MUTHULAKSHMI REDDY ,ACTIVIST 1886 JULY 30 - 1968 JULY 22

 


MUTHULAKSHMI REDDY ,ACTIVIST  

1886 JULY 30 - 1968 JULY 22

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகநீதிப் போராளியுமான #முத்துலெட்சுமி மறைந்த நாள் 22 ஜூலை 1968 இன்று..



இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடிய முத்துலட்சுமி, தனது சட்டமன்றச் செயல்பாடுகளின் ஊடாக தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், பாலிய விவாகங்களைத் தடை செய்யும் சட்டம் உள்ளிட்டவை கொண்டு வரப் போராடினார். இவரின் முயற்சியால் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்பட்டது.


இரண்டு பெண் குழந்தை பெற்றால் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு இன்னொரு பெண்ணை கோவிலுக்கு நேந்துவிட்டு தேவதாசியாக ஆக்கி விடுவது என்ற அவலநிலை அன்றிருந்தது.


20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவடியாக்கள்) இருந்ததாக தெரியவருகின்றது.


கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிருவாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.


 இன்றைய இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியாது. இன்றைக்குப் பெண்களைப் பார்த்தீர்களேயானால் கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள், டாக்டர்கள், நீதிபதிகளாக வருகிறார்கள். இவர்களுக்கு அன்னை முத்துலட்சமி செயல்பாடுகளும், பெரியாரின் சமூக சீர்திருத்தங்களையும் பற்றி தெரிய வாய்ப்பில்லை.



முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டான். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண்விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.


இதற்கு பார்ப்பன பரதேசிகள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராடவைத்தனர்.


இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்கள்.


அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்க தயாராக இருந்தார்.

 

அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினான். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றான்.


அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பாப்பானர்களை பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள். 


இனிமேல் அந்தத் தொண்டை உங்க உயர் சாதி பெண்களே செய்யட்டும். நீங்களும் புண்ணியம்  சேர்த்துக்கொள்ளுங்கள் என்று பேசினார். உங்கள் பிராமண பெண்களே தேவிடியா பணி செய்யட்டும். அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கேட்டுபோகாது என்றார்.


இதை கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வ கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது. இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழுப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

த.ப.கோ.அந்தியூர்💐💐💐

👍🏻👏🏻🌸🌺🌲👌🍇🌷😂🙏🏻


.முத்துலட்சுமி ரெட்டி (சூலை 30, 1886 - சூலை 22, 1968) இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார்.

பிறப்பு

இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர்.


சொந்த வாழ்க்கை

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழைய பஞ்சாங்கம் கோலோட்சிய அந்தக் காலக் கட்டத்தில், எதிர் நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரது தந்தை ஊக்கமளித்தார். ஆனால், வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை. உள்ளூர் கல்லூரியிலோ பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது.


இந்தச் சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர 4.2.1904 அன்று விண்ணப்பித்தார். அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சில பழைமைவாதிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.


அதில் வெற்றி பெற்ற பிறகு, சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கல்வி தடைபட்டது. மேலும், அவரது தாய் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்துபோனார். நோயும், அதன் கொடுமைகளையையும் நேரில் அனுபவித்ததால், மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்கு எழுந்தது.


இதைத் தொடர்ந்து, 1907 -ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் பெண்ணான முத்துலட்சுமி படிப்பில் சிறந்து விளங்கி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புச் சான்றிதழ்களும், தங்கப் பதக்கங்களும் பெற்று, 1912-ல் நாட்டின் முதல் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார்.


திருமணத்தில் ஆர்வம் இல்லை. [சான்று தேவை]அவருடைய விருப்பம் படிப்பிலும், சமூகப் பணியிலும் இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனத்தில் கொண்டு திருமணத்திற்குச் சம்மதித்தார். அவருடைய கணவர் டி. சுந்தரரெட்டி அடையாற்றில் அன்னிபெசன்ட் (Anni Besant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தார். அங்கேதான் முத்துலட்சுமி - சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடந்தது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி, தாய் - தந்தையைப் போல ஒரு மருத்துவர். புற்றுநோய் நிபுணராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்.[1]


தமிழ்ப் பணிகள்

இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார். மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தருமம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.


சமூகப்பணி

1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்னும் பெருமையைப் பெற்றவர்.

சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.

அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.

1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம்,பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.

அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.

சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.

விருதுகள்

முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956 இல் பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது.


மறைவு

முத்துலட்சுமி 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார். [2]

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER