.யாழ்ப்பாண வைபவ கெளமு தி. 59
ாக்கோன் என்பவனைப் பிடித்து விதிகளில் இ ழத்திச்சென்று கொன்றுவிட்டனர். இதற்கிடையில் மன்னர் கொம்மாண்டோ ரும் சங்கிலிக்கு உதவியாய்ச் சிலரை அனுப்பியிருந்தான். ஆ யினும் கலகம் நாடோறும் மும்முரமாகச் சங்கிலி நல்லூரை விட்டோடிப் பண்ணைத்துறையருகிற் குருமார் கட்டியிருந்த கோவிலில் அடைக்கலம் புகலானன். பின் தஞ்சாவூரினின்றும் ஒர் சேனையை அழைத்துக்கொண்டு முதலிமாருக்கெதிராய்ப் பொருது வென்று கலகத்தை ஒருவாறு அமர்த்தினன்.
பிலிப்தெ ஒலிவேறு.-அப்பால் சங்கிலியின் நடபடி பறங் கியருக்கு உவப்பாகாது போயிற்று. நிகபித்தியன் எனும் ஒர் சிங்கள இராசதுரோகிக்கு அவன் அடைக்கலம் கொடுத்தானெ னவும், செனறற் எனும் கண்டியரசனைப் பறங்கியருக்கு மாறய் எழத் தூண்டி விட்டானெனவும், ஈற்றில் ஒல்லாங்கரைத் த னது இராச்சியத்துக்கு அழைத்தானெனவும், பறங்கியர் கே ள்வியுற்று அவனை அரசுபத்தியத்தினின்று நீக்கக் கருதிக் கொண்டிருந்தனர். பறங்கியருக்குக் கொடுக்கும் திறையையு ம் சங்கிலி மறுத்துவிட்டான். ஆகவே பறங்கியர் பிலிப்தெ ஒ லிவேரு என்பவனை ஒர் கரைப்படைக்குத் தலைவனுக்கிச் சங் கிலிக்கெதிராய்ப் படையேற்றுமாறு கொழும்பினின்றும் 1618ம் ஆண்டு அனுப்பிவிட்டனர். ஒலிவேரு திறைகொள்ள வருவ தாகக் கதை பரம்பியிருந்தமையால் சங்கிலி சமுசயப்பட வில்லை. சங்கிலியை அடக்கி, அவன் எதிர்த்தானுயின் கொ ன்றுவிட்டு அரசுரிமையைக் கைப்பற்றுமாறு ஒலிவேருடிவுக் கு இரகசியமான கட்டளையிருந்தபோதிலும் திறைகொள்ளும் நோக்கத்தையே வெளியிற் காட்டவேண்டியவனனன். அவ ன்சேனை 150 பறங்கியரும் 3000 °லஸ்கறின்” களும் கொண்ட தாயிருந்தது. இச்சேனையோடு அவன் கரைமார்க்கமாய்ச்செ ன்று பூநகரியைச்சேர்ந்து, யாழ்ப்பாணத்தினின்றும் சங்கிலி தானே அனுப்பிய தோணிகளிலேறிக் கட்ல்கடந்து "பண்ணை த்துறையிலிருந்த பறங்கியரின் குடியேற்றத்தை அடைக்
$(root.
அடுத்தநாள் பிரதான குருவானவர் மூலமாய்ச் சங்கிலிக் * செய்தியனுப்பித் கிறைப்பணத்தைக் கேட்பிக்க, இவன் போக்குச் சொல்லிக்கொண்டிருந்தமையால், பறங்கியர் போரு க்கணிவகுத்து எழுந்தனர். மன்னர் கொம்மாண்டோரும் இதற்கிடையில் ஒர் சேனையோடுவந்து ஒலிவேருவைச் சேர்ந் துகொண்டனன். சங்கிலியின் சேனையொன்று கரையாரின் த லைவனின்கீழ்ப் பறங்கியரை வண்ணுர்பண்ணையெனும் வயற்பு
Page 40
(60 - யாழ்ப்பாண 661 கெளமுதி.
றத்திலிருந்த பனங்கூடலில் எதிர்த்துச் சருவிற்று. பறங்கியர் அதைத்தாக்கி முரியவடித்தனர். தமிழர் கோட்டைக்கு வெ ளியரணுய் நிாைத்திருந்த நாகதாளி முட்களின்மேல்விழுந்தோ டிமறைந்தனர். சங்கிலி இனி ஆற்ருதெனக்கண்டு இராச்செ ன்றபின் மறைவாய்க் தோணியேறி வடகரையை நாடிப் போ கையில் எதிர்காற்ருலஸ்ளுண்டு பருத்தித்துறையை அடைந் தான். மறுநாள் மீண்டு வேமுெருதோணியில் ஒளித்தோடுகி ரு?னெனக் கேள்வியுற்ற பறங்கிகள் தம்தோணிகளைப் பாய்வி ரித்தோடிச் சுங்கிலியையும் இராணிகள் இளவரசர்கள் இள வாசிகளையும் அவர் திரவியங்களோடு குடாக்கடலிற் பிடித்து க்கொண்டு மீண்டனர், கைதிகளை ஒலிவேருவிடம் கொண்டு வந்தபோது சங்கிலியும் கூட்டாளிகளும் விசாரிக்கப்பட்டு கூ ட்டாளிகளுட்பலர் தூக்கிக்கொல்லப்பட்டனர். இராணியும் அரசகுமாரத்திகளும் குருமாருடைய அடைக்கலத்தில் விடப் பட்டனர். சங்கிலி நல்லூரில் மறியல் வைக்கப்பட்டான். இ வற்றின்பின் யாழ்ப்பாணநாடு சமாதானமாய் வாழத்தொடங்கி ற்று. அப்பால் ஒலிவேருவே பால அரசனுக்காக யாழ்ப்பாண அரசைக் கையேற்று நடத்தினன். சங்கிலியும் மனைவியும் சி றிதுகாலம் தாழ்த்துக் கொழும்புவழியாகக் கோவைக்கனுப் LlLL L-L-60 T.
சங்கிலிகுமாரனின் கதி- அங்கு பேணும் தெ அல்புகேக் என்னும் பிரதிராசாவின்கீழ் அவனுடைய நடபடிகள் விசாா ணை செய்யப் பட் டு க் கொலைத்தண்டத்துக் குள்ளானன். கொலையுண்ணுமுன் சங்கிலி கிறிஸ்துவனகி டெரன்பிலிப் எ ன்னும் நாமஞ்சூடிக்கொண்டனன். அவன்மனைவியும் டோ ன மகறிடா தெ அஸ்திரியா என்னும் பெயர்குடி ஞானஸ்நா னம்பெற்ருள். சங்கிலியைக் கோவையிலே அலபண்டேகா எ ன்னுஞ் சந்தைவீதியிலே சிரச்சேதஞ்செய்யக் கொண்டுபோ யினர். ஒர் ரத்தினக்கம்பளத்தின் நடுவே சிவந்த பட்டுமெத் தையொன்றிட்டு அதன் மேலே அவனைவைத்துச் சிரங்கொய் தனர். சங்கிலி தன்கைகளைப் பின்கட்டாகக் கட்டவிதேல் தன் அரசபதவிக்கு ஈனமெனமறுத்துத் துணிவோடு சிரச்சேததண் டனையைப் பெற்றனன்.
சரித்திர மாறுபாடுகள்- போர்த்துக்கீசருடைய அக்கால த்து நூல்களிற் கண்ட இச்சம்பவங்களை யாழ்ப்பாண வைபவ மாலை மிகவும் கிரித்துக் கூறிப்போயிற்று. வைபவமாலையின் கற்றை மெஸ், முத்துக்கம்பிப்பிள்ளை மேலும் திரித்து எழு கியிருக்கின்றுர். சங்கிலியையும் சங்கிலிகுமாரனையும் ஒருவனெ
யாழ்ப்பாண வைபவ கெளமு தி. 61
ன மயங்கிய இவர் சங்கிலி பிடிபட்டபின் நடந்தசெய்திகளை வாையுமாறு பின்வருவது.
பறங்கிகள் செயபேரி முழக்கிக் கோட்டையினுள்ளே புகுந்து கொடிஉயர்த்தினர். இதனையறிந்த பாராசசேகா ச க்கரவர்த்தி பறங்கிகளுக்குட்பட்டு அரசாளுவதிலும் காடாளு வதே நன்றெனத்துணிந்து வன்னிக்காட்டுக்கோடி ஒளித்தா ன். பறங்கிகள் அவனைத்தேடிக் காணுமையால் அவனிருக்குமி டத்தை அறிந்து சொல்பவர்க்கு இறைசால் இருபத்தையாயிரம் பரிசாகக்கொடுக்கப்படுமென்று பறையறைவித்தனர். அதுகேட் டு அவனிடத்து முன்மந்தி :ಅ.??? கன்னெஞ்சப்பார்ப் பான் பொருளவாவென்னும் கொடிய பேய்வாய்ப்பட்டு வன்னி க்காட்டுக்குச்சென்று ஒரிளநீரும் எலுமிச்சம்பழமுங் கையிற் கொண்டு தேடித்திரிந்து வருகையில், அரசன் அவனைக்கண்டு கூவி அழைத்தான். பார்ப்பான் தேடியபொருள் தானே சிக்கி யதென்று மனம்பூரித்து அரசனிடம்போய் ஆசீர்வாதஞ்சொல் லிச் சுகம்விசாரித்து இவ்விளநீரை உண்ணுமென்று நீட்டினன். அரசன் இருகையாலும் ஏற்றுத் தன் உடைவாளால் அதனைத் திறந்து பருகத்தொடங்கினன். எலுமிச்சம் பழமிருக்கின்றது வாளைத்தாரும் வெட்டிப்பிழிந்து இளநீரில் விடுவேன் என்று பார்ப்பான்கூற, அரசன் வாளை அவன் கையிற்கொடுத்தான். அ வன் அதனைவாங்கிப் பழத்தை வெட்டிப் பிழிந்துவிட அரச ன் இருகையாலுமேந்தி இளநீரைக் குனிந்து பருகினன். குனி ந்துபருகக் காதகப் புலையனுன அப்பார்ப்பான் அவ்வாள்கொ ண்டு அரசன் சிரசைக்கொய்து எடுத்துப் பொதிசெய்துகொ ண்டுவந்து பறங்கித்தலைவன் கையிற்கொடுத்தான். அவன் அ தனவாங்கி அவிழ்த்துப்பார்த்துப் பிரமித்து ‘யாதுசெய்தாய் புலையா' வென்று பெருஞ்சினங்கொண்டு நீ சிறிதுங்கூசாது செய்த இப்புலைத்தொழிலுக்குத் தாத்தக்க பரிசு இதுவே எனக்கூறி உடைவாளையிழுத்து அந்நிலையிலேதானே அவன்சி
ாசைக்கொய்தான்.
*அதன்பின்னர் பறங்கிகள் சங்கிலியை நீதாசனத்தின் மு ன்னேயிட்டு 'நீ முடிசூட்டப்படாது இராசாதிகாரஞ்செய்தது முதற்குற்றம். தங்தைக்குரிய அரசைக் கிரமந்தவறிக்கவர்ந்தது இரண்டாங்குற்றம். இராசகுமாரர்களைக் கொலைபுரிந்தது மூன் ருங்குற்றம். சனங்களைவருத்தியதும், அறுநூறுபேரை வன் கொலைபுரிந்ததும் நான்காங்குற்றம். எனக் குற்றநிரூபண ஞ் செய்து அவனைச் சிரச்சேதஞ்செய்து கொல்லுமாறு தீர்ப்பிட்
0
Page 41
62 யாழ்ப்பாண வைபவ கெளமு தி.
டனர். அவ்வாறே காளிகோயிற்சங்கி தியில் பறங்கிகள் அவனே ச் சிரச்சேதஞ்செய்து கொன்றனர். அதுகேட்டுச் சங்கிலிதே வி தீவளர்த்து அகிற்பாய்க் துயிர்விட்டாள். சங்கிலியினதுதே வி தீப்பாயுமுன் இத்தீவினைவிளைத்த காக்கைவன்னியன் மனைவி யும் தன்னைப்போலத் துயரடைதல் வேண்டுமென்றெண்ணி ஒரு தூதனையனுப்பிச் சங்கிலியோடு காக்கைவன்னியனும் ւմք ங்கிகளால் மடிந்தானென் றவளுக்கு அறிவித்தாள். அதுகே ட்டுக் காக்கைவன்னியன்மனைவியும் தீப்பாய்ந்து உயிர்விட்டா ள்.பறங்கிகள்சங்கிலிபுத்திரரைத் தாங்கம்பாடிக்கனுப்பி அங்கே வைத்துப் பரிபாவித்துவந்தார்கள்.” இதுவரையும் மேற்கோள்.
பாராசசேகர சக்கரவர்த்தி சங்கிலிகுமாரன் நாள்மட்டும் சீவங்காா யிருந்திலனென்பது சொல்லாமலே விளங்கும். 1519 முதல் 1561 வரையிலாண்ட சகராசசேகரன் எனும் சங்கிலி யையும் 1618-ல் அதாவது ஒருநூறு வருஷங்களின்பின் ஆ ண்ட சங்கிலிகுமாரனையும் ஒருவனென மயங்கியதே வைபவ மாலை இவ்வாறு தவறியதற்கு கியாயமாகலாம். பரராசசேகா னின் சிரசைக் கொய்தகதை அந்திரெ தெ பூர்த்தாடோ எ ன்னும் பறங்கிச் சேனுபதியின்கீழ் கொல்லப்பட்ட "ராசராச தேசமகாச சேகரம்” எனப் பறங்கியர்நூல்கள் அழைக்கின் றவனின் சரித்திரமேயன்றி வேறன்று. சங்கிலிகுமாரனைக் கா ளிகோவிற் சங்நிதியிற் கொல்லுவித்தமை கிறிதும் பொருங் தாக்கதை. கோவையில்கடந்த சம்பவமே இவ்வாறு திரித்துக் கூறப்பட்டது. சங்கிலிகுமாரன் மனைவியல்ல மகராசசேகரத் தின் மனைவி தற்கொலைசெய் திறந்திருக்கலாம். வைபவமாலை தற்கொலையென்றதை மெஸ், முத்துத்தம்பிப்பிள்ளை தீவளர்த் துத் தீப்பாய்க் துயிர்விட்டதென்கின்ரு?ர். காக்சோ இளவரச னைக் காக்கைவன்னியனென வைபவமாலை மாற்றிவிட பிள் ளையவர்கள் அவன் மனைவியும் தீப்பாய்ந்து உயிர்விட்டாளென யாதோர் ஆதாரமுமின்றிக் கூறுகின்ருர். அதுகிற்க:
சில இடைக்காலச்சம்பவங்கள்.- வைபவமாலையில் காணப் படும் வேறு சிலவிபரங்களும் உண்மைச் சம்பவங்களாகலாம். ஆயின் அவை சிக்கறுக்கக்கூடாத பான்மையாய் அடிதலைமா றிச் சரித்திர வான்முறைதப்பிக் கிடக்கின்றன. அவற்றுட் ப ல 1618-க்குப்பின் அன்று அதற்குமுன் பறங்கியர் யாழ்ப்பா ணத்தைத் திறையரசரைக்கொண்டு ஆண்டகாலமாகிய 1591 -க்கும் 1618-க்கும் இடைப்பட்ட காலத்தனவாதல்வேண்டும். வைபவமாலைசொல்வது:- ‘காலவுத்திவருஷம் ஆனிமாசம் யாழ்ப்பாணம் பறங்கியரசாட்சிக்குள்ளாயிற்று. (இங்குசுட்டிய
யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 63
காலவுத்திவருஷம் ஒன்றில் 1858 அல்லது 1618 ஆதல்வே ண்டும். முந்தியவாண்டு முழுதும்தவறு. பறங்கியர் 1560 இலே யே யாழ்ப்பாணத்திற் படையேற்றித் தோற்முேடினர்.
பறங்கிகள் கல்லூரிலிருந்துகொண்டு புறக்கோட்டைமதி லை இடிப்பித்துக் கற்களைக்கொண்டுபோய் இடிபட்ட தங்கள் கோட்டையை மறுபடி கற்கோட்டையாகக்கட்டி அதன் கீழ் ப்புறத்தில் வீடுகளையும் அரசாட்சி மண்டபங்களையும் கட்டு வித்துச் சுற்றுப்புறங்களில் காடுகளையும் வெட்டுவித்துச் சமீ பத்தில் பிரசைகள் குடியிருக்க வசதிபண்ணினர்கள். அரசா ட்சிகிடைக்கும்படி பாகிருபசிங்கம் தங்களுக்குச்செய்த உத விக்காக அவருக்குள்ள எழுகிராமங்களுடன் நல்லூர் மாதக ல் என்னும் இரண்டுகிராமங்களையும் பெருந்தொகையான தி ாவியத்தையும், முன்னிருந்த மந்திரியுத்தியோகத்தையுங் கொ டுத்து அவன்மகன் பரராசசிங்கத்துக்குக் கிராம அதிகாசக் தையுங்கொடுத்துப் பறங்கிகள் அவ்விருவரையும் கனப்படுத்தி வந்தார்கள். அவர்களாற்பறங்கியரசாட்சிபெலத்துக்கொண்டது.
(இச்சம்பவமும் பின்வருவனசிலவும் ஜோஜ்தெமெலோ யாழ்ப்பாணத்திற் பறங்கியரின்கீழ் பிரதிராசா ஒருவனை வைத் தகாலத்துக்குச் சேர்ந்தனவாகலாம். பரநிருபசிங்கனே சகாா சசேகர சங்கிலியின் தமையனும் கோவையிற் பறங்கியரைச் சரணடைந்தவனுமெனில், அவன் யாழ்ப்பாணத்துக்கு மீண்டா னல்லன். 1560-ல் அவன் பிறகன்சாவோடு வந்திலன். ஆக வே அதன்முன் இறந்தவனுதல்வேண்டும்.) "
*அதன்பின் பறங்கிகள் சமயகாரியங்களிற் கையிட்டுச் சி வாலயங்களையிடித்துக் கத்தோலிக்கரின்சக்தியவேதம் பாம்பச் செய்தார்கள். நல்லூரிலும் கீரிமலைச்சார்பிலும் இருந்த கோவில் களைப் பாகிருபசிங்கம் இருக்கிறவாைக்கும் வழங்கிவந்தபடியே வழங்கலாமென்று உத்தரவுசெய்தார்கள். பறங்கியரசாட்சிசெய் யத்துவங்கி ஒன்பதாம்வருஷத்திலே பரநிருபசிங்கம் சிவபதம டைந்தான். பறங்கிகள் அவன் மரணத்துக்குத் துக்கங்கொண் டாடி, பிரேதத்துக்குச் சிவசமயமுறைப்படி சடங்குசெய்து த கனம்பண்ண இடங்கொடுத்தார்கள்.
*அதன்பின் பரராசசிங்கத்தை அரசாட்சியின் ஆலோசனை த் தலைவனுக்கிச் சங்கிலி எழுதிவைத்தபடியே அவலுக்குப் ப ாராசசிங்கமுதலியென்றும், அவன்குலத்துக்கு மடப்பளியென் றும் பட்டஞ்குட்டி அவனையும் பிதாவை கடத்தினதுபோலக்
Page 42
64 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
கனப்படுத்தி நடத்திவந்தார்கள். பரராசசிங்கமுதலிக்கு மாண காலங் கிட்டினபோது அவன் தன் ஏழு குமாரர்களையும் வ ரவழைத்துத் தன்னுஸ்திகளைப் பங்கிட்டுக்கொடுத்தான். அழ காண்மை வல்லமுதலிக்கு நல்லூரையுங் கள்ளியங்காட்டையு க்கொடுத்து நல்லூரிலுள்ள தன்மாளிகையில் இருத்தினன். ('அவ்வரண்மனையின் மேற்குவாயிற் கோபுரமாத்திரம் இன்று ம் அழியாதிருக்கின்றது” என்பர் மெஸ். முத்துத்தம்பிப்பிள் ஃள. இவ்விஷயத்தில் வைபவமாலை ஆக்கியோன் பிள்ளையவர்க ளிலும் அதிகம் அறிந்தவராய்க் காணப்படுகின்றர். சங்கிலிரா சனுடைய கட்டிடம் எனச் சனங்கள் அறியாது கூறும் அவ் வாயிற்கட்டிடம் உள்ளபடி ஒல்லாந்தர்காலத்ததேயாம். பறங்கிய ர் நல்லூர்க்கட்டிடங்கள் யாவற்றையும் அழித்துவிட்டுக் கோ வில் கலாசாலைமுதலிய வேறுகட்டிடங்கள் அமைத்தனர். ஒல் லாந்தர்காலத்தில் சங்கிலிதோப்பு அரசினர் நந்தவனமாயிருந் தது. அதன்முகப்பே இன்னும் அழியாதிருக்கின்றது. Administr. Rep. R. P. 1903) தனபாலசிங்கமுதலிக்கு மல்லாகத் தைக்கொடுத்து அதிலிருத்தினன். வெற்றிவேலாயுத முதலிக் குச் சண்டிருப்பாயைக் கொடுத்தான். விசய தெய்வேந்திரமு தலிக்கு அராலியைக்கொடுத்தான். திட்வீரசிங்க முதலிக்கு அ ச்சுவேலியைக்கொடுத்தான். சந்திரசேகா மாப்பாணமுதலிக்கு உடுப்பிட்டியைக்கொடுத்தான். இராயரெத்தினமுதலிக்குக் கச் சாயைக்கொடுத்தான். இவர்களன்றி வேதவல்லியெனும் ஒர்ம களும் இருந்தாள். அவளுக்கு வேளாளகுலத்தில் விவாகஞ் செய்வித்து மாதகலைக்கொடுத்தான்.
போாாசசிங்கம் இறந்தபின் பறங்கிக்காரர் இடியாமல்விட் டிருந்த கோவிலையெல்லாம் இடிப்பித்தார்கள். அக்காலத்தில் நகுலேசர்கோவிலிலிருந்த பாசுபாணியேர் கோவிற்சாமான்க ளையும் விக்கிரகங்களையும் கிணறுகளிற்போட்டு முடிவைத்தார். கந்தசுவாமிகோயிற் பணிவிடைக்காானுயிருந்த பண்டாரம் அ த்திசையிலுள்ள ஆலயங்களைக்குறித்துச் சம்பவங்களும் ஒழு ங்குத்திட்டங்களுஞ்செய்து அடக்கியதான செப்புப்பட்டயத்தை க்கொண்டு மட்டக்களப்புக்கு ஒடிப்போனன். ('அங்கிருந்த சில விக்கிரகங்கள் தாமிர விக்கிரகங்களையெல்லாம் அக்கோ யிற் குருக்கள்மார் பூதராயர் கோவிலுக்குச் சமீபத்தேயுள்ள குளத்திலே புதைத்துவிட்டு நீர்வேவிப்பகுதிக்கு ஓடினர்” எ ன்பர் மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை. ஆதாரங்காணுேம்.)
“பாராசசிங்கமுதலி மாணமடைந்தவுடன் கெங்காதா8யர் வமிசத்துப் பிராமணக்குடிகள் கல்லூாைவிட்டு நீர்வேலியிலும்
யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 65
வடமிருச்சிப்பகுதியிலும் போய்க் குடியிருந்தார்கள். அக்கர்ல த்திலே பறங்கிகள் தமிழ்ாாசாக்களைப்போல் மாதாக்கனை வை க்கக்கருதி ராயாத்தினமுதலி மகன் சோழசிங்க சேதிைாா ய முதலியைக் கீழ்ப்பற்றுக்கு மாதாக்கனுகவும், விசய கெ ய்வேந்திரமுதலியை மேற்பற்றுக்கு மாதாக்கனுகவும், அழி காண்மைவல்ல முதலிமகன் இராசவல்லமுதலியைத் தென்பற் அறுக்கு மாதாக்கனகவுமாக்கினன். அழகாண்மை முதலியை வடபற்றுக்குமா தாக்கனுக்கி அரசாட்சியை நடத்திவந்தார்கள்.”
தமிழரின்புதுஎழச்சி-1619-ம் ஆண்டுத் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் மீண்டும் கலகங்களும் போர்க்குரலொலியும் எழுந்தன. யாழ்ப்பாணத்துப் புராதனமனுஷர் தம்நாதி பறங் கிய்ரின்கீழ் இருக்கப் பொருராய்த் தஞ்சாவூரிலிருந்து ஓர் பெ லத்தசேனையை அழைத்துக்கொண்டு பறங்கியரைச் சருவமுய ன்றனர். வடகரையினின்றே ஒரு அரசகுமாரனும் வரிக்கப்பட் டான். கரையார்தலைவன் ஒருவன் தமிழர்பக்கத்துச் சேனநா யகமாகிப் பறங்கியாைப் பண்ணைத்துறைக் கோவிலிற்சருவினு ன். பறங்கியர் திரண்டெழுந்து தமிழரை ஒட்டிவிட, மறுநா ள் ஒலிவேரு அரண்செய்துகொண்டிருந்த ஒரு சிவாலயத்தை த் தமிழர் தாக்கினர். இங்கும் தமிழர் வலியிழந்து முதுகி ட்டனர். இதற்கிடையில் வடகரையினின்றுவந்த அரசகுமாா ன் 800 மறவவிார் சகிதமாய் நல்லூரிலேயுகுந்து ஒரு ஆலய த்தில் காந்துறைந்தனன். ஒலிவேரு? இதனையறிந்து மறுநாட் காலை ஆலயத்தைத்தாக்கி அதின்வாயில்களைத் தீயூட்டிஎரித்து உட்செல்ல, மறவர்சேனை உயிரைத் துரும்பாகமதித்துப் பறங் கியர் படையுட்புகுந்து அமாாடிற்று. அன்று வெளிப்பட்ட ம றவருள் ஒருவனும் எஞ்சாது அனைவரும் பறங்கியர்வாளுக் கிரையாயினர், அாசகுமாரனும் அவனுக் மெய்க்காவலனுய் கின்ற பிராமணனுமே உயிர்தப்பினர். ஆலயத்தைச்கு றையாடிக்கொண்டு அரசகுமாரன்கையில் இரத்தாம்பரப்பட்டா ல்மூடிய விலங்கிட்டுக் குருமார்வசத்தி லொப்புவித்து வெற்றி யாளனுய் மீண்டனன்.
மிக்கப்பிள்ளையின்கலகம்- இது நிகழ்ந்து முடிந்தும் முடி யாமுன்னரே மன்னருக்கோடிப் பறங்கியரைச் சரணடைந் ருந்த மிக்கப்பிள்ளை ஆராய்ச்சி அவர்களுக்கும் விரோதியாகித் தஞ்சாவூருக்கோடி அங்கிருந்து ஆயிரம் படைவீரரோடு தொ ண்டைமானுற்றில் தோற்றினன். விரைவில் தஞ்சாவூர்ச்சேனஅ ராலியையடைந்து அணிவகுத்துகின்றது. யாழ்ப்பாணிகள் காடெ ங்கும் பறங்கியருக்குவிரோதமா யெழத்தொடங்கினர். ஒலிவேரு வின்சேனை தமிழருக்கு ஈடுசொல்லமாட்டாது தியங்கிக்கொண்
Page 43
65 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
டிருந்தது. இதற்கிடையில் கொழும்பிலிருந்து தெயிக்சேரு எ ஆணும் ஒர் கொம்மாண்டோரின்கீழ் ஒரு உபபலம்வந்தமையா ல் ஒலிவேரு ஒருபுசம் இருபுசமாகித் தமிழரை எதிர்த்துப் போர்தொடுத்தான். விரைவில் தமிழர் பண்ணைத்துறையைச் சூழ்ந்து சருவத்தொடங்கினர். ஆயினும் பறங்கியரின் குண்டு மாரிக்காற்ருது முதுகிடவேண்டினுேராயினர்.
காையாாத்தலைவன். 1619-ம் ஆண்டு கார்த்திகைத்தொ டக்கத்தில் மீண்டும் தஞ்சாவூர்நாயக்கனின் தூண்டுதலால் க ாையார்தலைவன் ஒர் பெலத்தசேனையோடு யாழ்ப்பாணத்தில் படையேற்ற வருகிருனென வதந்திபிறந்தது. ஒலிவேரு பண் ணைத்துறைக்கோவிலை நன்முக அரண்செய்துகொண்டு மாற்ற ஆறுக்கு ஒரு ஒலைவிடுத்து **நீவிர் குளக்கரைகளில் பாளையமிட் ெவருந்துவதிலும் நமது நல்லூர்ப்பட்டணத்தில் அல்லது க ாையாருடைய பனந்தோப்பில் (இது தற்காலக் காையூரைக்கு றிக்கும்) வந்து குசாலாய்த்தங்குவது நன்று’ என அறிவித் தான். அதற்குக் கரையார்தலைவன் மறுமொழியாய் "தஞ்சா வூர் (5ாயக்கனின் பேரால் யாழ்ப்பாண அரசு கைக்கொள்ளவ ங்தோம். படைப்பயிற்சியிற் சிறந்தவராகிய தம்மை எதிரிற்க ண்டு பரிசோதனைபார்க்க விரும்புகிமுேம்” என ஒலைவிடுத்தன ன். மறுநாட்காலை ஒலிவேரு நல்லூரில் தமிழரைக் காத்துகி ன்றும் வந்தாரில்லை. ஆதலால் உச்சிவேளையில் போசனமருங் துமாறு பட்டினத்துக்குமீண்டு, போசனஞ்செய்துகொண் டிரு க்கையிலேயே தஞ்சாவூர்ச்சேனை தலைகாட்டத் தொடங்கிற்று. தமிழர் கடற்கரைப்புறமாய்ப் பண்ணைத்துறை அரண்களைச் ச ருவ வருவதைக்க்ண்ட ஒலிவேரு சிலபறங்கியரைக் கடலிற்கு தித்து மாற்றனைக் காத்துகிற்கச்செய்து தானும் அரையளவு வெள்ளத்தில் பதிவிருந்தான். கடலிலும் கரையிலும் கடும் போர்கடந்தது. கடலில் ஒலிவேறவும் வேறுசிலரும் காயப்ப ட்டார்கள். ஆயினும் சற்றுநேரத்துக்கெல்லாம் தமிழர் ஒட்ட ம்பிடிக்கத் தொடங்கினர். கலைந்து ஒடிய தமிழரைப் பறங்கியர் கல்லூர்த்திசையாய்த் துரத்தி ஒர் ஆலயத்தையடைந்து அதை அரணுக்கிக்கொண்டு குண்டுமாரிபொழிந்தனர். பாளையத்தினி ன்றுகொண்டிருந்த ஒலிவேரு மீண்டுவரும் பறங்கியரின் அர வத்தைக்கேட்டு இதேதென உசாவ, வெற்றியாளராய் மீண்ட பறங்கிவீரர் தாம் கொய்துகொண்டுவந்த தமிழரின் சிரங்களை அவன்முன் குவித்துவைத்து ஆனந்தகிருத்தமாடினர். பறங்கி யர்பக்கமாய்கின்ற சிங்களப்படைவீரர் தமிழரை அப்பாலும் துரத்திச்சென்று மறுகாட்காலை அளவிறந்த கொள்ளைப்பொரு
களோடு மீண்டனர்.
யாழ்ப்பாண வைபவ"கெளமுகி. 6ሽ
1621-ம் ஆண்டு மாசிமாசம் 2-ந் திகதி ஒலிவேரு பண் ணைத்துறையில் வசிப்பதைவிட்டு நல்லூர்நகரத்தைத் தனது அரண்மனையாக்கிக்கொண்டான். அங்கிருந்த பிரதான ஆலயக் தையும் இடிப்பித்தான். சனக்களுக்கு இச்செய்கை வெகு ம னஸ்தாபகாரணமாயிற்று. அவர்கள் எவ்வாறு இரந்துகேட்டு ம், எத்தனை திரவியம் வேண்டுமாயினும் தருவோமென விண் ணப்பஞ்செய்தும் பலிக்கவில்லை.
தமிழரின் கடைசிக்கலகம்,- தஞ்சாவூர் நாயக்கன் யாழ்ப் பாணத்தைச்செயிக்க இன்னுமொரு கடைசிப்பிரயத்தனஞ் செ ய்வானுயினன். அவனனுப்பிய சேனை பருத்தித்துறையில் இற ங்கவிருக்கிறதெனக் கேள்வியுற்ற ஒலிவேரு, தெமோற்ரு எ ன்பவனேடு ஒருபறங்கியர் சேனையை அங்கனுப்பினன். ஆயி ன் தஞ்சாவூர்ச் சேனை வல்லுவெட்டித்துறைக் காையிலிறங்கி ஒர்குளக்கரையிலுள்ள பனங்தோப்பிற் பாளையமிட்டிருக்கிற தென அறிந்து தெமோற்ற அங்கு இரகசியமாய்ச்சென்று ப திவிருந்து மூன்ருஞ்சாமமாகும்போது போர்ப்பறை யறைந்து கூக்குரலிடத் தமிழர் திகிலடிபட்டுக் குதிசைகளிலேறி ஒடிப் போவோரும், திசைதப்பி அலைவோருமாய்க் கலைவுறப் பற ங்கியர் பின்தொடர்ந்து 1200 பேரைச் சிரங்கொய்தனர். விழு ந்துபட்டவர்களுள் யாழ்ப்பாணச் சிங்காசனம் வகிக்கும் நோ க்கமாய் வந்திருந்தவனன சேனநாயகமும் ஒருவனனுன், இர ண்டு நாட்களுள் தேமோற்ற கம்பங்களிற் குற்றிய பகைவர் சி ாங்களோடும், பறித்தெத்ெதவாள், அம்பு வில், துப்பாக்கி யா தியவற்றேடும் தஞ்சாவூரினின்றும் பரிவாரமாய் வந்த ஸ்திரி கள், குதிரை, நாய், குரங்கு, கிளிப்பிள்ளை முதலியனவோடும், திரளான கைதிகளோடும் கல்லூரில் வந்துசேர்ந்தான். சிாங்க ள் அடக்கஞ்செய்யவும் கைதிகள் அக்கால வழக்கப்படி எலத் திற்கூறிவிற்கவும்பட்டனர்.
பறங்கியருக்கு இராசவிசுவாச் சத்தியம்-தஞ்சாவூர் அரசன் ஆடுவித்த போர்களினல் யாழ்ப்பாணத்தில் உதிரவெள்ளம் பெ ருக்கெடுத்துக் குடிகள்சுருங்கி இடர்ப்படுவோராயினர். முத லிமாரும் இனித் தமிழரசு தழையாதெனவருந்திப் பறங்கியர் க்கு இராசவிசுவாச சத்தியஞ்செய்து கொடுத்தனர். இதனுல் யாழ்ப்பாணம் 1620-ம் ஆண்டுதொடங்கிப் பறங்கியருடைய நா கெளு ளொன்றுயிற்று. ஒலிவேருே யாழ்ப்பாணத்துக்கு முதற் கவனாாயினன். ஆயினும் யாழ்ப்பாணம் பறங்கியர்கைப்பட்ட ன்னும் இராச்சியம் எனும்பெயரையே உடையதாயிருந்தது.
Page 44
68 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
பறங்கியசின்கீழ் யாழ்ப்பாணநிலை.- யாழ்ப்பாண நாட்டில் ந டந்த நெடும்யுத்தங்களில் கமச்செய்கையின்றித் தரை பாழ் பட்டுக்கிடந்தது. பறங்கியர் குடாநாட்டிலும் தீவுகளிலும் தம க்கு விருப்பமான பாகங்களைத் தமக்காக்கிக்கெர்ண்டிருந்தன ரன்றிக் கமச்செய்கையை ஊக்கித்தாரில்லை. 1623-ம் ஆண்டு காணிகளின் தோம்புப்பதிவு முதன்முதற் செய்யப்பட்டது. ஆ யினும் அதைச்செய்வித்த உத்தியோகஸ்தரின் அசட்டைத்த னத்தால் அது மிக அபூரணமான ஒர் பதிவாயிற்று. அப்பா ல் தொன்பிலிப்பு மஸ்கறிஞ்ஞா எனும் கோவைப் பிரதிராசா யாழ்ப்பாணத்தைத் தரிசித்தகாலையில் திருத்தமான ஒர் தோம் பு பதியப்பட்டது. சற்றுச்சற்ருய் மன்னுர்க் கொம்மாண்டோ ரின் தத்துவம் அருகிஅருகி ஒலிவேருவின் பராமரிப்பிலேயே அத்தீவும் தங்குவதாயிற்று. ஆயினும் மன்னர் நெடுங்காலம் பி ரத்தியேகமான ஒர் அரசிறைப் பிரிவாயேயிருந்தது.
பெரும்புயலும் வெள்ளப்பிரவாகழம்,- யாழ்ப்பாணத்தைவ ருத்திய இடையீடின்றிய யுத்தங்களின் பயனுய்க் கொடிய வை சூரிநோயொன்று தலைகாட்டி அருேககிராமங்களை இடுகாடுபோ லாக்கிவிட்டது. பஞ்சமும் கொள்ளைநோயைப் பின்தொடர்ந்து வந்தது. அப்பால் 1621-ம் ஆண்டு மாசிமாசம் முன்னேர் போதும் எவரும் கண்டுகேட்டறியாப் பெரும் புசலொன்று வீசக் கடலணை கடந்து மீறிப் புரண்டோட வெள்ளப்பிரவாக மானது கரைப்பட்டணங்களுட்புகுந்து வீடுகளை வீழ்த்தியும் உயிர்ச்சேதம்வின்ாத்தும் பயங்கா விபத்துண்டாக்கியது. பட்டி னத்துச் சனமெல்லாம் கத்தோலிக்க ஆலயத்துள் அடைக்க லம்புகுவோராயினர். ஒலிவேரு அத்தருணம் திகிலடிபட்ட ச னங்களுக்குக் காட்டியதயவு பெரிதும் பாராட்டப்பட்டது. அ வன் ஆபத்துக்குள்ளான இடங்கடோறும் தானுகச்சென்று உடுகூறையற்ருேருக்கு உடையளித்தும், பசியால் வாடியோரு க்கு உணவீந்தும், குற்றுயிராய்க் கிடந்தோருக்குச் சிகிச்சை செய்துங் கொண்டு திரிந்தனன்.
ஒலிவேறுவின் ம்ாணம்- இப்பிறர்சினேக கிரியைகளிலே தன்சுகத்தைப்பாராது ஒழுகியமையினல் ஒலிவேரு நோயுற் றுப் பிரசைகளெல்லாம் புலம்ப 1627-ம் ஆண்டு பங்குனிமா சம் 22-ந் திகதி இவ்வுலக வாழ்வை ஒருவினன். ஒலிவேருவை த் தமிழ்முதலிமர்ா எவ்வளவாக மதித்திருந்தாரெனில், அவ ன் தேகவியோகத்தின்பின் யாழ்ப்பாணத்துக்கு வேருெருதலை வன் வேண்டுவதில்லையென்றும், பிலிப்பு இராசாவின் பிரதிமை யொன்றே இனி யாழ்ப்பாணத்தை அரசாளப் போதியதாகு
யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 69
மென்றும் கூறினர். ஒலிவேருவின் பிரேதம் மகா சம்பிரம மாகப் பண்ணைத்துறையின் ஆலயத்திலேயே அடக்கஞ்செய்ய ப்பட்டது. இவ்வாலயத்தை ஒலிவேரு புதுக்கிக் கட்டியிருந் தான். யாழ்ப்பாணக்கோட்டை இதனை உள்ளடக்கி எழுப்பப் பட்டது. கோட்டையின்கற்கள் தமிழரசன் கோட்டையினின் று கொண்டுவரப்பட்டனவென மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை கூறியது தவறு. யாழ்ப்பாணத்தாசரின் நல்லூர்க்கோட்டை மு ருகைக்கல்லாற் கட்டப்பட்டிருந்ததற் கேதுவில்லை. அது செ ங்கற்கட்டிடமேயாம். இன்றைக்கும் சங்கிலித்தோப்பிலிருக்குங் கட்டிடமுகப்பு:தமிழரசர்காலத்ததன்று ஒல்லாந்தர்காலத்ததாம்.
கத்தோலிக்கவேதம்பாவுதல்- ஒலிவேரு யாழ்ப்பாணத் தைப் பறங்கியருக்காக்கின நாள்முதல் கத்தோலிக்கவேதம் இ ங்கு முன்னிலும் அதிகவிரைவாய்ப் பரவுவதாயிற்று. பல்லா ண்டுகளின்முன் பண்ணைத்துறைப்பக்கத்தில் ஒர் சிறு கத்தோ லிக்க ஆலயமிருந்தது. அதனைக் கண்ணுடிப்பாதிரியென்னும் கு ருவானவர் பெலப்பித்துக் கட்டமுயன்றபோது அதன் அருகா மையில் சோனகரிருந்தமையால் அவர்களை எழுப்பிவிடுமாறு அரசனைக்கேட்டனர். சோனகர் மறுத்துநின்றும் அரசன்கட்ட ளைப்படி அவ்விடக்தைவிட்டுச் சோனகதெரு என இதுகாறும் அழைக்கப்படுமிடத்துக்குச் செல்வோராயினர். இச்சம்பவம்வை பவமாலையில் வேறுவிதமாய்த் திரித்துக்கூறியிருத்தல் காண்க,
கண்ணுடிப்பாதிரியார் கட்டியகோவில் இருந்தவிடமே ஒலி வேருகாலத்துப் ‘புதுமைமாதாகோவி’லாகவும் அப்பாற் கோ ட்டைக்குட்பட்ட ஆலயமாகவும் வந்தது என்ப. பரராசசேகர ன்காலத்தில் பிரான்சீஸ்கன்சபைக் குருமார் நல்லூரிலும் ஒர் கோவில்கட்டியிருந்தனர். ஊர்காவற்றுறை, மாதோட்டம், மன் னர், அரிப்பு, பெருங்களி, பூநகரி ஆதியவிடங்களில் ஒலிவே முவின் முன்னரே கத்தோலிக்கஆலயங்க ளிருந்தன.
லிவேருவின்முன் பிரான்சீஸ்கன்சபைக் குருமார் யாழ் ப்பாணத்தில் 12000 பேரைக் கத்தோலிக்கராக்கி யிருந்தன ரென்ப. ஆயின் ஒலிவேரு? இந்நாட்டைப் பறங்கியருக்காக்கிய பின்னே கத்தோலிக்கசமயம் வெகுவிரைவாய்ப் பரவுவதாயிற் று. ஒலிவேரு யாழ்ப்பாண அரசைக் கைக்கொண்டவுடன் இங் நாட்டவர்கள் தம்சயத்திற் சேர்ந்துகொள்வதே போர்த்துக்கால் அரசருக்கு அதிக உவப்பாகுமென முரசறைவித்தான். இதிற்
தலையாரிமாரின் சகாயத்தையும் அடைந்துகொண்டான். விரை
Page 45
ሽ0 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
விலே பண்டுதொட்டுச் சைவராயிருந்த கம்யாழ்ப்பாணத்தார் பறங்கியருடைய சனுவை அடைவதற்குக் கத்தோலிக்கராவதே உத்தமவழியெனக் கண்டுகொண்டு கும்பல்கும்பலாய் அச்சமய த்திற் சேருவோராயினர். முதல் இரண்டு வருஷங்களிலேயும் 52000 பேர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். இவர்களு ள் மூவர் முதலிமாரும், ஆராய்ச்சிமார் சகலரும், கோவிற்பிாா மணருள் 150 பேர்வரையிலு மிருந்தனர். இருவர் வன்னிய ரும், இருவர் அதிகாரிகளும், இருபதின்மர் அரசகுமாரர்களு ம், நானூறு கரையாரோடு ஒன்பதின்மர் பட்டங்கட்டிகளும் அவ்வாறே கிறீஸ்துவர்களானர்கள். (Queiroz)
பிரான்சீஸ்கன்சபைக் குருமாரோடு யேசுசபைக் குருமா ரூம் யாழ்ப்பாணத்தில் வேதபோதகஞ்செய்ய வந்தனர். அப் பால் டோமினிக்கன் சபையாரும் பட்டினத்தில் உட்பட்டன ர். பிரான்சீஸ்கன்சபைக் குருமாரே முன்பு யாழ்ப்பாண இரா ச்சியத்தில் பிரவேசித்தோர் என்றமையினுல் அவர்களே கரை துறை ஊர்களில் வேதத்தைக்போதிக்கவும், யேசுசபைக்குருமா ர் உள்நாடுகளில் ஊழியஞ்செய்யவும் நியமிக்கப்பட்டனர். கத் தோலிக்ககுருமார் தொகை அக்காலம் இங்கு எவ்வளவாயிரு ந்ததென்பது ஒலிவேருவின் பிாேதசேமத்தில் நாற்பதின்மர் குருமார் இருந்தனரென்றதனுல் விளங்கும்.
இராசகுடும்பத்தவரின்செய்தி.- யாழ்ப்பாணத்துக் கடைசி இராசகுடும்பத்தாரின் செய்தி இவ்விடத்திற் கூறத்தக்கது. ப ரராசசேகரனின் வாலமனைவியர் இருவரும் பிரான்சீஸ்கன்ச பைக் கன்னியாஸ்திரீகள்வசம் ஒப்புவிக்கப்பட்டுக் கிறீஸ்துவே தத்திற் சேர்ந்துகொண்டார்கள். இராணிமாரிருவருக்கும் மு றையே டோன கிளாரு டா சில்வா என்றும், டோனு அந்தோ னியா றப்போசா என்றும் பெயர்தரிக்கப்பட்டது. அவர்களு ளொருத்தியின்மகளான 12 வயதுள்ள இளவரசிக்கு டோன கத்தறின டெசா எனும் நாமஞ்சூட்டப்பட்டது. ஒலிவேருவே இவர்கள்மூவருக்கும் ஞானப்பிதாவாய்கின்றன். இராணியாரின் சகோதரனும் மனைவியும் புதல்வர்களும் அப்படியே ஞானஸ் நானம்பெற்றர்கள். அப்பால் முதலியார் பிருங்கோ டொம் பேதுறு தெ பெற்றன்கோர் என்பவனின் மனைவியும் இருவர் புதல்வரும் ஒருத்திபுதல்வியும் கிறிஸ்தவர்களாயினர். இவர்க ன்பின் டொம் பிருன்சீஸ்கோ தெ பெற்றன்கோர் ஆராய்ச் சி அல்லது தனபுலிஆராய்ச்சியின் மனைவியும் நனலியின் (ந வாலி?) தலையாரியும் கிறீஸ்தவர்களானுர்கள். இராசகுடும்பத் திலே யாழ்ப்பாணத்தில் ஒலிவேருகாலத்தில் ஞானஸ்நானம்
யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
பெற்றேர் முந்நூறு பேரெனப் பறக்கியர் நூல்கள் கூறுகி ன்றன.
யாழ்ப்ப்ரிணத்துக் கடைசிஅாச தோன்றல்கள்.-- பரராசசேக ா பண்டாாத்தின்மகனும் அரசுரிமை பூண்டவனுமாகிய இள வாசன் சங்கிலிகுமாரனிடத்திலிருந்து விடுவிக்கப்பட்டபின் பி ாான்சீஸ்கன்சபைக் குருமார் மனையில்வைத்துங் பராமரிக்கப்ப ட்டுவந்தான். அக்காலம் எழுவயசுக் குழந்தையாயிருந்த அவ் விளவரசனைக் குருமார் வெகுசாக்கிரதையாய்க் காவல்பண்ணி வந்தனர். இதனுல் 'மிக்கப்பிள்ளை ஆராய்ச்சி’யின் கலககால த்தில் இளவரசனை அப்பிக்கொள்ள யாழ்ப்பாணத்தார் முயன் றும் முடியாமற்போயிற்று. ஆயின் அப்பாலும் அரசபாலனை யாழ்ப்பாணத்தில் வைத்திருப்பது ஆபத்கரமாகுமெனங் பறங் கியர் அஞ்சி அவனை அவன்தாயாகிய இராணியோடும் இதுவ ாையிற் கிறீஸ்தவர்களாய்விட்ட இராணிமார் இளவரசியோடு ம்கூடக் கொழும்புக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இளவரச ன் சந்தந்தோனியோ என்னும் மடத்தில் கல்விபயிற்றப்படுவா ணுயினன். இதற்கிடையில் செனறற் எனும் இலங்கையரசன் யாழ்ப்பாண இளவரசியைத் தன்மகனுன ஊவா இளவரசனுக் கு மனைவியாக்கக்கருதித் தூதுபோக்கினன். இச்சம்பந்தம் த மக்குப் பழுதாகுமென்றுணர்ந்த பறங்கியர் அதற்குடன்பட்டா ரில்லை. செனறற்றின் குமாரன் யாழ்ப்பாண இளவரசியை ம ணந்தானுயின் யாழ்ப்பாண அரசுரிமைப்பங்கு அவனுக் குள தாகிவிடுமென்று பறங்கியர் நன்முயறிந்திருந்தனர்.
இளவரசனின் ஞானஸ்நானச்சடங்கு 1623வடு ஆனிமீ 18வ கொழும்பில் நடந்தது. பட்டணத்து ஆலயங்களின் மணி களெல்லாம் ஆரவாரிக்க, பிரான்சிஸ்கசபைக் குருமார் பறங்கி த்தேசாதிபதியும் சேனபதி சேவீைரராதியோரும் சகிதமாய் நடுத்தெருவால் சுற்றுப்பிரகாரஞ்செய்து இளவரசனும் இராணி த்தாயும் இன்னும் எழுபத்தைந்து பரிவாரத்தவர்களும் இரு ந்த மாளிகைக்குச் சென்றனர். அங்கு இளவரசன் அலங்கார மும் விலையுயர்ந்ததுமான ஆடையாபரண மேனியணுய்கிற்கத் தேசாதிபதி அவன்கழுத்தில் ஓர் பொற்சங்கிலியும் பதக்கமும் போட்டு உபசரித்தபின் ஊர்வலஞ்செய்து பலவர்ணக் கம்பளங்க ளாலும் துவசதோரணங்களாலும் விசித்திரமாய்ச் சிறப்பித்தி ருந்த வீதிகளால் நடந்து, கேசோமயமாய் ஒளிரிடும்படி கிர் மாணித்திருந்த சந்தங்தோனியோ ஆலயபீடத்தண்டை வந்து சேர்ந்தனர். அங்கு தேசாதிபதி தன்நாமமாகிய டொம் கொ ன்ஸ்தக்தீனே எனும்பெயரை இராசகுமாரனுக்குச்சூட்டி அவ
Page 46
ሻ2 யாழ்ப்பாண வைபவ் கௌமுதி.
லுக்கு ஞானப்பிதாவாய்கிற்க, பிரான்சிஸ்கசபையின் முதற்கு ரு அவனுக்கு ஞானத்தீட்சைஅளித்தார். இராணித்தாய் டோ ன கிளாரு எனும் நாமத்தைப்பெற்ருள். இளவரசியின் இரு சகோதரிகளும் டோன இசபேல் என்றும், டோன மரியா எ ன்றும் முறையே நாமகரணஞ்செய்யப்பட்டனர். சங்கிலி குரு டாக்குவித்தவனகிய பரராசசிங்கனின் மைத்துனன் டொம் தீ யோகு என்றும், அவ்வரசனின் சகோதரியாகிய இவன் மனைவி டொன மரியா என்றும், இவர்கள் புத்திரர்கள் மூவரும் முறை யே டெசம்பிலிப்பு, டொம்பிரான்சீஸ்கோ, டொம் பேணுடி னே என்றும், புத்திரி டோன ஈனெஸ் என்றும் பெயர்தரி த்தார்கள். இவர்களோடு இவர்கள் பரிவாரம்முழுதும் ஸ்காபி disastut L-L-gal.
அப்பசல் பரராசசேகரனின் மகனன டொம் கொன்ஸ்த ங் தீனேவும், சகோதரிமகனன டொம் பேணுடினேவும் கோ வைக்கனுப்பப்பட்டு அங்கு லத்தீன்பாஷையும் தத்துவசாஸ்தி ாமுங் கற்றபின் போர்த்துக்கால்தேசஞ் சென்றனர். டொம் பேணுடினே அங்கு ஒர் பிரான்சீஸ்க சங்கியாசியாகி, சாகுமு ன் யாழ்ப்பாண அரசுரிமையைப் பறங்கியருக்கே கையளித்து மரித்தான். (Queiroz) டொம் கொன்ஸ்தந்தீனேவும் சாகுமு ன் இவ்வாறேசெய்தனன். ('aryay Sousa) இங்ஙனமே நம்நா ட்டின் அரசும் அரசுரிமையும் சம்பூரணமாய்ப் பறங்கியர்கை பபடலானது.
சிங்களரின் படையெழச்சி.-- ஒலிவேருவின் மரணத்தின்பி ன் லாங்கருேட் தெ செயிக்சாஸ் என்பவன் யாழ்ப்பாண்ணத்து க் கொம்மாண்டோாாயினன். இவன் யாழ்ப்பாணத்தைப் பரி பாலித்துவருகையில் செனறற் எனும் சிங்கள அரசனேடு கொ ழும்பிலுள்ள பறங்கியர் போர்முனைந்துகொண்டு நின்றனர். 1629-ம் ஆண்டு செனறற்றின் அத்தப்பத்துமுதலியார் பறங் கியரைத் திகிலுறுத்துமாறு யாழ்ப்பாணத்தை நாடிவந்தான். செனறற் தன்குடும்பத்தின் தமிழ் இராணிமார்போால் யாழ்ப் பாண அரசுரிமையை வாதாடியதும் இந்தப் படையெழுச்சிக்கு ஒரு நியாயமாயிற்று. அத்தப்பத்து முதலியாரோடு வடகரை யினின்று அனுப்பப்பட்ட சேனையுமெசன்று சேர்ந்துகொண் டது. யாழ்ப்பாணத்துப் பறங்கியர் சிங்களருடைய சேெைவ ள்ளத்தின்முன் எதிர்த்து கிற்கமாட்டாமல் முதுகுகொடுத்து த் தாங்கள் இருந்தவிடங்களே விட்டோடிக் கோட்டைக்குட் புகுந்துகொண்டனர். சிலநாட்களாய்ச் சிங்களரே யாழ்ப்பான த்தில் நிறைசேர்த்து அதைக் கட்டியாண்டனர். இதற்கிடை
யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
யில் சிங்களர் கோட்டையையும் பிடிக்கவருகிறர்களென்ற வத ந்தி பறங்கியரைப் பயப்பிராந்திக் குடபடுத்திக்கொண்டிருந்த து. தெ செயிக்சாஸ் கோட்டையிற் பேசாது பதுங்கியிருந்து விட்டான். ஆயின் பறங்கியருக்கு அதிஷ்டகாலமாய்க் கொழும் புத் தேசாதிபதியாகிய டெசா என்பவன் காம், தெயிக்சேரு எனும் இரு 'திசாவை’மாரின்கீழ் ஒர் பெலத்தசேனையையா ழ்ப்பாணத்துக்கு அனுப்பினன். இதையறிந்த சிங்களர் பச்சி ஆலப்பளியில் அணிவகுத்துகின்றர்கள். பறங்கியச் சூழ்ச்சியாய் ப் போர்முறையை ஒழுங்குபடுத்தி தெயிக்சேரு என்பவன் சி ங்களரின் முன்ன யையும்,காம் என்பவன் பக்கத்தையும், தெ சேயிக்சாஸ் எனும் யாழ்ப்பாணக்கொம்மாண்டோர் கோட்டை யினின்று புறம்போந்து பின்னணியையும் சருவும்படிசெய்த னர். சிங்களர் நடுவில் அகப்பட்டுக்கொண்டு பரிநாசமடைந்தன i. முதலியாரும் பிடித்துக் கொல்லப்பட்டார். கைதிகளாக்கள் பட்டோருட் பலர் குரூரமாய் வதைக்கப்பட்டனர். சிலர்
டிமையாய் விற்கப்பட்டனர். இவ்வெழுச்சியில் தமிழர் பொது வாய்ப் பங்குபற்றியிராவிட்டாலும் பறங்கியர் அவர்களில் 8 யுறவுகொண்டு மீண்டும் ஒருமுறை அவர்களிடம் இராசவிசு
வாசசத்தியங் கேட்டுக்கொண்டனர்.
அப்பால் ஒல்லாந்தர் வரும்வரையில் யாழ்ப்பாணத்தில் போர்க்குரலின்றி எல்லாம் சமாதானமாய் நடைபெற்றது. இ வையில்வாருக, இனிப் பறங்கியர் யாழ்ப்பாணத்தை அரசுபு ரிந்த விதத்தையும் அவர்களால் தேசத்துக்குவிளைந்த நன்மை தீமைகளைப்பற்றியும் சிறிது சொல்லுவாம்.
தேசப்பிரிவுகள்- பறங்கியர் தமிழாசர்களின் பரம்பரை யான முறைகளைப் பெரும்பாலும் மாற்ருது கைக்கொண்டன ர், அரசாட்சிவிஷயத்தில் யாழ்ப்பாணநாடு முன்போலவே வ லிகாமம், தென்மராட்சி, வடமராட்சி, பச்சிலைப்பளிஎனும் நா ன்குபிரிவுகளையுடையதாயிருந்தது. இவற்றேடு தீவுபற்றும்ஒ ன்று. காரைதீவு, டனதிவு (ஊர்காவற்றுறை) புங்குடுதீவு, ப சுத்தீவு (நெடுந்தீவு) பிராமணர்தீவு (நயினுதீவு) டோனகிளா மு (அனலைதீவு) இரணைதீவுகள் எனும் எட்டும் குடியேறிய வைகளாயும், எழுவைதீவு, காட்டுத்தீவு (பறவைதீவு) பாலைதீ வு, கெச்சைத்தீவு (நெடுந்தீவுக்குத் தென்மேற்கு) காக்கைதீவு எனும் ந்ேதும் குடியேருPதவைகளாயு மிருந்தன. இரணைதீவி ல் பறங்கியர்காலத்தி னிற்றிலேயே நெடுந்தீவினின்றும் பறை யர்வந்து குடியேறினர் என்ப.
Page 47
4 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
இலங்கைப்பகுதியிலே (யானையிறவுக்கப்பால்) வன்னி பர்தேசமிருந்தது. இவ்வன்னியர்கள் பெயரளவிலன்றிப் பறங் கியருக்காவது ஒல்லாந்தருக்காவது முற்றும் கீழ்ப்படிந்திருங் தவர்களல்லர், வன்னி கிழக்கே திரிகோணமலையையும் மேற் கே மாதோக்டத்தையும் எல்லையாகக்கொண்டிருந்த விஸ்தா ரமான ஒருபிரிவு. யாழ்ப்பாண அரசரும் வன்னியில் எப்போ தும் இராசரீகம் செலுத்தினரில்லை. ஆயினும் சில ஆரியச்ச க்கரவர்த்திகள் காலத்தில் வன்னிமுழுதும்மட்டுமல்ல புத்தள மீருக மேற்குத்திசையின் கரைதுறைகளும் யாழ்ப்பாண அர சிற் சேர்ந்திருந்ததை "இபன் பற்றுற்று” எழுதிய வாலாறுக ளால் அறிகிருேம். இம்மகமதியபிரயாணி புக்தளத்திசையிற் கண்டு உபசரித்த ஆரியச்சக்கரவர்த்தி அரபிப்பாஷையிலும் வல்லவினுயிருந்தவனகத் தோன்றுகின்றன். அதுகிற்க, பறங் கிக்காார்காலத்தில் வன்னி பின்வருமாறு பிரிக்கப்பட்டிருந்தது.
1. தென்னமாவாடி. இது ஒரு அழகான நாடு. ஆயின் பறங்கியச் சேனைகள் பலகாலும் இதனூடாய்ப் போய் வந்தமை யால் எறக்குறைய மனுஷசஞ்சாரமற்றதாய்ப் போயிற்று.
2. முள்ளியவளை. இதிலே 'வற்கம' 'வலடிடி மேல்பற் று எனும்பிரிவுகள் அடங்கியிருந்தன. இது வன்னிப் பிரிவுகளு ள் அதிவிசேஷம் பெற்றதும் செழிப்புள்ளதுமானது. ஆயினு ம் பறங்கியரின் யுத்தங்களினல் பாழ்பட்ப்ெபோய்க்கிடந்தது. இடத்தின் அசெளக்கியத்தினுல்சனக்குறைவுள்ளதாயுமிருந்தது.
3. கருநாவற்பற்று.
4. பனங்காமம். இதில் உறுகறை வல்வி எனும் பற்றுக் கள் அடங்கும். இது மாதோட்டத்துக்கணித்தா யுள்ளது.
5. பெருங்களி, வோவில்லு, பூநகரி என்னும் ஊர்களைச் சுற்றிய காை துறைப்பற்று இவைகளாம்.
யாழ்ப்பாண இராச்சியத்திலே மன்னரும் அடங்கியிருங் சது. மன்னர்ப்பிரிவிலே மாதோட்டமும் முசலிப்பற்றும் (இ து குதிரைமலைவரைக்கும் விரிந்து கிடந்தது) செட்டிக்குளத்தி ன் ஒருபங்கும் சேர்ந்திருந்தன.
சனங்களின் நிலைமை-ஒருநூறு வருஷத்தின்மேல் இடை யருமல் நடந்து கொண்டுவந்த உள்நாட்டுக் கலகங்களாலும்
யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 75
முக்கியமாய்ப் பறங்கியரோடு செய்த யுத்தங்களாலும் யாழ்ப் பரிணநாடு மிகவும் வலியிழந்து கிடந்தது. சனங்கள் மிக எ ழைகளாய்ச் சீவனுேபாயத்துக்கு வழியின்றி இடர்ப்பட்டனர். பனங்கிழங்கு, பனுட்டு முதலிய நாட்டுப் பொருட்களிலேயே பெரும்பாலும் சீவித்தனர். நெல்வேளாண்மை அருகி அருகிக் கொண்டு வந்தது. பறங்கியர் நெற்செய்கையைச் சற்று ம் ஊக்கித்தாரில்லை. அவர்களுட் சில உத்தியோகஸ்தர்செய்த கொடுமைகளால் சனங்கள் மேலும் மேலும் மிடியுற்றனர். கு ருமார் எவ்வளவாகப் புத்திபுகட்டியும் அவ்வுத்தியோகஸ்தர் செவி மடுத்தாரில்லை. யாழ்ப்பாணத்தில் தண்ணீரின்மை வே ளாண்மைக்குப் பெரும் குறைபாடாயிற்று. வன்னிநாடுகளும் உட்கலகங்களாலும் பறங்கியச் சேனை சென்றழித்தமையினலு ம் பாழ்பட்டு விளைநிலங்கள் செடிபற்றிக்கிடந்தன. குளக்கட் கெள் பறங்கியர் காலத்துக்கு முன்னரே பழுதுபடத்தொட ங்கிக்கொண்டன. மேலுத்தியோகங்கள் பறங்கியருக்கே கொ க்ெகப்பட்டன. பிற உத்தியோகங்களில் வேளாளரும் அகம் படியார் மடப்பளியாரும் அமர்த்தப்பட்டனர், வேளாள முத லிமார் தமிழரசர் காலத்திற்போலவே கீழ்சாதிகளை இறுமா ப்பாய் ஒடுக்கிக்கொண்டுவந்தனர். நழவரும் பள்ளரும் அவ ர்களுக்கு அடிமைகளாயும் கோவியர் வீட்டடிமைகளாயு
ருந்தனர். பறையர் மிகத் தாழ்ந்த தொழில்களுக்கு விடப்பட் டனர். ஆயினும் கிறிஸ்தவர்களாகும் கீழ்ச்சாதிகளுக்கு விசே
ஷ சுயாதீனங்கள் சில கொடுக்கப்பட்டன.
தோம்பு- யாழ்ப்பாணநாட்டின் சகல காணிகளையும் வி ரிவாய்ப் பதிவுசெய்து ஒல்லாந்தருக்கும் தற்காலப் பிரிட்டிஷ் அரசினருக்கும் காணிப்பதிவு விஷயத்தில் முன்மாதிரி காட டிவிட்டவர்கள் பறங்கியரேயாகும். இதற்குப் பறங்கி உத்தியோ கஸ்தர் ஊரூராய்ச்சென்று காணிப்பதிவுசெய்தார்கள். பழை யதோம்பு ஒலேயிலேயே எழுதப்பட்டது என்ப. எம்நாட்டில் அக்காலம் பிரித்துக் கூறப்பட்ட நாற்பது சாதிகளின்பெயரும் அவ்வவர் நாட்டாண் மைக்காாருக்குச் செய்யவேண்டிய ஊழிய வகையும், ஆண்பிள்ளைகள் சகலரும் செலுத்தவேண்டிய 'க டமை” “அதிகாரிவரி” முதலியவைகளும் தோம்பிலேகண்டெ ழுதப்பட்டன. இவ்வரிகள் தமிழரசர்காலத்தில் இருந்தபடி யே குறிக்கப்பட்டன. அரசனுல் கிராமங்களை ஆளநியமிக்கப் படும் அதிகாரிகள் அக்காலம் அரசவேதனம் பெருமல், அதி காரி வரியாலேயே சம்பளமிறுக் கப்படடனர். அதிகாரிவரியு ம் வேளாளர், சாண்டார், தனக்காரர் ஆதிய சாதிகளு க்கே உரியதாயிருந்ததுமன்றி, அதைவிறுப்போர்க்கு ஒர்வகை
Page 48
76 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
விசேஷ பாத்தியதையைப் பெறுவிப்பதுமாயிருந்தது. பண்டார ப்பிள்ளைகள் என்போர் இவ்வரிகளை அறவிடுவார்கள். பலசா திகள் அரசஊழியத்துக் குட்பட்டவைகளாயிருந்தன. இது வே "இராசகாரியம்’ எனப்படுவது. இவ்வூழியங்களின் வகை யும் சாதிகளின் பிரிவும் ஒல்லாந்தர் பறங்கியரைத் அாத்தியவு டனே வரைந்துவைத்த அறிக்கைப்பத்திரத்திற் காணக்கிடக் கின்றன. அவற்றை ஒல்லாந்தர்கால வரலாற்றேடு தருவோம்.
தேசவழமை.- பறக்கியர் யாழ்ப்பாணத்தைத் தேசவழ மையின்படியே பாபாலித்தனர். இத்தேசவழமையே ஒல்லா ந்தர் காலத்தில் விபரமாய் எழுதிவைக்சப்படுவதாயிற்று. முது சொம், சீதனம், தேடிய தேட்டம் என்பனவற்றைப்பற்றிய ஒழுங்குகள் தமிழ் வழமையை அனுசரித்துப் பறங்கியராற் ச ட்ட்மாக்கப்பட்டவைகள். வலிகாமத்திலும் தென்மராட்சியிலு முள்ள சில இடங்களில் தமிழரசர்காலத்தில் வடதேசத்தவ ச் சிலர் வந்து குடியேறியிருந்தனர். இவர்கள் பரதேசிகள் (பிற தேசிகள்) என்னப்பட்டார். பறங்கியர் காலத்தில் இவர்களுக்கு வரி, ஊழியம் முதலியன புறம்பாய் விதிக்கப்பட்டன. தமிழா சர்காலத்தில் இவர்கள் இறக்கும்போது இவர்கள் பொருட்கள் அரசனுடையவைகளாகிப்போம். ஆயினும் இப்பரதேசிகளும் ச ற்றுச்சற்றுய் வேளாளருள் மணமுடித்துக் கலந்து தேசவழ மையின்படியே ஆளப்படுவோராயினர். (Peiris)
அாசிறைவருமானம்.-- புகையிலைவரியாற் பெருந்தொகை அ ாசிறை வந்துகொண்டிருந்தது. யானைகள் விற்றுவரும் ஊதிப மும் ஒரு பெரும் வருவாயாயிற்று. ஆயின் யானை பிடித்து ஒ ப்புவிக்கும் கடனுள்ளோராயிருந்த வன்னியர்கள் பல முறை யும் பறங்கியருக்கடங்காது யானே பிடித்தனுப்ப மறுத்துவிடு வர். வன்னியில் கின்றுவரும் யானைகள் எழுதுமட்டுவாளில் நிறுத்தப்பட்டு, பின் காரைதீவிலிருந்து ஏற்றி அனுப்பப்படும். சாயவேர் இன்னுமொரு அரசிறை வருமானமாயிருந்தது .கா ரைதீவிலும் மன்னரிலும் அவ்வேர் பள்ளரினுற் கிண்டியெடுக்க ப்பட்டது. சிங்கள நாடுகளோடு உப்புவியாபாரமும் நடந்தது. இவற்றேடு ஆயம், அதிகாரிவரி, தலைவரி, கடமை எனும் வ ரிகளும் சேர்ந்து அரசினர்க்கு வருமானமாயின.
தமிழரசர் காலத்தில் மீன்குத்தகை யிருந்ததில்லையெனவு ம், பறங்கியரே முதன்முதல் அதனை வைத்தனரெனவும் மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை கூறுவர். அவர் இக்குத்தகையைச்சுட்டிப் பின்வருமாறு வரைகின்றர். 'பறங்கிகள் மீன்குத்தகையை
பாழ்ப்பாண வைபவ செனழறி. · ፐ°I
விற்று அரசிறையைப் பெருக்க வெண்ணிஞர்கள். அக்குக்த கையை வாங்குவதற்கு வேளாளர் பின்னிட்டாச்கள். அதுசு ண்டு கரையார் அனேகர்திரண்டு தம்முள்ளே ஒருவனே அதி காரியாக்கி அவன்பெயரில் வாங்கிப் பணத்தைச் சேர்த்துச் கொடுத்தார்கள். ஆயினும் பறங்கிகள் எண்ணப்படி பெருள் தொகைக்கு விற்கவில்லை. வேளாளர் அக்குத்தகையை எற்றி ருந்தால், அவருள்ளே தனவந்தர் அனேகரிருந்தமையால் எ னக்கெனக்கென்று விலையேறியிருக்குமென வெண்ணிக் பறங் கிகள் வேளாண்மந்திரியிடத்துச் சிறிது வெறுப்புடையராகிக் கரையாருள்ளும் ஒருவனே மந்திரியாக்கி அவனுக்குக் தொன் பிலிபபு குருகுலநாயகமுதலி என்று பட்டமுங்கொடுத்தார்கள். கடற்றுறை அதிகாரமுழுதும் அவனுக்கே கொடுத்தார்கள். அவன் தனக்குக்கீழுள்ள அதிகாரங்கள், கணக்குவேலைகள், ச ங்காணிவேலைகளை எல்லாம் தன்குலத்தவர்க்கேகொடுத்தான். அதுகாறும் வேளாளரது அதிகாரத்தால் கீழ்ப்பட்டுக்கிடந்த அக்குலம் இவன்காரணமாகச் சிறப்படையத்தொடங்கிற்று. அ வர்களும் அச்சிறப்பினுல் தமது கிளையினின்றும் பிரிந்து தா மொருகிளையாகப் பறங்கிகளுடைய போக்குகளுக்கெல்லாம் இ ணங்க நடந்துவந்தனர். முதலியென்னுஞ் சிறப்புப்பெயர் ப ண்டைக்காலமுதல் வேளாளருக்கே உரியதாயிருந்தது. பறக் கிகள் அதன்ைக் கரையாருக்குமாக்கினர். தமிழரசர்காலத்தில் மந்திரி, இலிகிதர் முதலிய உத்தியோகங்களி லிருந்தவர்கள் பெரும்பாலும் வேளாண்முதலிகள். அதுவற்றிப் பறங்கியாச ஒல்லாந்தவரசுகளிலும் அவ்வுக்கியோக முடையவரெல்லாம் முதலியாரெனப்பட்டனர். பின் அவ்வுத்தியோகமும் முதலி யுத்தியோகமெனப்பட்டது. வன்னியர் ஆண்டவிடத்துக்கு வ ன்னியென்னும் பெயர்வந்தது. அவ்வன்னியரையடக்கி அல்வ ன்னியைக் கைக்கொண்ட வேளாளர் வன்னியனுரெனப்ப்ட்டா ர்கள். இதுவே வன்னியருக்கும் வன்னியணுருக்குமுள்ள வே ற்றுமை.”
பிாசாபரிபாலணம்- பறங்கியர் பொதுவாக மற்றைய 8 ரோப்பிய சாதியாரைப்போலாது சுதேசிகளுட் பெரியோரா யிருந்தோரை வெகு கண்ணியமாய் நடத்தினர். தமக்கென வுை த் தக்கொண்ட உயர்ந்த உத்தியோகங்களைபொழிந்த பிற உ த்தியோகங்களை நாட்டிலே விசேஷித்தோரரபிருந்த மதுஷரு க்குக் கொடுத்தனர். யாழ்ப்பாணத்தில் அன்றுதொட்டிருந்த அடிமையாட்சியை அவர்கள் அழித்துவிடாதிருந்தாத்ரம், கிறீ ஸ்துமார்க்கத்தைத்தழுவிய அடிமைகளுக்குப் பல செளகரிய
2.
Page 49
8 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ங்களைச்செய்வித்துத் தங்கள் சமயபோதனையின்படி சுதேசிச ள் சகலரையும் சமயவிஷயத்தளவில் தங்களோடு ஒருபடியி ல் வைத்துகோக்கினர். சுதேசிகளோடு விவாகசம்பந்தம் கல. க்கவும் பின்னிட்டாரில்லை. பெரிய உத்தியோகஸ்தரான பறங் கியர் சிலர் யாழ்ப்பாண உயர்குலவேளாளருட் பெண்ணெடுத் ததுமுண்டு. உயர்குலவேளாளரும் சிலர் பறங்கியர்பெண்களை வதுவைசெய்துகொண்டனர். பறங்கியர் ஈற்றில் வலியிழந்து போனமைக்கு இதனை ஒர் காரணமாக எடுத்தோதுவாருமுண் .ெ யாழ்ப்பாணப்பட்டினத்தில் ஒலிவேரு தன்செலவில் ஒர் த ருமசாலை (Miserlcordia) அமைக் கிருந்தான். அது கிரகஸ்க ர்களான சில “சகோதரர்கள்’ பொறுப்பில் விடப்பட்டிருந்த து. இவர்கள் எழைஎளியவர்களுக்கு உதவியும் கைமைகளுக் கு ஆதரவும் அநாதர்களுக்கு உடை உணவுகளும் அளித்து
வந்தார்கள்.
ஆயினும் பொருளாசைகொண்ட சில பறங்கியுத்தியோ கஸ்தர்களால் ஏகதேசம் சனங்களுக்கு இடர்வருவிக்கப்பட்ட துமுண்டு. இவர்களால்வந்த இடர்களைக் குருமார் மேலதிகாரி களுக்கு ஒலமிட்டு ஒருவாறு தீர்த்துக்கொண்டிருந்தனர். பற ங்கியர் ஆதியில் யாழ்ப்பாண நாட்டாரால் மிகத் துவேஷிக்க ப்பட்டாரேயாயினும் அவர்கள் ஆளுகையினிற்றில் அத்துணைத் துவேஷத்துக்குக் காரணமிருக்கவில்லை. ஆயினும் மிகக் குறு கியகாலவெல்லையுள் அவர்கள் இராச்சியத்தையிழந்து நீங்கிவி ட்டமையினற்போலும் அவர்கள் பெயர்மேல் இன்றைக்கும் ஆங்காங்கு அபவாதம் நிகழ்த்தப்படுவதாகின்றது.
இவ்விதமே யாழ்ப்பாணச்சரித்திர நூலாசிரியர் எழுதிய தாவது, 'அவர்கள் இராச்சியஅவாவும் பொருளாசையும் கி நீஸ்துசமயாபிமானமுமன்றி மற்று நீதியும் கருணையும் சிறி துமில்லாது தமிழ்க்குடிகளையும் சிங்களக்குடிகளையும் வனமி ருகங்களைப்போலமதித் தாசுசெய்யத் தலைப்பட்டார்கள்” என் முர். இதைச்சுட்டிச் சக்தியவேதபாதுகாவலனிற் பின்வருமா று எழுதப்பட்டது. "இக்கூற்றை மெஸ். முத்துத்தம்பிப்பிள் ளை பிற ஆசிரியர்களிடமிருந்து ஆராய்வின்றி யெடுத்திருக்க வேண்டும். தாமே பறங்கியர்சரித்திரத்தை ஆராய்ந்து எழுதி யவரென்முல் இப்படி எழுதியிருக்கமாட்டார். பறங்கியருள் உள்ள படியே பொருளாசை முதலியவுள்ளோர் சிலர் இருந் கார்களென்ருரல் அது ஒக்கும். எல்லாரும் அப்படிப்பட்டவர்க ளென நாம் விளங்கவைத்தெழுதுவது உண்மைக்கு ஒவ்வாது. எல்லாரும் பொருளாசைக்காரராயிருந்தால் கிறீஸ்தவரானுேரு
யாழ்ப்பாண வைபவ கௌமுதி. g
க்குப் பொன்னவாரியிறைத்தவர்கள் யார்? அப்பால் தமிழ்க் குடிகளை வனமிருகங்களைப்போல் மதித்தவர்களென்முல் அவ ர்களைக் கிறீஸ்தவர்களாக்கவேண்டுமென்று அபிமானங்கொண் டதெப்படி? தமிழரசரின்கீழன்றே சிலசாதிகள் வனமிருகங் களைப்போல் மதிக்கப்பட்டன. எல்லாச்சாதியாரும் சகோதர ர்கள் தாம் என்றும், எல்லாக்குடிகளும் தங்களோடு ஒருவே தமும் ஒருவழிபாம்ெ உள்ளவர்களாக வேண்டுமென்றுகி கூறி, பிள்ளையவர்கள் தாமேயும் சொல்லியிருக்கிறபடி சாதியொற் றுமையையும் சமயவொற்றுமையையும் உண்டாக்க உழைத்த பறங்கியர் நம்மவரை வனமிருகங்களைப்போல நடத்தினரெனில் அதுபொருந்துமா? பறங்கியர் கொண்திவந்த கத்தோலிக்கவேத ம் தமக்கு வெறுப்பாகையாலோ பிள்ளையவர்கள் அவர்களது ஆளுகையிற் குறைகூறுகிருரர். ஒரு சிறிதுவேளைக்கு 'கியாயம் பேசுவதற்கு மாத்திரம்” பிள்ளையவர்கள் கதலிக்கவேதங்தான் மெய்யானமார்க்கமென்று வைத்துக்கொண்டு அந்தஎண்ணத் தோடே பறங்கியர்செய்தவைகளைப் பார்ப்பாராயின், உடனே அவர்கள் மெய்யானவே தம் உலகமெங்கும் பாம்பவேண்டுமெ ன்ற அவாவும், அதன்பொருட்த்ெ தணியாத உதாரகுணமு ம், அபிமானமும் உள்ளவர்களாகி, தம்குடிகளை நீதியோடும் கருணையோடும் பரிபாலித்துத் தம்சகோதரரைப்போல மதித் து நடத்தத் தலைப்பட்டார்கள் என்றுகண்டு அவ்விதமே எ ழுதியுமிருப்பார்” இதுவரையும் மேற்கோள்.
சமயத்தைப்பரப்பியமுறை.- ஆயின் பறங்கியர் தம்சமயத் தை வலிந்து பாபபினான்றேவெனில் இவ்விஷயத்தில் அக் காலச்சாடசிகளை ஆராய்ந்துபார்த்து முடிப்போம். பறங்கியர் வேதத்தைப்பரப்பினமுறை இது. தாம் ஒர்பட்டணத்தைப் பி டித்துக்கொண்டவுடன், அதற்கு ஒர் எல்லைகுறித்து, فقہ ہے வெல்லைக்குள் 'மகமதியர்” “விக்கிரகாராதனைக்காார்” ஆகியோ ருள் ஒருவரும் இருக்கப்படாதென்று பறைசாற்றுவிப்பர். எ ல்லைக்குளிருக்க விரும்புவோர் கிறீஸ்தவர்களேயாகவேண்டிய து. தம்காடுகளுள் பிறசமய ஆலயங்களையும் விடார். அப்பா ல் தமதாளுகைக்குட்பட்ட நாடெல்லாம் பிறசமயத்தவர்களு டைய பிரசித்த கொண்டாட்டங்களை விலக்குவாரேயன்றித் த னித்தனியே பிரசைகளின் மனச்சாட்சியைக் கண்டிமைப்படு த்தார். ஆயின் தமது ஆலயங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைதோ றும் சென்று பிரசங்க எகேட்கும்படி சகலருக்கும் கட்டளை பண்ணுவர். சனங்களைப் பிரசங்கங்கேட்கக் கவர்ந்திழுக்குமா ஆறு குருமார் பல சூழ்ச்சிகளைக் கையாடிவருவர். ‘வசனம்’ * வாசகப்பா’ 'நாடகம்” “பாசு’ எனத் தற்காலம்வழங்கும்
Page 50
30 யாழ்ப்பாண வைபவ கேளமுதி.
காட்சிகள் அக்காலத்தில் இதற்காக ஆரம்பிக்கப்பட்டன. ஈம் கைக்கெட்டிய சகல சாடசிகளின்படியேயும் பறங்கியர் போத கத்தினலேயே சனங்களைப் பெரும்பாலும் கிறீஸ்தவராக்கத் தேடினர். வாயினுற்செய்த போதகத்தோடு அச்சிட்ட நூல் கள்மூலமாயும் கிறீஸ்துசமயம் பரப்பப்பட்டது. இத்தமிழ்நூ ல்கள் கொச்சியில் பறங்கியர் ஸ்தாபித்த இயந்திர சாலையில் அ ச்சிடப்பட்டன. சிறுபான்மை உத்தியோகங்களையும், கிறீஸ்த வாாவோருக்கு வரிகள் குறைக்கப்படுதலாதிய வேறு சிலாக் கியங்களையும் அளித்து இவற்ருலும் சனங்களின் மனங்களைக் கவரப்பார்த்தனர். பள்ளிக்கூடங்களிலும் வேதம் கற்பிக்கப்ம ட்டது. முன்று வெவ்வேறு கூட்டமான கத்தோலிக் சகுருமா ர் ஒயாது பிரயாசப்பட்டு உழைத்துச் சனங்களைத் தம்சமயத் திம் சேர்த்துக்கொண்டிருந்தனர். இவையே உண்மைச்சம்ப வங்கள். இவ்விஷயத்திற் பறங்கியர் செய்தமையையெல்லாம் எ ல்லாரும் ஒப்பார். ஆயினும் இதிலே தற்கால நூலாசிரியர்க ள் சிலர்கூறும் அத்துணைப்பழியைப் பறங்கியர்மேற் போடுவ து திேயாகாது. மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை கூறுவது:-
“பறக்கியர் சனங்களையெல்லாம் கிறீஸ்தவர்களாகுமாறு நெருக்கினர். அதுசெய்யாதாாை ஒறுத்தனர். அவர்கள் பொ ருளைக் கவர்ந்தனர். கிறீஸ்தவராயினருக்குப் பலவித உத்தி யோகங்களைக் கொடுத்தனர், அவர்கள் தண்டத்துக்கஞ்சி அக த்தே சைவராகவும் புறத்தே கிறீஸ்தவராகவும் நடிப்பார் பல ராயினர். கிறிஸ்தசமயப் பிரவேசஞ்செய்யோமென உயிர்விடு த்தாரும் அநேகர். அக்கியதேசஞ்சென்ருரும் அனேகர்’ எ ன்கின்ருர், இக்கூற்றைப் பரிசோதித்துச் சத்தியவேதபாது காவலன் பின்வருமாறு எழுகிற்று. 'இது மெஸ். முத்துத்த ம்பிப்பிள்ளையின் கூற்று. இக்கூற்றுக்கு ஆதாரங்காணுேம். வை பவமாலை பறங்கியர் தங்கள் ஆதீனப்பட்ட நாட்டிலிருந்த கோ யில்களை இடிப்பித்தனரென்பதையன்றி யாரையாவது கிறிஸ்த வாாகும்படி நெருக்கியதாகக் கூறவில்லை. பறங்கியர் தங்கள் சமயமே மெய்யான கடவுள்வழிபாடென்றும் பிறவழிபா டெ ல்லாம் பொய்த்தெய்வ வழிபாடென்றும் எண்ணியிருந்தனர். அன்றியும் அடிப்படுத்தப்பட்ட நாடுமுழுதும் தங்கள் ஆதீன மென்றதின்பேரால் அதிலே பொய்த்தெய்வங்கள் (எனத் தாம்ம கித்தவைகளுக்குப் பிரசித்தமாய் ஆராதனை நடத்தவும் அவ்வா சாதனேக்குரிய பிரசித்த தலங்களிருக்கவும் இடங்கொடாதொழி கேனர். இது அவர்கள் தேசக்கட்டுப்பாடுகளில் ஒன்று, மன ச்சாட்சிவிஷயத்திலோ எவரையும் நெருக்கினரல்லர். இங்கின மிருக்க “கிமீஸ்தவராகாதாரை ஒறுத்தனர். அவர்கள்பொரு
யாழ்ப்பாண வைபவ கௌமுதி. 81
ளேக் கவர்ந்தனர்' என மெஸ், முத்துத்தம்பிப்பிள்ளை கூறிய து பறங்கியர்மேற் பழிபோடுகிற ஒருகூற்று. இக்கூற்றை ஸ் தாபிக்கப் பிள்ளையவர்களா லியலுமா? வேறேரிடத்தில் ஒல் லாந்தரைப்பற்றிப் பேசும்போது பிள்ளையவர்கள் அவர்கள் *பறங்கிகளைப்போல அச்சுறுத்தியாயினும் மதஸ்தாபனஞ்செ ய்யாது குடிகளாயுள்ளவர் வலிந்து போய்ச்சேர்ந்து கிறீஸ்த" வாாதற் கேதுவான கொலைத்தண்டனையும் பிற துன்பங்களு மாகிய தீயஉபாயங்களால் தம்மதத்தைப் பரவச்செய்தார்கள்” என்கின்ருர் (84-ம் பக்.) ஆகவே பறங்கியர் சமயத்துக்காகக் கொல்லவில்லை, தண்டிக்கவுமில்லை என்றதாயிற்று. இது சற்றே வாசி. ஆயினும் பறங்கியர் எவரையாவது கிறீஸ்தவசாகும்படி அச்சுறுத்தியதையும் அக்காலத்துச் சரித்திரங்களிற் காணுே ம். கிறிஸ்தவராயினருக்குப் பலவித உத்தியோகங்களைக்கொடு த்தனர்' என்றது முழுதும் மெய். டொம் யுவாம் எனும் போ ர்த்துக்கீச அரசர் பறங்கியருக்கிட்ட கட்டளையிலே, எவரையா வது அவர்கள் வலிந்து கண்டனை தண்டனைகளினுல் கிறீஸ்தவ ாாக்கப்படாதென்றும்கிறீஸ்தவராவோருக்கு உத்தியோகங்களு ம் பொன்னும் ஏராளமாய்க் கொடுக்கலாமென்றும் சொல்லியி ருக்கிறது. கோவையிலே கூடிய திருச்சபைச் சங்கங்களும் எ வரையும் வலிந்து வேதத்திற் சேர்க்கப்படாதென்று மீட்டும் மீட்டும் விதித்திருக்கின்றன. சேர் தென்னெறும் இதை ஒப்பியி GöğGa?i (Christianty ın Ceylon p 7, 8) Gutgörârugü, eği தியோகங்களையும் கிறீஸ்துவராவோருக்கு வழங்கும்படி கட்ட ளேயிருந்ததென்குேம். அப்பொன்னையும் உத்தியோகத்தையும் தேடியே சகல அபிமானத்துக்கும் மேலாகப் பொன்னை அபிமா னிக்கும் குணமுடையோராகிய தமிழருள் “அகத்தே சைவரா கவும் புறத்தேகிறீஸ்தவராகவும் நடிப்பார்டலாாயினர்”என்றுதோ ற்றுகிறது. இதற்கு இன்றைக்கும் சிலவிடங்களிலே உதாரண ம் காணலாம். ஆயின், "கிறீஸ்தசமயப் பிரவேசஞ் செய்யோமெ ன உயிர்விடுத்தாரும் அனேகர்’ என்றது உண்மையல்ல. ஏனெ னில் மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை தர்மே ஒத்துக்கொண்டிப டி (84 பக்) பறங்கியர் கொலைத்தண்டனையும் பிற துன்பங்களு மாகிய தீயவுபாயங்களால் தம்மதத்தைப் பரவச்செய்தார் இல் லை. கொல்வாரில்லாதபோது கொலையுண்பாருமில்லையன்ருே.”
*யாழ்ப்பாணச் சரித்திா’த்தைப்பற்றிச் சத்தியவேதபாது காவலனில் மேற் காட்டியவை எழுதப்பட்டன என்றுேம். நூ லாசிரியர் தம் இரண்டாம் பதிப்பிலாதல் சுட்டிய குறைகளைக் திருத்தாதொழிந்தமையால் அவற்றை இங்கு எடுத்துக்காட்ட ல் அவசியமாயிற்று என்க.
Page 51
S2 யாழ்ப்பாண வைபவ கெனமுதி,
சைவ ஆலயங்கள்.-சமய அலுவலிற் பறங்கியர் யாழ்ப்பா ணத்தாசைத் துன்புறுத்தாவிடினும் நம்மவரின் மனதைத் தீடீ ரெனப் புண்படச்செய்த வேருெரு கருமத்தை இழைத்துவிட் டார்கள். அது யாதேனில், இங்காட்டில் ஆங்காங்கு விளங்கிய சைவசமய ஆலயங்களை ஒன்றும்விடாது இடிப்பித்தமையாம். ஒலிவேரு யாழ்ப்பாணத்தில் பெரிதும் சிறிதுமான 500-சைவ ஆலயங்களை இடிப்பித்தானென்றதை வவனுக்கோர் புகழ்ச்செ ய்தியாகப் பறங்கியர் எழுதிவைத்திருக்கின்றனர். இதனைச்சுட் டி மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை எழுதுவது:
இவ்வளவிலே இடங்கடோறும் உங்கத விசித்திர கோபுர ங்களோடும் மதில்களோடும் விளங்கி யாழ்ப்பாணநாட்டைச் றப்பித்து கின்றனவும், 1,500 வருஷகாலமாகத் தமிழரசரும் பிரபுக்களும் பெருகிதிகொண்டு கிருமித்துப் பாதுகாத்துவந்த னவுமாகிய ஆலயங்களையெல்லாம் பறங்கிகள் கைசிறிதுங் கூசா து தகர்த்துச் சித்திசமணஞ் சிறிதுமில்லாத நாடாக்கிவிட்டார்
sa
"அவர்களால் இடிபட்ட விசித்திாாலங்காரமான் பெரிய ஆல பல்கள் இவைமாத்திசமா? 1622 ல் கிரிகோணமலையிலே சுவா மிமலைமேலிருந்த மகோக்ருதமானதும் அதிவிநோதசித்திர சி ற்பாலங்காாக்கள் அமைந்ததுமாகிய கோபுரத்தோடுகூடிய ஏ ழுமதிலும் அனேக மண்டபங்களுமடங்கிய சிவாலயத்தையுங் தகர்த்துவிட்டார்கள், 1552-ல் சீதாவாக்கையில் தினமொன்று க்கு இரண்டாயிரஞ் சிற்பர்கூடி வேலைசெய்தால் இருபதுவருஷ த்திலும் மூடித்தற்கரிய மகத்தான அற்புதாலங்காரமான கரு சிகல்லுத் திருப்பணியுடையதென்று பறங்கிச் சரித்திரகாான் தானேபாராட்டிய சிவாலயத்தையும் இடித்தொழித்தார்கள். தேவேந்திரபுரமெனக் காலிக்கப்பாலுள்ள இடத்தில் (Dondra) பொன்மயமான சிகரங்களோடு கூடி உயர்ந்து வானளாவிய கோபுரங்களையும், மூடுபளவுடைய தோரணமண்டபங்களையும், அனேக விசித்திரமான உள்மண்டபங்களையும் உடையதாய்க் க டல்மேற் செல்வோர் கண்களையும் கவர்ந்து இலங்கையைச் சி றப்பித்துகின்ற விஷ்ணுவாலயத்தையுங் கைகூசாது இடித்தழி த்து விட்டார்கள். அவர்கள் இலங்கையிலுள்ள செல்வத்தைக் கவர்ந்தது மன்றி இலங்கையின் செயற்கை யழகெல்லாவற்றை யும், அழகைக்கண்டதிசயித்துக் கண்ணினல் ஆனந்தங்கொள்ள அறியாத பிசாசகள் போல அழித்து மகிழ்ந்தார்கள்.”
மெஸ், முத்துத்தம்பிப்பிள்ளை இவ்வாறு எழுதியது சற்
யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 83
றே அதிசய உக்தியாய்க் கூறப்பட்ட கூற்றெனச் 'சத்திய வேதபாதுகாவலன்’ பின்வருமாறு காட்டிற்று.
*பறங்கியர் உள்ளபடி ஆயிரக்கணக்கான தமிழரையும் சிங்களரையும் கொன்றும், சித்திரவதைசெய்தும், சைவபுத் தாலயங்களை இடித்தும் அனுசாரப்படுத்தியு முள்ளவர்களன் ருே எனில், அதுவும் மெய். இப்படி அவர்கள் செய்ததற்கு க் காரணம்யார்? தமிழரும் சிங்களருமே காரணர். பறங்கிப் ர் முதன்முதல் இலங்கைக்குவந்தது தற்செயலாக. தர்மபரா க்கிரமவாகு எனும் கோட்டை அரசன் அவர்களோடு உடன்ப டிக்கைசெய்துசொண்டு அவர்கள் கொழும்பில் ஒர் பண்டகசா ஆலகட்ட இடங்கொடுத்தமையினலேயே பறங்கியச்வந்து கொழு ம்பிற் றங்கினர். பின்பு படடத்துக்குவந்த புவனேகவாகுவும் அவன்பின் தர்மபாலனும் தங்கள் சத்துருக்களான மாயாது ன்னை இராசசிங்கன் என்றவர்களுடைய எதிரிடைக்காற்ருமல் போர்த்துக்கீச அரசைச் சரணடைந்தமையினலேயே பறங்கி யர் கொழும்பில் கோட்டையொன்றுகட்டத் தூண்டப்பட்டா ர்கள. தர்மபாலன் சந்ததியின்றியிருந்தமையால் மரிக்குமுன் தன் இராச்சியத்தை அதுவரைக்கும் தன்னைப் பாதுகாத்துவ ந்த போர்த்துக்கீச அரசர்க்குத் தத்தம்பண்ணி இறந்தான். இதல்ை கோட்டை இராச்சியம் பறங்கியருக்காயிற்று. மாயா துன்னையும் அவன்மகன் இராசசிக் கணும், இவர்களின்பின் வி மலதர்மனும் பறங்கியரை அவர்கள் ஆதீனத்தினின்று துசத் திவிடும்படியாகத் தொடுத்த போர்களினிமித்தமே சிங்களர் ஆயிரக்கணக்காக மடியலாயினர். பறங்கியரைக் கண்டியார் ப லமுறை சதிமானமாக அகப்படுத்திக் கொல்ல, பறக்கியரும் கண்டியாரைக் கண்டவிடமெல்லாம் துண்டித்தனர். கண்டியா ர் பறங்கியரைச் சித்திரவதைசெய்யப் பறக்கியரும் அகப்பட் ட கண்டியாரைச் சித்திரவதைசெய்தனர். இது அக்காலமட் டுமல்ல இன்றைக்கும் நடந்துவருகிற போரொழுக்கம். இவ் வொழுக்கம் தீயதென்று சொல்லிற் சொல்லலாம். ஆயின் இராச்சியங்களுக்குள்ளே அன்றுதொட்டு இருந்துவந்த ஒர் ஒ ழுக்கத்தின்படிமட்டும் செய்த பறங்கியரை அதற்காகத் தூற் றுவது தகாது. இங்கிலீசர்தாமும் இப்படியும் இதிலும்மோச மாயும் இலங்கையிலே செய்ததை Marshal's Ceylon 200-ம் பக்கமுதற்காண்க. மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை எடுத்துக் க. றியிருக்கிற பெறெண்டிகோவில் (வைரவஜண்டி) அழிக்கப்ப ட்டது மாயாதுன்னையோடு பறங்கியரும் கோட்டிையரசனும் கூடிச்செய்த போரிலாம். தீவாந்த முனையிலிருந்த (Dondra) ஆலயம் அழிக்கப்பட்டது இராசுகிங்கன் கொழும்பை முற்று
Page 52
S4 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
கையிட்டிருந்தபோதாம். அங்காட்களில் அவனைத் துன்புறுத் தும் நோக்கமாகவும் சனங்களுள் திகிலை உண்டுபண்ணும்ப டியும் பறங்கிச்சேனைகள் பலமுறை முற்றுகையிடப்பட்டிரு ந்த கோட்டையினின்று தென்திசையாற் புறம்போந்து அக் கரைதுறைகளில் அகப்பட்டவைகளையெல்லாம் வாரி அள்ளிக் கொண்டும் கட்டிடங்களைத் தரைமட்டமாக்கியும் சென்றனர். உலகத்தில் நடந்த பெரும் போர்களிலெல்லாம் இதற்கொத்த ஒழுக்கமே நிகழ்ந்தது. வெற்றியாளர் பட்டணங்களை எரியூ ட்டுவதும், கட்டிடங்களைத் தரைமட்டமாக்குவதும், நிலத்தில் உப்புவிதைப்பதும் முதலியவரலாறுகள் பழஞ்சரித்திரம்படித் தோர் அறிந்தவை. போரிலேசேர்ந்த வரலாறுகளாகப் பறங் கியர் செய்தவைகளின் நிமித்தம் அவர்கள்குணத்தை ஒருங்கே குறைகூறுவது மரபாகாது. புக்தர் சைவாலயங்களை இடித்து த் தரைமட்டமாக்கிச் சைவருக்குச்செய்த கொடுமைகள் கொ ஞ்சமா? சைவர் புத்தாலயங்களை இடித்துத் தரைமட்டமாக்கிப் புத்தருக்குச் செய்தகொடுமைகள் கொஞ்சமா? சிங்களச் சரி த்திரத்திலே இவைகளைப் பரக்கக்காணலாம். சகோதர சம பங்களுக்குள்ளே இவ்வளவு குத்துமல்லிருப்பதை யறிந்து யோசித்தால் பறங்கியர்செய்தவை இவ்வளவுபெரிதாகத் தோ ற்றமாட்டா.
*யாழ்ப்பாணத்தில் பறங்கியர் உட்பட்டவிதமும் கவனிக் கப்படத் தக்கது. அவர்கள் இராச்சியஅவாவின்பொருட்டு இ ங்குவந்தாரில்லை. சங்கிலியனே அவர்களுக்குக் கோபம்மூட்டி னவனுணுன், அவர்களுடைய கப்பல்களைக் கொள்ளையடித்தது ஒருகாரணம். மன்னுரிற் கிறிஸ்தவரானேரில் அறுநூற்றுவரு க்கு மேற்பட்டோரையும் தன்சொந்தக்குமாரனையும் கொன்றது விசேஷித்தகாரணம். இராச்சியத்திற்குரியவனுன பரநிருபசிங் கன் அவர்களைச் சென்றழைத்தது மேலும்விசேஷித்தகாரணம். யாழ்ப்பாண அரசனை அவர்கள் 1590-ல் வென்றபோதிலும் தி றையாசனுெருவனே வைத்தார்களேயன்றித் தாமாக யாழ்ப்பா ணத்தை ஆளவில்லை. இவ்வரசன்மகனேச் சங்கிலிகுமாரன் வ லிந்து சிங்காசனத்தாற் றள்ளியபோதே பறங்கியர்வந்து அவ னைப்பிடித்துக் கோவைக்கனுப்பிவிட்டு யாழ்ப்பாண நாட்டை ஏற்றர்கள், சங்கிலியன் கொடுமையாலும், சங்கிலிகுமாரனின் வஞ்சனையாலும் மடிந்த தமிழருக்குப் பறங்கியர் பாத்தியக்கா ாரல்ல. இனி, போரின் பின் நாடு தமதானபோதும், சைவ ஆலயங்களை இடித்தார்களேயெனில், அவர்களுடைய மனச் சாட்சிப்படி அச்செயல் புண்ணியச்செயலாகவேயிருந்தது. நம் நாட்டுக் கே வர்களெல்லாம் பொய்த்தெய்வங்களென்றும் பெர
யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 85
ய்த்தெய்வ வழிபாடு கடவுளுக்குப்பொருந்தாத மகா துரோக மாகையால் அவருக்குப் பயப்படும் அரசரெல்லாம் தம்காடுக ளில் அவ்வழிபாடும் அவ்வழிபாட்டுக்குரிய தலங்களும் பிரசி த்தமா யிருக்கவிடா தொழிக்கவேண்டுமென்றும் எண்ணியே பறங்கியர் சைவ ஆலயங்களை இடித்தழித்தமையால் அதன்கிமி த்தம் அவர்களைக் கொடியவர்களென்பது பொருந்தாது. சரி த்திரமெழுதுவோர் சமயதாக்கத்தில் புகுதல் சரியன்று. ஆ தலால் அவரவர்செய்தவைகளை அவ்வவர் கருத்தோடொட்டி எழுகிக்காட்டுவதோ டமைத்துவிடுவதே தர்மமாகும். நடுநிலை யுள்ள சரித்திராசிரியர் பின்வருமாறு கருத்தமைத்து எழுது வரென்று எண்ணுகிறேன். பறங்கியருடைய சமயகொள்கை களைப்பற்றி ஆராய்வதற்கு இடம் இதுவன்று. ஆயினும் அவ ர்தஞ்சமயமேமெய்ச்சமயமென்று எண்ணிக்கொண்டவளவில் அ ச்சமயத்தைப்பற்றிய அபிமானத்தை வியப்புக்குரியவிதமாய்க் காட்டிக்கொண்டுவந்தனர். பொய்ச்சமயத் தளிகளெனத் தாம் மதித்த சைவ ஆலயங்களையெல்லாம் தரைமட்டமாக்கி அவற்றி டமாகப் பல கத்தோலிக்கவேத ஆலயங்களையும், குருமனை களையும், பாடசாலைகளையும் அமைத்து, குடிகளனைவரும் பே தமின்றித் தமதுசமயத்திலே சேர்ந்தொழுகவேண்டுமென்னு ம் பேரவாவினல் உந்தப்பெற்றுப் பொருள்விரயத்தைப்பாரா து பொன்னஅள்ளிஇறைத்தும் சுதேசிகளென்றுபாராது மே ல்தர அரசாட்சிஉத்தியோகங்களையும் கருணையோடு கொடுத் தும் கிறிஸ்துவரானேரை ஊக்கித்துவந்தனர். என்று இவ்வா று எழுதிக்காட்டிப் பின் வேண்டுமானல் சைவாலயங்கள் அ ழிந்தொழிந்தமையைப்பற்றியும் ஒருவராவது எதிர்த்துகின்று சைவத்துக்காகச் சீவனைவிடாமல் ஊரெல்லாம் கத்தோலிக்க ாாகியதைப்பற்றியும் பிரலாபித்து, பூர்வ சைவாலயங்களின் அ ழகுகன் மனம்போல் எடுத்துச்சொல்லுவது குறையாகாது.” இதுவரையும் “சத்தியவேத பாதுகாவலனிற்’கண்டது.
பறங்கியர் நம்தேசத்துச் சமயங்களுக்குத் தீராக்கேட்டை யும் அச்சமயங்களைக் கைக்கொண்டொழுக விரும்பியோருக் கு மாருத்துயரையும் வருவித்தார்களென்பது நிச்சயம். ஆயி லும் மேற்கண்டபடி அவர்கள் நடபடிக்கைகளை அவர்கள்கொ ண்ட கொள்கைகளோ டொட்டி நோக்கும்போது நமக்குப்பெ ரும் கொடுமைபோல இக்காலந்தோற்றும் ஒழுக்கத்திற்கும் ஒர் தக்கநியாயம் இருந்ததெனக் கண்டுகொள்வோம்.
கத்தோலிக்க ஆலயங்கள்- பறங்கியர் சைவாலயங்களை இ
13
Page 53
86 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
டித்தொழித்ததின்பின் தம்சமயஆலயங்களை ஆங்காங்கு மிக அ ழகாக அமைப்பித்தனர். பல்டேயஸ்பாதிரியார் 1658-ம் ஆண் வெரையில் தாம் யாழ்ப்பாணத்திற்கண்ட பறங்கியர்கோவில் களிற் சிலவற்றைத் தமது இலங்கைச்சரித்திரத்திலே சித்திரி த்துக் காட்டியிருக்கின்றர். அவை யாழ்ப்பாணத்தில் எங்கு மில்லாத அழகுவாய்ந்தவைகள். அவற்றின் அருகில் இருந்த குருமனைகள் ஏறக்குறைய எல்லாம் இரு மெத்தைவீடுகளாய்
வெகுஅலங்காாமானவைகளாய்க் காணப்பதிகின்றன.
பறங்கியர் யாழ்ப்பாணநாட்டை 32 கோவிற்பற்றுக்களாக வகுத்து ஊருக்கொவ்வொரு கோவிலெழுப்பியிருந்தனர். ஒவ் வோர் கோவிலிருந்த பிரிவைக் குறிக்கும்படியே 'கோவிற்ப ற்று” எனும் பெயருண்டாகி இக்காலம்வரையில் வழங்கப்படு கிறது. அக்கோவிற்பற்றுக்கள் பின்வருவன.
வலிகாமப்பற்றில்,
தெல்லிப்பழை வட்டுக்கோட்டை வண்ணுர்பண்ணை மல்லாகம் பண்டத்தரிப்பு சுண்டிக்குளி மயிலிட்டி சங்கானே கோப்பாய் அச்சுவேலி மானிப்பாய் புத்தூர் உடுவில் நல்லூர் ஆக.14
தென்ம்ராட்சிப்பற்றில்,
காவற்குளி கச்சாய் எழுதுமட்வொள் சாவகச்சேரி வாணி ஆக.5
வடம்ராட்சிப்பற்றில்,
கட்டைவேலி உடுப்பிட்டி பருத்தித்துறை
ஆக.3 பச்சிலைப்பள்ளிப்பற்றில்,
புலோப்பளை தம்பகாமம் முள்ளிப்பற்று முகமாலை ஆக.4 தீவுபற்றுக்களில் ஊர்காவற்றுறை வேலணை புங்குடுதீவு அல்லைப்பிட்டி காரைதீவு நயினுதீவு
«ტს,45. . .ნ
ஆகத்தொகை.82
யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 8ሽ
இவையன்றி வன்னிநாட்டைச்சார்ந்த பூநகரி, பல்லவரா யன் கட்டு, பெருங்களி, மாந்தை, நானுட்டான், அரிப்பு முதலி யவிடங்களிலும், ஊருக்கொருகோவில் இருந்தது. மன்னர் எ ழுகோயிற்பற்முகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை சீதாதி, (இ து பட்டினம் என்றர்த்தமுள்ள ஒரு பறங்கிப்பாஷைச்சொல்) தோட்டவெளி, கரிசல், எருக்கலம்பிட்டி, சம்பேதுரு, பேசா லை, தலைமன்னர் என்பவைகள். இவையொவ்வொன்றிலும் ஒ வ்வொரு கோவிலிருந்தது. கோவிற்பற்றுக்குரிய ஆலயங்களை த்தவிர (Parish Churgh) அவ்வவ்வூரில் வேறு பல சிறுஆலயங் களுமிருந்தன. மாகியப்பிட்டி, தொண்டைமானறு, கிளாலி மு தலியவிடங்களின் ஆலயங்கள் இப்படியானவை. 1650-ம் ஆண் டுவரையில் யாழ்ப்பாணத்தில் ஒரு பிறமதஸ்தருமில்லாமல் ச கலரும் பெயரளவில் கிறீஸ்தவர்களாகிவிட்டார்கள். (இலங்கை
Aš (osavastgj-se-i gâQuLurøt tid, Jesuits’ Annual Letters)
கத்தோலிக்கஆலயங்களுட் பல முன்னிருந்த சைவ ஆல யங்களின் நிலையத்தில் எழுந்தன. இவ்வாறே மானிப்பாய்க் க த்தோலிக்க ஆலயம் அவ்விடத்திருந்த மிகப்பழைய சைவ ஆலய த்தை இடித்துக் கட்டப்பட்டது. ஆயினும் ஒல்லாந்தர்வந்தகா லையில் அக்கட்டிடம் முற்றுப்பெற்றிருக்கவில்லை. சாவகச்சே ரியிலும் இப்படியே. சாவகச்சேரிக் கத்தோலிக்ககோவில் அ த்திபாாங்கள் சங்தையின் மேற்புறத்தில் இன்றைக்குங் காண ப்படுகின்றன. கோப்பாயில் சங்கிவிராசனுடைய கோட்டையை யிடித்து அதனுள் பறங்கியர் தம் ஆலபத்தைக்கட்டினர். தின்நிலையம் இப்போதைச்சந்தைக்கும் வீதிக்கும் கிழக்கே தி டராய்க் காணப்படுகின்றது. அச்சுவேலி சங்கான வரணி எ னுங் கோவிற்பற்று ஆலயங்கள் இன்றைக்கும் அழிந்தபடி கி டக்கின்றன. வட்டுக்கோட்டைக்கோவில் அமெரிக்கன்மிஷன் ஆலயமாய்த் திருத்தப்பட்டிருக்கின்றது. தெல்லிப்பழை அமெ ரிக்கன்மிஷன் கோவிலிலே பறங்கியரின்கோவிலில் கட்டியிரு ந்த இருதூண்கள் சேர்ந்திருக்கின்றன. தற்காலப் பெருஞ்சங் தைகள் எல்லாம் பறங்கியருடைய ஆலயங்களுக் கணித்தாக வே எழுந்தன. ஆலயத்தைத் தரிசிப்போர் பண்டமாற்றுச்செ ய்யத்தொடங்கியே சந்தைகூம்ெவழக்கம் தலைப்பட்டது. பிற் காலம் சிலசந்தைகள் அழிந்துபோன கோவில்வளவுகளினுள் ளேயே கூடுவனவாயின.
கல்விவிருத்தி-தம்சமய ஆலயங்களை ஊர்கடோறும் கட் டியதோடமையாது பறங்கியர் அவ்வாலயங்களுக்கணித்தாய்ப்
பள்ளிக்கூடங்களையும் தாபித்து சிறுவருக்குக் கல்வியூட்டுவிக்
Page 54
88 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
தனர். பட்டணத்தில் உயர்தரக் கல்வியூட்டும் பெரிய வித்தி யாசாலையொன்றிருந்தது. போர்த்துக்கீஸ்பாஷையில் மேற்கல்வி கற்போர் கொழும்புக்கும் அப்பால் கோவைக்கும் அனுப்பப்பட் ಸ கடதாசி” பேனை” முதலிய எழுதுங்கருவிகள் பற ங்கியராலேயே முதன்முதல் இங்கு கொண்டுவரப்பட்டன. அ ச்சியந்திரோபாயத்தையும் பறங்கியரே இந்தியா இலங்கையா திய கீழ்ச்சீமைகளுக்கு அறிவித்தார். கொச்சியில் தமிழ்நூல் களை அச்சிடும் இயந்திரமென்று 1577-ம் ஆண்டு ஸ்தாபிக்க ப்பட்டது. அதற்குத் தமிழெழுத்துகள் 8ரோப்பாவில் செய் விக்கப்பட்டன. அவ்வச்சியந்திரத்தில் "ஞானுேபதேசம்’ மு தலிய சிலபுத்தகங்கள் அச்சிட்டு யாழ்ப்பாணத்திலும் பரப்பப் பட்டன. தமிழரசர்காலத்தில் தமிழுக்கிருந்த அபிமானம் பற ங்கியர்காலத்தில் எவ்வாற்ருனும் குறைந்திருந்ததென்றெண்ண கியாயமில்லை. முன்னிலுமதிக கல்விவிருத்தியே காணப்பட்ட து. தமிழாசர்காலத்தில் தருமப் பள்ளிக்கூடங்கள் எவ்விதமா னவையென்பதும் அறியப்படாதிருந்தது. பறங்கியரே இவற் றை ஊரெங்கும் தாபித்து சிறுவர்க்கெல்லாம் கல்வியூட்ட வ ருங்கினர்கள். தம் சமயவிருத்திக்கு இவை சிறந்த உபாயமெ ன்பதும் அவர்கள் கருத்துப்போலும்.
தமிழ்வசனநடை. (இது) கிறீஸ்தகுருமார் தமிழ்கற்பதில் வெகு சிரத்தையெடுத்துக்கொண்டிருந்தார்கள். தமிழில் வசன ரூபமாய் (கத்தியரூபமாய்) நூலெழுதும் வழக்கத்தை உண்டுப ண்ணியவரான ரோமைப் பிராமணனெனும் தத்துவபோதக சுவாமிகள் (Robert de Nobli) அக்காலத்திருந்த யேசுசபைக் குரு. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் வெகு பாண்டித்தியம்ப டைத்தவரான இவருக்குமுன் தமிழில் கத்தியரூபமான நூல் களே கிடையா. பத்தியரூப நூல்களில் ஆங்காங்குவந்த வச னபாகங்களும் “உரைச்செய்யுள்’ என ஒருவகைப்பாவாகவே யிருந்தன. தத்துவபோதகரை அறியாதோர் வீரமாமுனிவரே (C. Besght) வசனநடைக்குப் பிதாஎன்பர். வீரமாமுனிவர் த த்துவபோதகருக்குப்பின்னே இந்தியாவுக்கெழுந்தருளிய ரோ மைக்குருவானவர். இவரியற்றிய "தேம்பாவணி” முதலிய லக்கியங்களின் விசேஷத்தால் இவரது கீர்த்திப்பிரதாபம் மு ந்தியவருடையதை மறைத்துப்போட்டதுபோலும். வீரமாமு னிவரே நிகண்டை அகராதிவரிசைய்ாய் எழுதும்முறையைபு ம் தமிழ்க் குற்றெழுத்துக்களுக்குப் புள்ளியிடுதல், குற்றேடு கூடிய எகாாத்துக்குப் புறம்பான குறியீடுமுதலிய திருத்தல் களையும் செய்தவர்.
தத்துவபோதகர் மதுரைராச்சியத்தில் வெகுநாள் ஊழி
யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 89
யஞ்செய்தபின் தமது வயோதிகதசையில் யாழ்ப்பாணப் பட டினத்தில்வந்து தங்குவோராயினர். கண்தெரியாதவராய் வீட் டினின்றும் ஆலயத்துக்குக் கைலாகுகொடுத்து அழைத்துக் கொண்டு போகவேண்டியவராய் இங்கு வசித்திருந்து பின் ம அதுரைக்குமீண்டார். இவரியற்றிய பெரும் பிரபந்தங்கள் ஆக் துமகிர்ணயம், ஞானுேபதேசகாண்டம் முதலியன. புறானே சுவாமிகள் எனும் நெயோப்போலித்தரும், பேர்குயின் சுவா மிகள் எனும் பிராஞ்சியரும் இவ்வாறே தமிழில் அனேக கி ாந்தங்களையியற்றிப் பிரசுரித்தனர்.
புலவர்கள்.- அக்காலம் யாழ்ப்பாணகாடெல்லாம் பெய ாளவில் கிறீஸ்தநாடாயிருந்தமையால் கிறீஸ்துசமய நூல்களே இயற்றப்பட்டன. ஆங்காங்கு யாழ்ப்பாணத்தாருள் புலமைவா ய்ந்தோரும் விளங்கினர்கள். இப்புலவர்களின் செய்யுட்களில் மிகப் பழமையானது
இலங்காபுரியிருக்கும் யாழ்ப்பாண ராச்சியத்தில் துலங்குமெண்ணுல்பதிக்கும் துங்கமுடிபோலுயர்ந்த வல்லிக்கிராமமதில் வளர்ந்ததிருநகராம் தெல்லிக்கிராமமெனும் சீர்சிறந்தபேரூரில்
பேதுருப்புலவன் என்பவர் 1647-ம் ஆண்டு இயற்றியது *சந்தியோகுமையோர் அம்மானை' என்பது. அம்மானைநூல்க ளே பெரும்பாலும் பறங்கியர்காலத்தினின்று நமக்குக்கிடை த்திருக்கின்றன. பேதுருப்புலவன்’ தெல்லிப்பழைவாசர். அ ந்நாட்களில் யாழ்ப்பாணத்தில் வலிகாமப்பற்றும், அதில் தெல்லிப்பழையுமே சிறந்தவிடமாய் விளங்கியது. மேற்சுட்டி ய "அம்மானை' கிளாலி என்னுமிடத்திருந்த கத்தோலிக்க ஆ லயத்தைச் சிறப்பித்துப் பாடப்பட்டது. திருநாட்காலத்தில் அங்கு சைவ ஆலயங்களிற்போல தேரிழுத்தலும் வழக்கமாயி ருந்தது. கிளாவியிலே பழைய ஆலயமிருந்தவிடத்தில் இன் றைக்கும் ஒரு சிறு ஆலயம் வழங்குகிறது. “சந்தியோகுமை யோச் அம்மானை'யில் பொலிந்துவரும் விருத்தப்பாக்களில் ஒ ன்று பின்வருவது:
சிலைவளர்த்தடலெதிர்த் தேயிரண்டருகுதேரைமுற்பட
வளைத்தனர்கள்தேரிலுள
கலையறுத்திடவுதிர்ந்தது சாங்களோடு கவசமற்றிட
வடர்ந்ததுகடுஞ்சமர்கள்
Page 55
90 யாழ்ப்பாண வைபவ கௌமுதி.
தலையறுத்திடவிழுந்தது சிரங்கள்பலகாமறுத்திட
வுதிர்ந்தது தகர்ந்து இரு
மலையெதிர்ப்பெனவிடிப்பென வெதிர்ப்புலிகள் வயணமென்ன
மண் மடிந்தனர்மதித்தரசர்.
பின் நம்காலவரையி லெட்டியிருக்கும் நூல் “ஞானப்பள் எனப் பெயரியது. அதுவும் பறங்கியர்காலத்திலே 1640 க்கும் 1658க்கும் இடையில் செய்யப்பட்டதென அகச்சாட்சி களால் விளங்குகிறது. பாடியபுலவர் யாரெனக் தெரியவில்லை. மாதிரிக்கு ஒரு கலிப்பா பின்வருகிறது.
9 y
அண்டகோளமுமப்பாலே கண்கட்கடங்கிடாதொளிர்ரூபல க்காரமும் - துண்டவெண்பிறைசூரியனும்மண்ணும் தோற்ற வேமுன்னந்தானுயிருந்தோன் - பண்டங்காளினிலைம்பூதமும் செய்து பணிந்தலோகத்தைப்பாலித்தகர்த்தனைத் - தெண்டனி ட்டுப்பாவத்தெரிந்த செருசலைத்திருநாடெங்கள் நாடே.
பறங்கியரின் செல்வாக்கு- பறங்கியருடைய 38 வருஷ அ ரசாட்சி யாழ்ப்பாணத்தை எவ்வளவாக மாற்றிப்போட்டதெ னில், அவர்கள் இராசரீகம் அழிக்தொழிந்து இற்றைக்கு 250 வருஷங்களுக்கு மேலாகியும் அவர்களால் கொண்டுவரப்பட்ட பல பழக்கவழக்கங்களும் அவர்கள் பாஷைமணமும் இன்னு ம் ஆங்காங்கு நிலைத்திருக்கின்றன. பறங்கியர் சிங்களருள்வை த்த சில்வா, பீரிஸ், பேணுண்டோ, சொயிசா ஆதியபெயர் களும், தமிழருள்வைத்த பிகுருதோ, பின்றே ஆதியபெயர் களும், அவர்கள்கொடுத்த முதலிப்பட்டப் பெயர்களும் இன் றைக்கும் வழங்குகின்றன. குருசுத்தலைப்பாகை, “கொந்தல்” மணி, (அதாவது செபமாலை) வசலிக்கூடு, (சுவிசேஷமெழுதி யகூடு) என்பவைகளும், ப்ொலியளக்குமுன் சிலுவைபோடுத ல், புதுவீடுகளின்மேற் கொடி தூக்குதல், ஆலயங்களிற் பீரங் கிவெடிதீருதல் முதலிய வழக்கங்களும் இன்றைக்கும் காணப் படுகின்றன. அவர்கள் தோம்புப்பெயர்கள் இன்னும் மறக்கப் படவில்லை. 'மாங்தை”ச்சட்டை, கமிசு, களிசான், சால்வை தலிய உடைவிசேஷங்களும், 'பேனிச்சி” “கவுத்தோர்’ முத லிய நகைவிசேஷங்களும், மேசை” கதிரை” வோங்கு”*க விச்சி” ('காத்தை” முதலிய தளபாடங்களும், “கடதாசி” *பேன” முதலிய நாளாந்தப் பிரயோகப்பொருட்களும் அ வர்களை நினைப்பூட்டுகின்றன. இன்றைக்கும் நாட்டவர்கள்தா ம் 'கொடுதார்” பண்ணுகிறது (துண்டுதுண்டாய் வெட்டு வது) "பிறேசர்” கொண்டாடுகிறது (கலந்து சிற்றுணவருக்
யாழ்ப்பாண் வைபவ கெள்முகி. 9
துவது) "பிந்தாரிக்கிறது” (சித்திரம்வரைவது) *கந்தாரிக்கி றது” (பாடுவது) மேஸ்திரி” 'இறெசிதோர்’, ‘அமிருல்” *கப்பித்தான்” ஆகிய நூற்றுக்கணக்கான பறங்கிச்சொற்களை உபயோகிக்கக் காண்கிருேம்.
ஒல்லாந்தரின் சந்ததியாராய் யாழ்ப்பாணம் மன்னுச் ஆதியவிடங்களிலுள்ளோரும் பறங்கிப்பாஷையையே பேசுவா ான்றி, ஒல்லாந்தப்பாஷையை யறியார். அவ் ஒல்லாங்கரும் ப றங்கியரென்றே அழைக்கப்படுகின்றனர். யாழ்ப்பாணப்பட்டி னம் பறங்கிப்பாஷையிலேயே "சீதாரி” என்றும் அங்குள்ள ஒல்லாந்தருங்கூட வசிக்குமிடம் “பறங்கித்தெரு’ என்றுமே இன்றுவரைக்கும் நடைபெறுகிறது.
ஒல்லாந்தர்காலப் பழங்கதைகளிலும் பறங்கியர்காலத்துப் பழங்கதைகளே இன்றைக்கும் வீடுகளில் பெண்பேதையர்க ள் சிறுவர்களாலும் சொல்லப்படக் கேட்கின்றுேம்.
சுண்ணுகச்சந்தையிலே-பறங்கியர் சுங்கானைப்போட்டுவிட்டார் பார்த்தெடுத்தவர்க்குப்-பறங்கியர்
பாதிச்சுங்கான்கொடுப்பர் என்றும்,
மாட்டிறைச்சியாம்-பறங்கிக்கு மானுமிணங்காதாம் சுட்டகருவாடாம்-பறங்கிக்குச் சோறுமிணங்காதாம் என்றும்,
என்னபிடிக்கிருய்அங்தோனி-நானும் எலிப்பிடிக்கிறேன்சிஞ்ஞோரே பொத்திப்பொத்திப்பிடிஅந்தோனி-அது பிட்டுப்போட்டோடுதுசிஞ்ஞோரே என்றும்,
வரும் மழலைப்பாட்டுக்களையும் காண்க. சிஞ்ஞோர் என்றது நயினர்” என்றதுபோலக் கீழானேர் மேலோரைவிழிக்கும் பறங்கிச்சொல்லு.
அக்காலம் நாடுமுழுதும் கிறீஸ்துவநாடாய்ப் போயிருந் தமையால் சில தமிழ்ச்சொற்களின் அர்த்தங்களும் பறங்கிய ர்காலத்தில் திரிபுபட்டு அப்படியே இன்றைக்கும் வழங்குகி ன்றன. உதாரணம்; வேதம் என்னும்சொல் முற்காலம் ஆரிய
Page 56
{)2 யாழ்ப்பாண வைபவ கெளமுதி.
ருடைய "இருக்கு" முதலிய நால்வேதங்களையே குறித்தது. ஆயின் பறங்கியர்காலத்தில் அது கிறீஸ்துசமயத்துக்குமுரியதா கி நால்வேதங்களை உடையோராயிருந்தோர் "அஞ்ஞானிகள்” என்றே 'தமிழர்” என்றே குறிக்கப்பட, அவ்வேதங்கள் இ ல்லாதோராகிய கிறீஸ்தவர்களே வேதக்காரர்” எனப்பட்டா ர்கள். 'சத்தியவேதம்’ என்ற சொற்ருெடரும் கிறீஸ்துமார் க்கத்தையே குறிப்பதாயிற்று. இதனுல் யாழ்ப்பாணத்து வை பவமாலையை ஒல்லாந்தர்காலத்தில் எழுதிய மயில்வாகனப்புல வர் தாமும் (நமக்குத்தோற்றுகிறபடி) சைவராயிருந்துகொண் டு கிறீஸ்துமார்க்கத்தைச் “சத்தியவேதம்” என்றும் ஒல்லா ந்தர் கொண்டுவந்த சற்றேமாற்றழுடைய அம்மார்க்கத்தை 'இ றப்பிறமாது (திருத்திய) சத்தியவேதம்’ என்றும் அழைப்பவ ராயினர். இவ்வழக்குகளே இன்றைக்கும் பெரும்பான்மை கி லைபெற்றிருக்கின்றன.
பறங்கியர்யின் இலங்கையையாண்ட ஒல்லாந்தர் யாழ்ப்பா ணத்தில் 137 வருஷம் ஆண்டாரேயாயினும் அவர்கள்பாஷை யும் வழக்கங்களும் ஏறக்குறைய அழிந்துபோய் அவர்க்குமு ன் 38 வருஷம்மட்டும் ஆண்ட பறங்கியரின் பாஷையும் பழ க்கவழக்கங்களுமே நமது நாட்டில் கிலைத்துவிட்டமை ஊன்றி யோசிக்கத்தக்கது. (சா. ஞா)
இலங்கையில் ஒல்லாந்தர்-ஒல்லாந்து எனும் தேசத்தார் ஒர்காலம் போர்த்துக்கால்-ஸ்பானிய தேசங்களின்கீழ் வர்த் தகஞ்செய்து பின் அத்தேசங்களோடு போரிகட்டிக்கொண்டு பறங்கியருடைய கீழ்த்திசை வர்த்தகத்தையும் குடியேற்றநா டுகளையும் கைப்பற்ற வழிபார்த்திருந்தார். ஒல்லாந்தர் முதன் முதல் இலங்கையைத் தரிசித்தது 1602-லாம். அட்மிறல் யோ றிஸ்வன் ஸ்பில்பேகன் என்பவனே 3 போர்க்கப்பலுக்குத் த ளபதியாய் வந்து மட்டக்களப்பில் வைகாசி மாசம் 30-ந் திகதி இறங்கினன். கண்டியரசனுன டொம் சுவான் விமலதர்மன் எ ன்பவன் இவனை ஏற்றுபசரித்து கறுவாப்பட்டையும் தொகை யாகக்கொடுத்து ஒல்லாந்தரோடு ஒர் பொருத்தஞ்செய்து கோ ட்டைகட்டவும் உத்தரவளித்தான். ஸ்பில்பேகனின்பின் டிவீட் என்பவன் கண்டியரசனைத்தரிசிக்கவந்து இவன்பரிசாரகர்சிலரா ல் ஒர் பூசலில் தற்செயலாய்க் கொல்லப்பட்டான். அப்பால் மா ர்செல்லஸ் டி பொஸ்குவர் எனும் ஒல்லாந்த தானுபதி 1612இல் அக்காலம் கண்டியையாண்ட செனறற் எனும் சிங்கள அர சனிடம் அனுப்பப்பட்டு பறங்கியருக்கெதிராய்ச் சமாதான உ டன்படிக்கைபண்ணி 1615-இல் மீண்டான். இதற்கிடையில்
No comments:
Post a Comment