Showing posts with label உலக. Show all posts
Showing posts with label உலக. Show all posts

Wednesday, 12 May 2021

WORLD NURSING DAY MAY 12 உலக செவிலியர் தினம்: MAY 12

 


WORLD NURSING DAY MAY 12

உலக செவிலியர் தினம்: MAY 12




உலக செவிலியர் தினம்: குடும்பத்தைக்கூட கவனிக்க முடியாமல் கொரோனா வைரஸ் தொற்றுடன் போராடும் போராளிகள்

நடராஜன் சுந்தர்

பிபிசி தமிழுக்காக

12 மே 2020

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கோப்புப்படம்பட மூலாதாரம்,GETTY IMAGES

கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே மருத்துவர்களும், செவிலியர்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.


குறிப்பாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக நாள் முழுவதும் பணி செய்துவரும் செவிலியர்களின் பணியானது மகத்தான ஒன்று. உலகம் முழுவதும் உள்ள செவிலியர்களைக் கௌரவிக்கும் விதமாக இந்த ஆண்டை செவிலியர் ஆண்டாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்.


நோயாளிகளின் பாதிப்பு எவ்வளவு கடினமாக இருந்தாலும் அவர்களுக்குச் செய்யும் பணியை தங்களது கடமையாகக் கருதி, எந்த காலத்திலும், நோயாளிகளின் பாதிப்பு எவ்வளவு இருந்தாலும் செவிலியர்களைப் பொறுத்தவரை நோயாளிகள் அவர்களுக்கு நோயாளிகள் தான் என்று கூறுகின்றனர். அது சாதாரண நேரமாக இருந்தாலும், இதுபோன்ற கொரோனா நோய்த் தொற்று பரவக் கூடிய நெருக்கடியான காலங்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகக் கருதுகின்றனர்.



உலகம் முழுவதும் செவிலியர்கள் தினமாகப் போற்றப்படும் இந்நாளில், கொரோனா சிறப்புப் பிரிவில் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் அவர்களது அனுபவத்தை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டனர்.


கோப்புப்படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடலூர் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு பிரிவில் பணியாற்றும் செவிலியர் விஜயா கூறுகையில்,"நாங்கள் செய்யும் பணி எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அது எங்களுக்கு ஒரு சுமையாக எப்போதும் இருந்ததில்லை. ஆனால், இந்த கொரோனா சிறப்புப் பணியில் முதன் முதலில் நாங்கள் எங்களை ஈடுபடுத்திக்கொள்ளத் தயார் ஆனபோது மனதளவில் பயம் என்பது அதிகமாகவே இருந்தது.


‘வென்டிலேட்டரை துண்டிப்பது என் பணி’ - நெருக்கடிநிலையை விவரிக்கும் செவிலியர்

இத்தாலியில் கொரோனா நெருக்கடியை ஆவணப்பதிவு செய்த ஓர் செவிலியரின் அனுபவம்

கொரோனா சிறப்புப் பணிக்காக எங்கள் ஒவ்வொருவருக்கும் சுழற்சி அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. குறிப்பாக, தொடர்ந்து 7 நாட்கள் மருத்துவமனையில் பணி செய்து முடித்த பிறகு, நாங்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிறகு, 14 நாட்கள் எங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.


அதில், முதல் 7 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொள்வதும், இறுதி 7 நாட்கள் வீடுகளில் எங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறோம். வீட்டிற்குச் சென்று என்னை நான் தனிமைப்படுத்திக் கொள்ளும்போது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரிடம் சரியாக நேரம் ஒதுக்க முடியாமல் இருப்பது கடினமாக இருக்கிறது," எனக் கூறினார்.



"எனது குழந்தை என் அருகில் வந்து தூங்க வேண்டும் என்று ஆசையுடன் வருவாள். ஆனால், என்னால் அவளை அருகில் வைத்துக் கொள்ள முடியாத சூழல் காரணமாக எனது குழந்தையின் அன்பைத் தவிர்க்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுகிறேன். அவர்களுக்குப் புரிய வைப்பது கடினமாக இருந்தாலும், கணவர் மற்றும் குடும்பத்தினரின் உதவியால் இதைச் சமாளித்து வருகிறேன்.


கோப்புப்படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சில நேரம் மருத்துவமனையில் ஆள் பற்றாக்குறை காரணமாக எங்களுக்கு வீட்டில் எங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ளும் சூழல் மறுக்கப்படுகிறது. அதன் காரணமாகத் தொடர்ந்து வேலை செய்யும் சூழலுக்கும் நாங்கள் தள்ளப்படுவதால், வீட்டிலுள்ள குழந்தைகள், பெரியவர்கள் குறித்து முழுமையான நிலை அறியாமல் வேதனையாக இருக்கிறது," எனத் தெரிவித்தார் விஜயா.


கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் சித்ரா கொரோனா பணியின் போது குடும்ப ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர் சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டபோது, "நான் எனது விடுதியிலிருந்து மருத்துவமனைக்கு பணிக்காக வந்தேன். வரும் வழியில் வயதான பெண் ஒருவர் மருத்துவமனை அருகே சிரமப்படுவது போல் எனக்குத் தெரிந்தது. எனக்குக் கொடுக்கப்பட்ட உணவினை அவர் பசியைப் போக்க உதவுமே என்று எண்ணிக் கொடுத்தேன்.


ஆனால், அவர் உங்கள் உணவு எனக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டார். ஏன் மறுக்கிறீர்கள் என்று அவரிடம் காரணம் கேட்டபோது, நீங்கள் மருத்துவமனையில் வேலை செய்வதால் கொரோனா குறித்த அச்சம் இருக்கிறது என்றார். ஆனால், அந்த நேரம் எனக்கு மிகவும் மனதிற்கு வேதனையாக இருந்தது. கொரோனா நோயாளிகள் போன்று, கொரோனா பரவல் தடுப்பு பணி செய்யும் எங்களையும் சிலர் நோயாளிகளாகவே பார்க்கின்றனர்," எனத் தெரிவித்தார்.


"கொரோனா பணி முடிந்து வீட்டில் தனிமைப்பட்டிருந்த போது, கடந்த மாதம் எனது சகோதரியின் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்வு அவர்களது வீட்டிலே ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் எனது சூழ்நிலை கருதி நான் செல்லவில்லை.அதன் காரணமாகச் சிறிய வயதிலிருந்து தாய் போல அனைத்தையும் அருகிலிருந்து கவனித்த எனது சகோதரி மகளின் சுப நிகழ்வில் பங்கேற்க முடியாமல் போனது என்னை அதிகமாகப் பாதித்தது," என்றார் சித்ரா.



மேலும், "கொரோனா பணியின்போது சுய பாதுகாப்பு கவசம் (Personal Protective Equipment ) அணிந்து தான் எங்கள் பணிகள் அனைத்தையும் செய்து வருகிறோம். நான் இந்த பாதுகாப்பு கவசத்தை 6 மணியிலிருந்து 8 மணி நேரம் வரை அணிந்திருப்பேன். ஆனால், இந்த பாதுகாப்பு கவசம் அணிந்து பணி செய்வதென்பதை விடக் கடினமான ஒரு விஷயம் இந்த உலகில் ஏதுமிருக்காது. உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருந்த போதிலும், இந்த உடை அணிந்திருக்கும் போது அனைத்தையும் கட்டுப்படுத்திப் பணி செய்து வருகிறேன்.


பொதுவாகவே எனக்குச் சிறுநீர் அடிக்கடி வரும். ஆனால், இது போன்ற நேரத்தில் நான் பாதுகாப்பு கவசத்தை அணிந்திருப்பதால் பணி நேரம் முடியும் வரை அனைத்தையும் கட்டுப்படுத்திக்கொள்வேன். காரணம், போதுமான அளவில் பாதுகாப்பு கவசம் இல்லாத சூழலில், நாங்கள் பயன்படுத்தும் கவசமானது ஒரு சமயம் அணிந்தால், அதைக் கழட்டும் வரை, அனைத்தையும் சூழ்நிலை கருதிப் பொறுத்துக்கொள்கிறோம்.


பொதுவாகவே இந்த கவசம் அணிந்து தொடர்ந்து 6 மணி நேரங்களுக்கு மேல் உடையைக் கழற்றாமல் வேலை செய்வதினால், இடைப்பட்ட நேரத்தில் உடலிற்குத் தேவையான தண்ணீர் குடிக்க முடியாமல் ரத்தச் சர்க்கரைக் குறைவு(hypoglycemia) ஏற்படுகிறது. மேலும், தலை முதல் கால் வரை முழுவதும் வேர்க்கிறது, இதனால் உடலில் நீராதாரம் குறைந்து உடல் சுற்றோட்ட நீர்மக்குறை (hypovolemia) ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காரணத்தினால் மயக்க நிலை சிலருக்கு ஏற்படுகிறது. இது இந்த சுய பாதுகாப்பு கவசம் அணியும் அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்னை. மேலும், மாதவிடாய் காலங்களில் இந்த உடை அணிந்திருப்பதனால், நாப்கின்கள் முறையாக மாற்ற முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகிறேன்," என்கிறார்.


கோப்புப்படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இருந்தபோதிலும், நாங்கள் செய்யும் பணி எங்களுக்கு எப்போதுமே கஷ்டமாகத் தோன்றுவதில்லை. தனிப்பட்ட குடும்ப வாழ்வில் எங்களால் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளமுடியாமல் இருப்பது தான் மனதிற்கு வேதனையாக இருக்கிறது. இதன் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது," எனத் தெரிவித்தார் செவிலியர் சித்ரா.


புதுச்சேரி மாநிலத்தைச் சேர்த்த செவிலியர் செல்வி கூறும்போது, "நான் இந்த கொரோனா நோய்த் தொற்று வந்த நேரத்திலிருந்து இதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணி செய்து வருகிறேன். பணிக்காலம் முடிந்து வீட்டிற்குச் செல்லும் நாட்களில், வீட்டிற்கு வெளியே எனக்காகத் தனியாக ஏற்பாடு செய்யப்பட்ட அறையில் தான் இருப்பேன்.


எனக்கு 5 வயதில் குழந்தை இருக்கிறாள். நான் வீட்டில் இருக்கும் நாட்களில் அவளுடன் என் நேரத்தைப் பயன்படுத்த முடியாமல் இருப்பது தான் கடினமான ஒன்று. எனது குழந்தையுடன் நேரம் செலவிட முடியாமல், அவளுக்குத் தேவையானதை செய்து கொடுக்க முடியாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருந்தாலும், வேறுவழியில்லை. அவள் வெளியே இருந்து ஒவ்வொரு முறை என்னை அம்மா என்று அழைக்கும் போதும், அவளை உரிமையுடன் அரவணைக்க முடியவில்லை என்ற வேதனையால் அழுது விடுவேன்," என்றார்.


"ஆனால், என் கஷ்டங்களை குடும்பத்தினரிடம் காட்டிக்கொள்ள மாட்டேன். என் வேதனைகள் அவர்களைப் பாதிக்குமேயானால் அதை அவர்களும் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். இன்று வரை அனைத்து சூழல்களிலும், குறிப்பாக இந்த கொரோனா நோய்த் தொற்று காலத்தில் எனது குடும்பத்தினரின் ஆதரவு தான் எனக்கும், என்னைப் போன்றவர்களுக்கு அனைத்திலும் ஆறுதலாக இருக்கும் ஒரே விஷயம்," என கூறுகிறார் செவிலியர் செல்வி.


Sunday, 17 May 2020

உலக ஓரினச்சேர்க்கை,மற்றும் Transphobia Biphobia -நாள் ,MAY 17






உலக ஓரினச்சேர்க்கை,மற்றும் Transphobia Biphobia -நாள் ,MAY 17


.‘ஓரினச்சேர்க்கை என்பது நோயல்ல’ - இந்திய உளவியலாளர்கள் குழு
சித்தாநாத் கானு
.
.
"ஓரினச்சேர்க்கையை ஒரு நோயாக கருதும் மனபோக்கிற்கு எதிராக இந்திய உளவியலாளர்கள் சங்கம் தீவிரமான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும்." ஃபேஸ்புக் காணொளியாக வழியாக இப்படி ஒரு செய்தியை இந்தியாவின் தலைமை உளவியலாளர்கள் குழு வெளியிட்டு இருக்கிறது.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
'ஓரினச்சேர்க்கை என்பது நோயல்ல'

இந்தியன் உளவியலாளர்கள் சங்கம் ஓரினச்சேர்க்கையை எப்போதும் நோயாக கருதியது இல்லை என்று அந்த சங்கத்தின் தலைவர் அஜித் பிடே பிபிசியிடம் தெரிவித்தார்.

ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள காணொளியானது ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் முதல்முறையாக தெளிவான நிலைப்பாட்டினை இச்சங்கம் எடுத்திருப்பதாக பலர் கருத வழிவகுத்திருக்கிறது. மருத்துவர் அஜித் பிடே, "என்னிடம் பல பெற்றோர்கள் ஓரின சேர்க்கை பழக்கமுடைய தங்களது பிள்ளைகளை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். ஆனால், 'ஓரினச்சேர்க்கை என்பது நோயல்ல' என்று நான் அந்த பெற்றோர்களுக்குதான் ஆலோசனை வழங்குகிறேன். ஹூம், தன் பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று வருபவர்கள்தான் ஆலோசனை பெற்று செல்கிறார்கள்" என்கிறார்.இந்த சங்கத்தின் தலைவராக இருந்தவர் 2014ஆம் ஆண்டு, ஓரினச்சேர்க்கை 'இயற்கைக்கு முரணானது' என் கூறிய ஒரு கருத்து சர்ச்சைக்கு வித்திட்டது.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அஜித், "கடந்த 30, 40 ஆண்டுகளாக திரட்டிய அறிவியல் ஆதாரங்கள், ஒரினச்சேர்க்கை ஒரு நோய் என்று வலியுறுத்தவில்லை. இதனை ஒரு நோயாக கருத எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை" என்கிறார்.
அனைத்து உளவியலாளர்களும் ஒப்புக் கொள்கிறார்களா?
"பெரும்பாலான உளவியலாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அவர்கள் ஓரினச் சேர்க்கை என்பது நோயல்ல என்று நம்புகிறார்கள். ஆம், சிலர் இதிலிருந்து முரண்படதான் செய்கிறார்கள். ஆனால், அனைவரும் ஒப்புக் கொள்வது உடனே நடக்காதுதானே. அதற்கு சிறிதுகாலம் எடுக்கத்தான் செய்யும்" என்கிறார் அஜித்.
உலகம் முழுவதும் உள்ள உளவியலாளர்கள் சங்கங்கள் இதுபோன்ற அனுபவங்களை எதிர்கொள்ளதான் செய்கின்றன என்கிறார் அஜித். "அமெரிக்க உளவியலாளர்கள் சங்கம் ஓரினச் சேர்க்கை தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வாக்கெடுப்பு நடத்திய போது, மூன்றில் ஒரு பகுதியினர் அதற்கு எதிராகவே வாக்களித்தனர்" என்கிறார்.

ஓரினச் சேர்க்கையும், சட்டமும்
இந்தியாவில் ஓரினச் சேர்க்கை குறித்து விவாதிக்கும் போது, இந்திய தண்டனைச் சட்டம் பகுதி 377 குறித்து விவாதிப்பது அத்யாவசியம் ஆகிறது.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்த விவகாரமானது பல திருப்பங்களை கொண்டது. உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில், ஆகஸ்ட் 2017ல், "பாலின பண்பின் அடிப்படையில் ஒருவரை பாகுபாடுடன் நடத்துவது குற்றம்." என்றது.இது குறித்து ஓரினச் சேர்க்கை செயற்பாட்டாளர் ஆதித்யா பண்டோபாத்யாய், "மனதளவில் நீங்கள் ஓரினச் சேர்கையாளராக இருப்பது எந்த தவறும் இல்லை. ஆனால், அந்த உணர்வோடு நீங்கள் நடந்துக் கொள்ள நினைக்கும்போது அது சட்டவிரோதமாக கருதப்படுகிறது" என்கிறார்
இந்த பிரச்சனை பாலியல் குறித்தானது அல்ல. செயற்பாட்டாளர் நக்‌ஷத்ரா பாக்வே , "நாங்கள் பாலியல் இச்சைகளுக்காக போராடவில்லை. எங்கள் அடையாளத்திற்காக போராடுகிறோம்" என்கிறார்.எல்.ஜி.பி.டி உரிமைக்காக போராடும் செயற்பாட்டாளர்கள், இந்திய தண்டனைச் சட்டம் பகுதி 377 மீது குற்றஞ்சாட்டுகிறார்கள். ஓரினச் சேர்க்கை சமூகத்திற்கு எதிராக இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக இவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தாங்கள் போராடுவதாக கூறுகிறார்கள்.

களத்தில் ஐஐடி
இந்தியா முழுவதிலும் உள்ள ஐ.ஐ.டியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் 20 பேர் இந்த இந்திய தண்டனைச் சட்டம் பகுதி 377ற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள்.இதனை குற்றச் செயலாக கருதகூடாது என்றார்கள்.உளவியலாளர்கள் சமூகம் ஓரினச் சேர்க்கை சமூகத்தை ஏற்றுக் கொண்டாலும், மருத்துவ சமூகத்துக்கு இது குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சில மருத்துவர்கள்.புற்றுநோய் சிகிச்சை துறை மருத்துவர் பிரசாத் டண்டேகர், "ஓரினச் சேர்க்கை குறித்தும், அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் மருத்துவர்களுக்கு கற்பிக்கப்படுவதே இல்லை. எங்கள் பாடபுத்தகத்திலும் இதுகுறித்த எந்த தகவலும் இல்லை.அதனால் இந்த சமூகம் குறித்து ஒரு புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது அவசியமென நாங்கள் கருதுகிறோம்" என்கிறார்.

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான மருத்துவர்கள் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இவர் இருக்கிறார்.இந்த அமைப்பு இது தொடர்பான கருத்தரங்களையும், மாநாடுகளையும் இந்தியா முழுவதும் ஒருங்கிணைத்து வருகிறது.
'ஓரினச் சேர்க்கை' - உலகளாவிய நிலை என்ன?
ஐ.நா கணக்குப்படி, உலகெங்கும் 76-க்கும் மேலான நாடுகளில் ஒரினச் சேர்க்கையானது சட்டப்படி குற்றம்.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஐந்து நாடுகள் இதற்கு மரண தண்டனை வழங்குகின்றன.

இந்த நாடுகளில் பெரும்பாலானவை முன்பு பிரிட்டனின் காலனியாக இருந்தவை.

ஓரினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்வது, அங்கீகரிப்பது உலகம் முழுவதும் மெல்ல அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஓரின சேர்க்கைக்கு ஆதரவாக பெரும்பாலானோர் வாக்களித்தனர், ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு எதிரான தம் நாட்டு சட்டத்தை மாற்றியது பெர்முடா.

Friday, 18 May 2018

உலக ஓரினச்சேர்க்கை,மற்றும் Transphobia Biphobia -நாள் ,MAY 17







உலக ஓரினச்சேர்க்கை,மற்றும் Transphobia Biphobia -நாள் ,MAY 17

ஓரினச்சேர்க்கை
விஜய்.



நான் ஓர் ஓரினச் சேர்க்கையாளன். இந்த அஞ்சலை நிறையத் தடவை எழுதி அழித்திருக்கிறேன். இந்த முறை அனுப்பி விட வேண்டும் என்ற உத்தேசத்தில் ஆரம்பிக்கின்றேன்.எவ்வளவோ முன்னேற்றங்கள் அடைந்தாலும் இன்னும் இந்தியா ஓரினசேர்க்கை என்ற கருத்தில் பின் தங்கியுள்ளதாகவே நினைக்கின்றேன். இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் (ஒரு சதவிகிதம் ?) முகமூடி அணிந்து கொண்டே வாழ்கின்றார்கள், அல்லது அப்படித்தான் வாழ வேண்டியுள்ளது. நான் ஒன்றும் விதிவிலக்கல்ல. இந்தக் கடிதத்தை ஏன் எழுதுகின்றேன் என்று இன்னும் புலப்பட வில்லை. ஒருவேளை என் மனதின் பாரம் குறைந்தாலும் குறையலாம் (இதன் நிகழ்தகவு குறைவு தான் என்றாலும்).

இப்பொழுது நான் ஓர் ஓரின சேர்க்கையாளன் என்று அறிவித்து விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன நேரும்?
௧. என் நண்பர்களை இழக்க வேண்டி இருக்கும்.
௨. பெற்றோருக்கு புரிய வைப்பதே பெரும் பாடாக இருக்கும். நிறையக் கண்ணீர் காண நேரிடும். நீங்களே சொல்லுங்கள், எப்படி ஐம்பது வயதை தாண்டிய நபருக்கு, பெற்றோருக்கு, இதை புரிய வைப்பது !
௩. கல்லூரியில், அலுவலகத்தில் எல்லோரும் ‘ஒரு மாதிரி’ காண்பார்கள். விலகி விடுவார்கள். மதிய உணவையும், இரவு உணவையும் தனியே வெறித்துச் சாப்பிட வேண்டி இருக்கும்.
௪. உறவினர் பக்கம் தலை வைத்து படுக்க முடியாது.
௫. அல்லது இது மன நோய், உடற் நோய், என்று சரியாக புரிந்து கொள்ளாத நண்பர்களிடமிருந்தோ பெற்றோரிடமிருந்தோ ‘சிகிச்சைகள்’ பெற வேண்டி இருக்கும்.

இவ்வளவு இடர்ப்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதால் எப்படி ஒருவன் பகிரங்கமாக வெளிப் படுத்த முடியும்.
கண்டிப்பாக இன்னும் குறைந்தது பத்து வருடம் ஆகும், ஒருவன் தமிழ்நாட்டில் தான் ஓர் ஓரினன் என்று அறிவிப்பதற்கு.

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மிகவும் இடர்க்கையான ஒன்று, வாழ்க்கையில் திருமண வயதை எட்டுவது தான். பெற்றோர் உறவினர் எல்லோரும் தொடர்ந்து திருமணத்தை வற்புறுத்திக் கொண்டே இருப்பார்கள். மிகவும் சிக்கலான தீர்மானம் எடுக்க வேண்டிய சமயம்.
௧. திருமணம் செய்து கொண்டு சகித்துக் கொண்டு வாழ்தல்,
௨. திருமணம் செய்யாமல் தனியே, தன்னந்தனியே என்றிருத்தல்,
௩. திருமணம் செய்யாமல், தனக்குப் பிடித்த நபரோடு வாழ்தல்.

இதில் மூன்றாவதாக இருப்பது சற்றுக் கடினம் தான்.
முதலாவது மனதளவில் மிகக் கடினம். விஷத்தை தொண்டையில் வைத்துக் கொண்டு நீலகண்டனைப் போல் வாழ்வது.
இரண்டாவது, முதலில் சற்று பயமாக, கடினமாக இருந்தாலும், போகப் போகப் பழகி விடும் (என்று நினைக்கின்றேன்). ஆனால் இந்த முடிவில் என்ன நெருடல் என்றால், மற்றவரை, பெற்றோரை நண்பர்களை, வருத்தப் பட அல்லது இழக்கவும் நேரலாம்.

இந்த சூழ்நிலைக்கான காரணம்,
௧. சரியாக புரிந்து கொள்ளாமலிருத்தல், மனநோய் என்று மருத்துவரிடம் காட்டல்.
௨. திருமணம் என்ற அமைப்பு தமிழ் நாட்டில் இன்றியமையாது இருத்தல்.
௩. ‘குடும்ப மரம்’ வளர வேண்டுதல்.
௪. ஓரினன் என்றால் ‘தப்பானவன்’ என்று முத்திரை குத்தல். (“ஓரின சேர்க்கையாளன் என்மனார் தவறெனக் கருதே” என்று தொல்காப்பியன் சொல்லி விட்டானா என்று தெரியவில்லை)

ஓரின சேர்க்கையில் என்ன தவறு என்று இது வரை எனக்குப் புலப்படவில்லை. தங்களுக்குப் புலப்பட்டால் பகிரவும்.

காலம் தந்து படித்ததற்கு,
நன்றி
விஜய்.

********************

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் அனுப்பிய சென்ற அஞ்சலைப் படித்தீர்களா என்று தெரியவில்லை. நான் மிகவும் தன்னலமாக ஆதங்கப் பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. I lost the big picture.

இந்தியாவில், தமிழகத்தில் ஓரின சேர்க்கைக்கு இன்றைய நிலைமை என்ன ?
ஒரு பெட்டிக்குள் அடைந்து வாழ வேண்டிய வாழ்க்கை. உண்மையை மறைத்து வாழ வேண்டிய வாழ்க்கை. பொய்யான வாழ்க்கை. Living and crying inside a cupboard.

எல்லாரிடமும் ஒரு தப்பான அபிப்ராயம் இருப்பதாகவே கருதுகிறேன். இப்போது கூட section 377 அமுல் பட்ட போது என்ன நேர்ந்தது ? எவ்வளவு சர்ச்சை. இதை ஏதோ கலவிக்காக மட்டும் தான் என்று பார்க்கிறார்கள். காதலாகக் கண்டு கொள்வதே இல்லை. அனுமதித்தால் ஏதோ சாலையெல்லாம் முத்தம் கொடுத்து அசிங்கப் படுத்தி விடுவார்கள் என்பதுபோல் பேசுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ?

தங்களின் கருத்து என்ன ?

நன்றி,
விஜய்.

அன்புள்ள விஜய்,

1996ல் நித்ய சைதன்ய யதியைப் பார்க்கவந்த ஒருவர் அவரது பேச்சுக்கு முன் கேள்வி வேளையில் கிட்டத்தட்ட இந்த கேள்விகளைக் கேட்டதை நினைவுறுகிறேன். அவரது பதிலை ஒட்டியே நான் இப்போது யோசிக்கிறேன். அன்று அவர் கேட்ட முதன்மையான கேள்வியே ‘ஓரினச்சேர்க்கை’யை இந்துமதம் குற்றமாக கருதுகிறதா, விலக்குகிறதா என்றுதான்.நித்யா அதற்குச் சொன்னார். இந்து மரபைப்பொறுத்தவரை ஒழுக்கம் என்பது புனிதமானது அல்ல. இறைவனால் உருவாக்கப்பட்டதும் அல்ல. அது கால இடத்துக்குக் கட்டுப்பட்டது. ஆகவே மாறக்கூடியது. அது ஒரு சமூக நெறி மட்டுமே. அது அறம் அல்ல, ஒரு காலஇடத்தில் அறத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்படும் ஒருசில விதிகள் மட்டுமே

ஆகவே, ஒழுக்கத்தைப்பற்றிப் பேசும் நூல்கள் ஸ்மிருதி எனப்பட்டன. அவை நிரந்தரமானவை அல்ல. அழியாத தரிசனங்களையும் தத்துவங்களையும் பற்றி பேசும் நூல்களே ஸ்ருதிகள். ஸ்மிருதிகள் காலம்தோறும் மாறிக்கொண்டிருக்கின்றன. நாம் இப்போது அம்பேத்கார் ஸ்மிருதியை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

ஆக இதை அறப்பிரச்சினையாக எண்ணுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. அதாவது இதை தப்பா சரியா என்று எப்போதைக்குமாக வகுத்துக்கொள்ளும் விவாதத்துக்கே இந்திய சூழலில் இடமில்லை. இங்கே இது மதத்தின் பிரச்சினை அல்ல.

அப்படியானால் இது ஒழுக்கப்பிரச்சினை மட்டுமே. அதாவது இன்றைய காலகட்டத்தில், இன்றைய சூழலில் நடைமுறைத்தளத்தில் வைத்து மட்டுமே இதைப்பற்றி நாம் பேசவேண்டும். அதற்கான வரலாற்றுப்பின்னணியுடன் விவாதிக்கவேண்டும்.

ஒழுக்கநெறிகள் இரு அடிப்படைகளில் உருவாக்கப்படுகின்றன.

சமூகத்தின் ஒட்டுமொத்தக் கட்டுமானத்தையும் சமூக நிறுவனங்களையும் நிலைநிறுத்துவது
தனிநபர் உறவுகளை சீர்ப்படுத்தி மேலான சகவாழ்க்கையை நிலைநிறுத்துவது.
இந்நோக்கில் சிறிதும் பெரிதுமான ஏராளமான ஒழுக்கநெறிகளுக்கு நாம் கட்டுப்பட்டுள்ளோம். ஒரு இடத்தில் வரிசையைப் பேணுவது முதல் முன்பின் தெரியாதவரை முகம் மலர்ச்சியுடன் எதிர்கொள்வது வரை ஒழுக்கநெறிகளே. ஒழுக்க நெறிகள் பொதுவாக மனிதனின் இயல்பான குணங்களான காமம், வன்முறை, சுயநலம்,பேராசை முதலியவற்றை கட்டுப்படுத்தக்கூடியவையாக இருக்கும்

ஆனால் பாலியல் ஒழுக்கநெறிகளைப்பற்றியே நாம் அதிகமும் பேசுகிறோம். அவற்றை பாலியல் கட்டுப்பாடுகளாக மட்டுமே காணக்கூடிய ஒரு போக்கை பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா உருவாக்கி நமக்கு அளித்தது. நவீன சமூகஉயிரியல், பரிணாம உயிரியலின் கொள்கைகளின்படி அந்த கோட்பாடுகள் தூக்கி வீசபட்டுவிட்டபின்னரும் சிந்தனையில் அவை நீடிக்கின்றன.

பாலியல் ஒழுக்கநெறிகள் நம்முடைய ஆதாரமான உயிர்விசையை கட்டுப்படுத்துகின்றன. கட்டற்று செல்லும் பாலியல் விசையையே இயற்கை நமக்கு அளித்துள்ளது. எல்லா உயிர்களிலும் பாலுறவு என்பது தீவிரமான போட்டி வழியாக தகுதியானவை மட்டும் இனப்பெருக்கம் நிகழ்த்துவதாகவே உள்ளது. அதற்கான வன்முறை அங்கே நிகழ்ந்துகொண்டே உள்ளது. மனித இனம் பாலுறவு மீதான ஒழுக்கக்கட்டுப்பாடுகள் வழியாக பாலுறவில் இருக்கும் வன்முறைப்போட்டியை மெல்லமெல்ல இல்லாமலாக்கி கொண்டது.

அத்துடன் நிரந்தரமான குடும்பம் என்ற அமைப்பை மனித இனம் உருவாக்கிக் கொண்டது. இது குழந்தைகளின் இளமைப்பருவத்தை நீட்டித்தது. அதன் விளைவாக கல்விப்பருவம் நீட்டிக்கப்பட்டது. பண்புக்கூறுகள், சிந்தனைகள் முதலியவை தொகுக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட இது வழியமைத்தது.

ஒழுக்கநெறிகள் மனிதனை வெற்றிகரமாக சமூகங்களாக தொகுத்தன. அதன் மூலமே மனிதகுலத்தின் பெரும் பண்பாட்டுப்பாய்ச்சல்கள் சாத்தியமாயின. மானுட இனத்தின் பரிணாம வரலாற்றில் ஒழுக்கம் என்பது அது கண்டுபிடித்த ஒரு முக்கியமான ஒரு கருவி. அதன் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் ஒழுக்கம் பெருமளவுக்கு பங்களிப்பாற்றி இருக்கிறது.

அகவே ஒழுக்க நெறிகளை எதிர்மறையானவையாக பார்க்காமல் பயனுள்ளவையாக, தவிர்க்கமுடியாதவையாக பார்க்கலாம் என்றுதான் நான் நினைக்கிறேன்.

ஆனால் ஒழுக்க நெறிகள் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொன்றாக உள்ளன. அவை உருவாவதற்கான சமூகப்பின்னணியும் வாழ்க்கைச்சூழலும் பல்வேறுபட்டவை. அவை சமூகத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேரூன்றச் செய்யப்படுகின்றன. அந்த சமூகப்பின்னணியும் சூழலும் மாறிய பின்னரும் அவை அவ்வளவு எளிதாக மாறுவதில்லை. இதுவே ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை

ஒரு நல்ல சமூகத்தில் ஒழுக்கம் சார்ந்த நம்பிக்கைகளை மாற்றுவதற்காக அந்தச் சமூகத்தின் தீவிரமான ஒரு பகுதியினர் எப்போதும் முயன்றபடியே இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். ஏனென்றால் எப்போதுமே எச்சமூகத்திலும் அதன் ஒழுக்கபிரக்ஞ்ஞையில் ஒரு பகுதி காலாவதியான விஷயங்களால் ஆனதாகவே இருக்கும்.

நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் பழங்குடி மனநிலை கொஞ்சம் நீடிக்கும். முதலாளித்துவ காலகட்டத்தில் நிலப்பிரபுத்துவ மனநிலை நீடிக்கும். அது இயல்பு. அந்த பழைய அம்சங்களை களையவும் புதிய சூழலுக்கேற்ப புதிய ஓழுக்கங்களை உருவாக்கவும் ஒரு சாரார் போராடத்தான் வேண்டும்.

இந்த பின்புலத்தில் உங்கள் கேள்விக்கு வருகிறேன்

நம்முடைய சமூகம் இன்று நடைமுறையில் முதலாளித்துவத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் நடுவே உள்ளது. நம்முடைய மனமோ பெரும்பாலும் நிலப்பிரபுத்துவ ஒழுக்கங்களால் ஆனதாக உள்ளது.நிலப்பிரபுத்துவம்முதலாளித்துவம் இரண்டுக்கும் நடுவே அடிப்படையான ஒரு வேறுபாடு உள்ளது. நிலப்பிரபுத்துவம் மனிதர்களை அவர்களின் பொதுத்தன்மைகளின் அடிப்படையில் தொகுக்க முயன்றது. பொதுவான அளவுகோல்களே அனைவருக்கும் போடப்பட்டன. பொதுமைப்படுத்துவதன் மூலம் உருவாகும் ஒழுக்கவிதிகளும் நடைமுறைகளுமே அனைவருக்கும் அளிக்கப்பட்டன. மனிதனை அது சமூகத்தின் ஒரு அலகு மட்டுமாக பார்க்கிறது. தனித்தன்மைகள், தனிவிருப்புகள் பொருட்படுத்தப்படுவதில்லை.

ஊரோடு ஒத்துவாழ் என்ற சொல்லே அதன் நெறிகளின் அடிப்படை. நிலப்பிரபுத்துவத்தின் எல்லா நெறிகளுமே மிகப்பொதுவாக வகுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு ஆண் இப்படி இருக்கவேண்டும், ஒரு பெண் இப்படி இருக்கவேண்டும், தந்தை இப்படி இருக்கவேண்டும், ஆசிரியர் இப்படி இருக்கவேண்டும் என அது முற்றாக வகுத்துரைக்கிறது. அதில் அடங்காத தனித்தன்மைகளை எல்லாம் அது மீறல்களாகவே பார்க்கிறது. அங்கே தனிமனிதன் இல்லை, சமூகப்பாத்திரங்களே உள்ளன.

இன்று தமிழகத்தில் வீட்டுமனை விற்பனையாளர்களிடம் கேட்டால் ஒன்றைச் சொல்வார்கள். கிராமங்களுக்குள் உள்ள நிலங்களுக்கு விலை இல்லை. கிராமத்துக்கு வெளியே பொட்டல்களில் உருவாக்கப்படும் மனைகளுக்கே மதிப்பு. ஏன்? கிராமங்களுக்குள் வாழ்ந்தோமென்றால் கிராமக்கட்டுப்பாடுகளுக்கு அடங்கிச்செல்லவேண்டியிருக்கும். அங்கே தனிமனித ரசனைக்கும் சுதந்திரத்துக்கும் இடமே இல்லை. அதாவது அங்கே நிலப்பிரபுத்துவம் உள்ளது. வெளியே உள்ள ‘நகர்’களில் முதலாளித்துவம் உருவாக்கிக் கொள்ளப்படுகிறது.முதலாளித்துவம் அந்த பொதுமைப்படுத்தலுக்குள் உள்ள தனிக்கூறுகளை கணக்கில் கொள்கிறது. அதில் தனிமனிதன் இருக்கிறான். அவனுடைய தனித்தன்மை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தனித்தன்மைக்குரிய சுதந்திரத்தை அவன் பொதுவான சமூக அமைப்புக்கு ஊறு விளைவிக்காமல் அடையலாம் என்று அது அனுமதிக்கிறது.

இந்த எண்ணங்களும் , இந்த உரிமைகளும் தமிழ்நாட்டைப்பொறுத்தவரை வெறும் ஐம்பது வருடங்களில் அடையப்பெற்றவை என்பதை நாம் இப்போது உணர்வதில்லை. புதுமைப்பித்தன் முதல் ஜெயகாந்தன் வரையிலான எழுத்தாளர்கள் அவர்களின் எழுத்துக்களில் இந்த உரிமைகளுக்காக வேகத்துடன் பேசியிருக்கிறார்கள். கல்யாணி என்ற புதுமைப்பித்தன் கதையை இன்று வாசித்தால் அந்த சிக்கலே ஆச்சரியமூட்டும். ஒரு சுதந்திர வாழ்க்கையை ஏன் கல்யாணி உதறுகிறள்? அவள் ஒரு தனி ஆளுமை, அவளுக்கென ஒரு மனமும் வாழ்க்கையும் இருக்கலாமென அவளுக்கே தெரியாது. சமூகம் பற்றித்தான் அவளுக்கு கவலை.

ஜெயகாந்தனின் முழுப் போராட்டமும் தனிமனித ஆளுமைக்காகவே என்றால் அது மிகையல்ல. ‘அந்தரங்கம் புனிதமானது’ ‘சமூகம் என்பது நாலுபேர்’ போன்ற அவரது தலைப்புகள் வழியாக சென்றாலே போதும், ஒரு சித்திரம் கிடைத்துவிடும்.
முதலில் சமூகத்தில் உள்ள அத்தனைபேருக்கும் அவர்களின் தனித்தன்மையை அவர்களே உணரச்செய்வதாக, அவர்களை தனிமனிதர்களாக அறியச்செய்வதாக இச்சிந்தனைகள் செயல்பட்டன. அதன் பின்னரே அச்சமூகத்தின் சற்றே வித்தியாசமான உறுப்பினர்களின் உரிமைகள் பற்றிய பிரக்ஞை உருவாகியது

நம் சமூகத்தில் ஐம்பதுகள் வரைக்கும்கூட பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதை வலியுறுத்திப் பேசிக்கொண்டிருந்தோம். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளைப்பற்றிய பிரக்ஞை வந்து இருபது வருடங்கள்கூட ஆகவில்லை. திருநங்கைகளுக்கான உரிமைகள் பற்றிய பேச்சுக்கள் உருவாகி பத்து வருடங்கள்கூட ஆகவில்லை.

இன்னமும் கூட இந்த உரிமைப்பிரக்ஞைகள் நம் கிராமங்களுக்குச் சென்று சேரவில்லை. ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியான பண்பாட்டுச் செயல்பாடுகள் மூலம் மெல்லமெல்லத்தான் அது சென்று சேரும். சமூகமாற்றங்கள் எப்போதும் பலபடிகளாக மெதுவாகவே நிகழமுடியும். ஏனென்றால் அவை பல லட்சம் மனிதர்களின் சிந்தனைகள், உணர்ச்சிகள், பழக்கவழக்கங்களுடன் தொடர்புள்ளவை.

இந்த உரிமைக்குரல்களை சம்பந்தப்பட்டவர்கள் எழுப்புவதற்கு நெடுநாட்களுக்கு முன்னரே இலக்கியத்தில் அவை அழுத்தமாக பதிவாகியிருப்பதை காணலாம். உதாரணமாக தமிழிலக்கியத்தில் திருநங்கைகளின் உணர்ச்சிகளை உண்மையின் தீவிரத்துடன் பதிவுசெய்து அதை ஒரு மானுடப்பிரச்சினையாக காணச்செய்தவர் கி.ராஜநாராயணன்.

இந்த வகையில்தான் ஓரினப்புனர்ச்சியாளர்களின் உரிமைகளைப்பற்றிய பிரக்ஞையும் வருகிறது. அவர்கள் சமூகத்தில் தனித்தன்மை கொண்ட பிரிவினர். அவர்களின் உரிமைகள் காக்கப்படவேண்டும் என்ற கருத்து உருவாகி பண்பாட்டுத்தளங்களில் வலுப்பெற்று மக்கள்மனத்தில் நிலைபெற்று சமூகமாற்றமாக ஆக கொஞ்ச காலம் பிடிக்கும். இங்கே இன்னும் அது ஆரம்பிக்கப்படவே இல்லை.

இங்கே அதற்குச் சாதகமாக உள்ள அம்சம் என்னவென்றால் சாராம்சத்தில் இந்து மதம் அதற்கு எதிரானது அல்ல என்பதே. அதன் பல்வேறு பிரிவினர் தனிப்பட்ட எதிர்ப்புகளை தெரிவிக்கலாம். ஆனால் அந்த எதிர்ப்புகளை வெல்வதற்கான எல்லா ஆதாரங்களையும் இந்துமதமே அளிக்கிறது. நிறுவன மதத்தின் எதிர்ப்பு இவ்விஷயத்தில் நிகழாது. திருநங்கைகளின் விஷயத்தில் இன்று உலகிலுள்ள பல நாடுகளில் நிறுவன மதங்கள் அளிக்கும் எதிர்ப்பை பார்க்கையில் இந்தியாவில் அந்த மாற்றம் சுமுகமாக நிகழ்வதை எவரும் காணமுடியும்.

ஒருபால்புணர்ச்சியாளர்களைப்பற்றிய உங்கள் வருத்தங்களைப்பற்றி என் கருத்தைச் சொல்கிறேன்….

பழங்குடிச்சமூகங்களிலும் அவற்றில் இருந்து நிலப்பிரபுத்துவச் சமூகங்களிலும் வேரூன்றிய ஒரு கருத்துநிலை ஆண்மை என்பது. வீரம் என்பதுடன் அது நேரடியாக தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. நம் பண்டைய இலக்கியங்களில் ஆண்மை என்ற சொல் எப்படியெல்லாம் கையாளப்பட்டுள்ளது என்பதைக் கண்டால் அது விளங்கும். அச்சொல்லுக்கு , கௌரவம், நிமிர்வு என பல அர்த்தங்கள்.

போராலேயே நிறுவபப்ட்டு வளர்ந்த அச்சமூகங்கள் உடல்சார்ந்த, வன்முறைசார்ந்த வீரத்தை மைய விழுமியமாக போற்றியதில் ஆச்சரியமில்லை. அப்படி ஒருவிழுமியம் இருந்தால்தான் வீரர்கள் உருவாவார்கள். சமூகத்துக்காக போர்முனைகளில் சாவார்கள். இன்றும் நம் மொழியிலும் ஆழ்மனதிலும் அவ்விழுமியம் இருக்கத்தான் செய்கிறது. இன்று வீரர்கள் விளையாடுகிறர்கள், சினிமாவில் நடிக்கிறார்கள்.

ஆண்மைக்கு எதிரானவை, ஒவ்வாதவை என்பதனாலேயே ஓரினச்சேர்க்கை, மூன்றாம்பாலினம் போன்றவற்றின் மேல் சமூகம் இழிவான நோக்கை உருவாக்கிக் கொண்டது. போர்ச்சமூகங்களில் அந்த துருவப்படுத்தல் இன்னும் தீவிரமாக இருக்கும். பேடி, பொண்ணன் போன்ற சொற்கள் வசைச்சொற்களாகவே சமூக மனதில் ஊறின.

அந்த வெறுப்பையும் நிராகரிப்பையும் தப்புசரி என்று பார்ப்பதை விட நேற்றைய போர்ச்சமூகத்திற்கு தேவை என்பதனால் அது உருவாக்கிக்கொண்ட ஒரு விழுமியம் என்று பார்ப்பதே சரியானது. அன்று உருவாக்கிக்கொண்ட எத்தனையோ கருவிகள் இன்று அருங்காட்சியகத்தில் உள்ளன. கருத்துக்களும் அப்படித்தான். அவை அப்படிப்பட்ட கருத்துக்கள்.

மூன்றாம்பாலினத்தை பொறுத்தவரை அது சம்பந்தப்பட்டவரின் பிழை அல்ல என்ற எண்ணம் சமூகத்தில் உள்ளது. ஒருபால்புணர்ச்சிக்கு அந்தச் சலுகை இல்லை. அது அந்தத் தனிநபரின் கோணலானரசனை என்ற எண்ணம் இருந்தது, இருக்கிறது. அது இயற்கைக்கு மாறானது என்று நம்பப்படுகிறது.

ஒருபால் புணர்ச்சிக்கான உந்துதல் என்பது இயற்கையானது, எல்லா உயிர்களிலும் காணப்படுவது என்று அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டு முப்பது வருடங்கள்கூட ஆகவில்லை. ஐரோப்பாவில் அதற்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கப்பட்டபோதுகூட அது தனிமனித உரிமை என்றுதான் பார்க்கப்பட்டதே ஒழிய அதுவும் ஒருவகையில் இயற்கையானது என்பதனால் அல்ல. எழுபதுகளில்தான் பல்வேறு விலங்கியல், சமூகஉயிரியல் ஆய்வுகள்மூலம் அதுவும் இயற்கையானதே என நிறுவப்பட்டது.

எண்பதுகளின் இறுதியில்தான் இதுசார்ந்த சில பேச்சுக்கள் இந்தியச்சூழலில் உருவாயின. எண்பத்தெட்டில் இந்த விஷயம் சார்ந்து மனித உரிமைக்கழகத்துக்கு அளிக்கப்பட்ட ஒரு மாபெரும் மனுவில் நானும் கையெழுத்திட்டிருந்தேன். இந்த விஷயம் சார்ந்து பொது ஊடகங்களில் இன்னும் விரிவான விவாதங்கள் ஆரம்பிக்கப்படவில்லை.

பல்வேறு மதங்களின் கலவையாக உள்ள இந்தியா இந்த விஷயத்தில் சட்டபூர்வமாக ஒரு நிலைப்பாடு எடுக்கக் கொஞ்சம் தாமதிக்கும் என்றே நினைக்கிறேன். இஸ்லாமிய சமூகம் மன்னிக்கமுடியாத குற்றமாகக் கருதும் ஒன்றை இந்திய அரசு எளிதில் சட்டமாக ஆக்கிவிடமுடியாது. ஆனாலும் அது நிகழும் என்பதில் ஐயமில்லை.ஓரினப்புணர்ச்சியாளர்களின் சட்டபூர்வமான உரிமைகள் பேணப்படுவதும் அவர்கள் சமூகத்தின் இயல்பான உறுப்பினர்களாக ஆவதும் படிப்படியாக சாத்தியமாகக்கூடிய ஒன்றே.

கடைசியாக உங்கள் தனிப்பட்ட பிரச்சினை பற்றி..

ஒரு அற்பமான விஷயத்தைச் சொல்கிறேனே. நான் இப்போது முழுநேர எழுத்தாளன். நாள்முழுக்க வீட்டில் இருக்கிறேன். என் மனைவி வேலைக்குச் செல்கிறாள். இது என் சூழலில் உருவாக்கும் குழப்பத்தையும் சங்கடத்தையும் கிண்டலையும் சொன்னால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.நான் வீட்டில் எரிவாயு வாங்கி வைக்கிறேன். பால் வாங்கி வைக்கிறேன். வீட்டை கூட்டுகிறேன். துணி துவைக்கிறேன். என் மகளுக்கு ஏதாவது சமைக்கிறேன். இவை பெண்களுக்குரிய செயல்கள். ஆகவே என்னை ஆணுக்கு உகக்காத ஒன்றைச் செய்பவனாக நினைக்கிறார்கள். கிண்டலுக்கும் கேலிக்கும் உரிய ஒன்றாக நினைக்கிறார்கள்.

தெருவில் துணி இஸ்திரி போடுபவர், நாளிதழ் போடுபவர் முதல் பக்கத்து வீட்டுக்காரர் வரை கிண்டலாக ஏதேனும் சொல்கிறார்கள். நான் என் மனைவியை விட ஐந்து மடங்கு சம்பாதிப்பவன் என்று தெரிந்தவர்களுக்கும்கூட இது சங்கடமாக இருக்கிறது. இன்றும்கூட துணி துவைக்கும், வீட்டில் இருக்கும் கணவனைப்பறிய நகைச்சுவைத்துணுக்குகள் ஆனந்தவிகடனில் வந்துகொண்டுதான் உள்ளன.

என் மனைவிக்கே சங்கடம். நான் ஒருமாதமாக வீட்டில் இருந்தால் எங்காவது கிளம்பிப்போ, வேலைக்கு போயிருக்கிறார் என்று பக்கத்துவீட்டில் சொல்கிறேன் என்கிறாள்.இந்த விஷயத்திலேயே இப்படி என்றால் உங்கள் விஷயத்தில் எவ்வளவு பிரச்சினைகள் இருக்கும். அப்பிரச்சினைகளை நீங்கள் எதிர்கொள்ள இரு வழிகள் உள்ளன. ஒன்று அதை வெளிப்படையாக வைப்பது. அந்த உரிமைகளுக்காக போராடுவது. உங்கள் வாழ்க்கையை உங்களைப்போன்றவர்களின் உரிமைக்கான போராட்டமாக ஆக்கிக் கொள்வது. அப்படி ஆக்கிக்கொள்பவர்களே சமூகத்தை முன்னெடுக்கிறார்கள்.

ஆனால் அந்த வாழ்க்கையில் தியாகம் மட்டுமே உண்டு. அபாரமான மனபலம் இல்லாமல் அதைத் தேர்ந்தெடுக்க முடியாது. இழப்புகளுக்காகத் தயாராக இல்லாமல் அவ்வழி செல்லமுடியாது.எஞ்சும் ஒரேவழி இந்தச்சூழல் உங்களுக்காக மாறும் வரை உங்கள் தனி வாழ்க்கையை ரகசியமாக வைத்திருப்பதே. எப்போதும் நம் சமூகத்தில் உங்களைப்போன்றவர்கள் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். வேறு வழியே இல்லை நம் சமூகத்தில் ஏதேனும் வகையில் தனித்தன்மை உள்ள மனிதர்கள் தங்களைப்போன்றவர்களுடன் இணைந்து ஒரு உபசமூகமாக ஆகித் தங்களுக்குள் வாழ ஆரம்பிக்கிறார்கள். அதையே உங்களுக்கும் சொல்வேன். அதை ஒரு இழிநிலையாக, தண்டனையாக அல்லாமல் ஒரு வாய்ப்பாக, தவிர்க்கமுடியாத ஒரு வழியாக நினைத்தால் போதுமானது

ஜெ



ஓரினச்சேர்க்கை என்பது ஆண் ஆணுடன், பெண் பெண்ணுடன் கொண்டுள்ள காதல், உணர்ச்சி அல்லது பாலியல் இச்சையைக் குறிக்கிறது. பொதுவாக பெண்களின் ஓரினச்சேர்க்கையைக் குறிக்க ‘லெஸ்பியன்’ என்ற சொல்லும், ஆண்களின் ஓரினச்சேர்க்கையைக் குறிக்க ‘கே’ என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆபத்தான பாலியல் நடத்தைகள் அதிகரித்தல் (Rise in Risky Sexual Behaviour)

தங்களுக்கு HIV இருப்பதை மறைத்தல்: நிறைய ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களுக்கு HIV இருப்பதை தன் துணைவரிடம் வெளிப்படுத்தாமல், பாதுகாப்பற்ற வாய்வழி, குத வழி அல்லது இயல்பான புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர்.
வரைமுறையின்மை: நிறைய ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் வாழ்நாளில் பெரும்பாலும் பல்வேறு துணைகளுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதால், STD மற்றும் பிற நோய்களின் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
ஓரினச்சேர்க்கையாளர்கள் பல்வேறு துணைகளுடன் குதவழிப் புணர்ச்சியில் ஈடுபடுவதாகவும், அவ்வாறு ஈடுபடும்போது பாதுகாப்பற்ற முறையில் ஈடுபடுதல் 1994-இல் 6% இருந்ததாகவும் 1997-இல் 33. 3%-ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஆபத்தான நடத்தைகளால் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எச். ஐ. வி/எய்ட்ஸ், பால்வினை நோய்கள் (STD) மற்றும் பிற நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. ஆபத்தான நடத்தைகளில் சில பின்வருமாறு:

A) பால்வினை நோய்கள் (Sexually Transmitted Diseases – STD) 

எச். ஐ. வி / எய்ட்ஸ்: ஓரினச் எச். ஐ. வி / எய்ட்ஸ் அதிகபட்ச ஆபத்தைக் பிரிவில் அடங்கும். பெண்களோடு செக்ஸ் விருப்பமுடன் பெண்கள் எச். ஐ. வி கூறப்படுகிறது கடந்த தசாப்தத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குதவழிப் புணர்ச்சியால் எச். ஐ. வி ஏற்படுதவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது. குதவழி உடலுறவால் எச். ஐ. வி மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பிற பால்வினை நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்தும் அதிகமுள்ளது.

மனித பாப்பிலோமாவைரஸ் நோய்த்தொற்று
ஹெபடைடிஸ் B வைரஸ் தொற்று
ஹெர்பெஸ் வைரஸ் தொற்று
Anal- மற்றும் வாய்வழி-செருகும் உடலுறவு ஈடுபடுவது கடுமையாக யுரேத்ரிடிஸ், வடிகுழாய் மற்றும் chlamydial மற்றும் gonococcal தொற்று அழற்சி இணைந்தவர்.

வாய்வழி பாலுறவால் அடித் தொண்டை சார்ந்த கோனோரியா நோய்த்தொற்று மற்றும் எச். ஐ. வி ஏற்படுதவதற்கான அபாயம் உள்ளது.

B) இரைப்பைக் குடல் கிருமித்தாக்கங்கள் (Gastrointestinal infections)

வாய்வழி-குதவழி பாலுறவானது சால்மோனெல்லா, கேம்பிலோபேக்டர் இனங்கள், ஹெபடைடிஸ் A வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளின் தொகுப்பால் உண்டாகும் இரைப்பைக் குடல் கிருமித்தாக்கங்கள் ஏற்பட வழிவகுக்கும்.

கே குடல் நோய்: புரோக்டோகோலிட்டிஸ் (மலக்குடல், ஆசனவாய் மற்றும் பெருங்குடல் அழற்சி), புரோக்ட்டிட்டிஸ் (மலக்குடல் மற்றும் ஆசனவாய் அழற்சி), என்டரிட்டிஸ் (குடலழற்சி) போன்ற ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு (கே) முதன்மையாக ஏற்படும் பிரச்சனைகளை இது குறிக்கிறது. இது வாய்வழி-குதவழி தொடர்பு மூலம் பரவுகிற நோய்க்கிருமிகள் மூலம் உண்டாகிறது.

C) கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer)

30% லெஸ்பியன்களுக்கு பால்வினை நோய்கள் (STD) இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. பால்வினை நோய்கள் யோனி சுரப்பி மற்றும் செக்ஸ் பொம்மைகள் மூலமாகவே பரவுகிறது.

D) மார்பக மற்றும் எண்டோமெட்ரியல் புற்றுநோய் (Breast and endometrial cancer)

லெஸ்பியன் வாய்வழி கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்த மற்றும் மேலும் ஒருவேளை புகை மற்றும் உடலுறவு பெண்களை விட குழந்தைகள் தாங்க குறைந்த வாய்ப்புகளே உள்ளன. இவையே மார்பக மற்றும் எண்டோமெட்ரியல் புற்றுநோயின் ஆபத்து காரணிகளாக உள்ளன.

E) மனநோய் பிரச்சினைகள் (Mental health problems)

ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் 75% மக்கள் நீண்ட கால மனவருத்தம் மற்றும் பிற பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

இதை தவிர தற்கொலை, போதைப் பொருள்களை பயன்படுத்துதல் மற்றும் உறவு சிக்கல்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான ஆபத்தும் உள்ளது.

ஓரினச்சேர்க்கை தொடர்பான சுகாதாரப் பிரச்சனைகள் பற்றிய முறையான விழிப்புணர்வு மற்றும் கல்வி ஒருவரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும், ஓரினச்சேர்க்கை உறவுகளால் ஏற்படும் ஆபத்திலிருந்து விடுபடுவதற்கும் உதவும்.



Copyright © 2018 Modasta. All rights reserved


Wednesday, 21 March 2018

உலக பொம்மலாட்ட கலை நாள் மார்ச் 21 World Puppetry Day MARCH 21




உலக பொம்மலாட்ட கலை நாள் மார்ச் 21
World Puppetry Day MARCH 21




உலக பொம்மலாட்ட கலை நாள் மார்ச் 21
World Puppetry Day


பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது. இது மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. தோல் பொம்மலாட்டம், மரப்பொம்மலாட்டம் என இரண்டு வகையில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. இருப்பினும், உலகின் பல்வேறு இடங்களில் இக்கலை, மரபுவழிக் கலையாகத் திகழ்கிறது.

இக்கலை, வட்டாரக்கலையோ, சடங்கியலாக நிகழ்த்தப்படும் கலையோ அல்ல. இது மரபுவழிக்கலை. பொம்மலாட்டக் கலையை நிகழ்த்துவோர் தற்போது 2 - 3 குடும்பங்கள் மட்டுமே; தோல் பாவைக்கூத்தை நிகழ்த்துவோர் மதுரை, கன்னியாகுமரி, கோவில்பட்டி, தேனி மாவட்டங்களிலும் சென்னை அருகிலும் மிகக்குறைவான அளவிலே வசிக்கிறார்கள்.[1] பொம்மலாட்டத்தில் இதிகாசம் மற்றும் புராணக் கதைகள், சரித்திரக் கதைகள் அதிகம் நிகழ்த்தப்படும். குறிப்பாகத் தமிழகத்தில், அருணகிரி நாதர் வரலாறு, சிறுத்தொண்ட நாயனார் கதை, சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், ஆண்டாள் கல்யாணம், அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம் ஆகியன நிகழ்த்தப்படுவதுண்டு. எந்தக் கதையை எடுத்தாண்டாலும் இடையில், கரகாட்டம், காவடியாட்டம், பேயாட்டம், பாம்பாட்டம் ஆகியவற்றில் ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்பது மரபு. திருமகள் பொம்மலாட்டம் நிகழ்த்தி அசுரர்களையும், பேய்க் கூட்டங்களையும் விரட்டினர், என்பது வாய்மொழியாக விளங்கும் புராணக்கதையாகும்.[2]

தமிழ்நாட்டில் பொம்மலாட்டம் என்றழைக்கப்படும் இக்கலை, ஆந்திராவில் கொய்யா பொம்மலாட்டா எனவும், கர்நாடகத்தில் சூத்ரதா கொம்பயேட்டா எனவும் ஒரிசாவில் கோபலீலா எனவும் மேற்கு வங்கத்தில் சுத்தோர் புதூல் எனவும் அசாமில் புதலா நாச் எனவும் ராஜஸ்தானில் காத்புட்லி எனவும் மகாராஷ்டிரத்தில் காலாசூத்ரி பஹுல்யா எனவும் அழைக்கப்படுகின்றது.[1] ஆங்கிலத்தில் பொம்மலாட்டத்தை மேரியோனெட்டு (marionette)என்பர்
பொம்மலாட்ட முறை

பொம்மலாட்டத்தில் மொத்தமாக 9 கலைஞர்கள் பங்கேற்பார்கள். இவர்களில் 4 கலைஞர்கள் பொம்மைகளை இயக்குவார்கள். மற்றைய 4 கலைஞர்கள் இசைக்கலைஞர்களாக இருப்பார்கள். ஒருவர் உதவியாளராக இருப்பார். ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், ஜால்ரா, முகவீணை ஆகிய இசைக்கருவிகள் இக்கலை நிகழ்த்தலுக்குப் பயன்படுத்தப்படும். தற்போது சிலர் மின் இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். 4 மீட்டர் அகலம், 6 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் கொண்ட மூன்று புறங்கள் அடைக்கப்பட்ட அரங்கில் மரபுரீதியாக இந்தக் கலை நிகழ்த்தப்படும். அரங்கின் வலதுபுறத்தில் இசைக்கலைஞர்கள் அமர்ந்திருப்பார்கள். முன்புறத்தில் 1 மீட்டர் இடைவெளி விட்டு கறுப்புத் திரைச்சேலை ஒன்று கட்டப்பட்டிருக்கும். இந்தத் திரை, பின்னால் நின்று கொண்டிருக்கும் பொம்மலாட்ட கலைஞர்களின் தலையை மறைக்கும் அளவுக்கு உயரமாக இருக்கும். பொம்மைகள் தொங்குவதற்கான கயிறுகள் கறுப்புத் திரையின் மேல் கட்டப்பட்டிருக்கும்.

பொம்மைகள்

பொம்மலாட்டத்துக்குப் பயன்படும் பொம்மைகளை கல்யாண முருங்கை அல்லது முள் முருங்கை என அழைக்கப்படும் மரத்தில் இருந்து செய்கிறார்கள். இந்த மரத்தின் கட்டைகளை நீரில் ஊற வைத்துப் பின் உலர வைத்து தலை, கால், கை என பொம்மையின் உருவங்களை தனித்தனியாக வெட்டிச் செதுக்குவார்கள். பின் மீண்டும் நன்றாக உலர வைத்து உறுப்புகளை இணைப்பார்கள். இணைக்கப்படும் உறுப்புகள் தனித்தனியாக இயங்கும் வண்ணம் இருக்கும். இந்த பொம்மைகள் 45 செ.மீட்டர் முதல் 90 சென்டி மீட்டர் வரை உயரமுடையதாக இருக்கும். பொம்மையின் உறுப்புகளுக்கு ஏற்பவும், பாத்திரங்களின் தன்மைக்கேற்பவும் பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டுவார்கள். ஆரம்பகாலங்களில் எல்லாப் பொம்மைகளுக்கும் மஞ்சள் வண்ணம் மட்டுமே தீட்டப்பட்டது. தற்போது கற்பனைக்கும் பொம்மைகளின் வசீகரத்துக்கும் ஏற்ப பல வண்ணங்கள் தீட்டப்படுகின்றன. மரபுரீதியான கதாபாத்திரங்களுக்கு அதற்கேற்றதான மரபுரீதியான உடைகளும், சமூகக் கதைகளில் பாத்திரமாக்கப்படும் பொம்மைகளுக்கு நவீன உடைகளும் அணிவிக்கப்படும்.

பொம்மையை இயக்கும் முறை

பொம்மையை இயக்குவதில் சில வகைகள் உண்டு. பொம்மையின் உறுப்புகளில் கயிறுகளைப் பிணைத்து, ஒரு குச்சியில் கட்டி, அந்தக் குச்சியை அசைத்து இயக்குவது ஒரு வகை. பொம்மையின் உறுப்புகளில் கயிறுக்குப் பதில் கம்பிகளைப் பிணைத்து, அவற்றை ஒரு வளையத்தில் இணைத்து பொம்மையை இயக்கும் கலைஞர் தனது தலையில் அதை மாட்டிக்கொண்டு இயக்குவது இன்னொரு வகை. பொம்மையை இயக்குபவர் திரைக்குப் பின்னே இருப்பார். அவர் பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரிய மாட்டார். மேலும் கீழும் ஆட்டுதல், பக்கவாட்டில் ஆட்டுதல் என இருவகைகளில் பொம்மைகள் இயக்கப்படும். உயிர் அற்ற பொம்மைகள் உயிர் பெற்றுத் திரைக்கு முன்னே ஆடிப்பாடி, பேசும் உணர்வில் பார்வையாளர்களை லயிக்கச் செய்வதே இந்தக் கலையில் எதார்த்தமான தன்மையாக உள்ளது.

இக்ககலையில் இரண்டு பாணிகள் பின்பற்றப் படுகின்றன. 1. கும்பகோணம் கலை பாணி. 2. சேலம் கலைபாணி. கும்பகோணம் கலைபாணியைப் பயன்படுத்துபவர்கள் கர்நாடக இசையை ஒட்டிப் பாடல்களைப் பாடுவார்கள். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப் போக்கை கையாளும் இவர்கள் பொம்மைகளில் கம்பிகளை பிணைத்துக் கொள்கிறார்கள். சேலம் கலைபாணியைப் பயன்படுத்துபவர்கள் ஆர்மோனியத்தைத் தவிர்த்து முகவீணையைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் கயிறுகளில் பொம்மைகளைப் பிணைத்துக் கொள்கிறார்கள்.

பொம்மலாட்டம் பற்றி வெங்கட் சாமிநாதன் கூற்றுக்கள்
“ இவ்வளவு கவனமும் ஆதரவும் பெறாவிட்டாலும், இன்னமும்கோவில் சார்ந்து இருப்பதால், பொம்மலாட்டம் ஒரு சில இடங்களில் ஜீவித்திருக்கிறது. ஆனால் பொம்மலாட்டக்காரர்கள் அதையே சார்ந்து இருக்கமுடிவதில்லை. நிலமோ அல்லது வேறு எதுவுமோ தான் அவர்களுக்கு ஆதரவு. நாடகம் தோன்றியபோதே தெருக்கூத்து, பொம்மலாட்டம் போன்ற கிராமியக் கலைகள் ஆதரவிழக்கத் தொடங்கிவிட்டன. சினிமாவும், தொலைக்காட்சியும் அனேகமாக எல்லாக் கிராமியக்கலைகளையும் அழித்து விட்டன என்று தான் சொல்லவேண்டும். தோல் பொம்மலாட்டம் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியத்தில் 10- நூற்றாண்டிலிருந்து காணப்படுகிறது. ஆனால் தமிழ் நாட்டில் அது தன் கடைசி மூச்சில் விழுந்து கிடக்கிறது என்று தான் சொல்லவேண்டும். மரப்பாவைக்கூத்து கோவில் சார்ந்திருப்பதால் கிடைக்கும் கொஞ்சம் ஆதரவும் தோல் பொம்மலாட்டத்திற்கு இல்லை
Image may contain: one or more people

WORLD DOWN SYNDROME DAY MARCH 21, உலக மனநலிவு நோய் தினம்



WORLD DOWN SYNDROME DAY


உலக மனநலிவு நோய் தினம் 




சென்னை: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ஆம் தேதி உலக மனநலிவு நோய் தினமாகக் கடைபிடிக்கப் படுகிறது. இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

மனநலிவு நோய், டவுண்சின்ரோம் என்றும் டிரைசோமி 21 என்றும் அழைக்கப்படுகிறது. மரபியல் கோளாறாக கருதப்படும் இந்த நோய், மரபிழை 21 கூடுதலாக இருப்பதால் உண்டாகிறது. இது குழந்தை வளர்ச்சியை உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கிறது. பிறக்கும் குழந்தைகளில் 1000 அல்லது 1100-ல் ஒன்று மனநலிவால் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

மனநலிவு நோயால் பாதிக்கப்பட்ட இக்குழந்தைகள் பிறக்கும்போதே, எடை குறைவாகவும், உடல் நீளமாகவும் இருக்கும். தலை, காது, வாய் போன்ற உறுப்புகள் வழக்கத்தை விட சிறிதாக இருக்கும். குழந்தை கருவில் இருக்கும்போது, தாயிடம் மேற்கொள்ளப்படும் சில பரிசோதனைகள் மூலம், மன நலிவுடன் குழந்தைப் பிறப்பதற்கான சாத்தியம் இருப்பது குறித்து கண்டறியலாம். தற்போதுள்ள நவீன மருத்துவ வளர்ச்சியின் மூலம் இந்த நோயை குணப்படுத்த முடியாவிட்டாலும், குழந்தைகளுக்கு உரிய மருத்துவக் கண்காணிப்பை அளிக்க முடியும்.

போதுமான மருத்துவப் பராமரிப்பும், குடும்பத்தின் கவனிப்பும் இக்குழந்தைகளை நீண்ட நாட்களுக்கு வாழ வைக்க முடியும். இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள், பொதுப் பள்ளிகளில் படித்து, தங்கள் வாழ்க்கைப் பாதையை நல்லவிதமாக அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

Thursday, 8 September 2016

உலக கல்வி நாள் செப்டம்பர் 8



உலக கல்வி நாள் செப்டம்பர் 8




ஒருவர் இந்த உலகில் பெறுகிற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே கல்வி எனப்படும். ஒருவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி அமைக்கும். 


கல்வியைப் பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு, மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்புப் பெற்றவர்களாக இருப்பார்கள். நுட்பமாகச் செயற்படுகிற கூர்மையான அறிவுடையவராக இருந்து வழிநடத்துவார்கள். 

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கல்வி இப்படித்தான் இருந்தது. கற்றவர்களைத் தேடிச் சென்று, கல்வி கற்று மக்கள் தங்களை உயர்த்திக் கொண்டார்கள். எழுத்தறிவு, எண்ணறிவு, பட்டறிவு, கை வேலைத்திறன், இசை, கூத்து, நுண்கலைகள் எனப் பல்வேறு கூறுகளில் உள் நுழைகிற கருத்துருக்கள் கற்பவருக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது \ உயர்த்தியது. 


ஆளுபவரின் பிள்ளையாக இருந்தால் கூட ஆசிரியருக்கு முன் அவர் ஒரு மாணவர்தான். ஆசிரியருக்குப் பணிவிடை செய்துதான் அவர் கற்றுக் கொண்டார். பொருளை விட மதிப்பும் மரியாதையும் மேலெழுந்து நின்றன. பெற்றோர்களுக்கு அடுத்த படியாக ஆசிரியர் கருதப்பட்டார். மக்களின் வணக்கத்திற்குரியவராக ஆசிரியர் இருந்தார். 

இதற்குப் பின் வந்த காலங்களில்..... 

வேதத்தைக் கேட்டால், கேட்ட காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்ன ஆசிரியர்கள் தோன்றினார்கள். 


கட்டைவிரலைக் குரு தட்சணையாகக் கேட்ட ஆசிரியரும், மறுப்பேதும் கூறாமல் வெட்டித் தந்த மாணவரும் இருந்தனர். 

கை கட்டி, வாய் புதைத்து, அடங்கி ஒடுங்கி, பணிவுடன் பிரணவ மந்திரத்திற்கான பொருளை முருகனிடம் சிவன் கேட்டு நிற்பதையும், மாணவர்கள் இப்படித்தான் அடங்கி ஒடுங்கி - கற்க வேண்டும் என்பதையும் சூழல் காட்டியது. 

சாதி, குலம், வருணம், ஏழை, பணக்காரன் - என்பவை உள்நுழைந்து கற்பவருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஒரு பெரிய தடைக் கல்லை உருவாக்கியது. ஒரு பிரிவினர் ஓரங்கட்டப் பட்டனர். கல்வி ஒரு சிலருக்கு எட்டாக் கனி ஆனது. 

இன்றைய சூழலில்..... 


அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பச் செறிவு, சுருங்கிப் போன உலகம், பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகளால் - கல்வி என்பதற்கான கருத்துருக்களை வெகுவாக மாற்றியுள்ளன. 

அறிவு நுட்பத்திற்கான அடித்தளமாக இருந்த கல்வி இன்றைய சூழலில் அந்த நிலையிலிருந்து மாறி, பொருளீட்டுகிற \ வணிகத்திற்கான படிக்கட்டுகளாக மாறியுள்ளது. பெருகி வரும் மக்கட்தொகைக்கு ஏற்றவாறு கல்வியானது வடிவமைக்கப்பட்டு, பொருள்வழிப் பெருகின்ற வணிகப் பொருளாக, கல்வி மாற்றப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் விற்பனையாளராக மாறி விற்பனை செய்கின்றனர். 


பொருளீட்டுகின்றனர். இடைத் தரகர்களும் ஆசிரியர்களை கூலிக்கு அமர்த்தி விளம்பரம் செய்து விற்பனையைக் கூட்டுகின்றனர். 

சுதந்திரம் அடைந்த பிறகு.... 

கல்வி மைய அரசின் நேரடிப் பார்வையில் உள்ளது எனவும், கல்வியில் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் மைய அரசின் அனுமதி பெற்றே செய்ய வேண்டும் எனவும் விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 


நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயது வரை கல்வியைத் தரமாகவும், இலவயமாகவும், கட்டாயமாகவும் தரவேண்டியது அரசின் கடமை என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. 

ஆனால் இன்றைய சூழலில் தொடக்கக் கல்விக்கே பெரும் பொருள் செலவு செய்ய வேண்டியுள்ளது. கல்வி தனியாருக்கான பொருளீட்டும் வழிகளில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. 


தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளன. யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யலாம். 

ஆங்கிலேயன் ஆண்ட பொழுது அவர்களுக்கு உதவுகிற எழுத்தர் வேலைக்காக மெக்காலேயால் அன்றைய கல்வி முறை வடிவமைக்கப்பட்டது. ஆங்கிலேயன் சென்ற பிறகும் கூட ஆங்கிலமும், கல்வி முறையும் இன்னும் இங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

உளவியல் அறிஞர்களும், கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்திய போதும் இன்றும் இங்குள்ள பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால், மழலையர்கள் ஆங்கிலக் கல்வியில் மூழ்கி எழுகிறார்கள். தெளிவான புரிதலுக்கும் நுட்பமான செயற்பாடுகளுக்கும் தாய்மொழிக் கல்வியே சிறந்தது, அதுவும் தொடக்க நிலைகளில் அதுவே கட்டாயமானது என்ற கருத்துருக்கள் இங்கே ஏட்டளவில்தான் இருக்கின்றன. இதை உணர்ந்து செயற்படுகிற பெற்றோர்களோ, கல்வியாளர்களோ, அதிகாரிகளோ இங்கு இல்லை.


இன்றைய சூழலில் கடந்த இருபது ஆண்டுகளாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, நாளிதழ்களிலும், மேடைகளிலும், அறிவிப்புகளிலும் அதிகமாகப் பேசப்படுகின்றன. கல்வியாளர் தவே அவர்களால் உருவாக்கிய குறைந்த பட்ச கற்றல் இலக்குகளைக்கொண்ட கல்விமுறை, கற்றலில் இனிமை, அனைவருக்கும் கல்வி, செயல்வழிக் கல்வி, படிப்பும் இனிக்கும் - இப்படிப் பல்வேறு பெயர்களில் கல்விக்கான அணுகுமுறைகளும், கற்றல் கற்பித்தல் வழி முறைகளும் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளன. சமச்சீர் கல்வி என்பதும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. 

கடந்த சில ஆண்டுகளாக அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றன. மறுபுறம் ஆங்கிலவழி மழலையர் பள்ளிகள் புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதை ஈடுகட்ட தமிழக அரசும் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை அறிமுகம் செய்கிறது. இந்த மாணவர்களின் வளர்ச்சி நிலையை இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்து பார்த்தால் தான் தெரியும். 

பொதுவாக இன்றைய சூழலில் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் 15 விழுக்காட்டினருக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை. 


கல்வி என்பது மாணவர்களுக்கு அடிப்படை அறிவை தந்து அவர்களை ஆற்றலோடு வளர்த்த வேண்டும் என்பதே அறிஞர்களின் உள்ளக்கிடக்கை. இதனையே கல்வியாளர்களும், கல்விக்கூடங்களும், கல்வி அதிகாரிகளும், கல்வித் துறை சார்ந்த அனைவரும் நெஞ்சில் நிறுத்தி திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும். 

Friday, 12 August 2016

WORLD ELEPHANTS DAY AUGUST 12 உலக யானைகள் தினம் ஆகஸ்ட் 12

WORLD ELEPHANTS DAY AUGUST 12
உலக யானைகள் தினம் ஆகஸ்ட்  12

இந்திய யானை (Elephas maximus indicus) என்பது அறியப்பட்ட மூன்று ஆசிய யானை துணை இனங்களில் ஒன்றும் ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டதுமாகும். 1986 இலிருந்து ஆசிய யானைகள் 60-75 வருட கணக்கெடுப்பில், கடந்த மூன்று தலைமுறைகள் குறைந்தது 50%க்கு மேல் அருகிவருவதால் அருகிய இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளது. 




இந்திய யானைகள் இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பூட்டான், மியன்மர், தாய்லாந்து, மலாய், லாவோஸ், சீனா, கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளைப் பிறப்பிடமாகக் கொண்டது. அவை மேச்சல் நிலங்கள், உலர் இலையுதிர் காடுகள், ஈரளிப்பான இலையுதிர் காடுகள், பசுமையான காடுகள், அரை பசுமையான காடுகள் என்பனவற்றை வாழ்விடமாகக் கொண்டன. 1990 களின் ஆரம்பத்தில் கணக்கிடப்பட்ட எண்ணிக்கையளவு பின்வருமாறு:[6]