KAMARAJAR DEATH AND
A.P.J.ABDUL KALAM DEATH
A.P.J.ABDUL KALAM DEATH
காமராசர்,
குடிநீர் பஞ்சம் தீர்க்க வேலூர் சென்றார்.
ஆம்பூர் அருகே இருந்து தண்ணீர் கொண்டு வர முடிவு செய்தார்.
பொறியாளர் சொன்னார், " ஐயா ஆம்பூர் பள்ளம்,
வேலூர் மேடு.
தண்ணீர் வராது"
என்று சொன்னார்.
காமராசர் சொன்னார், "பள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் வராதுன்னு சொல்லறதுக்கா உன்னைய வைச்சிருக்கேன்.
நீ ஒரு திட்டம் போட்டு என் வீட்ல கொடுத்துட்டு தான்
ஊரை விட்டு கிளம்பணும். அப்படின்னுட்டு அவர் சென்னை போய்ட்டார்.
4 நாள் கழிச்சு ராத்திரி
2 மணிக்கு அவர் வீட்ல திட்ட வரைவை கொடுத்துட்டு.
ஐயாவ எழுப்ப வேண்டாம் ஐயாவ காலைல பார்க்கிறேன்
அப்டின்னுட்டு
வீட்டுக்குப் போய் நிம்மதியா தூங்கினார் பொறியாளர். மறுநாள் காலையில் 8 மணிக்கு எழுந்தார்,
வாசலில் அமர்ந்திருந்தார் காமராசர்.
பதறி போய் விட்டார் பொறியாளர்.
"என் தூக்கத்த நீ கெடுக்கல. அதே மாதிரி நானும் " என்றார்..
"அற்புதமான திட்டம்..
நன்றி.. பாராட்டுக்கள்.."
என்றார்.
திட்டத்தை நிறை வேற்றினார்.
இன்றளவும் திட்டம் செயல்படுகிறது..
அந்தப் பொறியாளர்
வேறு யாருமல்ல..
நமது மாமனிதர்
A.P.J அப்துல்கலாம் தான் அவர்..
தன்மானத் தமிழனும்,
தன்னிகரில்லா தலைவனும்.
இனி வருவார்களா?.
ஜூலை 27 - அப்துல் கலாம் ஷில்லாங் சென்றபோது, அவருடன் சென்ற ஸ்ரீஜன்பால் சிங் என்பவர் தனது அனுபவத்தை முகநூலில் எழுதி உள்ளார். அவர் கூறியதன் முக்கிய சாராம்சம்: ஷில்லாங் மேலாண்மை கல்லூரியில் அளிக்கப்பட்ட வரவேற்புக்குப் பிறகு நாங்கள் சொற்பொழிவு அறைக்குள் நுழைந்தோம். மேடை ஏறியதும் அவர் பேசுவதற்கு தயார் செய்தேன். அதைப் பார்த்து சிரித்தார். ""எப்படி இருக்கீங்க'' என்று என்னைப் பார்த்து கேட்டார். நானும் "நன்றாக இருக்கிறேன்'' என பதில் அளித்தேன்.
பேச துவங்கி, ஒரு வாக்கியத்தை முடித்ததுமே அவரிடம் ஒரு அமைதி ஏற்பட்டது. நான் அவரைப் பார்த்தேன். திடீரென அப்படியே சரிந்து விழுந்தார்.
உடனே அவரை நாங்கள் தாங்கிப் பிடித்தோம். அவரை நோக்கி டாக்டர் விரைந்தார். கலாமின் கண்கள் எங்களை நோக்கி நிலைகுத்தி நின்றன. அவரது தலையை ஒரு கையில் நான் தாங்கிக்கொண்டு, அவரது கைகளை பற்றிக்கொண்டேன். அவரை பிழைக்க வைக்க என்னென்வோ செய்தோம். அவர் எந்த வலியையும் காட்டவில்லை.
அடுத்த 5 நிமிடத்தில் அருகில் இருந்த மருத்துவமனையில் இருந்தோம். அதற்கடுத்த ஐந்தாவது நிமிடம், நமது நாட்டின் ஏவுகணை மனிதர், நம்மை விட்டு போய்விட்டார் என்றார்கள்.
கடைசியாக அவரது பாதங்களை தொட்டு வணங்கினேன். பெரிய அறிஞர், எனது பழைய நண்பர். உன் நினைவுகள் என்றைக்கும் எனக்குள் இருக்கும். அடுத்த பிறவியில் சந்திப்போம் என நினைத்தேன்.
அவரைப் பற்றிய எண்ணங்கள் மீண்டும் மனதில் ஓடத் துவங்கின. அவருடன் பலமுறை உணவு அருந்தியது. பேசியது, பழகியது எல்லாமே நினைவில் வந்து மோதின. மனிதர் மறைந்துவிட்டார். ஆனால் அவர் விட்டுச் சென்ற பணி காத்திருக்கிறது. கலாம் வாழ்க! -உங்களுக்கு கடன்பட்ட மாணவர். இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.
No comments:
Post a Comment