AISWARYA RAJYA LAXMI DEVI SHAH WIFE OF BEERENDRA BORN 1949 NOVEMBER 7 -2001,JUNE 1
AISWARYA RAJYA LAXMI DEVI SHAH WIFE OF BEERENDRA BORN 1949 NOVEMBER 7 -2001,JUNE 1 .ஐஸ்வர்யா ராஜ்ய லக்ஷ்மி தேவி ஷா (Aishwarya Rajya Laxmi Devi Shah நேபாளி: ऐश्वर्या राज्य लक्ष्मी देवी शाह) (7 நவம்பர் 1949 – 1 ஜூன் 2001) காத்மாண்டுவில் உள்ள லாசிம்பெட்டு தர்பாரில் கேந்த்ரா சம்செர் சங் பகதூர் ராணா மற்றும் சிறீ ராச்சிய லட்சுமி தேவி ஷா தம்பதிக்கு முதல் மகளாகப் பிறந்தவர். நேபாள ராணியாக 1972 இல் இருந்து 2001 ஆண்டு வரை இருந்தார். இவர் படா மகாராணி எனவும் அழைக்கப்பட்டார். இவர் ராஜா பிரேந்திராவின் மனைவியாவார். இவர்களுக்கு பட்டத்து இளவரசர் திபேந்திரா, இளவரசர் நிரஞ்சன் மற்றும் இளவரசி சுருதி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர் பாரம்பரிய அழகுடைய பெண் என்று கொண்டாடப்பட்டார். இவரது உடை அலங்காரம் மற்றும் சிகை அலங்காரங்கள், இன்னும் நேபாள பெண்கள் மத்தியில் பிரபலம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. கல்வி இந்தியாவில் உள்ள செயின்ட் ஹெலென்ஸ் கான்வென்ட் ஆப் குரஸூங் இல் பள்ளி படிப்பை முடித்தார். 1963 இல் கண்டி ஐஸ்வரி ராஜ்ய லட்சுமி மேல் நிலை பள்ளியில் எஸ் எல் சி தேர்வுபெற்றார...