Saturday 17 July 2021

HOW TO HANDLE MONEY

 


HOW TO HANDLE MONEY




சம்பாதிப்பது என்பது வாழ்க்கையில் நாம் பங்கேற்கும் முக்கிய ஓட்டப் பந்தயமாக இருக்கின்றது . வாழ்க்கையில் அதிகபட்சமாக முதல் 23 வருடங்கள் ( ப்ரீகேஜி கிராஜுவேஷன் / அனைத்து உயர்கல்விகள் ) அதற்காக நம்மைத் தயார்படுத்திக்கொள்கின்றோம் . அதற்குப் பிறகு , மீதமிருக்கும் நாற்பது வருடங்களுக்கு பந்தய வாழ்க்கையை வாழ்கின்றோம் . இன்றியமையாத இந்தப் பணத்தைத் துரத்தும் ஓட்டப் பந்தய வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரே எல்லைக்கோடு ( ஃபினிஷிங் லைன் ) இருப்பதில்லை . அவரவர் திறமைக்கு ஏற்ப எவ்வளவு தூரம் ஓட முடிகின்றதோ , அந்த தூரத்துக்கு ஓடி ஆட்டத்தை முடித்துக்கொள்கின்றோம் . இந்த 40-50 வருட ஓட்டம் , முடிவு கோடில்லாத ஓட்டம் . இந்த ஓட்டத்தின்போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது என்ன , கருத்தில்கொண்டு செய்ய வேண்டியது என்ன என்பதைச் சொல்வதுதான் பணவளக்கலை . பணத்தின் தாக்கம் மனதின் மீது அதிகமாக இருப்பதால் பணவளக்கலை முக்கியமானதாகின்றது . சட்டத்தை மதித்து நடப்பவருக்கு எல்.கே.ஜி. மார்க்கில் இருந்து ப்ளஸ் டூ கட் ஆஃப் வரை பணமே மறைமுக மூலாதாரமாக இருக்கின்றது . பிள்ளைகள் நல்லதொரு வாழ்க்கை வாழத்தானே இந்தப் பாடு என்கிறோம் நாம் . சட்டத்தை மதிக்காதவர்களுக்கு சாதாரண பிக்பாக்கெட்டில் இருந்து ஐ.பி.எல் . பெட்டிங் வரை பணமே நேரடியான மூலாதாரமாக இருக்கின்றது . பணரீதியான வெற்றி என்பது ஒவ்வொருவருடைய திறமைக்கும் முயற்சிக்கும் ஏற்றதாக மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது . நம் முயற்சிகளுக்கான நடவடிக்கைகள் நம் எண்ணங்களை ஒத்ததாகவே இருக்கின்றது . நம் எண்ணங்களோ , நம்முடைய புரிதல்களைத் தாண்டியதாக இருக்க முடியாது . இதனால் புரிதல்களே அடிப்படையாக இருக்கின்றது . பணம் பற்றிய புரிதல் மிக முக்கியமாக இருப்பதால்தான் பணவளக்கலை அவசியமாகின்றது . உங்கள் குறிக்கோள் என்ன , உங்கள் கையில் இருப்பதை ( கிடைப்பதை ) வைத்து அதைச் சென்றடைவது எப்படி , நீங்களே உங்கள் எல்லை களைப் புரிந்துகொண்டு வகுத்துக்கொள்வது எப்படி என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள பணவளக்கலை உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் .


தலையை அடகு வைத்தாவது அமெரிக்காவுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டால் நிறைய சம்பாதித்துவிடலாம் என்கிற எண்ணத்தில் ஏழை ஒருவன் , அரை வயிறும் கால் வயிறுமாகச் சாப்பிட்டுச் சேர்த்தப் பணத்தில் கப்பல் ஏறுகிறான் . கப்பலேறியவுடன் அதில் இருக்கின்ற லைஃப் ஜாக்கெட்டை போட்டுக்கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்தான் . தன் பையில் இருந்த உணவுப் பொட்டலத்தை அவ்வப்போது எடுத்துச் சாப்பிட்டான் . கப்பலில் பயணம் செய்யும் மற்றவர்கள் ஆடிப் பாடி , கேளிக்கைகளில் ஈடுபட்டு கப்பலில் தரப்பட்ட சுவையான உணவை உண்டு களித்து இரவு தங்கள் அறைக்குச் சென்று உறங்கி மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் . நான்கு நாள் பயணம் முடிந்து அமெரிக்க துறைமுகத்தில் அனைவரும் இறங்கும்போது கப்பலின் அதிகாரி ஒருவர் அந்த ஏழையிடம் , " இந்தப் பயணம் முழுக்க நான் உங்களைக் கவனித்தேன் ! நீங்கள் ஏன் ஒரு மூலையில் உட்கார்ந்தே இருந்தீர்கள் . கப்பலில் தரப்பட்ட உணவைக்கூட சாப்பிட வில்லையே ! " என்று கேட்டார் , " என்னிடம் டிக்கெட் வாங்கத்தான் இருந்தது . ரூம் போடவோ ( கப்பலில் ) , சாப்பிடவோ காசு இல்லை . அதனால் தான் சாப்பாடு கட்டிக்கொண்டு வந்து ஒரு மூலையில் உட்கார்ந்துவிட்டேன் " என்றாராம் . காசு " அடப்பாவி ! கப்பல் பயண டிக்கெட்டின் விலை , ரூம் மற்றும் சாப்பாட்டை உள்ளடக்கியது என்று உனக்குத் தெரியாதா ? " என்று அவர் கேட்க , திகைத்துப்போய் " என் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் " என்று சொல்லியபடி கப்பலை விட்டு இறங்கினான் அந்த ஏழை மனிதன் . நம்மில் பெரும்பாலானோர் கப்பலில் பயணித்த அந்த ஏழையைப்போலவே , நமக்கு உரியவற்றை உலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் விவரமில்லாமல் நம் பயணத்தை முடித்துவிடுகின்றோம் . வாய்ப்புகள் நிறைந்த இந்த உலகத்தில் நமக்கேற்ற வாய்ப்புகளை கண்டறிந்து செயலாக்கினால் நாம் அனைவருமே வசதி வாய்ப்புடன் வாழ முடியும் . உலகத்தில் இருக்கும் அனைத்து சுக துக்கங்களையும் பணமே நிர்ணயிக்கின்றது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது . நாம் வாழும் உலகத்தில் வெற்றி என்பது பணரீதியாகவே அளவீடு செய்யப்படுகின்றது . இது சரியா , தவறா என்பதற்கான விவாதத்தை நடத்த இதுவல்ல சரியான உலகம் இயங்குவதற்கான காரணங்களை அறிவியல்ரீதியாக , ஆன்மிகரீதியாக , அரசியல் ரீதியாக , உளவியல்ரீதியாக எனப் பல்வேறு துறையினைச் சேர்ந்தவர்களும் பல்வேறு காரணங்களை சொல்கிறார்கள் . எத்தனைவிதமான காரண காரியங்கள் சொல்லப்பட்டாலும் அவற்றை எல்லாம் தாண்டி இன்றைக்கு உலகத்தை இயக்கும் ஒரு முக்கிய காரணி , பணம் . வாழ்வில் பணம் முக்கியமில்லை என்பதை ஒரு வாதத்துக்காக வைத்துக்கொண்டாலும்கூட , பணம் இல்லா விட்டால் வாழ்க்கையில்லை என்பதே நாம் வலிக்க வலிக்கப் புரிந்துகொள்ளும் உண்மை . இடம் ,குடை , என இந்தப் பணத்தைத் தேடிப் பெறுவதும் , அதைக் கையாள்வதும் மட்டுமே பெரியதொரு சவாலாக நம்மில் பெரும்பாலானோருக்கு இருந்துவருகிறது . வாழ்க்கை என்பது அந்தரத்தில் கம்பி மேல் நடக்கும் விஷயத்தைப் போன்றது . கம்பியின் மேல் நடப்பவர்கள் ஒரு குச்சி எதையாவது கையில் வைத்துக்கொண்டு பேலன்ஸ் செய்து நடப்பதை பார்த்திருப்பீர்கள் . வாழ்க்கை என்கிற கம்பி மேல் நடக்கும் வித்தையில் நாமும் பல விஷயங்களை பேலன்ஸ் செய்தால் நம் பயணம் முழுவதுக்குமான கேஷ் பேலன்ஸ் நம்மிடம் இருக்கும் . பேலன்ஸ் செய்வது ( சம நிலையை அடையச் செய்தல் ) எப்படி என்பதைக் கையாள்வதில்தான் வாழ்க்கையின் தாத்பரியமே இருக்கிறது . எதிலும் எப்போதும் பேலன்ஸ் தேவைப்படுகின்றது . கடுமையான , ஓய்வில்லாத தொடர் உழைப்பு உங்களை நோய்வாய்ப்படுத்திவிடும் . அதேசமயம் , உழைக்காமல் ஒரேயடியாக ஓய்வெடுத்தால் சோம்பேறியாகிவிடுவோம் . நடுநிலையான அளவான வேலையும் அளவான ஓய்வும் என்ற பேலன்ஸ் தேவைப்படுகின்றது . பணத்தை அதிகமாகச் செலவழித்தால் ஊதாரியாகிவிடுவீர்கள் . அத்தியா வசியத்துக்குக்கூட செலவழிக்காமல் இருந்தீர்கள் எனில் , கஞ்சனாகிவிடுவீர்கள் . இரண்டுக்கும் இடையே பேலன்ஸ் தேவைப்படுகின்றது .


 இதையும் தாண்டி சில மனரீதியான பிரச்னையும் பணத்தில் இருக்கிறது . பணத்தையும் கடவுளையும் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்திக்கொள்வது ! செல்வச் செழிப்புடன் இருப்பவர்களை ஆண்டவனின் அருளை முழுமையாகப் பெற்றவர்கள் என்கிறோம் . வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களை இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் என்று நினைக்கிறோம் . பணத்தை அள்ளிக் கொடுக்கிற கடவுள் சோதனையை அள்ளித் தருகிற கடவுள் என்று பிரித்து வைத்துக்கொண்டு வழிபடுகிறோம் . கெட்டவனுக்கு அள்ளித் தருவான் ; ஆனா , கடைசியில கைவிட்டுருவான் . நல்லவனுக்கு சோதனைகளை தருவான் : கைவிட மாட்டான் ! என்ற வசனம் பேசி பரவசப் படுகிறோம் . இதோடு முடிந்ததா ? ஏழை - பணக்காரன் என்கிற பாகுபாட்டைத் தாண்டி , ஏழை நாடுகள் - பணக்கார நாடுகள் என்றுகூட வகையாகப் பிரித்து வைத்திருக்கிறோம் . இத்தனை பாகுபாட்டுக்கும் காரணம் , எது எப்படிப் போனாலும் . பணரீதியான சுபிட்சமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம்தான் நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான இலக்காக இருக்கின்றது . அந்த இலக்கை நோக்கிப் போகும்போது நாம் சந்திப்பது எத்தனை போட்டிகள் , எத்தனை சவால்கள் , எத்தனை சவடால்கள் , எத்தனை அறிவுரைகள் , எத்தனை இழிவுரைகள் , எத்தனை வியாக்யானங்கள் !

No comments:

Post a Comment