது வைராக்கியத்தோடு 24 மணி நேரத்தில் சுமார் 18 மணி நேரம் உழைத்து கதக் என்ற நடனக் கலையைக் கற்றார். கதாநாயகன் கோபி கிருஷ்ணா ஒரு தேர்ந்த நடனக் கலைஞர். அது நடிகை சந்தியாவிற்கு எளிதாகப் போய் விட்டது.
 பயிற்சி என்று இவர் உழைப்பதைப் பார்த்த இயக்குநர் சாந்தாராம், இவர் மேல் மிகவும் அன்பு கொண்டு பார்த்து கொண்டதாகவும், அது கடைசியில் காதலாக மாறி கல்யாணம் வரை சென்றதாகவும் சொல்வார்கள். கோபி கிருஷ்ணா குடும்பமே "கதக்' நடனத்தில் ஊறிப் போன குடும்பம். இவரது தந்தை வழியைச் சேர்ந்தவர் தான் பண்டிட் சுக் தேவ் மஹராஜ்.
 இவருக்கு பரத நாட்டியமும் தெரியும். அதை மகாலிங்கம் பிள்ளை மற்றும் கோவிந்த ராஜ் பிள்ளை இருவரிடமும் கற்றுத் தேர்ந்தார். இவரது 15 -ஆவது வயதிலேயே நடனத்தின் அரசனான பரமசிவன் பெயரில் "நடராஜ்' என்ற பட்டத்தையும் பெற்றார். தனது பதினேழாவது வயதில் இவர் படத்திற்கு நடனம் அமைக்கும் அளவிற்கு உயர்ந்தார். இன்னும் சொல்லப் போனால் படங்களுக்கு நடனம் அமைக்கும் பல சிறியவர்களுக்கு இவர்தான் முன்னோடி. இவர் நடித்த முதல் படம் வி.சாந்தாராம் டைரக்ட் செய்த "ஜனக் ஜனக் பாயல் பாஜே'. இவர் பல படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அதில் தமிழ் படங்களும் அடங்கும். 1975-ஆம் ஆண்டு இவருக்கு மத்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. இது மட்டுமல்ல ; இவர் 9 மணி நேரம் 20 நிமிடங்கள் தொடர்ந்து கதக் நடனமாடி சாதனைப் புரிந்தவர்.
 இவ்வளவு பெருமைக்கும் சொந்தக்காரரான கோபி கிருஷ்ணா எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார் என்று சொன்னால் எவ்வளவு பெருமையான விஷயம். அது மட்டுமல்ல; அவர் எனது நடனத்தைப் பார்த்து விட்டு என்னைப் பாராட்டினார் என்றால் அது மிகப் பெரிய விஷயம் இல்லையா? நான் முன்பே சொன்னது போல் அந்தக் காலத்தில் எங்கள் எல்லோருக்கும் ஒரே பொழுது போக்குத் திரைப்
 படம் பார்ப்பது தான். அதிலும் நடனம் சம்பந்தபட்ட படம் என்றால் கேட்கவே வேண்டாம். முதல் டிக்கெட் எங்கள் குடும்பம் தான் வாங்கும். அந்த அளவிற்கு நடனத்தின் மீது எங்களுக்குத் தீராத ஆசை, பாசம், காதல், இப்படி எது வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்.


.

எனக்கு ஒன்று தெரியவில்லை. எப்படி அவரால் ஒரே ஒரு சலங்கையின் ஒலியை மட்டும் எழுப்ப முடிகிறது என்று அப்போது நான் குழந்தையாக இருந்ததனால், எனக்கு இதற்கான விடை தெரியவில்லை. என் அக்காவிடம் கேட்டுப் பார்த்தேன். "அதுதான் கோபி கிருஷ்ணாவின் பெருமை. அவர் செய்தது அசுர சாதகம். அதன் விளைவே இந்த ஒற்றை சலங்கை ஒலி. சாதகம் என்று கூறினால் அதற்குத் தமிழில் ஒரு பெயர் உண்டு. அது தான் பயிற்சி. இடை விடாத பயிற்சியினால் இது மட்டும் அல்ல இதற்கு மேலும் செய்யலாம். அதன் விளைவு தான் நம்மை எல்லாம் இவரால் இப்படி அதிசயிக்க வைக்கும் அளவில் பல விஷயங்களைச் செய்ய முடிகிறது. "முயற்சி திருவினையாக்கும்' என்ற பொன் மொழியைத் தான் ஏ.வி.எம். என்கிற ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தனது தாரக மந்திரமாக வைத்துள்ளார். முயற்சி என்பது ஒருவிதமான பயிற்சிதான். வெற்றி பெரும் வரை இடைவிடாத முயற்சி செய்தால், அதுவே நல்ல பயிற்சியாகி விடும். பின்னர் அந்தப் பயிற்சியே வெற்றியை நமக்குக் கொண்டு வந்து தந்து விடும்.
 கோபி கிருஷ்ணா இந்த மாதிரி செய்து காண்பித்து விட்டால் நிகழ்ச்சி முடிவடைந்து விடும். அவர் சாதாரணமாகவே ஆணழகர். நடனத்தின் போது புருவத்தை வலது பக்கமும், இடது பக்கமும் நெளித்தும், அசைத்தும் காண்பிப்பார். அவரது ஒவ்வொரு அசைவும் நளினமாக இருக்கும். நிகழ்ச்சி முடிந்ததும் அவரைப் பார்த்துப் பாராட்டிவிட்டு, நாங்கள் எல்லோரும் அவரை எங்கள் இல்லத்திற்கு அழைத்தோம். அவர் மறுப்பேதும் சொல்லாமல் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களைக் கெளரவப்படுத்தினார். அந்த வாரமே எங்களுக்கு ஒரு நடன நிகழ்ச்சியும் இருந்தது. நாங்கள் நடனமும் ஆடுவோம் என்று தெரிந்தவுடன் அவர் ரொம்பவும் சந்தோஷப்பட்டார். அதற்கும் அவரை நாங்கள் அழைத்தோம். எங்கள் நிகழ்ச்சிக்கும் வந்து என்னையும் எனது நடனத்தையும் பாராட்டினர். அவரது பாராட்டு என்னை மெய்மறக்க செய்துவிட்டது என்று சொன்னால் அது மிகை இல்லை. காரணம், கோபி கிருஷ்ணா என்ற மிகப் பெரிய நடன வல்லுநரின் பாராட்டுச் சாதாரணமாகக் கிடைக்குமா என்ன?
 12-13 வயதில் ஒரு நடன நிகழ்ச்சியும் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் நடந்தது என்ன? அடுத்த வாரம் சொல்கிறேன்.

 (தொடரும்)




.சச்சு (பிறப்பு 1943) தமிழ் திரைப்பட நடிகையாவார். இவர் பல்வேறு மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திரம், நகைச்சுவை, நாயகி என பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் 1953ல் ராணி என்ற படத்தில் நான்கு வயதாக இருக்கும் பொழுது அறிமுகமானார்.
விருதுகள் மற்றும் பரிந்துரை
1991ல் தமிழக முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதாவிடம் கலைமாமணி விருது பெற்றார். தியாக பிரம்மா கானா சபா விருதினை எம். எஸ். சுப்புலட்சுமியிடம் பெற்றார். மற்றும் 2012ல் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா கானா சபா நாடக சூடாமணி விருது கொடுத்தது.


நடிகை குமாரி சச்சு: என்.எஸ். சரஸ்வதி என்ற இயற் பெயர் கொண்டவர்,வயது-69. டைரக்டர் ஏ.சி. சாமி அவர்களால் “ராணி” படத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் “சொர்க்க வாசலிலும்”, பின் “தேவதாசிலும்”, சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, புகழ் பெற்ற, நடிகை குமாரி சச்சு, சுமார் 500 படங்களுக்கும் மேல் நடித்து, சின்னத்திரையிலும் முத்திரை பதித்தவர்.

மிகவும் பழமையும், பாரம்பர்யமும் மிக்க குடும்பத்தில் பிறந்து, தனது சிறந்த நாட்டிய மற்றும் குணசித்திர நடிப்பின் மூலம் பிரபலமடைந்தவர்…மாயாபஜார் (குட்டி வத்சலா),வீரத் திருமகன் ஆனந்தன்( 1961, ரோஜா மலரே ராஜகுமாரி) தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் “அன்னை” ( அழகிய மிதிலை நகரினிலே, புத்தியுள்ள‌ மனிதரெல்லாம்…சந்திரபாபு) போன்ற வெர்றிப் படங்கள் மூலம், ஜீபிடர், ஜெமினி, வாஹினி போன்ற பெரிய பானர்கள் இவர்றிலெல்லாம் வாய்ப்புகள் அவரை தேடிக் குவிந்தது.

கோவை செழியனின் தயாரிப்பில், இயக்குனர் சிரீதரின் “காதலிக்க நேரமில்லை”, ஒரு பெரிய திருப்பு முனை என்பதை நாம் அறிவோம். திரு நாகேஷ் அவர்களுடன், காமெடி ட்ராக்…மலரென்ற முகமொன்று…சூப்பர் வெஸ்டர்ன் டான்ஸ்.! கே.பி. சாரின், பாமா விஜயம், பூவா தலையா போன்ற படங்கள் இன்னொரு மைல் கல். மேலும் சுருளிராஜன், தேங்காய் சீனீவாசன் மற்றும் திரு எம்.ஆர். ராதா போன்ற தமிழ் நகைச்சுவை ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றியவர் குமாரி சச்சு அவர்கள்.

சின்னத்திரை: மாண்புமிகு மேயர், தினேஷ் கணேஷ், காஸ்ட்லி மாப்பிள்ளை, வீட்டுக்கு வீடு லூட்டி, ஆனந்த பவனம். “நீ பாதி நான் பாதி”…டாக் ஷோ…சீனியர் சிட்டிசன்ஸ் இவை எல்லாம் பிரபலம்.

விருதுகள் : கலைமாமணி மற்றும் பாரத ரத்னா திருமதி எம்.எஸ். அவர்களிடமிருந்து “தியாகப் பிரம்ம ஞான சபா”…விருது (1990).

5 முதல்வர்கள்…பாரத ரத்னா, மக்கள் திலகம்…எம்.ஜி.ஆர். ஆந்திர சூப்பர் ஸ்டார் என்.டி.ஆர். முதல்வர் செல்வி ஜெ அம்மையார், கலைஞர் திரு மு.க., பேரரிஞர் அண்ணா இப்படி இந்தியாவின் 5 முதல்வர்களுடன் திரைப்படங்களில் பனியாற்றிய சிறப்பு உடையவர் குமாரி சச்சு அவர்கள்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலரும், குழந்தைப் பருவத்திலிருந்தே நடிக்கத் துவங்கி, கதாநாயகி, சிறந்த நகைச்சுவை மற்றும் குணச் சித்திர பாத்திரங்களில் மிளிர்ந்தவர் நடிகை குமாரி சச்சு.

1971-இல் கே.பாலசந்தர் இயக்கிய “பூவா தலையா” படத்தைத் தெலுங்கில் ஏவி.எம்.நிறுவனத்தார் “பொம்மா பொருசு” என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டனர். இப்படத்தில் தமிழில் நாகேஷ் அவர்களுடன் ஜட்கா வண்டிக்காரரின் மனைவியாக நடித்த அதே வேடத்தில் தெலுங்கில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் “சலம்” அவர்களுடன் நடிக்க வைத்தார் பாலசந்தர். அந்த கதாபாத்திரத்தில் தமிழில் செய்தவாறே எவ்வித குறைபாடுமின்றி அக்கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி தன் மேன்மையாண நடிப்பினை வெளிப்படுத்தி தானொரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் சச்சு.

தமிழ் சினிமாவில் கதாநாயகி, காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சச்சு. சினிமாவிற்குப் பின்னர் தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இவர், சென்னை ராஜா அண்ணாமலைபுரம், ஸ்ரீராம் காலனியில் வசித்து வருகிறார்.

சச்சு நடித்த ஒரு சில படங்களின் பெயர்கள்

மருமகள், மாயா பஜார், திருமலை தெய்வம், கோடீஸ்வரன், காதலிக்க நேரமில்லை, குலவிளக்கு, நல்ல பெண்மணி, கை நிறைய காசு, திருமாங்கல்யம், இரு கோடுகள், கல்லும் கனியாகும், அத்தையா மாமியா, நிறைகுடம், பாமா விஜயம், காசேதான் கடவுளடா, அன்பளிப்பு, உரிமைக்குரல், கலாட்டா கல்யாணம், எங்கிருந்தோ வந்தாள், தெய்வம் பேசுமா, சுமதி என் சுந்தரி, முயலுக்கு மூணுகால்.
.
.
“இத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது”; நடிகை சச்சு பெருமிதம்..!

“அழகை பாதுகாப்பதில் அறிவியலுக்கு என்ன வேலை” ; நடிகை சச்சு கலாட்டா..!

“அழகை வெளிப்படுத்துவதற்கு வயது ஒரு தடையேயில்லை” ; பேரழகி சச்சு கொடுக்கும் டிப்ஸ்..!

Sachu Stills 001
Sachu Stills 002
Sachu Stills 003

Sachu Stills 004
Sachu Stills 005
Sachu Stills 007

‘கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ்’ சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’. ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சீனியர் நடிகை சச்சு இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்..

படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது.

ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். அதன்பின் படத்தில் நடக்கும் கலாட்டாக்கள் தான் கதை.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சச்சு கூறியதாவது,

“எம்.ஜி.ஆர் – சிவாஜி காலம்தொட்டு கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.. இப்போதுள்ள இயக்குனர்கள் எனக்கென்று ஒரு கதாபாத்திரம் இருப்பதாக கூறி என்னை அழைப்பதையே மிக பெருமையாக நினைக்கிறேன்.. இப்போதைய கலைஞர்கள் எங்களுக்காக என எதையும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.. ஆனால் நான் அவர்களுக்கு ஏற்றாற்போல் என்னை மாற்றிக்கொள்கிறேன்.

அதனால் தான் இந்த படத்தில் ஒரு புதுவிதமான கதாபாத்திரம் என்றதும் என்னால் எளிதில் ஒப்புக்கொள்ள முடிந்தது. இத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது. வயதானாலும் கூட பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் இந்த கதாபாத்திரம் போன்றே இப்போதும் கூட நிஜத்தில் நிறைய பெண்களை பார்த்திருக்கிறேன்.. அதைத்தான் இந்தப்படத்தில் பிரதிபலித்திருக்கிறேன்..

பெண்கள் எந்த வயதில் இருந்தாலும் தங்கள் அழகை பேணிக்காப்பதில் அக்கறை காட்டவேண்டும். அதற்கு பியூட்டி பார்லர் தான் போக வேண்டுமென கட்டாயமில்லை.. இயற்கையான முறையிலேயே தங்களது அழகை வெளிப்படுத்தலாம்.. இந்த விஷயத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தை எங்கே எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என ஒரு வரைமுறை இருக்கிறது. சில தவறான இடங்களில் அதை பயன்படுத்தும் போது ஏற்படும் பின்விளைவுகள் என்ன அதன் பிரச்சனைகள் என்ன என்பதை தான் இந்த பேரழகி ‘ஐ எஸ் ஓ’ படத்தில் முக்கியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜயன். அறிவியல் கதை என்றாலும் அதை சீரியசாக இல்லாமல் நகைச்சுவை கலந்து ஒரு பாட்டி பேத்தியின் கதையாக அனைவரும் பார்க்கும் விதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விஜயன்” என்கிறார் சச்சு.

"இத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது"; நடிகை சச்சு பெருமிதம்..!
Pin It


.
என் பெயரைக் காணோம்...
 நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகை சச்சு பரபரப்பு புகார்
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க தனது பெயர் இல்லை என மூத்த நடிகை சச்சு புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்னையில் இன்று நடந்து வருகிறது. இதில், நடிகர், நடிகைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், பழம்பெரும் நடிகைகளுள் ஒருவரான நடிகை சச்சு தனது பெயர் வாக்களிப்போர் பட்டியலில் இல்லை என பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பதற்காக வந்து தனது பெயரைக் காணாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சச்சு, செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், "எனது அக்கா மாடி லட்சுமி நடிகர் சங்கத்தின் ஆரம்ப கால உறுப்பினர். எம்.ஜி.ஆருடன் நடித்தவர் அவர். நானும் பல காலமாக ஆயுள் கால உறுப்பினராக இருக்கிறேன்.

கடந்த 2007ம் ஆண்டு ரூ. 5000 கட்டி எனது உறுப்பினர் அட்டையை 10 வருடத்திற்கு புதுப்பித்தேன். 2017 வரை உறுப்பினர் அட்டை உண்டு. ஆனால் நான் கட்டிய 5000 ரூபாயை வரவு வைக்கவே இல்லை. அப்போது சரத்குமார்தான் தலைவராக இருந்தார்.எனது உறுப்பினர் அட்டையை புதுப்பிகாமல் விட்டுள்ளனர். இதை நான் சும்மா விட மாட்டேன். கோர்ட்டுக்குப் போவேன். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓய மாட்டேன்" என்றார்.நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினரின் தேர்தல் அறிக்கையை நடிகர் சிவகுமார் தேர்தல் அறிக்கையை வெளியிட, பழம்பெரும் நடிகை சச்சு மற்றும் மதுரையை சேர்ந்த நாடக நடிகை வசந்தா ஆகியோர் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

எங்கள் வீட்டில் நான் தான் பிரட் வின்னர். என்னுடைய அப்பா ஒருகாலத்தில் வக்கீல் தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர். அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தை சுமக்கும் பொறுப்பு என் மீது விழுந்தது. என் காலத்தில் நான் மட்டுமே குழந்தை நட்சத்திரமாக இருந்ததால் மோஸ்ட் வாண்ட்டட் பேபி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தேன். குடும்பத்துல நாங்க மொத்தம் ஒன்பது பேர். இளம் வயதிலேயே நான் நடிக்க வந்துவிட்டதால் படிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் கல்லூரியில் சேர்ந்து படித்தாலும் கிடைக்காத கல்வி எனக்கு கிடைத்தது. வீட்டிலேயே ஹோம் டியூஷன் மூலம் அடிப்படைக் கல்வி கற்றுக் கொண்டேன்.

தென்மாநிலங்களை ஆட்சி செய்த ஐந்து முதல்வர்களின் படங்களில் நடித்துள்ளேன். சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். இப்போதும்கூட ‘ஜாக்பாட்’, ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’ போன்ற படங்களில் நடித்துள்ளேன். இறைவன் அருளால் நானும் நல்லா இருக்கேன். என் உடன் பிறந்தவர்களும் நல்லா இருக்கிறார்கள். என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். இளமையில் எப்படி சுறுசுறுப்பாக இருந்தேனோ அதே சுறுசுறுப்புடன் இப்போதும் இருக்கிறேன். I am happy என்று உற்சாகத்துடன் பேசுகிறார் பழம்பெரும் நடிகை சச்சு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நாயகியாக வளர்ந்து காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்ற சச்சு தன்னுடைய சினிமா அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
சரஸ்வதி ஏன் சச்சு ஆனார்?

வீட்லே செல்லமா சச்சுன்னு கூப்பிடுவாங்க. அதுவே நிலைச்சிடிச்சி. தேவதாஸ், ஒளவையார் என்று சில படங்களில் சரஸ்வதி என்ற பெயரிலும் நடித்துள்ளேன். இந்தியாவில் சச்சு என்ற பெயரில் வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

சினிமாவுக்கு வந்த பின்னணி?

வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகில் புதுப்பாடி கிராமம். பிறந்து வளர்ந்தது சென்னை மண்ணடி. அப்பாவுக்கு வக்கீல் தொழில். ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த நான் நடிக்க வந்தது ஆச்சர்யமே. என்னுடைய பெரிய அக்கா மாடிலட்சுமி. சிறந்த மேடைப் பேச்சாளர். அறிஞர் அண்ணாவின் கூட்டத்திலும் பேசியிருக்கிறார். அவர்தான் முதன் முதலாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது என்னுடைய பாட்டி வீடு மயிலாப்பூரில் இருந்தது. நானும் அக்காவும் பாட்டி வீட்டில் வளர்ந்தோம். நாங்கள் பெரிய குடும்பம். 5 பெண்கள், 4 ஆண்கள். எங்கள் வீட்டின் ஒரு பகுதியில் பிரபல நடன ஆசிரியர் கே.என்.தண்டபாணி குடியிருந்தார். அவரிடம் நானும் அக்காவும் நடனம் பயின்றோம்.

அவர், வைஜெயந்திமாலா உட்பட ஏராளமான பிரபலங்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்தவர். ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ பாடலுக்கு அவர்தான் டான்ஸ் கம்போஸர். தண்டபாணி மாஸ்டரைப் பார்க்க கே.ஆர்.ராமசாமி, டி.ஆர்.ராஜகுமாரரி, வைஜெயந்தி மாலா போன்ற சினிமாக்காரர்கள் நிறையப் பேர் வருவார்கள். அங்கு தயாரிப்பாளர் சாமியும் வருவார். அப்போது என்னைப் பார்த்துவிட்டு பானுமதி நடித்த ‘ராணி’யில் நடிக்க அழைத்தார்.
 ‘தியாக பூமி’ பேபி சரோஜா, அப்போ குழந்தை நட்சத்திரமாக கொடிகட்டிப் பறந்தவர்.

பேபி சரோஜாவைப் போல நானும் சினிமாவில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று பாட்டி ஆசைப்பட்டார். இயல்பிலேயே எனக்கு கற்பூர புத்தி. பாட்டி சொல்லைத் தட்டாமல் நடிக்க வந்துவிட்டேன். அண்ணாவின் படைப்பில் கே.ஆர்.ராமசாமி, பி.எஸ்.வீரப்பா, பத்மினி நடித்த ‘சொர்க்க வாசல்’ படம் எனக்கு பெரிய புகழைக் கொடுத்தது. தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்ததால் படிப்பு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. வீட்டிலேயே பாடம் சொல்லித்தர ஏற்பாடு செய்தார்கள். இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகள் எனக்கு சரளமாக எழுதவும், பேசவும் தெரியும்.

ஐநூறு படங்களில் நடித்திருக்கிறீர்களே?

எனக்கே ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஓயாமல் நடித்திருக்கிறேன். அக்காலத்தில் ஆறு ஷிஃப்ட் நடிக்கக்கூடியவர் நாகேஷ். அவருக்கு இணையாக நானும் ஆறு ஷிஃப்ட் நடித்துள்ளேன்.‘வீரத் திருமகன்’, ‘காதலிக்க நேரமில்லை’ உட்பட ஏராளமான படங்கள் திருப்புமுனை கொடுத்துள்ளது. அப்போது நாயகியாக வருவதற்கான அனைத்து தகுதிகளும் என்னிடம் இருந்தன. ஆனால் அப்போது எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என்று எல்லாருமே சீனியர் ஹீரோக்களாக இருந்தார்கள்.  எனக்கு அப்போது வயது பதினைந்துதான். அவர்களது தோற்றத்துக்கு சிறுபெண்ணான நான் பொருந்தியிருக்க மாட்டேன். ஜெய்சங்கர் லேட்டாகத்தான் சினிமாவுக்கு வந்தார். கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தால் எனக்கு ஹீரோயின் வாய்ப்பே தொடர்ந்து கிடைத்திருக்கும்.

‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் காமெடி வேடம் கமிட் பண்ண காரணம் குடும்பச் சூழ்நிலை. அப்போது அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது,  நான்தான் எங்கள் வீட்டுக்கு பிரட் வின்னர். சினிமாவைப் பொறுத்தவரை காமெடி ரோலில் நடித்தவர்கள் நாயகன், நாயகியாக வந்துள்ளார்கள். நான் மட்டுமே நாயகியாக இருந்து காமெடிக்கு மாறினேன். அந்தக் காலத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் இருந்தது. நாகேஷ்-சச்சு ஜோடி க்ளிக் ஆனதால் தொடர்ந்து பட வாய்ப்பு வர ஆரம்பித்தது. இருந்தும் ‘அன்னை இல்லம்’, ‘எங்களுக்கும் காலம் வரும்’ போன்ற படங்களில் கதைநாயகியாக நடிச்சிருக்கேன்.

அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், என்.டி.ராமாராவ், ஜெயலலிதா ஆகிய ஐந்து முதல்வர்களுடன் வேலை பார்த்த அனுபவம்?

அண்ணாவுடன் குழந்தைப் பருவத்திலேயே பழகியிருக்கிறேன். என் அப்பா வழி பாட்டிக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம். அண்ணாவும் என்னுடைய அப்பாவும் பச்சையப்பா பள்ளியில் வகுப்புத் தோழர்கள். ‘சொர்க்கவாசல்’ பார்த்துவிட்டு ‘என் மாவட்டத்துப் பொண்ணு’ என்று  பாராட்டினார். அண்ணாவின் தமிழுக்கு நான் அடிமை. அவருடைய கூட்டம் எங்கு நடந்தாலும் போவேன். அண்ணாவின் ஆசியுடன் ‘வாய்மையே வெல்லும்’ என்ற நாட்டிய நாடகம் பண்ணியது மறக்க முடியாது. தி.மு.க எப்படி உருவானது என்ற அந்த நாடகம் மக்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயரைக் கொடுத்தது.சென்ட்ரல் ஸ்டூடியோவில் நானும் எம்.ஜி.ஆரும் இணைந்து வேலை செய்ததால் எம்.ஜி.ஆருடன்  நன்றாகப் பழக முடிந்தது. ‘கலையரசி’ படத்தில் அண்ணன் தங்கையாக நடித்துள்ளோம்.

‘மாட்டுக்கார வேலன்’ உட்பட ஏராளமான படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்தேன். என்னுடைய வளர்ச்சியில் எப்போதும் அக்கறை காண்பிக்கக்கூடியவர். நாயகி வாய்ப்பு கேட்டபோது குழந்தை முகம் என்பதால் கொஞ்ச காலம் வெயிட் பண்ணச் சொன்னார். குடும்ப சூழ்நிலை காரணமாக நான் தான் கிடைத்த வாய்ப்பில் நடிக்க ஆரம்பித்தேன். நான் காமெடி வேடங்களில் நடிக்க ஆரம்பித்ததும் ‘அவசரப்பட்டுட்ட’ என்றார்.

கலைஞர் எழுதிய ‘அவன் பித்தனா’ படத்தில் நடித்துள்ளேன். எஸ்.எஸ்.ஆர்.விஜயகுமாரி நடித்த படம் அது. இயக்கம் பா.நீலகண்டன். ஒரு காட்சியில் எனக்கு வசனம் அதிகம். அன்று கலைஞர் செட்டில் அமர்ந்து நான் எப்படி பேசுகிறேன் என்று கவனிக்க காத்திருந்தார். கலைஞர் இருந்ததால் என்னால் சரியாக பேச முடியவில்லை. ஆனால் கலைஞர், எஸ்.எஸ்.ஆர். உற்சாகம் கொடுத்து பேச வைத்தார்கள்.   அதன் பிறகு கலைஞரின் ‘பிள்ளையோ பிள்ளை’ உட்பட ஏராளமான படங்கள் பண்ணியிருக்கிறேன்.

என்.டி.ஆருடன் ‘மாயா பஜார்’, ‘மருமகள்’ உட்பட நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன். எங்கு பார்த்தாலும் என்னை அடையாளம் கண்டு பேசுவார். ஒரு முறை லண்டனில் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அப்போதும் ‘சச்சு காரு இக்கட ரண்டி’ என்று அழைத்தார். ‘மாயா பஜார்’ படத்துல என் கேரக்டர் பெயர் வச்சலா என்பதால் என்னை ‘வச்சலா’ என்றே அழைப்பார்.

ஜெயலலிதாவுடன் ஃப்ரெண்ட்லியா பழகியிருக்கிறேன். அவருக்கு என் மீது நம்பிக்கை இருந்த காரணத்தினால் பர்சனலா நிறைய பேசுவோம். அவருடைய அம்மா சந்தியாவுடன் ‘மாயா பஜார்’, ‘மரகதம்’ போன்ற படங்களில் நடித்துள்ளேன். நானும் ஜெயாவும் ‘பொம்மலாட்டம்’, ‘சுமதி என் சுந்தரி’, ‘மோட்டார் சுந்தரம்பிள்ளை’ உட்பட 20 படங்களில் சேர்ந்து வேலை பார்த்துள்ளோம். பலமுறை என்னுடைய  டிரஸ்ஸிங் சென்ஸை பாராட்டியிருக்கிறார்.

ஜெயாவிடம் பிடித்த குணம் அவர் ஐடியலா இருப்பார். அதிகம் பேசமாட்டார். எண்ணங்களில் தெளிவு உள்ளவர். புத்தக வாசிப்போ மற்ற வேலையோ எதுவாக இருந்தாலும் அதிலேயே கவனம் இருக்கும். டயலாக்கை ஒரு முறைதான் கேட்பார். ஒன்ஸ் மோர் கேட்கும் பழக்கம் இல்லாதவர். உடன் பழகுபவர்களின் திறமைகளைத் தெரிந்து வைத்திருப்பார். சமயம் வரும் போது அவர்களுக்குத் தேவையான நன்மைகளைச் செய்வார். எனக்கு இயல் இசை நாடக மன்ற செயலர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். மொத்தத்தில் என்னுடைய வெல் விஷர் என்று சொல்லலாம்.

மனோரமாவுக்கும், உங்களுக்குமான போட்டி?

போட்டி எப்போதும் இருக்கும். இருக்க வேண்டும், இல்லை என்றால் ‘தி பெஸ்ட்’ கொடுக்க முடியாது. எனக்கும் மனோரமாவுக்கும் போட்டி இருந்தது. பொறாமை இருந்ததில்லை. இருவரும் ஒட்டலுக்கு ஒன்றாக சாப்பிடச் செல்வோம். எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது.

இப்போ உங்கள் நட்பு வட்டாரத்தில் யாரெல்லாம் இருக்காங்க?

சாரதா, வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, ராஜஸ்ரீ, வாணிஸ்ரீ, காஞ்சனா, லதா, ‘செம்மீன்’ஷீலா, அம்பிகான்னு பெரிய டீம் இருக்கு. ஒவ்வொரு மாதமும் யார் வீட்டிலாவது சந்திப்போம். இதில் சோகமான விஷயம் சமீபத்தில் மறைந்த தேவி. அவர் நடித்த ‘மாம்’ படத்தை ஸ்கிரீன் பண்ணினார். துபாய் பயணத்துக்குப் பிறகு விரைவில் கெட்டுகெதரில் சந்திப்பதாக சொல்லியிருந்தார். அவர் சொல்லிய அடுத்த நாலைந்து நாட்களில் அவருடைய மரணச் செய்தி எங்களை உலுக்கிவிட்டது.

இப்போதும் உங்களுக்கு சினிமா வாய்ப்பு வருகிறதா?

நடிக்கிறேனே! ‘ஜாக்பாட்’, ‘பேரழகி’ படங்களில் நல்ல வேடங்கள் கிடைத்துள்ளன. அழுத்தமான ரோல்கள் வருவ தில்லை. அதற்காக வருந்தவில்லை. ‘ஜாக்பாட்’ படத்தில் என்னுடைய கேரக்டரிலிருந்து தான் கதை ஆரம்பிக்கும்.

இப்போ சினிமா எப்படியிருக்கு?

எங்க காலத்தில் நேர நிர்வாகத்தில் சரியாக இருப்போம். ஏ.பி.நாகராஜன் போன்ற இயக்குநர்கள் அனைத்து நடிகர்கள் முன்னிலையில் அடுத்த நாள் படப்பிடிப்புக்கான சம்மதம் கேட்பார். இப்போ வர்ற படங்களில் ஷாட் பியூட்டி நல்லா இருக்கு. அப்போ எக்ஸ்பிரஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும்.  இப்போ விஷுவலுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அட்மாஸ்பியருக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இப்போ ஒர்க்கிங் ஸ்டைல் மாறியுள்ளது. மானிட்டர் வசதி இருப்பதால் மானிட்டரைப் பார்த்து சரி செய்துகொள்கிறார்கள். அப்போ எல்லாமே ‘ஐ’ ஜட்ஜ்மெண்ட். ரசிகர்கள் பார்வையில் இயக்குநர்கள் படம் எடுத்தார்கள். டெக்னிக்கலாப் பார்த்தா, அந்தக் காலத்திலிருந்தே பிற மொழி படங்களுக்கு தமிழர்கள் டஃப் கொடுத்து வருகிறோம்.

இப்போ கதை, வசனத்துக்கு ஸ்கோப் இல்லை. ஒரு வார்த்தையில் வசனம் முடிந்துவிடுகிறது. காமெடிக்கு ஜோடி இல்லை. கோவை சரளாவுடன் முடிந்துவிட்டது. நாகேஷின் ‘ஓஹோ புரொடக்‌ஷன்’, தங்கவேலுவின் ‘கல்யாணப் பரிசு’ காமெடி காட்சிகள் இன்றும் பேசப்படுகிறது. அதுமாதிரி முயற்சிக்கலாம். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் வரத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான வளர்ச்சி. பொழுதுபோக்கிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் சமூகத்துக்கான கருத்துக்களையும் முன் வைக்கணும்.

உங்க லைஃப் இப்போ எப்படி போகுது?

எனக்கு என்று இப்போது தேவைகள் எதுவும் இல்லை. குடும்பத்தில் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.  உடம்புலே இன்னும் எனக்கு தெம்பு இருக்கு. எப்போதும் நான் வரவுக்கு மீறி செலவு செய்யமாட்டேன். மூன்று மாதம் வேலை கிடைத்தால், அடுத்த மூன்று மாதம் வேலை இல்லை என்று நினைத்துதான் செலவு செய்வேன். என்னுடைய அம்மா கற்றுக் கொடுத்த அந்த பாலிஸியை கடைப்பிடிப்பதால் திண்டாட்டம் இல்லாமல் வாழமுடிகிறது.

நான் "ஜனக் ஜனக் பாயல் பாஜே'' பற்றி ஏன் இவ்வளவு தூரம் சொல்கிறேன் என்றால், அந்தப் படத்தில் கதாநாயகியாக மற்றும் கதாநாயகனாக நடித்த இருவருமே "கதக்' நடனம் தெரிந்தவர்கள். கதாநாயகியாக நடித்தவர் சந்தியா. இவர் இயக்குநர் வி.சாந்தாராமின் மூன்றாவது மனைவி. முதலில் இவருக்கு நடனமே தெரியாது. "விஜயா' என்ற பெயருடன் திரை உலகில் நுழைந்தவர், இவருக்கு இயக்குநர் சாந்தாராம் மறு பெயர் சூட்டினார். அதுதான் சந்தியா. தனக்குத் தெரியாத ஒன்றை கற்று, அதில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற ஒரு வெறியோடு அல்லது வைராக்கியத்தோடு 24 மணி நேரத்தில் சுமார் 18 மணி நேரம் உழைத்து கதக் என்ற நடனக் கலையைக் கற்றார். கதாநாயகன் கோபி கிருஷ்ணா ஒரு தேர்ந்த நடனக் கலைஞர். அது நடிகை சந்தியாவிற்கு எளிதாகப் போய் விட்டது.
 பயிற்சி என்று இவர் உழைப்பதைப் பார்த்த இயக்குநர் சாந்தாராம், இவர் மேல் மிகவும் அன்பு கொண்டு பார்த்து கொண்டதாகவும், அது கடைசியில் காதலாக மாறி கல்யாணம் வரை சென்றதாகவும் சொல்வார்கள். கோபி கிருஷ்ணா குடும்பமே "கதக்' நடனத்தில் ஊறிப் போன குடும்பம். இவரது தந்தை வழியைச் சேர்ந்தவர் தான் பண்டிட் சுக் தேவ் மஹராஜ்.
 இவருக்கு பரத நாட்டியமும் தெரியும். அதை மகாலிங்கம் பிள்ளை மற்றும் கோவிந்த ராஜ் பிள்ளை இருவரிடமும் கற்றுத் தேர்ந்தார். இவரது 15 -ஆவது வயதிலேயே நடனத்தின் அரசனான பரமசிவன் பெயரில் "நடராஜ்' என்ற பட்டத்தையும் பெற்றார். தனது பதினேழாவது வயதில் இவர் படத்திற்கு நடனம் அமைக்கும் அளவிற்கு உயர்ந்தார். இன்னும் சொல்லப் போனால் படங்களுக்கு நடனம் அமைக்கும் பல சிறியவர்களுக்கு இவர்தான் முன்னோடி. இவர் நடித்த முதல் படம் வி.சாந்தாராம் டைரக்ட் செய்த "ஜனக் ஜனக் பாயல் பாஜே'. இவர் பல படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அதில் தமிழ் படங்களும் அடங்கும். 1975-ஆம் ஆண்டு இவருக்கு மத்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. இது மட்டுமல்ல ; இவர் 9 மணி நேரம் 20 நிமிடங்கள் தொடர்ந்து கதக் நடனமாடி சாதனைப் புரிந்தவர்.
 இவ்வளவு பெருமைக்கும் சொந்தக்காரரான கோபி கிருஷ்ணா எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார் என்று சொன்னால் எவ்வளவு பெருமையான விஷயம். அது மட்டுமல்ல; அவர் எனது நடனத்தைப் பார்த்து விட்டு என்னைப் பாராட்டினார் என்றால் அது மிகப் பெரிய விஷயம் இல்லையா? நான் முன்பே சொன்னது போல் அந்தக் காலத்தில் எங்கள் எல்லோருக்கும் ஒரே பொழுது போக்குத் திரைப்
 படம் பார்ப்பது தான். அதிலும் நடனம் சம்பந்தபட்ட படம் என்றால் கேட்கவே வேண்டாம். முதல் டிக்கெட் எங்கள் குடும்பம் தான் வாங்கும். அந்த அளவிற்கு நடனத்தின் மீது எங்களுக்குத் தீராத ஆசை, பாசம், காதல், இப்படி எது வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்.
 அந்த சமயத்தில் தான் இந்த "ஜனக் ஜனக் பாயல் பாஜே' படம் வெளியானது. சந்தியா நடனத்தைப் பார்த்ததும், நாமும் எழுந்து அவருடன் ஆட வேண்டும் போல் தோன்றும். கோபி எப்பொழுது ஆடினாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படமென்றால் பார்க்காமல் இருக்க முடியுமா? பார்த்துவிட்டு வந்து சுமார் ஒரு வார காலம் அந்தப் படத்தை பற்றியும், நடனத்தைப் பற்றியும் சிலாகித்துப் பேசிக் கொண்டே இருந்தோம்.
 அதே சமயத்தில் நமது பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றம் திறக்கப்பட்டது. அதில் கோபி கிருஷ்ணா நடன நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்ற செய்தியையும் நான் கேள்விப்பட்டென். திரையில் பார்த்த மாபெரும் நடனக் கலைஞரை நாம் நேரில் பார்க்கப் போகிறோம் என்ற செய்தியே எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அந்த நடன நிகழ்ச்சி நாளுக்காக ஆவலோடு காத்திருந்தேன். அந்த நாளும் வந்தது. அந்த நடன நிகழ்ச்சியை நான் மட்டும் பார்க்க வில்லை, என்னோடு சேர்ந்து லலிதா, பத்மினி, ராகினி உள்ளிட்ட பல்வேறு நடன மணிகளும் அந்த நிகழ்ச்சியைக் கண்டு களிக்க ஆவலோடு வந்திருந்தார்கள். ஆரம்பத்தில் கதக் நடனத்தின் பல்வேறு பாடல்களை நாட்டியமாக ஆடிவிட்டு கடைசியில் ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சியாக அவரே மைக்கை வாங்கிப் பேசினார்.
 அப்பொழுது அவர் மக்களைப் பார்த்து ஒரு விஷயத்தைச் சொல்வார். "தயவு செய்து நீங்கள் எல்லோரும் சிறிது நேரம் அமைதி காக்கவேண்டும். நீங்கள் அமைதி காத்தால் தான் இந்த ஒலி உங்களுக்குத் துல்லியமாகக் கேட்கும். தயவு செய்து அமைதியாக இருந்தால் நல்லது'" என்று சொல்லி விட்டு மைக்கை கால்களுக்கு அருகில் வைத்து விடுவார். தனது கால்களில் 100 சலங்கைகளுடன் அவர் ஆடத் தயாராகி விட்டார் என்று நினைக்கும் போது, அவரது பாதத்தில் உள்ள மைக் ஒரேயொரு சலங்கையின் சப்தத்தை மட்டுமே ஒலிக்கும். அது ஒலிபெருக்கியின் வாயிலாக நமக்கு ஒரு சலங்கையின் ஒலி மிகவும் சிறப்பாகக் கேட்கும். ஒரே ஒரு சலங்கையின் ஒலி மட்டும் எப்படி நமக்குக் கேட்கிறது என்று உட்கார்ந்து ரசிக்கும் மக்களுக்கும் கூடத் தெரியாது. அடுத்த காலை அவர் எடுத்து வைக்கும் போது பத்து சலங்கைகளின் ஒலி நமக்கு இசையாகக் கேட்கும். மேலும் ஒரு நடன அசைவை அவர் செய்யும் போது, 20 சலங்கைகளின் ஒலி நாதமாக நமது காதுகளில் வந்து விழும். இப்படி ஒவ்வொரு முறையும் சலங்கைகளின் ஒலியை கூட்டிக்கொண்டே போய் கடைசியில் எல்லா சலங்கைகளின் நாதமும் திவ்யமாக நம் எல்லோருக்கும் கேட்கும் வண்ணம் அவர் ஆடி முடித்தார்.

எனக்கு ஒன்று தெரியவில்லை. எப்படி அவரால் ஒரே ஒரு சலங்கையின் ஒலியை மட்டும் எழுப்ப முடிகிறது என்று அப்போது நான் குழந்தையாக இருந்ததனால், எனக்கு இதற்கான விடை தெரியவில்லை. என் அக்காவிடம் கேட்டுப் பார்த்தேன். "அதுதான் கோபி கிருஷ்ணாவின் பெருமை. அவர் செய்தது அசுர சாதகம். அதன் விளைவே இந்த ஒற்றை சலங்கை ஒலி. சாதகம் என்று கூறினால் அதற்குத் தமிழில் ஒரு பெயர் உண்டு. அது தான் பயிற்சி. இடை விடாத பயிற்சியினால் இது மட்டும் அல்ல இதற்கு மேலும் செய்யலாம். அதன் விளைவு தான் நம்மை எல்லாம் இவரால் இப்படி அதிசயிக்க வைக்கும் அளவில் பல விஷயங்களைச் செய்ய முடிகிறது. "முயற்சி திருவினையாக்கும்' என்ற பொன் மொழியைத் தான் ஏ.வி.எம். என்கிற ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தனது தாரக மந்திரமாக வைத்துள்ளார். முயற்சி என்பது ஒருவிதமான பயிற்சிதான். வெற்றி பெரும் வரை இடைவிடாத முயற்சி செய்தால், அதுவே நல்ல பயிற்சியாகி விடும். பின்னர் அந்தப் பயிற்சியே வெற்றியை நமக்குக் கொண்டு வந்து தந்து விடும்.
 கோபி கிருஷ்ணா இந்த மாதிரி செய்து காண்பித்து விட்டால் நிகழ்ச்சி முடிவடைந்து விடும். அவர் சாதாரணமாகவே ஆணழகர். நடனத்தின் போது புருவத்தை வலது பக்கமும், இடது பக்கமும் நெளித்தும், அசைத்தும் காண்பிப்பார். அவரது ஒவ்வொரு அசைவும் நளினமாக இருக்கும். நிகழ்ச்சி முடிந்ததும் அவரைப் பார்த்துப் பாராட்டிவிட்டு, நாங்கள் எல்லோரும் அவரை எங்கள் இல்லத்திற்கு அழைத்தோம். அவர் மறுப்பேதும் சொல்லாமல் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களைக் கெளரவப்படுத்தினார். அந்த வாரமே எங்களுக்கு ஒரு நடன நிகழ்ச்சியும் இருந்தது. நாங்கள் நடனமும் ஆடுவோம் என்று தெரிந்தவுடன் அவர் ரொம்பவும் சந்தோஷப்பட்டார். அதற்கும் அவரை நாங்கள் அழைத்தோம். எங்கள் நிகழ்ச்சிக்கும் வந்து என்னையும் எனது நடனத்தையும் பாராட்டினர். அவரது பாராட்டு என்னை மெய்மறக்க செய்துவிட்டது என்று சொன்னால் அது மிகை இல்லை. காரணம், கோபி கிருஷ்ணா என்ற மிகப் பெரிய நடன வல்லுநரின் பாராட்டுச் சாதாரணமாகக் கிடைக்குமா என்ன?
 12-13 வயதில் ஒரு நடன நிகழ்ச்சியும் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் நடந்தது என்ன? அடுத்த வாரம் சொல்கிறேன்.
.எப்பொழுதுமே ராகினி செய்யும் குறும்புகள் என்பது அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இதில் என்னையும் துணைக்கு அழைத்துக் கொண்டு விடுவார். சிறுமியாக இருப்பதால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நானும் அவருடன் சேர்ந்து கொள்வேன். நாங்கள் கடற்கரையில் உட்கார்ந்து இருக்கும் போது தனது குரலை மாற்றிக் கொண்டு போவோர் வருவோரை எல்லாம் "டேய்'' என்று கூப்பிடுவார். அந்த நபர் திருப்பிப் பார்க்கும் போது இவர் தலையைக் குனிந்து கொள்வார். யார் தன்னை அழைத்தது என்று தெரியாமல் சுற்றும் முற்றும் பார்ப்பார். அவர் பார்க்கும் போது என்னையும் தலையைக் குனிந்து கொள்ளச் சொல்வார். ஒரு கட்டத்தில் கூப்பிட்டது யார் என்று தெரியாத நிலையில் அந்த நபர் திரும்பவும் நடக்கத் தொடங்குவார். 
"காவேரி'" படத்தின் போதுதான் என்று நினைக்கிறேன். எங்கள் எல்லோருக்கும் ஒரு வேன் வரும். அது மூடாத வேன். கதவு திறக்கும் இடது பக்கத்தில், நானும் மற்றொரு பக்கத்தில் ராகினியும் உட்காருவோம். என்னை ஏன் இப்படி உட்காரவைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. நான் சிறுமி என்பதால் அவர்கள் சொல்வதை எல்லாம் செய்வேன். என்னைப் பொருத்தவரை அது ஒரு விதமான விளையாட்டு என்று நான் நினைத்து கொள்வேன். 
நாங்கள் எல்லாரும் கிருஷ்ணா பிக்சர்ஸ் ஆபிஸ் இருந்த தி.நகர், தணிகாசலம் தெருவில் இருந்து எங்குப் படப்பிடிப்போ அங்குச் செல்வோம். எங்களுடன் பத்மினியும் வருவார். இன்று ராஜேஸ்வரி திருமண மண்டபத்துக்கு எதிரே தான் அன்று "டிராம் ஷெட்' இருந்தது என்று நினைக்கிறேன். இன்று அது மின்சார அலுவலகம் உள்ள கட்டடமாக ஆகிவிட்டது. அந்த நாலு மூலை சந்திக்கும் இடத்தில் ஒரு போலீஸ்காரர் நின்று போக்குவரத்தை சரி செய்து கொண்டிருப்பார்.
அப்போது போலீஸ்காரர் தொப்பிக் குழியாக இருக்கும். வீட்டில் முன்பே எங்கள் எல்லோருக்கும் கமலா ஆரஞ்சு பழங்களைக் கொடுத்து சாப்பிடச் சொல்வார். நாங்களும் சந்தோஷமாகச் சாப்பிட்டு விட்டு அதன் தோலை வெளியே எரியும் போது தானே வந்து பத்திரம் என்று வாங்கிக் கொள்வார். இந்த வேனில் ஏறும் போது ஒரு பையில் இந்தத் தோலை எல்லாம் கொடுத்து பத்திரம் என்று சொல்வார். நானும் இந்தத் தோலை எல்லாம் கொடுத்து ஏன் வைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள் என்று தெரியாமல், அதே சமயம் பத்திரமாக வைத்துக் கொள்வேன். ஒரு வேளை இதை எல்லாம் பொடி செய்து ஏதாவது மருந்து தயாரிப்பார் போலும் என்று நினைத்தேன். நாங்கள் எல்லாம் அந்த வேனில் போகும் போது "எங்கள் வேன் ஒட்டியிடம் அந்த சிக்னலில் போலீஸ்காரரை நெருங்கி போ' என்று கூறுவார்.
இதற்கு மேல் எப்படி நெருங்கிப் போவது என்று úஜ்ல், கொஞ்சம் நெருங்கிப் போயேன் என்று சொல்வார்கள். போலீஸ்காரரை நெருங்கும் போது கையில் உள்ள ஆரஞ்சு பழதோலை அவரது தொப்பியில் உள்ள குழியில் வைத்து விடுவார். இந்தக் குறும்புத்தனம் தெரியாமல் நானும் ராகினி கொடுத்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக , ஏதோ பொக்கிஷம் போல் அந்த ஆரஞ்சு பழத் தோலை பத்திரமாக வைத்திருப்பேன். ஒரு முறை பண்ணும் போது கண்டு பிடிக்க வில்லை. மறுமுறை போடும் போது கையைப் பிடித்து விட்டார் அந்தப் போலீஸ்காரர். "ஐயையோ, உங்கள் மேலே விழுந்து விட்டதா, நாங்கள் பேசிக்கொண்டே வெளியே போட முயற்சிக்கும் போது இது நடந்து விட்டது" என்று சொல்லி சமாளித்தார். இது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த பத்மினி, ராகினியை திட்டினார். "இது என்ன விபரீத விளையாட்டு. பிறகுக்கு நாம் கஷ்டம் கொடுக்கவே கூடாது என்ற எண்ணம் நமக்கு என்றும் இருக்க வேண்டும். நீ கெட்டதும் இல்லாமல் குழந்தை சச்சுவையும் இந்தக் குறும்புத்தனம் செய்ய வைத்துக் கெடுக்கிறாய்'' என்று கோபித்துக் கொண்டார்.
நாட்டியத்திற்குப் புதிய ரத்தம் பாய்ச்சிய நடன பெண்மணி பத்மினி. அதனால்தான் அவருக்கு "நாட்டிய பேரொளி' என்ற பட்டத்தையே கொடுத்துப் பெருமை பட்டார்கள் . அவருடன் நானும் நடனம் ஆடியிருக்கிறேன் என்றால் நம்புவீர்களா? ஒரு முறை ஒரு போர் கப்பல் நமது சென்னை துறைமுகத்துக்கு வந்தது. பத்மினியின் சகோதரர் கடற்படையில் வேலை பார்த்து வந்தார். அந்தக் கப்பல் மூன்று நாளோ அல்லது ஒரு வாரம் வரையோ இங்கே நிறுத்தி வைக்கப்படும் என்று சொன்னார். அந்தக் கப்பலில் உள்ள படை வீரர்களுக்கு ஒரு கலை நிகழ்ச்சி செய்து கொடுக்கப் பத்மினியின் சகோதரர் விரும்பினார். அவர் பத்மினியின் வீட்டிற்கு வந்துள்ள போது நானும் அங்கிருந்தேன். பத்மினியின் எல்லா விஷயங்களையும் சரியா நிர்வகிப்பது லலிதா. "நாங்கள் மூன்று பேரும் நடனம் ஆடுகிறோம். எங்களுடன் சச்சுவும் அவரது அக்கா மாடிலட்சுமியும் ஆடட்டும். லட்சுமியும் சரி சச்சுவும் சரி சினிமாவில் நடித்துப் புகழ் பெற்றவர்கள். அது மட்டும் அல்லாமல் அவர்கள் இருவரும் சிறப்பாக நடனம் ஆடுவார்கள்'"என்றார். 
அந்தக் கப்பல் நடுக்கடலில் இருக்கிறது. நாங்கள் நடனம் ஆட வேண்டிய நாளும் வந்தது. நானும், பாட்டியும், என் அக்கா மாடி லட்சுமியும் நேராகப் பத்மினியின் வீட்டிற்குச் சென்றோம். அங்கு தான் நாங்கள் மேக்-அப் செய்து கொண்டு நடன உடைகளை அணிந்து கொண்டு கிளம்பவேண்டும். அங்குச் சென்று பார்த்தால் ராகினிக்கு பத்மினி சலங்கை கட்டி விடுகிறார்கள். பத்மினிக்கு, லலிதா பின்னல் பின்னி விடுகிறார். அந்தக் குழுவில் நாங்களும் இணைந்தோம். நான் குழந்தை என்பதால் என்னால் முடிந்த உதவியைச் செய்தேன். மூன்று பேரும் எந்த விதமான பாகுபாடும் பார்க்காமல் எல்லோருக்கும், எல்லோரும் உதவி செய்து கொண்டு தயாரானோம். முன்பே முடிவு செய்த படி நான் இதை ஆடுகிறேன். நீ அதை ஆடுங்கள் என்று என்று சொல்லி அதற்கு ஏற்றாற்போல் இசை வல்லுநர்களிடமும் முன்பே சொல்லி உள்ளதால், எல்லோரும் தயாராகி கிளம்பினோம். 
எனக்கு ரொம்பக் குஷி. கப்பலை பார்க்க போகிறோம் என்று சந்தோஷத்துடன் இருந்தேன். சென்னை துறைமுகத்தை அடைந்தோம். போர் கப்பல் நடுக்கடலில் இருப்பதால், இங்கிருந்து ஒரு சிறிய மோட்டார் படகில் ஏறிக்கொண்டு போர் கப்பல் இருக்கும் இடத்திற்குச் சென்றோம். போர் கப்பல் மிகவும் உயரமாக இருந்தது. கீழே இருந்து கப்பலுக்குள்ளே போக ஒரு மிகப் பெரிய படிக்கட்டு இருந்தது. 
நாலு படிக் கட்டுகள் ஏறின பிறகு கீழே பார்த்தால் எனக்குப் பயமாகி விட்டது. கிடுகிடுவெனத் திரும்பவும் நான் கீழே இறங்கினேன். "நான் மேலே வரல, எனக்குப் பயமாக இருக்கு''", என்று அழுது கொண்டே சொன்னேன். அப்பொழுதும் பத்மினி தான் என்னிடம் வந்து என்னை அப்படியே அணைத்துக் கொண்டு ஒவ்வொரு படியாக என்னையே ஏறவைத்து அழைத்துச் சென்றார்கள். மொட்டை மாடி போல் உள்ள திறந்த வெளியில் நாங்கள் நடனம் ஆடினோம். ஒரு பக்கம் காற்று எங்களையே தூக்கிக் கொண்டு போவது போல் இருந்தது. வித்தியாசமான அனுபவம். 
இங்கே ஒன்றை நான் சொல்லியே ஆகவேண்டும். எந்த ஒரு நடனமணியும் தனக்காக உள்ள மேடையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். லலிதா, பத்மினி, ராகினிக்கு அந்த உயர்ந்த மனசு இருந்தது. எல்லோரும் முன்னேற வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பண்பு அவர்களிடம் இருந்தது.
"தங்கப்பதுமை' படம்" வெளியானது. அன்றைய பாரகன் திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தேன். படத்தில் சிவாஜிக்கு கணேசனுக்கு கண் போனவுடன் பத்மினி அழுது கொண்டே ஒரு பாட்டு பாடுவார். பத்மினி அழுகிறார் என்றவுடன் என்னை அறியாமல் திரை அரங்கே கேட்கும்படி வீறிட்டு அழுதேன். படம் பார்த்து விட்டு வெளியே வந்தவுடன், நான் பத்மினியை பார்க்க ஆசை பட்டேன். நேராக அவருடைய வீட்டிற்குக் காரை விடச் சொன்னேன். வீட்டிற்குள் சென்றவுடன் எங்கே அக்கா என்று கேட்டேன். மேலே இருக்கிறார் என்று சொன்னார்கள். அவர்களைப் பார்க்க மேலே போனவுடன், இரண்டு கால் முட்டியிலும் கட்டு போட்டுக் கொண்டு உட்கார்ந்து இருந்தார். நேற்று அவர் அழுததால், நான் அழுதேன். இன்று கால் முட்டியில் கட்டுடன் இருப்பதைப் பார்த்தவுடன் என்னால் தாங்க முடியவில்லை. அவர் எதிரிலேயே விக்கி விக்கி கண்ணீர் விட்டேன். "
"ஒண்ணும் இல்லை. எல்லாம் சரியாகி விடும். நேற்று ஒரு இந்திப் படத்தில் ஒரு நடனக் காட்சி. அதற்கு மாஸ்டர் ஹீராலால் . அவர் எப்பொழுதுமே கொஞ்சம் கஷ்டமான நடன அசைவுகளைத் தருவார். ஆனால் அதைச் செய்தால் நமக்குக் கண்டிப்பாகப் பேர் கிடைக்கும். இரண்டு நாட்களாகக் காட்டின் நடுவே படப்பிடிப்பு. ஒரு பாறையின் மேல் நான் முட்டி போட்டு நடனம் ஆடவேண்டும். குட்டை பாவாடையில் நான் ஆடும் போது கண்டிப்பாக முட்டியில் படும். அதெல்லாம் பார்த்தால் முடியுமா? அந்த நடன அசைவு மிகவும் சிறப்பாக வந்துள்ளது"'' என்று கூறினார். 
நான் நேற்று படம் பார்த்து அழுததைக் கேள்விப் பட்டு, "அது சினிமா தானே. அதற்கெல்லாம் அழலாமா''என்று இழுத்து அணைத்துக் கொண்டார். "நீ நல்லபடியாக வருவே. பாட்டியிடம் எந்தக் காலத்திலும் நீ திட்டு வாங்கக் கூடாது. உனக்கு நல்ல எதிர்காலம் கண்டிப்பாக இருக்கு' என்றார்". என்னைப் பொருத்தவரை பப்பிமாவை போல் இன்னொருவர் பிறக்க முடியுமா என்று தெரியவில்லை. எனக்கு என்று இல்லை, அவர் எங்குச் சென்றாலும் அவருக்குத் தெரிந்த பலருக்கும் ஏதாவது பரிசுப் பொருள் வாங்கிக் கொண்டு வருவார். எனக்கு என்ன பிடிக்கும், என்ன வாங்கிக் கொண்டு வந்தார் என்று அடுத்த வாரம் சொல்லாமல் இருப்பேனா என்ன? கண்டிப்பாகச் சொல்கிறேன்.
(தொடரும்) 
சந்திப்பு: சலன்






.














No comments:

Post a Comment