POOJA HEDGE , TELUGU ACTRESS BORN 1990 OCTOBER 13
POOJA HEDGE , TELUGU ACTRESS BORN 1990 OCTOBER 13 .பூஜா ஹெக்டெ என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை. 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார்.[1]பூஜா ஹெக்டே, 2010 ஆம் ஆண்டு "மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா" என்ற அழகு போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து புகழ் பெற்றவர். இந்த புகழினை தொடர்ந்து மாடலிங் துறையிலிருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே, பின்னர் தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளார். பிறப்பு பூஜா ஹெக்டே மும்பை நகரத்தில் உள்ள ஒரு கர்நாடக வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை மஞ்சுநாத் ஹெக்டே மற்றும் தாய் லதா ஹெக்டே ஆகியோர் தங்களின் பிறப்பிடமான மங்களூரில் இருந்து மும்பைக்கு இடம் மாறியுள்ளனர். இவர் கர்நாடகாவில் உள்ள "துளு" என்ற மொழியை பேசுபவர். இருப்பினும் பூஜா ஹெக்டே ஹிந்தி, மராத்தி, ஆங்கில மொழிகளை சரளமாக பேசுகிறார். பூஜா ஹெக்டே கல்லூரி படிப்பினை மும்பையில் உள்ள எம்.எம்.கே கல்லூரியில் படி...