PUTTABARTHI ,SRI SATYA SAIBABA BORN 1926 NOVEMBER 23-2011 APRIL 24
PUTTABARTHI ,SRI SATYA SAIBABA BORN 1926 NOVEMBER 23-2011 APRIL 24 சிறீ சத்ய சாயி பாபா (Sathya Sai Baba, தெலுங்கு: సత్య సాయిబాబా,: நவம்பர் 23, 1926- ஏப்ரல் 24, 2011[1]) தென்னிந்திய ஆன்மிக குரு. இவரது அடியார்களினால் இவர் "இறை அவதாரம்" எனப் போற்றப்படுகிறார்[2]. இவர் ஒரு சித்தரும் ஆவார்[3][4][5]. விபூதி தருவித்தல், மேலும் மோதிரங்கள், சங்கிலிகள், கடிகாரங்கள் போன்ற சிறிய பொருட்களை தருவித்தல் போன்ற இவரது செய்கைகளினால் இவர் மீது உலக நாடுகளில் பலத்த சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இவை எளிய வித்தைகளே என பகுத்தறிவாளர்கள் நிரூபித்து உள்ளார்கள்.[6] ஆனாலும் இவற்றை இவரது பக்தர்கள் இறைவனின் அற்புதம் என கருதுகின்றனர்[7]. சத்திய சாயிபாபா தனது 14வது அகவையில் சீரடி சாயி பாபாவின் மறு அவதாரம் எனத் தன்னை அறிவித்துக் கொண்டார்[8]. சத்திய சாயிபாபா நிறுவனம் தனது சாயி அமைப்புகள் மூலம் இலவச மருத்துவ நிலையங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், கிராமங்களுக்கு குடிநீர்த் திட்டம் போன்ற பல சமூகநலத் திட்டங்களை இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. இவரது ஏறத்தாழ 135...