Posts

Showing posts with the label எஸ் பி பாலசுப்ரமணியம்.

பாலு என்ற எஸ் பி பாலசுப்ரமணியம்

Image
பாலு என்ற எஸ் பி பாலசுப்ரமணியம்  பாட்டுப் பாடுவது பாலுவின் ரத்தத்திலே ஊறியது. சிறுவயதில் ஸ்கூலில் ப்ரேயர் பாடும்போது, பாலு உடன்பாடுவது வழக்கம். தனியாக வகுப்புகளில் பாலுவைப் பாடச்சொல்லிக் கேட்பதும் உண்டு. இவ்வளவு கம்பீரமாக இருக்கும் பாலுவின் குரல், மிகவும் மென்மையாயிருந்த காலம் அது. பெண்ணின் சாயல் உள்ள குரலில் பாலுபாடுவது வழக்கம். அந்தக் காலத்தில் P. சுசிலா, S. ஜானகி பாடல்களை பாலு அப்படியே பாடி, எல்லாரையும் மகிழவைப்பார். அதுமட்டுமன்றி, படிப்பிலும் வெகுசுட்டி. தன் பாட்டை மற்றவர்கள் ரசிக்கிறார்கள். அதைப்போல, தான் தன் குரலைக் கேட்க முடியவில்லையே என்ற ஏக்கம், பாலுவின் மனத்தில் நிறைய இருந்தது. இப்பொழுதுபோல டேப் ரிக்கார்டர்கள் அதிகப் பிரபலமாகாத காலம் அது. பெரிய டேப்ரிக்கார்டர்கள் மட்டுமே உண்டு. அதுவும் மிகவும் காஸ்ட்லியான டேப் ரிக்காடர்கள். சாதாரணமானவர்கள் வீட்டில் வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு விலை உயர்ந்தவை. பாலு படித்த பள்ளியில், ஒரு டேப்ரிக்கார்டர் வாங்கினார்கள். அந்தப் பள்ளியில் பிஸிக்ஸ் வாத்தியாராக இருந்த GRS என்பவர் பாலுவின் குரல் மீது மிகவும் பாசம் வைத்திருந்தார். ...