Showing posts with label KAMARAJAR. Show all posts
Showing posts with label KAMARAJAR. Show all posts

Friday, 16 July 2021

KAMARAJAR RULE WAS ALWAYS BEST

 

KAMARAJAR RULE WAS ALWAYS BEST




#காமராசரின்ஆட்சியேபெரியாரின்_ஆட்சி..

காமராசரும்,சுந்தரவடிவேலுவும் ஒரு தடவை டெல்லியில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வர நேரிட்டது,,,

சுந்தரவடிவேலு அருகில் சென்று அமர்ந்து கொண்ட காமராஜர் தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டிய கல்வித் திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டே வந்தார்,,

`நாட்டுப்புற ஜனங்களுக்கு மேல் படிப்பு ரொம்ப சுலபமா கிடைக்கணும்,,அதுதான் முக்கியம். நகரத்திலே இருக்கிறவன் எவ்வளவு தொகை கொடுத்தும் படிப்பான்,, கிராமவாசி எங்க போவான்? அவனால் மெட்ராஸ்லேயெல்லாம் வந்து தங்கி படிக்கிறது கட்டுப்படியாகாது'

சாதாரண பள்ளிக்கூட படிப்புக்கே அவன் ஆடு,மாடு,கோழியெல்லாம் விக்க வேண்டியிருக்கு,,,மேல் படிப்பையெல்லாம் கிராமப்புற காலேஜ்களுக்கும் பரவலாக்குங்க,,, ஏழை வீட்டுப் பிள்ளைங்க அந்தந்த ஊர்லயே பெரியபடிப்பு படிக்கட்டும்” என்றார் காமராஜர்,,,

உடனே அதிகாரி சுந்தரவடிவேலு , இப்போது, கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களில் நூற்றுக்கு அறுபது பேர்,பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள்” என்றார்,,, “அதைத்தானே நாம விரும்பினோம். அதுக்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். ஒரு தலைமுறை படிச்சி மேல வந்துட்டான்னா அப்புறம் அவன் மூலம் அந்த கிராமமே மேல வந்திடுமில்லையா" என்றார் காமராஜர்,,

அதற்கு சுந்தர வடிவேலு பதில் அளிக்கையில், நான் பெரியார் ஐயாகிட்டே இந்த விவரத்தைச் சொன்னேன். அவரு மிகுந்த மகிழ்ச்சியோடு இவ்வளவுக்கும் காரணம் காமராசர்தான், அவருக்குத்தான் தமிழன் கடன்பட்டிருக்கிறான்,,,அவர் மட்டும் இல்லேன்னா 1952-ல்லேயே நம்ம தலைமுறையையே ஆச்சாரியார் குழிதோண்டிப் புதைத்திருப்பார்” என்று பெரியார் ஐயா சொன்னார் என்றார்,,,


உடனே காமராஜர், #அதுஎப்படின்னேன்?#எல்லாம்பெரியார்ஐயாவாலேதானே_நடக்குது,,,

#அவர்சொல்றார்நாம_செய்யிறோம்!

#காரணகர்த்தா_அவருதானே…?

#இது1952இல்ஆரம்பிச்சபிரச்சனையாஎன்ன?

#ஐயாயிரம்வருஷமாஇருக்கறதாச்சே....

தெய்வத்தின் பேராலேயும் மதத்தின் பேராலேயும் நம்மள ஒடுக்கி வச்சிட்டானே… இப்படி இருக்கிறது என் தலையெழுத்துன்னு சொல்லிட்டானே! இதப்பத்தி யார் கவலைப்பட்டா?”

#பெரியார்ஒருத்தர்தானேஎல்லாத்தையும்தலையில்எடுத்துப்போட்டுகிட்டுபண்ணிகிட்டிருக்கார்,,

#அவருமட்டும்இல்லேன்னாநம்மபுள்ளைங்ககதிஎன்னவாகியிருக்கும்_?

அத்தனைப்பேரும் கோவணத்தோட வயல்லே ஏரோட்டிக்கிட்டிருப்பான்…! இன்னிக்கு டெபுடி கலெக்டராகவும், ஜாயிண்ட் செகரட்டரியாவும்ல ஒக்காந்திருக்கான்…! நம்மகிட்ட அதிகாரம் இருக்கிறதாலே

#பெரியார்நெனச்சகாரியத்தஏதோகொஞ்சம்பண்ணிக்கொடுக்கிறோம்

#அவருஎந்தஅதிகாரத்தையும்கையிலவச்சிக்காமஊர்ஊராதிரிஞ்சிசத்தம்போட்டுக்கிட்டுவராரு.! #அவராலேதான்நமக்கெல்லாம்பெருமை…!” என்று உணர்ச்சி பொங்கக் காமராசர் கூறினார்.

“எவ்வளவு பெருந்தன்மை இவருக்கு! தான் செய்கிற எல்லா நலத் திட்டங்களையும் #தந்தை_பெரியாருக்கே காணிக்கையாக்குகிற இவரது மேன்மைதான் என்னே?” என்று எண்ணி அதிகாரி சுந்தர வடிவேலு பூரித்துப்போனார்,,,

#கர்மவீரர்...

Sunday, 30 May 2021

LABOUR LEADER SENKALIAPPAN - CALLED AS KOVAI KAMARAJAR

 


LABOUR LEADER SENKALIAPPAN - 

CALLED AS KOVAI KAMARAJAR


தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.

48. தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்

தொகுப்பு: வெ.கோபாலன்


பல்லடம் அருகே மல்லகவுண்டன்பாளையம் எனும் சிற்றூரில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் ராம கவுண்டர் பழனியம்மாள் தம்பதியருக்கு 1926ஆம் ஆண்டில் பிறந்தவர் செங்காளியப்பன். கோவையில் ஒரு பஞ்சாலையில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கினார். காலப் போக்கில் மகாத்மா காந்தியடிகளின் வழிகளைப் பின்பற்றி தேச சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1942 ஆகஸ்ட்டில் இந்தியா முழுவதும் பற்றி எரிந்த "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் இவர் பங்கெடுத்துக் கொண்ட போது இவருக்கு வயது 16. சூலூர் விமான தளம் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 1943 மே மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, இவர் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். அலிப்பூர் சிறையில் அடைபட்டிருந்த காலத்தில் இவருக்கு வயிற்றுக் கடுப்பு நோய் ஏற்பட்டு உயிருக்குப் போராடினார். கிட்டத்தட்ட உயிர் பிரிந்து விட்டது என்று சொல்லும் அளவில் இவர் எலும்பும் தோலுமாக அலிப்பூர் சிறையில் வயிற்றுக் கடுப்பு நோய் பிரிவில் துணியால் மூடப்பட்டு கிடத்தப்பட்டிருந்தார். அந்தச் சிறையில் அடைபட்டிருந்த எல்லா கைதிகளும், தங்கள் உணவை மறந்து, இந்த ஒரு உயிருக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டதின் விளைவு அன்றிரவு வேகு நேரத்துக்குப் பின் அவர் அபாய கட்டத்தைத் தாண்டினார்.


சிறையிலிருந்து வெளியே வந்த செங்காளியப்பன் தொடர்ந்து தேச விடுதலைக்காகப் பாடுபடத் தொடங்கினார். தொழிலாளர் நலனுக்காக அவர்கள் உரிமைக்காக, வாழ்வாதாரத்துக்காக போராடும் பணியோடு, நாட்டின் விடுதலையையும் அவர் மற்றொரு கண்ணாக எண்ணி பாடுபட்டார். வெள்ளை வெளேர் என்ற கதராடை, அரைக்கை சட்டை, நெற்றியில் வெள்ளை திருநீறு, சிரித்த முகம், அமைதியான பண்பு இவற்றோடு இவர் வலம் வந்து தொழிலாளர்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்தார். இவரை அனைவருமே "தொழிலாளர் தோழர்" என்றே அழைத்தனர்.


தியாகசீலர்களின் உழைப்பாலும், அவர்களது வியர்வையாலும், தியாகத்தாலும், ரத்தத்தாலும் 1947 ஆகஸ்ட் 15இல் நாடு சுதந்திரம் பெற்றது. என்றாலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர இவரது பணி தொடர்ந்து நடந்தது. 1962இல் நடந்த பொதுத் தேர்தலில் இவர் பல்லடம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். கோவை பகுதி தொழிலாளர்களின் கண்கண்ட தெய்வமாகத் திகழ்ந்த என்.ஜி.ராமசாமி அவர்களின் ஆன்மா இவரை ஆசி வழங்கி வாழ்த்தியிருக்கும்.


இவருடைய பெரு முயற்சியால் தியாகி என்.ஜி.ராமசாமிக்கு சிங்காநல்லூரில் ஒரு சிலை நிறுவப்பட்டது. இவரது சட்டசபைப் பணிகளின்போது தொழிலாளர்கள் நலத்துக்காக இவர் பங்கேற்ற விவாதங்களும், இவரது முயற்சியால் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களும் ஏராளம். வாழ்க தொழிலாளர் தோழர் செங்காளியப்பன் புகழ்!

POSTED BY THANJAVOORAAN AT 6:57 AM 0 COMMENTS  



The statue of freedom fighter, trade union leader and two-time MLA R. Sengaliappan was unveiled by the state president of Indian National Trade Union Congress (INTUC) G. Kalan on the premises of INTUC office at Ramanathapuram on Trichy Road recently.

A book on the freedom fighter, recollecting the struggle he faced during independence his qualities as a trade union leader was released on the occasion.

The book was released by industrialist K.G. Balasubramaniam and was received by Bharatiya Vidya Bhavan chairman B.K. Krishnaraj Vanavarayar.

Speaking on the occasion trade union leaders said that his qualities such as punctuality made the people of his days fondly call him ‘Kovai’ Kamarajar.

Sunday, 24 May 2020

KAMARAJAR DEATH AND A.P.J.ABDUL KALAM DEATH





KAMARAJAR DEATH AND 
A.P.J.ABDUL KALAM DEATH


காமராசர்,  
குடிநீர் பஞ்சம் தீர்க்க வேலூர் சென்றார். 
ஆம்பூர் அருகே இருந்து தண்ணீர் கொண்டு வர முடிவு செய்தார்.
பொறியாளர் சொன்னார், " ஐயா ஆம்பூர் பள்ளம், 
வேலூர் மேடு. 
தண்ணீர் வராது" 
என்று சொன்னார்.

காமராசர் சொன்னார், "பள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் வராதுன்னு சொல்லறதுக்கா உன்னைய வைச்சிருக்கேன். 
நீ ஒரு திட்டம் போட்டு என் வீட்ல கொடுத்துட்டு தான் 
ஊரை விட்டு கிளம்பணும். அப்படின்னுட்டு அவர் சென்னை போய்ட்டார்.
4 நாள் கழிச்சு ராத்திரி
2 மணிக்கு அவர் வீட்ல திட்ட வரைவை கொடுத்துட்டு. 
ஐயாவ எழுப்ப வேண்டாம் ஐயாவ காலைல பார்க்கிறேன்
அப்டின்னுட்டு 
வீட்டுக்குப் போய் நிம்மதியா தூங்கினார் பொறியாளர். மறுநாள் காலையில் 8 மணிக்கு எழுந்தார், 
வாசலில் அமர்ந்திருந்தார் காமராசர். 

பதறி போய் விட்டார் பொறியாளர்.


"என் தூக்கத்த நீ கெடுக்கல. அதே மாதிரி நானும் " என்றார்..

"அற்புதமான திட்டம்.. 
நன்றி.. பாராட்டுக்கள்.."
என்றார்.
திட்டத்தை நிறை வேற்றினார்.
இன்றளவும் திட்டம் செயல்படுகிறது..

அந்தப் பொறியாளர்
வேறு யாருமல்ல..
நமது மாமனிதர்
A.P.J அப்துல்கலாம் தான் அவர்..

தன்மானத் தமிழனும், 
தன்னிகரில்லா தலைவனும்.
இனி வருவார்களா?.







ஜூலை 27 - அப்துல் கலாம் ஷில்லாங் சென்றபோது, அவருடன் சென்ற ஸ்ரீஜன்பால் சிங் என்பவர் தனது அனுபவத்தை முகநூலில் எழுதி உள்ளார். அவர் கூறியதன் முக்கிய சாராம்சம்: ஷில்லாங் மேலாண்மை கல்லூரியில் அளிக்கப்பட்ட வரவேற்புக்குப் பிறகு நாங்கள் சொற்பொழிவு அறைக்குள் நுழைந்தோம். மேடை ஏறியதும் அவர் பேசுவதற்கு தயார் செய்தேன். அதைப் பார்த்து சிரித்தார். ""எப்படி இருக்கீங்க'' என்று என்னைப் பார்த்து கேட்டார். நானும் "நன்றாக இருக்கிறேன்'' என பதில் அளித்தேன்.
பேச துவங்கி, ஒரு வாக்கியத்தை முடித்ததுமே அவரிடம் ஒரு அமைதி ஏற்பட்டது. நான் அவரைப் பார்த்தேன். திடீரென அப்படியே சரிந்து விழுந்தார்.

உடனே அவரை நாங்கள் தாங்கிப் பிடித்தோம். அவரை நோக்கி டாக்டர் விரைந்தார். கலாமின் கண்கள் எங்களை நோக்கி நிலைகுத்தி நின்றன. அவரது தலையை ஒரு கையில் நான் தாங்கிக்கொண்டு, அவரது கைகளை பற்றிக்கொண்டேன். அவரை பிழைக்க வைக்க என்னென்வோ செய்தோம். அவர் எந்த வலியையும் காட்டவில்லை.
அடுத்த 5 நிமிடத்தில் அருகில் இருந்த மருத்துவமனையில் இருந்தோம். அதற்கடுத்த ஐந்தாவது நிமிடம், நமது நாட்டின் ஏவுகணை மனிதர், நம்மை விட்டு போய்விட்டார் என்றார்கள்.
கடைசியாக அவரது பாதங்களை தொட்டு வணங்கினேன். பெரிய அறிஞர், எனது பழைய நண்பர். உன் நினைவுகள் என்றைக்கும் எனக்குள் இருக்கும். அடுத்த பிறவியில் சந்திப்போம் என நினைத்தேன்.
அவரைப் பற்றிய எண்ணங்கள் மீண்டும் மனதில் ஓடத் துவங்கின. அவருடன் பலமுறை உணவு அருந்தியது. பேசியது, பழகியது எல்லாமே நினைவில் வந்து மோதின. மனிதர் மறைந்துவிட்டார். ஆனால் அவர் விட்டுச் சென்ற பணி காத்திருக்கிறது. கலாம் வாழ்க! -உங்களுக்கு கடன்பட்ட மாணவர். இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.
.

Tuesday, 2 August 2016

காமராஜர் மதிய உணவுத் திட்டம்-மாணவன் அப்துல் கலாம்

காமராஜர் மதிய உணவுத் திட்டம் கொண்டு வர முடிவு செய்து வேலைகள் செய்து கொண்டிருந்த நேரம். அப்போது விருதுநகர் அருகே இருந்த பள்ளிக்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் சொன்ன விசயம் அந்த திட்டத்திற்கே பெரிய தடைக்கல்லாக இருந்தது, சுமார் ஆயிரம் மாணவர்கள் வரை இருக்கும் அந்த பள்ளிக்கு எவ்வளவு அரிசி தேவைப்படும், அவ்வளவையும் வேகவைத்து வடிப்பது எப்படி என்ற கேள்விதான் அது.


அதற்கு உடனே தீர்வு காணவேண்டும் என்று காமராஜர் சொல்ல அனைவரும் கையைப் பிசைந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு இளம் மின்னியல்  பொறியாளர் கையை தூக்கினார். இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டார். அவர் மீது நம்பிக்கை வைத்து காமராஜரும் சரியென்றார்.



இரண்டு நாட்களும் தூங்காமல் அந்த பொறியாளர் வடிவமைத்த இயந்திரம்தான் நீராவி மூலம் அதிக அரிசியை சோறாக்கும் ஸ்டீம் குக்கர். இன்று பெரும் மண்டபங்களில் உணவு சமைக்க உதவும் அந்த ஸ்டீம் குக்கரை வடிவமைத்து, சத்துணவுத் திட்டத்தை தடங்கல் இன்றி நடக்க உதவி, காமராஜரிடம் பாராட்டையும் அன்பையும் பெற்ற அந்த பொறியாளர் வேறு யாருமல்ல.. நம் கலாம் ஐயா அவர்கள்தான்..

இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

என்றாலும் செலவை குறைக்கும் முயற்சியில் இந்த திட்டம் கைவிடப்பட்டது -
-
 இதிலிருந்து பிறந்ததே குக்கர்