Posts

Showing posts with the label NERUDA

PABLO NERUDA ,POET DIED 1904 JULY 12 -1973 ,SEPTEMBER 20

Image
  PABLO NERUDA ,POET DIED  1904 JULY 12 -1973 ,SEPTEMBER 20 பாப்லோ நெரூடா died sep 20,1973 காலச்சுவடு, ஆகஸ்ட் 2004 உலகமெங்கும் செத்துப்போன உதடுகள் ஒன்று கூடுகின்றன. “இறந்துகிடக்கும் உங்கள் உதடுகளுக்காகப் பேச வந்திருக்கிறேன்”  என்று அறிவித்தவரைப் பற்றி அவை பேசுகின்றன. பாப்லோ நெரூடாவின்( 1904- 1973) நூற்றாண்டு இது. காதலர்கள் பரிமாறிக்கொண்ட ரகசியக் கடிதங்களில் மட்டுமின்றி, புரட்சியாளர்களின் கடைசி நாட்குறிப்புகளிலும் இடம்பெற்றிருந்தவை அவரது கவிதைகள் .ஓர் ஓவியனின் பெயரையும்(பாப்லோ பிக்காஸோ)ஓர் எழுத்தாளனின் பெயரையும் (யேன் நெரூடா) கலந்து தனது புனைப்பெயரை உருவாக்கிக்கொண்ட அவரது உண்மையான பெயர் ((Ricardo Eliecer Neftali Reyes Basoalto) பலருக்கும் தெரியாது. அவர் பிறந்த அடுத்த மாதமே அவரது தாய் இறந்துவிட, அவரது அப்பா, நெரூடாவுக்கு இரண்டு வயதானபோது மறுமணம் செய்து கொண்டார். உலகப்புகழ்பெற்ற கவிஞராக அறியப்படும் நெரூடா முதலில் எழுதியது கட்டுரைதான். அவர் வசித்துவந்த டெமூகோ என்ற நகரத்தில் பிரசுரிக்கப்பட்டு வந்த செய்தியேடு ஒன்றில் நெரூடாவின் முதல் கட்டுரை வெளியானது. அப்போது அவருக்கு வயது பதி...