கீழ் வெண்மணி கொலை வழக்கு 44 பேர் கொளுத்தப்பட்டனர் கருணாநிதியின் சதிவேலை -சாதிமோதல் என்று வழக்கு முடிப்பு
கீழ் வெண்மணி கொலை வழக்கு 44 பேர் கொளுத்தப்பட்டனர் கருணாநிதியின் சதிவேலை - சாதிமோதல் என்று வழக்கு முடிப்பு அரவம் திரியவும் அஞ்சிடும் முன்பனி கறவை மாடும் கண்திறவாத அதிகாலை சேவல் கூவும் முன்னே பண்ணையின் கொம்பூதும். மடையின் கைநீரள்ளி முகம் கழுவி வயலுக்கு ஓடவேண்டும் கூலிவிவசாயி. இரண்டாவது கொம்பொலிக்கு நெஞ்சுக் கலயம் உடையும் வண்ணம் கஞ்சிக் கலயத்துடன் ஓடவேண்டும் பெண்கள் கழனிக்குள் இறங்கியவுடனேயே “ஓ” வெனும் ஓசையெழுப்பி உழைக்கத் தொடங்கியதை நிலவுடமையாளனின் உலை மனதில் பதிய வேண்டும் உழைக்கும் மக்கள். நாற்றங்கால் சேற்றுத் தண்ணீரில் உச்சிக்கு வந்த கதிரவன் தட்டுப்படும்போதே சோற்றுக் கலயத்தை தொட அனுமதியுண்டு. வெறும் வயிற்றில் துடித்து விழும் வியர்வையின் சூடு பட்டு வயல் நண்டு துடித்தோடும். களைத்த விரல்களுக்கு பழஞ்சோறு இதமாகும். ஓரிரு பருக்கைகளுக்கு உதடுகள் தடுமாறும் பட்டமிளகாயும், உப்பும் பரிதாபப்பட்டு நீராகாரத்தில் விழுந்த சூரியனும் தொட்டுக்கை. சூரியனிருக்கும் வரைச் செய்யும் “கொத்து வேலை” எப்போதாவது, அரிக்கேன் விளக்கொளியில் கண்ணெரியும் வேலை எப்பொழுது...