AYUBKHAN ,PAKISTANIC FIRST DICTATOR - BROUGHT MARTIAL LAW OCTOBER 7,1958
AYUBKHAN ,PAKISTANIC FIRST DICTATOR - BROUGHT MARTIAL LAW OCTOBER 7,1958 அயூப் கான் எனப் பொதுவாக அறியப்படும் முகம்மது அயூப் கான் (மே 14, 1907 – ஏப்ரல் 19, 1974), 1960 களில் ஃபீல்ட் மார்ஷலாக இருந்து பின்னர் 1958 தொடக்கம் 1969 வரையான காலப் பகுதியில் பாகிஸ்தானின் சனாதிபதியாகப் பதவி வகித்தார். 1951 ஆம் ஆண்டில் இவர் பாகிஸ்தான் இராணுவத்தின் முதல் உள்ளூர்த் தலைமைத் தளபதி (Commander in Chief) ஆனார். பாகிஸ்தான் படைத்துறை வரலாற்றில் முழுமையான ஜெனரல் பதவியைப் பெற்ற மிக இளம் வயதினராகவும், தனக்குத்தானே பீல்ட் மார்ஷல் என்னும் பதவி அளித்துக் கொண்டவராகவும் இருந்தார். பாகிஸ்தானில் சதிப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய முதல் படைத்துறைத் தளபதியும் இவரே. இளமைக் காலம் வடமேற்கு எல்லை மாகாணத்தில் உள்ள ஹரிப்பூர் மாவட்டத்தின் ரெகானா என்னும் ஊரில் தரீன் இனக்குழுவைச் சேர்ந்த மிர் டாட் கான் என்பவரது இரண்டாம் மனைவிக்கு முதல் மகனாக அயூப் கான் பிறந்தார். அயூப் கானின் தந்தை அரச இந்தியப் படைத்துறையின் குதிரைப் படைப் பிரிவொன்றில் பணியாணை பெறாத (non-commissioned) தரத்து அதிகாரியாகப் பணிபுரிந்து வந்...