Friday 16 July 2021

KAMARAJAR RULE WAS ALWAYS BEST

 

KAMARAJAR RULE WAS ALWAYS BEST




#காமராசரின்ஆட்சியேபெரியாரின்_ஆட்சி..

காமராசரும்,சுந்தரவடிவேலுவும் ஒரு தடவை டெல்லியில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வர நேரிட்டது,,,

சுந்தரவடிவேலு அருகில் சென்று அமர்ந்து கொண்ட காமராஜர் தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டிய கல்வித் திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டே வந்தார்,,

`நாட்டுப்புற ஜனங்களுக்கு மேல் படிப்பு ரொம்ப சுலபமா கிடைக்கணும்,,அதுதான் முக்கியம். நகரத்திலே இருக்கிறவன் எவ்வளவு தொகை கொடுத்தும் படிப்பான்,, கிராமவாசி எங்க போவான்? அவனால் மெட்ராஸ்லேயெல்லாம் வந்து தங்கி படிக்கிறது கட்டுப்படியாகாது'

சாதாரண பள்ளிக்கூட படிப்புக்கே அவன் ஆடு,மாடு,கோழியெல்லாம் விக்க வேண்டியிருக்கு,,,மேல் படிப்பையெல்லாம் கிராமப்புற காலேஜ்களுக்கும் பரவலாக்குங்க,,, ஏழை வீட்டுப் பிள்ளைங்க அந்தந்த ஊர்லயே பெரியபடிப்பு படிக்கட்டும்” என்றார் காமராஜர்,,,

உடனே அதிகாரி சுந்தரவடிவேலு , இப்போது, கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களில் நூற்றுக்கு அறுபது பேர்,பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள்” என்றார்,,, “அதைத்தானே நாம விரும்பினோம். அதுக்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். ஒரு தலைமுறை படிச்சி மேல வந்துட்டான்னா அப்புறம் அவன் மூலம் அந்த கிராமமே மேல வந்திடுமில்லையா" என்றார் காமராஜர்,,

அதற்கு சுந்தர வடிவேலு பதில் அளிக்கையில், நான் பெரியார் ஐயாகிட்டே இந்த விவரத்தைச் சொன்னேன். அவரு மிகுந்த மகிழ்ச்சியோடு இவ்வளவுக்கும் காரணம் காமராசர்தான், அவருக்குத்தான் தமிழன் கடன்பட்டிருக்கிறான்,,,அவர் மட்டும் இல்லேன்னா 1952-ல்லேயே நம்ம தலைமுறையையே ஆச்சாரியார் குழிதோண்டிப் புதைத்திருப்பார்” என்று பெரியார் ஐயா சொன்னார் என்றார்,,,


உடனே காமராஜர், #அதுஎப்படின்னேன்?#எல்லாம்பெரியார்ஐயாவாலேதானே_நடக்குது,,,

#அவர்சொல்றார்நாம_செய்யிறோம்!

#காரணகர்த்தா_அவருதானே…?

#இது1952இல்ஆரம்பிச்சபிரச்சனையாஎன்ன?

#ஐயாயிரம்வருஷமாஇருக்கறதாச்சே....

தெய்வத்தின் பேராலேயும் மதத்தின் பேராலேயும் நம்மள ஒடுக்கி வச்சிட்டானே… இப்படி இருக்கிறது என் தலையெழுத்துன்னு சொல்லிட்டானே! இதப்பத்தி யார் கவலைப்பட்டா?”

#பெரியார்ஒருத்தர்தானேஎல்லாத்தையும்தலையில்எடுத்துப்போட்டுகிட்டுபண்ணிகிட்டிருக்கார்,,

#அவருமட்டும்இல்லேன்னாநம்மபுள்ளைங்ககதிஎன்னவாகியிருக்கும்_?

அத்தனைப்பேரும் கோவணத்தோட வயல்லே ஏரோட்டிக்கிட்டிருப்பான்…! இன்னிக்கு டெபுடி கலெக்டராகவும், ஜாயிண்ட் செகரட்டரியாவும்ல ஒக்காந்திருக்கான்…! நம்மகிட்ட அதிகாரம் இருக்கிறதாலே

#பெரியார்நெனச்சகாரியத்தஏதோகொஞ்சம்பண்ணிக்கொடுக்கிறோம்

#அவருஎந்தஅதிகாரத்தையும்கையிலவச்சிக்காமஊர்ஊராதிரிஞ்சிசத்தம்போட்டுக்கிட்டுவராரு.! #அவராலேதான்நமக்கெல்லாம்பெருமை…!” என்று உணர்ச்சி பொங்கக் காமராசர் கூறினார்.

“எவ்வளவு பெருந்தன்மை இவருக்கு! தான் செய்கிற எல்லா நலத் திட்டங்களையும் #தந்தை_பெரியாருக்கே காணிக்கையாக்குகிற இவரது மேன்மைதான் என்னே?” என்று எண்ணி அதிகாரி சுந்தர வடிவேலு பூரித்துப்போனார்,,,

#கர்மவீரர்...

No comments:

Post a Comment