MARINA BEACH HISTORY ,BIOGRAPHY
சென்னைக்கு பெரும் வரம் அந்த கடற்கரை, அதுவும் துறைமுகத்தை அடுத்து மிகபெரிய கொடை அந்த நீண்ட கடற்கரை.
பிரிட்டானியர் காலம் வரை அதற்கு அந்நிய பெயர் இல்லை
சென்னை ஆளுநராக இருந்த ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டன் என்பவர் அந்த கடற்கரைக்கு மெரீனா என பெயரிட்டார்
மெரீனா என்பது லத்தீனில் ஒரு வார்த்தை,அந்த வார்த்தைக்கு அழகிய கடற்கரை, கடல் அருகே செல்லும் நீண்ட சாலை என பல பொருள் வரும், கடல் தொடர்பான வார்த்தை அது.
இன்றும் அவர்கள் கப்பல் படை மரைன் படை, சப் மரைன் படை என வருவது அப்படியே
ஆக கடற்கரைக்கே கடற்கரை என அறிவார்ந்த பெயர் சூடினான் அந்த கலெக்டர், அதுவும் நிலைத்து தொலைத்துவிட்டது
1881ல்தான் அந்த பெயர் சூட்டபட்டது, 1900களிலே அது அரசியல் களமாயிற்று
மன்னர்களின் ஆயுதபோராட்டம் தோற்றபின் அடுத்த போராட்டம் நாடெங்கும் மக்களை திரட்டி வெறும் 60 ஆயிரம் பேர் கூட இல்லாத பிரிட்டன் அரசை விரட்ட எழும்பிற்று
திலகர், பாரதியார், சுப்பிரமணிய சிவா லாலா லஜபதிராய், நீலகண்ட பிரம்மாச்சாரி, சட்டர்ஜி, விபின் சந்திரபால், சி.ஆர் தாஸ், வ.உ.சி போன்றோர் அடங்கிய அந்த குழு அதை நாடெல்லாம் செய்தது
அப்பொழுது சென்னை மாகாணம் என அழைக்கபட்ட தென்னகத்தில் அதாவது இன்றைய ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாகாணம் அடங்கிய பெரு நிலபரப்பில் சென்னை மையகளமாக இருந்தது, பெரும் கூட்டமெல்லாம் அங்குதான் நடந்தது
எல்லா தலைவர்களும் அங்கு முழங்கினார்கள், திலகர் முதல் வ.உசி வரை எல்லா தலைவர்களின் வீரமுழக்கமும் அங்குதான் ஒலித்தது
"சுதந்திரம் எமது பிறப்புரிமை" என்ற அந்த புகழ்பெற்ற முழக்கம் அங்குதான் முழங்கியது
பாரதி "ஜெயபேரிகை கொட்டடா.." என பாடியதும் அங்குதான் "வந்தே மாதரம் என்போம்" என முழங்கியதும் அங்குதான்
திலகர் அடிக்கடி வந்து பேசியதாலும் அன்று திலகர் மிகபெரும் தலைவராக இருந்ததாலும் அந்த கடற்கரை திலகர் திடல் என்றே அறியபட்டது
மெரினா கடற்கரையில் மாநில கல்லூரி எதிரே, கண்ணகி சிலை அருகே உள்ள அந்த பகுதிதான் அடிக்கடி திலகர் நின்று முழங்கிய இடம்
1908ம் ஆண்டில், திலகரின் நினைவாக சுப்பிரமணிய சிவா மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோர் இந்த இடத்துக்கு "திலகர் பூமி' என்று பெயர் சூட்டினர்.
அது திலகர் திடல் என்றே நெடுங்காலம் அழைக்கபட்டது
அந்த கடற்கரை சாதாரண இடம் அல்ல,தேசிய போராட்டம் உருபெற்ற கருவறை. பெரும் பெரும் முடிவுகளெல்லாம் அறிவிக்கபட்ட மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க நினைவிடம்
காந்தி அங்குதான் தன் பிரசித்திபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார், அவரின் பெரும் போராட்டங்கள் அங்குதான் செய்யபட்டன.
காந்தியும், நேருவும், நேதாஜி உள்ளிட்ட காங்கிரஸின் இரண்டாம் அலை தலைவர்களும் அங்குதான் முழங்கினார்கள்
பெண் போராளி துர்காபாய் தேஷ்முக் தலைமையில் இந்த இடத்தில் ஏராளமான பெண்கள் திரண்டு உப்பு சத்தியாகிரகம் செய்ததும் இங்குதான்.
சுதந்திரம் கிடைத்ததும் மக்கள் கூடி, ஆனந்த கண்ணீர் விட்டு விழுந்து மண்ணை முத்தமிட்டதும் அங்குதான்
எல்லா தேசிய தலைவர்களும் பேசிய இடம் அது, எல்லா தலைவர்களும் உலாவிய புண்ணிய மண் அது
அது பஞ்சாபின் ஜாலியன் வாலாபாக் போல இன்னும் குஜராத்தின் சமர்மதி போல, வங்கத்தின் பெரும் அடையாளம் போல காக்க படவேண்டிய பூமி
திராவிட நாடு உள்ளிட்ட எல்லா கோரிக்கையும் அங்குதான் எழுந்தது, இந்தி எதிர்ப்பெல்லாம் அங்குதான் பேசபட்டது
எந்த இடம் இந்திய விடுதலைக்கு அச்சாரமானதோ அதே இடத்தில் பிரிவினை பேசி மகிழ்ந்தது திராவிட கூட்டம்
சிங்கம் உலாவிய இடத்தில் நரிகள் கும்மாளமிட்டன, கோவில் வளாகத்தில் சாத்தான்கள் கூட்டம் நடத்தி கொக்கரித்தன
காலம் அவர்களுக்கு கட்டுபட்டது, ஒரு கட்டத்தில் பாரதி அமைத்த அந்த திலகர் கட்டடம் எனும் கல்வெட்டே நாசமானது
ஆம் சீரணி அரங்கம் எல்லாம் அமைத்து அதை திமுகவின் சொத்து என மாற்றி கொண்டார்கள்
தொடர்ந்து அந்த கடற்கரையில் தேசிய நினைவுகள் சமாதியாக்கபட்டு அதில் திராவிட விஷம் கலக்க முழு முயற்சியினையும் ஆத்ம சுத்தியுடன் செய்தார் கருணாநிதி
அதுவரை அங்கு எந்த பெரும் தலைவரும் அடக்கம் செய்யபட்டதில்லை, திலகர் திடல் எனும் தேசிய பெயரை மறைக்க அண்ணாவின் உடலை அடக்கம் செய்து பெரும் அழிச்சாட்டியம் செய்தார் கருணாநிதி
அண்ணாவினை அடக்கம் செய்ய இடமா இல்லை? அதுவும் அரசு நினைத்தால் முடியாதா?
தேசியம் மறைக்கபட வேண்டும் என்ற ஒரே வன்மத்தில் கடற்கரையினை நாசமாக்க தொடங்கினார்.
அதுவரை திலகர் திடல் என அறியபட்ட இடத்தி கண்ணகி சிலை வந்தது இன்னும் என்னெவெல்லாமோ வந்தது
தேசியவாதிகள் பொங்கினர், அதில் குமரி அனந்தன் முக்கியமானவர். ஆனால் காங்கிரசில் தன் கைகூலிகளை வைத்து ஆடிய கருணாநிதி முன் அவரால் நிற்க முடியவில்லை
டெல்லி காங்கிரசுக்கும் திலகரை பிடிக்காது பாரதியும் பிடிக்காது இதனால் அவர்களும் கள்ளமவுனம் காத்தனர்
விளைவு அந்த மாபெரும் தேசத்தின் புண்ணியஸ்தலம் திராவிட சவங்களின் சுடுகாடானது, எண்ணிக்கை 4 ஆயிற்று
திலகர் திடல் என்றும், தேசத்தின் அரங்கம் என கொண்டாடபட்ட அந்த கடற்கரை "அண்ணா சதுக்கம்" என்றாயிற்று. அது லெனின் ஸ்குவர் எனும் ரஷ்ய சதுக்கத்தின் அப்பட்டமான காப்பி, கருணாநிதிக்கு ஒரு காலமும் சொந்த புத்தி கிடையாது.
அந்த கடற்கரையில் இன்னும் என்னென்ன கொடுமைகளோ நடந்தது, நெற்றில் திறு நீறு இல்லா அவ்வையார், பூனூல் இல்லா வள்ளுவன், குங்குமம் இல்லா பாரதி சிலைகள் வந்தன அப்படியே திராவிட குழப்பத்தை தொடங்கி வைத்த கால்டுவெல் எனும் ஐரோப்பியனுக்கும் சிலை வந்தது
திலகர் திடல் எனும் பெயரே மறைந்தது
ஆனால் காலம் ஜெயா வடிவில் கைகொடுத்தது, நிச்சயம் ஜெயலலிதாவின் அந்த செயல் வாழ்துகுரியது
மதுரையினை தன் மகன் அழகிரியிடம் ஒப்படைத்த கருணாநிதி, மதுரையில் தன் கட்சிக்காரர்களை வன்முறை கூட்டமாக மாற்றி வைத்த கருணாநிதி மதுரையினை விட்டு சென்னையில் கண்ணகி சிலை திறந்தார்
மதுரையில் கண்ணகிக்கு பெரும் அடையாளம் ஏதுமில்லை, இதுதான் கருணாநிதி
ஜெயா துணிச்சலாக கருணாநிதி திலகர் திடல் பெயரை மறைக்க வைத்த கண்ணகி சிலையினை பெயர்த்தார், அய்யயோ தமிழச்சி என கருணாநிதி பொங்கிய அரசியல் எடுபடவில்லை
மேற்கொண்டு சீரணி அரங்கத்தை இடித்து தள்ளினார், அது வாழ்த்துகுரியது. ஒரு தேசவிரோத நினைவு கட்டடம் அது
குமரி அனந்தன் தொடர்ந்து போராடினார், தனி மனிதனாக முதலில் போராடினார்
பின் அவருக்கு சில உதவிகள் கிடைக்க தொடங்கின பாரதி மணி பத்திரிகை அதில் முக்கியமானது
பாரத மணி இதழின் ஆசிரியரும், காந்தி தரிசன கேந்திரத்தின் தலைவருமான பி.என். சீனிவாசன் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதில் வழக்கறிஞர் ஆர். காந்தி ஆஜராகி வாதாடினார்.இந்த வழக்கில், "திலகர் கட்டம்' நினைவு கல்வெட்டு நிறுவ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின் 2010ல் அது திறக்கபட்டது வேண்டா வெறுப்பாக அமைதி காத்தார் கருணாநிதி, காரணம் ஈழ சிக்கலால் தான் ஒரு இந்தியன் எனும் காட்ட வேண்டிய அவசியம் இருந்தது
எனினும் அந்த திலகர் திடல் பெயரை ஒழிக்க, அந்த கல்வெட்டை ஒழிக்க, பாரதியின் கல்வெட்டு போல் இதையும் ஒழிக்க அவர் வாய்ப்பினை அவர் தேடி கொண்டே இருந்தபொழுதுதான் அவர் ஆட்சி முடிவுக்கு வந்தது
இதனால் திலகர் திடல் கல்வெட்டு இன்றும் எஞ்சியிருக்கின்றது
இன்று திலகரின் நினைவு நாள், திலகரும் பாரதியாரும் சிந்தையால் பிரிக்கமுடியாதவர்கள், இந்த இருவரின் உயிருக்கும் உருவமாக வாழ்ந்தவர் வ.உ சிதம்பரம் பிள்ளை
எட்டயபுரம் , நெல்லை, காசி, புதுச்சேரிக்கு பின் பாரதி அதிகம் நடந்தது அங்குதான், அவன் உற்சாகமாக பாடி பாடி மகிழ்ந்ததும் அங்குதான்
திருவல்லிக்கேணியில் பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவரது பல்வேறு இலக்கிய படைப்புகள் உருவாகக் காரணமான "காவிய கருவறையாக' அந்த இடம் திகழ்ந்தது.
அவரின் கடைசி காலங்களி, ஞானமும் அறிவும் சுடரிவிட்ட காலங்களில் அவன் அங்குதான் நடமாடி அமர்ந்து நண்பரோடு பேசி மகிழ்ந்து, தனித்து அழியா பாடல்களை எழுதினான்
"சிந்து நதியின் இசை நிலவினிலே" முதல் "வெள்ளிபனிமலை மேல் உலவுவோம், மேலை கடல் முழுக்க கப்பல் விடுவோம்" என அங்கிருந்துதான் பாடினான்
உணர்ச்சி பெருக்கில் அவன் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக கருதினான் , 1947ல் சென்னை கடற்கரையில் மக்கள் ஒன்று கூடி மண்ணை முத்தமிட்ட காட்சியினை அன்றே நினைத்து கண்ணீர் பொங்க "ஆடுவோமே பள்ளி பாடுவோமே.." என அவன் மகிழ்ச்சி கூத்தாடினான்
அந்த கடற்கரை பழையபடி தன் பெருமையினை மீட்டல் வேண்டும், திராவிட கல்லறைகளை வேலி போட்டு ஒதுக்கிவிட்டு திலகர் திடல் உள்ளிட்ட பகுதிகள் தேசிய அடையாளபடுத்தல் வேண்டும்
திராவிட கல்லறைகள் அங்கு இருக்கட்டும், வருங்கால சந்ததிக்கும் தமிழகத்தை சுமார் 70 ஆண்டுகாலம் கெடுத்த கட்சி அது என்பதை உணர்த்தும்படி அது இருக்கட்டும்
அவர்களால் தமிழகம் எவ்வளவு கெட்டது, தேசியம் எவ்வளவு அழிந்தது, எவ்வளவு கொடூரங்கள் இங்கு நிகழ்ந்தது என்பதையும், இனி எக்காலமும் திராவிடம் இங்கு பேசபடவே கூடாது என சொல்லும் விதமாகவும் அது இருக்கட்டும்
அதை பார்த்து பார்த்து வருங்கால சந்ததிகள் கவனமாய் வளரும்படி அவை இருக்கட்டும்..
அதோ அந்த திராவிடம் அருமை இந்திய தேசியத்தை அழித்தது, இந்திய தேசியம் மறுபடி எழும்பிற்று என சொல்லும்படி திலகர் திடல் பளிச்சென மின்ன வேண்டும்.
இதுகாலமும் நம்ப யாருமில்லை, டெல்லி தலைவர்கள் தமிழரை அரவணைத்ததுமில்லை தமிழ்வரிகளை உச்சரித்ததுமில்லை
முதல் முறையாக மோடி தமிழர்பால் திரும்புகின்றார், பாரதியினை அவர் கொண்டாடுகின்றார்
இனி மோடி சென்னைக்கு வரும்பொழுது திலகர் திடலுக்கு வரவேண்டும், இந்திய சுதந்திர போரட்ட விளை நிலமாக, இந்திய சுதந்திர போராட்டத்தை முடிவு செய்யும் இடமாக இருந்த அந்த இடத்துக்கு வரவேண்டும்
வந்து மலர்மாலையிட்டு வணங்க வேண்டும்
இக்காலம் ஒவ்வொரு இடமும் தன் பழம் பெருமையினை மீட்டுவரும் காலம், பழம் வரலாறு திரும்பும் காலம்
இதனால் மெட்ராஸ் எனும் போர்த்துகீசிய பெயர் சென்னை என மாறியது போல், அந்த கடற்கரை பெயர் மெரினா என்பதில் இருந்து பாரதி கடற்கரை என மாறட்டும்
அந்த பெரும் சிறப்பினை மோடி செய்யட்டும்
கடற்கரைக்கு மெரீனா என அந்நிய மொழியில் கடற்கரை என அழைக்கபடும் அந்த விசித்திரமான பைத்தியகாரதனம் ஒழியட்டும்
பாரதியின் சுவாசம் கலந்த அந்த கடற்கரையில், அவன் பாதம் நடந்த அந்த கடற்கரையில், அவன் கால்களை தழுவி சென்ற அந்த அலைகள் அவன் பெயரை ஓங்கி ஒலிக்கட்டும்
இது நடக்கும், நடந்தாக வேண்டும், பாஜக இதை கட்டாயம் செய்யும் என நம்புவோம். அவர்களும் யோசித்தால் பின்னொரு நாளில் இன்னொருவர் வந்து அதை கட்டாயம் செய்வார்கள்
அது "சுப்பிரமணிய பாரதியார் கடற்கரை" என ஒரு காலம் நிச்சயம் பெயர் பெறும், அதைவிட பெருமை அக்கடற்கரைக்கு என்ன உண்டு?
திலகர் நூற்றாண்டுவிழா கொண்டாட தொடங்கியிருக்கும் மோடி அரசு, சென்னை கடற்கரையில் திலகர் திடலில் மறைந்துகிடக்கும் பெரும் வரலாற்றினை வெளிகொணர்ந்து அந்த மகானுக்கு மாபெரும் சிலை அமைத்து அவர் நினைவினை போற்றட்ட்டும்
ஜெய்ஹிந்த்.. வந்தே மாதரம்
Stanley Rajan பதிவு
No comments:
Post a Comment