Tuesday 27 July 2021

JEYANTHI ,ONE OF THE SOUTH INDIAN LEGEND ACTRESS BIOGRAPHY

 

JEYANTHI ,ONE OF THE SOUTH INDIAN 

LEGEND ACTRESS BIOGRAPHY



நாட்டிய தாரகை ஆக வேண்டும் என்று பெற்று பெயரிட்டு வளர்த்தார் போல இவரை,இவரது அன்னை.
இயற் பெயர் கமல குமாரி...

ஸ்ரீ காள ஹஸ்தியில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி ஒரு நாட்டிய பள்ளியில் நடனம் கற்று கொண்டிருந்தாராம் கமல குமாரி..
வாஹினி ஸ்டுடியோ வில் ஒரு தெலுகு படம்...
மாயா பூதம் என்று பெயர்...
சூட்டிங் பார்க்க தாயோடு போக,அங்கிருந்த ஒரு அன்பர் உற்று உற்று பார்த்து கொண்டிருந்திருக்கிறார் கமல குமாரியை..
பின் அருகே வந்து குழந்தை கிருஷ்ணனுக்கு பாலூட்டுவது போல ஒரு சிறு வேடம்....செய்ய முடியுமா?
என்று கேட்டிருக்கிறார்.
முதலில் கமல குமாரியின் தாயார் மறுத்தாலும் அவரை சம்மதிக்க வைத்து அன்றே படப்பிடிப்பும் நடந்து விட்டதாம்..

மறுநாள் அதே நபர் சிவராம் என்கிற தெலுங்கு நகை சுவை நடிகரோடு வந்து
சமாஜம் என்கிற தெலுங்கு படத்தில் சிறு வேடம் ஒன்றில் நடிக்கிறாயா?
என்று கேட்க கமல குமாரி உடனே சம்மதித்து விட்டார்.

சிவராம் மறுநாள் படப்பிடிப்பு முடிந்த வுடன் தன் வீட்டிற்கு கமல குமாரியை அழைத்து சென்றாராம்.
அவரின் மனைவி பிரபாவதி உடன் பிறந்த சகோதரி போல் அன்பு காட்டியிருக்கிறார்..




மறுநாள் சிவராம் வீட்டிற்கு வந்து என்னை 

திருமணம் செய்து கொள்,நான் உனக்கு பாதுகாப்பாக இருக்கிறேன்..
நல்ல வாய்ப்புகள் வாங்கி தருகிறேன்,
வாய்ப்பு கிட்டா விட்டாலும் சரி..என் மனைவி என்கிற மதிப்பு உண்டு என்று சொல்லியிருக்கிறார்.
கமல குமாரியும் அவரது அம்மாவும் சம்மதித்து விட்டார்கள்..

அவ்வளவு தான்.கமல குமாரி ஜெயந்தி ஆனார்..
சிவராம் வைத்த பெயராம் அது..
ஒரு ஆண்டுக்கு பிறகு வா,ஒரே வீட்டில் அக்கா பிரபாவதியிடம் சொல்லி விட்டேன்..இனி ஒரே வீட்டில் தான் வாசம் என்று அழைத்து போய் விட்டாராம் பெகட்டி சிவராம்..
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் இருவருக்காக என்று சிவராமை ஏற்று கொண்டார்களாம் இருவரும்..

பால சந்தர் படங்களை தவிர்த்து அவர் நடிக்க வில்லை என்றே எண்ணியிருந்தேன்...




1990 ஆம் ஆண்டில் முதன் முறையாக இருவர் உள்ளம் படம் பார்த்தேன்..
முதல் பாட்டிலேயே நடிகர் திலகத்தோடு பறவைகள் பலவிதம் என்று ஆடி கொண்டிருந்தார் ஜெயந்தி..

பிறிதொரு நாள் அன்னை இல்லம் படதிற்கு சென்றால் அதில் நாகேஷுக்கு ஜோடி..தேவிகாவிற்கு தங்கை என்று நினைவு..

என்ன இல்லை எனக்கு என்ற பாடலில் நாகேஷின் பித்து குளி தனத்திற்கு தலையில் அடித்து கொண்டிருப்பார் ஜெயந்தி..

நீர் குமிழி,பாமா விஜயம்,எதிர் நீச்சல்,இரு கோடுகள் அப்புறம் அந்த புன்னகை.....
ஆணையிட்டேன் நெருங்காதே!
அன்னை இனம் பொறுக்காதே..பாடல்..
நூற்றுக்கு நூறு படத்தில் இருக்கிறாரா என்ன?
எனக்கு தெரிய வில்லை..

பாமா விஜயத்தில் இரண்டு பாடல்கள்...
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே..

ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணய்யா..
அங்கே நீ பார்த்து வந்த ஆட்டம் என்ன கிருஷ்ணய்யா..
அதுக்கிது சுவையில்லையோ..

புதுப்புது கதையில்லையோ..
சாது மிரண்டது போதுமா
ஆடி குலுங்குது வேகமா..
அச்சமா நாணமா
இன்னுமா வேண்டுமா?

அதிரடி பாடல் அது.
ஜீஞ்சாமிர்தம் என்பார்களே,அது..

முந்தானை முகவுரையோ
முக்கனிக்கு ஒன்று குறையோ
செந்தேனில் தெளிவுரையோ
தேன் தரும் முடிவுரையோ..
தேவாமிர்தம் தெரியுமோ?
இதேதான் அது..

தாமரை கன்னங்கள்
தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்...

இரு கோடுக்களும் புன்னகையும் இரண்டு மைல்கல்கள்கள் இவருக்கு..

வானிலையில் ஈர பதம் இருக்குமோ என்னவோ
இவர் குரலில் ஈர பதம் நிரம்ப உண்டு..
கிறங்க அடிக்கும் குரல்..
தேவதை படம் நான் பார்க்க வில்லை..

ஆனாலும் கலீர் கலீர் காலம் தள்ளாடுது
முன்னேறுது..
நூலாய் என் வாழ்க்கைதான்..பாடல் மிக பிடிக்கும்..

ஆழ்ந்த துயருடன் அவரையும் அந்த குறலையும் நினைத்து கொள்கிறேன்.



Awards[edit]

Karnataka State Film Awards
Filmfare Awards South
Others
  • Padmabhushan Dr. B. Sarojadevi National Award, 2017[12]

Partial filmography[edit]

Kannada films[edit]

Tamil films[edit]

This list is incomplete; you can help by expanding it.

Malayalam films[edit]

Telugu films[edit]

This list is incomplete; you can help by expanding it.

Hindi films[edit]

English shows[edit]

TV Serials[edit]

  • Vasantham (2009-2010) as Mangalam (Tamil)
  • Amrutha Varshini as Janaki Devi (Kannada)
  • Onde Goodina Halligalu (Kannada)

No comments:

Post a Comment