Sunday 18 July 2021

ROLE OF CURRENCY IN ECONOMICS

 

ROLE OF CURRENCY IN ECONOMICS



பணம் என்றவுடனேயே எல்லோருக்கும் அதன் பலா பலன்கள்தான் நினைவுக்கு வரும் . இப்படிப் பலாபலன்கள் மட்டுமே நினைவுக்கு வருவதால் பணம் ஒருவிதமான இனம் புரியாத கலவரத்தைத்தான் மனித மனதில் உண்டு பண்ணுகின்றது . சமீபத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சி செய்தார்கள் . வங்கிக்குள் வரும் மனிதர்களுடைய நடவடிக்கையை வங்கிக்குள் நுழையும் முன் , வங்கிக்குள் நுழைந்த பின் என இரண்டு வகையாக பிரித்துப் பார்த்தபோது பல சுவையான விஷயங்களைக் கண்டறிந்தார்கள் . வங்கி என்பது பணம் குடியிருக்கும் இடம் . அந்த இடத்துக்குள் வரும்போது பலரும் ஒருவிதமான படபடப்புடன் செயல்படுகிறார்களாம் . மருத்துவமனை , கோயில் , பள்ளி போன்ற இடங்கள் எல்லாவற்றையும்விட வங்கிக்குள் வரும் போது மனிதர்களின் நடவடிக்கை கொஞ்சம் பரபரப்பாகவும் , தீர்க்கமாகவும் மாறிவிடுகிறதாம் . வங்கியில் மட்டுமல்ல , கொஞ்சம் பெரிய தொகையைக் கையாளும்போதே நமக்குள் ஒரு படபடப்பு வந்துவிடுவது நிஜம்தானே ! இதனால்தான் மனிதன் பணத்தை முக்கியமான விஷயமாகக் கருதுகின்றான் . கிட்டத்தட்ட வணங்கத் தகுந்த விஷயமாகவே மனிதர்கள் பணத்தைக் கையாளுகின்றனர் என்று சொல்கின்றார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள் . மிக மன நம்ப முடியவில்லை இல்லையா ? ஒரு சின்னப் பரீட்சை செய்து பார்ப்போம் . கதவு மூடப்பட்ட அறையினுள் மேஜையின் மீதிருந்து ஒரு வெள்ளைத் தாளைப் பறக்கவிட்டுப் பாருங்கள் . பிறகு அதே மேஜையில் இருந்து ஓர் ஆயிரம் ரூபாய் நோட்டை பறக்கவிடுங்கள் . வெள்ளைத்தாள் பறக்கும்போது உங்கள் நாடித் துடிப்பு எப்படி இருந்தது ? ஆயிரம் ரூபாய்த் தாள் பறக்கும்போது உங்கள் நிலை எப்படி இருந்தது ? நன்றாகவே மாறுபட்டிருந்தது , இல்லையா ? இதுதான் பணத்தின் பிரச்னை . பணமானது வெவ்வேறு முகங்களைக் கொண்டது . பாதுகாப்பு , பிரச்னை , வலிமை மற்றும் உந்துசக்தி என மூன்று முக்கிய விஷயங்ளை நமக்குத் தருவதாக இருக்கிறது . எப்படி ? நம்மிடம் பணம் இல்லாதபோது மட்டுமே இந்த உலகத்தின் குரூர முகத்தை நம்மால் முழுமையாகப் பார்க்க முடியும் . பணம் இல்லையென்றால் , நம் வாழ்க்கையை நம்மால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது . பணம் வைத்திருக்கும் யாரோ ஒருவர்தான் நம் வாழ்க்கையை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் . பணம் இருந்தால் நாம் மற்றவர் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த முடியும் . பணம் இருக்கும்போது பிரச்னை வந்தால் , அந்தப் பணத்தை வைத்துப் பிரச்னையை சரிசெய்துகொள்ள முடியும் . பணம் நமக்குப் பாதுகாப்பு , ஒப்புக்கொள்கிறோம் . ஆனால் , அது எப்படிப் பிரச்னை ஆகும் ? பணம் என்றவுடனேயே அதிகமாக சம்பாதிப்பது எப்படி , சம்பாதித்ததைக் கைநழுவவிடாமல் காப்பது எப்படி போன்ற பிரச்னைகள் மனதில் குடிகொள்ள ஆரம்பித்துவிடும் . இந்தப் பிரச்னைகள் நினைவுக்கு வருவதால்தான் பணம் என்றாலே பிரச்னை என்று நாம் நினைக்கிறோம் .



அடுத்தது , வலிமை . நாம் வாழும் சமுதாயத்தில் பணம் வைத்திருப்பவர்களை பெரிய மனிதர்கள் என்று எண்ணும் எண்ணம் பெரிதாக வளர்ந்து நிற்கின்றது . இதைத்தான் வலிமை என்கின்றோம் . நினைத்ததை வாங்க முடியும் என்ற நிலையும் பணம் வைத்திருப்பவருக்கு வலிமையைத் தருகின்றது . உங்களுக்கு நாளைக்கே பெரும் தொகை கையில் கிடைக்கின்றது . என்னென்ன செய்வீர்கள் ? அந்தப் பழைய வாஷிங்மெஷினை மாற்றிவிடவேண்டும் , பெரிய கார் வாங்க வேண்டும் , பெரிய வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் வருகின்றதில்லையா ! கடைசியாக , உந்துசக்தி . நம் சமுதாயத்தில் கிட்டத்தட்ட அனைத்து நிகழ்வுகளுமே பணம் சார்ந்ததாக இருக்கின்றது . பணம் என்பது உலகத்தில் இருக்கும் காற்று , நீர் போன்ற இன்னுமொரு விஷயம் என நினைக்காதீர்கள் . நீங்கள் யார் , என்ன செய்கின்றீர்கள் என்பதை முடிவு செய்வது உங்களிடம் இருக்கும் பணம்தான் . உலகத்தில் அனைவருக்கும் தரப்பட்ட நேரம் 24 மணி நேரம்தான் . இதில் நீங்கள் உழைப்பு என்ற எனர்ஜியை ( சக்தி ) தந்து சாப்பாட்டைத் தேடுகின்றீர்கள் . சம்பாதிக்கும் பணத்தில் நீங்கள் மீதம் வைக்கும் பணம் என்பது உங்களுடைய எனர்ஜிதான் . அதைச் சேமித்து வைக்கின்றீர்கள் . பிற்காலத்தில் அதை உபயோகிக்கவும் செய்கின்றீர்கள் . எந்த அளவுக்கு இந்த எனர்ஜியை சேமித்து வைக்கின்றீர்களோ , அந்த அளவுக்கு பவர்ஃபுல்லான ஆளாகின்றீர்கள் . பாதுகாப்பு , பிரச்னை , வலிமை , உந்துசக்தி ... இப்படி , பணம் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் . ஆனால் , ' நான் அதை நிறைய சம்பாதிக்க வேண்டும் . நீங்கள் பணம் சம்பாதிக்கிறீர்களோ இல்லையோ , அதுபற்றி கவலையே இல்லை பணம் பண்ண நினைக்கும் மனிதர்களிடம் இருக்கும் அடிப்படை மனோ பாவம் இது ! அனாவசியமாக அடுத்தவர்களைப் பணக்காரர்கள் ஆக்காதீர்கள் என்று சொல்வேன் நான் . இது ஒரு சுயநலமான எண்ணம் நீங்கள் நினைக்கலாம் . பணத்தைத் என தேவையற்ற காரணத்துக்காக நீங்கள் செலவிடும்போது உங்களை ஏழையாக்கிக்கொண்டு நீங்கள் செலவழிக்கும் பணத்தைப் பெறுகிறவரை பணக்காரர் ஆக்குகிறீர்கள் . இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் எனில் , தேவையில்லாத பொருளை தேவையில்லாத நேரத்தில் வாங்குவதால் , தேவையான பொருளை தேவையான நேரத்தில் வாங்க உங்களிடம் பணம் இல்லாது போகலாம் .


அடுத்து நமக்கு அடிக்கடி மனதில் தோன்றும் கேள்வி , பணம் மகிழ்ச்சியைத் தருகின்றதா ? இது ஒரு மிகப் பெரிய கேள்வி . பணம் இல்லாவிட்டால் மகிழ்ச்சி எங்கிருந்து வரும் என்று பணம் இல்லாதவர்களும் , நிறையப் பணம் இருக்கின்றது ; மகிழ்ச்சி என்பது எள்ளளவும் இல்லை என்று ஒரு சாராரும் சொல்லக் கேட்கின்றோம் .


பணம் இருப்பவரோ இல்லாதவரோ , அவரவருக்கு உரிய எல்லைகளைத் தாண்ட நினைக்கும்போது மகிழ்ச்சி மறைந்துபோகின்றது . பணம் என்பது மனிதனுடைய தேவைகளில் தலையாயதாக இருக்கின்றது . இதில் ஒரே ஒரு பிரச்னை , பணமும் வாழ்க்கையில் உள்ள இன்னபிற விஷயங்களும் ஒன்றாக இருக்கும்போதுதான் மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு கிடைக்கின்றது . தேவைக்காகப் பணம் சம்பாதிக்க முயலும்போதும் சரி , தேவைக்கு அதிகமாக பணம் சம்பாதிக்க முயலும்போதும் சரி , நாம் நம் குடும்பம் , நண்பர்கள் , ஏன் நம்மையே மறக்கும்போது பிரச்னைகள் பூதாகாரமாக ஆகிவிடுகின்றது . நம்மையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மறந்து நாம் பணம் சம்பாதிப்பதில் லயிக்கும்போது பணம் வரவாகவும் , மகிழ்ச்சி , பற்றாகவும் மாறி பற்றாக்குறையில் தவிக்க ஆரம்பிக்கின்றோம் . இந்த உலகில் பணம் தந்து வாங்கக்கூடியவை சில . பணம் தந்து வாங்க முடியாதவை சில . மனித வாழ்வுக்கு இந்த இரண்டும் ஒரு சீரான அளவில் சேர்ந்த கலவையாகத் தேவைப்படுகின்றது . பணம் நம் உணவில் உப்பைப் போன்றது . பணமும் சரி , அதைத் தேடுவதற்கான முயற்சியும் சரி , அளவாக இருக்கும் வரை வாழ்க்கை என்ற உணவு சுவையாக இருக்கின்றது . அது அளவுக்கு அதிகமாகப் போகும்போது சுவை குறைய ஆரம்பித்து , ஓர் அளவைத் தாண்டும்போது வாயில் வைக்க முடியாத அளவுக்குக் கெட்டுப் போய் விடுகின்றது . பெரும் பணம் செலவு செய்து ஓர் உயர் தர வெளிநாட்டு நாயை வாங்கினாலும்கூட , அது நம்மைப் பார்த்து வாலாட்ட கொஞ்ச நேரம் அதனுடன் செலவு செய்ய வேண்டும் . பெரும் பணம் தந்து நம்மை வாங்கியுள்ளாரே நம் எஜமான் என்று அதற்குத் தெரியாது . நேரத்துக்கு சோறு வைத்து , வாஞ்சையாகத் தடவித் தந்தால்தான் வாலை ஆட்டி வளைய வரும் . ஆகவே , வருமானத்தைத் தேடுங்கள் . கட்டாயமாகச் செலவுகளைக் குறையுங்கள் . சேமிப்பை அதிகமாக்குங்கள் . நஷ்டம் அடைவதைத் தவிருங்கள் . லாபகரமாக முதலீடுகளைச் செய்யுங்கள் . எதிர்கால வருமானத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் . உங்கள் வருமானம் தொடர்ந்து அதிகரிக்கிறதா என்று கவனியுங்கள் . இந்தப் பணவிதிகள்தான் எல்லோருக்கும் எக்காலத்திலும் பொருந்துவது .  சுலபமாக

விதிகள் இருந்தாலும் அதற்கு விளக்கங்கள் நிறையவே தேவைப்படுகின்றது . அந்த விளக்கங்களைத் தருவதுதான் பணவளக்கலையின் முக்கிய நோக்கம் . 

No comments:

Post a Comment